தமிழ்நாட்டில் கடந்த ஒரே நாளில் சுமார் 14,000 க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். தமிழ்நாட்டில் கடந்த ஒரே நாளில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மொத்தமாக 13 ,395 ஆக அதிகரித்திருக்கிறது. இதில் சென்னையில் 3842 நபர்களுக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. மேலும் இன்றைக்கு சுமார் 10,51,487 நபர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. 13,776 patients test positive for #COVID19 in Tamil Nadu today (April 23). Here […]
Tag: தமிழகத்தில் கொரோனா
கொரோனாவிற்கு காவல் உதவி ஆய்வாளர் பலி!
சென்னையைச் சேர்ந்த தலைமை செயலக காலனி காவல் உதவி ஆய்வாளர் பாபு கொரோனா தொற்றின் காரணமாக கடந்த 3-ம் தேதி அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி சற்று முன் உயிரிழந்தார. காவல் துறையைச் சார்ந்த உதவி ஆய்வாளர் கொரோனாவிற்கு பலியான சம்பவம் காவல்துறையினரிடையும் ,பொதுமக்களிடையிலும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 488 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இன்று 5 ஆயிரத்து 488 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 908 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் காரணமாக 67 பேர் உயிரிழந்தனர். இதனால் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,685 […]
இந்தியாவிலேயே கொரோனா பரிசோதனையில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாகவும் இதுவரை 24 லட்சத்து 70 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நாளை மறுநாளுடன் இம்மாதம் 31-ஆம் தேதி ஊரடங்கு முடிவடையும் நிலையில் அதனை நீடிப்பது மற்றும் மேலும் தொடர்புகளை அறிவிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் வீடியோ கான்பிரன்ஸ் முறையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார் இந்த ஆலோசனை கூட்டத்தில் கிராமப் பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்துவது தொடர்பாகவும், சென்னையில் கூடுதல் தளர்வுகளை […]
சென்னையில் ஒரே குடும்பத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது …! சென்னை எம்.ஜி.ஆர் நகர் அருகே உள்ள ஜாஃபர்கான் பேட்டையில் பெட்டிக்கடை நடத்தி வரும் 48 வயதுள்ள ஒருவருக்கு கடந்த 9ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரது மனைவி,தாய்,தந்தை,இரண்டு மகன்கள் மற்றும் மறுமகள் உள்ளிட்ட 6 பேரை தனிமைப்படுத்தி சுகாதாரத்துறை பரிசோதனை செய்தது. பரிசோதனை முடிவில் 6 பேருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அனைவரும் ஓமந்தூரார் அரசு […]
தமிழ்நாடு முழுவதும் 385 பகுதிகள் தடைசெய்யப்பட்ட இடங்களாக அறிவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 112 பகுதிகள் தனிமைப் படுத்தப் பட்டுள்ளன. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 76 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, கொரோனோவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1596 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள், 528 பேரூராட்சிகளில் மற்றும் பஞ்சாயத்து அமைப்புகள் […]
சென்னையில் 373 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், அதிகபட்சமாக ராயபுரம் பகுதியில் 117 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் விவரங்களை மண்டல வாரியாக பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி திருவொற்றியூர் பகுதியில் 13 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. மணலியில் ஒருவருக்கும், மாயவரத்தில் 3 பேருக்கும், தண்டையார்பேட்டையில் 46 பேருக்கும், நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. ராயபுரத்தில் 117 பேரும், திரு.வி.க நகரில் 46 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்பத்தூரில் ஒருவருக்கும், அண்ணாநகரில் 32 பேரும், […]
கொரோனா தொற்று பாதித்து உயிரிழந்தவரிடமிருந்து வைரஸ் பரவாது என கண் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போரின் உடல்கள் மருத்துவ விதிமுறைப்படி புதைக்க படுவதால், அதன் மூலம் பொதுமக்களுக்கு பரவாது எனவும் உறுதிபட தெரிவித்தார். டாக்டர் பிரகாஷ் கூறியதாவது; ஒரு இறந்த மனிதர்களிடமிருந்து இந்த கொரோனா வைரஸ் எக்காரணத்தைக் கொண்டும் பரவ வாய்ப்பே கிடையாது. இதுதான் மக்கள் முழுமையாக நம்ப வேண்டும், தெரிந்துகொள்ளவேண்டும். ஏனென்றால் கொரோனா வைரஸ் பரவுவது மூச்சு […]
கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகளில் திமுகவினர் ஈடுபடவேண்டும் என்று முக. ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். கொரோனா நிவாரண பணிகளுக்கு என்ன உதவி தேவைப்பட்டாலும் எப்பொழுது வேண்டுமானாலும் தமது அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்ற திமுக நிர்வாகிகள் அந்த கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் இருந்து காணொலி காட்சி மூலம் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் முன்னணி நிர்வாகிகள் 200 பேருடன் அவர் கலந்துரையாடினார். அப்பொழுது […]
கொரோனா பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடலில் இருந்து தொற்று பரவாது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அண்ணாநகர் பகுதியில் ஒரு அதிர்ச்சி சம்பவம். கொரோனோவால் இறந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு. ஒரு மருத்துவர் இருக்கிறார் நிறைய பேருக்கு சிகிச்சை அளித்திருக்கிறார். அவருக்கு உடம்பு முடியாமல் போய்விடுகிறது சென்னையில். உடனடியாக சோதனை செய்து பார்க்கிறார். அதில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படுகிறது. ஒரு தனியார் மருத்துவமனையில் கொரோனோக்கு சிகிச்சை எடுத்து வருகிறார். சிகிச்சை பலனில்லாமல் […]
தமிழகத்தில் நான்காவது முறையாக நேற்று நூற்றுக்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் புதிதாக கொரோனோவால் பாதிக்கப் பட்டோரின் விவரங்களை சுகாதாரத்துறை தினசரி வெளியிட்டு வருகிறது. நேற்று மட்டும் தமிழகத்தில் 150 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு ஏற்படுவது இது நான்காவது முறையாகும். இதற்கு முன்னதாக கடந்த 1ம் தேதி அன்று 110 பேருக்கும், கடந்த 3ம் தேதி என்று 102 பேருக்கும், கடந்த […]
சென்னையில் அமைப்புசாரா தொழிலார்களுக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பில் மோடி கிட் எனப்படும் பாதுகாப்பு சாதனங்கள் வழங்கப்பட்டது. சென்னை நேரு பூங்கா குடிசை மாற்று வாரிய பகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் அமைப்புசாரா தொழிலாளர்கள் 300 பேருக்கு மோடி கிட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில தலைவர் L.முருகன் கலந்துகொண்டு அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பில் மோடி கிட் எனப்படும் பாதுகாப்பு சாதனங்களை வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய […]
கொரோனா குறித்த புள்ளி விவரங்களை மறைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது; சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் விந்தையான எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஆக்கப்பூர்வமாக செயல்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். மாண்புமிகு முதலமைச்சர் கிட்டத்தட்ட அவ்வளவு அரும்பணி ஆற்றி கொண்டிருக்கும் நிலையில், அவரைப்பார்த்து ஸ்டாலின் கூறியிருக்கிறார் காமாலை உள்ளவர்களுக்கு காண்பதெல்லாம் மஞ்சள் என்று. நாங்கள் திரும்பி சொன்னாள் மஞ்சள் துண்டு அணிந்திருக்கும் கட்சிகளுக்கு […]
ஊரடங்கு உத்தரவால் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து மீனவர்கள் தவிக்கின்றனர். தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக ஏற்கனவே மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் இழப்பை சந்தித்து வரும் நிலையில், தற்போது மீன்பிடி தடைக்காலமும் அமல்படுத்தப்பட்டுள்ளதால் சுமார் பத்து லட்சம் மீனவர்கள் வேலை இழக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக செங்கல்பட்டு மாவட்டம் கடலோரப் பகுதியான கானத்தூர், ரெட்டி குப்பம் மீனவர்கள் கூறுவதாவது; கொரோனா வைரஸினால் ஊரடங்கு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு உள்ளதால், மீனவர் சமுதாயம் மிகுந்த வருத்தற்குரிய விஷியமாக உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் […]
கொரோனா பாதிப்பு மக்களிடையே அச்சத்தை உருவாக்கியுள்ள சூழலில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களையும் அச்சத்துடன் பார்க்கும் நிலை உருவாகியிருக்கிறது. பழனியில் கொரோனோவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பிய நபரை அனுமதிக்க மறுத்து போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். கொரோனா தொற்று ஒரு புதுவித தீண்டாமையை ஏற்படுத்தி உள்ளது என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு கொரோனா நோய் பாதித்தவர்களை கண்டு மக்களுக்கான அச்சம் அதிகரித்து வருகிறது. சென்னையில் கொரோனோவால் உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததும் இதற்கு உதாரணம். […]
கொரோனா பாதிப்பு இருப்பது தெரிந்தும் அலட்சியமாக இருந்தவர்கள் 16 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்துள்ளனர். இந்தோனேசியாவில் இருந்து சேலம் வந்து கொரோனோவை பரப்பியதாக கைது செய்யப்பட்ட 16 பேரையும் 25ஆம் தேதி வரை காவலில் வைக்க சேலம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த அவர்கள் 16 பேரும், சேலம் நீதிமன்ற உத்தரவுபடி காலை 6.30 மணி அளவில் ஆத்தூர் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் பாதுகாப்பு உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டு அங்கிருந்து அனைவரும் […]
கொரோனா பரவாமல் தடுக்க தனிமைப்படுத்த வீட்டில் இருப்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. வெளிநாடு, வெளி மாநிலத்தில் இருந்து வீடு திரும்பிய நபர் தன்னை வீட்டில் தனிமையில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டுமென்றும், தனிமைப்படுத்தப்பட்ட நபருக்கு தனி கழிப்பறையுடன் கூடிய காற்றோட்டமான தனி அறை ஒதுக்க வேண்டும் என்றும் அரசு வெளியிட்டிருக்கும் வழிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. வீட்டில் உள்ள அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட நபர் எக்காரணத்தை கொண்டும் வீட்டை விட்டு […]
19 நாட்கள் கோரோனோவிடம் சிக்கித்தவித்த ஈரோட்டை சேர்ந்த இளைஞன் குணமடைந்து தன்னுடைய சொந்த ஊருக்கு திரும்பினார். கடந்த மாதம் 22ம் தேதி துபாயில் இருந்து திருச்சி வந்த விமானப் பயணிகள் 154 பேரை பரிசோதனை செய்ததில், ஈரோட்டை சேர்ந்த 24 வயது இளைஞருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அந்த இளைஞன் திருச்சி அரசு தலைமை மருத்துவமனை கொரோனா சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 19 நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பிறகு குணமடைந்தார் இளைஞர். […]
நாகை மாவட்டத்தில் தனியார் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் அவரிடம் சிகிச்சை பெற்ற 54 பேரை தனிமைப்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. நாகை புதிய கடற்கரை பகுதியில் வசிக்கும் மருத்துவர் ஒருவர் தனியார் கிளினிக் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் தொடர் இருமலும், காய்ச்சலும் இருந்தது. இதையடுத்து தாமே முன்வந்து சோதனை செய்து இருக்கிறார். அதனால் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி இருக்கிறது. இதை தொடர்ந்து அந்த மருத்துவர் தங்கியிருந்த குடியிருப்புத் […]
மே, மாதத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எப்போது நடைபெறும் என்பது தான் 10 லட்சம் மாணவர்களுடைய எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. இந்த சூழலில் ஏற்கனவே கடந்த மாதம் 27ம் தேதியில் இருந்து வருகிற 13ம் தேதி வரை இந்த தேர்வை நடத்துவதற்கு திட்டமிட்டிருந்த நிலையில், கொரோனோவின் தாக்கம் அதிகரிப்பு காரணமாக இந்த தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. முதலில் சட்டப் […]
கொரோனோவை கண்டறியும் இரண்டு முறைகள்..!!
கொரோனா வைரஸ் ஒருவருக்கு இருக்கின்றதா என்பதை கண்டறிய இரண்டு விதமான சோதனை முறைகள் உள்ளன. உலகத்தையே ஆளும் மனித இனத்தை இன்று பேரச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது இந்த கொரோனா வைரஸ். கொரோனா நம்மைத் தாக்கி இருக்கிறதா என்பதை கண்டறிய இரண்டு விதமாக சோதனை முறைகள் உள்ளன. ஒன்று RT- PCR எனும் Polymerase Chain Reaction Test . மற்றொன்று தற்பொழுது புதிதாக வந்திருக்கும் ஆன்டிபாடி டெஸ்ட் RT-PCR முறை. நம் உடலில் தற்போது கொரோனா வைரஸ் […]
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள சூழ்நிலையில் தமிழகத்தில் நோய் தடுப்பு நடவடிக்கையாக அரசு கபசுர நீரை அருந்த அறிவுரை வழங்கியுள்ளது. கபசுரக் குடிநீர் சுக்கு, மிளகு, திப்பிலி உள்ளிட்ட 15 பொருட்கள் சேர்த்து இயற்கை முறையில் தயாரிக்கப் படுவதால், பக்கவிளைவுகள் இல்லாததால் இதனை ஏராளமானோர் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் சென்னை பாரிமுனை ராசப்பா தெருவில் செயல்பட்டு வரும் நாட்டு மருந்து கடைகளில் தயாரிக்கப்படும் கபசுர குடிநீர் தமிழகம், ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் […]
கொரோனா பரவும் அபாய பகுதியாக தமிழ்நாடு முழுவதும் அறிவிப்பு, நடவடிக்கை எடுக்க வெளியிடப்பட்டுள்ள அறிக்கை..!! நோய் தடுப்பு மருந்து துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் 1939-ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது சுகாதாரத் சட்டத்தில் 62 ஆவது பிரிவின் கீழ் பொது சுகாதார துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டிய தொற்று நோயாக கொரோனா அறிவிக்கப்பட்டதாகவும். 76 ஆவது பிரிவின் கீழ் தமிழ்நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் எனவும் கூறப்பட்டுள்ளது. 1897ஆம் ஆண்டு கொள்ளை […]
கொரோனாவின் தாக்கம் அறியாத மக்கள், வெளியே செல்கின்றனர் என தமிழக முதல்வர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் அடித்தட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சரியான உணவு கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர். தமிழகத்தில் உள்ள அம்மா உணவகம் இந்த சமயத்தில் ஏழை மக்களுக்கு பெரிதும் உதவியாக உள்ளது. குறைந்த விலையில் உணவு வழங்குவதால், அடித்தட்டு மக்கள் மற்றும் ஏராளமானோர் அம்மா உணவகத்தில் சாப்பிடுகின்றனர். இந்நிலையில், சென்னையில் கலங்கரை விளக்கம் பகுதியில் […]
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து அறிகுறியுடன் தப்பி ஓடிய இளைஞனை காஞ்சிபுரம் எனும் பகுதியில் காவல்துறையினர் மடக்கிப் பிடித்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் தங்கி பணியாற்றி வந்த இளைஞன் ஊரடங்கு உத்தரவின் காரணமாக சொந்த ஊரான கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் அந்த இளைஞர் கொரோனா அறிகுறி இருந்ததாக கிருஷ்ணகிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீரென மருத்துவமனையில் இருந்து அந்த இளைஞர் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இளைஞர் தப்பி ஓடிய தகவலின்படி காஞ்சிபுரத்தில் பதுங்கியிருந்த இளைஞரை மடக்கிப் பிடித்த காவல்துறையினர் […]
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது. இந்த தகவலை தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. புதிதாக 7 பேர்க்கு பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. ஈரோடு – 24 சென்னை – 23 வேலூர் […]
வெளிநாட்டிலிருந்து ஊர் திரும்பிய தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கும்பகோணம் பகுதியை சேர்ந்த 42 வயது உள்ள ஒருவர் சில நாட்களுக்கு முன் வெஸ்ட்இன்டீஸ்சில் இருந்து தன்னுடைய சொந்த ஊருக்கு வந்தார். இந்த நிலையில் தகவல் கிடைத்ததும் அவரின்வீட்டிற்கு தஞ்சை மாவட்டத்தின் சுகாதாரத்துறையினர் சென்றனர். பின்னர் அவரின் இரத்தத்தை எடுத்து சோதனை செய்ய அனுப்பி வைத்தனர். இதை தொடர்ந்து இவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். இந்நிலையில் கொரோனா […]