தமிழகத்தில் அனைத்து மாவட்ட எல்லைகளையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் 8 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கொரோனவை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்திற்கு கடந்த ஒரு மாதங்களில் 9,000_திற்கும் அதிகமானோர் வெளிநாட்டில் இருந்து வந்துள்ளனர். அவர்கள் அனைவருமே வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களை தனிமைப்படுத்த மத்திய அரசு பரிந்துரைத்திருந்தது. இதையடுத்து தமிழகத்தின் […]
Tag: தமிழகம்
தமிழகத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. இது மிகவும் கவலைக்குரிய தகவலாக பார்க்கப்படுகிறது. புதிதாக பாதிக்கப்பட்ட 2 பேரில் ஒருவர் கலிபோர்னியாவில் இருந்து வந்திருக்கிறார். 64 வயதான இவர் சென்னை ராயபுரத்தில் இருக்கக்கூடிய ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மற்றொரு நபர் துபாயில் இருந்து வந்திருக்கிறார். 43 வயதான இவர் திருநெல்வேலி […]
தமிழகத்தில் 3 மாவட்டங்களை தனிமைப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மாநில தலைமைச் செயலாளருடன் மத்திய அரசு அதிகாரிகள் ஆலோசித்தனர். அதில் கொரோனா வைரஸ் பாதித்த மாவட்டங்களை தனிமைப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் நாடு முழுவதும் 75 மாவட்டங்களை முழுமையாக தனிமைப்படுத்த வேண்டும் படுத்தப்பட வேண்டும் என்று அந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒரு பரிந்துரையை பல்வேறு மாநிலங்களுக்கு வழங்கியுள்ளார்கள். இதில் தமிழகத்தை பொறுத்தவரை சென்னை ,காஞ்சிபுரம் , ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களை […]
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய , மாநில அரசுகள் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. இதனால் நாட்டின் பொருளாதாரம் முற்றிலும் முடங்கி உள்ளது. கொரோனா பதிப்பை தடுக்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி சுய ஊரடங்கை கடைபிடிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். இதனை இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து தரப்பினரும் ஏற்று ஊரடங்கை என்று கடைபிடித்து வருகின்றனர். தமிகத்திலும் இந்த ஊரடங்கு உத்தரவு பின்பற்றப்பட்டுள்ளது. இன்று இரவு 9 மணி வரை ஊரடங்கு உத்தரவ போடப்பட்ட நிலையில் நாளை […]
கொரோனா தடுப்பு முயற்சியின் ஒரு பகுதியாக நாளை சுய ஊரடங்கு உத்தரவை பின்பற்றுமாறு பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார். நாளை காலை 7 மணி முதல் 9 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் நாளை எவையெல்லாம் இயங்கும்? இயங்காது? என்பதை தெரிந்துக்கொள்ளலாம். இயங்காதவைகள் : தமிழகம் முழுவதும் நாளை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை அரசு, தனியார் பேருந்துகள் இயங்காது என […]
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் நாளை கேன் குடிநீர் விநியோகம் செய்யப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் மக்கள் ஊரடங்கு அறிவுறுத்தலை ஏற்று, நாளை ஒரு நாள் மட்டும் குடிநீர் உற்பத்தி மற்றும் விநியோகம் நடைபெறாது என்று கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க உலகம் முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று முன் தினம் நாட்டு மக்களிடம் […]
தமிழகத்திற்கு பிற மாநிலங்களில் இருந்து வாகனங்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 223 ஆக உயர்ந்துள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த 3 பேரும் அடக்கம். கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் கட்டுப்படுத்த தமிழக அரசு கடந்த சில நாட்களாகவே பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களின் எல்லைகளை மூட உத்தரவிட்டுள்ளது. அதாவது, வரும் 31 ஆம் […]
கொரோனா எதிரொலியாக நாளை முதல் மார்ச் 31ம் தேதி வரை வெளிமாநில வாகனங்கள் தமிழகம் வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கேரளா, கர்நாடகா, ஆந்திர மாநில எல்லைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பால், பெட்ரோல், டீசல், காய்கறிகள், மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிவரும் வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அம்புலன்ஸ், கேஸ் சிலிண்டர் ஏற்றிவரும் வாகனங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இறப்பு போன்ற காரணங்களுக்காக பயணிக்கும் பயணிகளின் இலகுரக வாகனங்கள் அனுமதிக்கப்படும். அத்தியாவசிய […]
2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 9ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அவை, ரூ. 9.66 கோடியில் 3,500 நகரும் நியாய விலை கடைகள் அமைக்கப்படும். 96 வேளாண் கூட்டுறவு சங்கங்கள், 305 பண்டக சாலை கூட்டுறவு சங்கங்களுக்கு சொந்த கட்டடம் கட்டித்தரப்படும். ரூ. 27 கோடி மதிப்பில் சொந்த கட்டடம் கட்டி தரப்படும். 95 கூட்டுறவு நிறுவனங்கள் […]
இந்தியாவில் 120க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதனால் கொரோனாவை தடுக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்தியாவில் இதுவரை கொரோனாவுக்கு 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளையும், உத்தரவுகளையும் பிறப்பித்து வருகிறது. கல்வி நிறுவனங்கள் திரையரங்குகள், வணிக வளாகங்கள், பூங்காக்கள், அருங்காட்சியகங்களை மார்ச் 31 வரை மூட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் இன்று தமிழக […]
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6,0000க்கும் மேல் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவிலும் வைரசால் […]
தமிழக சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறைக்கான மானியக் கோரிக்கை மீது விவாதம் இன்று நடைபெறுகிறது. 2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 9ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கடந்த வெள்ளியன்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இந்த நிலையில் 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறைக்கான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெறவுள்ளது. இந்த […]
தமிழக சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறைக்கான மானியக் கோரிக்கை மீது விவாதம் இன்று நடைபெறுகிறது. 2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 9ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கடந்த வெள்ளியன்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இந்த நிலையில் 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறைக்கான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெறவுள்ளது. இந்த […]
இந்தியாவிலேயே மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவது தமிழகத்தில் மட்டும்தான் என முதல்வர் பழனிசாமி திண்டுக்கல்லில் நடைபெறும் விழாவில் கூறியுள்ளார். தமிழகத்தில் ஏற்கனவே உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மட்டுமின்றி மேலும் புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் அமைக்க மத்திய சுகாதாரத்துறையானது ஒப்புதல் வழங்கியது. அதன்படி ராமநாதபுரம், விருதுநகர், கிருஷ்ணகிரி, நாமக்கல், திண்டுக்கல், நாகப்பட்டினம், திருவள்ளூர் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளானது அமைக்கப்பட உள்ளது என தமிழக அரசு அறிவித்தது. மேலும் அதற்கான அரசாணையும் கடந்த […]
கேரளா மாநிலத்தில் பறவைக்காய்ச்சல் ஏற்பட்டிருப்பதின் எதிரொலியாக, புளியரை சோதனை சாவடி வழியாக, தமிழகத்திற்கு வரும் அனைத்து வாகனங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. கேரளாவில், கோழிக்கோடு மாவட்டத்தில் இருக்கும் கோழிப்பண்ணையில் வளர்க்கப்பட்டு வரும் கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து தமிழகத்திற்கு இந்த நோய் பரவாமல் தடுப்பதற்கு தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றது. எனவே தமிழக மற்றும் கேரள எல்லையில் அமைந்துள்ள தென்காசி, புளியரை சோதனை சாவடியில், கால்நடை துறை அதிகாரிகள் பறவைக்காய்ச்சலுக்கான […]
தமிழகத்தில் பரிசோதிக்கப்பட்ட ரத்த மாதிரிகளில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவி வரும் நிலையில், கடந்த சனிக்கிழமை தமிழகத்திலும் முதல் நபர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பரவியது. கடந்த 12 வருடமாக ஓமனில் பணியாற்றும் இவர் 10 நாட்களுக்கு முன்னர் இந்தியா வந்துள்ளார். வைரஸ் […]
தமிழகத்தில் 8 பேருக்குக் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ததில் அவர்கள் அனைவருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது என தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சீனாவை அச்சுறுத்தி வந்த கரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சீனா மட்டுமல்லாமல் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் இத்தாலி, ஈரான், கனடா உள்ளிட்ட பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால் கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான […]
தமிழகத்தில் கோடை வெயிலால் கொரோனா வைரஸ் பரவாதா? உலக சுகாதார மையம் முக்கிய அறிவிப்பு!சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் மிக வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42ஆக அதிகரித்துள்ளது. நேற்று அமெரிக்காவில் இருந்து தோஹா வழியாக சென்னை வந்த 15 வயது சிறுவனுக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து சிறுவனை விமான நிலைய மருத்துவக்குழுவினர் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சிறுவனிடம் இருந்து […]
தமிழகத்தில் காலியாகவுள்ள 6 மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு போட்டியிடுவதற்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கியது. தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரல் 2-ம் தேதியுடன் முடிகிறது. தமிழகத்தைச் சேர்ந்த ராஜ்யசபா எம்பிக்களான திருச்சி சிவா, சசிகலா புஷ்பா, விஜிலா சத்தியானந்த், ஏ கே செல்வராஜ், செல்வராஜன் சிபிஎம், ரங்கராஜன் ஆகியோர்களின் பதவிக்காலம் முடிவடைகிறது. அதேபோல் 17 மாநிலங்களில் 55 ராஜ்யசபா எம்பி பதவிகள் முடிவடைவதால் இந்தப் பதவிகளுக்கு புதிய தேர்தல் மார்ச் 26ம் தேதி நடைபெறும் […]
கொரோனா குறித்து விழிப்புணர்வோடு இருக்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாகை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா வைரஸ்காக தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. வைரஸ் குறித்து சந்தேகங்கள் ஏற்பட்டால் அரசு மருத்துவமனை அல்லது சுகாதார நிலையங்களை அணுகுமாறு பொதுமக்களிடம் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. மேலும் காய்ச்சல் ஏற்பட்டால் மருந்தகங்களுக்கு சென்று ஊசி போட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல பெருந்துறையில் மாவட்ட வருவாய் அலுவலர் […]
தமிழகத்தில் பட்டாசு தயாரிப்பில் தடை செய்யப்பட்ட மூலக்கூறு பயன்படுத்தப்படுகிறதா என ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை சி.பி.ஐ. இணை இயக்குநர் அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் ஒட்டுமொத்தமாக பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்குத் தடை கோரி அர்ஜுன் கோபால் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஆர்.பாப்டே அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகத்தில் பசுமை பட்டாசுகள் முறையாக தயாரிக்கப்படவில்லை என்றும், தடை […]
தமிழகத்தில் திருவொற்றியூர், குடியாத்தம் சட்டப்பேரவைத் தொகுதிகள் காலியாக உள்ளதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. குடியாத்தம் திமுக எம்எல்ஏ காத்தவராயன் மற்றும் திருவொற்றியூர் திமுக எம்எல்ஏ கே.பி.பி.சாமி உயிரிழந்தனர். இதன்விளைவாக நடைபெறவிருந்த திமுக எம்.பி.க்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் இரு தொகுதிகளும் காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. திமுக எம்எல்ஏக்கள் கே.பி.பி.சாமி, காத்தவராயன் மரணமடைந்த நிலையில் தேர்தல் ஆணையத்திற்கு சட்டப்பேரவை செயலகம் கடிதம் அனுப்பியுள்ளது. அதாவது திருவொற்றியூர், குடியாத்தம் ஆகிய தொகுதிகள் காலியாக உள்ளதாக […]
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. தமிழகம் முழுவதும் 3,012 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. காலை 10 மணிக்கு தொடங்கிய +12 பொதுத்தேர்வு பிற்பகல் 1.15 மணி வரை நடைபெறும். இது முழுக்க முழுக்க புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடைபெறுகிறது. இப்பொதுத்தேர்வை 8.35 லட்சம் மாணவ மாணவிகள் எழுதுகின்றனர். மாணவர்களிடையே முறைகேடுகளை தவிர்க்க 4,000 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. 19,000 க்கு மேற்பட்ட தனித்தேர்வர்களும் இப்பொதுத்தேர்வுகளை எழுதுகின்றனர். தனித்தேர்வர்கள் புதிய படத்திட்டம் பழய பாடத்திட்டம் […]
தமிழகத்தில் இந்த ஆண்டும் வழக்கத்தை விட வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் முடியும் நேரத்தில் தமிழகத்தில் வெளியில் அதிகரிக்க ஆரம்பிக்கிறது. ஏப்ரல், மே மாதங்களில் உச்சத்தை நெருங்கி வாட்டி வதைக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் கடந்த ஆண்டுகளை விட அதிக பட்ச வெப்பம் பதிவாகிறது. இதற்கு காற்று மாசு, வாகனங்கள் அதிகரிப்பு, காடுகள், மரங்கள் அழிப்பு, கான்கிரீட் காடுகளாக மாற்றம் என்று ஏராளமான காரணங்கள் சொல்லப்படுகின்றன. […]
சிறந்த கல்வி வழங்குவதில் இந்திய அளவில் தமிழகம் நான்காம் இடத்தில் இருப்பதாக சட்டப்பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கி 3ம் நாள் விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் இடைநிற்றல் விவகாரம் குறித்த எதிர்க்கட்சியினர் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் செங்கோட்டையன், இடைநிற்றல் விவகாரத்தில் தமிழக அரசின் புள்ளிவிவரம் சரியானது, மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் தான் வேறாக உள்ளது என்று கூறியுள்ளார். மேலும் சிறந்த கல்வி வழங்குவதில் […]