கஞ்சா குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டு வந்த தந்தையை மகன் கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே அகரம் பேரூராட்சி டி. அய்யம்பாளையம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் காளியப்பன்(63). இவரது மனைவி பாக்கியம். இந்த தம்பதிக்கு நந்தினி (24), சரவணகுமார் (20), சிவா (17) ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர். இதில் நந்தினிக்கு மட்டும் திருமணம் முடிந்துள்ளது. தற்போது, இரண்டு மகன்களுடன் காளியப்பனும், அவரது மனைவியும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். […]
Tag: தந்தை மகன்
வியாபாரத்தை சரிவர செய்யாததால் மகனை தந்தை தீ வைத்து கொளுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது. பெங்களூரு சாலையில் உள்ள வால்மீகி நகரில் இந்த சம்பவம் ஏப்ரல் 1ஆம் தேதி இந்த சம்பவம் நடைபெற்றது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மகன் தனது தந்தையின் பெயிண்ட் துணி தயாரிக்கும் தொழிலை எடுத்து நடத்தி வந்தார். ஆனால் அந்த தொழிலை சரியாக செய்யமுடியவில்லை. இந்நிலையில் மகன் அர்பித் சேத்தியாவை, தந்தை சுரேந்திர குமார் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். மேலும், அர்பித் சேத்தியா […]
சித்தூர் மாவட்டம் காளஹஸ்தி அருகே மகன் இறந்த சோகத்தில் தந்தையும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சித்தூர் மாவட்டம் காளஹஸ்தி அடுத்த ஒரு இசாகத்தாதேவி கிராமத்தை சேர்ந்தவர் முனிரத்தினம். இவர் ஒரு விவசாயி. இவரின் மனைவி குருவம்மாள். இந்த தம்பதிகளுக்கு 4 மகன்கள் 3 மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் முனிரத்தினத்தின் இரண்டாவது மகன் கிருஷ்ணசாமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் செல்லும் […]
வேலூரில் மாவட்டத்தில் திருமணம் முடிந்து மூன்று மாதத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் பகுதியில் ஜெயராமன்- ஜானகி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் முன்னாள் தலைமை ஆசிரியராக இருந்துள்ளனர். இவர்களுக்கு 2 மகன், 2 மகள்கள் இருக்கின்றனர். இதில் இளைய மகன் ஜெயப்பிரகாஷ் என்பவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் முடிந்து 3 மாதங்கள் மட்டுமே ஆகின்றது. இந்நிலையில் ஜெயபிரகாஷ்க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு […]
ராணிப்பேட்டையில் தந்தை இறந்த அதிர்ச்சியை தாங்க முடியாத மகனும் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் ரங்கநாதன் என்பவர் வசித்து வந்தார். இவர் ரயில்வே துறையில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற நிலையில், தற்போது இவருக்கு உடல் நல குறைபாடு ஏற்பட்டிருக்கிறது. இதனால் இவரது குடும்பத்தினர்கள் சிகிச்சைக்காக ரங்கநாதனை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ரங்கநாதன் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து ரங்கநாதனின் உடலை அவரது வீட்டிற்கு கொண்டுவந்தனர். இதனை தாங்காத அவருடைய […]
சிவகங்கையில் கார் மோதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் தந்தை-மகன் இருவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பத்திநாதபுரத்தில் நாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாராயணன் என்ற தந்தையும், நவீன் என்ற தம்பியும் உள்ளனர். இவர்கள் மதுரை மாவட்டத்தில் உள்ள பைக்காரா பகுதியில் உள்ள விவேகானந்தா நகரில் வசித்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்லல் அருகே குலதெய்வ கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளனர். அங்கு சாமி கும்பிட்டுவிட்டு தந்தை நாராயணன், தம்பி நவீன் […]
சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தீயில் கருகிய நிலையில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆதம்பாக்கம் பாலாஜி நகரைச் சேர்ந்தவர் பாரி. 47 வயதான இவர் கட்டிமான பொறியாளர். இவரது மனைவி ராஜமல்லிகா வயது (38) இவர்களுக்கு பாலமுருகன் என்ற மகன் இருக்கிறார். இவர் 6-ம் வகுப்பு படித்துவருகிறார். இன்று மாலை அவர் வசித்த இரண்டாவது மாடி வீட்டிலிருந்து புகை வெளியாகியிருந்திருக்கிறது. இதனால்அருகிலிருந்தவர்கள் கொடுத்த தகவலையடுத்து, கிண்டி தீயணைப்பு […]
நீலகிரி மாவட்டம் பந்தலுார் அருகே காட்டு யானை தாக்கி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் மற்றும் அவரது மகன் பரிதாபமாக உயிரிழந்தனர். பந்தலுார் அருகே சேரங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ் (48). அவரது மகன் பிரசாந்த் (20). கூடலுார் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக உள்ளார். நேற்று இரவு அவரது வீடு அருகே அவரது மகன் பிரசாந்தை காட்டு யானை தாக்கிவிட்டு ஆக்ரோஷத்துடன் வந்தது. அச்சமயத்தில் வீடு திரும்பிய கவுன்சிலர் ஆனந்தராஜையும் தாக்கியது. பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்தில் […]
உயிரிழந்த மகனுக்கு ஆறு அடி உயரத்தில் மெழுகு சிலை செய்த தந்தையின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மதுரை மாவட்டத்திலுள்ள அவனியாபுரம் பகுதியை சேர்ந்த முருகேசன்-சரஸ்வதி தம்பதியினருக்கு கீதா, சுதா என இரண்டு மகள்களும் மாரிகணேஷ் என்ற ஒரே மகனும் இருந்துள்ளார். மாரிகணேஷ்க்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். சிறுவயது முதலே ரேஸில் அதிக ஆர்வம் கொண்ட மாரிகணேஷ் தனது புல்லட் பைக்கில் சாகசம் நிகழ்த்தி பல பரிசுகளைப் பெற்றுள்ளார். இந்நிலையில் கடந்த வருடம் உடல் […]
குடித்துவிட்டு தொல்லை கொடுத்த மகனை பெற்ற தந்தையை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சேலம் மாவட்டத்தில் இருக்கும் நாழிக்கல்பட்டி பகுதியை சேர்ந்தவர் சேகர். கூலித் தொழிலாளியான இவரது மகன் ஜெகன் வெள்ளி பட்டறையில் வேலை செய்து வந்தார். குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் ஜெகன் தினமும் நன்றாக மது அருந்திவிட்டு வீட்டில் இருப்பவர்களிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 1ஆம் தேதி ஜெகன் ரத்த வெள்ளத்தில் மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பெயிண்ட் அடிக்கும் போது தவறி […]
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் காவலர் முருகன் ஜாமீன் மனு மீது சிபிஐ பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சாத்தான்குளம் செயராஜ் வென்னிக்ஸ் கொலை வழக்கில் காவலர் முருகன் தனக்கு ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மூன்றாவது முறையாக மனுதாக்கல் செய்துள்ளார். இவ்வழக்கில் ஆவணங்களை தடைய அறிவியல் துறை அதிகாரிகள் சேகரித்த நிலையில் விசாரணை முடிவடைந்து உள்ளதால் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு நீதிபதிகள் […]
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சிபிஐ மற்றும் தடயவியல் அதிகாரிகள் 4 மணி நேரத்திற்கு மேலாக தீவிர விசாரணை மேற்கொண்டனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மகனான ஜெயராஜ் பெனிக்ஸ் ஆகியோர் கடந்த ஜூன் மாதம் காவல்துறையினரால் கொடூரமாக தாக்குதல் நடத்தினர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. சிபிஐ அதிகாரிகள் சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் விசாரணையில் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி […]
சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆய்வாளர் ஸ்ரீதர் காவலர் வெயில்முத்து ஆகியோரின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. சாத்தான்குளம் தந்தை-மகன் இரட்டை கொலை வழக்கில் சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான ஆய்வாளர் ஸ்ரீதர் தனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்த அவருக்கு சிகிச்சை அளிக்க நீதிபதி அனுமதி அளித்திருந்தார். சிகிச்சை […]
பெற்ற மகனை தந்தையே கோடாரியால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கோயம்புத்தூர் மாவட்டம் அருகம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் டெம்போ ஓட்டுநரான பழனிச்சாமி. மதுபோதைக்கு அடிமையான பழனிச்சாமி தனது குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் தந்தை வேலுச்சாமியிடம் தனது பெயருக்கு சொத்து முழுவதையும் எழுதி வைக்குமாறு தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் நன்றாக மது அருந்திவிட்டு தனது தந்தையிடம் தகராறு செய்துள்ளார். அதன் பிறகு அவர் உறங்கச் சென்ற நிலையில் நேற்று அதிகாலை 3 […]
சாத்தான் குளம் தந்தை-மகன் மரண வழக்கு தொடர்பாக சிபிஐ இரண்டு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை பிறப்பித்துள்ளது. சாத்தான்குளம் தந்தை-மகன் மரணம் வழக்கு தொடர்பாக தாமாக விசாரணை மேற்கொண்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம், அமர்வு சிபிஐ மற்றும் சிபிசிஐடி தரப்பில் தனித்தனியாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுருந்தது. அதன் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையில் சிபிசிஐடி தரப்பில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் செல்லபாண்டியன் அறிக்கை […]
சாத்தான்குளம் தந்தை மகன் இரட்டை கொலை வழக்கில் சிபிஐ விசாரணை தொடங்கி உள்ள நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து பார்க்கலாம். சாத்தான்குளம் இரட்டைக் கொலை தொடர்பாக சிபிஐ டெல்லி மண்டல சிறப்பு குற்றப்பிரிவின் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் சுக்லா தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழு கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் இருந்து விசாரணையை தொடங்க உள்ளனர். ஜெயராஜ் பென்னிக்ஸ் காவலில் மரணித்த கோவில்பட்டி […]