தமிழ்நாடு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் தாயார் காலமானார். தமிழ்நாடு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் தாயார் தங்கமணி அம்மாள் காலமானார். அவருக்கு வயது 89. இவர் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துவருகிறார்கள்.
Tag: தமிழக அமைச்சர்
கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி கேரள சட்டமன்ற தேர்தல் 140 தொகுதிகளில் நடைபெற்றது. இதற்கான வாக்குப்பதிவுகள் எண்ணபட்டு முடிவு மே 2 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான ஆளும் இடது சாரிகள் கட்சி 99 தொகுதிகளில் வெற்றியை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை பிடித்தது. இந்நிலையில் பினராயி விஜயன் இன்று மீண்டும் இரண்டாவது முறையாக கேரளா முதல்வராக பொறுப்பேற்றார். இதையடுத்து அவருடன் 21 அமைச்சர்களும் பதவியேற்கவுள்ளனர். இந்த பதவியேற்பு விழாவானது திருவனந்தபுரத்திலுள்ள சென்ட்ரல் விளையாட்டு […]
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 5-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கொரோனா பாதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜ் தற்போது சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 13ஆம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு அனுமதிக்கப்பட்டார். அப்போது லேசான கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு தொடர் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்நிலையில் இன்று காலை அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவருக்கு எக்மோ மற்றும் வென்டிலேட்டர் கருவிகள் பொருத்தப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே இன்று மாலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மீன்வளத்துறை ஜெயக்குமார், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் அமைச்சர் துரைக்கண்ணு […]