தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வாரமும் இரண்டு மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. நவம்பர் மாதம் இறுதிக்குள் 100% தடுப்பூசி செலுத்த அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. தற்போது வரை 10 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. அதில் மக்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர். ஒவ்வொரு முகாமிலும் அரசு நிர்ணயித்த இலக்கை விட அதிக […]
Tag: தடுப்பூசி
கொரோனாவை முற்றிலுமாக ஒழிக்க நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய, மாநில அரசுகள் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் வெளிநாட்டிலிருந்து தமிழகம் வருபவர்கள் 2 டேஸ் தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் கட்டாயம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக பொது சுகாதாரத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி லண்டன், தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம், சீனா, நியூசிலாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்கள் கட்டாயம் 2 தடுப்பூசி […]
இஸ்ரேலில் கொரோனாவுக்கு எதிராக போடப்படும் பைசர் தடுப்பூசியினை 5 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு செலுத்த அந்நாட்டு அரசு அனுமதி கொடுத்துள்ளது. சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவுக்கு எதிராக அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டு மக்களுக்கு தடுப்பூசியினை தீவிரமாக செலுத்தி வருகிறது. இந்நிலையில் இஸ்ரேலிய அரசாங்கம் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது கொரோனாவுக்கு எதிராக போடப்படும் பைசர் தடுப்பூசியினை 5 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு செலுத்த அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி கொரோனாவுக்கு எதிராக போடப்படும் பைசர் […]
நாடு முழுவதும் கொரோனவை முற்றிலுமாக ஒழிக்க தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அனைவருக்கும் விரைவாக கொரோனா தடுப்பூசி செலுத்துவதை உறுதிப்படுத்துமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளை மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் எழுதிய கடிதத்தில், “பிரதமர் தொடங்கி வைத்த ஹர்கர் தஸ்தக் என்ற தீவிர தடுப்பூசி பரப்புரை வரும் 30 -ம் தேதிவரை தொடர்ந்து நடைபெறும். விடுபட்டவர்கள் […]
சென்னை ஐகோர்ட்டில் அறக்கட்டளையின் தலைவர் உமர் பாருக் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் தமிழக அரசு பிறப்பித்த கட்டுப்பாடுகள் நீடிப்பு உத்தரவை பின்பற்றி அரசு துறைகள் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில் கல்வி நிறுவனங்களில் உள்ள பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால் மாணவர்கள் நேரடி வகுப்பில் கலந்துகொள்ள முடியாமல் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் தடுப்பூசியால் எந்தவித பக்கவிளைவும் […]
உலகத்திலேயே திரையரங்கிற்கு செல்ல தடுப்பூசி கேட்பது இங்குதான் முதல்முறை என சுரேஷ் காமாட்சி பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு முன்னணி நடிகராக வலம் வருபவர். வெங்கட்பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ”மாநாடு”. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். சுரேஷ் காமாட்சி தயாரித்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில், இந்த படம் வரும் 25-ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாக […]
மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்துவது கட்டாயம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொரோனா பொது முடக்கத்திற்கு பிறகு தற்போது தான் தமிழகத்தில் பள்ளிகள் அனைத்தும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திறக்கப்பட்டுள்ளன.. இந்த நிலையில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை இருக்கக்கூடிய அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு சென்று வருகிறார்கள். மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்கள் அனைவரும் தடுப்பூசி கட்டாயம் செலுத்த வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்துவதை கட்டாயப்படுத்த […]
இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக தயாரிக்கப்படும் தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்கள் தங்கள் நாட்டிற்குள் தாராளமாக நுழையலாம் என்று கனடா தெரிவித்துள்ளது. இந்தியாவிலுள்ள பொதுமக்களுக்கு கொரோனாவுக்கு எதிராக கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு போன்ற தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்தியாவிலுள்ள பொதுமக்களுக்கு கொரோனாவிற்கு எதிராக செலுத்தப்படும் கோவாக்சின் தடுப்பூசியினை உலக சுகாதார அமைப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பாக தான் அங்கீகரித்துள்ளது. இந்நிலையில் கனடா முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது வருகின்ற 30ஆம் தேதியிலிருந்து இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக […]
புயல் காரணமாக தடுப்பூசிகள் விநியோகப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது. கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் 500 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெரும் புயல் ஓன்று தாக்கியதால் அதிகப்படியான சேதங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த புயலால் மண் சரிவு ஏற்பட்டு சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் பால் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கறந்த பாலை விற்பனையாளர்களிடம் கொண்டு சேர்க்க முடியாததால் உற்பத்தியாளர்கள் பாலை கீழே கொட்டி வருகின்றனர். அதிலும் சுமார் 2,000 பசு மாடுகள் […]
தடுப்பூசி செலுத்தினால் மட்டும் பொது இடங்களில் அனுமதி வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கொரோனா என்னும் பெரும் தொற்றிலிருந்து மீளுவதற்கு தடுப்பூசி மட்டுமே தற்போது பெரும் ஆயுதமாக உள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றது. மக்கள் வீடுகளுக்கு அருகாமையிலேயே தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்பதற்காக இலவச முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இதுவரை 9 இலவச தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று உள்ளது. இதில் […]
தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக செயல்படுத்தப்படும் வருகிறது. மக்களுக்காக ஆங்காங்கே தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தற்போதுவரை ஒன்பது தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இவை அனைத்திலும் மக்கள் அனைவரும் ஆர்வமுடன் வந்து தடுப்பு ஊசி செலுத்தி கொண்டுள்ளனர். ஒவ்வொரு முகாமிலும் அரசு நிர்ணயித்த இலக்கை விட அதிக அளவு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் இன்று நடைபெற்று முடிந்த 9-வது தடுப்பு முகாமில் மொத்தம் 8.36 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட […]
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி மத்திய பிரதேச மாநிலத்தில் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளது. அதன்படி மத்திய பிரதேச மாநிலம் ஹன்ட்வா மாவட்டத்தில் உள்ள மதுக் கடைகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாத மது பிரியர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது என்று […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த வாரம் முழுவதும் சென்னையில் இடைவிடாது தொடர்ந்து கனமழை பெய்ததால் பல்வேறு சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. அதனால் சென்னை வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் இன்று 9 வது மெகா தடுப்பூசி முகாம் நடந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து கொரோனா […]
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் மக்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு தடுப்பூசி போடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.அதன்படி மத்திய பிரதேச மாநிலத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அவ்வகையில் மத்திய பிரதேச மாநிலத்தில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டதற்கான சான்றிதழ் இல்லாதவர்களுக்கு டிசம்பர் 31ம் தேதிக்கு பிறகு ரேஷன் பொருட்கள் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
நாடு முழுவதும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மக்களும் ஆர்வமாக தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர். இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத நபர்களுக்கு 3.5 மடங்கு ஆபத்து அதிகம் உள்ளது என்று சுதாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் 3மாதங்களில் கொரோனாவில் உயிரிழந்த 2011பேரில் 1675 பேர் தடுப்பூசி போடாதவர்கள். காலதாமதப்படுத்தாமல் தடுப்பூசி போட சுகாதாரத்துறை வேண்டுகோள் […]
இரு தவணை தடுப்பூசிகள் செலுத்திய அமெரிக்கர்கள் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளலாம். கொரோனா தொற்று பரவாமல் காரணமாக அமெரிக்க மக்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு 4 விதமான சுகாதார நிலைகளை அந்நாட்டின் CDC என்ற நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிவித்துள்ளது. அதில் முதல் நிலை குறைவு, 2வது மித நிலை, 3வது உயர்வு நிலை, 4வது மிக உயர்வு நிலை ஆகும். தற்பொழுது கொரோனா தொற்று பரவலானது இந்தியாவில் குறைந்துவிட்டது. இதனால் இரு தவணை தடுப்பூசிகளை செலுத்திக் […]
நியூசிலாந்தில் பைசர் நிறுவனம் தயாரிக்கும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை அந்நாட்டின் மருந்துகள் பாதுகாப்பு ஆணையம் பயன்படுத்த ஒப்புதல் வழங்கியதையடுத்து அதனுடைய பூஸ்டர் டோஸ்ஸை நவம்பர் 29ஆம் தேதியிலிருந்து அனைவரும் செலுத்திக் கொள்ளலாம் என்று நியூசிலாந்து மந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார். நியூசிலாந்து நாட்டின் மருந்துகள் பாதுகாப்பு ஆணையம் பைசர் நிறுவனம் கொரோனாவுக்கு எதிராக தயாரிக்கும் தடுப்பூசியை தங்கள் நாட்டிற்குள் பயன்படுத்த ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்நிலையில் தற்போது பைசர் நிறுவனம் கொரோனாக்கு எதிராக தயாரிக்கும் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ்ஸை நவம்பர் […]
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதிலும் ஏற்கனவே 7 கட்டங்களாக தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்நிலையில் 8-ம் கட்டமாக மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. தஞ்சை மாவட்டத்தில் 17 லட்சத்து 96 ஆயிரத்து 974 […]
தமிழகத்தில் இன்று முதல் இரண்டாம் தவணை தடுப்பூசி போடாத 50 லட்சம் பேருக்கு வீடு தேடி சென்று தடுப்பூசி போடப்பட உள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர், தமிழகத்தில் 5 ஆயிரம் இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 7.5 லட்சம் பேர் மழைக்கால நோய்களுக்கு சிகிச்சை பெற்றுள்ளனர். தமிழகத்தில் உறுப்பு தான பதிவுக்கு ஆதார் எண் முக்கியம் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது […]
இஸ்ரேல் அரசு அந்நாட்டில் உள்ள 5 முதல் 11 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் 5 முதல் 11 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்குக் கொரோனா தடுப்பூசி செலுத்த ஒப்புதல் அளித்துள்ளனர். இந்த நிலையில் இஸ்ரேல் அரசும் தற்போது 5 முதல் 11 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் அந்த நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் மூலம் தொற்று பாதிப்பு கட்டுக்குள் […]
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் மக்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட தடுப்பூசி போடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் தானே மாநகராட்சியில் தடுப்பூசி போடாதவர்களுக்கு மாநகரப் பேருந்துகளில் பயணம் செய்ய அனுமதி இல்லை என்று அம்மாவட்ட மேயர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில்,மாநகராட்சி பேருந்துகளில் பயணம் செய்வதற்கு தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் அல்லது யுனிவர்சல் பாஸ் கட்டாயமாகும். ஒரு டோஸ் தடுப்பூசி கூட […]
இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக தயாரிக்கப்படும் கோவாக்சின் தடுப்பூசியை பக்ரைன் அரசாங்கம் தங்கள் நாட்டிற்குள் பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது. சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவுக்கு எதிராக இந்தியாவிலுள்ள பொதுமக்களுக்கு கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே இந்தியாவிலுள்ள பொதுமக்களுக்கு கொரோனாவுக்கு எதிராக பயன்படுத்தப்படும் தடுப்பூசியினை பாரத் பயோடெக் என்னும் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதனையடுத்து கொரோனாவுக்கு எதிராக பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் கோவாக்சின் தடுப்பூசிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பாக உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் […]
தடுப்பூசி செலுத்திக் கொள்வோருக்கு குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசியானது செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதிலும் நாம் 100 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி தவணைகளை செலுத்திய இரண்டாவது நாடு என்ற பெருமையை பெற்றுள்ளோம். நமது மத்திய அரசு தடுப்பூசிகளை கொள்முதல் செய்து தருகிறது. அதனை மாநில அரசுகள் மக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்கி அதிக அளவில் செலுத்துகின்றனர். மேலும் தடுப்பூசி முகாம்கள்களும் அமைக்கப்பட்டு மக்களை ஊக்குவிக்க பரிசுப்பொருட்கள் வழங்கப்படுகின்றன. […]
குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பு ஊசியை செலுத்தி கொண்ட மக்களுக்கு மட்டுமே சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் ரேஷன் பொருட்களை வழங்க வேண்டும் என மராட்டிய மாநிலம் அவுரங்காபாத் மாவட்ட ஆட்சியர் சுனில் சவான் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். மராட்டிய மாநிலத்தில் இதுவரை 74 விழுக்காடு பேருக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் மாவட்ட வாரியாக தடுப்பூசி செலுத்தியவர்கள் விபரம் வெளியிடப்பட்டது. இதில் அவுரங்காபாத் மாவட்டத்தில் வெறும் 55 விழுக்காடு பேர் மட்டுமே […]
பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு தடுப்பூசியை செலுத்தலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டில் பள்ளிகள் திறக்க கூடாது என்று உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து மாணவர்களுக்கு பாடங்கள் ஆன்லைன் மூலமாக கற்பிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று பாதிப்பு குறைந்த நிலையில் பள்ளிகளை மீண்டும் திறக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன் படி முதலில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு செப்டம்பர் 1 […]
இந்திய சுகாதாரத்துறை அமைச்சர் காணொளி மூலமாக நேற்று ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளார். இந்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மான்டவியா நேற்று ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுகாதாரத்துறை அமைச்சர்கள் மற்றும் செயலாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இக்கூட்டமானது காணொளி வாயிலாக நடைபெற்றுள்ளது. அதிலும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற இந்திய சுகாதாரத்துறை அமைச்சர் கூறியதாவது “பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் தடுப்பூசி மையங்களை அமைக்க வேண்டும். மேலும் நடமாடும் […]
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. தடுப்பூசி பயன்பாட்டால் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மாநில அரசுகள் தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தி வருகிறது. அரசு மருத்துவமனைகள்,தனியார் மருத்துவமனைகள் மற்றும் தடுப்பூசி முகாம்கள் மூலம் மக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் இன்னும் சில பகுதிகளில் ஏராளமானோர் தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் உள்ளனர். எனவே தடுப்பூசி […]
சுவிட்சர்லாந்தை சேர்ந்த மக்கள், 12 வயதிற்கு குறைவான தங்கள் குழந்தைகளுக்கு off-label தடுப்பூசி செலுத்த வெளிநாடுகளுக்கு அழைத்துச்சென்று கொண்டிருக்கிறார்கள். ஸ்விட்சர்லாந்தில் 12 வயதிற்கு குறைவான குழந்தைகளுக்கு கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியளிக்க அனுமதி வழங்கப்படவில்லை. எனினும் சிலர், தங்கள் குழந்தைகளை ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியா போன்ற நாடுகளுக்கு அழைத்துச்சென்று தடுப்பூசி செலுத்துகிறார்கள். ஐரோப்பிய ஒன்றியத்தின் கட்டுப்பாட்டாளர்கள், தற்போது வரை குழந்தைகளுக்கு எந்த தடுப்பூசியையும் பரிந்துரைக்கவில்லை. இந்நிலையில், ஆஸ்திரியாவின் தலைநகரான வியன்னாவில் இருக்கும் மருத்துவர்கள் 1000-த்திற்கும் அதிகமான குழந்தைகளுக்கு தடுப்பூசி […]
இந்தியாவில் கொரோனா பரவலைத் தடுக்க அனைத்து மாநில அரசுகளும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.தடுப்பூசி நல்ல பலனை அளிப்பதால் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள்,தடுப்பூசி முகாம்கள் மூலம் மக்களுக்கு அனைத்து நாட்களிலும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.இந்த ஆண்டு இறுதிக்குள் 100% தடுப்பூசி செலுத்தி முடிக்க வேண்டும் என்று அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் தடுப்பு […]
பைசர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்பவர்கள் ஓராண்டு காலம் பாதுகாப்பாக இருக்கலாம் என அதன் முதன்மை நிர்வாகி தெரிவித்துள்ளார். பைசர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்பவர்கள் ஓராண்டு காலம் பாதுகாப்பாக இருக்கலாம் என்று அதன் முதன்மை நிர்வாகி தெரிவித்துள்ளார். ஆனால் பைசர் பூஸ்டர் தடுப்பூசியின் செயல்திறன் தொடர்பில் மேலதிக ஆய்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொரோனா நோய்த்தொற்று தொடர்பான பொதுமுடக்கத்தில் இருந்து வெளியேற, உலக நாடுகள் தடுப்பூசி திட்டங்களை முழுவீச்சில் அமுல்படுத்தி வருகின்றது. இதில் […]
சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவுக்கு எதிராக இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவாக்சின் தடுப்பூசியினை ஸ்விட்சர்லாந்து அரசாங்கம் தங்கள் நாட்டிற்குள் பயன்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது. சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவுக்கு எதிராக அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டு மக்களுக்கு கொரோனா தொடர்பான தடுப்பூசிகளை தீவிரமாக செலுத்தி வருகிறது. அதன்படி இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சுவிட்சர்லாந்து அரசாங்கம் கொரோனாவுக்கு எதிராக இந்தியாவில் பாரத் பயோடெக் என்னும் நிறுவனம் தயாரிக்கும் தடுப்பூசியான கோவாக்சினை தங்கள் […]
அமெரிக்காவின் கோஸ்டாரிக்கா நாட்டில் ஐந்து வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பெரும் தொற்றுக்கு எதிராக உலகம் முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் அமெரிக்காவின் கோஸ்டாரிக்கா நாட்டில் ஐந்து வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் அனைவரும் தடுப்பூசி கட்டாயம் செலுத்த வேண்டும் என அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. உலகிலேயே கோஸ்டாரிக்காவில் தான் முதன்முறையாக குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பது […]
கர்ப்பிணி பெண்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வது பாதுகாப்பானது என்று சுவிட்சர்லாந்து நிறுவனம் மேற்கொண்ட ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. கொரோனா தொற்றை எதிர்த்து இந்தியா உட்பட பல நாடுகளில் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்நிலையில் கர்ப்பிணி பெண்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தும்போது அது அவர்களது கருவுக்கும், நஞ்சுக்கொடிக்கும் மிகுந்த பாதுகாப்பு அளிக்கிறது. மேலும் கர்ப்பகால ஆபத்துக்களில் இருந்தும் பாதுகாப்பை அதிகரிக்கிறது என்று சுவிட்சர்லாந்து நாட்டு வைராலஜி மற்றும் நோய் எதிர்ப்பியல் நிறுவனம் மேற்கொண்ட ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து […]
உலகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது.ஆனால் கடந்த சில வாரங்களாக ஒரு சில நாடுகளில் பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதாவது ரஷ்யா, சீனா,தென் ஆப்பிரிக்கா மற்றும் சிங்கப்பூர் ஆகிய பல நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. சிங்கப்பூரில் நேற்று முன்தினம் மட்டும் புதிதாக 3,635 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதில் […]
தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பயணக் கட்டுப்பாடுகளில் ஆஸ்திரேலியா அரசு தளர்வுகளை அளித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 20 மாதங்களாக சர்வதேச விமான சேவைகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கொரோனா தொற்று படிப்படியாக குறையத் தொடங்கியதை அடுத்து சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆஸ்திரேலியாவிற்கு வரும் சர்வதேச பயணிகளுக்கும் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. அதாவது இந்தியாவின் கோவாக்சின் மற்றும் சீனாவின் பிபிஐபிபீ-கோர்வி ஆகிய தடுப்பூசிகளை செலுத்திக் கொண்ட பயணிகளுக்கு எந்தவொரு கட்டுப்பாடுகளும் இன்றி ஆஸ்திரேலியாவிற்கு […]
ஜெர்மனி நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியிருப்பதால் தடுப்பூசி தொடர்பில் சுகாதார அமைச்சர் முக்கிய தீர்மானம் செய்திருக்கிறார். ஜெர்மனியின் சுகாதார அமைச்சரான Jens Spahn, கோடைக் காலத்திற்கு பின்பு அடைக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி மையங்களை மீண்டும் திறக்குமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்திருக்கிறார். ஜெர்மனி நாட்டின் தடுப்பூசிக்கான நிலைக்குழு, 70 வயதுக்கு அதிகமான நபர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி அளிக்க பரிந்துரை செய்திருக்கிறது. மேலும், கோடைகாலத்தில் தொற்று எண்ணிக்கை சிறிது குறைந்தது. எனவே, அதன் பின்பு தடுப்பூசி எடுத்துக்கொள்ள […]
ஆஸ்திரேலிய அரசாங்கம் கொரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு சர்வதேச பயணிகளுக்கு போட்டிருந்த கட்டுப்பாடுகளில் பல தளர்வுகளை கொண்டு வந்துள்ளது. சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவை தடுக்கும் பொருட்டு அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டிற்குள் பல கட்டுப்பாடுகளை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இதனையடுத்து தற்போது அனைத்து நாடுகளும் கொரோனா குறைய தொடங்கியுள்ளதால் தங்கள் நாட்டிற்குள் அதற்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகிறது. அதன்படி ஆஸ்திரேலிய அரசாங்கமும் சர்வதேச பயணிகளுக்காக கொரோனாவை தடுக்கும் பொருட்டு போட்டிருந்த கட்டுப்பாடுகளில் பலவித தளர்வுகளை கொண்டு […]
அமெரிக்காவில் சுமார் 1.7 கோடி நபர்கள் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவுக்கு எதிராக போடப்படும் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ்சை செலுத்தி கொண்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா அனைத்து நாடுகளுக்கும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இதனை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் தங்கள் நாட்டு மக்களுக்கு கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை தீவிரமாக செலுத்தி வருகிறது. அதன்படி சுமார் 42 கோடிக்கும் அதிகமான கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி டோஸ்கள் அமெரிக்க மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டின் […]
தமிழகத்தில் கடந்த ஒன்றரை வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பரவல் சற்று கணிசமாக குறைந்து நிலையில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9- 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அதனைத் தொடர்ந்து நாளை முதல் 1- 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட முன்னேற்பாடுகளை பள்ளி கல்வித்துறை […]
தமிழகத்தில் பொரோனோ அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது.அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து வருகின்ற நவம்பர் 1 முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அவரவர் பள்ளிகளிலேயே […]
கொரோனா தடுப்பூசி தயாரிப்பிற்கான காப்புரிமையை மற்ற நாடுகளுக்கு வழங்க வேண்டும். கொரோனா தடுப்பூசியின் உற்பத்திக்கான காப்புரிமையை பிற நாடுகளுக்கும் வழங்க வேண்டும் என்று எய்ட்ஸ் சுகாதார அறக்கட்டளை வலியுறுத்தியுள்ளது. ஏனெனில் உலகில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளில் சுமார் 76% அமெரிக்கா, ஐரோப்பா போன்ற வளர்ந்த நாடுகளுக்கு மட்டுமே செல்வதாக தெரிவித்துள்ளனர். இதனால் இந்த வார இறுதியில் இத்தாலியில் நடக்கவுள்ள ஜி-20 மாநாட்டில் கலந்துகொள்ளும் தலைவர்களின் கவனத்தை தங்கள் பக்கம் திருப்பும் முயற்சியாக மெக்சிகோவின் பாரம்பரிய உடைகளை அணிந்து எய்ட்ஸ் […]
கோவேக்சின் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட இந்தியர்கள் ஓமனுக்கு பயணம் செய்யலாம் என்று இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. ஓமன் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் எந்தெந்த தடுப்பூசியை செலுத்தி கொண்டவர்கள் அந்நாட்டிற்கு வரலாம் என்ற தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது “இந்தியாவில் கோவேக்சின் என்ற தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்கள் அந்நாட்டிற்கு பயணம் மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தடுப்பூசியை செலுத்தியவர்கள் ஓமன் நாட்டிற்கு வரும் போது தனிமைப்படுத்துதல் விதிமுறைகளில் இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. அவர்கள் வழக்கம்போல் […]
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தற்போது தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனாவை விரட்ட ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டும் தான் என்பதால் அனைத்து மாநிலங்களும் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தி உள்ளது. தடுப்பூசி குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு பெரும்பாலான மாநிலங்களில் 80% தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி போடாமல் இருக்கும் அனைவரையும் கண்டறிந்து டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் […]
அமெரிக்காவில் 5 லிருந்து 11 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசியளிக்க நாட்டின் மருத்துவ ஆலோசனை குழு ஒப்புதல் அளித்துள்ளது. ஃபைசர் தடுப்பூசி நிறுவனமானது, தங்கள் தடுப்பூசி குழந்தைகளுக்கு 91% பாதுகாப்புடையது என்று சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. மேலும் அதற்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்விற்கான தகவல்களையும் வெளியிட்டிருந்தது. இந்நிலையில், அமெரிக்கா 5-லிருந்து 11 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு பைசர் தடுப்பூசியளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்த பின்பு, […]
தமிழகத்தில் 6 வது மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் 22 லட்சத்து 33 ஆயிரத்து 219 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுபற்றி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, முதல்வர் முக. ஸ்டாலின் அறிவுரையின்படி நேற்று முன்தினம் 50 ஆயிரம் மையங்களில் தடுப்பூசி பணிகள் நடைபெற்றது. அதில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதல் மற்றும் 2 ஆம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் நடந்த […]
தமிழகத்தில் இதுவரை 69% பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார். சென்னையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, தமிழகத்தில் நேற்று முன்தினம் நடந்த தடுப்பூசி சிறப்பு முகாமில் 50 ஆயிரம் இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அந்த முகாமில் 23,27,907 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதில் முதல் தவணை தடுப்பூசியை 69% பேரும் 2 வது தவணை தடுப்பூசியை 29% பேரும் செலுத்தி கொண்டுள்ளனர். மேலும் இந்திய […]
மூன்றாவது தவணையாக பூஸ்டர் தடுப்பூசியை பெறுவது தொடர்பாக தடுப்பூசி நிலைக்குழு ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது. ஜெர்மனியில் இரண்டு தவணை தடுப்பூசி பெற்றவர்களுக்கு மூன்றாவது தவணையாக பூஸ்டர் தடுப்பூசி கிடைக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதிலும் ஜான்சன் & ஜான்சன் தயாரிக்கும் தடுப்பூசியை பெற்றவர்கள் போதிய தடுப்பூசி பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இரண்டாவது தவணையும் அதே நிறுவனத்தை சார்ந்த MRNA தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் பிரித்தானியா, அமெரிக்கா […]
சுவிட்சர்லாந்தில் கோவிட் -19 சான்றிதழ் தேவை நவம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கோவிட் -19 நோயின் புதிய அலை மற்றும் மருத்துவமனைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதைத் தடுக்க சுவிஸ் அரசாங்கம் தற்போதைய கோவிட் சான்றிதழ் தேவையை நவம்பர் நடுப்பகுதி வரை நடைமுறையில் வைத்திருக்க உள்ளதாக திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும்கூட, நவம்பர் மாதத்திற்குள் தேவை முற்றிலும் நீக்கப்படும் என்று இது அர்த்தப்படுத்துவதில்லை. ஏனென்றால் பெடரல் கவுன்சில் ஒரு அறிக்கையில் அதிகாரிகள் நிலைமையை மறுபரிசீலனை செய்து நாட்டின் தொற்றுநோயியல் சூழ்நிலையைப் பொறுத்து அடுத்த கட்ட […]
பிரிட்டனின் பயண கட்டுப்பாடுகளில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. பிரிட்டன் அரசு, தங்கள் நாட்டின் சிவப்புப் பட்டியலில் இல்லாத நாடுகளிலிருந்து வரும் தடுப்பூசி செலுத்திய மக்கள் இன்று அதிகாலை 4 மணியிலிருந்து PCR சோதனைக்குப் பதிலாக, குறைந்த விலையில் மேற்கொள்ளப்படும் பரிசோதனையை செய்துகொள்ளலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. Lateral Flow Test என்ற அந்த பரிசோதனையை, பிரிட்டனிற்கு வரும் நாள் அல்லது அதற்கு அடுத்த நாள் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. GOV.UK என்ற இணையதளத்தில் இந்த Lateral Flow […]
தடுப்பூசி தயாரிப்பதில் இந்தியா உடனான அமெரிக்காவின் பணி மக்களின் உயிர்களை காப்பாற்றுகிறது. அமெரிக்காவின் சர்வதேச மேம்பாட்டு நிதி கழகமானது அந்நாட்டின் மேம்பாட்டு வங்கி ஆகும். இது உலகமெங்கும் பல்வேறு நாடுகளில் முதலீடுகளை செய்து இருக்கிறது. இதனுடைய தலைமை செயல் அதிகாரி டேவிட் மார்சிக், உயர்மட்ட தூதுக்குழுவுடன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தியா வந்து 26-ம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இந்நிலையில் கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் இந்தியா பெரும் சக்தியாக திகழ்கிறது என்பதை டேவிட் மார்சிக் ஒப்புக்கொண்டுள்ளார். […]