தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் வெளிநபர்கள் நுழைவதற்கு தடை விதித்து உணவுத் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது மக்களுக்கு ரேஷன் கடைகளில் இலவச பொருட்கள் வழங்கப்பட்டன. ஆனால் ரேஷன் கடைகளில் ஊழியர்கள் பற்றாக்குறை இருந்ததால், வெளி நபர்களை ஊழியர்களாக சிலர் முறைகேடாக பயன்படுத்தி வந்தனர். அதனால் பல்வேறு புகார்களும் […]
Tag: தடை
ஆஸ்திரேலிய பயனாளர்கள் இனி செய்திகளை படிக்க முடியாது என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியா பயனாளர்கள் சமூக வலைத்தளங்களில் செய்தியை படிக்க வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு பணம் செலுத்த வேண்டும் என்று ஆஸ்திரேலியாவில் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆகையால் இன்று முதல் ஃபேஸ்புக்கில் எந்த ஒரு செய்தியையும் படிக்கவும், பகிரவும் ஆஸ்திரேலியா பயனர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா பத்திரிகையாளர்கள் ஃபேஸ்புக்கில் செய்திகளை வெளியிடலாம். ஆனால் அதன் லிங்குகள் மற்றும் பதிவுகளை ஆஸ்திரேலிய பயனர்களால் பார்க்கவும், […]
பிரிட்டன்-ரஷ்யாவிற்கு இடையேயான விமானப் போக்குவரத்து தடையை ரஷ்யா மேலும் நீட்டித்துள்ளது. பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவியதால் ஐரோப்பிய நாடுகள் உள்பட பல நாடுகள் பிரிட்டன் போக்குவரத்திற்கு தடை விதித்தது. தற்போது பல நாடுகள் பிரிட்டனின் விமான சேவைக்கான தடையை நீக்கியுள்ளது. ஆனால், பிரிட்டன்-ரஷ்யாவிற்கு இடையேயான விமானப் போக்குவரத்துக்கு கடந்தாண்டு டிசம்பர் 22-ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த தடை வரும் மார்ச் 16ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.
பிரபல பிரிட்டிஷ் ஊடகமான பிபிசிக்கு சீனா தடை விதித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் கையாளுதல் குறித்த பொய்யான அறிக்கை பிபிசி ஊடகம் வெளியிட்டது. சீனாவின் போலி செய்தியை சகித்துக்கொள்ள முடியாது என்று சீன தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனை பழிதீர்க்கும் வகையில் சீனா இந்த முடிவினை எடுத்து பிபிசிக்கு தடை விதித்துள்ளது. ஆனால் சீனா அதிகாரிகளின் இந்த நடவடிக்கை அதிருப்தி அளித்துள்ளது என்று பிபிசி நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், பிபிசி ஊடகம் உலகின் […]
ஈரான் மீது உள்ள பொருளாதார தடைகள் நீக்கப்படாது என்று அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் உறுதியாக தெரிவித்துள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு அமெரிக்கா உள்ளிட்ட ஆறு வளர்ந்த நாடுகளுக்கும், ஈரானுக்கும் இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி ஈரானுக்கு தங்களது ஆக்கப்பூர்வ தேவைகளுக்கு யுரேனியம் செறிவூட்டளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதற்கு வரம்புகளும் விதிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் குறைபாடு இருப்பதாகக் கூறி டொனால்ட் டிரம்ப் இதில் இருந்து விலகினார். ஈரான் மீது அடுத்தடுத்த பொருளாதாரத் தடைகளையும் டிரம்ப் விதித்தார். தொடர்ந்து […]
இந்தோனேசியாவில் மாணவர்களுக்கு மதரீதியான ஆடை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் உள்ள படங் நகரில் இருக்கும் கல்லூரி ஒன்றில் கிறிஸ்துவ மாணவி ஒருவருக்கு வகுப்பறையில் பர்தா அணியும்படி தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்துக் கொண்டே வந்தனர். ஆனால் அந்த மாணவி பர்தா அணிய விரும்பவில்லை. ஆதனால் அவரது பெற்றோர்கள் கல்லூரி அதிகாரிகளிடம் பேசி உள்ளனர். இந்நிலையில், வகுப்பறைகளில் கிறிஸ்தவ பிள்ளைகள் பர்தா ஆடையை அணிய கட்டாயப் படுத்தப் படுகின்றனர் எனக் குற்றச்சாட்டு எழுந்தது. ஆகையால் வகுப்பறைகளில் மாணவிகளுக்கு மத ரீதியான […]
இந்தியாவில் ஏப்ரல் 1 முதல் ஆன்லைன் கட்டண சேவை முறைக்கு தடை விதிக்கப்படுவதாக அதிர்ச்சி அறிவிப்பு வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் புகழ்பெற்ற ஆன்லைன் நிறுவனமான பேபால் ஹோல்டிங்ஸ் இன்க் இந்தியாவில் உள்நாட்டு கட்டண சேவையை ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நிறுத்துவதற்கு முடிவு செய்துள்ளது. அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏப்ரல் 1 முதல் இந்திய வணிகர்களுக்கான சர்வதேச விற்பனையை செயல்படுத்துவதில் எங்கள் கவனத்தை முற்றிலுமாக செலுத்துவோம். இந்தியாவில் உள்ள எங்கள் உள்நாட்டு உற்பத்தியில் இருந்து கவனம் செலுத்துவோம் என்று […]
ஆன்லைனில் சூதாட்ட செயலிகளுக்கு தடை செய்யக்கோரி சட்டப்பேரவையில் தடை மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து தமிழகத்தில் ட்ரீம் லெவன் செயலுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்டம் செயலிகளை தடைசெய்ய மசோதா தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சென்ற வருடம் ஐபிஎல் ஸ்பான்சராக இருந்த ட்ரீம் 11 கிரிக்கெட் சூதாட்ட செயலியையும், தமிழகத்தில் பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. தடையை மீறி ட்ரீம் லெவன் அணியை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக […]
மியான்மர் தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக கட்சி தலைவர் சிறைபிடிக்கப்பட்டுள்ளதால் விமானங்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சியின் தலைவர் ஆங் சான் சூ கி வெற்றி பெற்றார். ஆனால் பொதுத் தேர்தலில் முறைகேடு நடந்து இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. அந்நாட்டு ராணுவம் நேற்று காலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆளும் கட்சியின் தலைவர் அங் சான் சூ கி, ஜனாதிபதி உள்ளிட்ட தலைவர்களை […]
கனடாவிலிருந்து வருபவர்களுக்கு சீனாவிற்குள் நுழைய தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. கனடாவிலிருந்து சீனாவிற்குள் நுழைய தற்கலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து சீன தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது, சீன வாழிட உரிமை வைத்திருப்பவர்கள், வெளிநாட்டினர், வேலை காரணமாகவும் தனிப்பட்ட காரணங்களுக்காகவும் கனடாவிலிருந்து சீனாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தடை டிப்ளமாட்டிக் மற்றும் சுவிஸ் விசா வைத்திருப்பவர்களை இந்த தடை பாதிக்காது. கனடாவில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 4255 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் பலியானோரின் […]
தடைக்கு பின் களமிறங்கிய ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் புதிய சாதனை படைத்துள்ளார். சூதாட்டக்காரர்கள் அனுகியதை தெரிவிக்காதது உள்ளிட்ட மூன்று ஐசிசி ஊழல் தடுப்புச் சட்டத்தை மீறிய ஷாகிப் அல் ஹசன் சர்வதேச போட்டிகளில் விளையாட கிரிக்கெட் கவுன்சில் அவருக்கு ஒரு ஆண்டு தடை விதித்திருந்தது. அந்த தடையானது கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபரில் முடிவடைந்தது. தடைக்காலம் முடிந்து மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான களமிறங்கிய ஷாகிப் 133 ரன்களை எடுத்து ம் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். […]
சீனாவின் முக்கிய பகுதிகளுக்கு செல்ல முன்னாள் வெளியுறவு துறை செயலாளர் உட்பட 28 பேருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவின் முக்கிய பகுதிகளுக்கு செல்ல முன்னாள் வெளியுறவுத் துறைச் செயலாளர் உட்பட 28 அமெரிக்க அரசு அலுவலர்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியதாவது, சீனாவின் இன்றியமையாமையை பாதிக்கும் வகையில் மைக் பாம்பியோ உள்பட 28 அமெரிக்க அரசு அலுவலர்கள் செயல்பட்டு வருகின்றனர். மைக் பாம்பியோ இதனால் அவர்கள் சீனாவின் முக்கிய […]
கூகுள் நிறுவனம் இணையத்தில் அரசியல் ரீதியான தகவல்களை வெளியிட தடை விதித்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் வரும் ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்க உள்ள நிலையில் அவருக்கு உறுதிச் சான்றிதழ் வழங்க அமெரிக்க நாடாளுமன்றம் கூடியது. அந்த மன்றத்தில் கூடிய ட்ரம்ப் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் 5 பேர் உயிர் இழந்து நாடாளுமன்றம் முழுவதும் சூறையாடப்பட்டது.இப்போராட்டத்திற்கு ட்ரம்ப் தான் காரணம் என்று புகார்கள் எழுந்து வருகிறது. இதனால் அவரது சமூக […]
பறவை காய்ச்சல் காரணமாக கறி மற்றும் முட்டையை வெளி மாநிலத்தில் இருந்து கொண்டுவர சிக்கிம் அரசு தடை விதித்துள்ளது. இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே வெளி மாநிலங்களில் இருந்து வரும் கோழி இறைச்சி மற்றும் முட்டையை கொண்டுவர சிக்கிம் அரசு தடைவிதித்துள்ளது. பறவைக்காய்ச்சல் சிக்கிம் மாநிலத்துக்குள் நுழையாமல் தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அம்மாநில கால்நடை வளர்ப்பு […]
சென்னையில் உள்ள அனைத்து இறைச்சிக் கடைகளும் வருகின்ற 15ஆம் தேதி மூடப்படும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. வருகின்ற 15ஆம் தேதி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அனைத்து இறைச்சி கூடங்களும் மூடப்படும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,மாநகராட்சி மற்றும் பொது சுகாதாரத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் இறைச்சி கூடங்கள் அனைத்தும் வருகின்ற 15ஆம் தேதி மூடப்பட வேண்டும். ஆடு,மாடு இதர இறைச்சி கடைகளில் இறைச்சி விற்பனை செய்வதற்கும், பல்பொருள் அங்காடிகள் மற்றும் […]
தமிழகத்தில் மீண்டும் சுற்றுலாத்தலங்களில் கூடுவதற்கு தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக பொங்கல் விடுமுறை நாட்களான ஜனவரி 15,16,17 ஆகிய தேதிகளில் சுற்றுலா தலங்களில் பொது மக்கள் கூடுவதை தடுப்பதற்காக தடை விதித்துள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி சுற்றுலாத்தலங்கள் இலட்சக்கணக்கில் பொதுமக்கள் ஒன்று கூடுவார்கள். இதனால் நோய் தொற்று பரவ வாய்ப்புள்ளது. இதனை மனதில் கொண்டு புதிய அறிவிப்பு ஒன்றை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்று பரவும் அபாயம் அதிகம் உள்ளதை கருத்தில் […]
இந்தியாவில் வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்துவது தற்காலிகமாக நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் […]
இந்தியாவில் வாட்ஸ் அப் செயலிக்கு தடை விதிக்கக் கோரி மத்திய அரசுக்கு வணிக கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. நம் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. தங்கள் உறவினர்களை நேரில் பார்த்து பேசி உறவாடும் காலம் ஓடிப்போய், செல்போன் வந்த பிறகு அதன் மூலமாகவே பேசிக் கொள்கிறார்கள். அதற்கு வாட்ஸ்அப் என்னும் செயலியை பயன் படுத்துகிறார்கள். அதன் மூலமாக வீடியோ கால் செய்து தங்கள் உறவினர்களை நேரில் பார்த்து பேசுவது போல பேசிக் கொள்கிறார்கள். அவ்வாறு […]
வாட்ஸ்அப், பேஸ்புக்கிற்கு தடை விதிக்க மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்க்கு இந்திய வணிகர் சங்க கூட்டமைப்பு கடிதம் எழுதியுள்ளது. வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை பறிக்க முயல்வதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அகில இந்திய வணிகர் சங்க கூட்டமைப்பு, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கடிதம் எழுதியுள்ளது. இது குறித்து அனுப்பிய கடிதத்தில் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் பணிமாற்றம் விவரங்கள் இருப்பிட விவரங்கள் அவர்கள் வைத்துள்ள தொடர்பு எண் […]
நாடு முழுவதும் வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக்குக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை பறிக்க முயலும் வாட்ஸ்அப், ஃபேஸ்புக்குக்கு தடை விதிக்க வேண்டும் என அகில இந்திய வணிகர் சங்க கூட்டமைப்பு மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளது. இது குறித்து அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள், பணப்பரிமாற்ற விவரங்கள், இருப்பிட விவரங்கள், அவர்கள் வைத்துள்ள தொடர்பு எண் தகவல்களை பெறும் வாட்ஸ்அப் அவற்றை எந்த நோக்கத்திற்கு வேண்டுமானாலும் […]
அமெரிக்கா,இங்கிலாந்து நாடுகளில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளை ஈரானில் இறக்குமதி செய்ய அந்நாடு தடைவிதித்துள்ளது. அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனமும், இங்கிலாந்தின் அஸ்ட்ரா ஜனகா நிறுவனமும் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை ஈரானில் இறக்குமதி செய்ய ஈரான் நாட்டு தலைமை மதகுரு அயத்துல்லா கமேனி தடை விதித்துள்ளார். அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு அதிகளவில் இருப்பதால் அங்கு தயாரிக்கப்படும் தடுப்பூசிகள் நம்பகத்தன்மை அற்றது எனக் கூறினார். அதன்பின்,அமெரிக்காவின் பைசர் கோவிட் -19 தடுப்பூசிகளை ஈரானில் இறக்குமதி செய்வதை ஈரானிய ரெட் கிரசென்ட் […]
டெல்லியில் இறைச்சிக்கான பறவைகளை கொண்டு வர தடை விதித்தும் பறவை இறைச்சி கூடங்களை மூடவும் அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் முடிவடையாத நிலையில், கேரளாவில் புதிதாக பறவை காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது. தற்போது வரை ஐந்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவியுள்ளது. அதனால் கேரள மாநிலங்களில் இருந்து இறைச்சிகள் இறக்குமதி செய்வதற்கு தமிழக எல்லையில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கேரளாவில் இருந்து தமிழகம் வரும் […]
தமிழகத்தில் பறவை காய்ச்சல் பரவுவதை தடுக்க கேரளாவில் இருந்து வரும் கோழிகள் மற்றும் முட்டைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில், தற்போது உருமாறிய கொரோனாவும் பரவிக்கொண்டிருக்கிறது. அதனால் உலக நாடுகள் அனைத்தும் அச்சமடைந்துள்ளனர். இதற்கு மத்தியில் கொரோனா விற்கு எதிரான தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் திடீரென காகங்கள் அனைத்தும் செத்து மடிந்தன. அதனை ஆய்வு செய்ததில் பறவை காய்ச்சல் இருப்பதாக […]
கேரளாவில் 2021 ஆம் ஆண்டு முதல் ரிலையன்ஸ் ஜியோ இணைய சேவை நிறுத்தப்படும் என்ற தகவல் வைரலாகி வருகிறது. கேரளாவில் 2021 முதல் ரிலையன்ஸ் ஜியோ சேவைகளை நிறுத்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் பரவி வருகிறது. அதுமட்டுமின்றி அரசின் நெட்வொர்க் மற்றும் மொபைல் போன்களை ஜியோவை விட மிகக்குறைந்த கட்டணத்தில் கேரள அரசு வழங்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது. வைரலாகும் பதிவுகளில், மோடி மற்றும் அம்பானிக்கு பதிலடி கொடுக்கும் அதிரடி நடவடிக்கையை கேரள அரசு […]
கொரோனா ஊரடங்கு காரணமாக இந்தியாவில் பல்வேறு இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை இழந்து காணப்பட்டது. முக்கிய நகரங்களான டெல்லி, மும்பை, பெங்களூர், சென்னை உள்ளிட்ட நகரங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை இழந்தது. இங்கிலாந்தில் புதிதாக பரவியுள்ள உருமாற்றம் அடைந்த கொரோனா பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துவதால் மக்கள் கூடுவதை தவிர்க்க டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1ம் தேதி இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு […]
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு இன்று 10 மணிக்கு மேல் தடை விதிக்கப்பட்டுள்ளதால் இளைஞர்கள் தங்கள் கொண்டாட்டங்களை ஹோட்டல்களில் பகல் நேரத்தில் கொண்டாடினர். கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு இன்று இரவு 10 மணிக்கு மேல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்கள், கிளப்புகள் மற்றும் பண்ணை வீடுகளில் பகலில் புத்தாண்டை கொண்டாட இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மதியம் 12.30 மணிக்கு மேல் சென்னையில் உள்ள பல நட்சத்திர ஹோட்டல்களில் இளைஞர்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களை தொடங்கினர். […]
டெல்லி மற்றும் கேரளாவில் கொரோனாவை தடுக்க புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு மாநில அரசுகள் தடை விதித்து உத்தரவிட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப் பட்டதால், மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா தமிழகத்தில் பரவத் தொடங்கி உள்ளதால் அச்சம் ஏற்பட்டுள்ளது. அதனால் கடற்கரை பகுதிகள் மற்றும் விடுதிகளில் புத்தாண்டு கொண்டாடுவதற்கு தமிழக அரசு […]
புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு மெரினா உள்ளிட்ட கடற்கரை சாலைகள் இன்று இரவு 10 மணியுடன் மூடப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப் பட்டதால், மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா தமிழகத்தில் பரவத் தொடங்கி உள்ளதால் அச்சம் ஏற்பட்டுள்ளது. அதனால் கடற்கரை பகுதிகள் மற்றும் விடுதிகளில் புத்தாண்டு […]
புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு மெரினா உள்ளிட்ட கடற்கரை சாலைகள் நாளை இரவு 10 மணியுடன் மூடப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப் பட்டதால், மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா தமிழகத்தில் பரவத் தொடங்கி உள்ளதால் அச்சம் ஏற்பட்டுள்ளது. அதனால் கடற்கரை பகுதிகள் மற்றும் விடுதிகளில் […]
வேலூர் மாவட்டத்தில் உணவகங்கள் மற்றும் கேளிக்கை விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப் பட்டதால், மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த வருடம் கடற்கரை பகுதிகள் மற்றும் விடுதிகளில் புத்தாண்டு கொண்டாடுவதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. […]
வேலூர் மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது வேலூர் மாவட்டத்தில் உணவகங்கள், கேளிக்கை விடுதிகள் போன்றவற்றில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடைவிதித்து அம்மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார். கொரோனா பரவும் சூழல் நிலவுவதால் டிசம்பர் 31ஆம் தேதி இரவு ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை என அறிவித்துள்ளார்
உலகில் ஒரு மூலையில் இருக்கும் பாமர மக்கள் கூட பயன்படுத்தும் ஒரு நெட்வொர்க் எது என்றால் அது ஜியோ தான். ஜியோவை பொருத்தவரை மிகவும் பயனுள்ள ஒரு அமைப்பு. இதில் வருத்தமான விஷயம் என்னவென்றால் மற்றொரு நெட்வொர்க்குக்கு அழைக்கும் போது மட்டும் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். ஜியோ அல்லாத மற்ற எண்களுக்கு இலவச அழைப்புகள் தடைசெய்யப்பட்டுள்ளது. ஜியோ அல்லாத எண்களுக்கு ஒதுக்கப்பட்ட ஐயுசி நிமிடங்கள் வேலிடிட்டி முடிவதற்குள் தீர்ந்து விடும். இதனால் ஒரு புதிய திட்டத்தை வாங்கவோ […]
தமிழக மக்கள் புத்தாண்டை தங்கள் வீட்டிலேயே கொண்டாட வேண்டும் என சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள புதுப்பேட்டை போலீஸ் குடியிருப்பில் சிறுவர் பூங்கா ஒன்று 7லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. அதனை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேற்று மாலை திறந்து வைத்தார். அங்கு அவர் ஒரு மரக்கன்றை நட்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழக அரசு போலீசாருக்கும், போலீசாரின் குடும்பத்தினருக்கும் பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.அந்த நலத்திட்டங்களை […]
இந்தியா மற்றும் சீனா இடையே மோதல் போக்கு நிலவி வருவதால் இரு நாடுகளுக்கு இடையே விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் சீனா இடையே எல்லையில் நீண்ட நாட்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இருநாட்டு அதிகாரிகள் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. எல்லையில் பிரச்சனை தொடர்ந்து நீடித்து கொண்டு வருவதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் எல்லை பிரச்சினை காரணமாக […]
2020 ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை ரத்து செய்யப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்து வருவதால் மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது. இந்நிலையில் தற்போது விலை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது. இந்த தடை நீக்கம் ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் எனவும், வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் […]
திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்வதற்கு இரண்டு நாள் தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு மாதமும் வருகின்ற பௌர்ணமி நாட்களில் உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர் மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலின் பின்புறமுள்ள மலையைச் சுற்றி கிரிவலம் வருவார்கள். ஆனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பேரிடர் மேலாண்மை தடுப்பு சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை வருகின்ற 31ம் தேதி நள்ளிரவு வரையில் நீட்டிக்கப்படுவதாக உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் […]
புத்தாண்டு தினத்தில் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என சென்னை மாநகராட்சியின் காவல்துறை அறிவித்துள்ளது. புத்தாண்டு நள்ளிரவு வரை இரவு நேரங்களில் கடும் கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்ட நிலையில் சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் சில உத்தரவை பிறப்பித்துள்ளார். சென்னை கடற்கரை மற்றும் சாலைகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் புத்தாண்டு தினத்தன்று சாலைகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார். குறிப்பாக மது போதையில் […]
ஹலால் இறைச்சி இந்து மதத்திற்கு எதிரானது என தெற்கு டெல்லி மாநகராட்சி தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இஸ்லாமியர்கள் ஹலால் என்று முறையில் வெட்டப்பட்ட உணவுகளை சாப்பிடுவார்கள். இந்த உணவுகள் ஹோட்டல்கள் மற்றும் இறைச்சி விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படும் இறைச்சிகள் ஹலால் முறையில் செய்யப்பட்டதா என விளக்கம் அளிக்க டெல்லி அறிவுறுத்தியது. பிறகு பாஜக தலைமையில் டெல்லி இயங்கி வருவதால் உணவகங்களில் ஹலால் இறைச்சியில் சமைக்கப்பட்ட உணவுகள் விற்பனை செய்யப்படுகிறதா என கட்டாயமாக குறிப்பிட வேண்டுமென்று மாநகராட்சியின் […]
பிரிட்டன் மற்றும் தென்னாபிரிக்க நாடுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீடித்துள்ளதாக ஜெர்மனி அறிவித்துள்ளது. ஜெர்மனி, வரும் 2021 ஜனவரி 6-ஆம் தேதி வரையில் பிரிட்டன் மற்றும் தென்னாப்பிரிக்காவிலிருந்து வரும் மக்களுக்கு தடையை நீடித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த இரு நாடுகளிலும் புதிய கொரோனா வைரஸ் பாதிப்பு தோன்றியதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறபட்டுள்ளது. மேலும் ஜெர்மனி சுகாதார அமைச்சகம் கூறியுள்ளதாவது, இந்த இரண்டு நாடுகளில் இருந்தும் வரும் ரயில், பேருந்து, கப்பல் மற்றும் விமானங்கள் மூலமாக வரும் பயணிகளின் […]
கொரோனா பரவல் காரணமாக சுற்றுலா பயணிகள் சுவிட்சர்லாந்திற்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் கொரோனா பாதிப்புக்கான அபாயம் அதிகமாக உள்ளதால் இந்நாட்டின் சுற்றுலாபயணிகள் இனிமேல் சுவிட்சர்லாந்துக்கு பயணம் செய்ய முடியாது என்று கூறியுள்ளது. இந்த எதிர்பாராத திடீர் அறிவிப்பினால் சுற்றுலா பயணிகள் தங்களது விடுமுறையை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஸ்விட்சர்லாந்து, பிரிட்டன் சுற்றுலா பயணிகளை கொரோனோ காலத்திலும் கூட தங்கள் நாட்டிற்கு செல்ல அனுமதியளித்ததற்கு ஐரோப்பிய ஒன்றிய shengan என்ற தடையில்லா போக்குவரத்து விதி […]
சென்னை மற்றும் சேலம் இடையேயான எட்டு வழி சாலைக்கு தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு விதித்த தடை தொடரும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழகத்தில் சென்னை மற்றும் சேலம் இடையே எட்டு வழி சாலை அமைப்பதற்கு தமிழக அரசு திட்டமிட்டது. அதற்காக பல்வேறு விவசாய நிலங்களை கையகப்படுத்த முயற்சி செய்தது. அதனால் விவசாய நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு முயற்சிப்பதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில்சென்னை மற்றும் சேலம் இடையேயான 8 வழி சாலை திட்டம் தொடர்பான […]
அமெரிக்காவின் புதிய திட்டத்தால் சீன நிறுவனங்களுக்கு ஜோ பைடன் ஆட்சியிலும் தடை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா சீனா இடையேயான வர்த்தக பிரச்சனை மற்றும் கட்டுப்பாடுகள் ஜோ பைடன் ஆட்சியிலும் தொடரும் என்று பல தரப்பு கணிப்புகள் இருந்து வந்த நிலையில் அதை நிஜமாக்கும் வகையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் மே மாதம் ரிபப்ளிக் கட்சியினர் ஒப்புதல் அளித்த மசோதாவிற்கு தற்போது டெமாக்ரடிக் கட்சி உறுப்பினர்களும் ஒப்புதல் அளித்துள்ளனர். அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு முக்கிய தரப்பும் ஒப்புதல் அளித்துள்ள […]
புதிய புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று கன்னியாகுமரி மீன்வளத் துறை எச்சரித்துள்ளது. நிவர் புயல் தற்போது தான் கரையை கடந்துள்ள நிலையில், மறுபடியும் புதிதாக புரேவி என்ற புதிய புயல் தென்கிழக்கு வங்க கடலில் உருவாகி உள்ளது. இந்த புயல் காற்றழுத்த தாழ்வு பகுதியிலிருந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. புயலின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யக்கூடும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு […]
திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு மூன்று நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா ஒவ்வொரு வருடமும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. ஆனால் இந்த வருடம் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை முதல் கார்த்திகை தீபம் முடியும் வரையிலும் மூன்று நாட்களில் வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களின் வருகையை கண்காணிக்க 15 இடங்களில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு உள்ளது என ஆட்சியர் […]
இந்தியாவில் மேலும் 43 மொபைல் செயலிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சீனாவின் பல்வேறு செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து 43 மொபைல் செயலிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி அலிபாபா, டென்சென்ட், விசாட் உள்ளிட்ட செயலிகள் தற்போது தடை செய்யப்படுகின்றன. மேலும் தகவல் தொழில்நுட்ப சட்டம் 69 ஏவின் இந்தத் தடையானது அமலுக்கு வருகிறது. நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் பொது […]
மேலும் 43 ஆப்களுக்கு மத்திய அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது. இந்த செயலிகள் இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு, அரசின் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு ஆகியவற்றிற்கு எதிரானது என்று அரசாங்கம் தனது அறிவிப்பில் கூறியுள்ளது. தடை செய்யப்பட்ட குறிப்பிட்ட 43 ஆப்களின் முழு பட்டியலையும் இந்திய அரசாங்கம் வெளியிட்டு உள்ளது. தடைசெய்யப்பட்ட 43 ஆப்களின் முழு பட்டியல் பின்வருமாறு: AliSuppliers Mobile App Alibaba Workbench AliExpress Smarter Shopping, Better Living […]
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி தடை விதித்து அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் கடந்த சில மாதங்களாக பல்வேறு உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. அதனால் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்குத் தடை விதிக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதனை வலியுறுத்தி தமிழக ஆளுநருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதற்கு ஒப்புதல் அளித்த ஆளுநர் கடந்த 20ஆம் தேதி […]
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை செய்யும் அவரச சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். ஆன்லைனில் இருக்கும் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளில் பணத்தை கட்டி விளையாடும் போக்கு தமிழகத்தில் அதிகரித்தது. ஒரு கட்டத்தில் மனவேதனையில் தற்கொலை செய்துகொண்ட இறப்பு சம்பவங்கள் நடைபெற்றும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியைத் தடை செய்வதற்கான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். அதன்படி, இதுதொடர்பான சட்டம் இயற்றி அளுநர் ஒப்புதலுக்கு […]
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டகளுக்கு தடை விதிக்க தமிழக அரசு தாமதம் செய்வது ஏன் என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் இளைஞர்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவம் அதிக அளவு நடந்து கொண்டிருக்கிறது. அதனால் ரம்மி உள்பட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கள் அனைத்திற்கும் தடை விதிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையில் நீதிபதிகள், “ஆன்லைன் ரம்மி விளையாட தடை செய்வதற்காக சட்டம் […]
தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் ஆபாசம் பரப்பும் விளம்பரங்களுக்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த சகாதேவராஜா என்ற நபர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அதில் அவர் குறிப்பிட்டு இருப்பது, “தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் கருத்தடை சாதனங்கள், பாலியல் பிரச்சனை தொடர்பான மருத்துவங்கள் ஆகிய விளம்பரங்கள் அனைத்தும் ஆபாசத்தை பரப்பும் வகையில் இருக்கின்றன. அதற்கு தணிக்கை எதுவும் இல்லை. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான […]