Categories
மாநில செய்திகள்

தீபாவளி, பொது இடங்களில் இனி – அரசு கடும் உத்தரவு …!!

கொரோனா பெருந்தொற்று பரவி வரும் அதே நேரத்தில் ஊரடங்கில் தளர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது.அடுத்தடுத்து பண்டிகை காலங்கள் வருவதால் பொதுமக்கள் அதற்கான தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள. இதனால் பல இடங்களில், கடை வீதிகளில் மக்கள் அதிகளவில் கூடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகையையொட்டி கடை வீதிகளில் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் மக்கள் பொது இடங்களில் முக கவசம் அணிய […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி பண்டிகை… அனைத்து ஊருக்கும் சிறப்பு பேருந்து… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகின்ற 11ஆம் தேதி முதல் சிறப்பு பேருந்துகளை இயக்க அதற்கு தமிழக அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், “தீபாவளி பண்டிகை தொடங்க இருப்பதால் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் சார்பாக பொதுமக்கள் எவ்வித சிரமும் இல்லாமல் பயணம் செய்வதற்கு ஏற்ற வகையில் சென்னையிலிருந்து கும்பகோணம், தஞ்சை, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், நாகை, காரைக்கால், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூர், […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நவ.9ஆம் தேதி – அரசு மிக மிக முக்கிய அறிவிப்பு …!!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து நவம்பர் 9ஆம் தேதி கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுமென அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை வருகின்ற நவம்பர் 16ம் தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிப்பினை கடந்த 31ம் தேதி தமிழக அரசு அதற்கான அறிவிப்பை வெளியிட்டது. 9, 10, 11, 12 ஆகிய நான்கு வகுப்புகளுக்கு மட்டும் நவம்பர் 16ம் தேதி முதல் பள்ளிகள் செயல்படும் என்ற அறிவிப்பை தமிழக அரசு தெரிவித்திருந்தது. தமிழகத்தில் இன்னும் கொரோனா இருந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மீனவர்கள் மீதான தாக்குதலை ஒருபோதும் தமிழக அரசு ஏற்காது – அமைச்சர் ஜெயக்குமார்

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதலை தமிழக அரசு வன்மையாக கண்டிப்பதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை ராயபுரத்தில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில் கட்டப்பட்ட நவீன மீன் விற்பனை அங்காடிகளுக்கு ஒதுக்கீடு ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர் ஒதுக்கீட்டு ஆணையும் 15 விசைப்படகு மீனவர்களுக்கு மானிய விலையில் செயற்கை கோள் தொலைபேசியையும் வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் திருவொற்றியூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் மீன்பிடி துறைமுகம் அடுத்த ஓராண்டிற்குள் […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் நவம்பர் 2-ஆம் தேதி வரை – அறிவிப்பு

கொரோனா வைரஸ் எனும் கொடிய பெருந்தொற்று நோய் பரவியதை அடுத்து நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், அரசு அலுவலகங்கள் என அனைத்தும் மூடப்பட்டன. தற்போது நாட்டின் பொருளாதார வளர்ச்சியும், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. கல்வி நிலையங்கள் திறப்பு எப்போது ? என்று இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் படாத நிலையில், மாணவர்களின் கல்வி சார்ந்த நடவடிக்கைகளை மத்திய – மாநில அரசுக்கள் மேற்கொண்டு வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அதிரடி… இந்த மாதம் தான் கடைசி …. உத்தரவு போட்ட அரசு …!!

தமிழக அரசு ஊராட்சி நிர்வாக பணிகளை திறம்பட செயல்படுத்த ஊராட்சி அளவில் ஐந்து குழுக்களை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி நியமன குழு, வளர்ச்சி குழு, வேளாண்மை மற்றும் நீர்வள மேலாண்மை குழு, பணிகள் குழு, கல்விக்குழு அமைக்கப்பட உள்ளன. இந்த மாத இறுதிக்குள் அனைத்து மாவட்டங்களிலும் குழுக்கள் அமைத்து உறுப்பினர்களை நியமிக்க ஆட்சியாளருக்கு தமிழக அரசால்  அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தமிழக அரசு கடந்த சில மாதங்களாக பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக […]

Categories
மாநில செய்திகள்

8 மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம்…!!

காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை உள்ளிட்ட 8 மாவட்ட ஆட்சியாளர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 18 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் தொடர்பாக தலைமைச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள செய்தியில்  காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆகவும், அந்த மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி காஞ்சிபுரம் ஆட்சியர் ஆகவும் நியமிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி கரூர் ஆட்சியராக, ஊரக மறுசீரமைப்பு திட்ட தலைமைச் செயல் அதிகாரி கார்த்திகா தர்மபுரி […]

Categories
மாநில செய்திகள்

கடுமையாக உயர்ந்துள்ள வெங்காயம் விலை – பொதுமக்‍கள் கோரிக்‍கை

வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் அனைத்து கடைகளிலும் குறைந்த விலையில் வெங்காயத்தை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆந்திர தெலுங்கானா மாநிலங்களில் கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெங்காய விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்திற்கு வரத்து குறைந்துள்ளதால் வெங்காயத்தின் விலை கிலோ 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக ஒரு கிலோ வெங்காயம் 30 […]

Categories
அரசியல்

தமிழகம் முழுவதும்….. இனி ஊதியம் கிடையாது…. அரசு ஊழியர்கள் ஷாக் …!!

அரசு ஊழியர்களுக்கு ஊக்க ஊதியம் கிடையாது என்ற தமிழக அரசின் அறிவிப்பு குறித்து விளக்க அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா பேரிடர் காலத்தில் நிதிநிலை சிக்கனத்தை மத்திய, மாநில அரசுகள் பின்பற்றி வருகின்றன. முடிந்தவரை செலவுகளை குறைத்து கொண்டு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை  மேம்படுத்தி, துரிதப்படுத்த மத்திய, மாநில  அரசுகளின் சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். இதற்காக பல்வேறு அதிரடி உத்தரவுகளை அரசாங்கங்கள் பிறப்பித்து வருகின்றது. அந்த வகையில் தமிழக அரசும் தற்போது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு […]

Categories
கல்வி மாநில செய்திகள்

பள்ளிகள் திறப்பு எப்போது..? அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு…!!

தமிழகத்தில் அரசு பள்ளிகள் எப்போது திறக்க வாய்ப்பு உள்ளது என்பது குறித்து பதிலளிக்குமாறு பள்ளிக் கல்வித்துறைக்கு சென்னைஉயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா காலத்தில் தனியார் பள்ளிகள் கல்வி கட்டணத்தை வசூலிக்க தடை விதித்து அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தனியார் பள்ளிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதனை விசாரித்த நீதிமன்றம் கொரோனா ஊரடங்கு  காலத்தில் மொத்த கட்டணத்தை செலுத்த பெற்றோர்களை நிர்பந்திக்கும் பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தது. இது தொடர்பான வழக்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திண்டுக்கல் சிறுமி பாலியல் வழக்கு குற்றவாளி விடுதலையை எதிர்த்து அரசு மேல்முறையீடு…!!

திண்டுக்கல்லில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கிருபானந்தன்  விடுதலையை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல்  மாவட்டம் குரும்பட்டி கிராமத்தில் 13 வயது சிறுமி கடந்த ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த வழக்கில் கைதான கிருபானந்தன் திண்டுக்கல் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை முடிந்து விடுதலை செய்யப்பட்டார். இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்தது. உயர்நீதிமன்ற மதுரை கிளை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இனி – அரசின் புதிய அதிரடி உத்தரவு ….!!

நாடு முழுவதும் பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் இந்த கொடுமைகளுக்கு முடிவு கட்ட மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளையும், கடுமையான சட்டங்களையும் பிறப்பித்து வருகிறது. அண்மையில் கூட உத்தரப்பிரதேசத்தில் நடந்த பாலியல் வன்புணர்வு சம்பவம் இந்தியாவை உலுக்கியது. இதனைத் தொடர்ந்து தற்போது தமிழகத்தில் இதற்கு எதிரான புதிய திட்டம் ஒன்றை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது. பாலியல் வன்முறையால் பாதிக்கப்படும் குழந்தைகளின் மறுவாழ்வுக்காக நிதி வழங்கும் புதிய திட்டத்தை தொடங்க தமிழக அரசு […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

பாலியல் வன்கொடுமை – மறுவாழ்வுக்கு இழப்பீடு…!!

பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் திட்டத்தின் கீழ் புதிய திட்டத்தை தொடங்கியதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகபட்சமாக 10 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் புதிய திட்டத்தை தொடங்கியதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பாலியல் வன்முறையால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு இந்த திட்டத்தின் கீழ் குறைந்தபட்சமாக 50 ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சமாக 10 லட்சம் ரூபாய் […]

Categories
மாநில செய்திகள்

திண்டுக்கல் சிறுமி பாலியல் வழக்கு… உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு… தமிழக அரசு அதிரடி…!!!

திண்டுக்கல் அருகே 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தமிழக அரசு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள குரும்பபட்டி என்ற பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 16ம் தேதி வீட்டில் தனியாக இருந்த போது, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கு திண்டுக்கல் மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. கடந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசின் தடையில்லா சான்றிதழ் பெறவேண்டியது அவசியம்…!!

தமிழக அரசின் தடையில்லா சான்றிதழ் அவசியம் என்று தமிழக அரசு தெரிவிக்கிறது. தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் விவசாய படிப்புகள் தொடங்க தமிழக அரசின் தடையில்லா சான்று பெற வேண்டும் என்ற அரசாணையை எதிர்த்து தனியார் கல்வி நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் விவசாயம் மாநில பட்டியலுக்கு  உட்பட்டது என்பதால் தமிழக அரசின் தடையில்லா சான்றிதழை பெற வேண்டியது அவசியம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

திருத்தி அமைக்கப்பட்ட சுங்கக் கட்டணம் அறிவிப்பு…!!

தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் சுங்க கட்டணத்தை திருத்தி அமைத்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. திருத்தி அமைக்கப்பட்ட சுங்க கட்டண நடைமுறை வரும் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. தமிழக அரசு  வெளியிட்டுள்ள அறிக்கையில் திருத்தி அமைக்கப்பட்டுள்ள சுங்க கட்டணம் வரும் ஒன்றாம் தேதி முதல்  2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் முப்பதாம் தேதி வரை சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் என அறிவிக்க பட்டுள்ளது. இதன்படி ஆட்டோ உள்ளிட்ட மூன்று சக்கர வாகனங்களுக்கு […]

Categories
திருச்சி மாநில செய்திகள்

மீண்டும் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதச் சொல்வது ஜனநாயகத்திற்கு எதிரானது..!!

7 நாட்களில் நல்ல முடிவை எடுக்காவிட்டால், சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம். கடந்த 2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி 80 ஆயிரம் பேர் வேலை கிடைக்காமல் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் தகுதித் தேர்வு எழுத வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது கண்டனத்துக்குரியது என சமூக செயற்பாட்டாளர் திருமதி சபரிமாலா தெரிவித்துள்ளார். திருச்சி முதன்மை கல்வி அலுவலகத்தின் முன்பு நடைபெற்ற போராட்டத்தின்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் ஏழு நாட்களுக்குள் நல்ல முடிவை அரசு […]

Categories
மாநில செய்திகள்

“3 முதல் 8 ஆம் வகுப்பு வரை இந்த தேர்வு கிடையாது” – செங்கோட்டையன்

புதிய தேசியக் கல்வி கொள்கையை குறித்து அமைச்சர் செங்கோட்டையன் தற்போது விளக்கம் கொடுத்துள்ளார். நாடு முழுவதும் புதிய தேசியக் கல்வி கொள்கையை எதிர்த்தும், ஆதரவு கூறியும் பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வரும் நிலையில் தற்போது, அது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் கொடுத்துள்ளார். அதாவது, சட்டப்பேரவையில் புதிய கல்விக் கொள்கை பற்றி சிறப்பு தீர்மானத்தை எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் கொண்டு வந்தார். அதற்கு பதில் பேசிய அமைச்சர், தமிழகத்தில் மும்மொழி கொள்கையை  […]

Categories
மாநில செய்திகள்

மேகதாதுவில் அணை கட்ட தமிழக அரசு அனுமதிக்காது..!!

மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்டுவதற்கு தமிழக அரசு எந்த வகையிலும் அனுமதிக்காது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கான அனுமதியைப்பெற கர்நாடகம் நீர்வளத்துறை அமைச்சர் தலைமையிலான குழு பிரதமரை சந்திக்க இருப்பதாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் பேசினார். இதற்கு தமிழக அரசின் எதிர் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று அவர் கேள்வி எழுப்பினார். இதுபற்றி பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உச்சநீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கி […]

Categories
கல்வி மாநில செய்திகள்

அரியர் தேர்வை ரத்து செய்த தமிழக அரசின் முடிவு தவறானது…!!

அரியர் தேர்வை ரத்து செய்துள்ள தமிழக அரசின் முடிவு தவறானது என ஏஐசிடிஇ தலைவர் திரு அணில் கருத்து தெரிவித்துள்ளார். கல்லூரி இறுதி செமஸ்டர் எழுதும் மாணவர்களை தவிர்த்து பிற மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்றும் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கும் இது பொருந்தும் எனவும் தமிழக அரசு அறிவித்தது. இதனால் அரியர் இருந்த மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்த நிலையில் தமிழக அரசின் முடிவுக்கு எதிராக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் திரு பாலகுருசாமி, வழக்கறிஞர் திரு ராம்குமார், […]

Categories
மாநில செய்திகள்

ஒரே ஆம்புலன்ஸில் ஏற்றிச் செல்லப்படும் 10 கொரோனா நோயாளிகள்…!!

ஒரே ஆம்புலன்ஸில் 10 கொரோனா  நோயாளிகளை ஏற்றிச்  செல்லப்படுவதாக அனைத்து இந்திய சட்ட கழகத்தின் மாநில அமைப்புச் செயலாளர் குற்றம் சாட்டியுள்ளார்.  அரசுப்பேருந்தில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க அறிவுறுத்தும் தமிழக அரசு, கொரோனா நோயாளிகள் பத்து பேரை ஒரே ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றி செல்வது அரசின் அலட்சியத்தையே காட்டுவதாக, அனைத்து இந்திய சட்ட உரிமைகள் கழகத்தின் மாநில அமைப்புச் செயலாளர் திரு கோவிந்தராஜ் குற்றம்சாட்டியுள்ளார். நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Categories
மாநில செய்திகள்

“பஸ்ல போணுமா”… அப்போ இதெல்லாம் செய்யணும்… தமிழக அரசு உத்தரவு…!!

அரசு விரைவு பேருந்துகளில் பயணம் செய்யும் பொழுது வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நான்காம் கட்ட ஊரடங்கில் பொது போக்குவரத்து என்பது சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில், வரும் 7ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்து ஆரம்பமாக இருக்கும் நிலையில், பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. அதாவது, அரசு விரைவு போக்குவரத்துக்கழக பேருந்துகளில் மொத்தம் உள்ள 43 இருக்கைகளில் 25 இருக்கைகளில் மட்டுமே […]

Categories
மாநில செய்திகள்

சத்துணவுத் திட்டத்தின் கீழ்… மாணவர்களுக்கு முட்டை வழங்க உத்தரவு…!!

சத்துணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு உலர் பொருட்களுடன் முட்டைகளையும் சேர்த்து வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு காரணத்தால் பள்ளிகள் மூடப் பட்டிருக்கும் நிலையில் மாணவர்களுக்கு சேரக்கூடிய அனைத்து பொருட்களும் அவர்களை சென்றடையும் விதமாக தமிழக அரசு பல திட்டங்களை கொண்டு வந்துள்ளது. அதில் தற்பொழுது சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் தொடக்கப்பள்ளி, உயர் தொடக்கப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அரிசி, பருப்பு ஆகிய உலர் உணவுப் பொருட்களுடன் முட்டைகளையும் வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. உலர் […]

Categories
மாநில செய்திகள்

அரசின் தொடர் நடவடிக்கை… “வேலை வாய்ப்பு அதிகரிப்பு”… முதல்வர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பின்மை குறைந்த அளவே காணப்படுகிறது என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் தொடர் வழிகாட்டுதலின் பெயரில் தமிழகத்தில் வேலைவாய்ப்பு என்பது அதிகரித்து உள்ளது என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி வந்தாலும் கூட தமிழகத்தில் வேலை வாய்ப்பு அதிகரித்து வருவதாகவும், ஒரு ஆங்கில நாளிதழில் வெளியான செய்தியை அவர் மேற்கோள் காட்டி அதில், அகில இந்திய அளவில், வேலைவாய்ப்பின்மை 8.3 சதவீதமாக உள்ள நிலையில், […]

Categories
மாநில செய்திகள்

“இனி சனிக்கிழமைகளிலும் உண்டு”… தமிழக அரசு உத்தரவு…!!

தமிழகத்தில் அரசு அலுவலகங்கள் சனிக்கிழமை வரை செயல்படும் என அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மார்ச் மாதத்தில் போடப்பட்ட ஊரடங்கிலிருந்து தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு வரை மக்களின் அத்தியாவசிய தேவைகள் என்பது குறைந்த வண்ணமே இருந்தது. ஆனால் இந்த நான்காம் கட்ட ஊரடங்கில் பல வகையான தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் முக்கியமானவை, பொது போக்குவரத்து அரசு அலுவலகங்கள் நூறு சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம் போன்றவை ஆகும். இந்த தளர்வுகள் மக்களின் பொருளாதாரம் மேம்படும் வகையில் […]

Categories
மாநில செய்திகள்

பெற்றோர்களிடம் பணம் கேட்ட தனியார் பள்ளிகள் – செக் வைத்து அதிர வைத்த தமிழக அரசு …!!

பெற்றோர்களிடம் கட்டண வசூல் கேட்டு நிர்பந்தித்த தனியார் பள்ளிகளிடம் விளக்கம் கேட்டு மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனரகம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. கொரோனா பேரிடரால் நாடு முழுவதும் சிக்கி தவித்து வரும் இந்த நிலையில் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் பொருளாதாரம், மக்களின் வாழ்க்கை நிலையை கருத்தில் கொண்டு தான் மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு தளர்வு பிறப்பித்துள்ளது. இதனிடையே பள்ளி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை, கல்வி கட்டண வசூல் போன்ற செயல்பாடுகளுக்கு மாநில அரசாங்கங்கள் அனுமதி அளித்திருந்தனர். […]

Categories
மாநில செய்திகள்

“சரியான நடவடிக்கை எடுத்துட்டு தான் இருக்கோம்”… தமிழக அரசு பதில்…!!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று தான் இருக்கிறது என்று தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று என்பது அதிகரித்த வண்ணமே உள்ளது. ஆனால் சமீபத்தில் கொரோனா தொற்று என்பது சமூக பரவலாக மாறவில்லை என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. இதற்கு முன் சென்னையில் மட்டுமே தொற்று  எண்ணிக்கை என்பது அதிகரித்து வந்தது. ஆனால் தற்பொழுது அனைத்து மாவட்டங்களிலும் நாளுக்குநாள் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் தமிழக அரசை குறித்து சென்னை […]

Categories
மாநில செய்திகள்

“ஆன்லைன் வகுப்புகள்”… ஆசிரியர்களே கவனம்… எச்சரித்த தமிழக அரசு…

ஆன்லைன் வகுப்புகளில் விதிமுறைகளை மீறினால் அந்த பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. தற்போது இருக்கும் சூழலில் மாணவர்கள் பள்ளி சென்று கல்வி கற்பது என்பது கேள்விக்குறியான ஒன்றாக உள்ளது. இதனால் ஆசிரியர்கள் மாணவர்களுக்காக இணையம் வழி பாடங்களைக் கற்பித்து வருகிறார்கள். ஆனால் இந்த ஆன்லைன் வகுப்புகள் எல்லா மாணவர்களுக்கும் சமமாக சென்று அடைகிறதா? இந்த வகுப்புகள் பாதுகாப்பானதுதானா? இதுகுறித்து  பல்வேறு கேள்விகள் எழுந்து வந்த நிலையில் இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் […]

Categories
மாநில செய்திகள்

கட்டண உயர்வு என்ற பெயரில்… “மக்களின் ரத்தத்தை உறிஞ்சாதீர்கள்”… தமிழக அரசை சாடிய ஸ்டாலின்…!!

சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வை கண்டித்து தமிழக அரசிற்கு எதிராக திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் வேகமாக பரவிக் கொண்டிருக்கும் இந்நிலையில் தற்போது நான்காம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை கொடுத்துள்ளதால் மக்களுக்கு ஓரளவு திருப்தி அடையக் கூடிய சூழல் நிலவி வந்தாலும் அவர்களின் பொருளாதார வாய்ப்பு என்பது குறைந்த அளவிலேயே உள்ளது. இத்தகைய பொருளாதார இழப்பை தமிழக அரசு ஈடுசெய்ய வேண்டும். ஆனால் தற்போது உள்ள சூழலில் […]

Categories
மாநில செய்திகள்

சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தொடர்… இத்தனை நாட்களா…?

குளிர்கால சட்டப்பேரவை கூட்டம் தமிழகத்தில் 4 நாட்கள் நடைபெற இருப்பதாக அரசு அறிவித்துள்ளது. கொரோனா காலகட்டத்தில் மூன்றாம் கட்ட ஊரடங்கு அமலில் இருந்த நேரத்தில் அரசியல் கூட்டங்கள், பிரச்சாரக் கூட்டங்கள் போன்றவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. தற்பொழுது நான்காம் கட்ட ஊரடங்களில் பல்வேறு தளர்வுகளை அறிவித்திருக்கும் அரசு, பொதுக் கட்டங்கள் கூட்டுவதற்கு முக்கிய நடைமுறைகளை பின்பற்றி பொதுக் கூட்டங்களை வழி நடத்தலாம் என தெரிவித்திருக்கிறது. அந்த வகையில், தமிழக சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடரை 4 நாட்கள் நடத்த திட்டமிட்டிருப்பதாக […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

அமெரிக்கன் படைப்புழுவின் தாக்கத்தால் விவசாயிகள் கவலை…!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதிகளில் மக்காச்சோளம் பயிர்களில் படைப்புழு தாக்கம் அதிவேகமாக பரவி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கொரோனா ஊரடங்கால் முடங்கிக் கிடக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்காக உரம், பூச்சிமருந்துகள் மானிய விலையில் வழங்க வேண்டும் என பொது மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கோவில்கள்… மசூதிகள்…. தேவாலயங்கள்…. திறக்க தமிழக அரசு அனுமதி ….!!

தமிழகத்தில் கோவில்கள், அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்படும் என்று அரசு சார்பில் முதல்வர் அனுமதி அளித்துள்ளார். தமிழகம் முழுவதும் நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வு காண வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது அதில், சென்னையில் மெட்ரோ ரயில் போக்குவரத்து 7ஆம் தேதி முதல் தொடங்கும். மின்சார ரெயில்சேவைகளுக்கான தடை தொடரும். பெரிய வணிக வளாகங்கள், ஷோரூம்கள், பெரிய கடைகள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி. கொடைக்கானல், ஏற்காடு போன்ற மலை வாசஸ்தலங்களுக்கு செல்லும் வெளியூர் […]

Categories
அரசியல்

தமிழகத்தில் செப்டம்பர் வரை நீட்டிப்பு – அதிரடி அறிவிப்பு …!!

அரசு பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். பரவிவரும் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. தமிழக அரசும் தடுப்பு நடவடிக்கையை துரிதப்படுத்தி வருகின்றது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் கல்வி நிலையங்கள் அடைக்கப்பட்டு மாணவர்கள் வீட்டிற்குள் முடங்கி இருக்கின்றன. இந்த கல்வி ஆண்டுக்கான வேலை நாள்  தொடர்ந்து தாமதமாகி வருவதால், கல்வி சார்ந்த பல்வேறு அறிவிப்புகளை அறிவித்தும், நீடித்தும் […]

Categories
அரசியல்

மிக மிக முக்கிய அறிவிப்பு – இனி பேருந்து இயங்கலாம் ….!!

நாடு முழுவதும் மாநில அரசுக்களின் சுழலுக்கு ஏற்ப பேருந்துக்குள் இயக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாளையோடு பொது முடக்க மூன்றாம் கட்ட தளர்வு நிறைவடைய இருக்கும் நிலையில், மத்திய அரசு நேற்று நான்காம் கட்ட தளர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. இதில் மெட்ரோ சேவைக்கு அனுமதி, திறந்தவெளி திரையரங்கிற்கு அனுமதி, மாநிலத்திற்குள்ளும், மாநிலம் விட்டு மாநிலம் செல்வதற்கும் அனுமதி, இ- பெர்மிட் ரத்து உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை குறிப்பிட்டு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதேபோல் பேருந்து போக்குவரத்து , […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

செப். 1 முதல் எது உண்டு? எது இல்லை? அதிரடி தகவல் …!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பது குறித்து தமிழக முதல்வர் ஆலோசனை நடத்தி வருகின்றார். பொது ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களாக தமிழகத்தின் இயல்பு நிலை முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது. இதனால் அவ்வப்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. வரும் 31ம் தேதியுடன் பொது முடக்க முடியும் நிலையில் செப்டம்பர் மாதத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா ? இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கான விடை சிறிது நேரத்தில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இது தொடர்பாக தமிழக முதல்வர் மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு ? – இன்னும் சிறிது நேரத்தில் அறிவிப்பு ..!!

தமிழகத்தில் மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது என்று அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் கொரோனா பரவலால் ஊரடங்கு மார்ச் 25 முதல் பிறப்பிக்கப்பட்டது. இருந்து கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்த நிலையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு ஜூன் ஒன்றாம் தேதி முதல் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு வருகின்றன. தற்போது மூன்றாம் கட்ட தளர்வு நாடு முழுவதும் அமலில் இருந்து வருகின்றது. நாளை மறுநாள் 31 ஆம் தேதியோடு மூன்றாம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இனி -அரசு அதிரடி அறிவிப்பு…

தமிழக அரசு  கொரோனா விதி மீறலில் ஈடுபடுவோருக்கு அதிக அபராதம் விதிக்க அவசர கால  சட்டம் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. கடந்த ஆறு மாதங்களாக இந்தியாவை  நடுங்கவைத்திருந்தத கொரோனா வைரஸ்.  இதற்கு எதிராக வலுவான போராட்டத்தை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றனர்.  தினமும் பாதிப்பு  புதுப்புது உச்சத்தை எட்டி  கொண்டிருப்பதால், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அதில் பல்வேறு தளர்வுகளும்  அறிவிக்கப்பட்டு வருகின்றன. பாதிப்பில் அதிக தொற்று கொண்ட மாநிலமாக தமிழகம் இரண்டாவது இடத்தில் இருந்து வரக்கூடிய […]

Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வு விவகாரம்… திமுக தலைவர் கேள்வி… திணறும் தமிழகம்…!!!

தமிழக அரசு நீட் தேர்வு விவகாரத்தில் ஏன் மௌனம் கொள்கிறது? என்று திமுக தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக அரசு நீட் தேர்வு விவகாரத்தில் மௌனம் காப்பது ஏன் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, ” நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு மௌனம் கொள்வது ஏன்? சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தை உடனடியாகக் கூட்டி நீட் தேர்வை நடத்த முடியாது என அறிவிக்க வேண்டும். மருத்துவ […]

Categories
மாநில செய்திகள்

நாடு முழுவதும் இன்று… பிளஸ் -1 சேர்க்கை ஆரம்பம்…!!

இன்று முதல் பிளஸ்-1 படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நாடு முழுவதும் நடத்தப்படுகிறது என அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு போடப்பட்டு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் பல்வேறு அலுவலகங்கள், கல்லூரிகள், பள்ளிகள் போன்றவை மூடப்பட்டு இருக்கின்றன. பள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் அறிவிப்பார் என அமைச்சர் செங்கோட்டையன் ஏற்கனவே தெரிவித்துள்ளார். இந்த சூழ்நிலையில் சென்ற 17ஆம் தேதி ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான மாணவர் சேர்க்கை […]

Categories
மாநில செய்திகள்

“மேல்நிலை மற்றும் பாலிடெக்னிக் வகுப்புகள் தொடங்குவது எப்போது?”… உயர்நீதிமன்றம் கேள்வி…!!

மேல்நிலை வகுப்புகள் மற்றும் பாலிடெக்னிக் வகுப்புகள் எப்பொழுது துவங்கும் என விளக்கம் அளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர். பள்ளிக்கு சென்று படிக்காமல் நேரடியாக பத்தாம் வகுப்பு தேர்வு எழுத ஹால் டிக்கெட் வாங்கியிருந்த மாணவர்களுக்கான தனித்தேர்வர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 11ம் வகுப்பு மற்றும் பாலிடெக்னிக் மாணவர்களின் சேர்க்கையானது ஆகஸ்ட் 24ல் தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தனி தேர்வர்களை எழுத இருந்த மாணவர்களை தேர்ச்சி […]

Categories
மாநில செய்திகள்

“பாதிப்பு குறைஞ்சிருக்கு” சாமியான பந்தல், மைக்செட்டுடன்…. நாளை முதல்…. தமிழக அரசு அறிவிப்பு…!!

சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சாமியான பந்தல், மைக் செட் உள்ளிட்ட ஏற்பாடுகளுடன் நாளை டாஸ்மாக் திறப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது   தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவியதையடுத்து சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள் தவிர்த்து  அணைத்து மாவட்டங்களிலும் டாஸ்மாக் இயங்கி வந்தன. தற்போது சென்னையில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் அங்கு மதுக்கடைகள் திறப்பதற்கு நேற்று அனுமதியளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து நாளை சாமியானா பந்தல், மைக்செட் போன்ற ஏற்பாடுகளுடன் சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப் […]

Categories
மாநில செய்திகள்

சுற்றுச்சூழல் தாக்க வரைவு குறித்து ஆய்வு செய்ய குழு – தமிழக அரசு உத்தரவு…!!

சுற்றுச்சூழல் தாக்கம் வரைவு குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்தது தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய  அரசு கொண்டு வந்துள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை 2020 பெரும் விவாதத்தை உருவாக்கி இருக்கிறது. சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் இந்த வரைவு அறிவிக்கையை கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். மார்ச் மாதம் வெளியிடப்பட்ட இந்த வரைவு அறிவிக்கை பல்வேறு திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கும் முறைகளைக் கொண்டு உள்ளது. இதற்கு பரவலாக எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்நிலையில் சுற்றுச்சூழல் தாக்க வரைவு […]

Categories
மாநில செய்திகள்

சிறப்பு ரயில்கள் சேவை ரத்து – தெற்கு ரயில்வே

தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் திருச்சி, செங்கல்பட்டு, மதுரை, விழுப்புரம் இடையிலான சிறப்பு ரயில் சேவை ரத்தாகிறது. கோவை, காட்பாடி, கோவை அரக்கோணம் இடையிலான சிறப்பு ரயிலும், கோவை மயிலாடுதுறை இடையிலான ஜன சதாப்தி ரயில் சேவையும் ரத்து செய்யப்படுகின்றன. திருச்சி நாகர்கோவில் இடையிலான ரயிலும், மயிலாடுதுறை வழியாக இயக்கப்படும் திருச்சி செங்கல்பட்டு ரயில் சேவையும் ரத்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரிகளுக்கு தனி அலுவலர் தேவை ….!!

பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரிகளுக்கு தனி அலுவலரை தமிழக அரசு நியமிக்க வேண்டும் என பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தலைவர் பசுபதி தெரிவித்துள்ளார். தேர்தலை நடத்துவதற்கு பொறுப்பு வழங்கப்பட்ட இடைக்கால அதிகாரி திரு. சண்முகம் முறைகேடுகளில் ஈடுபட்டு அறக்கட்டளை தலைவராக பொறுப்பேற்று உள்ளதாகவும் ஆசிரியர்களை பழிவாங்கும் நடவடிக்கையில் அவர் ஈடுபட்டு வருவதாகவும் மேலும் கூறினார்.

Categories
கோவில்கள் மாநில செய்திகள்

இவர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க முடியாது… உச்சநீதிமன்றத்திற்கு பதிலளித்த தமிழக அரசு..!!

இசைக் கலைஞர்களுக்கான தனிநல வாரியத்தை அமைக்க இயலாது என சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. திருமணம், திருக்கோவில்கள் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளில் மங்கள கருவிகளை வாசிக்கும் தவில், நாதஸ்வரம் உள்ளிட்ட இசைக்கலைஞர்கள் ஊரடங்கு காரணமாக வருமானம் இல்லாத நிலையில் உள்ளனர். அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்கள் போன்று, வாத்தியக் கலைஞர்களும், பரதநாட்டிய கலைஞர்களுக்கும், தனி நல வாரியம் ஒன்றை அமைக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கிற்காக […]

Categories
மாநில செய்திகள்

கூடுதல் பேருந்துகள் தேவையா? உதவி எண்கள் அறிவிப்பு..!!

ஒப்பந்த அடிப்படையில் அரசுப் பேருந்துகள் தேவைப்பட்டால் தொழில்நிறுவனங்கள் தொடர்பு கொள்ளலாம் என்று அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. ஏற்கனவே 40க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில் கூடுதல் பேருந்துகள் தேவைப்படுவோர் 94 450 14 402,  94 450 14 416, 94 450 14 463 என்ற எண்ணிலும், [email protected] என்ற மின்னஞ்சல் மூலமும் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது..

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

விவசாயிகள் அதிர்ச்சி….! ”முடிவெடுக்காத அரசு”…. ஐகோர்ட் கிளை அதிரடி ..!!

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க படும் டெல்டா பகுதிகளுக்கு விதிகள் ஏதும் அறிவிக்கப்படவில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தஞ்சை மாவட்டம் பூதலூர் சேர்ந்த சிவக்குமார் என்பவர் மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தமிழக அரசின்  பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் தஞ்சாவூர் மாவட்டம் இடம்பெறுகிறது. தஞ்சாவூரில் பல்வேறு பகுதிகளிலும் அரசு சார்பிலும், அரசு அனுமதியுடனும் மணல் குவாரிகள் இருக்கின்றன. நாள்தோறும் ஆயிரத்துக்கும் அதிகமான லாரிகளில் மணல் எடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் அரசு […]

Categories
அரசியல்

இன்று 2மணி முதல் 10ஆம் தேதி வரை – தமிழக முதல்வர் அதிரடி

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கொரோனா தடுப்பு பணிகளை மாவட்ட வாரியாக நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகின்றார். இன்று பிற்பகல் 2 மணி அளவில் சென்னையில் இருந்து சேலத்திற்கு செல்லும் முதல்வர், இரவு சேலத்தில் தங்குகிறார். பின்னர் நாளை  6ஆம் தேதி சேலத்தில் இருந்து திண்டுக்கல் செல்லும் அவர், அங்கு மாவட்ட ஆட்சியர் உடன் கலந்தாலோசித்து தடுப்பு பணிகள் குறித்து கேட்டிருக்கிறார். காலை 10 மணி தொடங்கி 1.30 மணி வரை நடைபெறும் இந்த ஆலோசனையில் […]

Categories
அரசியல்

1 நாள் மட்டும் தான் இருக்கு… சிக்கிய தமிழக அரசு … புலம்பும் ஆளும் தரப்பு …!!

மாணவர்களுக்கு முட்டை வழங்கும் சமூக இடைவெளி கடைபிடிக்க முடியாது என்றால் டாஸ்மாக் கடைகளை மட்டும் திறப்பது எப்படி என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருக்கிறது. கொரோனா ஊரடங்கு காலத்தில் அம்மா உணவகங்களில் முட்டை வழங்க வேண்டும், அதே போல மாணவர்களுக்கு சத்தான உணவு பொருட்களை வழங்க வேண்டும், சத்துணவுத் திட்டத்தில் இருக்கின்ற மாணவர்களுக்கு முட்டை வழங்க வேண்டும் என வழக்கறிஞர் சுதா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நீதிபதிகள் கடந்த வாரம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைத்து மாவட்டத்திலும் – திடீர் உத்தரவு …!!

தமிழகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று விஸ்வரூபமெடுத்து பரவி வரும் நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வீட்டிற்குள் முடங்கி இருக்கும் பெற்றோர்கள் குழந்தைகளின் கல்வி கட்டணத்தை செலுத்த முடியாமல் திணறி வருகின்றனர். இதனிடையே அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் கல்வி கட்டணத்தில் 40 சதவீத கட்டணத்தை மட்டும் பள்ளிகள் வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்திருந்தது. உயர்நீதிமன்ற உத்தரவை மீறி பல பள்ளிகள் வசூல் செய்ததாக புகார் எழுந்தது. இதை கட்டுப்படுத்தும் வகையில் தற்போது […]

Categories

Tech |