தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் நவம்பர் 30-ஆம் தேதி வரை அமல்படுத்தப்படும் என்று இரண்டு தினங்களுக்கு முன்பு தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. தமிழகத்தில் கல்வி நிலையங்கள் திறக்க அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 16ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் செயல்படலாம் என தமிழக அரசு உத்தரவிட்டதை அடுத்து கல்வி நிலையங்கள் திறப்பதற்கான முன் ஏற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு கடந்த வாரம் நிறைவடைந்தது நிலையில் […]
Tag: #தமிழ்நாடு #government
தமிழகத்தில் தியேட்டர்கள் திறப்பு குறித்து நாளை முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். கோவில்பட்டியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தமிழக முதல்வர் கடந்த 28 ஆம் தேதி திரையரங்கு திறப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை மாவட்ட ஆட்சியருடன் காணொலி காட்சி மூலமாக ஆலோசனை நடத்தியுள்ளார். அதன் பிறகு மருத்துவ குழுவினரிடமும் ஆலோசனை நடத்தப்பட்டு இது தொடர்பான அறிக்கையை முதல்வர் பெற்றுள்ளார். தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கலாமா? […]
கொரோனா பேரிடரால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கல்வி நிலையங்கள் மூடப்பட்டன இதனிடையே மாணவர்களின் கல்வி பாதிக்கக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு கல்வி சார்ந்த நடவடிக்கைகளையும், உத்தரவையும் தமிழக அரசு பிறப்பித்தது. தேர்வு முடிவுகள் தொடங்கி மாணவர்கள் சேர்க்கை உள்ளிட்ட அடுத்தடுத்து பல்வேறு அறிவிப்புகள் வெளியாகும் நிலையில் தற்போது பள்ளி மாணவர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அக்டோபர் 23 முதல் நவம்பர் 6 வரை வேலை வாய்ப்பு பயிற்சித் துறையில் […]
தமிழகத்தில் பாஜக துணையின்றி சட்டத்தேர்தலில் எவரும் ஆட்சி அமைக்க இயலாது என பாஜக தேசியசெயலாளர் ஹெச். ராஜா பேட்டி அளித்துள்ளார். பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா நேற்று புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தவர் கோட்டையில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றார். அதன்பின் பத்திரிக்கையாளர்களிடம் அவர் கூறியதாவது, “தமிழ்நாடு முழுவதும் பாஜக வளர்ந்துகொண்டே வருகிறது. மொழிக் கொள்கையின் மூலம் பிரச்சினையை ஏற்படுத்தி சிலர் அதனை தடுக்க நினைக்கின்றனர். இதனால் நாட்டின் ஒற்றுமை பிளவுபடும். எனவே அதை […]