தமிழகத்தில் 3ஆம் வகுப்பு மாணவர்கள் பாதி பேருக்கு தமிழ் படிக்க தெரியவில்லை என்பது தேசிய கல்வி ஆராய்ச்சி மையம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. சமீபத்தில் நாடு முழுவதும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் ஆய்வு ஒன்றை நடத்தியது. 86,000 மாணவர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் தமிழகத்தில் 336 பள்ளிகளை சேர்ந்த மூன்றாம் வகுப்பு மாணவர்கள் 2937 பேர் கலந்து கொண்டனர். இந்த ஆய்வில் தமிழகத்தில் உள்ள மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பாதி பேருக்கு […]
Tag: #தமிழ்
பிரபல தொலைக்காட்சியில் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதுவரை பிக் பாஸ் சீசன் 5 நடைபெற்று முடிந்ததுள்ளது. தற்போது பிக் பாஸ் சீசன் 6 தொடக்க நிகழ்ச்சி வருகின்ற அக்டோபர் 9 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு பிரம்மாண்டமான வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி நடைபெறவிருக்கும் வீட்டின் புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த சீசன் பிக் பாஸ் வீடு முற்றிலும் மாறாக ரசிகர்களை கவரக்கூடிய […]
தமிழக முதலமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழக சட்டசபையில் வளர்ச்சி துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் வசிக்கும் தமிழர்களுக்கு தமிழ் கற்பிக்க தமிழ் பரப்புரை கழகம் உருவாக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இதற்கான தொடக்க விழா நேற்று அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கில் நடைபெற்றது. இதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார். உயர்கல்வி அமைச்சர் பொன்முடி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தகவல் […]
நடிகர் ராஜ்கிரனின் வளர்ப்பு மகள் பிரியா வீட்டை விட்டு வெளியேறிய சீரியல் நடிகர் முனீஸ் ராஜாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் தனது மகளுக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும், தனது பெயரை பயன்படுத்தினால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் எனவும் ராஜ்கிரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். நடிகர் ராஜ்கிரண் மகளுக்கும், நாதஸ்வரம் நாடகத்தில் நடித்து வந்த நகைச்சுவை நடிகர் முனிஷ் ராஜா என்பவருக்கும் காதல் திருமணம் நடந்து விட்டதாகவும், இந்த திருமணத்திற்கு […]
அவ்வபோது சில சர்ச்சைகளில் சேர்க்கும் மடம் என்று சொன்னால் அது மதுரை ஆதீனம். சமீப காலமாக அரசியல் களங்களில் ஆதீனங்களின் கருத்து பெரும் பங்கு வகித்து வருகிறது. தமிழ் வேத ஆகம பயிற்சி நிறைவு விழா என்று சிவகங்கை மாவட்டத்தின் திருப்பத்தூரில் நடைபெற்றுள்ளது. அந்த விழாவில் மதுரை ஆதீனம் கலந்து கொண்டு பேசியுள்ளார். தமிழர் வீடுகளில் கூட தமிழில் பூஜை நடப்பதில்லை என தெரிவித்துள்ளார். அந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய மதுரை ஆதீனம் தமிழ் தமிழ் […]
அமலாபால் நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அமலாபால். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் விஜய், சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் சொல்லும் அளவிற்கு வசூலை பெற்றது. இதனையடுத்து, இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் இவர் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு […]
பிற மொழி திணிப்பு என்ற வார்த்தைக்கு இடமில்லை எ தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். நாகர்கோவிலுக்கு வந்த புதுச்சேரி கர்வனர் தமிழிசை சொந்தர்ராஜன் நிருபர்களிடம் பேசியபோது, குமரி கடற்கரையில் நடைபெறும் பவுர்ணமி தீப ஆரத்தி நிகழ்ச்சி மிகவும் சிறப்பு பெற்றது. நதிகள் மற்றும் கடல் போன்ற நீர் நிலைகளுக்கு ஆரத்தி எடுப்பது தமிழர்களின் பண்டைய கால கலாச்சார முறையாகும். மேலும் அது நாம் நீர்நிலைகளுக்கு நன்றி கூறி மரியாதை செலுத்தும் விதமாக அமைகின்றது. இந்த நிகழ்வுகள் நமக்கு நினைவு […]
தமிழுக்கு தலைகுனிவு ஏற்பட்டால் அதனை புதுச்சேரி அரசு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் கம்பன் விழா நடைபெற்றது. இதில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன், உச்சநீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவின் போது பேசிய தமிழிசை சௌந்தர்ராஜன் “உச்சநீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் மேடை ஏற ஏற உச்சத்தை பெறுவார். தற்போது உள்ள காலகட்டத்தில் திரைப்படங்கள் வெளியான போது கூட மூன்று நாட்கள் அரங்குகள் […]
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணாவுக்கு பல்வேறு விவகாரங்களை நடைமுறைப்படுத்தக் கோரி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது: “தமிழகத்தில் உச்சநீதிமன்ற கிளை அமைக்க வேண்டும். சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழை பயன்படுத்துவது பொருத்தமானதாக இருக்கும் . அதனால் உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும். உச்ச நீதிமன்ற அமர்வில் அனைத்து மாநிலங்களுக்கும் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் வேண்டும். நீதிபதிகளை […]
குழந்தைகளை தமிழில் படிக்க வையுங்கள் என்று இயக்குனர் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். நம் குழந்தைச் செல்வங்களை தமிழக அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிற்றுவித்து தமிழ் மொழியை பாதுகாக்க வேண்டும் என்று இயக்குனர் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: ” ‘என் இனிய தமிழ் மக்களே நம் குழந்தை செல்வங்களை தொடக்கப் பள்ளியில் இருந்து உயர்கல்விவரை தமிழக அரசு பள்ளி, கல்லூரிகளில் கல்வி பயிற்றுவித்து அரசு வேலைவாய்ப்புகளிலும் ஆட்சி, அதிகார மையங்களிலும் […]
தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே உறுதிமொழி ஏற்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மதுரை மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் சீருடை அணிந்து பின்னர் ஏற்றுக்கொள்ளும் வழக்கமான உறுதிமொழிக்கு பதிலாக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட சமஸ்கிருத மகரிஷி சரக் சப்த் உறுதிமொழியை வாசிக்க இதர மாணவர்கள் தொடர்ந்து உறுதிமொழியை ஏற்றனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்தினவேல் காத்திருப்பு […]
தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு ஆவணங்களில் பெயர் எழுதுபவர்கள் இனிசியலை தமிழில் எழுத வேண்டும் என்ற அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இனி பள்ளி, கல்லூரி மற்றும் அரசு ஆவணங்களில் பெயர் எழுதுபவர்கள் தங்கள் பெயருக்கு முன்னெழுத்து அதாவது இனிசியல் எழுதும் போது அதனை தமிழில் எழுத வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. மாண்புமிகு முதலமைச்சர் முதல் கடைநிலை ஊழியர்கள் அனைத்து அலுவலர் பணியாளர்கள் தமிழிலேயே கையொப்பமிட வேண்டும் எனவும் அதில் இனிசியல்-ஐ தமிழில் எழுதப்பட வேண்டும் ஏற்கனவே […]
உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு சீனாவில் தமிழ் பயிலும் மாணவிகள் சிலர் தமிழ் மொழியில் வாசகங்களை எழுதி கையில் ஏந்தியபடி தமிழ்மொழிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இன்று உலக தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது. மேலும் சீனாவில் உள்ள யூனான் பல்கலைக்கழக மாணவிகள் தமிழ் மொழிக்கு வாழ்த்து தெரிவித்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். இந்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உலகம் எங்கும் தமிழ் மணம் கமழ்ந்து கொண்டிருக்கிறது. இதனால் சீன நாட்டில் தமிழ் பரப்பும் முனைப்போடு கடந்த 2019-ஆம் ஆண்டு […]
தமிழ்நாடு மின் வாரியத்தில் உதவி பொறியாளர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு நேர்முக மற்றும் எழுத்து தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அதில் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் அடங்குவர். மின் வாரிய விதியின்படி, பிளஸ்-2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் மொழியை ஒரு பாடமாக படித்து தேர்ச்சிப் பெற்றவர்கள் மட்டுமே பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். ஆனால் பணிக்கு தேர்வானவர்கள் தமிழ் பாடத்தை படிக்காமல் இருந்திருந்தால் இரண்டு வருடங்களுக்குள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் […]
இந்தியன் வங்கி அதிகாரிகளுக்கு தமிழ் கற்று கொடுப்பதற்காக சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து “கம்யூனிகேட்டிவ் தமிழ்” என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக நாட்டின் பிற பகுதியில் இருந்து தமிழகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்படும் அதிகாரிகள் தமிழை கற்றுக்கொண்டு வாடிக்கையாளர்களுக்கு உரிய சேவை வழங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சியாக ஒளிபரப்பப்பட்டு வருவது பிக் பாஸ். நான்கு சீசன்களை முடித்து தற்போது ஐந்தாவது சீசனின் பைனலை எட்டியுள்ளது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொருவராக வெளியேறி 5 பேர் இறுதிகட்ட போட்டியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில் யார் டைட்டிலை தட்டி செல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்த நிலையில் ராஜு ஜெயமோகன் வெற்றியாளராக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. பிக் பாஸ் சீசன் 5-ன் டைட்டில் மற்றும் ரூபாய் 50 லட்சம் பரிசுத்தொகையை […]
தமிழகத்தில் புதிதாக 11 மருத்துவக் கல்லூரிகளை காணொலி காட்சி வாயிலாக திறந்துவைக்கும் நிகழ்ச்சியில், பிரதமர் மோடி தை பிறந்தால் வழி பிறக்கும் என்று தமிழில் பொங்கல் வாழ்த்துச் சொல்லி, உரையாற்றினார். மருத்துவக் கல்லூரிகள் திறக்கும் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி ஒரே நாளில் ஒரே மாநிலத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்படுவது தமிழ்நாட்டில்தான். தேசியக் கல்விக் கொள்கையில் தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் உத்தரப்பிரதேசத்தில் ஒரே நாளில் 9 மருத்துவக் கல்லூரிகளை […]
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று தற்போது கதாநாயகியாக தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் வாணிபோஜன். அருண் இயக்கத்தில் பிக்பாஸ் கவின் கதாநாயகனாக நடிக்கும் ஊர்க்குருவி படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் வெப்சீரிஸ் நடித்து வரும் வாணி போஜன் கடைசியாக ஜெய்யுடன் இணைந்து ட்ரிபிள்ஸ் வெப் சீரிஸில் நடித்திருந்தார். தொடர்ந்து இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் ஏவிஎம் தயாரிப்பில் அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்திலும் நடிக்கவிருக்கிறார். அதன்படி வாணி போஜன் நடிக்கும் புதிய படத்தின் […]
தமிழகத்தில் நடத்தப்படும் அனைத்து தேர்வுகளிலும் தமிழில் தேர்வு எழுதி 40 மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே மற்ற தேர்வுகள் எழுத முடியும் என்று சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு பலரும் வரவேற்பளித்துள்ளனர். தமிழக பணிகளில் வடமாநிலத்தவர்கள் அதிகம் சேர்வதாக புகார் எழுந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, கல்வியில் மற்ற மாநிலங்களைவிட தமிழகம் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளது. தமிழகத்தில் அரசு பணியில் சேருபவர்களுக்கு கட்டாயம் […]
தமிழகத்தில் இயங்கி வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இந்தி பயிற்று மொழியாக உள்ளது. இலவச கல்வி என்ற பெயரில் ஒன்றிய அரசு இந்தி மற்றும் சமஸ்கிருத மொழியை கட்டாயமாக்குவது போல தெரிகிறது. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பயிலும் 95 விழுக்காடு மாணவர்கள் இந்தி அல்லது சமஸ்கிருதம் தெரியாதவர்கள். அவர்களுக்கு சமஸ்கிருத பாடத்தை கட்டாயமாக்குவது அநீதியானது. எனவே தமிழகத்தில் இயங்கும் ஒன்றிய அரசின் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் தமிழை கட்டாயப்பாடமாக்கவும், மொழியாக்கவும் உத்தரவிட வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் […]
இந்தி அல்லது ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.. தமிழ்நாட்டைச் சேர்ந்த விகாஷ் என்ற இளைஞர் சொமேட்டோவில் ஆர்டர் செய்த உணவை முழுமையாக டெலிவரி செய்யப்படாததால் வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகி பணத்தை திரும்பக் கேட்டபோது, அந்த நிறுவன முகவர் இந்தியாவின் தேசிய மொழி இந்தி அதனை அனைவரும் தெரிந்து வைத்திருப்பது அவசியம்.. இந்தி தெரிந்தவர்களுக்கு மட்டும் இனி விற்பனை செய்வோம்.. இந்தி மொழி கொஞ்சமாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும் என […]
பிரபல நடிகை ராஷி கண்ணா தமிழ் பேச தீவிரமாக கற்று வருகிறேன் என்று கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான இமைக்கா நொடிகள், அடங்கமறு, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ராஷி கண்ணா. இப்படங்களை தொடர்ந்து இவர் தற்போது அரண்மனை மூன்றாம் பாகத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் இப்படத்தில் நடித்த ஒரு சில அனுபவங்களை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, “இந்த படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பளித்த சுந்தர் சி, […]
தமிழில் பெயர் எழுதும் பொழுது முன் எழுத்தையும் தமிழில் எழுதும் நடைமுறையை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 13-ம் தேதி தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகின்றது. இந்த கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டிருந்த பட்ஜெட் தொடர்பான விவாதம் முடிவடைந்த நிலையில், மானியக் கோரிக்கைகள் தொடர்பான விவாதங்கள் சட்டப்பேரவையில் நடைபெற்றது. இதில் தொழில்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை தொடர்பான கேள்விகளுக்கு அமைச்சர் தங்கம்தென்னரசு பதில் கூறினார். சட்டப்பேரவையில் […]
தமிழகத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 13-ம் தேதி தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகின்றது. இந்த கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டிருந்த பட்ஜெட் தொடர்பான விவாதம் முடிவடைந்த நிலையில், மானியக் கோரிக்கைகள் தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றது. இன்று தொழில்துறை, தமிழ் வளர்ச்சித் துறை தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றது. இதில் வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் தமது தமிழ்மொழியை கற்பதற்காக ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். அயல்நாட்டு மற்றும் வெளி மாநிலங்களில் வாழும் […]
பிரேமம் திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் சாய் பல்லவி. இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழ் தெலுங்கு மலையாளம் என அனைத்து மொழிகளிலும் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது தெலுங்கில் அதிக படங்களில் நடித்து வருகிறார். மேலும் ட்ரீம் வாரியர் நிறுவன தயாரிப்பில் தமிழில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தின் கதை கதாநாயகியை மையமாகக் கொண்டு உருவாக்கப்படும் படம் என கூறப்படுகின்றது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று […]
டெல்லியில் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கியது. இதையடுத்து மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த மக்களவை கூட்டத்தொடரில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர். அதன்படி கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் உள்ளிட்ட 4 பேருக்கு சபாநாயகர் இன்று பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதனிடையே மாநிலங்களவை பிற்பகல் 12.24 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இந்த மக்களவை கூட்டத்தொடரில் கன்னியாகுமரி மக்களவை தொகுதி உறுப்பினர் விஜய்வசந்த் தமிழில் பதவியேற்றுக் […]
தமிழ்நாட்டில் தமிழை கற்பிக்காத கேந்திர வித்யாலயா எதற்கு? என்று வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: பாஜக அரசு இந்தியாவில் ஒற்றை ஆட்சியை நிலை நிறுத்த அனைத்து வழிகளிலும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அதில் ஒன்றுதான் சமஸ்கிருத மொழிக்கு உயிர் கொடுக்கும் இந்த திட்டம். இந்திய மக்கள் தொகையில் வெறும் 24 ஆயிரம் பேர் மட்டுமே தற்போது சமஸ்கிருத மொழியை பேசுகின்றனர். மீதமுள்ள 135 கோடி மக்களுக்கு இந்த மொழியை திணிப்பதற்கு அரசு முயற்சி செய்து […]
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. திமுக ஆட்சி அமைத்து ஒரு மாதமாக நிறைவடைய உள்ள நிலையில், 16-வது சட்டமன்றத்திற்கான முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கப்பட்டது. கொரோனா காரணமாக கலைவாணர் அரங்கத்தில் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. முன்னதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை , சபாநாயகர் மு.அப்பாவு வரவேற்றார். இதையடுத்து ஆளுநர் தனது உரையைத் தொடங்கினார். முதலில் தமிழ் மொழி மிகவும் இனிமையான மொழி என்று […]
தேசிய கல்விக் கொள்கை குறித்த விவரங்கள் மாற்று மொழிகளில் வெளியிடப்பட்டதில் தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. புதிய தேசிய கல்வி கொள்கை வெளியிடப்பட்டு அதில் பரிந்துரைகளை அறிமுகப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் புதிய தேசிய கல்விக் கொள்கையின் விபரங்கள் மாநில மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளன. 17 மொழிகளில் மொழிபெயர்ப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதில், தமிழ் இடம் பெறவில்லை. இந்த நிலையில் கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெர்மனியிலுள்ள பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட நிதி பற்றாக்குறையால் தமிழ் துறை மூடப்படும் அபாயத்தில் உள்ளது. ஜெர்மனி கொலோன் பல்கலைக்கழகத்தில் 1963 ஆம் ஆண்டு தமிழ்த்துறை கிளாஸ் லுட்விக் ஜானர்ட் என்பவரால் துவங்கப்பட்டதில் தற்போது 12 மாணவர்கள் ,மட்டுமே பயின்று வருகிறார்கள். உலகம் முழுவதும் 2018ஆம் ஆண்டு ஏற்பட்ட நிதி பிரச்சனையில் சிக்கிய இந்தப் பல்கலைக்கழகதில் தற்போதும் நிதி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழ்த் துறையே மூடும் அபாயம் உலக தமிழர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கடும் நிதி சுமையால் […]
யாஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் கேஜிஎஃப் 2 படம் ரிலீஸ் அன்று விடுமுறை அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான படம் ‘கேஜிஎஃப்’. இப்படம் பிரம்மாண்டமான வசூல் சாதனை செய்தது. தற்போது இந்த படத்தின் 2வது பாகம் உருவாகி வருகிறது. இதில் யாஷுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ், ரவீனா தண்டன் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். […]
தமிழ்நாட்டில் பரப்புரையை மேற்கொண்ட ராகுல் காந்தி,பிரதமர் மோடி தமிழில் பேசி தமிழக மக்களை ஏமாற்றி வருகிறார் என்று கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அனைத்து கட்சியினரும் தங்களது பரப்புரையை செய்து வருகின்றனர். இந்நிலையில் ராகுல்காந்தி இன்று திருப்பூர் – ஈரோடு மாவட்ட எல்லையில் பரப்புரை செய்தார். அப்போது அவர் பொதுமக்களிடம் கூறியதாவது, எனக்கு தமிழ் தெரியாது என்றாலும் நான் தமிழக மக்கள் மீது மிகவும் நம்பிக்கை வைத்துள்ளேன். நானும் ஒரு தமிழன் தான். ஆனால், பிரதமர் மோடி […]
அஞ்சல் துறை தேர்வு இனி தமிழில் எழுதலாம் என்று அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. தமிழகத்தில் அஞ்சல் துறை தேர்வு தமிழில் இனி எழுதலாம் என மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது சமீபத்தில் ஆங்கிலம் இந்தி மொழிகளில் மட்டும் தேர்வு எழுத அறிவிப்பாணை வெளியிட்ட நிலையில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதற்கு பல கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து தேர்வை தமிழில் எழுத வேண்டும் என்று மதுரை எம்பி சு. வெங்கடேசன் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தார். […]
விக்ரம் பிரபு பிறந்தநாளை முன்னிட்டு அவர் பற்றிய சில தகவல்கள் தமிழ் சினிமாவில் கும்கி திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் விக்ரம் பிரபு. சிவாஜி கணேசனின் பேரனும் பிரபுவின் மகனுமான இவர் லண்டனில் பட்டப்படிப்பு பயின்றுள்ளார். பிரபு நடித்த சந்திரமுகி படப்பிடிப்பின்போது தந்தைக்கு உதவியாக இருப்பதற்காக விக்ரம்பிரபு சென்னை திரும்பியுள்ளார். அதன்பின் சர்வம் திரைப்படத்தில் தயாரிப்பாளர் விஷ்ணுவர்தனுக்கு உதவி தயாரிப்பாளராக இவர் பணியாற்றினார். அதன் பின்னர் தான் பிரபு சாலமன் இயக்கத்தில் லிங்குசாமியின் தயாரிப்பில் வெளிவந்த கும்கி […]
மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் விவசாயி சங்கங்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தைத் சுட்டிக்காட்டி அனைவரும் இதை படிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி டிவிட்டரில் தமிழில் பதிவிட்டுள்ளார். புதிய விவசாய சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று 23 ஆவது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் இந்த போராட்டத்தில் சிங்கு, டிகிரி, காசிப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நேற்றும் இன்றும் டிராபிக் அதிகமாக […]
ஆஸ்திரேலியாவில் இந்திய அணிக்காக விளையாடிய நடராஜன், வர்ணனையாளரிடம் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. ஆஸ்திரேலியாவில் முகாமிட்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்ததோடு, தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அற்புதமாக பந்துவீசி வந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் யார்க்கர் நடராஜன் இந்திய அணி டி20 தொடரை வெல்ல பெரிதளவில் கை கொடுத்துள்ளார். இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய பவுலிங் யூனியனில் புதிய நட்சத்திரமாக நடராஜன் இடம்பிடித்துள்ளார். மூன்றாவது டி20 ஆட்டத்திற்கு பிறகு […]
தமிழ் மொழியில் தான் இனி குடமுழுக்கு விழா நடத்தப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதுபோன்ற வழக்குகள் இனி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டால் இந்து அறநிலையத்துறைக்கு அபராதம் விதிக்கப்படும் என்று நீதிமன்றம் எச்சரித்துள்ளது. இந்து அறநிலை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் தமிழில் தான் இனி குடமுழுக்கு விழா நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளது. இதனை பின்பற்றவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பாக எடுத்துக்கொண்டு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று […]
தயாரிப்பாளர் தரப்பில் நடிகைகளின் புதிய சம்பளப் பட்டியல் தயாராக இருப்பதாகவும் இதில் நயன்தாரா முதல் இடம் பிடித்து இருப்பதாகக் கூறப்படுகின்றது. நடிகைகளின் சம்பளமானது படத்துக்குப்படம் வேறுபடுகின்றது. அதாவது படம் சூப்பர் ஹிட் ஆனால் நடிகைகலாகவே சம்பளத்தை ஏற்றிக்கொள்வதும் இதுவே படம் பிளாப் ஆனால் தயாரிப்பாளர்கள் பார்த்து குறைந்து விடுவதுமாக இருந்து வருகின்றது. தற்போது லாக்டௌன்க்கு பின் மீண்டும் படப்பிடிப்புகள் தொடங்கி உள்ள நிலையில் நடிகைகளின் புதிய சம்பள பட்டியல் தயாரிப்பாளர்கள் தரப்பில் தயாராகிக் இருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது. […]
பட்டய படிப்புக்கான தகுதியில் தமிழ் மொழியையும் சேர்க்குமாறு மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி எழுதிய கடிதத்தையடுத்து மத்திய அரசு தமிழ் மொழியினை பட்டயப் படிப்புக்கான தகுதிப் பட்டியலில் தற்போது சேர்த்துள்ளது. உத்திரபிரதேசம் மாநிலத்தில் மத்திய அரசின் தொல்லியல் துறை கல்லூரி இயங்கி வருகின்றது. இக்கல்லூரியில் தொல்லியல் துறை சார்ந்த இரண்டு ஆண்டுகாலம் முதுகலை பட்டயப் படிப்புக்கான அறிவிப்பு சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. ஆனால் அக்கல்லூரியில் தமிழ் மொழி தவிர்த்து வேறு சில மொழிகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் […]
தமிழகத்தில் மத்திய அரசு நடத்திக்கொண்டிருக்கும் புதிர் போட்டியில் தமிழ் புறக்கணிக்கப்பட்டு வருவதாக திமுக எம்பி கனிமொழி கூறியுள்ளார். திமுக எம்பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழகத்தில் மத்திய அரசு நிறுவனம் ஒரு புதிர் போட்டியை நடத்திக் கொண்டிருக்கிறது. அதில் தமிழ் புறக்கணிக்கப்பட்டு வருவது கடும் கண்டனத்திற்கு உரியது. தமிழ் மற்றும் ஆங்கிலம் தெரியாமல் தாய்மொழி மட்டுமே தெரிந்த குழந்தைகள் அதிக அளவில் இருப்பதால், இப்போட்டி அனைத்து மாநிலங்களிலும் நடத்தப்பட வேண்டும்”என்று அவர் […]
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதில் 34 ஆண்டுகளுக்கு பிறகு கல்விக் கொள்கையில் பல்வேறு சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அனைத்து மாநிலங்களிலும் மும்மொழி திட்டம் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசியல் ரீதியில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் புதிய கல்வி கொள்கை குறித்து கவிஞ்சர் வைரமுத்து, அண்ணா – கலைஞர் இறுதி செய்ததும், எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா […]
நடிகர் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா நடித்து தமிழில் வசூலை வாரி குவித்த படம் பாகுபலி. அடுத்தடுத்து இரண்டு பாகங்களாக வெளிவந்த இந்த படத்தில் பேசப்பட்ட கதாபாத்திரம்தான் கட்டப்பா. நடிகர் சத்யராஜ் நடித்த இந்த கதாபாத்திரம் இப்படத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்நிலையில் கட்டப்பா கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் சஞ்சய் தத்தை தான் அணுகியதாகவும், சஞ்சய் தத் சிறையில் இருந்ததால் அது சாத்தியமில்லை என தெரிந்தவுடன் சாத்தியராஜை தேர்வு செய்ததாகவும் பாகுபலி படத்தின் கதையை ஆசிரியரும், ராஜமவுலியின் தந்தையுமான […]
காலத்தை வென்ற கவிஞர் கண்ணதாசன் கடைசியாக எழுதிய கவிதை பலரும் அறியாதது. அமெரிக்காவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கவிஞர் கண்ணதாசனை அவரது தமிழ் நண்பர் பார்க்க வந்தபோதே உடன் குழந்தைகளையும் அழைத்து வந்துள்ளார். நண்பரின் குழந்தைகளுடன் கண்ணதாசன் பேச முயற்சிக்க ஆனால் குழந்தைகளுக்கு தமிழ் தெரியவில்லை. அப்போது உடனடியாக தாள் ஒன்றை எடுத்து அதில் நான்கு வரி கவிதை எழுதி அவர்களிடம் கொடுத்து உள்ளார் கண்ணதாசன். அதுவே அவர் எழுதிய கடைசி கவிதை. “மனிதரில் ஒன்றுபட்டுச் சேர்ந்திருப்பீர் – […]
தமிழ்நாட்டில் இருக்கும் ஊர்களின் பெயரை தமிழ் உச்சரிப்பை போன்றே எழுத அரசு ஆணை பிறப்பித்துள்ளது தமிழ்நாட்டில் இருக்கும் ஊர்களை ஆங்கிலத்தில் எழுதுவதற்கு ஏதுவாக ஊர்களின் பெயர்கள் மாற்றியமைக்கப்பட்டன. எடுத்துக்காட்டாக தூத்துக்குடி என்ற ஊரின் பெயர் ஆங்கிலத்தில் Tuticorin என எழுதப்பட்டது ஆனால் இனி தமிழ்நாட்டில் இருக்கும் ஊர்களின் பெயரை தமிழ் உச்சரிப்பை போன்று ஆங்கிலத்தில் எழுதலாம் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக எழும்பூரை எக்மோர் என கூறி வந்த நிலையில் இனி எழும்பூர் என்று எழுதுவதற்கு உத்தரவு […]
முன்னாள் மலையாள நடிகையான நவ்யா நாயர் தனது சினிமா அனுபவங்களை தனியார் இணையத்திடம் பகிர்ந்துள்ளார் மலையாள திரையுலகில் இஷ்டம் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான நவ்யா நாயர் தமிழில் அழகிய தீயே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து ராமன் தேடிய சீதை மாயக்கண்ணாடி போன்ற படங்களில் நடித்து பிரபலமான அவர் சந்தோஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டு ஆண் குழந்தை ஒன்றையும் பெற்றெடுத்தார். பின்னர் குழந்தை குடும்பம் என இருந்தபடியால் சினிமாவை விட்டு விலகி இருந்தார். […]
பிரண்ட்ஷிப் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகிறார் பிரபல இந்திய கிரிக்கெட்டர் ஹர்பஜன் சிங். ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக களமிறங்கிய ஹர்பஜன், தமிழில் ட்வீட் செய்வது, தமிழ்நாட்டில் நடக்கும் பிரச்னைகளுக்கு குரல் கொடுப்பது என தமிழ் மக்கள் மனதில் இடம்பிடித்தார். தற்போது தமிழ் திரையுலகில் நாயகனாக அறிமுகமாகிறார். முன்னதாக சந்தானத்தின் ‘டிக்கிலோனா’ மற்றும் வெப் சீரிஸ் ஒன்றில் நடித்துள்ள ஹர்பஜன், ‘அக்னி தேவி’ படத்தை இயக்கிய ஜேபிஆர் – சாம் […]