நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு எவ்வித தளர்வுகளும் இல்லை என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளை 13 மண்டலங்களாக பிரித்து தனிமைப்படுத்தப்பட்டு சுகாதாரத்துறையினர் மற்றும் நகராட்சியினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று முதல் தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் தனிமைப்படுத்தப்பட்டபகுதிகளில் எவ்வித தளர்வுகளும் கிடையாது என நகராட்சி ஆணையர் பொன்னம்பலம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருக்கும் எந்த வித கடைகளும், […]
Tag: தனிமைப்படுத்தப்பட்ட பகுதி
சென்னையில் 1.20 லட்சம் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களாக உள்ளன என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார். சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வரும் நிலையில் ஜூன் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்யதியாளர்களை சந்தித்து பேட்டியளித்த அவர், சென்னையில் 1.20 லட்சம் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவதாக கூறியுள்ளார். தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் உள்ளோருக்கு உதவ சுமார் 4 […]
மாவட்ட ஆட்சியர்கள் தாங்களாகவே தளர்வுகளை அறிவித்துக் கொள்ள கூடாது என முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த முதல்வர், சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் மூலமே நோய் பரவுகிறது. வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்களை ஆட்சியர்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். தடை செய்யப்பட்ட பகுதிகளில் யாரும் நுழையாமல் பார்த்துக் […]
சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 118ஆக குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் நேற்று புதிதாக 569 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 9,364ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்றைய நிலவரப்படி ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 1,768 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ராயபுரம், கோடம்பாக்கம், திரு.வி.க. நகரை தொடர்ந்து தேனாம்பேட்டை மண்டலத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரத்திருக்கும் மேல் உயர்ந்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் […]
சென்னையில் கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் எண்ணிக்கை 655ஆக குறைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் நேற்று புதிதாக 567 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 8,795 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்றைய நிலவரப்படி ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 1,699 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோடம்பாக்கம் – 1,231, திரு.வி.க நகரில் – 1032, தேனாம்பேட்டை – 926, […]
விழுப்புரம் மாவட்டத்தில் 93 கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 11 பெண்கள் உட்பட 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 293ஆக உள்ளது. இதில் 272 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இரண்டு பேர் உயிரிழந்துள்ள நிலையில் 43 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும் விழுப்புரத்தில் பாதிக்கப்பட்ட 293 பேரில் கோயம்பேட்டில் […]
வாணியம்பாடியில் நாளைமுதல் காய்கறி சந்தைகள், வங்கிகள் இயங்காது, மருந்தகங்கள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்துள்ளார். வாணியம்பாடியில் இதுவரை 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து வாணியம்பாடி பகுதியை தனிமைப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முன்னதாக, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் அத்தியாவசிய பொருட்களை வாங்க மக்கள் குவிந்ததால் தனிமனித இடைவெளி என்பது கேள்விக்குறியானது. அப்பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு வெளியாக […]