Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

திருட்டு போன ஏட்டுவின் மோட்டார்சைக்கிள்…. தப்பி ஓடிய ஆயுள் தண்டனை கைதி…. பரபரப்பு சம்பவம்….!!!!

நெல்லை மாவட்டம் ராதாபுரம் மதகனேரி பகுதியில் வசித்து வருபவர் டேவிட் (46). இவர் மீது தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற ஒரு கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, நெல்லை நீதிமன்றத்தில் சென்ற 2018 ஆம் வருடம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதனையடுத்து டேவிட் பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்துவந்தார். இந்நிலையில் சிறையிலிருந்தபோது டேவிட் எந்த தவறும் செய்யாமல் சிறை விதிகளை கடைபிடித்து நடந்ததால், அவரை நன்னடத்தை கைதி என […]

Categories
உலக செய்திகள்

இலங்கையின் முன்னாள் பிரதமர்…. ரகசிய இடத்திற்கு ஓட்டம்…. வெளியான தகவல்….!!!

திருகோணமலை இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே அந்நாட்டிலிருந்து கப்பற்படை மூலம் வெளிநாடு ஒன்றுக்கு தப்பிச் சென்று ஓடிவிட்டார். அதன்பிறகு திருகோணமலை கடற்படை முகாமில் பதுங்கியிருந்த நிலையில் திடீரென அவர் குடும்பத்துடன் தப்பி ஓடிவிட்டார். இந்நிலையில் திருகோணமலையில் இருந்து கொழும்பு அருகில் உள்ள ரகசிய இடத்திற்கு மகிந்த கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கூடுதல் பாதுகாப்பை வழங்கும் நோக்கிலேயே மகிந்து கொழும்பு கொண்டு செல்லப்பட்டுள்ளது என்று போலீஸ் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

அரிசி, பருப்பு, தக்காளியுடன்….. “செம்மரம் வெட்ட சென்ற கும்பல்”…. போலீசை கண்டதும் தப்பியது…. சிக்கிய காரை வைத்து விசாரணை…!!

பள்ளிகொண்டா அருகில் செம்மரம் வெட்டுவதற்காக வந்தவர்கள் போலீசாரை பார்த்ததும் காரை நிறுத்தி விட்டு தப்பித்து சென்றனர். வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா காவல் நிலையத்திற்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, ஆம்பூரில் இருந்து வேலூரை நோக்கி கார் ஒன்று அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது அந்தக் காரை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் நிறுத்த முயன்றபோது நிற்காமல் வேகமாக சென்றது. உடனே காவல்துறையினர் அந்த காரை பின்தொடர்ந்து விரட்டி சென்று பள்ளிகொண்டா அடுத்த சின்னசேரி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“என்னை அடித்தார்கள்” சிறுவன் தப்பி ஓட்டம்…. சேலத்தில் பரபரப்பு…!!

திருட்டு வழக்கில் கைதான சிறுவன், சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற போது தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த 17 வயதுடைய  சிறுவன். இந்த சிறுவன் கடந்த 23ஆம் தேதி திருட்டு வழக்கில் நாமக்கல் போலீசார் கைது செய்துள்ளனர். அதன்பின் அந்த சிறுவனை போலீசார் சேலம் ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் உள்ள அரசு கூர்நோக்கு இல்லத்தில் அடைத்துள்ளனர். அப்போது திருட்டு வழக்கில் கைதான அந்த சிறுவனின் கன்னம் வீங்கியிருந்தது. இதைப்பற்றி […]

Categories
தேசிய செய்திகள்

தன்னை விட 13 வயது குறைவான… ஆட்டோ ஓட்டுனருடன் ஓட்டம் பிடித்த கோடீஸ்வரரின் மனைவி… அதிர்ச்சி சம்பவம்…!!

தன்னைவிட 13 வயது குறைவான ஆட்டோ ஓட்டுநருடன் ஒரு கோடீஸ்வரனின் மனைவி ஓடிப் போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம், இந்தூரின் கஜ்ரனா என்ற பகுதியைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவரின் மனைவி கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த 47 லட்சம் பணத்துடன் மாயமாகியுள்ளார். இதுதொடர்பாக அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் கோடீஸ்வரரின் மனைவியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. அவர்களின் செயல்பாடுகளை குறித்து அவரது கணவரிடம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டம்… தலைக்கு ஏறிய போதை… சகோதரர்கள் செய்த கொடூரம்…!!!

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நண்பரை கொலை செய்துவிட்டு அண்ணன் தம்பி தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகர் மூன்றாவது தெருவில் காதர் (56) என்பவர் வசித்து வீட்டு புரோக்கர் வேலை பார்த்து வந்தார். அவர் தன் மனைவி, குழந்தைகளை பிரிந்து இருக்கிறார். நேற்று முன்தினம் இரவு புத்தாண்டை முன்னிட்டு, காதர் அதே பகுதியில் உள்ள வேறொரு வீட்டில் காவலாளியாக வேலை பார்த்த பழனி என்பவருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். பழனியின் அண்ணன் முருகன் என்ற […]

Categories
மாநில செய்திகள்

பேசிப் பேசியே… பல குடும்பங்களை கவிழ்த்த தம்பதிகள்… 3 கோடி வரை ஆட்டைய போட்டு ஓட்டம்..!!

பேசியே குடும்பப் பெண்களை கவிழ்த்து 3 கோடி வரை சுருட்டிய தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டம், பள்ளத்தூர் பகுதியை சேர்ந்த மாணிக்கம் கயல்விழி தம்பதியினர், அவர்கள் இருந்த பகுதியில் தாங்கள் வங்கியில் பணி புரிவதாக கூறி வந்துள்ளனர். சிங்கப்பூரில் இருந்து குறைந்த விலைக்கு தங்களை வாங்கிய அதை பாதி விலைக்கு தருவதாக கூறி அப்பகுதி பெண்களிடம் 3 கோடி வரை பணம் வசூல் செய்துள்ளனர். தங்களிடம் பணம் இல்லாதவர்கள் நகையை கொடுக்கலாம் என கூறி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காவல் நிலையத்திலிருந்து தப்பி ஓடிய ” நான்கு திருடர்கள்”!

தொழிற்சாலைகளில் புகுந்து திருடிய  வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு பேர் காவல் நிலையத்திலிருந்து தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்பத்தூர் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள  தொழிற்சாலைகளில் புகுந்து அலுமினியம் அச்சுகள் திருடிய ஆவடியைச் சேர்ந்த ஆனந்த் ராஜ், முருகா, ராஜேஷ், அம்பத்தூரைச் சேர்ந்த பாபு, மற்றும் 17 சிறுவன் ஆகிய ஐந்து பேரை அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.80000 பணம், 60 அலுமினிய அச்சுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில், சிறுவன் மட்டும் […]

Categories
கொரோனா

“எனக்கு கொரோனா இல்லை” போலீசாரிடம் வாக்குவாதம்…. கை, கால்களை கட்டி தூக்கி சென்ற மருத்துவ ஊழியர்கள்….!!

தனிமைப்படுத்தப்பட்டவர்  தப்பி ஓடியதால் அவரை துரத்தித்பிடித்த போலீசார் கை கால்களைக்  கட்டி மருத்துவ ஊழியர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.  கேரளாவில் பந்ததுட்டான் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது முககவசத்தை கழுத்தில் மாட்டிக்கொண்டு ஒருவர் வந்து இருக்கின்றார். அப்போது அவரை விசாரணை செய்த போலீசாரை எதிர்த்துப் பேசிய அவர் தனக்கு கொரோனோ இல்லை என சவுதியில் கொடுத்த பரிசோதனை சான்றிதழ் வீட்டில் உள்ளது எனவும் இதனால் நான் முககவசம் அணிய வேண்டிய அவசியமில்லை என்றும் போலீஸ் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். […]

Categories

Tech |