Categories
சினிமா தமிழ் சினிமா

குட்டி ஏர்கிராப்டை தரையிறக்கிய அஜித்… வைரலான வீடியோ…

நடிகர் அஜித் குட்டி ஏர்கிராப்டை கவனமாக தரையிறக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. நடிகர் அஜித்குமாருக்கு நடிப்பை தாண்டியும் பைக் ரேஸ், டிரோன், குட்டி ஏர்கிராப்ட் தொழில்நுட்பம் போன்றவற்றில் ஆர்வம் உண்டு. ஊரடங்கு காலத்தில் நடிகர் அஜித் கவனத்துடன் செயல்பட்டு ரிமோட் மூலம் இயங்கும் குட்டி ஏர்கிராப்ட் தரையிறக்கும் வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் ரிமோட் மூலம் இயக்கப்படும் ஏர்கிராப்ட் ஒன்று தரையிறங்கும் இடத்தைவிட்டு விலகிச் சென்றது. அதை கவனத்துடனும், பொறுப்புடனும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஒற்றுமை என்பதே இல்லை…. தமிழ் திரையுலகம் குறித்து அமைச்சர் கருத்து…!!

தமிழ் திரையுலகில் ஒற்றுமை இல்லை என அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார் . தூத்துக்குடியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரான கடம்பூர் ராஜு நிருபர்களுக்கு பேட்டியளித்துள்ளார். திரையுலகில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து நிருபர்கள் கேட்டதற்கு அவர் கூறியதாவது ” திரையுலகினர்களுக்கு இடையே ஒற்றுமை இல்லை. நடிகர் சங்கத் தேர்தல் நடந்த போது ஒரு பிரிவினர் நீதிமன்றம் சென்றனர். அதுபோலவே தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் நடந்த போது ஒரு பிரிவினர் நீதிமன்றம் சென்றனர். தயாரிப்பாளர்கள் சங்கமாக இருந்தாலும், நடிகர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தமிழ் சினிமாவில் “அரசியல் வாரிசு”…. கஸ்தூரியின் அட்டகாசமான கருத்து….!!

நடிகை கஸ்தூரி தமிழ் திரையுலகின் வாரிசு அரசியல் குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் தற்கொலைக்குபின் வாரிசு அரசியல் சர்ச்சை தலைதூக்கி வருகிறது. நடிகை கங்கனா ரனாவத் உள்ளிட்ட பலர் கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றனர். இதற்கிடையில் சுஷாந்தின் வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வாரிசு அரசியல் குறித்து பாலிவுட்டில் பேச்சு எழுந்ததும், மத்திய திரையுலகிலும் வாரிசு அரசியல் குறித்து கருத்துக்களை வெளியிடத் தொடங்கினார். தமிழ் திரையுலகில் நடிகர் விஜய், சூர்யா உள்ளிட்டோர் மீது மீரா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடித்தது லக்… பிரபல நடிகருடன் ஜோடியாகும் சீரியல் நடிகை…!!

சின்னத்திரையில் கலக்கிய பிரபல நடிகை தற்போது வெள்ளித்திரையில் தொடர்ந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். வாணி போஜன் தெய்வமகள் போன்ற பிரபல நாடகங்களில் நடித்து, சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர். இவர் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே படம் செம்ம ஹிட் கொடுத்தது.இப்படம் தற்போது உலகத்திரைப்பட விழா வரைக்கும் செல்ல இருக்கிறது, இதனை அடுத்து வாணி போஜன் வைபவுடன் லாக்கப் என்ற படத்தில் நடித்தார். இந்த படம் தியேட்டரில் வெளியிடப்படாமல் தற்போது டிஜிட்டலில் வர இருக்கிறது. இதை தொடர்ந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“விஜய் ரசிகர்கள் என்னை கொன்று விடுவார்கள் என்று பயந்தேன்”- பிரபல நடிகர் ஓபன் டாக்…!!

பிரபல நடிகர் ஒருவர் விஜயின் புலி படத்திற்கு பிறகு அவரின் ரசிகர்கள் தன்னை கொன்றுவிடுவார்கள் என்று  பயந்ததாக கூறியுள்ளார். தமிழ் சினிமா உலகில் அதிகம் கொண்டாடும் நடிகர்களில் மிக முக்கியமானவர் விஜய். இவருக்கு என்று லட்ச்சக்கணக்கான ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இந்நிலையில் விஜய் தற்போது மாஸ்டர் படத்தின் ரிலிஸிற்காக தான் காத்துக் கொண்டு இருக்கிறார். விஜய்யின் ரசிகர்களும் அவருடைய படத்திற்காக காத்திருக்கின்றனர். விஜய் திரைப்பயணத்தில் பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் புலி. இந்தப் படம் மிகப்பெரிய தோல்வியை […]

Categories
கொரோனா சினிமா தமிழ் சினிமா

ஒன்றா..? இரண்டா…? என் தமிழை அதிகம் கூவிய ஆண் குயில்… கவிஞர் வைரமுத்து உருக்கம்….!!

எஸ்.பி.பி குறித்த உருக்கமான கவிதை ஒன்றை கவிஞர் வைரமுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். கொரோனா தொற்றால் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் திரையுலகினர்களுக்கும், ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் விரைவில் நலம் பெற வேண்டும் என திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஊரடங்கு முடிந்ததும் மீண்டும் படம் இயக்குவேன்- ஹிப்ஹாப் ஆதி…!

நடிகரும் பாடலாசிரியருமான ஹிப்ஹாப் ஆதி ஊரடங்கு முடிந்ததும் மீண்டும் படம் இயக்குவேன் என கூறியுள்ளார். 2012 ம் ஆண்டு வெளியான ஹிப்ஹாப் தமிழா இசை ஆல்பம் ரசிகர்கள் மத்தியில் பெறும் வரவேற்பு பெற்றது. அதன்பின் ஆதிக்கு திரைப்படங்களில் இசையமைக்க வாய்ப்புகள் குவிந்தன. இவர் ஆம்பள, தனி ஒருவன், கதகளி, கத்தி சண்டை, கலகலப்பு 2, இமைக்கா நொடிகள், ஆக்ஷன், கோமாளி உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் மீசைய முறுக்கு படத்தை இயக்கி கதாநாயகனாகவும் நடித்துள்ளார். நட்பே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நகைச்சுவை நடிகர் சந்திரபாபு பிறந்தநாள்…. கல்லறையில் இயக்குனர் மிஸ்கின் அஞ்சலி….!!

நேற்று நகைச்சுவை நடிகர் சந்திரபாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு இயக்குனர் மிஸ்கின் அவரின் கல்லறைக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். நேற்று பழம்பெரும் காமெடி நடிகரான சந்திரபாபுவின் பிறந்தநாள். ஆனால் அதைப்பற்றி பேசவோ, யோசிக்கவே யாருமில்லை. புகழின் உச்சியில் இருந்த சந்திரபாபு கடைசி காலத்தில் மருத்துவ செலவுக்கு கூட பணம் இல்லாமல் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரின் உடல் சாந்தோம் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால் தற்கொலை செய்ய முயன்றார். எம்.ஜி.ஆரை எதிர்த்து நின்றார். தன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பிச்சை” எடுத்து சோறு போடும் இளைஞன்…. நடிகர் லாரன்ஸ் எடுத்த முடிவு…!!

நடிகர் ராகவா லாரன்ஸ் ஆதரவற்ற இளைஞரின் செயலை சமூக வலைதளத்தில் பார்த்து ஒரு லட்சம் நிதியுதவி கொடுப்பதாக தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் மதுரையில் பிச்சை எடுத்து, தினமும் கிடைக்கும் 100 ரூபாயில் சாப்பிட்டது போக மீதி இருக்கும் பணத்தை சேர்த்து ஊரடங்கு சமயத்தில் நடமாடும் டீக்கடையை ஆரம்பித்துள்ளார். அதில் வரும் வருமானத்தை வைத்து தன்னைப்போல் ஆதரவற்ற ஏழைகளுக்கு தினமும் காலை, மாலை, இரவு என 30 உணவுப் பொட்டலங்களையும் தண்ணீரையும் கொடுத்து வருகிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“யார் இந்த குழந்தை”- வைரலாகும் விஜய் சேதுபதியின் புகைப்படம்…!!

நடிகர் விஜய் சேதுபதி குழந்தையை கொஞ்சும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் மட்டுமல்லாமல் வாழ்க்கையிலும் எதார்த்தத்தை காட்டுபவர். ஒரு கடும் பாதையை கடந்து சினிமா துறையில் உயரத்தை எட்டியுள்ளார். சவாலான கதாபாத்திரங்களையே எப்பொழுதும் தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். அப்படியோரு இயல்பான வீடியோகாட்சி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. ஊரடங்கு காலத்தில் தாடியும் மீசையுமாக இருக்கும் விஜய் சேதுபதியின் படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. சமூக பிரச்சனைகளுக்கு தயங்காமல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நான் ஒரு ஏலியன்” மீண்டும் ஆல்பம் பக்கம் திரும்பிய ஹிப் ஹாப் தமிழா ஆதி…!!

நடிகரும் இசையமைப்பாளருமான ஹிப்ஹாப் ஆதி தற்போது நான் ஒரு ஏலியன் என்ற ஆல்பத்தை இயக்கியுள்ளார்.   ஆதி ஹிப் ஹாப் சுயாதீன ஆல்பங்கள் வழியாக புகழ் பெற்றவர். சுந்தர் சி மூலம் “ஆம்பள” படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதன்பின் இன்று நேற்று நாளை , தனி ஒருவன், துருவா, அரண்மனை 2, கதகளி , கவன், இமைக்கா நொடிகள், ஆசான், கோமாளி போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார். மீசைய முறுக்கு படத்தின் மூலம் இயக்குனராகவும் நடிகராகவும் மாறினார். இவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நகைச்சுவை நடிகரின் மகன்… ஐ.ஏ.எஸ் தேர்ச்சி… !

பிரபல நகைச்சுவை நடிகரின் மகன் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்றுள்ளார். மத்திய அரசுத் துறையில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு மத்திய அரசு பணியாளர்கள் தேர்வாணையம் தேர்வுநடத்தி, தகுதி உடையவர்களை தேர்ந்தெடுத்து நியமனம் செய்கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஐ.பி.எல், ஐ.ஏ.எஸ் போன்ற 829 இடங்களுக்கு சிவில் சர்வீஸ் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பிப்ரவரி மாதம் நேர்காணல் நடைபெற்றது.   யு.பி.எஸ்.சி இதற்கான முடிவுகளை நேற்று வெளியிட்டது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஸ்டுப்பிட் கோவிட்” கோபத்தை வெளிப்படுத்திய மாளவிகா மோகனன்…!!

நடிகை மாளவிகா மோகனன் தனது பிறந்த நாளான இன்று “ஸ்டுப்பிட் கோவிட்” என்று கோபத்துடன் பதிவிட்டுள்ளார். நடிகை மாளவிகா மோகனன் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ படத்தில் சசிகுமாருக்கு மனைவியாக சிறிய கதாபாத்திரத்தில் நடித்தவர். தற்போது ‘மாஸ்டர்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து முடித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதமே ‘மாஸ்டர்’ படம் வெளியாகியிருக்க வேண்டும். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் படம் வெளியிடவில்லை. இப்படம் எப்போது வெளியாகும் என சொல்ல இயலாத நிலையில் உள்ளது. இதற்கிடையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சேதுராமனுக்கு ஆண் குழந்தை… அவரே பிறந்ததாக குடும்பத்தினர் நெகிழ்ச்சி…!!

மறைந்த நடிகர் சேதுராமனுக்கு ஆண் குழந்தை பிறந்ததையடுத்து அவரே பிறந்தகாக எண்ணி குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் டாக்டர் சேதுராமன் மாரடைப்பால் உயிர் இழந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இவர் “கண்ணா லட்டு தின்ன ஆசையா” படத்தில் நடித்து பிரபலமானவர். இவர் இறக்கும் போது இவரது மனைவி கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது என்பது குறிப்பிடதக்கது. இன்று டாக்டர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அவர் ஒரு சிட்டி ரோபோ” பிரபல நடிகரை புகழ்ந்த நடிகை சஞ்சனா…!!

நடிகை சஞ்சனா அவர் ஒரு சிட்டி ரோபோ போல என தனுஷை வியந்து பாராட்டியுள்ளார். நடிகை சஞ்சனா நடராஜன்திரையுலகிற்கு அறிமுகமாகி ஆறு வருடங்கள் ஆனாலும் அவரது கணக்கில் சில படங்கள் மட்டுமே உள்ளது. அதை பற்றி கவலை இல்லாமல் மாடலிங் உலகில் உற்சாகமாகத்தான் இருக்கிறார்.” என் பயணத்தை நான் மதிப்புள்ளதாக உணருகிறேன். வேறு பாதையில் நான் சென்றிருந்தால் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், தனுஷ் போன்றவர்களுடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்திருக்காது” என கூறும் சஞ்சனா, ஜகமே தந்திரம் படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் இணையும் தனுஷ்-ஹன்சிகா…. ஆர்வத்துடன் காத்திருக்கும் ரசிகர்கள்….!!

‘மஹா’ படத்தில் நடித்து வரும் ஹன்சிகா இதைத்தொடர்ந்து தனுஷுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என கூறப்படுகிறது. அறிமுகமான குறுகிய காலத்திலேயே விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் ஹன்சிகா. நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ள “மஹா” என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படம் இவருடைய 50 வது படம். இப்படத்தில் கௌரவ வேடத்தில் சிம்பு நடிக்கிறார். இதைத்தொடர்ந்து தனுஷுக்கு ஜோடியாக மித்ரன் ஜவஹர் இயக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நண்பர்கள் தினம்” வீடியோ காலில் வாழ்த்து சொன்ன தளபதி…. வைரலான புகைப்படம்….!!

நண்பர்கள் தினத்தை முன்னிட்டு தளபதி விஜய் தனது நண்பர்களுடன் வீடியோ கால் பேசிய புகைப்படம் வைரலாகி வருகிறது. தளபதி விஜய் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு பின் கொரோனாஅச்சுறுத்தலின் காரணமாக வெளியே செல்லாமல் வீட்டிலேயே இருக்கிறார். கொரோனா ஊரடங்கு சமயத்தில் வீடியோ கால் வழியாக மாஸ்டர் படக்குழுவினருடன் பேசிய புகைப்படம் இணையதளத்தில் வைரலாக பரவியது. ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. நேற்று பலரும் சமூக வலைதளங்களில் நண்பர்கள் தின வாழ்த்துக்களை தெரிவித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கங்கனா வீட்டில் துப்பாக்கி சூடு…. “இதற்கு பயந்து கேள்வி கேட்பதை நிறுத்த மாட்டேன்” – கங்கனா ரனாவத்

நடிகை கங்கனா ரணாவத் வீட்டில் ஏற்பட்டுள்ள துப்பாக்கி சூட்டு சம்பவத்தால் பாதுகாப்பிற்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். “தாம் தூம்” திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்த கங்கனா ரணாவத் தற்சமயம் வாழ்கை கதையான “தலைவி”  படத்தில் ஜெயலலிதாவின் வேடத்தில் நடித்துவருகிறார். ஏற்கனவே பிரபல இந்தி நடிகர் ஹிருத்ரோஷனுடன் மோதினார். தற்சமயம் இளம் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்கு வாரிசு நடிகர்கள் தான் காரணம்  என குற்றம் சாட்டி வருகிறார். இந்நிலையில் மணாலியில் உள்ள கங்கனா ரணாவத் வீட்டில் துப்பாக்கி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புதிய தயாரிப்பாளர் சங்கம் தொடங்கினார் பாரதிராஜா …!!

புதிய திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை தொடங்கி இருப்பதாக இயக்குனர் திரு.பாரதிராஜா அறிவித்துள்ளார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் 1200க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். விரைவில் இந்த சங்கத்திற்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் புதிய சங்கம் ஒன்று உருவாக உள்ளதாகவும் அந்த சங்கத்திற்கு திரு.பாரதிராஜா தலைவராக செயல்பட உள்ளதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது. இந்நிலையில் புதிய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை தான் ஆரம்பிக்க உள்ளதாக இயக்குனர் திரு.பாரதிராஜா அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுட்டர் பக்கத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எனக்கு ஆபத்து வந்தா அதுக்கு சூர்யா தான் காரணம் – மீரா மிதுன்

பிக்பாஸ் பிரபலம் நடிகை மீரா மிதுன் தனக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு காரணம் சூர்யாதான் என்று புரளி ஒன்றை கிளப்பியுள்ளார். தமிழ் திரை உலகில் சில படங்களில் மட்டும் நடித்த மீரா மிதுன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகண்டு பிரபலமாகியுள்ளார். இப்பொழுது சமூக வலைத்தளத்தில் தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் சர்ச்சை மிகுந்த கருத்துக்களை பதிவு செய்து வருகிறார். சமீபத்தில் கூட “திரிஷா தன்னை காப்பியடிப்பதை நிறுத்திக் கொள்ளாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்” எனக்கூறி பரபரப்பாக்கினார். அதுமட்டுமில்லாமல் நடிகர்கள், ரஜினி, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கீர்த்தி சுரேஷுக்கு அம்மாவாகும் நயன்தாரா…? அண்ணாத்த படத்தில் புதிய முயற்சி…!!

சிறுத்தை சிவா இயக்கும் அண்ணாத்த திரைப்படத்தில் நடிகை நயன்தாரா, கீர்த்தி சுரேஷுக்கு அம்மாவாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் தற்போது வைரலாகி வருகிறது. இயக்குனர் சிவா இயக்கும் அண்ணாத்த படத்தில் ரஜினிகாந்த், குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். சென்ற வருடம் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் திரைப்பட நகரில் விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்றது. ஆனால் திடீரென்று வந்த கொரோனா  பூகம்பத்தால் படப்பிடிப்பு 4 மாதங்களாக நின்றுவிட்டது. படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பதில் சந்தேகம் நிலவி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

படத்தின் தோல்விக்கு காரணம் இதுதான்…. உண்மையை உடைத்த படக்குழு…!!

விஜயா ப்ரொடக்ஷன் நிறுவனம் தனது தயாரிப்பு பணியை ஊரடங்கு முடிந்தபின் தொடங்கும் என தெரிவித்துள்ளனர். பாரம்பரிய நிறுவனங்களில் தமிழ் திரையுலகில் விஜயா ப்ரொடக்ஷனுக்கு முக்கிய பங்கு உண்டு. “எம்ஜிஆர் நடித்த எங்க வீட்டுப் பிள்ளை, நம் நாடு”, “சிவாஜி கணேசன் நடித்த வாணி ராணி”, “ரஜினிகாந்த் நடித்த உழைப்பாளி”, “கமலஹாசன் நடித்த நம்மவர்” , “அஜித் நடித்த வீரம்”, “விஜய் நடித்த பைரவா” உள்ளிட்ட வெற்றிப்படங்களை இந்த நிறுவனம் தயாரித்துள்ளது. கடந்த வருடம் விஜயா புரொடக்சன் தயாரித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அன்பு ஒன்றுதான் உண்மை…. வைரலாகும் லதா ரஜினிகாந்த் பாடல்….!!

லதா ரஜினிகாந்த் சொந்த முயற்சியால் எழுதி பாடிய பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. லதா ரஜினிகாந்த் அவர்களின் “அன்பு ஒன்றுதான் உலகினில் உண்மை, அன்பு இல்லாத ஒரு உள்ளம் இல்லை” என்ற பல்லவிகளைக் கொண்ட பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இப்பாடலை அவரே எழுதி பாடியுள்ளார். மேலும் இப்பாடல் வரிகளில் அன்பின் பெருமையையும், குடியின் கேடுகளையும் விவரித்துள்ளார். “மனதை அழித்தான், தன்னையும் மறப்பான், நான் என்ற அகந்தை கடலில் மிதப்பான்” என்ற மதுவுக்கு எதிரான கருத்துக்களை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உதயமாகும் புதிய தயாரிப்பாளர் சங்கம்…? அறிக்கை வெளியிட்ட பாரதிராஜா….!!

பாரதிராஜா தலைமையில் புதிதாக ஒரு தயாரிப்பாளர் சங்கம் உருவாக்கப்பட இருப்பதாக பரவிய செய்தி பற்றி பாரதிராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சென்னை பிலிம்சேம்பரில் இயங்கிக் கொண்டிருக்கிறது.கடந்த முறை நடந்த தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் விஷால் வெற்றி பெற்று தலைவரானார்.அதை எதிர்த்து மற்றொரு தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்கள். நீதிமன்றம் நடந்து முடிந்த தேர்தலை ரத்து செய்து, புதிதாக தேர்தல் நடத்துவதற்கு உத்தரவிட்டது. இந்நிலையில் விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்க நிர்வாக குழு கலைக்கப்பட்டு, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இனி இப்படி பண்ணாதீர்கள்… உங்களுக்கும் காத்திருக்கும்… கண்டனம் தெரிவித்த மிருணாளினி…!!

நடிகை மிருணாளினி கொரோனா நோயாளிகளை வீடியோ மற்றும் புகைப்படம் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சாம்பியன்ஸ், சூப்பர் டீலக்ஸ், ஆகிய தமிழ் படங்களில் நடித்தவர் மிருணாளினி. விக்ரமுடன் தற்போது கோப்ரா, எம். ஜி. ஆர் நகர் மற்றும் கன்னட படங்களில் நடித்துவருகிறார். கொரோனா நோயாளிகளை வீடியோ எடுத்து வெளியிடும் அவமதிப்பை கண்டித்து மிர்னாலினி கூறுவன” உங்கள் வீட்டின் பக்கத்தில் வசிப்பவர்கள் யாருக்காவது கொரோனா தொற்று ஏற்பட்டு அவரை ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லும்போது அவரை புகைப்படமோ அல்லது வீடியோவை எடுக்காதீர்கள். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு இணையாக பாரதிராஜாவின் தலைமையில் உதயமான புதிய சங்கம்….!

திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு இணையாக புதிய சங்கம் பாரதிராஜாவின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தலைவராக விஷால் இருந்த பதவிக்காலம் முடிவடைந்து உள்ளது. சங்கத்திற்கு தேர்தல் நடத்துவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் ஊரடங்கினால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு இன்னொரு புதிய சங்கம் உருவாக்கியுள்ளனர். ‘தமிழ் திரைப்பட நடிப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்’ சங்கத்திற்கு பெயர் வைத்துள்ளனர். சங்கத்திற்கு தலைவராக பாரதிராஜாவை தேர்வு செய்துள்ளனர். எஸ்.ஆர். பிரபு மற்றும் தனஞ்ஜெயன் துணைத் தலைவராகவும், டி. சிவா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்து மதம் குறித்து அவதூறு…. பிரபல இயக்குனர் கைது….!!

திரைப்பட இயக்குனர் வேலுபிரபாகரன் மீது இந்து மதம் பற்றிய அவதூறு பரப்புவதாக அளிக்கப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். திரைப்பட இயக்குனர் வேலு பிரபாகரன் இந்து மதம் குறித்து தவறான செய்தி பரப்பியதாக அவர் மீது பாரத் முன்னணி புகார் அளித்தனர். அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் சென்னையில் வைத்து இயக்குனர் வேலுபிரபாகரன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்து மதம் குறித்து அவதூறு பரப்பியதாக கைது செய்யப்பட்ட அவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து மத்திய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதி படத்தின் மாஸ் அப்டேட் வெளியீடு….!

விஜய் சேதுபதி நடித்து வரும் “துக்ளக் தர்பார்” திரைப்படத்தின் மாஸ் அப்டேட்டை வெளியிட்டுள்ளார். டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கி நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் படம் “துக்ளக் தர்பார்”. 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ மற்றும் வயகாம்18 ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அதிதி ராவ் நடித்துவருகிறார். முக்கியமான கதாபாத்திரத்தில் பார்த்திபன் நடிக்கிறார். #TughlaqDurbar First Single – #அண்ணாத்தேசேதி – #AnnatheSethi from Monday 5pm on […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினி பாராட்டு…!-“இந்த நாளுக்காக காத்திருந்தேன்”…துல்கர் பட இயக்குனரின் உற்சாக பதிவு…!

ரஜினி பாராட்டியதை இயக்குனர் பெரியசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் உற்சககத்துடன் பதிவிட்டுள்ளார். மார்ச் மாதம் கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட ஊராடங்கள் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. 2020 ஆம் ஆண்டில் முதல் மூன்று மாதங்களில் வெளியான சில படங்கள் மட்டுமே அமோக வரவேற்பை பெற்றிருந்தன. அந்த வகையில் துல்கர் சல்மான் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படமும் உள்ளது. இப்படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்துவிட்டு இயக்குனர் தேசிங்கு பெரியசாமியை பாராட்டி இருப்பது அவருக்கு கிடைத்த மிகசிறந்த கொடையாக மாறியுள்ளது. இதுகுறித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வனிதாவிடம் ரூ.1.25 கோடி நஷ்ட ஈடு கேட்டு லட்சுமி ராமகிருஷ்ணன்…!!

தன்னை அவதூறாக பேசியதாக குற்றம் சுமத்தி நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் வனிதாவிடம் 1.25 கோடி ரூபாய் நஷ்டஈடாக கேட்டுள்ளார். சமூக வலைத்தள நேரலை  விவாத நிகழ்ச்சி ஒன்றில் ஒருமையில் தரக்குறைவாக பேசியதாக கூறி நடிகை வனிதாவிடம் ரூ.1.25 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். நடிகை வனிதா பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்தது சர்ச்சை ஆனதை தொடர்ந்து அது குறித்து நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திறமை தான் காரணம்…. அதிக சம்பளம் கேட்பதில்லை…. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரகாஷ்ராஜ்….!!

சினிமா நடிகர்கள் சம்பளத்தை நிர்ணயம் செய்வதில்லை என பிரகாஷ்ராஜ் சுவாரஸ்ய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். சினிமாவில் விஜய்,அஜித், தனுஷ், ரஜினி, கமல், நயன்தாரா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி வருகிறார்கள். இவர்கள் அவர்களுக்கான சம்பளத்தை மார்க்கெட் நிலைமையைப் பொறுத்து அதிகமாக கேட்பதாகவும் கேட்ட தொகையை கொடுத்த பிறகே படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வதாகவும் பல கிசுகிசுக்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வெளியாகி வந்தன. தற்போது சினிமா ஹீரோக்களின் சம்பளம் குறித்து ஒரு சுவாரசியமான தகவலை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“உங்கள் அன்பில் திக்குமுக்காடிப் போனேன்” ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த தனுஷ்…!!

ரசிகர்களாகிய உங்களால் நான் பெருமையும், கர்வமும் கொள்கிறேன் என்று நடிகர் தனுஷ் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.  தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் தனுஷ், தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்: “உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. உங்கள் அன்பால் திக்குமுக்காடி போய் விட்டேன். அனைத்து பொதுவான முகப்பு படங்கள் (common DP), கலவை வீடியோக்கள் (Mash up video), […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

புதுப்பட போஸ்டர்… இயக்குனர் ராம் கோபால் வர்மாவுக்கு 4,000 ரூபாய் அபராதம்…!!

இயக்குனர் ராம் கோபால் வர்மாவுக்கு அவருடைய புதிய  “பவர் ஸ்டார்”  படத்தின் போஸ்டருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் ராம் கோபால் வர்மா தற்போது ‘பவர் ஸ்டார்’ எனும் புதிய படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை இவர் தனது இணைய வழி திரையரங்கில் விரைவில் வெளியிடவுள்ளதாக கூறியுள்ளார். இப்படத்தை விளம்பரப்படுத்துவதற்காக படத்தின் போஸ்டரை நகர் முழுவதும் ஒட்டப்பட்டு வருகிறது. சுவரொட்டிகளை அரசாங்க சொத்துக்கள் மீது ஒட்டியதற்காக ஹைதராபாத் பெருநகராட்சி ராம்கோபால் வர்மாக்கு 4 ஆயிரம் ரூபாயை அபராதம் விதித்துள்ளது.

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

காக்க…. காக்க…. சுற்றுச்சூழல் காக்க….. நம் மௌனம் கலைப்போம்…. மாஸ் ட்விட் போட்ட சூர்யா …!!

சுற்றுசூழல் விஷயத்தில் நாம் மௌனம் கலைப்போம் என நடிகர் சூர்யா தற்போது கூறியிருக்கிறார். சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு விவகாரத்தில் நடிகர் சூர்யா டுவிட்டரில் இந்த பதிவினை போட்டுள்ளார். சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை குறித்து ஏற்கனவே அவருடைய சகோதரர் கார்த்திக்   திருக்குறளை மேற்கோள் காட்டி நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையை நடிகர் சூர்யா சிவகுமார் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சொல்லியிருக்கிறார். பேசிய வார்த்தைகளைவிட பேசாத மௌனம் மிக ஆபத்தானது காக்க காக்க சுற்றுச்சூழல் காப்போம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா பேட்டி

இந்த 2 வேடத்திலும் நடிக்க எனக்கு ஆசை – நடிகை பிரியாமணி

தான் நடிக்க விரும்பும் இரண்டு கதாபாத்திரம் குறித்து நடிகை பிரியாமணி கூறியுள்ளார்.  2004 ம் ஆண்டு “கண்களால் கைது செய்” என்ற படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரியாமணி. “பருத்திவீரன்” படத்தில் நடித்து பிரபலமானதுடன் சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார். தமிழில் மட்டுமில்லாமல் கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். நடிகை பிரியாமணி கொரோனா ஊரடங்கில் அளித்த பேட்டியில் கூறியதாவது: “நான் ‘விராட பருவம்’ என்ற படத்தில் நக்சலைட்டாக நடித்து வருகிறேன். […]

Categories
கொரோனா சினிமா தமிழ் சினிமா

கொரோனாவில் இருந்து மீள இதை தான் செய்தோம் – விஷால் விளக்கம்

கொரோனா தொற்றிலிருந்து விரைவில் குணம் அடைந்தது குறித்து நடிகர் விஷால் விளக்கம் அளித்துள்ளார். கொரோனா பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனவால் சினிமா பிரபலங்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நடிகர் விஷாலும் அவரது தந்தையும் கொரோனவினால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும்,பின்பு ஆயுர்வேத சிகிச்சையினால் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதாகவும் தகவல் வெளியாகின. இதனை உறுதிப்படுத்திய நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது: என்னுடைய தந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது உண்மை. Yes it’s True, my […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கலக்குகலக்குனு கலக்கும் ”வாயாடி பெத்த புள்ள”…..! சாதனை புரிந்து அசத்தும் ‘கானா’ ஆல்பம் …!!

முதல் முறையாக தமிழ் சினிமாவில் அதிக  அளவில் பார்வையாளர்களை  கனா திரைப்படத்தின் இரு பாடல்கள் பெற்றிருக்கின்றது. தமிழ் சினிமாவில் பாடல்கள் என்பது மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஒரு படத்தில் ஒரு பாடல் ஹிட்டாகி விட்டால் அந்த படத்தினை பலமுறை நினைக்கத் தூண்டும் என்பது தான் உண்மை. அதற்கும் மேலாக ஒரு படத்தில் அனைத்து பாடல்களும் ஹிட்டாகி விட்டால் அந்த படமே ஹிட் என்று சொல்லலாம். அப்படிப்பட்ட ஒரு பாடல்தான் “கனா” என்ற படத்தில் அனிருத் பாடியுள்ள […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சோனியா அகர்வாலுக்கு திருமணமா ? ட்விட் பதிவால் எழும் கேள்விகள் ..!!

கடந்த 2003 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த காதல் கொண்டேன் திரைப்படத்தில் சோனியா அகர்வால் தமிழ் நடிகையாக அறிமுகமானார். இத்திரைப்படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். இப்படம் வெற்றி பெற்றதை அதனைத்தொடர்ந்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார். இவர் விஜய்யின் மதுர, சிம்புவின் கோவில், வானம், 7ஜி ரெயின்போ காலனி, ஒரு கல்லூரியின் கதை, புதுப்பேட்டை, திருட்டுபயலே, சதுரங்கம் போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஆகிய படங்களிலும் நடத்தியிருக்கிறார். செல்வராகவனை 2006 இல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பிறந்தநாள் ஸ்பெஷல்” ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூர்யா…!!

நடிகர் சூர்யா தனது பிறந்தநாளை முன்னிட்டு தன்னுடைய ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். நடிகர் சூர்யா வாரிசு நடிகராக இருந்தாலும் தனது கடின உழைப்பால் தமிழ் திரையுலகி தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்தவர். நேருக்கு நேர் என்ற திரைப்படம் வழியாக தமிழ்சினிமாவில் அறிமுகமானவர் சூர்யா. ஒவ்வொரு படத்திலும் தன்னை தானே வடிவமைத்து கொண்டு சிறந்த நடிகராக வளர்ந்துள்ளார். நந்தா, மவுனம் பேசியதே, காக்க காக்க, வாரணம் ஆயிரம், அயன், சிங்கம் போன்ற பல்வேறு சூப்பர் ஹிட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இந்த படத்தை தயாரித்ததில் பெருமிதம் கொள்கிறேன்” – தயாரிப்பாளர் தாணு

ரஜினியின் கபாலி படத்தை தயாரித்ததை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன் என தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார். ரஜினி, ராதிகா ஆப்தே, தினேஷ், கலையரசன், தன்ஷிகா ஆகியோர் நடித்து சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் வெளியான படம் ‘கபாலி’. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான இப்படத்தை தாணு தயாரித்துள்ளார். 2016ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் தேதி இப்படம் வெளியானது. பலவிதமான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்ப்பை பெற்றது. தயாரிப்பாளர் தாணு இந்த படம் தனக்கு நல்ல லாபகரமான படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘மாஸ்க்’ அணிந்து நண்பர்களுடன் உலா வந்த தளபதி விஜய்… வைரலாகும் போட்டோ..!!

நடிகர் விஜய் தனது நண்பர்களுடன் முக கவசம் அணிந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான விஜய் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருப்பவர். தற்போது மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் இணைந்து மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்து படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கின்றார். இப்படம் குறித்து படக்குழுவினர் பல தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். சமீபத்தில் விஜய் சேதுபதி படத்தின் டிரைலர் குறித்து கூறியிருந்தார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வனிதா செருப்பால அடிக்க ஓங்கினார்…. போலீஸ் தடுக்கல… செய்தியாளர்களிடம் கதறிய சூர்யா தேவி….!!…!!

நடிகை வனிதா தன்னை அடிக்க செருப்பை ஓங்கினார் எனறு செய்தியாளர்களிடம் சூர்யா தேவி கூறியுள்ளார். நடிகை வனிதா மற்றும் சூர்யா தேவி விவகாரத்தில் பலரும் வீடியோக்களை பதிவிட்டு தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த அடிப்படையில் சூர்யா தேவி என்ற பெண் தொடர்ந்து நடிகை வனிதாவின் திருமணத்தைப் பற்றியும் நடிகை வனிதா பற்றியும் பல்வேறு கருத்துக்களை வீடியோவாக பதிவிட்டு வருகிறார். இந்த புகாரில் தன்னைக் குறித்து அவதூறாக பரப்புவது கொலை மிரட்டல் கொடுப்பது என்று பல குற்றச்சாட்டுகளை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இவ்வளவு அழகா… நடிகைகளை மிஞ்சும் பேரழகு… வெளியான நடிகரின் மகள்கள் புகைப்படம்..!!

தமிழ் சினிமாவில் நடித்த ஒரு பிரபலமான நடிகரின் மகள்கள் புகைப்படம் தற்போது வெளியாகி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. தமிழ் திரையுலக வரலாற்றில் கதாநாயகன், நகைச்சுவை நடிகர், குணச்சித்திர நடிகர், ஒளிப்பதிவாளர் என பல முகங்களைக் கொண்டவர் நடிகர் லிவிங்ஸ்டன். இவர் 1982ம் ஆண்டு டார்லிங் டார்லிங் என்ற ஒரு படத்தில் ஸ்டேஷன் மாஸ்டர் ஆக நடித்து இருந்தார். அதோடு அந்த படத்தின் உதவி இயக்குனராகவும் பணியாற்றி இருந்தார். இதைத்தொடர்ந்து 1988 ஆம் ஆண்டில் வெளிவந்த பூந்தோட்ட காவல்காரன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வலிமை” அஜித்துடன் இணைந்த பிரபல நடிகர்…. வெளியான தகவல்…!!

போனி கபூர் தயாரிப்பில் உருவான வலிமை படத்தில் தல அஜித்துடன் மலையாள பிரபலம் ஒருவர் இணைய உள்ளதாக தெரிய வந்துள்ளது  தல அஜித் நடிப்பில் உருவாகி வந்த படம் வலிமை. பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளரான போனி கபூர் இந்தப்படத்தை உருவாக்கி வருகிறார். நேர்கொண்ட பார்வை, சதுரங்க வேட்டை,  தீரன், போன்ற படங்கள் இயக்கிய வினோத் இயக்கத்தில் தான் இப்படம் இயங்கி வருகிறது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் படபிடிப்பு நின்றுள்ளதால் கொரோனா முடிந்தவுடன் மீண்டும் படப்பிடிப்பு தொடங்க இருக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இசையில் ஜொலிக்கும் யுவன்… சிறு வயதில் எப்படி இருந்தார் தெரியுமா..? வெளியான அரியவகை புகைப்படம்…!!

இசையமைப்பாளார் யுவன் சங்கர்ராஜா மற்றும் நடிகர் பிரேம்ஜி அமரன் இருவருடைய புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் யுவன் ஷங்கர் ராஜா, இவர் முன்னணி திரைப்பட நடிகர்களுக்கு இணையாக ரசிகர்களை வைத்திருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா அரவிந்தன் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். அதன் தொடர்ச்சியாக  பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் பணியாற்றி ரசிகர்களுக்குகிடையே பிரபலமாகியுள்ளார். தொடர்ந்து பல திரைப்படங்களில் தனது பாடல்கள் மற்றும் பின்னணி இசையின் மூலம் அதிக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நண்பருடன் இணையும் வடிவேலு…. மீண்டும் கதாநாயகனாக திரையில்…. எதிர்பார்ப்புடன் ரசிகர்கள்… !!

பிரபல காமெடி நடிகர் வடிவேலு தனது நண்பருடன் இணைந்து திரைப்படம் ஒன்றில் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் வடிவேலு தன் நண்பர் இயக்கக்கூடிய படத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை முடிவடைந்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வடிவேலு புகழ் பெற்று விளங்கிக் கொண்டிருக்கிறார். “இம்சை அரசன் 24-ம் புலிகேசி” என்ற படத்தின் மூலமாக வந்த சர்ச்சை காரணத்தால் தற்போது திரையுலகை விட்டு சற்று விலகியே உள்ளார். கடைசியாக நடிகர் விஜய் நடித்த மெர்சல் படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினியை பின்னுக்கு தள்ளிய விஜய்…. இந்திய அளவில் முதலிடம்….!!

இந்திய அளவில் யாருடைய படம் அதிக அளவு பார்க்கப்படுகின்றது என்ற பட்டியலில் விஜய் முதலிடத்தில் இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சில மாதங்களாக கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு சட்டம் அமலில் இருப்பதால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி இருக்கிறார்கள். இதனால் டிவி பார்ப்பவர்களின் எண்ணிக்கை சற்று உயர்ந்து இருக்கிறது என்று கூறலாம். மேலும் இதை கருத்தில் கொண்டு தொலைக்காட்சிகளில் முன்னணி நடிகர்களின் படங்களையே பார்த்து தொடர்ந்து ஒளிபரப்பி கொண்டிருக்கின்றன. அந்த வகையில் இந்த ஊரடங்கு காலத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குனராக மாறும் நடிகைகள்.. புதிய முயற்சியை கையில் எடுக்கும் 3 பேர்..!!

சினிமா நடிகைகள் மூன்று பேர் படம் இயக்க தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நித்யா மேனன், ரம்யா நம்பீசன், பூ பார்வதி மூவருக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது அதாவது மூன்று பேரும் விரைவில் படம் இயக்க ஆயத்தமாகியுள்ளனர். இதற்கு முன் ரம்யா நம்பீசன் குறும்படம் ஒன்றின் மூலம் இயக்குனர் ஆகியுள்ளார். ஆனால் நித்யா மேனன் மட்டும் சற்று தயங்கிக் கொண்டே இருக்கிறார். இதனிடையே பூ பார்வதி இரண்டு கதைகள் தன்னிடம் தயாராக இருப்பதாக கூறியிருக்கிறார். அதற்கான ஹீரோக்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அரிய காணொளி… ஒரே விமானத்தில் யாரெல்லாம் போனாங்க தெரியுமா…?

தமிழ் திரை உலகின்  அனைத்து நட்சத்திரங்களும் இருக்கும்  வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகத்தின் முன்னணி நட்சத்திர நடிகர்களான ரஜினி ,கமல் ,விஜய் மற்றும் விஜயகாந்த் தற்போது அரசியல்வாதியாக இருந்தாலும் என்றும் மக்கள் மனதில்  இடம் பிடித்த சிறந்த கதாநாயகனாக தான் திகழ்கிறார் .இப்படி அனைத்து நடிகை நடிகர்களும் ஒரே இடத்தில் சந்தித்துக் கொண்டால் அந்த நிகழ்வு சமூக வலை தளங்களில் ஒரு வைரலாக தான்  வலம் வரும் . அப்படி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கேரளா தங்கக் கடத்தல் விவகாரம்…. நடிகை பூர்ணாவை மிரட்டிய கும்பல்….!!

தங்க கடத்தலுக்கு நடிகை பூர்ணாவை பயன்படுத்த கும்பல் ஒன்று மிரட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவில் நடந்த தங்க கடத்தல் சம்பவம் அந்த மாநில அரசையே ஆட்டம் காண செய்துள்ளது. சொப்னா என்ற பெண்ணை மையமாக வைத்து செயல்பட்டு வந்த இந்த கடத்தல் கும்பலுடன் கேரள மாநில அரசு உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகளும் ஈடுபட்டு வந்தது இப்போதுதெரிய வந்துள்ளது. கடந்த ஒரு  வருடத்தில் மட்டும் 200 கிலோ தங்கத்தை இந்த கும்பல் கடத்தி இருக்கிறது. கடத்தல் கும்பலின் பெரிய […]

Categories

Tech |