உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 41லிருந்து 50ஆக அதிகரித்துள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 1,834லிருந்து 1,965ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது வரை 234 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கின்றனர். தமிழகத்தில் நேற்று மட்டுமே 110 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் அந்த 110 பேரும் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என தெரியவந்துள்ளது. இதனால் […]
Tag: தமிழக அரசு
கொரோனா தடுப்புப் பணிக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.36.34 கோடி நிவாரண நிதி கிடைத்துள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது. நிறுவனங்கள், பொதுமக்களிடமிருந்து மார்ச் 31ம் தேதி வரை ரூ.36,34,2,529 நிவாரண நிதி கிடைத்துள்ளது. டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் – ரூ. 5 கோடி, சக்தி மசாலா நிறுவனம் – ரூ. 5 கோடி, ஏசியன் பெயிண்ட் நிறுவனம் – 2 கோடி கொடுத்துள்ளதாக தகவல் அளித்துள்ளனர். மேலும் திமுக சார்பில் ரூ. 1 […]
கொரோனா வைரஸ் கோழி இறைச்சி, முட்டை சாப்பிடுவதால் பரவாது என தமிழகஅரசு மீண்டும் விளக்கமளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனிடையே கொரோனா வைரஸ் கோழி இறைச்சி மற்றும் முட்டையினால் பரவுவதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவி வந்தது. தமிழக அரசு கோழி மூலம் கொரோனா பரவாது என விளக்கம் அளித்தது. இருப்பினும் பெரும்பாலானோர் சிக்கன் வாங்குவதை தவிர்த்து வந்தனர். இந்நிலையில் கோழி இறைச்சி, முட்டை சாப்பிடுவதால் கொரோனா வைரஸ் பரவாது […]
கொரோனா ஊரடங்கின் போதும் பணிசெய்யும் நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு தமிழக அரசு ஊக்கத்தொகை அறிவித்துள்ளது. விற்பனையாளர்களுக்கு ரூ. 2500, கட்டுனர்களுக்கு ரூ. 2000 வழங்கப்படும் என அறிவித்துள்ளனர். அரசின் இந்த அறிவிப்பால் 21,517 விற்பனையாளர்கள், 3,77 பொட்டலமிடுபவர்கள் பயனடைவார்கள். கொரோனா நிவாரணமாக அனைத்து வகை அரிசி பெறும் ரேஷன் கார்டுகளுக்கும் ரூ.1,000 உதவியும், அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை ஆகியவை இலவசமாகவும் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். ஏப்., 2 ம் தேதி தொடங்கி 15ம் […]
கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் நாடு முழுவதும் வரும் 14 ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மிழகத்தில் ஒருவர் இறந்துள்ள நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 40ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிழந்தவர்கள் எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ள நிலையில் 800க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் […]
வெளிநாட்டில் இருந்து வந்தவர்களை தனி முகாம்களில் வைத்து சிகிச்சை அளிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மார்ச் 1ம் தேதி முதல் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் திரும்பியவர்களை வீடுகளில் இருந்து வெளியேற்றி தனி முகாம்களில் வைத்து சிகிச்சை அளிக்க கோரி வழக்கறிஞர் ஜான் மில்டன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனை வழக்கு குறித்து தமிழக அரசு 2 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். […]
சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க வேண்டாம் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பரிந்துரை தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இன்று காலை சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டிருந்தார். இந்த சூழ்நிலையில் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க வேண்டாம் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பரிந்துரைத்தது. தமிழகத்தில் இன்று மாலை 6 மணி முதல் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு […]
கொரோனா தடுப்பு மற்றும் நிவாரணம் வழங்க தமிழக அரசு 3,250 கோடி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவாமல் இருப்பதற்காக இன்று முதல் 144 தடை உத்தரவு அமலாக இருக்கின்றது. அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற அனைத்தும் முடக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனால் பல தரப்பிலிருந்தும் வாழ்வாதாரங்கள் சார்ந்த கேள்விகள் முன்வைக்கப்பட்டன. இந்த நிலையில் தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் தமிழக சட்டசபையில் […]
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக கூடுதலாக ரூ.500 கோடி நிதி ஒதுக்கி உத்தராவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு நடவடிக்கைகள் அமுல்படுத்தப்படுகின்றது. ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. பிற மாநிலங்களில் பேருந்து சேவைகள் தடை செய்யப்பட்டுள்ளன. பெரிய பெரிய கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஏற்கனவே 60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. மேலும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளும் வகையில் தமிழகத்திற்கு […]
தமிழ்நாடு அரசு மாநில எல்லைகளை மூடினால் போதாது ஊரடங்கை அறிவித்து அமல்படுத்த வேண்டும் என முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம், ஜெர்மனியின் பவேரியா மாநிலம் அறிவித்ததைப் போல் தமிழ்நாடு அரசு முழுமையான ஊரடங்கை (முடக்கத்தை) அறிவிக்க வேண்டும். மாநில எல்லைகளை மூடினால் போதாது, ஊரடங்கை அறிவித்து அமல்படுத்த வேண்டும். ஊரடங்கைத் தவிர்க்க முடியாது. நாளை செய்ய இருப்பதை இன்றே செய்யலாமே? தமிழ்நாட்டு […]
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. உலகம் முழுவதும் இந்த 9 வைரஸ் பரவி வருவதால் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகளை பரிசோதனை செய்வதற்காக சென்னை, திருச்சி, மதுரை, கோவை விமான நிலையங்களில் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், ஓய்வுபெற்ற மருத்துவர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளோம். தேவைப்படும் போது பணிக்கு வரும் படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது […]
கொரோனா எதிரொலியாக நாளை முதல் மார்ச் 31ம் தேதி வரை வெளிமாநில வாகனங்கள் தமிழகம் வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கேரளா, கர்நாடகா, ஆந்திர மாநில எல்லைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பால், பெட்ரோல், டீசல், காய்கறிகள், மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிவரும் வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அம்புலன்ஸ், கேஸ் சிலிண்டர் ஏற்றிவரும் வாகனங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இறப்பு போன்ற காரணங்களுக்காக பயணிக்கும் பயணிகளின் இலகுரக வாகனங்கள் அனுமதிக்கப்படும். அத்தியாவசிய […]
தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுக்க அரசு எடுத்த நடவடிக்கைகளை பாராட்டத்தக்கவை என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். தமிழக அரசோடு மக்களாகிய நாமும் இணைந்து கொடிய வைரஸ் பரவாமல் தடுக்க ஒத்துழைப்போம் என கூறியுள்ள அவர், அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவித்தொகை அளித்தால் அவர்களுக்கு அது பேருதவியாக இருக்கும் என நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் […]
தமிழகத்தில் முகக் கவசம் மற்றும் கிருமி நாசினிகள் அதிக விலைக்கு விற்கப்படுவதை தடுக்க கோரி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ராஜேஷ் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழகத்தில் முகக் கவசம் மற்றும் கிருமி நாசினிகள் விலை உயர்வை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இதுகுறித்து தமிழக பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 147ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து இந்த வைரசை கட்டுப்படுத்த மத்திய-மாநில […]
2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 9ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று சட்டப்பேரவை மீண்டும் கூடிய நிலையில், பல்வேறு முக்கிய அறிவிப்புகளை முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ளார். குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க நிலம் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது என அவர் கூறியுள்ளார். மீன்வளத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்த காரணத்தினால் தான் மீன்வளத்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடல் அரிப்பை தடுக்க சுற்றுச்சுவர் அமைக்க தமிழக அரசு […]
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு சிறப்பு குழு அமைத்துள்ளது. தலைமை செயலாளர் சண்முகம் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு துறைகளை சேர்ந்த 18 அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இந்த குழு தினசரி ஆய்வு செய்யும் என கூறப்பட்டுள்ளது. சுகாதாரம், ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, தொழிலாளர் நலத்துறை, போக்குவரத்து, தகவல் தொழிநுட்பம், காவல்துறை, ரயில்வே, துறைமுகம் மற்றும் விமானம் போக்குவரத்து துறை […]
2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 9ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று சட்டப்பேரவை மீண்டும் கூடிய நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சட்டப்பேரவையை ஒத்திவைக்க திமுக, காங்கிரஸ் கட்சிகள் கோரிக்கை வைத்தனர். இதற்கு பதில் அளித்த முதல்வர் பழனிசாமி கொரோனா காரணமாக பேரவையை ஒத்திவைக்க வேண்டிய அவசியமில்லை என கூறியுள்ளார். சட்டமன்ற உறுப்பினர்களுக்கு போதிய பாதுகாப்பும், மருத்துவ உதவிகளும் செய்ய அரசு தயாராக உள்ளது. கொரோனா தடுப்பு […]
தமிழக சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறைக்கான மானியக் கோரிக்கை மீது விவாதம் இன்று நடைபெறுகிறது. 2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 9ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கடந்த வெள்ளியன்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இந்த நிலையில் 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறைக்கான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெறவுள்ளது.இந்த நிலையில் […]
கொரோனா வைரஸ் பாதிப்பை தகவல் தெரிவிக்க வேண்டிய தொற்றுநோயாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் 116 நாடுகளில் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 5,000-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. இந்தியாவை பொருத்தவரை டெல்லி, கேரளா, கா்நாடகா, மகாராஷ்டிரம் உள்பட 11 மாநிலங்களில் இதுவரை 100க்கும் மேற்பட்டோருக்கு இந்த […]
உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மெருக்கொண்டு வருகிறது. அதை கண்டு நடிகர் சித்தார்த் பாராட்டியுள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் சித்தார்த் , செய்தியாளர்களிடம் பேசினார். அப்பொழுது அவர், அனைத்து நாடுகளிலும் கொரோனா வைரஸ் பரவி வருவதால், கூட்டமாக இருக்கும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என கூறினார். இந்த வைரஸைத் தடுப்பதற்கு தமிழக அரசு தீவிரமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது […]
குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக இஸ்லாமிய தலைவர்களுடன் தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. மத்திய அரசு குடியுரிமை சட்ட திருத்தத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த சட்ட திருத்தம் மூலம் சிறுபான்மையினர் மற்றும் முஸ்லிம்கள் பாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க தமிழக அரசு சார்பில் சிறப்புக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் அனைத்து விதமான கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் அதிகாரிகள் பதில் அளிக்க […]
குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க நாளை சிறப்புக் கூட்டம் நடைபெற உள்ளது. நாளை மாலை 4 மணிக்கு தலைமை செயலகத்தில் நடைபெற உள்ள கூட்டத்தில் கலந்து கொள்ள இஸ்லாமிய தலைவர்களுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கடைசியாக கடந்த 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் நாடு முழுவதும் நடைபெற்றன. இந்நிலையில் வரும் 2021ம் […]
2021ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கான விவரங்கள் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கடைசியாக கடந்த 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் நாடுமுழுவதும் நடைபெற்றன. இந்நிலையில் வரும் 2021ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கான விவரங்கள் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இன்று காலை சட்டப்பேரவையில் மக்கள் தொகை பதிவேடு தீர்மானத்தை நிறைவேற்றி தமிழக மக்களை ஏமாற்ற […]
அமைச்சர்களின் ஊழல் பட்டியல் மத்திய அரசிடம் இருப்பதால் என்.பி.ஆர்க்கு எதிராக தீர்மானம் போட தமிழக அரசு மறுக்கிறது என ஸ்டாலின் கூறியுள்ளார். சட்டப்பேரவையில் கடந்த மாதம் பிப்ரவரி 14 ம் தேதி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 2020-21ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார். இந்த நிலையில் இன்று காலை சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு சபாநாயகர் தலைமையில் தொடங்கியது. அதில் என்.பி.ஆர் குறித்து சட்டப்பேரவையில் திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அதில் […]
தனக்கு எதிரான அவதூறு வழக்குகளை ரத்து செய்ய கோரி எதிர்க்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக உள்ளாட்சி துறையில் ஊழல் நடக்கிறது, அரசு அதிகாரிகள் பலர் ஊழலுக்குத் துணை போகின்றனர். சுமார் ரூ.1000 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதால் முறையான விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் எஸ்.பி வேலுமணி சார்பில் […]
தமிழகத்தில் 5 புதிய மாவட்டங்களின் ஆட்சியர்களை தேர்தல் அதிகாரிகளாக நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற்றது. புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் 5 மாவட்டங்களுக்கான தேர்தல் நடத்தும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமிக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி கள்ளக்குறிச்சி, தென்காசி, திருப்பத்தூர், செங்கல்பட்டு, […]
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வர கோரிய வழக்கில் தமிழக அரசும், டிஜிபியும் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. கிழக்கு டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதால் இதுவரை 42 பேர் உயிரிந்துள்ளனர். இதேபோல தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் வண்ணாரப்பேட்டையில் கடந்த இரண்டு வாரங்களாக தொடர் போராட்டம் மேற்கொண்டு […]
வீட்டுவசதி வாரிய குடியிருப்பு ஒதுக்கீடு பெற்று விற்பனைப் பத்திரம் பெறாதவர்களுக்கு மார்ச் 31ம் தேதி வரை வட்டி தள்ளுபடி சலுகையை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து வீட்டுவசதி வாரியமேலாண் இயக்குநர் வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய திட்டங்களில் குடியிருப்பு ஒதுக்கீடு பெற்றவர்களில் சிலர் வட்டிச்சுமையால் விற்பனை பத்திரம் பெறாமல் உள்ளனர். இவர்களுக்கு மாதத்தவணை செலுத்தத் தவறியதற்கான அபராத வட்டி, முதல் மீதான வட்டி ஆகியவற்றை முழுவதுமாகவும், நிலத்தின் இறுதி விலை வித்தியாசத்தின் மீதான வட்டியில் […]
தமிழக அரசு மருத்துவர்களுக்கு போராட்டம் நடத்த உரிமை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஊதிய உயர்வு பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் அரசு மருத்துவர்கள் தொடர்ந்து 5 நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்ட நிலையில் போராட்டம் கைவிடப்பட்டது. இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் மீது பணியிட மாற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகள் […]
மதுக்கடைகளை இடமாற்றம் செய்வது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டாஸ்மாக் வேண்டாம் என கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினால் அதை நடைமுறைப்படுத்துவதில் தயக்கம் ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார். டாஸ்மாக் கடை அமைக்க பொதுமக்களிடம் கருத்து கேட்பதை ஏன் சட்டமாக்க கூடாது? தேர்தல் நேரத்தில் மதுவிலக்கு அளிப்போம் என வாக்குறுதி அளிக்கும் கட்சிகள், ஆட்சிக்கு வந்தால் கடைபிடிப்பதில்லை. மது கடைகள் குறைந்துள்ளதாக கூறும் தமிழக அரசு, மது […]
அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் கட்டாயம் அடையாள அட்டை அணிய வேண்டுமென்று தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.மீறினால் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.. இது தொடர்பாக அனைத்து துறை முதன்மைச் செயலாளர்களுக்கும் அரசு பணியாளர் நிர்வாக சீர்திருத்தத் துறை முதன்மைச் செயலாளர் சொர்ணா சுற்றறிக்கை ஒன்று அனுப்பியுள்ளார். இந்த உத்தரவில் உயர்நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி இனி பணிநேரத்தில் அரசு ஊழியர்கள் அனைவரும் கட்டாயமாக அடையாள அட்டை அணிய வேண்டும் என்று கூறியுள்ளார். பெரும்பாலான அரசு […]
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவிற்கு சென்னை நந்தனம் பகுதியில் வீடு ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அரசியலில் அனைத்துக்கட்டத் தரப்பு மக்களாலும் விரும்பப்படுபவர். இவர் கடந்த 2004 ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை சென்னை தியாகராயா நகரில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில் அந்த இடத்தில் புதிய கட்டுமானத்திட்டம் வர இருந்ததால் […]
அரசு ஊழியர்கள் அனைவரும் அடையாள அட்டை அணிவது கட்டாயம் என்றும் அணியாதவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு ஊழியர்கள் அனைவருக்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் தங்களின் அடையாள அட்டையை அணிய வேண்டும் என்பது ஏற்கெனவே அரசு விதிமுறைகளில் உள்ளது. இருந்தாலும் அரசு ஊழியர்கள் பலரும் வேலை நேரத்தின் போது அடையாள அட்டை அணிவதில்லை என்ற புகார் எழுந்தது. இது அரசின் கவனத்துக்கு […]
ரேஷன் கடையில் துவரம் பருப்பு, பாமாயில் வழங்கும் திட்டத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் முதன்மைச் செயலர் தயானந்த் கட்டாரியா வெளியிட்ட அறிவிப்பில், தமிழக ரேஷன் கடைகளில் சிறப்பு பொது விநியோக திட்டத்தின் கீழ் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் இந்த திட்டம் நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நடப்பாண்டின் கால அவகாசம் பிப். 29ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. […]
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையத்தின் காலத்தை 7வது முறையாக நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை கடந்த 2017ம் ஆண்டு தமிழக அரசு அமைத்து உத்தரவிட்டது. இதுதொடர்பாக ஜெயலலிதாவின் உறவினர்கள், சசிகலா மற்றும் அவரது உறவினர்கள், அமைச்சர்கள் என 150க்கும் மேற்பட்டோரிடம் ஆணையம் இதுவரை விசாரணை நடத்தியுள்ளது. மேலும் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவர்கள் உள்பட அரசு அதிகாரிகள் பலரிடம் […]
தமிழக அரசில் காலியாக உள்ள சாலை ஆய்வாளர் பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு யார் யார் விண்ணப்பிக்கலாம், என்ன படித்திருக்க வேண்டும் உள்ளிட்ட விவரங்களை இங்கு காணலாம். நிறுவனம் : தமிழ்நாடு ரூரல் டெவலப்மென்ட் அண்ட் பஞ்சாயத்து ராஜ்(டி.என்.ஆர்.டி) எனப்படும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலை : ரோடு இன்ஸ்பெக்டர் எனும் சாலை ஆய்வாளர் வேலை காலியிடங்கள் : மொத்தம் 248. இதில் மாவட்ட வாரியாக இடங்கள் […]
தமிழகத்தில் 43 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பதவி உயர்வுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதித்துள்ளது. 2020 – 21ம் ஆண்டிற்கான ஐ.பி.எஸ் அதிகாரிகள் பதவி உயர்வு வழங்குவது குறித்து தமிழக அரசு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி கேட்டிருந்தது. அதுகுறித்து பட்டியல் ஒன்றை தயாரித்து உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்திருந்தது. அதன்படி மத்திய உள்துறை அமைச்சகமானது டி.ஜி.பி, ஏ.டி.ஜி.பி, ஐ.ஜி உள்ளிட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் பதவி உயர்வு பெறுவதற்கான காலியிடங்கள் குறித்து அதில் குறிப்பிட்டிருந்தனர். இந்நிலையில் 43 ஐபிஎஸ் […]