நேபாள நாட்டின் கண்டகி மாவட்டத்தில் போக்ரா நகரத்தின் ரங்கசாலா பகுதியில் நடந்த கைப்பந்து போட்டியில் பங்கேற்ற தமிழக வீரர் மர்ம மரணமடைந்துள்ளார். திருவள்ளூர் அடுத்த கைவண்டூர் பகுதியைச் சேர்ந்த கைப்பந்து விளையாட்டு வீரர் ஆகாஷ் மரணமடைந்துள்ளார். 27 வயதான கைப்பந்து வீரர் ஆகாஷின் உடலை தமிழ்நாடு கொண்டுவர நடவடிக்கை எடுக்க பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர். இதற்கிடையே மரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Tag: தமிழக வீரர்
36 ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகள் பற்றி வெள்ளிக்கிழமை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, 26 தங்கப் பதக்கங்கள் உட்பட 74 பதக்கங்களுடன் 36 ஆவது தேசிய விளையாட்டு போட்டியில் தமிழ்நாடு ஐந்தாம் இடத்தை பிடித்திருக்கிறது. களத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப தங்களது திறன்களை வெளிப்படுத்தி கடும் உழைப்பினால் சிறப்பான முடிவுகளை வழங்கியுள்ள நமது தமிழக வீரர்களை எண்ணி பெருமிதம் அடைகிறேன். மேலும் அடுத்து வரும் போட்டிகளிலும் அவர்கள் வெற்றி பெற வாழ்த்துவது மட்டுமல்லாமல் எனது […]
44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த 28ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. 11 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் ஓபன் மற்றும் பெண்கள் பிரிவில் இந்தியா மொத்தம் ஆறு அணிகளில் களமிறங்கியுள்ளது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியின் கோலாகலமான நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற உள்ளது. இறுதி நாளான இன்று இந்தியாவில் இரண்டு வெண்கல பதக்கம் […]
செஸ் ஒலிம்பியா 8-வது சுற்று போட்டியில் பிரக்யானந்தா மற்றும் வெஸ்லி இடையேயான ஆட்டம் டிராவில் முடிந்தது. 44வது செஸ் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்து வருகின்றது. இதில் 186 நாடுகள் பங்கேற்று உள்ளன. 11 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் ஓபன் மற்றும் பெண்கள் பிரிவில் மொத்தம் ஆறு அணிகள் களமிறங்கியுள்ளது. எட்டாவது சுற்று ஆட்டம் இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. எட்டாவது சுற்றில் இந்தியா ஒன்றாவது அணி அர்மேனியாவுடன், இந்தியா இரண்டாவது […]
பஞ்சாப் கிங்ஸ் அணியின் தமிழக வீரரான ஷாருக் கான் , பொல்லார்ட் போல அதிரடியாக விளையாடுகிறார் என்று முன்னாள் வீரர் சேவாக் புகழ்ந்து பேசியுள்ளார். 14ஆம் தேதி ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9 ம் தேதி முதல் தொடங்கி, நடைபெற்று வந்த நிலையில் வீரர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் ,போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் இந்த சீசன் ஐபிஎல் போட்டியில் பல இளம் வீரர்கள் தங்களுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கவனத்தை ஈர்த்துள்ளனர். இதில் குறிப்பாக […]
ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் நம்பிக்கை நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக திறந்து கொண்டு இருப்பவர் நடராஜன். அவர் கடந்த சீசனில் ஏராளமான ஏக்கர் பந்துகளை வீசி எதிரணி பேட்ஸ்மேன்கள் அனைவரையும் திக்குமுக்காட செய்தவர். அதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று தொடர்களிலும் அறிமுகமானார். அதன்பிறகு அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் காத்திருந்தன. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 3 போட்டிகளில் விளையாடியுள்ளது. மூன்று போட்டிகளிலும் நடராஜன் இடம்பெறவில்லை. அவருக்கு லேசான காயம் ஏற்பட்டதால் விளையாடவில்லை என அணி நிர்வாகம் தெரிவித்தது. இந்நிலையில் […]
தமிழகத்தை சேர்ந்த ஷாருக்கான் ஐபிஎல் ஏலத்தில் பஞ்சாப் அணிக்காக ரூ.5.25 கோடிக்கு ஏலம் எடுக்கபட்டுள்ளார். சென்னையில் 14வது ஐபிஎல் சீசனுக்கான ஏலம் இன்று தொடங்கியது. ஐபிஎல் தொடரில் பங்கேற்ற இந்திய அணியில் இடம் பிடித்து சாதனை படைத்த தமிழக வீரர் நடராஜனுக்கு ஐபிஎல் நிர்வாகக் குழுத் தலைவர் பிரிஜேஸ் படேல் புகழாரம் தெரிவித்துள்ளார். நடராஜனை போலவே வீரர்களை உருவாக்க உள்ளதாக பெருமிதம் தெரிவித்தனர். இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த ஷாருக்கானை ரூ.5.25 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. […]
இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த வீரரான நடராஜன் விஜய் ஹசாரே தொடரில் பங்கேற்பார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த வீரரான நடராஜன் ஆஸ்திரேலிய தொடரில் தன் அபார திறமையை வெளிப்படுத்தி அசத்தியிருந்தார். அதன் பின்பு இங்கிலாந்திற்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் இவர் இந்திய அணிக்கு மீண்டும் எப்போது திரும்புவார் என்று எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்நிலையில் விஜய் ஹசாரே உள்ளூர் தொடரில் […]
தமிழகத்தை சேர்ந்த வீரர் வாஷிங்டன் சுந்தர் பிரிஸ்பேன் டெஸ்டில் அபாரமாக விளையாடியது குறித்து நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். தமிழகத்தை சேர்ந்த இளம்வீரரான வாஷிங்டன் சுந்தர், பிரிஸ்பேன் டெஸ்டில் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் இது தனக்கு மிகவும் சிறந்த நாளாகும் இது எப்போதும் என் நினைவில் இருக்கும் என்று கூறியுள்ளார். பிரிஸ்பேன் டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்தியா 186 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து பரிதாபகரமான நிலையில் இருந்தது. அதன் பின்பு 7-வது விக்கெட்டுக்கு வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர் […]
இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழக வீரர் நடராஜனுக்கு மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய அணியில் விளையாடி கொண்டிருந்த வருண் சக்கரவர்த்தி என்பவர் காயம் ஏற்பட்டதால் டி20 தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதனால் அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் சேலம் சின்னம்பட்டி பகுதியில் மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். மேலும் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வந்துள்ளார். அதுமட்டுமன்றி துல்லியமான யார்க்கர், தரமான பந்துவீச்சு மூலமாக அனைவரையும் […]
சீன தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் பழனியின் உடல் ராணுவ விமானம் மூலம் இன்று மதுரை வரும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா – சீனா எல்லை பகுதியான லடாக்கில் கடந்த சில நாட்களாக பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. எல்லையில் சீனா தனது படைகளை குவித்தது, இதற்கு கண்டனம் தெரிவித்த இந்தியா பதிலுக்கு தங்கள் படையையும் அதிகரித்தது. இந்த நிலையில் இரு நாடுகளின் ராணுவ தலைமை தளபதிகளுடன் எல்லையில், சுஷுல் – மோல்டோ பகுதியில் பேச்சு […]
ஜம்மு-காஷ்மீரில் வீரமரணம் அடைந்த தமிழகத்தை சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் சந்திரசேகர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்குவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதாக தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஹந்த்வாரா மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பயங்கரவாதிகள் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் மூன்று வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அதேவேளையில் பயங்கரவாதி ஒருவரும் சுட்டு வீழ்த்தப்பட்டார். சம்பவ இடத்திற்கு கூடுதல் வீரர்களை […]