உலகம் முழுவதும் நாளை 2023-ம் ஆண்டை வரவேற்க பொதுமக்கள் ஆயத்தமாகி வருகிறார்கள். இன்று நள்ளிரவு 12 மணி முதல் புத்தாண்டு கொண்டாட்டம் தொடங்குகிறது. இருப்பினும் கொரோனா பரவலின் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பல்வேறு விதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்களுக்கு ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அதன் பிறகு தமிழக மக்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தெரிவித்து தன்னுடைய twitter பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதனுடன் அனைத்து துறைகளிலும் எழுச்சியை […]
Tag: தமிழக மக்கள்
ஆண்டுதோறும் ஜூலை 1 முதல் மின்கட்டணத்தை 6 சதவீதம் உயர்ந்த தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. புதிய மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்த நிலையில் ஆண்டுதோறும் கட்டணத்தை உயர்த்திக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஆண்டுதோறும் மின் கட்டணம் அதிகம் செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால் தமிழக மக்கள் தலையில் மேலும் ஒரு இடி விழுந்துள்ளது. இந்த செய்தி அனைத்து தரப்பு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தமிழ்நாட்டில் […]
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து சென்னை காவேரி மருத்துவமனையில் முதலமைச்சருக்கு கொரோனா தொற்றில் இருந்து விடுபடுவதற்கான சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டது. இந்தநிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்து விட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கும், மக்களுக்கும் கடிதம் எழுதி உள்ளார். அதில் கொரோனா தொற்றிலிருந்து தான் குணமடைய விரும்பிய மக்கள் அனைவருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட பின்னர் தன்னை ஆயிரக்கணக்கானோர் தொடர்புகொண்டு நலம்பெற வாழ்த்தியதாகவும் […]
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மத்திய அரசின் சார்பாக அடையாள அட்டை மற்றும் ரூபாய் 5 லட்சத்திற்கான பிரதமரின் இலவச மருத்துவ காப்பீடு அட்டை 100 பேருக்கு வழங்கப்பட்டது. தமிழகத்தில் பல மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் செயல் முறையில் இருந்து வரும் நிலையில் புதியதாக இந்தியாவின் பிரதமர் மோடி தனது நாட்டு மக்களுக்காக ஒரு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை ஆரம்பித்துள்ளார். இந்த திட்டத்தின் மூலமாக 50 கோடி மக்களுக்கும் பயன்பெற உள்ளனர். இந்த திட்டம் இந்தியாவில் உள்ள 50 […]
தமிழகத்தில் வருகிற 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனை கருத்தில் கொண்டு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். அந்த வகையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக காணொலி காட்சி வாயிலாக தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். அதில் பேசிய அவர் உள்ளாட்சித் தேர்தலிலும் […]
தமிழக மக்கள் அனைவருக்கும் எங்கள் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் என்று ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: ” புத்தம் புது நம்பிக்கைகளுடன் மலருகின்ற இந்தப் புத்தாண்டில், தமிழக மக்கள் அனைவருக்கும் எங்கள் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம். இறைவன் நமக்கு புதியதொரு ஆண்டினை வழங்கி உள்ளார். இந்தப் புதிய ஆண்டு பொன்னுலகம் நோக்கி நம்மை அழைத்துச் செல்லும் என்ற நம்பிக்கையோடு […]
முல்லைப் பெரியாறு அணை பிரச்சினைக்காக நவம்பர் 8-ம் தேதி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போராட்டம் நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது: “முல்லைப்பெரியாறு அணையில் இருந்து 142 அடி வரை நீரை தேக்கி கொள்வதற்கு தமிழக அரசுக்கு முழு உரிமை உள்ளது. ஆனால் கேரள அரசு, அணையின் நீர்மட்டம் 136 ஆடி இருக்கும்போதே நீரை திறந்து இருப்பது மிகவும் கண்டனத்துக்குரியது. இதனை தமிழக அரசு கண்டு கொள்ளாதது ஏன்? தமிழக […]
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]
அஞ்சல் துறை தேர்வு இனி தமிழில் எழுதலாம் என்று அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. தமிழகத்தில் அஞ்சல் துறை தேர்வு தமிழில் இனி எழுதலாம் என மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது சமீபத்தில் ஆங்கிலம் இந்தி மொழிகளில் மட்டும் தேர்வு எழுத அறிவிப்பாணை வெளியிட்ட நிலையில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதற்கு பல கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து தேர்வை தமிழில் எழுத வேண்டும் என்று மதுரை எம்பி சு. வெங்கடேசன் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தார். […]
கொரோனா பாதிப்புகள், தடுப்பு பணிகள், கட்டுப்பாடுகள் குறித்து காணொலி மூலம் தமிழக மக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றிவருகிறார். தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விளக்கம் அளித்து வருகிறார். அவர் கூறியதாவது, ” கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட முடிதிருத்தும் ஊழியர்கள் என மொத்தம் 35.65 லட்சம் பேருக்கு ரூ.2,000 நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. 13.59 லட்சம் கட்டுமான தொழிலாளர் குடும்பங்கள், 86,925 ஓட்டுநர் தொழிலாளர் குடும்பங்களுக்கும் 2 மாதத்திற்கு கூடுதல் உணவு பொருட்கள் […]
கொரோனா பாதிப்புகள், தடுப்பு பணிகள், கட்டுப்பாடுகள் குறித்து காணொலி மூலம் தமிழக மக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றிவருகிறார். தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விளக்கம் அளித்து வருகிறார். தற்போது பேசி வரும் அவர், கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் வீட்டிலேயே முடங்கியிருப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல என்பஹே நான் அறிவேன். தனிமனித உறுதியும், ஒழுக்கமும் கொரோனா நோய் தொற்றில் இருந்து நம்மை பாதுகாக்கம் என்பதை நாம் உணர வேண்டும். மற்ற மாநிலங்களை […]
இன்று மாலை 6 மணிக்கு முதல்வர் பழனிச்சாமி உரையாற்றவுள்ளார். கொரோனா பாதிப்புகள், தடுப்பு பணிகள், கட்டுப்பாடுகள் குறித்து காணொலி மூலம் தமிழக மக்களுக்கு முதல்வர் உரையாற்றவுள்ளார். தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு மிகவும் அதிகமாக உள்ளது. இந்த சூழ்நிலையில், அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள், தடுப்பு பணிகள் குறித்து அவர் விளக்கமளிக்கவுள்ளார். மேலும் சென்னையில் கொரோனா பாதிப்பினை கட்டுப்படுத்த அரசு எந்தவிதமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது எனவும் குறிப்பிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இனி வரும் காலங்களில் கொரோனா […]
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை 6 மணிக்கு தமிழக மக்களுக்கு உரையாற்றுகிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தொலைக்காட்சி மூலம் தமிழக மக்களுக்கு முதல்வர் உரையாற்றுள்ளார். கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக அவரின் உரையில் பல்வேறு அறிவிப்புகள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் மிகவும் அதிகமாக பரவி வருகிறது. நேற்று மட்டும் முன்னெப்போதும் இல்லாத அளவில், 527 பேருக்கு கொரோனா தொற்று புதிதாக உறுதியாகியுள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த […]
தமிழக மக்களிடத்தில் அதிமுக செல்வாக்கு என்றும் சரிவை சந்தித்ததில்லை என்று சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறைக்கான மானியக் கோரிக்கை மீது விவாதம் இன்று நடைபெறுகிறது. 2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 9ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கடந்த வெள்ளியன்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இந்த நிலையில் 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று […]