Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தேர்தல் அலுவலர்களே!…. இன்று (பிப்.22) காலை 7 மணிக்குள்…. கலெக்டர் போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 19-ஆம் தேதி நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேர்தல் பணியில் ஈடுபட்ட தேர்தல் அலுவலர்கள் தபால் வாக்கு கேட்டு விண்ணப்பித்திருந்தனர். அதன்படி 1,532 பேருக்கு தபால் வாக்குகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதனை அனைவரும் முறையாக விண்ணப்பித்து இன்று காலை 7 மணிக்குள் தேர்தல் அலுவலரிடம் தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று (பிப்.22) காலை 8 மணிக்குள்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் பிப்ரவரி 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து நேற்று (பிப்.21) ஒரு சில இடங்களுக்கு மறுவாக்குப்பதிவும் நடைபெற்றது. இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேர்தல் பணியில் ஈடுபட்ட 14,584 வாக்குச்சாவடி அலுவலர்கள் தங்களது தபால் வாக்குகளை இன்று (பிப்ரவரி 22) காலை 8 மணிக்குள் செலுத்த வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். இதற்கான படிவம் 15 அனைவருக்கும் அஞ்சல் […]

Categories
மாநில செய்திகள்

திமுக 10, அதிமுக 7 இடங்களிலும் முன்னிலை….. முதற்கட்ட அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு  தொடங்கியது. தமிழகம் முழுவதும் சுமார் 75 மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னனி நிலவரங்கள் பிற்பகலுக்குள், வெற்றி நிலவரங்கள் மாலைக்குள் தெரியவரும். ஒவ்வொரு தொகுதிக்கும் நான்கு முதல் ஐந்து சுற்று வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில் முதல் கட்டமாக தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அதில் திமுக 10 […]

Categories
மாநில செய்திகள்

4 நாட்கள் மட்டுமே அவகாசம்….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதிலும் உள்ள 234 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. அதில் பல வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதனையடுத்து வாக்குபெட்டிகள் அனைத்தும் மூன்று அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. மேலும் மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் தபால் வாக்குகளை செலுத்த நான்கு நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளன. அதன்படி மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்பு வரை, […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சிவகங்கை மாவட்ட தொகுதிகளில்… தபால் ஓட்டு செலுத்திய போலீசார்… மாவட்ட ஆட்சியர் தகவல்..!!

மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி சிவகங்கை மாவட்டத்தில் 2000 காவல்துறையினர் தபால் வாக்கு செலுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தலில் தங்களுக்கு உரிய தபால் வாக்கு செலுத்துவதில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல்துறையினர் சிரமங்களை சந்தித்து வந்துள்ளனர். ஒரே நாளில் சட்டமன்ற தேர்தலில் காவல்துறையினர் அனைவரும் தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . அதன்படி திருப்பத்தூர், காரைக்குடி, மானாமதுரை, சிவகங்கை ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் தாலுகா அலுவலகத்தில் தபால் ஓட்டு போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிவகங்கை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள்… வாக்கு செலுத்துவதற்கு முன்னேற்பாடு… தேர்தல் நடத்தும் அதிகாரி ஆய்வு..!!

பெரம்பலூரில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஊர்க்காவல் படை வீரர்கள், காவல்துறையினர் தபால் வாக்கினை செலுத்தினர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பணியாற்ற ஊர்க்காவல் படையினர், காவல்துறையினர் மற்றும் முன்னாள் ராணுவதினர் தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள 72 மண்டல அலுவலர்களுக்கும், 3,916 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கும், குன்னம் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த 816 […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுபவர்களுக்கு… தொகுதி வாரியாக… வாக்கு செலுத்துவதற்கு தனி மையம்..!!

தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல்துறையினர் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 7 சட்டமன்ற தொகுதியிலும் தபால் வாக்கினை செலுத்தினர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தேர்தல் அமைதியாக நடைபெறவும், மக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் கூடுதல் பாதுகாப்பு பதற்றமான வாக்குச்சாவடிகளில் போடப்பட்டுள்ளது. இதற்காக துணை ராணுவப்படை வீரர்களும், காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தபால் வாக்கு விவகாரத்தில் திடீர் திருப்பம்…. சிபிஐ விசாரிக்க பரிந்துரை..!!

போலீசாருக்கு லஞ்சம் வழங்கியதாக திமுக திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளர் கே.என்.நேரு மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக சிபிஐ விசாரிக்க தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட சில காவல் நிலையங்களில், தேர்தல் அலுவலர்கள் மற்றும் காவல் ஆணையர் நடத்திய திடீர் சோதனையில், காவல் துறையினர் சிலரிடம் இருந்து பணம் வைக்கப்பட்ட கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.நேருக்கு ஆதரவாக தபால் வாக்களிப்பதற்காக திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் மூலம் […]

Categories
மாநில செய்திகள்

நாளை தேர்தல் பணியாளர்களுக்கு…. தபால் வாக்குப்பதிவு – தேர்தல் ஆணையர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் அரசியல் கட்சியினர் மக்களிடம் நேரடி பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் சென்னையில் தேர்தல் பணியில் ஈடுபடும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் இன்று முதல் 30-ஆம் தேதி வரை… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

சென்னையில் வீடு வீடாக சென்று சட்டமன்ற தேர்தலுக்காக தபால் வாக்குகளை பெறும் பணி தொடங்கியது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு கட்சியினரும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தேர்தல் பரபரப்பு… இவர்களுக்கு படிவங்கள் அச்சிடும் பணி தீவிரம்… மாவட்ட ஆட்சியர் ஆய்வு..!!

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தபால் மூலம் வாக்களிப்பதற்கான படிவங்கள் அச்சிடும் பணி சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அமராவதிப்புதூரில் உள்ள கூட்டுறவு அச்சகத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் அனைத்து மாவட்டங்களிலும் சோதனை பணி தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு பணி ஒருபக்கம் நடைபெற்று வருகிறது. மேலும் வாக்காளர்களுக்கும், தேர்தல் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு கொரோனா தடுப்பு மற்றும் வாக்குப்பதிவு மையங்களுக்கு தேவையான உபகரணங்கள் வழங்குவதற்காக முன்னேற்பாடு பணி […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

3 வித வாக்காளர்களுக்கு தபால் வாக்கு … தேர்தல் ஆணையம் வெளியீடு … ஆட்சியர் தகவல்…!!!

சட்டமன்றத் தேர்தலில் 3 விதமான வாக்காளர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையமானது தபால் வாக்கு முறையை ஏற்படுத்தி உள்ளது . தமிழகத்தில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் 6ம்  தேதி நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அதிகாரிகள், தேர்தல் பணிகளை மேற்கொண்டுள்ளனர். இந்த வகையில் ராணிப்பேட்டை மாவட்டத்தின் ஆட்சியரான  கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தபால் வாக்கு முறையை  பற்றி  தெரிவித்துள்ளார் . இந்திய தேர்தல் ஆணையமானது   வாக்குச்சாவடிகளில்  வந்து வாக்களிக்க முடியாத மூன்று விதமான வாக்காளர்களுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இவர்கள் மட்டும்…. தபால் மூலம் வாக்களிக்கலாம்…. தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!

தமிழகத்தில் நடைபெறவிருக்கும் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பவர்களின் தகவல்களை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தமிழகத்தில் 80 வயதுக்கு மேல் உள்ளவர்கள், மாற்றுத்திறனாளிகள், வாக்குப்பதிவு நடைபெறும் சமயத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது கட்டுப்பாடு பகுதிகளில் இருப்பவர்கள் தபால் மூலம் வாக்களிக்கலாம். மேலும் வாக்குப்பதிவு நடைபெறும் அன்று பணியிலிருந்து தனது சொந்த வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க முடியாத சூழ்நிலையில் உள்ளவர்கள் தபால் மூலம் வாக்களிக்க விரும்பினால் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தபால் மூலம் வாக்களிக்க…. விண்ணப்பிக்க கடைசி தேதி ஏப்-16…. வெளியான அறிவிப்பு…!!

தபால் மூலம் வாக்களிப்பதற்கு வரும் 16-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில் சென்னையில் 80 வயதிற்கு மேல் உள்ளவர்கள், மாற்றுத்திறனாளிகள், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் நேரில் சென்று வாக்களிக்க முடியவில்லை என்றால் தபால் மூலம் வீட்டிலிருந்தே தங்களது வாக்குகளை அளிக்கலாம். அவ்வாறு தபால் மூலம் வாக்களிக்க விருப்பம் உள்ளவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மாற்றுத் திறனாளிகள், முதியோர்களுக்கு சிறப்பு வசதி… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனையடுத்து அனைத்துக் கட்சிகளும் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்து வருகிறார்கள். தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் வாக்கு சேகரிக்க அனைத்துக் கட்சியினரும் திரண்டு செல்கிறார்கள். இந்நிலையில் தமிழக […]

Categories

Tech |