ஆபாசத்தை பரப்பும் வகையிலான விளம்பரங்களை ஒளிபரப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த சகாதேவராஜா என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள், கிருபாகரன் புகழேந்தி அமர்வு முன்பு இன்று (12/11/2020) விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆபாசத்தை பரப்பும் வகையிலான கருத்தடை சாதனங்கள், பாலியல் பிரச்சினை தொடர்பான மருத்துவங்கள், உள்ளாடைகள், சோப்புகள், ஐஸ்கிரீம், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட விளம்பரங்களை […]
Tag: தடை
சீனாவின் விசா வைத்திருக்கும் இந்தியர்கள் அந்நாட்டிற்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே பதட்டமான சூழல் உருவாகி வருவதால் சீனாவின் விசா வைத்திருக்கும் இந்தியர்களும் நாட்டிற்குள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவின் விசா அல்லது சீன குடியிருப்பு அனுமதி அட்டை பெற்றவர்கள் தற்காலிகமாக நாட்டிற்குள் செல்வதற்கு தடை விதிக்கப்படுவதாக இந்தியாவில் அமைந்துள்ள சீன தூதரகம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் சுகாதார நற்சான்றிதழ் அவர்களுக்கு வழங்கப்படாது என்றும் தூதரகம் சார்பில் கூறப்பட்டுள்ளது. தொற்று பரவலைத் தடுப்பதற்காக […]
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட தடை செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பது, “ஆன்லைன் ரம்மி விளையாட்டை ரத்து செய்ய வேண்டும் என்று அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. அதனால் அனைத்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளையும் தடை செய்வதற்கு அரசு கட்டாயம் நடவடிக்கை எடுக்கும். மேலும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை […]
ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் தடை விதிக்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர் ஒருவர் முறையீடு செய்துள்ளார். ஆன்லைன் சூதாட்டத்தால் தொடர் தற்கொலைகள் நடந்து வருவதால், ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் தடை விதிக்க வேண்டும் என்று நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள் அரசிற்கு கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர் ஒருவர் முறையீடு செய்திருக்கிறார். ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை விதிக்கக் கோரியும், […]
இந்தியாவில் இன்று முதல் பப்ஜி செயலிக்கு முழுமையாக தடை விதிக்கப்படுகிறது. அண்டை நாடான சீனாவுடனான பிரச்சனைக்கு பின்னர் அந்த நாட்டின் டிக் டாக், ஷேர்இட், உள்ளிட்ட மொபைல் போன் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக பிரபல விளையாட்டு செயலியான பப்ஜி உள்ளிட்டவற்றிற்கும் மத்திய அரசு தடை விதித்தது. கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து பப்ஜி செயலி நீக்கப்பட்ட நிலையில் இன்று முதல் அதை முற்றிலும் தடை செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. […]
குளிரூட்டிகள் உடன் கூடிய ஏர் கண்டிஷனர்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க மத்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக கடந்த ஜூன் மாதத்தில் கார்கள், பேருந்துகள், லாரிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் பயன்படுத்தப்படும் புதிய நியூ மேட்சிக் டயர்களை இறக்குமதி செய்ய அரசு தடை விதித்தது. அதற்கு முன்னர் தொலைக்காட்சி முதல் பாதுகாப்பு உபகரணங்கள் வரை பல்வேறு பொருட்களுக்கான இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டது. அடுத்த கட்டமாக ஏசி […]
அநாகரீகமான உள்ளடக்கத்தை முறைப்படுத்த தவறியதால் பாகிஸ்தானில் டிக் டாக் செயலி தடை செய்யப்பட்டுள்ளது சீனாவின் செயலியான டிக் டாக் இந்தியாவில் தடை செய்யப்பட்டதை தொடர்ந்து அமெரிக்காவிலும் தடை செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது பாகிஸ்தானிலும் டிக் டாக்ற்க்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அநாகரிகமான காணொளிகள் ஒழுக்கக்கேடான உள்ளடக்கங்கள் போன்றவற்றை தடுக்க தவறியதனால் செயலி தடை செய்யப்பட்டிருப்பதாக பாகிஸ்தான் தொலைத் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது. பல்வேறு சமூகத்தினரிடமிருந்து தவறான காணொளிகள் டிக் டாக் மூலம் பகிர படுவதாக ஏராளமான புகார்கள் அரசுக்கு […]
சீனாவின் மிக நெருங்கிய நட்பு நாடாக திகழும் பாகிஸ்தான், பன்னாட்டு நிறுவனத்திற்கு உரிமையான டிக் டாக் செயலியை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. உலகம் முழுவதிலும் டிக் டாக் செயலி பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இளம் வயதினர் மத்தியில் இந்த செயலி மிகவும் பிரபலமடைந்துள்ளது. அந்த செயலியில் அநாகரீகமான பதிவுகள் வெளியிடப்பட்டு வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அவ்வகையில் டிக் டாக் செயலியில் ஒழுங்குமுறை ஏற்ற மற்றும் அநாகரீகமான வீடியோக்கள் அதிக அளவு வெளியாவதாக கூறி, சார்பில் தான் தொலைத் […]
எச்1பி விசா வழங்குவதை நிறுத்தி வைக்கும் ஜனாதிபதி ட்ரம்பின் உத்தரவுக்கு தடை விதித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறாமல் அங்கு தங்கியிருந்து வேலை செய்வதற்காக வெளிநாட்டினருக்கு அந்த நாடு எச்1பி விசா வழங்கி வருகிறது. இந்த எச்1பி விசா வழக்கமாக மூன்று ஆண்டுகள் வதையே நிர்ணயித்து வழங்கப்படும். பிறகு தேவைப்பட்டால் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்து கொள்ள முடியும். இந்த விசாவை உலக நாடுகளில் அதிக அளவு இந்தியர்களும், சீனர்களும் […]
இஸ்லாமிய மதப் பிரச்சாரகர் திரு ஜாகிர் நாயக்கின் பீஸ் செயலி மற்றும் அவரது யூடியூப் சேனலுக்கு தடை விதிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இஸ்லாமிய மத பிரச்சாரகர் திரு சாகிர் நாயக் தனது பீஸ் டிவி மூலம் மத வெறுப்புணர்வை தூண்டும் செயலில் ஈடுபட்டு வந்ததால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அந்த டிவி ஒளிபரப்புக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் பீஸ் ஆப் என்ற மொபைல் போன் செயலி மூலம் மத வெறுப்புணர்வையும் இந்தியாவுக்கு எதிரான […]
தொழிலாளர்களை பலவந்தப்படுத்தி வேலை வாங்குவதாக கோரி சீனாவின் ஐந்து உற்பத்தி பொருட்கள் இறக்குமதிக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. வர்த்தக போர், கொரோனா வைரஸ், தென்சீனக்கடல் விவகாரம், டிக் டாக் செயலிகள் என அமெரிக்கா சீனா இடையிலான மோதல் புது புது வடிவம் எடுத்து வருகிறது. இதன் அடுத்த கட்டமாக உற்பத்தியை அதிகரிக்க தொழிலாளர்களை கட்டாயப்படுத்தி வேலை வாங்குவதாக சீனா மீது அமெரிக்கா குற்றம் சாட்டி இருக்கிறது. சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் தொழிலாளர்களை வதைத்து பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. […]
வெங்காயம் ஏற்றுமதிக்கும் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் வெங்காயம் வங்கதேசம், மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை போன்ற நாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்ற சில மாதங்களில் மட்டும் அதிக அளவில் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அதிலும், குறிப்பாக சென்ற நிதி ஆண்டில் மட்டும் வெங்காயம் ஏற்றுமதியானதில் சுமார் 50 சதவீதம் முதல் காலாண்டில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அதனால், உள்நாட்டில் பற்றாக்குறை ஏற்பட்டு வெங்காயம் […]
118 செயலிகளை மத்திய அரசு தடை செய்ததற்காக டாக்டர் ராமதாஸ் தனது பாராட்டை தெரிவித்துள்ளார். நாட்டு மக்களின் நலன் கருதி மத்திய அரசு 118 செயலிகளை தடை விதித்துள்ளது. முக்கியமாக இந்த பப்ஜி என்ற கேம் செயலி மூலம் மாணவர்கள் சமூக சீர்கேட்டுக்கு ஆளாகி வருகின்ற காரணத்தால் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. மத்திய அரசின் இந்த செயல்முறையை குறித்து பல்வேறு தலைவர்கள் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில், இதுகுறித்து டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டர் […]
ஒழுக்கத்திற்கு இடையூறு விளைவிப்பவை எனக்கூறி 5 டேட்டிங் செயலிகளை பாகிஸ்தான் அரசு தடை செய்துள்ளது பாகிஸ்தான் அரசு அந்நாட்டு இளைஞர்கள் இடையே அதிகரித்துவரும் டேட்டிங் பழக்கத்தை எதிர்க்கும் வகையில் டேட்டிங் செயலிகளை கட்டுப்படுத்த ஆரம்பித்துள்ளது. நாட்டின் கலாச்சாரத்தை மேற்கோள்காட்டி ஒழுக்கத்திற்கு இடையூறு விளைவிப்பவை என குற்றம் சுமத்தி டேட்டிங் தொடர்பான 5 செயலிகளை பாகிஸ்தான் அரசு தடை செய்துள்ளது. ஸ்கவுட் (Scout), டின்டேர் (Tinder), க்ரிண்டெர் (Grinder), செ ஹாய் (Say Hi) மற்றும் டக்ட் (Tagged) […]
தமிழகத்தில் தனியார் பேருந்துகளை இயக்க முடியாது என பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இன்று தொடங்கியுள்ள நான்காம் கட்ட ஊரடங்கில் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்திருக்கும் நிலையில் அரசு பொதுப் போக்குவரத்து என்பது தொடங்கி சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. மேலும் வழிபாட்டு தலங்கள் நூலகங்கள் திறக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. அந்த வகையில் தனியார் பேருந்துகளை இயக்க முடியாது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது அவர்கள் அரசுக்கு வைத்துள்ள கோரிக்கை என்னவென்றால் டீசல் விலை உயர்ந்து கொண்டிருக்கும் இந்த […]
தமிழகத்தில் நாளை தனியார் பேருந்துகள் இயங்காது என சம்மேளனத்தின் மாநில செயலாளர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்று இரவுடன் மூன்றாம் கட்ட ஊரடங்கு முடிவடையும் நிலையில் நாளை தொடங்குகிறது நான்காம் கட்ட ஊரடங்கு. இந்த ஊரடங்கில் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்திருக்கிறது. அவற்றில் பொதுப்போக்குவரத்து, கோவில்கள் திறப்பு, ஷூட்டிங், மால்கள், பூங்காக்கள், இவற்றிற்கு அனுமதி என பல தளர்வுகளை கொடுத்துள்ளது. அந்த வகையில் பொது போக்குவரத்தை தொடங்க இருக்கும் நிலையில் தனியார் பேருந்துகள் இயங்காது என சம்மேளனத்தின் மாநில […]
கொரோனா பரவலை தடுப்பதற்காக மலேசியாவிற்கு சுற்றுலாப்பயணிகள் வர இந்த வருடத்தின் இறுதி வரை தடை நீடிக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் தொலைக்காட்சி மூலமாக மக்களிடம் உரையாற்றிய பிரதமர் முகைதின் யாசின் கூறுகையில், உலகின் மற்ற நாடுகளில் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்றது. நம் நாட்டில் நிலைமை கட்டுப்படுத்தப்பட்டு இருந்தாலும் சில இடங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் விதமாக வெளிநாட்டிலிருந்து வரும் சுற்றுலா பயணிகள் மலேசியா வருவதற்கு போடப்பட்ட தடை இந்த வருடத்தின் இறுதி வரை நீட்டிக்கப்படுகிறது. […]
மொகரம் பண்டிகைக்கு ஊர்வலம் செய்ய அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக பல்வேறு விழாக்கள் மற்றும் கூட்டங்கள் நடைபெற பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டு வருகின்ற நிலையில் தற்போது வந்த விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் எளிதாக நடந்து முடிந்துள்ளது. இந்த விழாவிற்கு ஊர்வலம் செல்ல அனுமதி கொடுக்காத உச்சநீதிமன்றம் வழிபாட்டிற்கு மட்டும் அனுமதி கொடுத்திருந்தது. அதேபோல் இந்த மாத இறுதியில் வர இருக்கும் மொகரம் பண்டிகைக்கு ஊர்வலம் […]
வந்தே பாரத் திட்டத்தின் கீழ் ஏர் இந்தியாவின் சிறப்பு விமானங்களை இயக்க ஹாங்காங் நிர்வாகம் இரண்டு வாரங்களுக்கு தடை விதித்திருக்கிறது. கொரோனா பரவல் காரணமாக பொது ஊரடங்கு அமல்படுத்த பட்டிருப்பதால், வெளிநாடுகளுக்கு சென்றவர்கள் சொந்த நாடுகளுக்கு திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். வெளிநாடுகளில் சிக்கிக் கொண்டிருக்கும் இந்தியர்களை வந்தே பாரத் திட்டத்தின் கீழ் ஏர் இந்தியாவின் சிறப்பு விமானங்கள் மூலமாக அழைத்து வரப்படுகின்றனர். அந்தந்த நாடுகளில் விதிமுறைகளுக்கு ஏற்றவாறு இந்த விமானங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்தநிலையில் ஹாங்காங்கில் […]
அலிபாபா நிறுவனத்திற்கு தடை விதிப்பது பற்றி தனது நிர்வாகம் பரிசீலனை செய்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ளார். சோமாலியா நாட்டின் தெற்கு பகுதியில் இருக்கின்ற கெடோ பிராந்தியத்தில் இராணுவ முகாம் மீது தாக்குதல் மேற்கொண்ட 4 பயங்கரவாதிகள் இராணுவ வீரர்கள் சுட்டுக் கொன்றனர். அமெரிக்காவில் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் பள்ளிக்கூடங்களை மீண்டும் திறப்பதற்கு ஜனாதிபதி தொடர்ந்து அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறார். சீனாவின் டிக் டாக் செயலிக்கு தடை விதித்துள்ள டிரம்ப் நிர்வாகம், தற்போது சீனாவை […]
விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு தடை விதிக்கப் போவதாக அறிவித்துள்ள தமிழக அரசு, பண்டிகையை வீடுகளிலேயே கொண்டாட அறிவுறுத்தி உள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா பொது முடக்கம் அமலில் உள்ளதால், முன்னெச்சரிக்கையாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு தடை விதிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி பண்டிகையை அவரவர் வீடுகளிலேயே கொண்டாடவும் அறிவுறுத்தி உள்ளது. பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவுவதற்கும், ஊர்வலத்தை நடத்தவும் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
படப்பிடிப்பில் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் கலந்து கொள்வதற்கான உத்தரவை மும்பை நீதிமன்றம் கொடுத்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தற்போது ஊரடங்கு தளர்வு ஏற்பட்டு வரும் நிலையில் ஒரு சில மாநிலங்களில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் சினிமா படப்பிடிப்புகளை துவங்க அந்த மாநில அரசு அனுமதி அளித்துள்ளனர். நாட்டிலேயே மகாராஷ்டிர மாநிலத்தின் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. எனவே கடும் […]
அமெரிக்காவில் சீன நிறுவனத்தின் டிக்டாக் மற்றும் வீசாட்செயலிகளுக்கு தடை விதித்து அமெரிக்க அதிபர் உத்தரவிட்டுள்ளார். இந்தியாவில் சீனாவின் டிக்டாக் மற்றும் வீசாட் உள்ளிட்ட 106 செல்போன் செயலிகள் தேசப் பாதுகாப்புக்கு கெடுதல் விளைவிப்பதாக கருதி தடை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் இத்தகைய செயலை அமெரிக்க அரசு மற்றும் குடியரசு கட்சி எம்எல்ஏக்கள் அனைவரும் பாராட்டியுள்ளனர். இதனைத்தொடர்ந்து அமெரிக்காவிலும் டிக் டாக் மற்றும் வீசாட் உள்ளிட்ட செயலிகளுக்கு தடை விதிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ கூறியிருந்த நிலையில், அந்த […]
இந்திய அரசு இரண்டாம் கட்ட சீன செயலிகளின் தடை பட்டியலை வெளியிட்டுள்ளது. கல்வான் பள்ளத்தாக்கில் சீன படையுடன் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டு வீரமரணம் அடைந்துள்ளனர். இந்நிலையில் பயனர்கள் தனி உரிமையைப் பாதுகாக்கும் வகையில் 59 சீன செயலிகளை அரசு தடை செய்ய திட்டமிட்டுள்ளது. சீனாவின் மிகவும் புகழ்பெற்ற கைபேசி தயாரிப்பு நிறுவனமான சியோமி யின் எம்.ஐ ப்ரவுசர், மெய்டூ நிறுவனத்தின் மெய்பெய் போன்ற செயலிகள் இந்தியாவின் இரண்டாம் கட்ட சீன செயலிகள் […]
59 சீன செயலிகள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 47 செயலிகள் தடை செய்ய இருப்பதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது. இந்திய அரசின் தொழில்நுட்ப கொள்கை மற்றும் தகவல் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியுள்ளதாக சென்ற மாதம் டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. ஜூன் மாதத்தில் தடைசெய்யப்பட்ட 59 சீன செயலிகள் ஒரிஜினல் செயலியைப் போல இயங்கும் போலியாக உள்ள 47 சீன செயலிகளை இந்தியா மீண்டும் தடை செய்துள்ளது. தடைசெய்யப்பட்ட […]
டிக்டாக், ஹலோ உள்ளிட்ட தடை செய்யப்பட்ட செயலிகளின் லிங்குகளை அனுப்பி டவுன்லோட் செய்யுமாறு வலியுறுத்தப்பட்டால், அந்த தவறை செய்யாதீர்கள் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. கடந்த மாதம் இந்திய சீன எல்லையில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன ராணுவ வீரர்களின் இந்த செயலை கண்டிக்கும் விதமாக இந்தியர்கள் சீன பொருட்களை வாங்கக் கூடாது என்றும், சீன செயலிகளை பயன்படுத்தக்கூடாது […]
கூகுளில் கொரோனா பற்றிய விளம்பரங்கள் இனி வெளியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கூகுளில் செய்யப்படும் விளம்பரங்கள் அனைத்தும் மிக எளிதாக மக்களை சென்றடைவதால் பல நிறுவனங்கள் இதனை பயன்படுத்துகின்றனர்.இதில் பொதுவாக அப்ளிகேஷன்கள் மற்றும் இணையதளங்கள் போன்ற விளம்பரங்களை செய்யலாம் .இவ்வாறு செய்யப்படும் விளம்பரங்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது அந்த கட்டுப்பாடுகளில் ஒன்றாக தற்பொழுது பிரபலமாக பேசப்பட்டு வரும் கொரோனா வைரஸ் குறித்த தகவல்கள் பற்றிய விளம்பரங்கள கூகுளில்தடை செய்யப்பட்டுள்ளது. கொரோனா […]
ஆடி அமாவாசையான நாளைய தினம் பொதுமக்கள் புனித தலங்களுக்கு சென்று சடங்குகளை மேற்கொள்ளக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 23 ஆம் தேதி முதல் தற்போது வரை ஆறாவது கட்ட நிலையில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் அதனுடைய பாதிப்பு குறைந்தபாடில்லை. ஆறாவது கட்ட நிலையில் நடைமுறையில் இருக்கும் இந்த ஊரடங்கில் பல கட்ட தளர்வுகள் மக்களுக்கு வழங்கப்பட்டு உள்ளன. அதன்படி, கோவில்களுக்குச் சென்று சாமியை தரிசிக்க விரும்பும் பக்தர்களுக்கு […]
ட்ரூ காலரை இந்திய ராணுவத்தில் தடை செய்தது நியாயமற்ற அநியாயமான செயல் எனஅந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய ராணுவம் பாதுகாப்பு மற்றும் முக்கிய தகவல்கள் கசிவதை தடுக்கும் வகையில் இன்ஸ்டாகிராம் ஃபேஸ்புக், ட்ரூ காலர் உள்ளிட்ட 89 செயலிகளுக்கு தடை விதித்துள்ளது. வருகின்ற 15ம் தேதி முதல் இந்த தடை அமலுக்கு வரவிருக்கிறது. இந்நிலையில் ட்ரூகாலர் நிர்வாகத்தின் சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்தால் 89 செயலிகள் தடை செய்யப்பட்ட பட்டியலில் ட்ரூ காலர் இருப்பது மிகவும் வருதத்தை […]
சிரிப்பூட்டும் வாயுவான நைட்ரஸ் ஆக்சைடை இளைஞர்கள் போதைக்கு பயன்படுத்துவதால் அதை விற்பனை செய்ய தடை விதிக்கப்படும் என நம்பப்படுகிறது பிரான்ஸில் சிரிப்பூட்டும் வாயுவான நைட்ரஸ் ஆக்சைடு பலூன்களில் நிரப்பப்படுவதோடு பார்ட்டிகளில் பயன்படுத்தப்படுவதும் வழக்கம். ஆனால் அந்நாட்டில் இருக்கும் இளைஞர்கள் நைட்ரஸ் ஆக்சைடை போதைக்கு பயன்படுத்தி வருவதாக குற்றசாட்டுகள் அதிகரித்துள்ளது. இதனால் நைட்ரஸ் ஆக்சைடு வயது வராதவர்களுக்கு விற்பனை செய்ய தடை விதிக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நரம்பு மண்டலத்தை வெகுவாக பாதிக்கும் அந்த வாயு ஏராளமான பக்கவிளைவுகளை உடலில் […]
காவல்துறையினருக்கும் உதவிகரமாக இருந்து தற்போது பல மாவட்டங்களில் தடை செய்யப்பட்டிருக்கும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பு பற்றிய தொகுப்பு சாத்தான்குளம் விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில் தமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்புக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என்ற அமைப்பு துவங்கப்பட்டதன் நோக்கம் என்ன அவர்களின் பணி என்ன என்பது குறித்த செய்தி தொகுப்பு. காவல் துறையோடு இணைந்து மக்களுக்காக சேவையாற்ற விரும்பும் இளைஞர்களை தேர்வு செய்து உருவாக்கப்பட்டது தான் பிரண்ட்ஸ் […]
சீனாவிலிருந்து டிவி,ஏசி உள்ளிட்ட பொருள்களின் இறக்குமதியை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியா- சீனா ராணுவ வீரர்கள் இடையே கடந்த மாதம் எல்லையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் காரணமாக boycottchinaproduct என்ற தலைப்பில் சீனப் பொருட்களை மறுத்து இந்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதேபோல் சீன செயலிகளை தடை விதிக்கவும் மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில், 59 செயலிகளை மத்திய அரசு முற்றிலுமாக தடை செய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக மற்றொரு தடையையும் அரங்கேற்ற மத்திய […]
18 நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள ஜப்பான் அரசு தடை விதித்துள்ளது. சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வர, இதற்கு தற்போது வரை தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து உலக நாடுகள் தப்பிப்பதற்கான ஒரே வழியாக ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இதன்படி நாட்டு மக்களுக்கு பயணம் மேற்கொள்ள […]
இயக்குனர் மற்றும் ott தளங்களுக்கு விஷ்வஹிந்து அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீபகாலமாக இந்து மதம், அதில் இருக்கக்கூடிய சாதிய கட்டமைப்பு, அரசியல் உள்ளிட்டவற்றை மையமாக வைத்து பல முற்ப்போக்கான இயக்குனர்கள் படங்களை இயக்கி வந்தனர். தற்போது இதற்கு ஆப்பு அடிக்கும் விதமாக சம்பவம் ஒன்று ஆரங்கேறியுள்ளது. அது என்னவெனில், இந்து மதத்திற்கு எதிரான கருத்துகளை படைப்பின் மூலம் பரப்ப நினைத்தால் அந்த படைப்பை இயக்கும் இயக்குனர்கள் மற்றும் அதை திரையிடும் OTT தளங்கள், திரையரங்கள் எதுவாயினும் அவர்கள் […]
இந்தியாவின் டிக் டாக் நிறுவனம் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு செயல்பட தயார் என மத்திய அரசிடம் முறையிட்டுள்ளது இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையே எல்லையில் கடந்தமாதம் மோதல் ஏற்பட்டதை அடுத்து, சீன பொருட்களை வாங்க மறுப்போம், சீன செயலிகளை உபயோகிக்க வேண்டாம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தனர். அதன்படி, ப்ளே ஸ்டோரில் இருக்கக்கூடிய 59 செயலிகள் இந்தியர்களின் தகவல்களை திருட கூடியதாக இருப்பதாக கூறி, அதனை தடை செய்யுமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி, ஹலோ, டிக் […]
நாளை முதல் 30ம் தேதி வரை மண்டலத்திற்குள் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படுவதாக முதல்வர் தெரிவித்துள்ளார். அந்தந்த மாவட்டத்திற்குள் மட்டும் பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இன்று நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் விளக்கம் அளித்து வருகிறார். தனது உரையில் முதல்வர் கூறியதாவது, ” கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த அரசு கடுமையான முயற்சி எடுத்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த […]
கொரோனாவை குணப்படுத்தும் எனக்கூறி பாபராம் தேவின் பதஞ்சலி நிறுவனம் அறிமுகம் செய்த மருந்துக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. பதஞ்சலியின் மருந்து ஆய்வுபூர்வமாக நிரூபிக்கப்படும் வரை விளம்பரம் செய்யவும் ஆயுஷ் அமைச்சகம் தடை விதித்துள்ளது. பெயர், மருந்தின் கலவை பற்றிய விளம்பரங்களையும் பதஞ்சலியிடம் மத்திய அமைச்சகம் கேட்டுள்ளது. மேலும், மருந்தின் அளவு, மருந்தினை சோதனை செய்த இடங்களின் விவரங்களை வழங்க பதஞ்சலி நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது. பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் இன்று ‘ஆயுர்வேதிக் மருந்து கிட்’ ஒன்றை […]
இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு கொடுத்துவந்த எச்1பி விசாவுக்கு அதிபர் தடைவிதித்தது அதிருப்தியை கொடுப்பதாக சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார் கொரோனா தொற்றால் அமெரிக்காவில் பொருளாதாரம் சரிந்து வேலையின்மை அதிகரித்துள்ளது. இதனால் வேலை வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என போராட்டங்கள் சில நடந்தேறியது. இதனை தொடர்ந்து அமெரிக்கவாழ் மக்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்வதற்காக பல நடவடிக்கைகளை அரசு எடுக்க தொடங்கியது. அதில் ஒன்றாக வெளிநாட்டினருக்கு வேலை வாய்ப்புகளைக் குறைத்து உள்நாட்டு மக்களை பயன்படுத்துவதற்கு அமெரிக்கா முடிவு செய்தது. […]
கேரளாவில் உள்ள கோயில்களில் பக்தர்கள் வழிபட இன்று முதல் ஜூன் 30ம் தேதி வரை தடை விதிக்கப்படுவதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் கோயில்களுக்கு பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. முதன் முதலாக கேரளாவில் தான் கொரோனா தாக்கம் அதிகரித்து இருந்தது. பின்னர், கேரளா அரசாங்கத்தின் தீவிர நடவடிக்கையால் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்திருந்தது. அதன் பிறகு, பிற மாநிலங்கள் மற்றும் பிற […]
உலக புகழ்பெற்ற ஒடிசா பூரி ஜெகன்நாத் ரதயாத்திரைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் இதுபோன்ற கூட்டங்கள் நடக்க அனுமதிக்க முடியாது. இந்த ஆண்டு யாத்திரை நடத்த ஒப்புக்கொண்டால் நிச்சயமாக கடவுள் ஜெகநாத் எங்களை மன்னிக்கமாட்டார் வச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். ஒடிசாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் பூரி ஜெகன்நாத் ரத்த யாத்திரையை வரும் 23ம் தேதி நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில், பொது சுகாதாரம் மற்றும் குடிமக்களின் பாதுகாப்பு […]
10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான விடைத்தாள்களை சேகரிக்கும் பணிக்காக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பள்ளிக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், பள்ளி, கல்லூரி நிலையங்கள் மூடப்பட்டு மாணவர்கள் தங்களது வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடம் படித்து வருகின்றனர். 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு இருந்த பொதுத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன்படி, மாணவர்களுக்கு மதிப்பெண் காலாண்டு, அரையாண்டு உள்ளிட்ட தேர்வுகளில் அவர்கள் எடுத்த […]
இ-பாஸ் வைத்திருந்தாலும் தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு வர அனுமதியில்லை என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரியின் எல்லைகளை மூடினால் தான் தொற்று அதிகரிப்பதை கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்துள்ளார். மேலும் வெளிமாநிலங்களில் இருந்து வருவபர்களால் தான் தொற்று அதிகரித்துள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார். அதேபோல, வெளிநாட்டில் இருந்து வருபவர்கள், நோய் தொற்று இல்லை என சான்றிதழுடன் வந்தால்தான் புதுச்சேரிக்குள் அனுமதி என முதல்வர் நாராயணசாமி திட்டவட்டமாக கூறியுள்ளார். புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. […]
அமேசானின் முக அடையாளம் காணும் தொழில்நுட்பத்தை பயன்படுத்த அமெரிக்க காவல்துறைக்கு ஒரு வருட காலம் தடை விதிக்கப்பட்டுள்ளது முக அடையாளம் காணும் தொழில்நுட்பமான ஃபேஸ் ரெகக்னிஷன் டெக்னாலஜியை பயன்படுத்தி பொது இடங்களில் இருக்கும் குற்றவாளிகளை மிகவும் எளிதாக கண்டுபிடிக்க முடியும் என்பதால் சீனா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் காவல்துறையினர் இதனை பயன்படுத்தி வருகின்றனர். கருமையான தோல் நிறம் கொண்ட குற்றவாளிகளை தொழில்நுட்பம் மூலம் சரியாக கண்டறிவது கடினமானது என குற்றச்சாட்டுக்கள் பல வருடங்களாகவே இருந்து வருகின்றது. […]
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் , நடப்பு கல்வியாண்டிற்கான பாடங்கள் ஆன்லைன் மூலமாக தற்போது தனியார் பள்ளிகளில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஆன்லைன் மூலமாக வகுப்புகளை நடத்த தடை விதிக்கக்கோரி சென்னையை சேர்ந்த சரண்யா என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் ஆன்லைன் மூலமாக வகுப்புகளில் […]
தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆன்லைன் மூலம் மட்டுமே மது விநியோகம் செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஆன்லைனில் மது விற்க மாநில அரசுகள் முடிவெடுக்கலாம் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே கூறியிருந்தது. வழக்கு விவரம்: சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தடை செய்யப்பட்ட பகுதிகள் தவிர்த்த மற்ற பகுதிகளில் நேற்று முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் நிபந்தனைகளுடன் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி அந்தந்தப் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நேற்று […]
மார்க்கெட்டில் சில்லரை விற்பனைக்கு தடை அறிவிக்கப்பட்டுள்ளதாக சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னை கோயம்பேடு சந்தைக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும், அதிகாலை முதல் 7.30 மணி வரை மொத்த கொள்முதலுக்கு அனுமதி வழங்கப்படுகிறது என தெரிவித்தார். இயல்புநிலை திரும்பும் வரை கோயம்பேடு சந்தையில் கட்டுப்பாடுகள் தொடரும் என கார்த்திகேயன் கூறியுள்ளார். கோயம்பேடு சந்தையில் நேற்று 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று சில முக்கிய […]
தற்காலிகமாக வெளிநாட்டினர் அமெரிக்கக் குடியேற்றத்திற்கு தடை விதிக்கப் போவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார் சீனாவில் தொடங்கி உலக நாடுகள் முழுவதும் பரவிய கொரோனா தொற்று அமெரிக்காவில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. 8 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு 42 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் இந்த தொற்றினால் தொழில்துறை முழுவதுமாக முடங்கி லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் வேலை இழந்துள்ளனர். இந்நிலையில் மக்களின் நலனை கருத்திற்கொண்டு தற்காலிகமாக வெளிநாட்டினர் குடியேற்றத்திற்கு தடை விதிக்கப் போவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் […]
CAA சட்டத்திற்கு எதிராக நாளை நடைபெற இருந்த சட்டமன்ற முற்றுகை போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மாணம் நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி நாளை இஸ்லாமிய அமைப்புகள் சென்னை சட்டமன்ற முற்றுகை அறிவித்திருந்தனர். அதே போல் மாவட்டம்தோறும் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் இஸ்லாமிய அமைப்புகள் கூட வேண்டும் என்றும் அறிவித்திருந்தனர். இந்த முற்றுகை போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டுமென்று இந்திய மக்கள் மன்றம் சார்பில் வாராஹி என்பவர் வழக்கு தொடர்ந்தார். அதில் […]