சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த திமிரிக்கோட்டை அருகே ரயில் தண்டவாளத்தில் நேற்று காலை வாலிபர் ஒருவர் சடலமாக கிடப்பதாக தர்மபுரி ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து ரயில்வே காவல்துறையினர் அங்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அதில் தண்டவாளத்தில் இறந்து கிடந்தவர் கீழ்காமாண்டப்பட்டி பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் மகன் ஸ்ரீதர் (30) என்பது தெரியவந்தது. அத்துடன் ஸ்ரீதர் ஈரோடு பெருந்துறை அருகே ஒரு தனியார் பனியன் நிறுவனத்தில் ஊழியராக வேலைசெய்து வந்துள்ளார். அவரது மனைவி […]
Tag: தனியார் நிறுவன ஊழியர்
பெரம்பலூரில் தனியார் நிறுவன ஊழியர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலத்தில் வசித்து வரும் சண்முகவேல் என்பவரது மகன் மணிகண்டன், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள துறைமங்கலம் பங்களா பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் டயர் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முந்தினம் இவர் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். பங்களா பேருந்து நிலையம் அருகே சென்ற போது அதே பகுதியில் வசித்து வரும் செங்கமலை என்பவரது மனைவி சந்திரா […]
திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஊழியர் ஒருவர் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தை அடுத்துள்ள தண்ணீர் குளம் என்ற கிராமத்தில் ஜோதி ராமலிங்கம் என்பவர் வசித்துவருகிறார். அவருக்கு 38 வயதுடைய சந்திரசேகர் என்ற மகன் இருக்கிறார். அவருக்கு திருமணமாகி மாலினி என்ற மனைவி உள்ளார். சந்திரசேகர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். அவர் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்தபோது, திடீரென தனது அறைக்குள் […]