தமிழகத்தில் ஜனவரி 14-ம் தேதி பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படும் நிலையில் தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ரூ. 1000 ரொக்க பணம் போன்றவைகள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதில் கரும்பு சேர்க்கப்படாததால் விவசாயிகள் மற்றும் எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பை சேர்க்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமைச் […]
Tag: தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது குறித்து தற்போது தமிழக அரசு ஒரு முக்கிய செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, அரசின் நலத்திட்டங்களுக்கு பக்க பலமாக இருக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போனஸ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சி மற்றும் டி பிரிவைச் சேர்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூபாய் 3000 என்ற உச்ச வரம்பிற்கு […]
தமிழகத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் கடந்த 16-ஆம் தேதி முதல் அரையாண்டு தேர்வு நடைபெற்று வரும் நிலையில், டிசம்பர் 23-ஆம் தேதியோடு தேர்வுகள் அனைத்தும் முடிவடைகிறது. இந்நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை தற்போது அனைத்து பள்ளிகளுக்கும் அரையாண்டு விடுமுறை தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி டிசம்பர் 24-ஆம் தேதி முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை முடிந்த பிறகு ஜனவரி 2-ஆம் […]
தமிழகத்தில் வருகிற 2023-ம் ஆண்டு திட்டமிட்டபடி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என்று அரசு அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன் பிறகு ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என்று உறுதி கொடுத்துள்ளது. இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து ஜனவரி 14-ஆம் தேதி அவனியாபுரம், ஜனவரி 15-ம் தேதி பாலமேடு, […]
தமிழக விவசாயிகளுக்கு சம்பா பயிர் காப்பீட்டுக்கான கால அவகாசமானது நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி நவம்பர் 21-ம் தேதி வரை காப்பீடு செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வேளாண்மை துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, பருவமழையின் பாதிப்பினால் பயிர்களை காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி அனுப்பினார். இந்த கோரிக்கையை தற்போது மத்திய அரசு ஏற்று கால அவகாசத்தை நவம்பர் 21-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. […]
தமிழ்நாடு சினிமா மற்றும் சீரியல் களுக்கான விருதுகள் வழங்கும் விழா நாளை சென்னையில் நடைபெற இருக்கின்றது. தமிழ்நாடு அரசு சார்பாக திரைப்பட விருதுகள், சின்னத்திரை விருதுகள், தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் மாணவர்களுக்கான விருது வழங்கும் விழா நாளை மாலை 5 மணி அளவில் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற இருக்கின்றது. இந்த விருது விழாவில் 2009 முதல் 2014 ஆம் வருடங்கள் வரை தேர்வு செய்யப்பட்ட சிறந்த திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு […]
தமிழக அரசு நெல்லுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளது. தமிழக அரசு கடந்த வருடத்தை போல் நடப்பு ஆண்டிலும் நெல்லுக்கு கூடுதல் ஊக்கத்தொகை வழங்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி சாதாரண நெல் மற்றும் சன்னரக நெல்லுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். இந்நிலையில் மத்திய அரசானது சாதாரண நெல்லுக்கு ஒரு குவிண்டாலுக்கு ஆதார விலையாக 2040 ரூபாயும், சன்ன ரக நெல்லுக்கு ஒரு குவிண்டாலுக்கு ஆதார விலையாக 2060 ரூபாயும் நிர்ணயித்துள்ளது. இந்த ஆதார விலையில் இருந்து சாதாரண நெல்லுக்கு கூடுதலாக […]
தமிழகத்தில் நடைபெற உள்ள பொதுத்தேர்வு தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மே 5-ஆம் தேதி தொடங்கி 28-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் 10 மற்றும் 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளும், மே மாதம் தொடங்கி மே 31 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. மேலும் இதற்கான தேர்வு முடிவுகள், ஜூன் மற்றும் ஜூலை மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளிக்கல்வித்துறை மற்றும் தேர்வு துறையானது இந்த […]
நம்ம ஊரு திருவிழா எனும் பாரம்பரிய கலாச்சார திருவிழாவானது இன்று நடக்க உள்ளது. தமிழக அரசு 2021-2022 ஆம் நிதியாண்டில் தமிழகத்தினை சார்ந்த பாரம்பரியக் கலைகளின் சிறப்பினை வெளிப்படுத்தும் வகையில், திரளான கலைஞர்கள் பங்குபெறும் பிரம்மாண்ட நாட்டுப்புறக் கலைவிழாவினை, சென்னையில் ஆண்டுதோறும் நடத்துவதற்கான அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, தமிழகத்தின் பண்பாட்டுக் கூறுகளை உணர்த்தும் நம் மண்ணின் நாட்டுப்புறக் கலை வடிவங்களைக் காட்சிப்படுத்துகிற விழாவினை (மார்ச்21) இன்று மாலை 6.00 மணிக்கு சென்னை தீவுத்திடலில் […]
நம்ம ஊரு திருவிழா எனும் பாரம்பரிய கலாச்சார திருவிழாவானது நாளை நடக்க உள்ளது. தமிழக அரசு 2021-2022 ஆம் நிதியாண்டில் தமிழகத்தினை சார்ந்த பாரம்பரியக் கலைகளின் சிறப்பினை வெளிப்படுத்தும் வகையில், திரளான கலைஞர்கள் பங்குபெறும் பிரம்மாண்ட நாட்டுப்புறக் கலைவிழாவினை, சென்னையில் ஆண்டுதோறும் நடத்துவதற்கான அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, தமிழகத்தின் பண்பாட்டுக் கூறுகளை உணர்த்தும் நம் மண்ணின் நாட்டுப்புறக் கலை வடிவங்களைக் காட்சிப்படுத்துகிற விழாவினை மார்ச் 21 அன்று மாலை 6.00 மணிக்கு சென்னை […]
கொரோனா பரவல் காரணமாக குடியரசு தின விழா கலைநிகழ்ச்சிகள் ரத்து தமிழக அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக சென்னை மெரினா கடற்கரையில் வழக்கம்போல் நடைபெறும் குடியரசு தின விழாவில் பள்ளி கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் வருடந்தோறும் குடியரசு தின விழாவின் போது சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு கௌரவம் அளிக்கப்படும். […]
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூன்று நாட்கள் இயங்காது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மதுக்கடைகள் மூடப்பட்டன. இதையடுத்து கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் மதுக்கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டது. இந்நிலையில் ஜனவரி மாதம் மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகள் இயங்காது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஜனவரி 15 திருவள்ளுவர் தினம், ஜனவரி 26 குடியரசு தினம், ஜனவரி 28 வடலூர் ராமலிங்க அடிகளார் நினைவு நாளையொட்டி மூன்று […]
நாளை முதல் தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா ஊரடங்கு மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்ட போதே மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த தளர்வுகளின் அடிப்படையில் பல்வேறு மாநிலங்களில் மூடப்பட்ட மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. இதையடுத்து கொரானா நோய் பெருந்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாத்ம் 24ஆம் தேதி முதல் மூடப்பட்ட தமிழக அரசின் டாஸ்மாக் கடைகள், மே 7, 8 ஆகிய இரு தேதிகளில் இயங்கியது. ஆனால், உரிய நடைமுறைகளை […]
பொங்கலுக்கு ஜல்லிக்கட்டு போட்டியை சில கட்டுப்பாடுகளுடன் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்களின் போது தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் வருடம் தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் வரும் வருடம் 2021 பொங்கல் பண்டிகையின்போது ஜல்லிக்கட்டு கட்டுப்பாடுகளுடன் நடத்துவதற்கு அரசு தற்போது அனுமதி அளித்துள்ளது. இந்த போட்டிகளை நடத்துவதற்கும், பங்கேற்பதற்கும் சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதாவது ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் போட்டிகளில் பங்கேற்பதற்கு முன்னதாக கொரோனா […]
கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை என்று தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாடு மமுழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு பாதிப்புகளை சந்த்தித்து வருகின்றனர். இந்நிலையில் வெளிநாடுகளில் புதிதாக ஒரு கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அனைத்து கடற்கரை மற்றும் சாலைகளிலும் 2021 வருட புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை. மேலும் டிசம்பர் 31 நள்ளிரவு மற்றும் ஜன 1ம் தேதி பொதுமக்கள் கடற்கரைக்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். தங்கும் விடுதிகள் மற்றும் […]
புயல் முன்னெச்சரிக்கையாக தூத்துக்குடி உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள புரெவி புயலானது நேற்று முன்தினம் இரவு இலங்கை திரிகோணமலையில் தாக்குதலுக்கு ஏற்படுத்திவிட்டு கரையை கடந்தது. அதன்பின்னர் பாம்பனுக்கு அருகில் நிலை கொண்டிருந்த இந்த புயல் இன்று பாம்பன் மற்றும் கன்னியாகுமரி இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர் மற்றும் தூத்துக்குடி ஆகிய 6 மாவட்டங்களுக்கு […]
நிவர் புயலின் காரணமாக தமிழக அரசு நாளை 13 மாவட்டங்களுக்கு மட்டும் பொது விடுமுறை அளிப்பதாக அறிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வலுவடைந்து தற்போது தீவிர புயலாக மாறியுள்ளது. இந்த நிவர் புயலானது இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை அதி தீவிர புயலாக மாறி கரையைக் கடக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், கடலூர் மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட […]
மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவிற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா கவர்னர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இந்த மசோதாவிற்கு கடந்த 45 நாட்களாக ஆளுநர் ஒப்புதல் வழங்கவில்லை இதற்கு ஆளுநர் விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் […]
தமிழகத்தில் கலவர அரசியல் நோக்கத்திற்காக நடத்தப்படும் பாஜகவின் வேல் யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் வேல் யாத்திரை என்கிற பெயரில் பாஜக கலவரத்திற்கு திட்டமிட்டு இருக்கிறது என்றும் தங்கள் கலவர அரசியலை மறைத்து மக்களை ஏமாற்றவே வேல் யாத்திரை என பெயரிட்டிருக்கிறார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது கொரோனா காலத்தில் 100 பேருக்கு மேல் ஓரிடத்தில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள […]
குடியிருப்புகள் கட்டுதல் விற்பனை செய்தல் பராமரித்தல் தொடர்பாக எழும் பிரச்சினைகளுக்கு தீர்வாக அடுக்குமாடி குடியிருப்பு உரிமை சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில், வீடு கட்டுதல், விற்பனை செய்தல், பராமரித்தல் ஆகியவற்றில், தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு அதிகரித்து விட்டது. இதில், வெளிப்படையான வர்த்தக நடைமுறைகள் பின்பற்றப்படுவதை, உறுதி செய்ய வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. பெரும்பாலான இடங்களில் கட்டுமான நிலையில், ஒப்பந்த நிறுவனம், வீடு வாங்குவோர் இடையே பிரச்னை ஏற்படுகிறது. மேலும், கட்டி முடிக்கப்பட்ட […]
10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜூன் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் திட்டமிட்டபடி 10ம் வகுப்பு தேர்வு நடத்துவதற்கான பணிகள் குறித்து முதல்வருடன் இன்று ஆலோசனை நடத்தினார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அமைச்சர், ” பொதுத்தேர்வு நடத்துவதற்கான பணிகள் நடைபெற்றுவருகிறது. வெளியூர்களில் இருந்து மாணவர்கள் […]