தமிழக சட்டப்பேரவையில் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி ஆன்லைன் ரம்மி தடை மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஆர்.என் ரவியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சட்ட மசோதாவின் காலம் வரும் 27ஆம் தேதி முடிவடையும் நிலையில், தமிழக அரசிடம் இது குறித்து விளக்கம் கேட்டிருந்தார் ஆளுநர் ரவி. இந்நிலையில் தற்போது தமிழக அரசு ஆளுநர் கேட்ட விளக்கத்திற்கு கடிதம் மூலமாக பதில் அளித்துள்ளது. மசோதாவில் கூறப்பட்டுள்ள தண்டனை விதிப்பது தொடர்பான அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளதா என ஆளுநர் […]
Tag: தமிழக அரசு
தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பாக வருடம் தோறும் சென்னை தீவுத்திடலில் சுற்றுலா மற்றும் பொருட்காட்சி நடத்தப்படுவது வழக்கமாகும். கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று பரவல் காரணமாக பொருட்காட்சி நடத்தப்படவில்லை. இந்நிலையில் நடப்பாண்டு பொருட்காட்சியை பிரம்மாண்டமாக நடத்த தமிழக அரசு திட்டமிட்டு அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சுற்றுலா வளர்ச்சி கழகம் மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து பொங்கல், புத்தாண்டு, கிறிஸ்துமஸ் மற்றும் அரையாண்டு விடுமுறை போன்ற 60 நாட்கள் பொருட்காட்சி நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. பொருட்காட்சியில் […]
ஆன்லைன் ரம்மி தடை மசோதா தொடர்பாக விளக்கம் கேட்டு ஆளுநர் ஆர்.என் ரவி தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.. தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த அக்டோபர் மாதம் 19ஆம் தேதி ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வது மற்றும் ஒழுங்குபடுத்துவது தொடர்பான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டு கவர்னர் ஆர்.என் ரவியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.. அவசர சட்டத்திற்கு 6 மாதங்களும், சட்ட மசோதாவிற்கு 6 வாரத்திற்கும் ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற நிலையில், ஆன்லைன் […]
ஆன்லைன் ரம்மி தடை மசோதா தொடர்பாக விளக்கம் கேட்டு ஆளுநர் ஆர்.என் ரவி தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். சட்ட மசோதாவின் காலம் 27 ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், ஆளுநர் விளக்கம் கேட்டுள்ளார். ஆளுநரின் கேள்விகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று மாலைக்குள் விளக்கம் அளிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த அக்டோபர் 19ஆம் தேதி சட்டப்பேரவையில் ஆன்லைன் ரம்மி தடை மசூதா நிறைவேற்றப்பட்டது. ஆன்லைன் விளையாட்டு அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் தந்த […]
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி சேவை திட்ட இயக்குனர் அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறபட்டுள்ளதாவது, நிபுணர் குழுவின் பரிந்துரையின் படி 6 மாதம் தொடங்கி 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கு பதிலாக வழங்கப்படும் சத்துமாவு மற்றும் மகப்பேறு காலத்திற்கு முற்பட்ட அல்லது பிற்பட்ட தாய்மார்களுக்கு வழங்கப்படும் சத்துமாவு போன்றவற்றில் அடங்கியுள்ள உணவு சேர்க்கையில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்நிலையில் 2 வயது தொடங்கி 6 வயது வரையுள்ள ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சத்து […]
தமிழக அரசின் உடைய வருவாய் நிர்வாக ஆணையர் எஸ். கே பிரபாகரன் வெளியிட்டுள்ள அரசாணையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு குறிப்பாக இரண்டு வட்டங்களுக்கு சீர்காழியில் 99, 518 குடும்ப அட்டைதாரர்கள், தரங்கம்பாடியில் 62,129 குடும்ப அட்டைதாரர்களுக்கு கிட்டத்தட்ட 1,60,000 ரேஷன் கார்டுதரர்களுக்கு நிதி ஒதுக்கி கொடுக்கப்பட்டிருக்கிறது. ரேசன் கடைகள் மூலமாக இந்த நிதி என்பது விநியோகம் செய்யப்படும். இதற்கான மொத்த தொகையாக 16 கோடி ரூபாயை தமிழக அரசு , கும்பகோணம் மத்திய கூட்டுறவு […]
உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் வசிக்கும் தீரன் திருமுருகன் என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழ்நாட்டின் மூன்றாவது முக்கிய நகரங்களில் ஒன்றாக மதுரை மாநகரம் விளங்குகிறது. மதுரையை சங்க காலத்தில் ஆண்ட பாண்டிய மன்னனின் சின்னமாக மீன்கள் இருந்த காரணத்தினால் அதன் நினைவாக மதுரை ரயில் நிலையத்திற்கு வெளியே 1999 ஆம் வருடம் 3 மீன்கள் கொண்ட சிலை அமைக்கப்பட்டது. கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு ரயில் நிலையத்தை சீரமைக்கும் […]
தமிழக அரசு ஆதி திராவிடர்களுக்கு சலுகைகள் வழங்கும் விதமாக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் மத்திய மற்றும் மாநில அரசுகளால் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கப்படுவது மட்டுமல்லாமல் இலவச கல்வி மற்றும் கல்வி பயில ஊக்குவிக்கும் வகையிலான உதவித்தொகை போன்றவை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஆதிதிராவிடர் இன மாணவர் தங்கி படிப்பதற்கு வசதியாக மாவட்டங்கள் தோறும் விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி, தொழிற் பயிற்சி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் நல விடுதிகளில் […]
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்த தமிழக அரசின் அவசர சட்டத்தை எதிர்த்த வழக்குகள் வாபஸ் செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்து தமிழக அரசு கடந்த அக்டோபர் மாதம் அவசர சட்டம் பிறப்பித்தது. இதனை ரத்து செய்ய கோரி மும்பையை சேர்ந்த அகில இந்திய விளையாட்டு கூட்டமைப்பு உள்ளிட்ட நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். மனுக்கள் இன்றைய தினம் பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, […]
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு கூடுதலாக 5 லட்சம் ரூபாய் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை நிரந்தரமாக மூட கோரி போராட்டமானது நடைபெற்றது. 100 நாட்களாக நடைபெற்ற இந்தப் போராட்டம், நூறாவது நாளின் போது (மே 22ஆம் தேதி) பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டது. குறிப்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட பல்லாயிரக்கணக்கான மக்கள் சென்ற நிலையில், அங்கு கலவரம் ஏற்பட்டதையடுத்து போலீசார் துப்பாக்கி […]
தமிழகத்தில் பட்டியல் இன மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக ஆற்றிவரும் அரிய தொண்டுகளை கருத்தில் கொண்டு ஒருவருக்கு ஆண்டுதோறும் டாக்டர் அம்பேத்கர் விருது வழங்கி தமிழக அரசு கவுரவிக்கிறது. அதன்படி, 2022-ம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர் விருது பெற விரும்புவோர் முழு விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப படிவத்தை https://www.tn.gov.in/ta/forms/Deptname/1 என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தமிழகத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அரசாங்கம் அபராத தொகையை உயர்த்தி கடந்த அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி புதிய அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஜலாலூதீன் என்பவர் சென்னையில் உள்ள உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழக அரசு போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராத தொகையை பல மடங்கு அதிகரித்து அரசாணை பிறப்பித்துள்ளது. இதன் மூலம் தினக்கூலிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், பிற […]
மகளிர் கல்லூரிகளில் பாதுகாப்புக்காக காவலர்களை நிறுத்தலாமே என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை யோசனை தெரிவித்துள்ளது. மாணவிகளின் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமானது. என்பதும் நீதிபதி கேள்வி எழுப்பி இருக்கிறார். தமிழகம் முழுவதும் மகளிர் கல்லூரிகள், பள்ளிகள் முன்பாக காவலர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கு விசாரணையின் போது உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி இவ்வாறு ஒரு யோசனையை தமிழக அரசுக்கு தெரிவித்திருக்கிறார். மாணவிகளின் பாதுகாப்பு க்கு […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தேர்தல் நேரங்களில் கொடுக்கப்பட்ட வாக்குறுதி என்னெவெற்றால் ? பதிவு செய்து காத்திருக்கக்கூடிய விவசாயிகள் அனைவருக்கும் இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி வழங்கப்பட்டிருக்கிறது. அந்த வாக்குறுதியை நிறைவேற்ற கூடிய வகையில், ஏறத்தாழ 4 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பதிவு செய்து காத்திருந்தார்கள். இவர்களில் முதலாம் ஆண்டு ஒரு லட்சம் விவசாயிகளுக்கு நிறைவு செய்யப்பட்டிருக்கின்றது. இந்த ஆண்டு 50,000 விவசாயிகளுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, இணைப்பு வழங்குவதற்கான பணிகள் […]
சமூகநீதி கொள்கைகள் செயல்படுத்த குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு பணிகளில் அனைத்து நிலைகளிலும் சமூக நீதிக் கொள்கைகளை செயல்படுத்த குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. உச்சநீதிமன்ற மாநில அரசு கூடுதல் வழக்கறிஞர் தலைமையில் சட்ட நிபுணர்கள், மூத்த வழக்கறிஞர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பிற அலுவலர்களை உள்ளடக்கிய குழுவை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
போக்குவரத்து விதிமீறலுக்காக விதிக்கப்பட்ட அபராதத்தை அதிகரித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தமிழகத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை அதிகரித்து கடந்த அக்டோபர் மாதம் தமிழக அரசு சார்பில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையை ரத்து செய்ய கோரி, மதுரையை சேர்ந்த ஜலாலுதீன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதத்தை பல மடங்கு அதிகரித்ததன் மூலம் தினக்கூலிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், […]
மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில் 4 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க துணைக்குழுவை ஏற்படுத்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசு பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில் 4% இட ஒதுக்கீடு தருவது பற்றி துணைக் குழு பரிந்துரை வழங்கும். துணைக் குழுவின் உறுப்பினர்களாக 3 துறைகளின் துணை செயலாளர்கள் உட்பட 7 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதாவது, மாற்றுத்திறனாளிகள் துறை, மனிதவள மேம்பாட்டு துறை, சட்டத்துறைகளின் துணை செயலாளர் உட்பட 7 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சிக்கு கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டியது அவசியம், அந்த வகையில் பரந்தூரில் 2வது விமான நிலைய உருவாக்கம் காலத்தின் கட்டாயம் என்று தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் பொருளாதாரத்தை 1 ட்ரில்லியன் டாலராக உயர்த்திட இலக்கு நிர்ணயித்து அதை நோக்கியச் செயல்பாடுகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. 2030-ம் ஆண்டிற்குள் இந்த இலக்கை எட்ட வேண்டுமானால் வளர்ச்சிக்கு உறுதுணையாக பல நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டியுள்ளது. […]
தமிழகத்தில் நவம்பர் 5ஆம் தேதி முதல் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 4. 2 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயன்பெறுவார்கள் என ஆவின் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஆவின் நிறுவனம் கிராம அளவில் 9354 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள், மாவட்ட அளவில் 27 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்கள், மாநில அளவில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் என்ற மூன்றடுக்கு கட்டமைப்பில் […]
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார் கோவில் பகுதியில் கருணாநிதி என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரையில் உள்ள ஹை கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, எங்கள் கிராமத்தில் ஒரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் பணிபுரியும் தலைமை ஆசிரியர் கிராம மக்களுக்கு வட்டிக்கு பணம் கொடுக்கிறார். அதோடு வட்டிக்கு பணம் வாங்கியவர்களின் குழந்தைகள் பள்ளிக்கு செல்லும்போது அவர்களை பல வழிகளில் தண்டிக்கிறார். எனவே ஹெட் மாஸ்டர் மீது உரிய நடவடிக்கை […]
சென்னை உயர்நீதிமன்றம் சீமை கருவேலை மரங்களை அகற்ற வேண்டும் என அனைத்து பஞ்சாயத்துகளுக்கும், மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிட்டது. அதோடு சீமை கருவேல மரங்களை அகற்றியது தொடர்பான அறிக்கையை மாதம் தோறும் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அந்த வகையில் நீதிமன்றத்தில் சீமை கருவேல மரங்களை அகற்றியது தொடர்பாக ஊரக வளர்ச்சித் துறை, வனத்துறை மற்றும் நீர்வளத்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில் வனத்துறையினர் தாக்கல் செய்த அறிக்கையில் ஆனைமலை மற்றும் முதுமலை வனப்பகுதியில் உள்ள […]
தமிழகத்தில் பழங்கள், மலர்கள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றின் சாகுபடியை அதிகரிக்கும் நோக்கில் தமிழக அரசானது மானியம் வழங்கி வருகிறது. இதுக்கு தொடர்பான பல்வேறு திட்டங்களை கடந்த 2 வருடங்களாக வெற்றி கரமாக செயல்படுத்தி வருகிறது. அதன் பிறகு வேளாண்மை துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் சுவை தாளித பயிர் ஊக்குவிப்போம், மலர் சாகுபடி மூலம் தினசரி வருமானம், உயர்தொழுநுட்ப முறையில் தோட்டக்கலை சாகுபடி போன்றவற்றில் சாகுபடி பரப்பினை அதிகரிப்பதற்கு 202-23 ஆம் ஆண்டு வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் […]
தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் ஐந்து பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, சிறைத்துறை டிஜிபியாக அம்ரேஷ் பூஜாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிபி சிஐடி ஏடிஜிபியாக அபய் குமார் சிங் மாற்றப்பட்டுள்ளார். இதனை அடுத்து சைபர் கிரைம் பிரிவு ஏடிஜிபியாக சஞ்சய் குமார் ஆயுதப்படை ஐஜியாக ராதிகா போன்றோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஏபிஜிபி வெங்கட்ராமன் காவல்துறை நவீனமயமாக்கல் பிரிவை கூடுதலாக […]
ஐயா பசும்பொன் திருமகனார் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் தீரத்தையும், தியாகத்தையும், நற்பணிகளையும் நன்றியோடு நினைவுகூர்கிறேன்! என்று முதல்வர் ஸ்டாலின் ட்விட் செய்துள்ளார்.. பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 115 ஆவது ஜெயந்தி மற்றும் 60ஆவது குருபூஜை விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி முன்னாள் மற்றும் இந்நாள் அமைச்சர்கள் பலரும் பசும்பொன் கிராமத்திற்கு சென்று முத்துராமலிங்கத்தேவரின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என் நேரு, அன்பில் […]
முல்லைப் பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்டுவது சாத்தியமற்றது என தமிழக அரசு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பதிலளித்துள்ளது. தமிழக அரசு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முல்லைப் பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்டுவது சாத்தியமற்றது எனவும், இரண்டாம் சுரங்க பாதை அமைப்பதால் அணையின் கொள்ளளவை தற்போதுள்ள நிலையிலிருந்து 152 அடிக்கு உயர்த்த முடியாது என தங்களுடைய பதில் மனுவில் தெரிவித்துள்ளது. எந்த வழக்கில் தமிழக அரசு இந்த பதிலை அளித்துள்ளது […]
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு இயக்கப்பட்ட தீபாவளி சிறப்பு பேருந்துகள் மூலமாக 9.5 கோடி வருவாய் ஈட்டப்பட்டு இருப்பதாக தமிழக போக்குவரத்து துறை கூறியுள்ளது. இது பற்றி தமிழக போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. இந்த நிலையில் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் தீபாவளிக்காக இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் மூலமாக தமிழக அரசுக்கு சுமார் 9.5 கோடி வருவாய் […]
தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கியதன் மூலம் தமிழக அரசுக்கு 9.54 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் சொந்த ஊருக்கு மக்கள் சென்று தீபாவளி கொண்டாட வேண்டும் என்பதற்காக சிறப்பு பேருந்துகள் ஒவ்வொரு வருடமும் இயக்கப்பட்டு வருகிறது. அதே போல இந்த வருடமும் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் தீபாவளிக்காக 16,888 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. அதன்படி பயணிகளுக்காக 11 சிறப்பு முன்பதிவு மையங்களும் அமைக்கப்பட்டிருந்தன. தீபாவளி பண்டிகை கொண்டாட சொந்த ஊர்களுக்கு மக்கள் […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா கடந்த ஜூன் மாதம் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த கையோடு ஹனிமூன் சென்று இருந்த இவர்கள் அவ்வப்போது தங்கள் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வந்தனர். இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்திருப்பதாக இவர்கள் திடீரென அறிவித்தது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பிறகு வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றுக் கொண்டதாக தெரிவித்தனர். […]
ஓலா, உபர், ராபிடோ போன்ற ஆன்லைன் முன்பதிவுகளை ஓட்டுனர்கள் ரத்து செய்தாலோ அல்லது பயணிகளை ஏற்றிக் கொள்ள மறுத்தாலும் 50 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை அபராதம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பல நேரங்களில் ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளை ஓட்டுநர்கள் ஏற்பதில்லை என்றும் இரவு நேரங்களில் அதிக கட்டணம் கேட்பதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளது. எனவே இந்த புகார்களை தொடர்ந்து தமிழக அரசு புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் […]
கோவை கார் சிலிண்டர் விபத்து தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார். அப்போது தீபாவளிக்கு முந்தினம் அக்டோபர் 23ஆம் தேதி கோயம்புத்தூரில் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு அதிகாலை 4 மணிக்கு ஒரு கார் விபத்து நடைபெற்றதாக செய்தி வந்தது அதன் பின் அந்த காரில் இருந்து சிலிண்டர் வெடித்துள்ளது என்ற செய்தி வந்தது. அதன் பின் தமிழக காவல்துறை டிஜிபி ஏடிஜிபி போன்ற விரைந்து சென்றுள்ளனர். இதனையடுத்து […]
சென்னையை தவிர்த்து பிற மாநகராட்சிகளில் மக்கள் தொகையின் எண்ணிக்கைக்கு ஏற்ப 3,147 புதிய பணியிடங்களை தோற்றுவிக்க தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதற்கான உத்தரவை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வளங்கள் துறை கூடுதல் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா பிறப்பித்திருக்கிறார். அதாவது பெருநகர சென்னை மாநகராட்சியை தவிர்த்து இதர மாநகராட்சிகளுக்கான விதிகள் கடந்த 1996 ஆம் வருடம் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும் நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் போது புதிய பணியிடங்களை உருவாக்குவது […]
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 21 ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை திரையரங்குகளில் சிறப்பு காட்சிகளை திரையிட திரையரங்குகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. சிறப்பு காட்சிகளுக்கு அனுமதிக்க கோரி திரையரங்க உரிமையாளர்கள் சங்க நிர்வாகி பன்னீர்செல்வம் அரசிற்கு கடிதம் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிலையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு சிவகார்த்திகேயனின் பிரின்ஸ், கார்த்தி நடித்திருக்கும் சர்தார் போன்ற திரைப்படங்கள் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
சாலைகளில் தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் போன்ற அவசரகால வாகனங்களுக்கு வழி விட தவறுபவர்கள் மீது பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசானையில் கூறப்பட்டிருப்பதாவது, சாலைகளில் தீயணைப்பு வாகனங்கள் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசரகால வாகனங்களுக்கு வழிவிட தவறினால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அதேபோல் ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக வாகனங்களை இயக்கினால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் அல்லது காற்று மாசு ஏற்படும் விதமாகவோ […]
தீக்குளித்து வேல்முருகன் பலியான நிலையில், பழங்குடியினர் சாதிச் சான்றிதழ் வழங்குவதிலுள்ள சிக்கல்களை ஆய்வுசெய்ய ஆணையம் ஒன்றை அமைத்திட வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.. இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதியைச் சார்ந்த வேல்முருகன் என்பவர் அண்மையில் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து பலியான அவலம் மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது மனைவி […]
மின் கட்டண உயர்வு விவகாரத்தில் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தமிழக அரசின் மின்கட்டணம் உயர்வுக்கு தடை இல்லை என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் 3 மாதத்தில் சட்டத்துறை அதிகாரியை நியமிக்க தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. தமிழக அரசு நியமனம் செய்யவில்லை என்றால் மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாட மனுதாரருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்..
மின் நுகர்வோரின், ‘ஆதார்’ எண்ணுடன், மின் இணைப்பு எண்ணை இணைக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்து அரசிதழ் வெளியிட்டுள்ளது. மானியம் பெறும் அனைத்து மின் நுகர்வோர்களும் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் உத்தரவைத் தொடர்ந்து வங்கி கணக்குகள் பான் எண்ணுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்கும் பணி நடந்து […]
நளினி, ரவிச்சந்திரனை விடுவிக்க கோரும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றமே முடிவெடுக்கலாம் என தமிழக அரசு பதில் தெரிவித்துள்ளது. நளினி, ரவிச்சந்திரன் விடுதலை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என சொல்லப்பட்டது. இந்நிலையில் தற்போது தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அதன் பதில் மனுவை கொடுத்துள்ளது. அதில், பேரறிவாளனை ஏற்கனவே நீதிமன்றம் விடுவித்ததை போலவே இந்த விவகாரத்திலும் நீதிமன்றமே முடிவு எடுக்கலாம். நளினி ரவிச்சந்திரன் விடுதலை குறித்து நீதிமன்றம் எடுக்கும் முடிவுக்கு […]
தமிழக அரசு ஒவ்வொரு வருடத்தின் இறுதி மாதங்களில் அதற்கு அடுத்த பிறக்கும் வருடத்திற்கான பொது விடுமுறை நாட்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில் 2023 ஆம் வருடம் தொடங்க இன்னும் இரண்டு மாதங்களில் உள்ள நிலையில் தமிழக அரசு 2023 ஆம் வருடத்திற்கான விடுமுறை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி ஜனவரி மாதத்தில் ஆங்கில புத்தாண்டு தினமான ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொங்கல் பண்டிகையொட்டி 15 16 17 ஆகிய தினங்கள் முறையே ஞாயிறு, திங்கள், செவ்வாய் கிழமைகளில் விடுமுறை. […]
இடைநிலை ஆசிரியர்களுக்கு பணப் பலன் வழங்காதது தொடர்பான வழக்கில் பள்ளி கல்வித்துறை ஆணையர் நேரில் உயர்நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்திருக்கிறது. அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் 1993 அரசாணையின்படி பண பலன்களை வழங்க உயர்நீதிமன்ற குழு உத்தரவிட்டிருந்தது. உயர்நீதிமன்ற உத்தரவுபடி பணப்பலன் வழங்கவில்லை என ஆசிரியர் ஹரிகரன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் இடைநிலை ஆசிரியர்களுக்கு பணப் பலன் வழங்காதது தொடர்பாக பள்ளி கல்வித்துறை ஆணையரை நேரில் ஆஜராகுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்து இருக்கிறது. பலமுறை அவகாசம் […]
இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம் கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் அமைய உள்ளது. இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம் கரூர் & திண்டுக்கல் மாவட்டங்களில் 11,806.56 ஹெக்டேர் பரப்பளவில் அமைத்து தமிழக அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பாக இந்த செய்தி குறிப்பு தற்போது வெளியாகி உள்ளது. தேவாங்கு என்ற ஒரு விலங்கு நாட்டில் குறிப்பாக அழிந்து வரக்கூடிய இனமாக இருக்கக்கூடிய நிலையில், கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் 11,806 ஹெக்டர் நிலத்தை […]
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்வதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசும் போது தீபாவளியை முன்னிட்டு 10,518 சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இவை சென்னை, மாதவரம், கேகே நகர், தாம்பரம், அறிஞர் அண்ணா பேருந்து நிலையம், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையம், பூந்தமல்லி பைபாஸ், கோயம்பேடு போன்ற பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கப்படுகிறது. வெள்ளி, சனி, […]
குடும்ப அட்டையில் ஏதேனும் திருத்தம் செய்து கொள்ள விரும்புபவர்களுக்கு வசதியாக அக்டோபர் எட்டாம் தேதி மக்கள் குறை தீர் முகாம் நடைபெறுகின்றது. இதில் பங்கேற்று பயன் பெற்றுக் கொள்ளுமாறு தமிழக அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது. இது பற்றி வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது பொது விநியோகத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் சேவைகளை குடிமக்கள் எளிதில் பெரும் விதமாக தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவிப்புள்ளது. அதன்படி […]
தமிழகத்தில் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. பரங்கிமலை துணை ஆணையராக இருந்த பிரதீப் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். வடக்கு மண்டல ஐஜி தேன்மொழி சிபிஐடியின் சிறப்பு விசாரணை குழு ஐஜியாக நியமனம் செய்யப்பட்டு தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து கொடநாடு கொலை கொள்ளை சிபி சிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில் தேன்மொழி சிறப்பு விசாரணை குழு ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனை அடுத்து ஆயுதப்படை ஐஜியாக இருந்த […]
செயற்கை கருத்தரிப்பு மையங்கள் பதிவு கட்டணம் செலுத்த வேண்டும் என சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதல் படி கருமுட்டை சேமிப்பு வங்கி, கருமுட்டை கருப்பையில் செலுத்தும் மையம், கருத்தரிப்பு மையங்கள் மற்றும் வாடகைத்தாய் மையம் என நான்கு வகை மருத்துவமையங்களாக பிரிக்கப்பட்டு பதிவு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கருமுட்டை சேமிப்பு வங்கிக்கு 50 ஆயிரம் ரூபாயும், கருப்பையில் செலுத்த ஐம்பதாயிரம் ரூபாயும் வாடகைத்தாய் மையத்திற்கு 2 லட்சம் ரூபாயும் பதிவு […]
தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பள்ளிகளில் விஜயதசமி அன்று மாணவர் சேர்க்கை நடைபெறுவது வழக்கமாக இருக்கிறது. விஜயதசமியன்று பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதற்கான அறிவிப்பை ஒவ்வொரு வருடமும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு வந்த நிலையில் இந்த வருடம் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. விஜயதசமி நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் இதுவரை அறிவிப்பு வெளியாகாததால் விஜயதசமியில் மாணவர்களை சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை அரசு பள்ளி ஆசிரியர்கள் மேற்கொள்ளாமல் இருக்கின்றனர். தனியார் பள்ளிகள் விஜயதசமி அன்று போட்டி போட்டுக்கொண்டு மாணவர் சேர்க்கையை சேர்க்கும் நிலையில் அரசு […]
நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது. தேசிய அளவில் பொது மருத்துவம், பல் மருத்துவம் ஆகிய படிப்பில் சேர்வதற்காக நீட் எனப்படும் national Eligibility Entrance test என்ற தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. இது கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் நடுவண் இடைக்கல்வி வாரியம் மூலம் நடத்தப்பட்டு வந்தது. கடந்து 2019-ஆம் ஆண்டு முதல் நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. இந்த தேர்வில் இயற்பியல், […]
தமிழக அரசு பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அது மட்டும் இன்றி மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்கவும், மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தவும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. குறிப்பாக அரசு பள்ளிகளில் தரத்தை உயர்த்துவதற்கு பல கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளியில் மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா கூறியுள்ளார். சென்னையில் பள்ளி கல்வித்துறை […]
கடலூர், வேலூர், திருவள்ளூர், விழுப்புரம், தஞ்சாவூர் திருவாரூர் போன்ற மாவட்டங்களில் நடைபெறும் நெல் கொள்முதலை கண்காணிப்பதற்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. விவசாயிகளுக்கு அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலை கிடைப்பதையும் கண்காணிக்க உத்தரவு கடலூருக்கு ராஜாராமன், தஞ்சாவூருக்கு சிவஞானம், திருவள்ளூருக்கு கற்பகம், திருநெல்வேலிக்கு சங்கர் என ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனியாக கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு இருக்கிறது. மேலும் இவர்கள் விவசாயிகளிடம் நெல் குறைந்தபட்ச ஆதார விலைக்கு வாங்கப்படுகிறது என்பதை […]
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. தற்போது தமிழக மின்சாரத்துறை அமைச்சராக இருக்கக்கூடியவர் செந்தில் பாலாஜி. இவர் கடந்த 2011 முதல் 2015 ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் மோசடி செய்ததாக சென்னை மாநகர காவல் ஆணையரிடம் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் செந்தில் பாலாஜி, அவரது […]
அக்டோபர் 2 ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு தமிழ்நாடு முழுவதும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஆர் எஸ் எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி கோரியிருந்தது. இதற்கு தமிழக அரசு, காவல்துறை அனுமதி மறுத்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து ஆர்எஸ்எஸ் அமைப்பு அனுமதியை பெற்றது. சென்னை உயர்நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகள் விதித்து ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கியிருந்தது.. இந்நிலையில் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் […]