Categories
உலக செய்திகள்

“அடேங்கப்பா!”…. 30,000 கிமீ தூரமா?… கண்டம் விட்டு கண்டம் சென்று உணவு டெலிவரி…!!!

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் சிங்கப்பூரில் இருந்து அண்டார்டிகாவில் இருக்கும் ஒருவருக்கு உணவு டெலிவரி செய்வதற்காக 30,000 கிலோமீட்டர் தொலைவு கடந்து 4 கண்டங்கள் தாண்டி சென்றிருக்கிறார். சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த மானசா கோபால் என்ற பெண் சிங்கப்பூரில் உணவு டெலிவரி செய்யும் வேலையில் இருக்கிறார். இவர் அண்டார்டிகாவில் இருக்கும் ஒருவருக்கு உணவு டெலிவரி செய்வதற்காக 30,000 கிலோ மீட்டர் தொலைவு கடந்து சென்றதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இம்மாதம் ஐந்தாம் தேதி அன்று அவர் பதிவிட்ட […]

Categories
உலக செய்திகள்

தமிழ்ப்பெண்ணை மணந்த பிரான்ஸ் இளைஞர்…. தமிழ்முறைப்படி நடந்த திருமணம்…!!!

பிரான்ஸ் இளைஞர் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்ணை தமிழ் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்திருக்கிறார். தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் வசிக்கும் கந்தசாமி மற்றும் சுகந்தி என்ற தம்பதியின் மகளான கிருத்திகா, சிங்கப்பூரில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் தன்னுடன் பணிபுரியும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஆசானே ஒச்சோயிட் என்பவரை காதலித்துள்ளார். இதனை தொடர்ந்து இருவரும் தங்கள் பெற்றோர்களிடம் காதலை பற்றி கூறி அவர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்திருக்கிறார்கள். ஆசானே ஒச்சோயிட் மற்றும் அவரின் பெற்றோர்கள் தமிழ்நாட்டிற்கு […]

Categories
உலக செய்திகள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாஸ்! பிரபல நாட்டின் பிரதமருக்கு…. வாழ்த்திய தமிழ் பெண்….!!!!

கனடியப் பிரதமர் ஐஸ்டின் ட்ரூடோ கிறிஸ்துமஸ் தினதன்று தன்னுடைய 50-வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இதனையடுத்து அந்த நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சர் அனிதா ஆனந்த் பிரதமருக்கு வாழ்த்து கூறியுள்ளார். இதுபற்றி அனிதா ஆனந்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களுடன் பதிவிட்டுள்ளார். அனிதா ஆனந்த் ட்விட்டர் பதிவில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாஸ்! கனடியர்களுக்காக நாம் இணைந்து பணியாற்றுவது தொடர ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்த நாள் குடும்பத்துடன் இணைந்து அற்புதமான நாளாக இருந்திருக்கும் என நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் தமிழ் பெண் குளியலறையில்…. எரிந்த நிலையில் சடலமாக கிடந்த அதிர்ச்சி… உறவினர்கள் போராட்டம்!!

டெல்லியில் கள்ளக்குறிச்சியை சேர்ந்த தமிழ் பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி லஜ்பத் நகரில் அழகு நிலையம் நடத்தி வருபவரின் வீட்டில் வீட்டு வேலை செய்து வந்த கள்ளக்குறிச்சியை சேர்ந்த லட்சுமி (21) என்ற தமிழ்ப்பெண் மர்மமான முறையில் உயிரிழந்தார்.  அழகு நிலைய வீட்டின் குளியல் அறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். வேலை செய்து வருபவரின் வீட்டின் குளியல் அறையில், பாதி எரிந்த நிலையில் சடலமாக லட்சுமி கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. மேலும் […]

Categories

Tech |