மாவட்ட அளவில் கரும்பு விளைவிக்கும் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. 2023 ஆம் ஆண்டு தைப்பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறுவார்கள். இதன் மூலம் அரசுக்கு சுமார் 2,356. 67 கோடி […]
Tag: தமிழக அரசு அரசாணை
சென்னை, கோவை மாநகராட்சிகளில் சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை, மாநகராட்சி தீர்மானங்கள் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை மற்றும் கோவை மாநகராட்சியின் சொத்து வரியை உயர்த்துவது தொடர்பாக தமிழக அரசு கடந்த மார்ச் 30ம் தேதி அரசாணை ஒன்றை பிறப்பித்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த மே 30ஆம் தேதி சென்னை மாநகராட்சி சொத்து வரியை உயர்த்தியது தொடர்பான தீர்மானத்தையும் நிறைவேற்றியது. இந்த அரசாணை, மாநகராட்சியின் தீர்மானத்தை எதிர்த்து சென்னை […]
அசிபேட், மோனோக்ரோடோபோஸ், க்ளோர்பைரிபோஸ் உள்ளிட்ட அபாயகரமான 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. தற்கொலைகளை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாகவும், இந்த திட்டம் 60 நாட்கள் நடைமுறையில் இருக்கும் என்றும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. எனவே இனி அசிபேட், மோனோக்ரோடோபோஸ், க்ளோர்பைரிபோஸ் உள்ளிட்ட 6 பூச்சிக்கொல்லி மருந்துகளை கடைகளில் வாங்க முடியாது. மேலும் மஞ்சள் பாஸ்பரஸ் மருந்துக்கு நிரந்தர தடை விதித்துள்ளது.
மத்திய அரசு மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் மிக முக்கியமான ஒன்று பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம். வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை எளிய மக்கள் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற்று வீடு கட்டலாம். இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தால் 2.67 லட்சம் வரையில் மானிய உதவி கிடைக்கும். குடும்ப ஆண்டு வருமானத்தை வைத்து இந்த திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்கப்படுகிறது. இதில் பயன் பெறுபவர்கள் வேறு எந்த […]
தண்டோரா போடும் நடைமுறைக்கு தடைவிதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இது தொடர்பாக அரசு தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, வெளியிட்டுள்ள உத்தரவில், “சட்டம் மற்றும் ஒழுங்கு, இயற்கை இடர்பாடுகள் மற்றும் இன்ன பிற அரசின் முக்கிய செய்திகளை பொது மக்களிடம் விரைவாக கொண்டு சேர்க்கும் பொருட்டு, விளம்பரம் செய்யும் விதமாக காலம் காலமாக நடைமுறையில் இருந்த பழக்கமான ‘தண்டோரா’ போடும் முறை எந்தெந்த துறைகளில் நடைமுறையில் உள்ளதோ, அதற்கு முழுமையாக தடை விதித்து உத்தரவிடப்படுகிறது. மாற்று ஏற்பாடாக, […]
மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளில் சேர 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோகித் காலம் தாழ்த்தி வருகிறார். இந்த மசோதாவிற்கு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும். […]