Categories
சினிமா தமிழ் சினிமா

எதிர்பார்ப்புடன் சென்று அவமானப்பட்டேன்… கசப்பான நிகழ்வை பகிர்ந்த மாதவன் ..!!

எதிர்பார்ப்புடன் சென்று தான் அவமானப்பட்ட நிகழ்வு குறித்து நடிகர் மாதவன் தெரிவித்துள்ளார். தனக்கு எட்டு வயது இருக்கும் போது ஆட்டோகிராஃப் வாங்குவதற்காக ஒரு கிரிக்கெட் வீரரிடம் தான் அவமானப்பட்ட நிகழ்வை நினைவுகூர்ந்து பேசியிருக்கிறார் நடிகர் மாதவன். “அந்த கிரிக்கெட் வீரர் வந்துள்ளார் என்றதும் மிகவும் உற்சாகத்துடன் அவரிடம் ஆட்டோகிராப் வாங்குவதற்காக முந்திக்கொண்டு நண்பருடன் சென்றேன். அவர் யாருடனோ பேசிக் கொண்டே ஒரு  50 பேருக்கு ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்தார் ஆனால் கையெழுத்து போடும்போது யாருடைய முகத்தையும் நிமிர்ந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விக்ரம் தான் சரியான போட்டி … 5 கதாநாயகிகளுடன் அறிமுகமாகும் மருமகன்..!!

அறிமுகமாகும் முதல் படத்திலேயே விக்ரம் மருமகனுக்கு ஜோடியாக 5 நடிகைகள் நடிக்க இருக்கிறார்கள். விக்ரம் தங்கை அனிதாவினுடைய மகன் அர்ஜுமன் ஒரு புதிய படத்தில் கதாநாயகனாக அறிமுகமாக இருக்கிறார். அறிமுகமாகும் முதல் படத்திலேயே அவருடன் ஜோடியாக நடிக்க 5 நடிகைகள் நடிக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். இந்த படத்திற்கு “பொல்லாத உலகில் பயங்கர கேம்” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை விஜய்ஸ்ரீ ஜி டைரக்ட் செய்கிறார். அர்ஜுமன் அறிமுகமாகி நடிக்கும் முதல் படத்தில் அவருக்கு ஜோடியாக வரும் கதாநாயகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அறிவியலை குறை சொல்லவில்லை… ஆனால் இது தான் திருப்தி – நடிகர் சூரி..!!

வீட்டில் படம் பார்ப்பதை விட தியேட்டரில் படம் பார்த்தால்தான் திருப்தி அளிப்பதாக நடிகர் சூரி கூறியுள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் தடை செய்யப்பட்டு விட்டதால் நிறைய நடிகர்கள் சொந்த ஊருக்குத் திரும்பிப் போய்விட்டார்கள். நடிகைகளில் பெரும்பாலானோர்கள் ருசியாக சமைப்பது எப்படி என்று புத்தகம் பார்த்து படித்து சமைக்க கற்றுக் கொண்டுள்ளார்கள். நகைச்சுவை நடிகரான சூரி தனது சொந்த ஊரான மதுரைக்கு அருகிலுள்ள கிராமத்துக்கு போய் விட்டார். ஊரடங்கு காரணமாக தியேட்டரில் வெளியாக வேண்டிய படங்கள் ஓடிடி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இது எல்லாருக்கும் அமைந்துவிடாது “நான் ரொம்ப லக்கி”- நடிகர் ஆர்யா ..!!`

காதலித்து திருமணம் செய்து கொண்டதால் எங்கள் இருவருக்கும் இடையே முடிவெடுப்பதில் ஒற்றுமை நிலவுகிறது என்று மனம் திறந்துள்ளார் நடிகர் ஆர்யா. கஜினிகாந்த், காப்பான் போன்ற படங்களுக்கு  பின் “டெடி” என்ற படத்தில் ஆர்யாவுடன் சேர்ந்து நடிக்கும் சாயிஷா, லாக்டவுனில் நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டுள்ளார். குறிப்பாக, வெரைட்டி கேக் செய்வது எப்படி என்று தெரிந்துகொண்டுள்ளார். இதுகுறித்து ஆர்யா கூறும்பொழுது, “நாங்கள் காதலித்து திருமணம் செய்துகொண்டதாலும், இருவரும் ஒரே துறையில் இருப்பதாலும், நிறைய விஷயங்களை ஒரே கோணத்தில் அலசி ஆராய்ந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சம்பளம் முக்கியமில்லை… வில்லியாகவும் நடிக்க தயார்…!!

கதாபாத்திரம் பிடித்திருந்தால் வில்லியாக நடிப்பதற்கும் தயார் என நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார். “கொரோனா ஊரடங்கு நேரத்தை வீணாக்காமல் வீட்டு வேலை, சமையல், இசை, கதை, கவிதை எழுதுதல் என செலவிடுகிறேன். எனக்கு ஒரு இசைக்கலைஞர் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என ஆர்வம் உண்டு ஆனால் கனவு பாத்திரம் ஏதும் இல்லை. நல்ல கதை உள்ள படத்தில் வலுவான கதாபாத்திரமாக இருந்தால் வில்லியாகவும் நடிக்க தயாராக உள்ளேன். தற்போது அதிக படங்களில் நடிக்க வேண்டும் என ஆர்வம் வந்துள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வீட்டிலிருந்தே நடிக்கும் லேடி சூப்பர் ஸ்டார்…!

ஊரடங்கு காரணமாக வீட்டிலிருந்தே விளம்பர படங்களில் நடிகை நயன்தாரா நடித்து வருகிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கின் காரணமாக படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் நடிகை நயன்தாரா தனது வீட்டில் இருந்தே நடித்து வருகிறார். நயன்தாரா படங்களில் நடித்து மூன்று மாதங்களுக்கு மேல் ஆகின்றன. ஊரடங்குக்கு முன்பே ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் படத்தை நடித்து முடித்துள்ளார். மேலும் இப்படம் திரைக்கு வர தயாராக உள்ளது. நெற்றிக்கண், காற்றுவாக்கில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘செல்லமா’ பாராட்டிய ஆதவ் கண்ணதாசன் … “தாத்தா கனவுல வந்து அடிப்பாரு” மிரட்டிய சிவகார்த்திகேயன் ..!!

டாக்டர் படத்தின் ஒரு பாடலுக்கு பாராட்டியுள்ள ஆதவ் கண்ணதாசனுக்கு  பதிலளித்துள்ள சிவகார்த்திகேயன் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் டாக்டர். இந்த படத்தில் சிங்கிள் பாடலான “செல்லமா” என்ற பாடல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அனிருத் இசையமைக்க சிவகார்த்திகேயன் பாடல் வரிகளுடன்  உருவாகி இருக்கும் இந்த பாடல் அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளது. சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மட்டுமில்லாமல் திரையுலக பிரபலங்களும் இந்த பாடலை பாராட்டி வருகிறார்கள். இந்த நிலையில் கண்ணதாசனின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நல்ல வரவேற்பு..! புலம்பெயர்ந்த தமிழர்களின் கனவை நினைவாக்கிய மதன் கார்க்கி.!!

பாடலாசிரியர் மதன் கார்க்கியினுடைய புதிய முயற்சியால் புலம் பெயர்ந்த தமிழர்களின் கனவு நனவாகி உள்ளது. இணையம் மூலம் தமிழ் கற்க விரும்புவோருக்கு தகுந்தவாறு கார்க்கி ஆராய்ச்சி நிறுவனம் ‘பயில்’ எனும் பாடத்திட்டத்தை வடிவமைத்து அதன் வழி இணைய வகுப்புகளையும் ஆரம்பித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த வகுப்புகளில் தமிழ் பயின்று வருகின்றனர். இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, சைப்ரஸ், மலேசியா, சிங்கப்பூர் ஆகிய  நாடுகளில் இருந்து மாணவர்கள் இந்த வகுப்புகளில் இணைந்துள்ளார்கள். ‘எழுது’, ‘பேசு’, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சாக்ஷி அகர்வாலா? ரம்பாவா ? குழம்பி நிற்கும் ரசிகர்கள் … வைரலாகும் புகைப்படம்..!!

சாக்ஷி அகர்வால் தனது சமூக வலைதள பக்கத்தில் ரம்பா போன்று காட்சியளிக்கும் அவரின் புகைப்படத்தை வெளியிட்டது தற்போது வைரலாகி வருகிறது. இந்த கொரோனா  காலகட்டத்தில் வெளியே எங்கேயும் சென்று சுற்றி பார்க்க முடியவில்லை என புலம்பும் பல பிரபலங்களுக்கு மத்தியில் நடிகை சாக்ஷி அகர்வால் தான் இருக்கும் இடத்திலேயே தனது நாட்களை அழகாக கழித்து வருகின்றார். தினமும் உடற்பயிற்சி செய்வது, வித விதமாக சமைத்து சாப்பிடுவது மற்றும் இளைஞர்களை கவரும் வண்ணமாக உடை அணிந்து  அதை தவறாமல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பிக் பாஸ் சீசன் 4” திரைக்கு வருமா…? வராதா…? – பதிலளித்த விஜய் டிவி

“பிக் பாஸ்” சீசன் 4 தொடங்க வாய்ப்புள்ளதாக ஒரு வதந்தி பரவி வரும் நிலையில் விஜய் டிவி விளக்கம் கொடுத்துள்ளது. சின்னத்திரை  ஷூட்டிங்க்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், முக்கிய சீரியல்களின் புதிய படப்பிடிப்பும் தொடங்கியுள்ளன. நெடுந்தொடர்களைப் போன்று “ரியாலிட்டி சோ” க்களுக்கும் பார்வையாளர்கள் மத்தியில் மிகுந்த  வரவேற்பு உள்ளது. இந்த நிலையில் விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன்-4 வருமா ? வராதா ? என்பது தற்போது ஒரு பெரும் கேள்விக்குறியாக இருக்கிறது. கமல்ஹாசன் எடுத்து தொகுத்து வழங்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புதுப்படத்திற்கு ஆர்வமாக பணியில் இறங்கிய நடிகை பிந்து மாதவி…!!

நடிகை பிந்து மாதவி தான் நடித்துக்கொண்டிருக்கும் புதிய படத்திற்கு டப்பிங் பணிகளை ஆர்வமாக தொடங்கியுள்ளார்.  கழுகு 2 படத்திற்கு அடுத்து பிந்து மாதவி நடித்திருக்கும் படம் யாருக்கும் அஞ்சேல். புரியாத புதிர், இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் ஆகிய படங்களுக்கு அடுத்தாக ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தில் பிந்து மாதவியுடன் இணைந்து தர்ஷணா பாணிக் நடிக்கிறார். கொரோனா பிரச்சினைக்கு முன்னரே, படக்குழு முழு படப்பிடிப்பையும் முடித்து விட்டது என்றாலும், பிரச்சினை தீவிரமடைந்துள்ளதால், தொடர்ந்து தயாரிப்புப் […]

Categories
சினிமா

இதற்காக நாம் எந்த கதவையும் தட்டலாம்- கமல் பட நடிகை ..!!

நம் கனவுகள் நிஜமாக எந்த ஒரு கதவையும் நாம் தட்டலாம் என்பதற்கிணங்க புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார் பூஜா குமார். உலக நாயகன் கமல் நடித்த விஸ்வரூபம் 1, 2, உத்தம வில்லன் ஆகிய படங்களில் நடித்தவர் பூஜா குமார். இவர் தற்போது கொரோனா ஊரடங்கின் காரணமாக அமெரிக்காவில் தனது குடும்பத்தினருடன் வீட்டிலேயே முடங்கி கிடந்து சமூகவலைதளங்களில் பொழுதை கழித்து வருகிறார். ராஜஸ்தானில் முன்பு மிகப்பெரிய கதவு ஒன்றின் முன் பின்புறமாக திரும்பி நின்று முதுகு  தெரியும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கட்டாயத்துக்காக எல்லாம் நடிக்க முடியாது – ஸ்ரேயா ரெட்டி அதிரடி ட்விட்…!!

கதாபாத்திரத்திற்கு நான் பொருந்தினால் மட்டுமே நடிப்பேன் வேறு எந்த கட்டாயத்திற்காகவும் நான் நடிக்க மாட்டேன் என்று நடிகை ஷ்ரேயா ரெட்டி அதிரடியாக டுவீட் செய்துள்ளார். விஷால் நடித்த திமிரு படத்தில் வில்லியாக தனது நடிப்பால் அசத்தியவர் ஸ்ரேயா ரெட்டி. அதன்பின் வசந்தபாலன் இயக்கிய வெயில், தங்கர்பச்சான் இயக்கிய பள்ளிக்கூடம் என ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தார். இவர் விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவை திருமணம் செய்துகொண்டுள்ளார். திருமணத்திற்கு பின் ஸ்ரேயா நடித்துள்ள படம் அண்டாவ காணோம். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நகைச்சுவை நடிகர் விவேக்கை வாட்டிய சோகம் – வருத்ததுடன் ட்வீட் ..!!

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் தனக்கு நேர்ந்த சோகத்தை வருத்தத்துடன் டூவீட்டரில் பதிவிட்டுள்ளார்.  தமிழ் சினி உலகில் சின்ன கலைவாணர் என மக்களால் அன்புடன் அழைக்கப்படும் நடிகர் விவேக். திரையில் கடைசியாக ஹரிஷ் கல்யாண் நடித்து வெளியான தாராள பிரபு படத்தில் பார்த்தோம். நடிகர் விவேக் நகைச்சுவையில் சிந்தனையையும் சேர்த்து மக்களுக்கு கொடுப்பவர். மேலும் இவர் ஒரு சமூக நலன் விரும்பி. அப்துல் கலாம் ஐயா தந்த கொள்கைகளை வாழ்க்கையில் எடுத்து  லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு வருகிறார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நாங்கள் நினைவுகளை உருவாக்கிக் கொண்டிருந்தோம் – யுவன் சங்கர் ராஜா..!!

மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் பிறந்த நாளன்று யுவன் டுவீட்டரில் தனது வாழ்த்தை உருக்கமாக பதிவிட்டுள்ளார். தமிழ் திரைவுலக பாடலாசிரியர்களில் தனக்கென்று தனி இடம் பிடித்தவர் நா.முத்துக்குமார். பாலுமகேந்திராவிடம் உதவியாளராகப் பணிபுரிந்த அவர், சீமான் இயக்கிய “வீரநடை” படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு பாடலாசிரியராக அறிமுகமானார். அதன் பின் காதல் கொண்டேன், பிதாமகன், கில்லி, கஜினி, நந்தா, புதுப்பேட்டை, காதல், சந்திரமுகி, சிவாஜி, கற்றது தமிழ், 7 ஜி ரெயின்போ காலனி, காக்கா முட்டை, தெறி போன்ற பல […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பல சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி …. காதலனை அறிமுகப்படுத்திய அமலாபால்..!!

முன்னணி நடிகையான அமலாபால் வாட்ச் விளம்பரத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மூலம் தனது காதலனை அறிமுகப்படுத்தியுள்ளார்.  தமிழ்சினிமாவில் ஆரம்பத்திலிருந்தே ஒரு சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலாபால். இவர் சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு வந்தார். அதன்பின்பு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபல டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். கடந்த 2014ஆம் ஆண்டு இயக்குனர் ஏ.ஆர். விஜயை திருமணம் செய்து கொண்ட இவரின் திருமண வாழ்க்கை மூன்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா விமர்சனம்

உண்மை தெரியாமல் பேசாதீங்க…விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார்-வனிதா!

நடிகை வனிதா தனது திருமணம் தொடர்பான விமர்சனங்களுக்கு ட்விட்டரில் பதில் அளித்துள்ளார்.   பிரபல நடிகர் விஜயகுமாரின் மகளும், நடிகையுமான வனிதா ஏற்கனவே 2 முறை திருமணமாகி விவாகரத்து பெற்றுள்ளார். சமீபத்தில் பீட்டர் பால் என்பவரை 3-வது திருமணம் செய்து கொண்டார். பீட்டருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகளும் உள்ளனர். முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் வனிதாவை திருமணம் செய்ததாக சர்ச்சைகள் எழுந்தன. மேலும் முதல் மனைவி காவல் துறையினரிடம் புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. நடிகை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை திரிஷாவிற்கு ட்விட்டரில் எச்சரிக்கை….!

முன்னணி நடிகையான திரிஷாவிற்கு நடிகை மீரா மிதுன் ட்விட்டரில் எச்சரிக்கை விடுத்துள்ளார். தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் பிரபலமானவர் மீரா மிதுன். ட்விட்டரில் அடிக்கடி சர்ச்சைகளை ஏற்படுத்தும் பதிவுகளை வெளியிட்டுவரும் இவர் தற்போது நடிகை த்ரிஷாவை வம்புக்கு இழுத்துள்ளார். இது தொடர்பாக அவரது ட்விட்டர் பதிவில் இதுதான் கடைசி வார்னிங் என த்ரிஷாவின் பெயரை குறிப்பிட்டு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: “இனி என்னைப்போன்ற ஹேர்ஸ்டைல் மற்றும் என்னை போன்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் மகன் ஹீரோவா…? இயக்குனரா…? விளக்கம் கொடுத்த இயக்குனர்…!!

விஜய் மகன் சஞ்சய் கதாநாயகன் ஆவாரா அல்லது இயக்குனராக ஆவாரா என்பது அவர் வந்த பின்பே தெரியுமென இயக்குனர் பிரிட்டோ தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் ஹீரோக்களின் வாரிசுகள் திரைக்கு அறிமுகமாவது அப்படி ஒன்றும் புதிய விசயமில்லை. இதற்கு முன்னே கார்த்திக், பிரபு முதல் பல  நடிகர்களின் மகன்கள் மூன்று தலைமுறை தொடர்ந்து  ஹீரோக்களாக நடித்து வருகின்றனர். நடிப்பு பலம் இல்லாமல் கூட  தமிழ் சினிமாவில் தங்களது வாரிசுகளை திரைக்கு அறிமுகப்படுத்துவதில் அதிக ஆர்வமுடன் செயலாற்றி வருகின்றனர். இந்நிலையில், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“எனது இந்த வாழ்க்கைக்கு காரணம் கே.பாலசந்தர்” புகழாரம் சூட்டிய சூப்பர் ஸ்டார் ..!!

நான் பெரும் புகழோடும் வசதியுடனும் வாழ்வதற்கு காரணம் இயக்குனர் கே.பாலச்சந்தர் ஐயா தான் என நடிகர் ரஜினிகாந்த் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் மறைந்த இயக்குனர் கே.பாலசந்தரின் 90-வது பிறந்ததினத்தை  முன்னிட்டு அவருக்கு வாழ்த்துகளை வீடியோவாக சமூக வலைதலத்தில் பதிவிட்டிருந்தார். அதில் அவர் கூறியதாவது :- “எனது குருவான கே.பி பாலசந்தருக்கு இன்று 90-வது பிறந்தநாள். கே.பாலசந்தர் அவர்கள் என்னை அறிமுகப்படுத்தவில்லை என்றாலும் நான் நடிகனாகியிருப்பேன். ஆனால் கன்னட மொழியில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருப்பேன். இன்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சினிமாவில் எப்பொழுதும் போராட்டம் தான் – வேதனையை பகிர்ந்த வேதிகா ..!!

பல்வேறு போராட்டங்களில் தான் நாங்களும் வாழ்க்கையை கொண்டு போகிறோம் என்று வேதனையுடன் கூறியுள்ளார் நடிகை வேதிகா. மதராஸி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, முனி, காளை, பரதேசி, காவியத்தலைவன் உட்பட பல படங்களில் நடித்துள்ள நடிகை வேதிகா. கொரோனா ஊரடங்கில் அவர் கொடுத்துள்ள பேட்டியில் கூறியது:- “ஹிந்தி நடிகர் சுஷாந் சிங்குக்கு நல்ல ஒரு எதிர்காலம் சினிமாவில் இருந்தது. ஆனால் அவரது  மரணம் எனக்கு மிகவும் அதிர்ச்சியை தந்தந்து. திறமையான நடிகருக்கு ஏன் இந்த நிலைமை […]

Categories
இந்திய சினிமா சினிமா

“ஒரே மாஸ்டர் தான் அது ரஜினி தான்” புகழ்ந்த விஜய்சேதுபதி..!!!

இன்று மட்டுமல்ல எப்பொழுதுமே மாஸ்டர் என்றால் அது ரஜினிதான் என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். நடிகர் விஜய்சேதுபதி தற்போது உள்ள ஊரடங்கில் சமூகவலைத்தளங்களில் சுறுசுறுப்பாக ரசிகர்களிடம் கலந்துரையாடி சுவாரஸ்யமான கருத்து மற்றும் சினிமா அனுபவங்களை பகிர்ந்து வருகிறார். இதில் அவர், “ரஜினியிடம் இருந்து  கற்றுக்கொள்ள நிறைய விஷயம் இருக்கிறது. அவருடன் இணைந்து முதன்முதலாக பேட்ட படத்தில் நடித்தேன். அவர் மிகவும் சுறுசுறுப்பான ஆற்றல் மிக்கவர். ஒரு காட்சியில் எப்படி நடிக்க போகிறோம் அது திரையில் எப்படி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மாஸ்டர்” தீபாவளிக்கா…? பொங்கலுக்கா….? தயாரிப்பாளர் விளக்கம்….!!

மாஸ்டர் திரைப்படம் வெளியிடுவது குறித்து படத்தின் தயாரிப்பாளர் தற்போது விளக்கம் அளித்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில், தியேட்டர்கள், வணிக வளாகங்கள், மால்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பொழுதுபோக்கிற்காக கூடும் இடங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதில் பொதுமக்கள் அதிகம் மிஸ் செய்யும் இடமாக தியேட்டர்கள் இருக்கின்றன. பல பிரபல நட்சத்திரங்களின் படங்கள் தியேட்டரில் வெளியாக முடியாமல் தாமதமாகி வருவதால், பல ரசிகர்கள் மிகுந்த வேதனையில் இருக்கின்றார்கள். அந்த வகையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

2020ல் வெளியாகி லாபகரமாக வெற்றி பெற்ற படங்கள் இதோ..!!

2020ல் வெளியாகி அதிக லாபத்தை ஈட்டிய வெற்றியை கொடுத்த படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது இந்த வருடம் கொரோனா பரவலின் காரணமாக மார்ச் மாதத்தின் தொடக்கதோடு படங்கள் வெளிவருவது நின்று போனது. அதுவரை 47 படங்கள் மட்டுமே திரைக்கு வந்தது. தொற்று பரவத் தொடங்கியதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் சில படங்கள் OTT தளத்தில் வெளியாகத் தொடங்கியது. அவ்வகையில் ஜோதிகா நடிப்பில் வெளிவந்த பொன்மகள் வந்தால் படமும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவந்த பெண்குயின் படமும் இத்தளத்திலேயே வெளியாகி ரசிகர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

யூடியூபில் அதிகமுறை பார்க்கப்பட்ட டாப் 5 தமிழ் பாடல்கள் இதோ.!!

யூடியூபில் அதிக ரசிகர்களால் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்பட பாடல்களின் பட்டியல் வெளியாகியுள்ளது தமிழ் திரைப்படங்களின் டிரைலர்கள் ஒவ்வொரு முறையும் இணையதளத்தில் வெளிவரும் பொழுது அதிக அளவில் ரசிகர்கள் கண்டு மகிழ்வதோடு அதனை பதிவு செய்வதற்காகவும் பல ரசிகர்கள் காத்துக் கொண்டிருப்பார். ஆனால் திரைப்படங்களில் இடம்பெறும் பாடல்களுக்கு கிடைக்கும் ரசிகர்களின் வரவேற்பே பெரிய வெற்றியாக கருதப்படுகிறது. அவ்வகையில் ரசிகர்களால் யூடியூப்பில் அதிக அளவு கண்டு ரசிக்கப்பட்ட பாடல்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. மாரி திரைப்படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரிலீஸாகும் ஜகமே தந்திரம்… முடிவுக்குக் கொண்டு வந்த இயக்குனர் கார்த்திக்…!!

ஜகமே தந்திரம் திரைப்படம்  ஓடிடியில் ரிலீஸாவதாக வந்த வதந்திகளை இயக்குனர் கார்த்திக் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்பின் காரணமாக திரையரங்குகள் 100 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டுள்ளது. இதனால் திரைக்கு வர தயாராக இருந்த புதிய படங்கள் தியேட்டர் அதிபர்களின் எதிர்ப்பை மீறி இணையதளத்தில் நேரடியாக ரிலீஸ் ஆகி வருகிறது. சமீபத்தில் ஜோதிகாவின் “பொன்மகள் வந்தாள்” மற்றும் கீர்த்தி சுரேஷின் “பென்குயின்” படங்கள் ஓடிடி தளத்தில் வெளியானது. இதேபோன்று அடுத்தடுத்து பல படங்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கவுதம் மேனனின் அடுத்த ரிலீஸ்… எதிர்பார்ப்புகளுடன் ரசிகர்கள்…!!!

கௌதம் மேனனின் அடுத்த படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர் இயக்குனர் கௌதம் மேனனை நாம் போலிஸ் அதிகாரி வேடத்தில் கடைசியாக கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தில் பார்த்தோம். அதேநேரத்தில், “கார்த்திக் டயல் செய்த எண்”, என்ற குறும்படத்தை சிம்பு,  திரிஷாவை வைத்து  கவுதம் இயக்கி கொண்டிருந்தார். “ஒரு சான்ஸ் கொடு”, என்ற இசை ஆல்பத்தையும் இயக்கியுள்ளார். இதில் மேகா ஆகாஷ் மற்றும் கலையரசன் நடித்திருந்தனர். மேலும் இயக்குனர் கௌதம், சியான் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர்…வில்லன்…எதுனாலும் ஓகே…மனம் திறந்த நடிகர்…!

ரசிகர்களுக்கு பிடித்துள்ளது…ஹீரோவா மட்டுமல்ல இப்படியும் நடிப்பேன்..!!   சென்னை- 600028, ஆர்.கே நகர், சுந்தரபாண்டியன் போன்ற பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து. பலரின் பாராட்டுக்களை பெற்ற இனிகோ பிரபாகரன் விரைவில் 2 புதிய படங்களில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். எனவே துணை கதாபாத்திரத்தில் நடித்த இனிகோ இப்பொது கதாநாயகன் அந்தஸ்திற்கு உயர்ந்துள்ளார்.   இது குறித்து இனிகோ கூறுகையில் “ஆர்.கே நகர் திரைப்படத்தில் வில்லனாக நடித்தேன். அந்த பாத்திரம் ரசிகர்களையும் என்னையும் பெரிதும் கவர்ந்துள்ளது. மேலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தற்கொலை செய்ய தோணுச்சு” இதனால தான் மீண்டு வந்தேன் – யுவன் சங்கர்

 சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் பேசிய யுவன் தனக்கு தற்கொலை செய்யும் எண்ணம் இருந்தது குறித்து தெரிவித்துள்ளார்.  தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன் சங்கர் ராஜா, இவர் சமீபத்தில் சமூக வலைத்தளம் வழியாக ரசிகர்களுடன் பேசினார். அப்போது ரசிகர் ஒருவர் ‘அண்ணா, உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய அச்சம் என்ன? நீங்கள் அதிலிருந்து மீண்டது எப்படி?” என்று கேட்டுள்ளார். அதற்கு யுவன் அளித்த பதில், “இஸ்லாமிய மதத்தை ஏற்றுக் கொள்ளும் முன்பு எனக்கும் பலமுறை தற்கொலை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போதும்டா சாமி…..எதுக்குடா பொண்ணா பொறந்தோம்னு இருக்கு…. சின்மயி வேதனை …!!

போதும்டா சாமி என்று பிரபல பின்னணி பாடகியாக வலம்வரும் சின்மயி தனது சமூக வலைத்தள பக்கத்தில் வேதனையோடு பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் பரபரப்பான கொரோனா வைரஸ்  ஒரு பக்கம் இருக்கையில் மற்றொரு பக்கம் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை குறித்த செய்திகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது. அறந்தாங்கி பகுதியில் 7 வயதே ஆன சிறுமி ஜெயப்பிரியாவிற்கு, பாலியல் வன்கொடுமையால்  படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது .இதனையடுத்து தமிழக திரைத்துறையினர் பலர் ஜெயப்பிரியாவிற்கு நடந்த அநீதிக்காக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஆந்தலாஜி” செப்டம்பர் 2020இல்…. தரமான சம்பவம் காத்திருக்கு….!!

ஆணவம் கொலையை மையமாக வைத்து பிரபல இயக்குநர்கள் இணைந்து திரைப்படம் ஒன்றை இயக்கி உள்ளனர். தமிழகத்தில் அவ்வப்போது மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்த கூடிய ஒரு விஷயம் என்னவென்றால் அது ஆணவக்கொலை தான். வருடத்திற்கு கட்டாயம் இப்படி ஒரு சம்பவம் தமிழகத்தில் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது. தனக்குப் பிடித்த பெண்ணையோ, ஆணையோ சாதி மறுப்பு திருமணம் செய்ய முற்படும் போது அவர்கள் மிக தாழ்ந்த ஜாதியினர் ஆக இருக்கும் பட்சத்தில் இந்த ஆணவக்கொலை நிகழ்த்தப்படுகிறது. இதற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஸ்பைடர் மேனாக மாறிய சமந்தா……. வைரலாகும் நெட்டிசன்கள் மீம்…..!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தமிழ் மற்றும்  தெலுங்கு ஆகிய மொழிகளில்  நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் .இவர் அடுத்து தமிழில்  விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோருடன் இணைந்து  நடிக்க உள்ளார். இந்நிலையில்  நடிகை சமந்தா தன் வீட்டில் யோகா செய்யும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பதிவிட்டு ” கார்டனிங்ற்கு அடுத்ததாக நான் என்ஜாய் செய்யும் மற்றொரு விஷயம் யோகா ” என […]

Categories
சினிமா தமிழ் சினிமா

4,00,000 உயிர்கள்…. கண் முன் காண்பீர்கள்…. கமல்ஹாசன் ட்விட்….!!

ரத்த தானம் செய்வதன் மூலம் உயிர் காப்பதை நீங்கள் உங்கள் கண் முன்னே காண்பீர்கள் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். உலக ரத்த தான தினமான இன்று ரத்த தானம் குறித்து நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தனது நற்பணி மன்றத்தை சேர்ந்தவர்கள் தொடர்ந்து 4 லட்சம் யூனிட்க்கும் மேல் ரத்த தானம் செய்து வந்துள்ளனர். 4 லட்சத்திற்கும் மேலான உயிர்களைக் காப்பதற்கான முயற்சி இது. நீங்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

டிடி கண்ணு என்னாச்சு…..? வெளியான புகைப்படம்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

விஜய் டிவி தொகுப்பாளினி டிடி யின் மேக்கப் இல்லாத புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் விஜய் தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளினியான டிடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மேக்கப் இல்லாத புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். சமீபத்தில் காலில் அடிபட்டு கட்டுப் போட்டு இருந்த டிடியின் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை சோகத்தில் மூழ்கச் செய்தது. இந்நிலையில் டிடி  தற்போது மேக்கப் இல்லாமல் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். https://www.instagram.com/p/B_5dpntDI50/?utm_source=ig_web_copy_link இதில் தனது கண்களை பச்சையாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இது பேபி சாராவா….? அடுத்த ஹீரோயின் இவங்கதான் போல… ஆச்சர்யத்தில் ரசிகர்கள்…!!

தெய்வத்திருமகள் பேபி சாராவின் தற்போதைய புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது விக்ரம் அனுஷ்கா நடித்த ஏ.எல்.விஜய் இயக்கிய தெய்வத்திருமகள் படத்தின் மூலம் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பேபி சாரா. அதனைத்தொடர்ந்து ஏ.எல்.விஜய் இயக்கிய சைவம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். குழந்தை நட்சத்திரமாக ரசிகர்கள் மனதை கவர்ந்த பேபி சாரா தற்போது குமாரி சாராவாக மாறி சமூக வலைதளங்களில் தனது தற்போதைய புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார். பேபி சாராவின் தற்போதைய புகைப்படங்கள் சமூக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தல அஜித் விருப்பம் இல்லாமல்… வெறுப்புடன் நடித்த படம் இதுதானாம்…!!

அஜித் குமார் விருப்பமின்றி வெறுப்புடன்  தயாரிப்பாளருக்கு இந்த படத்தை நடித்து கொடுத்துள்ளார் தமிழ் திரையுலகில் பல வெற்றிப்படங்களை கொடுத்து ரசிகர்களின் மத்தியில் தல என்று நிலைத்திருக்கும் அஜித்குமார் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகின்றார். ஆனால் கொரோனா தொற்று பரவலின் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு அனைத்து பிரச்சனைகளும் சுமூகமாக தீர்ந்த பிறகு மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. ரசிகர்களால் கொண்டாடப்படும் தல அஜித் பல தோல்விப் படங்களையும் கொடுத்துள்ளார். அதில் அஜித்குமார் சிறிதும் விருப்பம் இன்றி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஓ மை கடவுளே…. மக்கள் செல்வனின் வைரலான வேண்டுகோள்…..!!

பசி என்ற நோய்க்கும் நல்ல தடுப்பூசியை கண்டுபிடிக்க கடவுளிடம் விஜய் சேதுபதி கேட்டு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.  நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மக்கள் வேலைக்கு செல்ல முடியாமலும் பணம் இல்லாமலும் பசியில் வாடி வருகின்றனர். விரைவில் கொரோனாவை கட்டுப்படுத்த மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொற்றை விடவும் கொடிய நோயான பசிக்கு ஒரு நல்ல தடுப்பூசியை கண்டுபிடிச்சா எவ்வளவு நல்லா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மகிழ்ச்சியின் உச்சத்தில் நெப்போலியன்….. கிடைத்த விலைமதிப்பில்லா பரிசு….!!

நெப்போலியனின் மூத்தமகன் Muscular Dystrophy நோயினால் பாதிக்கப்பட்ட நிலையிலும் பட்டம் பெற்று சாதனை புரிந்தது மகிழ்ச்சி அளித்துள்ளது பழைய சினிமாக்களில் தனது நடிப்பை வெளிப்படுத்தி ஏராளமான பாராட்டுக்களை குவித்த நடிகர் நெப்போலியன் தற்போது தனது குழந்தைகளுக்காக அதிலும் மூத்த மகன் தனுஷ்காக  தனது வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டு அமெரிக்காவில் டெனசி மாகாணத்தில் வாழ்ந்து வருகிறார். நேற்று முன்தினம் மூத்தமகன் தனுஷ் பல்கலைக்கழகத்தின் BA  அணிமேஷன் எனும் நான்கு வருட படிப்பை வெற்றிகரமாக முடித்து பட்டம் பெற்றுள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா பல்சுவை

60 படங்கள்… 45 விருதுகள்….. ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கும் கனவு நாயகி…!!

தமிழ் திரையுலகை பொருத்தவரை கேரளா ஆந்திரா மற்றும் வடமாநிலங்களில் இருந்து வரும் நடிகைகள் தமிழ் ரசிகர்களின் மனதில் நிலை கொண்டு இருப்பது வழக்கம். ஆனால் 2002 ஆம் ஆண்டு மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி 20 ஆண்டுகளுக்கு மேலாக  ரசிகர்களின் மனதில் தன லட்சுமியாகவும், ஜானுவாகவும் நிலைத்து நிற்கிறார் நம்ம சென்னை நடிகை திரிஷா. 2002 ஆம் ஆண்டு சூர்யா லைலா திரிஷா நடிப்பில் வெளிவந்த மௌனம் பேசியதே படத்தில் திரிஷா கதாநாயகியாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா பல்சுவை

இளைஞர்களின் கண்களில் ஏக்கத்தை உருவாக்கி…. ஜெஸ்ஸியாக நிலைத்து நிற்கும் திரிஷா…!!

தமிழ் திரையுலகில் அறிமுகமான திரிஷா பல வெற்றிப்படங்களை கொடுத்ததற்கு முக்கிய காரணமாக அமைந்தது அவர் தேர்வு செய்யும் கதாபாத்திரங்களே.  சரியான கதாபாத்திரத்தை தேர்வு செய்வதோடு அதற்கு உயிர் ஊட்டும் விதமாக தனது நடிப்பையும் வெளிப்படுத்துபவர்.  திரையுலகில் கால் பதித்து இருபது வருடங்களை கடந்த நிலையிலும் பலரது மனதில் கனவுக்கன்னியாக நிலைத்து நிற்பவர் திரிஷா. இளைஞர்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடிக்க காரணமாக இருந்த முக்கிய படங்கள் கில்லி மற்றும் விண்ணைத்தாண்டி வருவாயா கில்லி படம் வெளியாகி 15 ஆண்டுகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா பல்சுவை

திரிஷாவின் திரை வாழ்க்கையின் தொடக்கம்

தமிழ் திரையுலகில் தனது நடிப்பு திறமையால் பலரது மனதில் கனவு கன்னியாக நிலைபெற்றவர் திரிஷா. திரைத்துறையில் கால் பதிப்பதற்கு முன்பாக முதலில் மாடலிங் துறையில் கோல் ஊன்றினார் த்ரிஷா. 1999இல் மிஸ் சேலம் பட்டத்தையும் மிஸ் சென்னை பட்டத்தை வென்றார். 2001 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்று மிஸ் ப்யூடிஃபுள் ஸ்மைல் பட்டத்தையும் வென்றார். திரிஷா ஹார்லிக்ஸ், விவேல் சோப்பு, உதயம் பருப்பு என பல விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்த பிறகு திரிஷாவின் முகம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா பல்சுவை

“விண்ணை தாண்டி வருவாயா” வரிக்கு உயிரூட்டிய திரிஷா…!!

“விண்ணை  தாண்டி வருவாயா”  இந்த காதல் வரிகளுக்கு சொந்தக்காரர் திரிஷா. ஒட்டுமொத்த இளைஞர்களையும் ஜெஸ்ஸி என்ற வார்த்தைக்குள் சிக்கவைத்த வித்தைக்காரரும் இவரே. மௌனத்தில் பேசிய சந்தியா முதல் வருஷத்தில் மழையாய் பொழிந்த சைலஜா வரை. காதலில் கில்லி அடித்த தனலட்சுமி முதல் கோடியில் சொல்லி அடித்த ருத்ர வரை,சாமியில் பவ்யமான புவனா முதல் 96 படத்தில்  உள்ளத்தை கவர்ந்தது ஜானு வரை அனைத்து கதாபாத்திரங்களிலும் கச்சிதமாய் பொருந்தியவர்  இவர். இந்த நாயகி கனவுக்கன்னியாக மட்டுமில்லாமல் கனவு கலை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘கண்ணான கண்ணே’ பாடலை இசைத்த பிரபல தொகுப்பாளரின் மகள்… மகிழ்ச்சியில் தல ரசிகர்கள்!

தொகுப்பாளர் கோபிநாத் மகள் அஜித்தின் பாடலை கிட்டாரில் இசைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது அஜித் நடிப்பில் சென்ற வருடம் வெளிவந்த திரைப்படம் விசுவாசம் இப்படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்களை ஈர்த்த நிலையில் கண்ணான கண்ணே பாடல் அனைவரது வரவேற்பையும் பெற்ற பாடலாக அமைந்தது. டி இமான் இசையமைத்த இந்த பாடலை சித் ஸ்ரீராம் பாடினார். இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் நீயா நானா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கோபிநாத் மகள் வெண்பா விசுவாசம் திரைப்படத்தின் கண்ணான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கொரோனா நிவாரணம்… அவரு கொடுத்துட்டாரு… நீங்களும் கொடுங்க… நடிகர்களிடம் உதவி கேட்கும் லாரன்ஸ்!

கொரோனா நிவாரண நிதி உதவியாக ராகவா லாரன்ஸ் நடிகர்களிடம் உதவி கேட்டு வேண்டுகோள் வைத்துள்ளார். இது தொடர்பாக நடிகர் ராகவா லாரன்ஸ்அவரது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது, நான் கொரோனா வைரஸின் நிவாரண நிதிக்காக ரூ.3 கோடி வழங்குவதாக அறிவித்தேன். அதன் பிறகு பெரும்பாலான மக்களும், பிற சங்கங்களை சேர்ந்தவர்களும் என்னிடம் உதவி கேட்க அணுகினர். ஆகவே வினியோகஸ்தர் சங்கத்துக்கு ரூ.15 லட்சமும், நடிகர் சங்கத்திற்கு ரூ.25 லட்சமும், துப்புரவு பணியாளர்களுக்கு ரூ.25 லட்சமும் வழங்கியுள்ளேன். மக்களுக்கு சேவை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் சந்திரமுகியாக வருவாரா ஜோதிகா?… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

சந்திரமுகி 2-ம் பாகத்தில் நடிகை ஜோதிகா நடிப்பாரா? என எதிர்பார்க்கபடுகிறது. 2005ம் ஆண்டு வெளியாகி வசூல் குவித்த படம் தான் சந்திரமுகி. இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகை ஜோதிகா, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா என பலரும் நடித்திருந்தனர். இப்படத்தை பி.வாசு இயக்கி இருந்தார். இப்படம் முன்னாடியே ஷோபனா, மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் மணிசித்ரத்தாளூ என்றும், கன்னடத்தில் விஷ்ணுவர்த்தன், சவுந்தர்யா நடிப்பில் ‘ஆப்தமித்ரா’ என்ற பெயர்களிலும் வெளியாகி பெருமளவில் வெற்றி பெற்றன. அதன்பிறகு தமிழில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெளியானது TRP லிஸ்ட்… விஜய் டிவியை ஓவர் டேக் செய்த கே.டிவி… முதலிடம் யாருக்கு?

கொரோனா ஊரடங்கால் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவி தற்போது                        TRP-ல் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.  தமிழ் தொலைக்காட்சிகளுக்கு மத்தியில் சமீப காலமாகவே கடுமையான போட்டி நிலவி கொண்டிருக்கிறது. ஆனால் தற்போது கொரோனா ஊரடங்கால் முன்னணி தொலைக்காட்சிகளில் எந்த ஒரு நிகழ்ச்சியையும் உடனுக்குடன் ஒளிபரப்ப இயலவில்லை. இக்காரணத்தினால் படங்களும், முன்பு ஒளிபரப்பிய நிகழ்ச்சிகளும் மறுஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இப்பொழுது கொரோனா ஊரடங்கால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எனக்கு இப்போ சமைக்க தெரியும்…எல்லோரும் ருசிக்க சாப்புடுறாங்க…அசத்தும் ராஷி கன்னா…!!

கொரோனா ஊரடங்கில் நான் மிகவும் ருசியாக சமைப்பதற்கு கற்றுக்கொண்டேன் என நடிகை ராஷி கன்னா கூறியுள்ளார். கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அனைத்து திரை பிரபலங்களும் வீட்டில் தங்களுக்கு பிடித்த செயல்கள் என குடும்பத்தோடு பொழுதை கழிக்கின்றனர். அந்த வகையில் தமிழ் மொழி சினிமாவில் இமைக்கா நொடிகள், அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன் போன்ற படங்களில் நடித்துள்ளார் நடிகை ராஷி கன்னா. இவர் தெலுங்கு மொழி சினிமாவில் முன்னணி ஹீரோயினியாக உள்ளார். நடிகை ராஷி […]

Categories
இந்திய சினிமா சினிமா

கணவர் இறந்து விடுகிறாரா.?..இல்லையா.?..திகில் வெப் சீரியலில் நடிக்கும் பிரியாமணி என்ன சொல்கிறார்…!!

நடிகை பிரியாமணி தற்போது திகில் கதைக்களத்தை கொண்ட ஒரு வெப் தொடரில் நடித்து வருகிறார்.  நடிகை பிரியாமணி நடித்து பாராட்டுகளை பெற்ற வெப் தொடர் ‘தி பேமிலிமேன்’ ஆகும்.  இதில் அவர் நடித்தது டிஜிட்டல் தள ரசிகர்களிடமிருந்து நல்ல வரவேற்பை பெற்றார். இப்பொழுது அவர் அதீத் என்ற மற்றொரு வெப் தொடரிலும் நடித்து கொண்டிருக்கிறார். இந்த தொடரில் அவரின் கதாபாத்திரம் ராணுவ அதிகாரியின் மனைவியாக நடிக்கிறார். இத்தொடர் பற்றி நடிகை பிரியாமணி கூறுவது; அவரது கணவனான இராணுவ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஆடிப்போன ரஜினி, கமல்”….அப்போது ராமராஜன் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

அந்த காலகட்டத்திலே ரஜினி, கமலை அசரவைக்கும் விதமாக நடிகர் ராமராஜன் 1 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளார். தமிழ் சினிமாவில் இன்றளவும் யாராலும் மறக்கமுடியாத ஒரு நடிகர் ராமராஜன். இவர் முதலில் ஒரு தியேட்டரில் வேலை பார்த்தார்.  பின்னர் ரஜினி, கமலுக்கு சமமாக சினிமாவில் கால் பதித்தார். இது பலருக்கும் ஆச்சர்யம் தான். இவரது கரகாட்டக்காரன் படம் வெளியான காலத்தில்,  திரையுலகின் உச்சத்தில் இருந்த ரஜினி, கமல், விஜயகாந்த் போன்ற நடிகர்களின் படங்களையும் அதிரவைத்த படமாகும். ஒரு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நான் ஏன் போகணும்…! ” நான் போக மாட்டேன்”… பிரசன்னா அதிரடி முடிவு…!!

யாருடைய விமர்சனங்களுக்கும் அஞ்சவில்லை, சமூக வலைத்தளமான ட்விட்டரில் இருந்து நான் விலக மாட்டேன் என நடிகர் பிரசன்னா தெரிவித்துள்ளார். மலையாள பிரபல நடிகர் துல்கர் சல்மான் தயாரித்து, இயக்கியுள்ள படம் வரனே அவஷ்யமுண்டு, இப்படத்தை இயக்குனர் அனூப் சத்யன் இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகர் சுரேஷ் கோபி வளர்க்கும் நாய் ஒன்றிற்கு பிரபாகரன் என்ற பெயர் சூட்டி இருப்பார்கள். இந்த கட்சி தமிழ் மக்களிடையே பெரும் சர்ச்சையை கிளப்பி விட்டது. இதனால் இந்த விமர்சனங்களுக்கு நடிகர் துல்கர் மன்னிப்பு […]

Categories

Tech |