Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சென்னை உள்ளிட்ட 5 மாநகராட்சிகளில் கடைகள் இயங்காது; பெட்ரோல் பங்க் செயல்படும் – தமிழக அரசு அரசாணை!

தமிழகத்தில் இன்று மேலும் 72 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,755 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் மாநகராட்களில் முழு ஊரடங்கு கடைபிடிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சென்னை, கோவை, மதுரையில் 26ம் தேதி காலை முதல் 29ம் தேதி இரவு வரை முழு ஊரடங்கு அமல்படுத்தவும், சேலம், திருப்பூரில் 26ம் தேதி காலை முதல் 28ம் தேதி இரவு […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா தொற்று பரவலை தடுக்க அரசுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவை – ஓபிஎஸ் வேண்டுகோள்!

கொரோனா தொற்று பரவலை தடுக்க பொதுமக்கள் தமிழக அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா வைரஸை வெற்றி கொள்ள நாம் நடத்தும் போரில் பொதுமக்கள் அரசுக்கு பக்க பலமாக இருக்க வேண்டும். மக்களின் உயிரை காக்க தங்களது இன்னுயிரையும் பொருட்படுத்தாது உழைத்து கொண்டிருக்கும் ஊழியர்களுக்கு தமிழக அரசு தலைவணங்குகிறது என அவர் கூறியுள்ளார். மக்களின் வேதனைகளை நீக்க வேண்டும், அதனால் ஏற்படும் சோதனைகளை மாற்ற வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

மே மாதத்திற்கான ரேஷன் பொருட்களுக்கு டோக்கன் வழங்கும் தேதி மாற்றம் – தமிழக அரசு அறிவிப்பு!

மே மாதத்திற்கான இலவச ரேசன் பொருட்கள் பெற டோக்கன் மே 2, 3 தேதிகளில் வழங்கப்படும என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு சார்பில் ஏற்கனவே ரூ.3,280 கோடி செலவில் பல்வேறு சிறப்பு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது. அதில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அவர்களுக்கு உரித்தான ஏப்ரல் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் மே மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்களையும் வழங்குவதாக முதல்வர் […]

Categories
Uncategorized சற்றுமுன் மாநில செய்திகள்

ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும் 19 வகையான மளிகை பொருள்கள் வழங்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு!

ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும் 19 வகையான மளிகை பொருள்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் புதிதாக 54 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,683 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் கொரோனா பாதிக்கப்பட்ட இருவர் உயிரிழந்துள்ளனர்.  இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது. கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு உத்தரவு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு முடிந்ததும் அரசு அலுவலகங்கள் இயக்கும்…. நிலைமையை சீராக்க முனைப்பு காட்டி வரும் அரசு!

அரசு அலுவலகங்கள் மே3ம் தேதிக்கு பிறகு இயங்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 33% ஊழியர்களுடன் அனைத்து அரசு அலுவலகங்களும் இயங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல 100 நாள் வேலை திட்டத்திற்கும் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் அதிகமானதை தொடர்ந்து நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதி ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில், அனைத்து அரசு அலுவலங்ககள், தனியார் நிறுவனங்கள், சிறு குறு தொழில்கள், வணிக வளாகங்கள், மால்கள் […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கில் தளர்வுகள் : தமிழகத்தில் எந்தெந்த பணிகளை மேற்கொள்ள அரசு அனுமதி… முழு விவரம்!

ஊரடங்கு காலத்தில் தமிழகத்தில் எந்தெந்த பணிகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,629 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கின் போதும் சில தொழில்களுக்கு அனுமதி அளிக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதுகுறித்து மாநில அரசுகள் முடிவு எடுத்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகள் இல்லை என தமிழக அரசு அறிவித்தது. […]

Categories
மாநில செய்திகள்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நிலவேம்பு, கபசுரக் குடிநீரை குடிக்கலாம் – தமிழக அரசு பரிந்துரை!

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நிலவேம்பு, கபசுரக் குடிநீரை மக்கள் குடிக்கலாம் என தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது. கொரோனா தடுப்புக்கு பாரம்பரிய மருத்துவத்தை பயன்படுத்துவது தொடர்பாக முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது மருத்துவர்கள் அச்சப்பட வேண்டாம், அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என முதலமைச்சர் பழனிசாமி உறுதி அளித்துள்ளார். இதனை தொடர்ந்து கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஆரோக்கியம் சிறப்புத் திட்டம் அறிமுகம செய்யபட்டுள்ளது. பாரம்பரிய மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking : தமிழகத்தில் முக்கிய தொழிற்சாலைகள் இயங்க அனுமதி – தமிழக அரசு அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் முக்கிய தொழிற்சாலைகள் இயங்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,629 ஆக அதிகரித்துள்ளது என தமிழக சுகாதாரத் துறை தகவல் அளித்துள்ளது. இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக உள்ளது.நாடு முழுவதும் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கின் போதும் சில தொழில்களுக்கு அனுமதி அளிக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதுகுறித்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு பணியின் போது உயிரிழப்பவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை – தமிழக அரசு அறிவிப்பு!

கொரோனா தடுப்பு பணியின் போது தொற்று ஏற்பட்டு உயிரிழக்கும் மருத்துவர் உள்ளிட்ட அனைத்துத்துறை பணியாளர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசுப் பணி வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். கொரோனாவுக்கு தடுப்பு மருந்து தற்போது வரை கண்டுபிடிக்காத நிலையில் கொரோனவுக்கு எதிராக மருத்துவர்கள் போராடி வருகின்றனர். ஆனால் நாட்டில் பல்வேறு பகுதிகளில் மருத்துவர்கள் மீது தாக்குதல் சம்பவம் அரங்கேறி வருகிறது. மேலும் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களை அடக்கம் செய்ய எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளது. சென்னையில் கொரோனோவால் உயிரிழந்த […]

Categories
மாநில செய்திகள்

ஏப்ரல் 24, 25ம் தேதி மே மாதத்திற்கான இலவச ரேஷன் பொருட்கள் வாங்க டோக்கன் விநியோகம் – தமிழக அரசு!

மே மாதத்திற்கான இலவச ரேஷன் பொருட்களுக்கு ஏப்ரல் 24, 25ஆம் தேதிகளில் வீடு, வீடாக டோக்கன் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ரேஷன் பொருள் வழங்கப்படும் நாள், நேரம் ஆகியவை டோக்கன்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாளில் ரேஷன் கடையில் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த நடைமுறைகளை பொதுமக்கள் முறையாக கடைபிடிக்க வேண்டுமம். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் ஏற்கனவே ரூ.3,280 கோடி […]

Categories
மாநில செய்திகள்

வாடகை வீட்டில் வசிக்கும் சுகாதார பணியாளர்களை காலி செய்ய நிர்பந்தித்தால் கடும் நடவடிக்கை – தமிழக அரசு எச்சரிக்கை!

வாடகை வீட்டில் வசிக்கும் சுகாதார பணியாளர்களை காலி செய்யுமாறு நிர்பந்திக்க கூடாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தியளவில் கொரோனா பாதித்த மாநிலத்தில் தமிழகம் 5வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் 1,596 பாதிகக்கப்பட்டுள்ளனர். இதுவரை 18 பேர் உயிரிழந்த நிலையில் 635 குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்கத்தில் மே 3 வரை ஊரடங்கில் தளர்வுகள் இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் அத்தியாவசிய பணிகளை […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா உயிரிழப்பு குறித்து காரணமறிய தமிழக அரசு குழு அமைப்பு – 23ம் தேதி முதல்வர் மீண்டும் ஆலோசனை!

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முதல்வர் பழனிசாமி தலைமையில் வரும் 23ம் தேதி மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா வைரஸால் உயிரிழப்பதற்கான சரியான காரணத்தை கண்டறிய மாநில, மாவட்ட அளவில் குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள குழு அளிக்கும் அறிக்கையை விளக்கமாக ஆய்வு செய்து மாநில அளவிலான குழு முடிவு செய்யும் என கூறப்பட்டுள்ளது. மேலும் […]

Categories
அரசியல்

அம்மா உணவகங்களை வைத்து அதிமுக அரசியல் செய்ய வேண்டாம்: மு.க.ஸ்டாலின் சாடல்!

தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களில் அரசே இலவசமாக உணவு வழங்க வேண்டும் என அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். அம்மா உணவகங்களை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என விமர்சனம் செய்துள்ளார். மேலும், சுங்க கட்டணத்தை உயர்த்தி இருப்பது மனிதநேயமற்ற செயல் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ” தொடர் ஊரடங்கு காரணமாக தமிழகம் முழுவதும் வாழ்வாதாரத்தையும், வாழ்க்கையையும் இழந்து நிற்கும் ஏழை எளிய மக்களும், […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு பணி முதல்வர் நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.160.93 கோடி வந்துள்ளது – தமிழக அரசு அறிவிப்பு!

கொரோனா தடுப்பு பணி முதல்வர் நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.160.93 கோடி வந்துள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில், கொரோனா தடுப்புப் பணிக்கு தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் நிவாரண நிதி வழங்க முதல்வர் கோரிக்கை விடுத்திருந்தார். அதனடிப்படையில் திரையுலக பிரபலங்கள், தொழிலதிபர்கள், தன்னார்வலர்கள்என பலரும் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு உதவி அளித்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தடுப்புப் பணிக்கு தற்போது பெறப்பட்ட மொத்தத் தொகை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அத்தியாவசிய பணிகள் & சேவைகளுக்கு ஏற்கனவே அளிக்கப்பட்ட விதிவிலக்கு தொடரும் – அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் மே 3ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகளில் எந்த தளர்வுகளும் இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும் சில தொழில்களுக்கு ஊரடங்கில் இருந்து தளர்வு அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவு எடுத்தும் கொள்ளும் அதிகாரத்தை மத்திய அரசு வழங்கியுள்ளது. ஆனால் ஊரடங்கு நெறிமுறைகள், சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

ஈரானில் சிக்கி தவிக்கும் மீனவர்களை மீட்கவேண்டும்: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!

ஈரானில் சிக்கி தவிக்கும் மீனவர்கள் 650 பேரை மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார். நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் தரைவழி, வான்வழி மற்றும் கடல் வழி போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், ஊரடங்கு அறிவிப்பு வெளியாவதற்கு முன்னதாகவே தமிழக மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடிக்க சென்றுள்ளனர். தற்போது, ஊரடங்கு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் ஈரானில் உணவின்றி தவித்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கு தொடர்பாக தற்போதைய கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கும் – தமிழக அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் புதிய உத்தரவு வரும் வரை தற்போதைய கட்டுப்பாடுகள் தொடரும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவால் கொரோனோவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,792லிருந்து 15,712 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 488லிருந்து 507ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும் சில தொழில்களுக்கு ஊரடங்கில் இருந்து தளர்வு அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அந்தந்த மாநில […]

Categories
மாநில செய்திகள்

மத்திய அரசு நிர்ணயித்த விலைக்கே ரேபிட் டெஸ்ட் கருவிகள் வங்கியுள்ளோம் – அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்!

தமிழக அரசு அதிக விலைக்கு கொரோனா பரிசோதனை கருவிகளை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையி மத்திய அரசு நிர்ணயித்த விலைக்கே ரேபிட் டெஸ்ட் கருவிகள் வங்கியுள்ளோம் என அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் அளித்துள்ளார். தமிழகத்தில் புதிதாக 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1372ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கையானது 283லிருந்து 365ஆக உயர்ந்துள்ளது. மேலும் வளர்ந்த நாடுகளை […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா தகவல்களை மறைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை… ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி!

தேர்தலை கணக்கில் வைத்து திசை திருப்பும் நோக்கில் ஸ்டாலின் அரசியல் செய்கிறார் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். தமிழகத்தில் சீனாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட கொரோனா அதிவிரைவு பரிசோதனை கருவிகளான ரேபிட் டெஸ்ட் கருவிகள் மூலம் சோதனை இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கொரோனா பரிசோதனை ரேபிட் டெஸ்ட் கருவிகள் எத்தனை வந்துள்ளது? என அரசுக்கு ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். கருவிகளை வாங்கிய விலை, எண்ணிக்கை ஆகியவற்றை வெளிப்படையாக அறிவிக்குமாறு வலியுறுத்தியுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – மாவட்ட வாரியாக முழு விவரம்! 

தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,323 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தஞ்சையில் இன்று ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் ஒரே நாளில் 11 பேருக்கு கொரோனா உறுதியானதால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 228ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 228 பேர்களும், கோவையில் 127 பேர்களும், திருப்பூரில் 80 பேர்களும், ஈரோட்டில் 70 பேர்களும், திண்டுக்கல்லில் 66 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை :  1. […]

Categories
மாநில செய்திகள்

100 நாள் வேலை திட்ட ஊழியர்களுக்கு ஒருநாள் ஊதியம் உயர்த்தப்படுகிறது: தமிழக அரசு..!

100 நாள் வேலை திட்டத்தின் ஒரு நாள் ஊதியம் 229 ரூபாயில் இருந்து 256 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் உத்தரவுப்படி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ரூ.229 ஆக வழங்கப்பட்டு வந்த நிலையில், நாளொன்றுக்கு ரூ.25 உயர்த்தி ரூ.256 ஆக வழங்கப்பட உள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25ம் தேதி 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன் […]

Categories
மாநில செய்திகள்

கோயம்பேடு சந்தையில் கொரோனா பரவாமல் தடுக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன? – தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!

கோயம்பேடு சந்தையில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோயம்பேடு சந்தையில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சென்னை கோயம்பேடு சந்தை கொரோனா தொற்று மையமாக உள்ளது என கெருகன்பாக்கம் வியாபாரிகள் சங்கம் தொடர்ந்த வழக்கில் குறிப்பிட்டுள்ளனர். சென்னை கோயம்பேடு சந்தையில் கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி வியாபாரிகள் சங்க நிர்வாகி ஜெயசீலன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு மீது வேண்டுமென்றே ஸ்டாலின் குற்றம் சாட்டி வருகிறார் – முதல்வர் பழனிசாமி பேட்டி!

தமிழக அரசு மீது வேண்டுமென்றே ஸ்டாலின் குற்றம் சாட்டிவருகிறார் என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். இன்று சேலம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். சேலம் மாவட்ட ஆட்சியர் மற்றும் உயரதிகாரிகள் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் பழனிசாமி, சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதித்த 24 பேரில் 7 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என கூறியுள்ளார். சேலம் […]

Categories
சேலம் மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதல்வர் பழனிசாமி ஆலோசனை!

சேலத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1267 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசு பல்வேறுமுக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிக்காக புதிதாக 530 மருத்துவர்கள், 1000 செவிலியர்கள் கொரோனா தடுப்பு பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே தமிழகத்தை 22 மாவட்டங்களில் மத்திய அரசின் ஹாட்ஸ்பாட் மாவட்டங்களாக […]

Categories
அரசியல்

இதெல்லாம் நமக்கு மட்டும் தானா… ஆளும் கட்சிகளுக்கு இல்லையா?… முக ஸ்டாலின் ஆவேசம்!

ஊரடங்கு உத்தரவு நமக்குத்தான் ஆளும் கட்சிகளுக்கு இல்லையா? என்று முக ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.. கொரோனா விவாகரம் தொடர்பாக திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளின் ஆலோசனை கூட்டம் காணொலி முறையில் நேற்று நடைபெற்றது. சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் என மொத்தம் 11 பேர் பங்கேற்றனர். திமுக தலைவர் ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, இடதுசாரி கட்சி தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், மதிமுக பொதுச்செயலாளர் […]

Categories
மாநில செய்திகள்

உயர்நீதிமன்ற உத்தரவை கடைப்பிடித்து திமுகவினர் மக்களுக்கு உதவ வேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்!

உயர்நீதிமன்றத்தின் உத்தரவை முழுவதுமாகக் கடைப்பிடித்து, திமுகவினர் மக்களுக்கு உதவ வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டுள்ள ஊரடங்கால் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல், உணவில்லாமல் சாலை ஓரங்களிலும் பலர் தவிக்கின்றனர். அவர்களை தமிழக அரசு கண்டறிந்து உணவு வழங்கி வரும் நிலையில் தன்னார்வலர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சியினரும் நேரடியாக சென்று அவர்களுக்கு தேவையான உணவு, நிதியுதவியை வழங்கி வந்தனர். இதுபோன்று சம்பவங்களால் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு ஏற்படும் என்று தமிழக […]

Categories
அரசியல்

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். அதேபோல, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.5,000 வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். முன்னதாக, கொரோனா விவாகரம் தொடர்பாக திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளின் ஆலோசனை கூட்டம் காணொலி முறையில் இன்று நடைபெற்றது. சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் என மொத்தம் 11 பேர் பங்கேற்றுள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

100 நாள் வேலையாளர்களுக்கு 2 நாள் ஊதியம் வழங்க ரூ.123 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு!

100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களுக்கு 2 நாள் ஊதியம் வழங்க ரூ.123 கோடி தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்ட்டுள்ள நிலையில் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களுக்கு 2 நாட்கள் ஊதியம் சிறப்பு தொகையாக வழங்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். இந்த நிலையில் 100 நாள் வேளைத்திட்ட பணியாளர்களுக்கு 2 நாள் ஊதியம் சிறப்பு தொகையாக வழங்க ரூ. 123 கோடி ஒதுக்கி தமிழக அரசு […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தொற்றை கண்டறியும் PCR கருவிகளை தந்த டாடா நிறுவனம்: நன்றி தெரிவித்த முதல்வர்!

தமிழகத்தில் கொரோனா பரிசோதனைக்காக ரூ.8 கோடி மதிப்புள்ள 40,032 PCR கருவிகளை அரசுக்கு டாடா நிறுவனம் வழங்கியது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,204 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி, 28,711 பேர் வீட்டுக் கண்காணிப்பில் இருப்பதாகவும், அரசு கண்காணிப்பில் 135 பேர் உள்ளதாகவும் பீலா ராஜேஷ் தெரிவித்திருந்தார். இதுவரை […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு பணிகளுக்காக இதுவரை பெறப்பட்டுள்ள நிவாரணம் ரூ.134.63 கோடி: தமிழக அரசு

கொரோனா தடுப்பு பணிகளுக்காக இதுவரை பெறப்பட்ட கொரோனா நிவாரண நிதி 134 கோடியே 63 லட்சத்து 54 ஆயிரத்து 364 ரூபாய் என தமிழக அரசு தகவல் அளித்துள்ளது. கடந்த 7 நாட்களில் மட்டும் 54 கோடியே 88 லட்சத்து 92 ஆயிரத்து 940 ரூபாய் வரை பெறப்பட்டது என தகவல் அளித்துள்ளது. கொரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில், கரோனா தடுப்புப் பணிக்கு தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் நிவாரண நிதி வழங்க முதல்வர் […]

Categories
மாநில செய்திகள்

தன்னார்வலர்கள் நிவாரண உதவி – தமிழக அரசின் தடையை எதிர்த்து தி.மு.க. தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு!

தன்னார்வலர்கள் நிவாரண உதவி வழங்க தமிழக அரசு விதித்திருந்த தடையை எதிர்த்து தி.மு.க. தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு வழங்க உள்ளனர். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டுள்ள ஊரடங்கால் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல், உணவில்லாமல் சாலை ஓரங்களிலும் பலர் தவிக்கின்றனர். அவர்களை தமிழக அரசு கண்டறிந்து உணவு வழங்கி வரும் நிலையில் தன்னார்வலர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சியினரும் நேரடியாக சென்று அவர்களுக்கு தேவையான உணவு, நிதியுதவியை வழங்கி வந்தனர். இதுபோன்று சம்பவங்களால் கொரோனா தொற்று ஏற்பட […]

Categories
மாநில செய்திகள்

நாட்டு படகில் சென்று மீன்பிடிக்க அனுமதி…தமிழக அரசின் அறிவிப்பால் மகிழ்ச்சியில் மீனவர்கள்!

ஊரடங்கு காலத்தில் மீனவர்கள் நாட்டு படகில் சென்று மீன்பிடிக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதேநேரம், நோய்த்தொற்று பரவாமல் தடுக்க முகக்கவசம் உள்ளிட்டவற்றை மீனவர்கள் பயன்படுத்த வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. மீன்பிடி துறைமுகம், மீன்பிடி இறங்குதளம், கடற்கரை பகுதிகளில் மீன்களை ஏற்றும்போதும் இறங்கும் போதும் மீனவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் இதுவரை 1173 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 58 பேர் குணமடைந்துள்ளனர். இதையடுத்து, தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் […]

Categories
மதுரை மாநில செய்திகள்

மதுரை சித்திரை திருவிழா நடத்துவது தொடர்பாக தமிழக அரசு முடிவு எடுக்கும் – ஆட்சியர் வினய் பேட்டி!

மதுரை சித்திரை திருவிழா நடத்துவது தொடர்பாக தமிழக அரசு முடிவு எடுக்கும் என மாவட்ட ஆட்சியர் வினய் கூறியுள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். தமிழ்நாட்டில் புகழ்பெற்ற திருவிழாக்களில் முக்கியமானது மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழா. இந்த ஆண்டு திருவிழா ஏப்ரல் 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மே 6ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பது. திருவிழா நாட்களில் தினந்தோறும் மீனாட்சி அம்மனும் சுந்தரேஸ்வரரும் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

அரசின் தடை உத்தரவு எங்களுக்கு அதிர்ச்சி…. பரிசீலனை செய்யுங்கள்… தமிழக முதல்வருக்கு நடிகர் லாரன்ஸ் கோரிக்கை!

இனி தன்னார்வலர்களோ தனி நபர்களோ உணவுப்பொருட்கள் எதையும் வழங்கக்கூடாது என்ற  தடை உத்தரவை தயவு செய்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் கோரிக்கை வைத்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் மக்கள் அனைவரும் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதை தவிர வீட்டை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அன்றாட வேலைக்கு செல்ல முடியாமல் […]

Categories
அரசியல்

தன்னார்வலர்கள், அரசியல் கட்சிகள் நேரடியாக பொருட்கள் வழங்க தடை… மீறினால் சட்டப்படி நடவடிக்கை!

ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னார்வலர்கள் தனியாக நிவாரணப்பொருட்கள் தர தமிழக அரசு தடை விதித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. இதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களான மளிகை கடைகள், பால் உள்ளிட்ட கடைகள் மட்டுமே திறக்கப்படும், மக்கள் தேவையில்லாமல் வெளியே வர கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் மிகவும் கஷ்டப்படுகின்றனர். இவர்களுக்கு  தன்னார்வலர்கள் மற்றும் அரசியல் கட்சியினர்  நிவாரண நிதியாகவும், […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவ உபகரணம் வாங்க ரூ.1,000 கோடி உடனடியாக ஒதுக்க பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கோரிக்கை!

மருத்துவ உபகரணம் வாங்க ரூ.1,000 கோடி உடனடியாக ஒதுக்க வேண்டும் என பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். வேளாண்துறைக்கு என தனி சிறப்பு திட்டத்தை அறிவிக்க வேண்டும். மேலும் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் உதவ வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளார். பிரதமர் மோடி 3வது முறையாக மாநில முதலைவர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் நடத்தினார். 4 மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் சார்பில் பல்வேறு […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடைகளில் 19 வகையான மளிகைப் பொருட்கள் வழங்க தமிழக அரசு முடிவு!

ரேஷன் கடைகளில் ரூ.500க்கு மளிகை பொருள் தொகுப்பு விற்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா பாதிப்பு உள்ள சூழலில் பொதுமக்கள் மளிகை கடைகளில் கூடுவதை தவிர்க்க தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. அதன்படி துவரம் பருப்பு, உளுந்தம்பருப்பு, கடலை, மிளகு, சீரகம் உள்பட 19 வகை மளிகைப்பொருட்கள் ரூ. 500-க்கு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 911ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 9ஆக […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

90 நாட்கள் வாடகையின்றி அறுவடை இயந்திரம்.. தமிழக அரசின் நடவடிக்கை… விவசாயிகள் மகிழ்ச்சி..!!

நெல் அறுவடை இயந்திரத்தை இலவசமாக பயன்படுத்திக் கொள்ள மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா எதிரொலியாக அரியலூர் மாவட்டத்தில் நெல் அறுவடைக்கு தயாராக உள்ள ஆயிர கணக்கான விவசாயிகளுக்கு உதவும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தாஃபே நிறுவனத்துடன் இணைந்து வேளாண்மை இயந்திரங்களை சிறு குறு விவசாயிகளுக்கு 90 நாட்கள் வாடகை இன்றி பயன்படுத்திக்கொள்ள அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதனை அடுத்து உழவன் செயலி மூலம் பயனடையலாம். விவசாயிகள் தங்களுக்குத் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் – தமிழக அரசு வெளியீடு!

தனிமைப்படுத்தப்பட்ட வீட்டில் உள்ளவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 834ஆக அதிகரித்துள்ள நிலையில் வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டவர்களுக்கு தமிழக அரசு அறிவுரை வழங்கியுள்ளது. அதில், தனிமைப்படுத்தப்பட்ட நபருக்கு தனி கழிப்பறையுடன் கூடிய காற்றோட்டமான அறையை ஒதுக்க வேண்டும். வீட்டில் உள்ள அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும். வீட்டில் குறிப்பிட்ட நபர் மட்டுமே தனிமைப்படுத்தப்பட்டவருக்கு பராமரிப்பு பணி செய்ய வேண்டும். பராமரிப்பு பணி செய்பவர் தவறாமல் முகக்கவசம், கையுறைகளை அணிய […]

Categories
மாநில செய்திகள்

10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக தமிழக அரசு பரிசீலனை – முதலமைச்சர் பழனிசாமி தகவல்!

10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமா? இல்லையா? என மாணவர்கள் குழம்பி வரும் நிலையில் இது தொடர்பாக தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் ஏப்., 14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து மாநில எல்லைகளும் மூடப்பட்டு அத்தியாவசிய கடைகள் தவிர அனைத்தும் மூடப்பட்டுள்ளது. மேலும் மாநிலத்தில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு 10,12ம் வகுப்புகளை தவிர பிற வகுப்பு மாணவர்கள் அனைவரும் […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் பொது நிவாரண நிதியை கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்ய உத்தரவு!

முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு கிடைக்கப்பெறும் நிதியை கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முதல்வரின் நிவாரண நிதியுதவு, பெருநிறுவன சமூக பொறுப்பு நிதியாக கணக்கிட தமிழக அரசு தெளிவுரை அளித்துள்ளது. வைரஸ் தடுப்பு பணிகளுக்கு அளிக்கப்படும் நிதி, சிஎஸ்ஆர் பங்களிப்பிற்கு பெறும் முதல்வரின் நிவாரண நிதியுதவி, பெருநிறுவன சமூகப் பொறுப்பு நிதியாக கணக்கிட தெளிவுரை அளித்துள்ளது. முதல்வர் பொது நிவாரண நிதியை பாதுகாப்பு உபகரணங்கள் , வெண்டிலேட்டர் உபகரணங்கள் வாங்க […]

Categories
மாநில செய்திகள்

15 நல வாரியங்களின் தொழிலாளர்களுக்கு ரூ.1,000 நிவாரண நிதி – தமிழக அரசு அரசாணை!

15 நல வாரியங்களின் தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.1,000 வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸால் அணைத்து தொழில்களும் முடங்கப்பட்டுள்ள நிலையில், 15 நலவாரிய தொழிலாளர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் சுமார் 14.7 லட்சம் தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசின் இந்த நடவடிக்கையால் முடிதிருத்துவோர், சலவை தொழிலாளர்கள் உள்ளிட்ட 15 நல வாரிய உறுப்பினர்கள் பயன்பெறுவர் என […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா சிகிச்சைக்கு 19 மருத்துவர்கள் அடங்கிய நிபுணர் குழு அமைத்து தமிழக அரசு அரசாணை!

கொரோனா சிகிச்சை நெறிமுறைகளை வகுக்க சிறப்பு நிபுணர் குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கொரோனா பரவாமல் தடுப்பதற்காக 19 மருத்துவர்கள் அடங்கிய சிறப்பு நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. சென்னை மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள், பேராசிரியர்கள் இந்த நிபுணர் குழுவில் இடம்பெற்றுள்ளனர். சென்னை மருத்துவக்கல்லூரி பேராசிரியர் ரகுநந்தன், ராமச்சந்திரா, அப்பலோ மருத்துவமனை மருத்துவர்கள் உள்பட 19 பேர் தமிழக அரசின் குழுவில் இடம்பெற்றுள்ளனர். கொரோனா சிகிச்சை நெறிமுறைகளை வகுக்க இந்த சிறப்பு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஊரடங்கால் கொடியிலேயே அழுகும் வெற்றிலை.. விவசாயிகள் வேதனை..!!

வெற்றிலையை வெளியூர்களுக்கு அனுப்பி நடவடிக்கை எடுத்து விவசாயிகளின் வாட்டத்தை தமிழக அரசு போக்குமா.? ஊரடங்கு உத்தரவால் போக்குவரத்து தடை பட்டதாலும் கடைகள் மூடியதாழும் வெற்றிலை கொடியிலேயே அழுகி வருகிறது.  இதனால் வெற்றிலை போல் அதை பயிரிட்ட விவசாயிகள் வாடி போயுள்ளனர். அரசு இவர்களுக்கு கை கொடுக்குமா, தமிழகத்தில் எல்லா சுபகாரியங்களும் வெற்றிலையுடன் தான் தொடங்கும். அப்படிப்பட்ட வெற்றிலையை ஊரடங்கு உத்தரவால் வெளியூர்களுக்குச் எடுத்து செல்ல முடியாமல் பழுத்து கொடியிலேயே வீணாகி வருகிறது. மதுரை மாவட்டம் சோழவந்தான் வெற்றிலைக்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஏப்ரல் 30 வரை 1% சந்தைக் கட்டணத்தை வணிகர்கள் செலுத்த தேவையில்லை – தமிழக அரசு அறிவிப்பு!

ஏப்ரல் 30 வரை 1% சந்தைக் கட்டணத்தை வணிகர்கள் செலுத்த தேவையில்லை என தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக நேற்று மட்டும் 50 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டதால் ஒட்டுமொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 621ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 110 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இரண்டாவதாக கோவையில் 59 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க மத்திய அரசு பல்வேறு முக்கிய […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா தொடர்பாக மத்திய அரசுடன் தமிழக உள்துறை, சுகாதாரத்துறை செயலாளர்கள் ஆலோசனை!

தமிழக அரசு தலைமை செயலாளர், உள்துறை செயலாளர்களுடன் மத்திய அரசு அதிகாரிகள் ஆலோசனை. உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொடூர கொரோனா வைரஸால் இந்தியாவில் 77 பேர். பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,374ஆக உயர்ந்துள்ளது. இந்த கொரோனா வைரஸால் தமிழகத்தையும் விட்டுவைக்கவில்லை. கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 485 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் பரிசோதனை முடிவிற்காக காத்திருக்கின்றனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது மேலும் அதிகரிக்கும் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா தடுப்புப் பணிக்காக இதுவரை ரூ.62.30 கோடி நிதியுதவி கிடைத்துள்ளது – தமிழக அரசு!

கொரோனா தடுப்புப் பணிக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.62.30 கோடி நிதி கிடைத்துள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது. நிறுவனங்கள், பொதுமக்களிடமிருந்து தற்போது வரை ரூ.62.30 கோடி நிவாரண நிதி கிடைத்துள்ளது. டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் – ரூ. 5 கோடி, சக்தி மசாலா நிறுவனம் – ரூ. 5 கோடி, ஏசியன் பெயிண்ட் நிறுவனம் – 2 கோடி கொடுத்துள்ளதாக தகவல் அளித்துள்ளனர். மேலும் திமுக சார்பில் ரூ. 1 கோடி மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

7ம் தேதி முதல் வீடு வீடாக சென்று மட்டுமே ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் – தமிழக அரசு உத்தரவு!

7ம் தேதி முதல் நியாய விலைக்கடைகளில் ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்படாது என தமிழக அரசு புதிய உத்தரவிட்டுள்ளது. வீடு வீடாக சென்று மட்டுமே ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கொரோனா பரவாமல் தடுக்க ஏப்., 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா நிவாரண நிதியாக ரூ.1,000 மற்றும் ரேசன் பொருட்கள் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். ரூ.1,000 மற்றும் ரேசன் பொருட்கள் விநியோகம் அனைத்து மாவட்டத்திலும் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

மகப்பேறு மற்றும் டயாலிசிஸ் சிகிச்சை அளிக்காவிடில் மருத்துவமனை அங்கீகாரம் ரத்து – தமிழக அரசு எச்சரிக்கை!

மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல சிகிச்சைகளை அளிக்காவிடில் தனியார் மருத்துவமனைகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. டயாலிசிஸ், கீமோதெரபி தொடர்பான அத்தியாவசிய சிகிச்சைகளையும் தொடர்ந்து அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து தனியார் மருத்துவமனைகளுக்கு சுகாதாரத்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிப்பு தற்போது வரை 309ஆக அதிகரித்துள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 2ஆம் இடத்தில் உள்ளது. இதனால் கொரோனா தொற்றுக்கு […]

Categories
மாநில செய்திகள்

வங்கிக் கணக்குகளை ரேஷன் அட்டைகளுடன் இணைக்க கால அவகாசம் இல்லை – தமிழக அரசு விளக்கம்!

கொரோனா பாதிப்பு நிவாரண நிதியாக வழங்கப்படும் ரூ. 1000 வங்கி கணக்குகளில் ஏன் செலுத்தப்படவில்லை என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. முதலமைச்சர் வழங்கும் ரூ.1,000 மற்றும் ரேசன் பொருட்களை வீட்டிற்கே சென்று வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கறிஞர் ராஜேஷ் தொடர்ந்த வழக்கில் கொரோனா பரவாமல் தடுக்க ஏப்., 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா நிவாரண நிதியாக […]

Categories

Tech |