கொரோனா தடுப்பூசி திட்டத்திற்காக உருவாக்கப்பட்ட கோவின் வலைதளத்தைப் போன்றே இதர தடுப்பூசி திட்டங்களுக்கும் பிரத்யேக வலைதளங்களை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது. இது குறித்து தேசிய சுகாதார ஆணைய தலைமை நிா்வாக அதிகாரி ஆா்.எஸ்.சா்மா கூறியதாவது “ரத்த வங்கி, உலகளாவிய தடுப்பூசி திட்டம் போன்றவற்றுக்கு கோவின் வலைதளத்தைப் போன்றே 2 வலைதளங்கள் உருவாக்கப்படவுள்ளது. அதற்கான பணிகள் முன்பே தொடங்கியுள்ளது. அந்த வலைதளங்களை உருவாக்க 2 மாதங்கள் ஆகும். இந்த வருடத்தில் அவை அறிமுகப்படுத்தப்படும்” என்று தெரிவித்தாா்.
Tag: தடுப்பூசி திட்டம்
ஐ.நா சபை உலகிலேயே மிக பெரிய அளவில் இயங்கும் இந்தியாவின் தடுப்பூசி திட்டத்தை ஆதரிப்பதாக கூறியிருக்கிறது. இந்தியாவில் கடந்த வருடம் ஜனவரி மாதம் 16ம் தேதியிலிருந்து கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டது. இது, உலகளவில் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் என்று கூறப்பட்டிருக்கிறது. தற்போது வரை சுமார் 163 கோடிக்கு மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டிருக்கிறது. இதுதொடர்பில் ஐ.நா பொதுச் செயலாளரான ஆண்டனியோ குட்டரேஸின் செய்தி தொடர்பாளரான ஸ்டீபன் துஜாரிக் தெரிவித்திருப்பதாவது, தற்போது வரை உலகிலேயே […]
சர்வதேச அறிக்கை ஒன்று கொரோனா தடுப்பூசி திட்டத்தில் சுவிட்சர்லாந்து பின்தங்கி இருப்பதாக தெரிவித்துள்ளது. சுவிட்சர்லாந்து OECD ( Organisation for Economic Co-operation and Development ) எனப்படும் பொருளாதார கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது. அந்த வகையில் OECD அமைப்பால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சுவிட்சர்லாந்து அதிக ஆண்டுகள் வாழ்வோரை கொண்ட நாடாக இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் அந்நாட்டில் மருத்துவ அமைப்பு சிறந்த நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் சுவிஸ் நாட்டில் 63 […]
உலகம் முழுவதிலும் உள்ள மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான திட்டத்தை செயல்படுத்தப்போவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் இயக்குனரான டெட்ராஸ் அதானம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “இந்த நடப்பு ஆண்டின் இறுதிக்குள் உலக நாடுகள் அனைத்திலும் 40% மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும். இதே போன்று வருகிற 2022ஆம் ஆண்டும் 70% மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை அடைவதற்கு 1500 கோடி தடுப்பூசிகள் தேவைப்படும். மேலும் உலகம் முழுவதும் […]
தடுப்பூசி செலுத்தும் பணியில் பிரிட்டனை பிரான்ஸ் முந்தி விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இருக்கும் சூழ்நிலையில் இன்னும் 21 நாட்களில் பிரிட்டனை பிரான்ஸ் தடுப்பூசி திட்டத்தில் முந்தும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. பிரான்சில் சராசரியாக தினசரி, 3,30,000 நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்படுகிறது. எனவே இந்த அடிப்படையில் முதலிடத்தில் பிரான்ஸ் இருக்கிறது. எனினும் பிரிட்டனில் தினசரி 44,000 நபர்களுக்கு தான் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. எனினும் பிரிட்டன் தடுப்பூசி திட்டத்தை தொடங்கியபோது வெகு தீவிரமாக செயல்பட்டது. அப்போது […]
நாடு முழுவதும் கொரோனாவை முற்றிலுமாக ஒழிப்பதற்கு தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. மக்களும் ஆர்வமாக முன்பதிவு செய்து தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. இவ்வாறு தடுப்பூசி போடுபவர்களுக்கு கோவாக்சின் மற்றும் கோவிஷீயீல்டு தடுப்பூசிகள் பரிந்துரைக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் இலவசமாக போடப்பட்டு வருகின்றது. அந்தவகையில் தமிழகத்திலும் அரசு மருத்துவமனைகளில் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்,தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை இன்று (ஜூலை […]
இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு […]
இஸ்ரேலில் கொரோனா தொற்று குறைய தொடங்கியதால், பொது மக்கள் முகக்கவசம் அணிய தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் நாட்டில் 16 வயதுக்கு அதிகமான நபர்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 16 வயதிற்கு அதிகமான 81% மக்களுக்கு 2 டோஸ் தடுப்பூசி கடந்த ஏப்ரல் மாதம் செலுத்தப்பட்டுள்ளது. அதன்பிறகு அங்கு பள்ளிகள் மீண்டும் செயல்படத் தொடங்கியது. இந்நிலையில் இஸ்ரேலில் கொரோனா தொற்று குறைய தொடங்கியுள்ளது. எனவே பொது வெளிகளில் இருக்கும் உள்ளரங்குகளில் பொதுமக்கள் இனிமேல் முகக்கவசம் […]
இந்தியா முழுவதுமாக கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை முற்றிலுமாக ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு. எனவே அனைத்து மாநிலங்களும் வேகமாக தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். 45 வயதினருக்கு மட்டுமல்லாமல், 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இதற்காக சிறப்பு முகாம்களும் தொடங்கப்பட்டு தடுப்பூசி போட்டு வருகின்றது. இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த சிறப்பு தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டது. அவர்கள் […]
அமெரிக்காவில் தடுப்பூசி எடுத்துக்கொள்பவர்களுக்கு, இலவசமாக பீர் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. உலகிலேயே அமெரிக்கா தான், கொரோனாவால் அதிக பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகளில் முதலிடத்தில் இருக்கிறது. எனவே அதிபர் ஜோபைடன், கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தி வருகிறார். பைசர்/ பயோஎன்டெக், மாடர்னா, ஜான்சன் & ஜான்சன் போன்ற தடுப்பூசிகள் அமெரிக்காவில் பயன்பாட்டில் உள்ளது. தற்போது வரை 29,69 ,12,892 தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது. இதில் 16,87,34,435 நபர்கள் முதல் டோஸ் தடுப்பூசியையும், 13,61,55,250 நபர்கள் இரண்டாம் டோஸையும் […]
உருமாற்றமடைந்து வரும் கொரோனா தொற்றால் உலகில் ஒருவரும் பாதுகாப்பாக இல்லை என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தியா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளில் உருமாற்றம் அடைந்த கொரோனா தீவிரமாக பரவி வருவதால் உலகில் எவரும் பாதுகாப்புடன் இல்லை என்று நிபுணர்களின் குழு உறுதியாக கூறியுள்ளது. இதற்கான ஒரே தீர்வு உலகிலுள்ள அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதுதான் என்று 50 அமைப்புகளை சேர்ந்த ஒரு குழு தெரிவித்துள்ளது. மேலும் இந்த அமைப்பு, வளர்ந்துவரும் பல்வேறு நாடுகள் வரும் 2024 […]
கனடாவின் சுகாதாரத்துறை ஆஸ்ட்ராஜனகா நிறுவனத்தின் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசிக்கு அனுமதியளித்துள்ளது. கனடாச் சுகாதாரத் துறையான “Health Kanada” பைசர்/பயோஎன்டெக் மற்றும் மாடர்னா நிறுவனங்கள் தயாரித்த கொரோனா தடுப்பூசிகளுக்கு கடந்த டிசம்பர் மாதத்தில் அனுமதியளித்தது. எனினும் நவம்பர் மாதத்தில் வெளியான சோதனையினால் ஆஸ்ட்ராஜனகா நிறுவனத்தின் தடுப்பூசிக்கு அனுமதியளிக்க தாமதப்படுத்தி வந்தது. இந்நிலையில் தற்போது வெளியான ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் நாட்டின் அனைத்து மூத்த குடிமக்களுக்கும் ஆஸ்ட்ராஜனகா தடுப்பூசி பாதுகாப்பானது தான் என்று அறிந்த பின்பு தற்போது அனுமதி அளித்திருக்கிறது. […]
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் கூறிய வாக்குறுதியில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று மக்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் தீவிரத்தை தடுக்கும் நோக்கில் தடுப்பூசிகள் செலுத்தும் திட்டம் நடைமுறையில் உள்ளது. ஆனால் தற்போது தடுப்பூசி தட்டுப்பாட்டால் இத்திட்டம் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் 75 வயதுக்கு மேற்பட்ட வயதான குடிமக்களுக்கு எப்போது தடுப்பூசிகள் செலுத்தப்படும் என்று தெரியாமல் உள்ளது. இந்நிலையில் இமானுவேல் மேக்ரோன் பிரான்சில் 2021 ஆம் வருடம் அக்டோபர் 30 ஆம் தேதிக்கு முன்பே கோடைகாலம் முடிவடைவதற்குள் […]
உலக சுகாதார அமைப்பானது, பிரிட்டன் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை இடைநிறுத்தம் செய்ய வேண்டும் என்று கோரியுள்ளது. உலக நாடுகளில் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி அளிக்கும் திட்டத்தில் பிரிட்டன், இஸ்ரேல் அமெரிக்கா போன்ற நாடுகள் தான் முதன்மையில் உள்ளது. இதில் பிரிட்டன் எளிதில் பாதிப்படையக்கூடிய மக்களுக்கு முதல்நிலை தடுப்பூசிகளை வரும் பிப்ரவரி 15 ஆம் தேதிக்குள் செலுத்தி முடிக்கக்கூடிய நிலையில் உள்ளது. மேலும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் நாட்டில் இருக்கும் அனைத்து மூத்த குடிமக்களுக்கும், இலையுதிர் கால […]