விஐபி படத்தால் நடிகர் தனுஷ் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் நடிப்பில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் வேலையில்லா பட்டதாரி. வேல்ராஜ் இயக்கியிருந்த இந்த படத்தில் அமலாபால் கதாநாயகியாக நடித்திருந்தார். தனுஷ் தயாரித்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். மேலும் இந்த படத்தில் நடிகர் தனுஷ் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தது. ஆனால் அந்த காட்சியில் புகைப்பிடித்தல் […]
Tag: தமிழ் சினிமா
நடிகை சமந்தா பெண் பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. சமீபத்தில் இவர் தனது கணவர் நாக சைதன்யாவை பிரிவதாக அறிவித்தார். தற்போது இவர் வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்து வருகிறார். மேலும் சமூக வலைத்தளங்களில் நாக சைதன்யாவுடன் இருந்த புகைப்படங்களை நீக்கிய சமந்தா, சுற்றுப்பயணம் செல்லும் இடங்களில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் பெண் பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோர்களுக்கு சமந்தா அறிவுரை வழங்கி இருக்கிறார். […]
எனிமி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் எனிமி. ஆனந்த் சங்கர் இயக்கியுள்ள இந்த படத்தில் ஆர்யா வில்லனாக நடித்துள்ளார். மேலும் இந்த படம் தீபாவளிக்கு தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் எனிமி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றுள்ளது. இதில் பேசிய நடிகர் விஷால், ‘என்னுடைய நல்ல நண்பர் புனித் ராஜ்குமார் இறந்ததற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். எனிமி […]
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலில் தீபா இணைந்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் தீபா. இந்த நிகழ்ச்சியில் தனது நகைச்சுவையான பேச்சின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். இதை தொடர்ந்து மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை சீசன் 3 நிகழ்ச்சியில் தீபா தனது கணவருடன் கலந்து கொண்டுள்ளார். மேலும் இவர் படங்களிலும், சீரியல்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் தீபா புதிதாக ஒரு சீரியலில் நடிக்க […]
புனித் ராஜ்குமார் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியில் 3 ரசிகர்கள் உயிரிழந்துள்ளனர். பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் நேற்று காலை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவரது திடீர் மறைவு திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று புனித் ராஜ்குமாரின் மறைவு செய்தி கேட்டு 3 ரசிகர்கள் உயிரிழந்துள்ளனர். கர்நாடக மாநிலம் பெல்காம் நகரைச் சேர்ந்த ராகுல் (21) என்பவர் புனித் ராஜ்குமாரின் தீவிர ரசிகர். புனித் ராஜ்குமாரின் மறைவு செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்த […]
நம்பிராஜனிடம் வடிவேலு அடி வாங்கியதாக பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் வடிவேலு. ஒரு காலத்தில் ஏராளமான படங்களில் நடித்து அசத்தி வந்த வடிவேலு, பின் பெரிதாக படங்களில் நடிக்கவில்லை. மேலும் வடிவேலு மீது பல்வேறு விதமான சர்ச்சை பேச்சுகள் எழுந்தன. சரியான நேரத்திற்கு வடிவேலு படப்பிடிப்பு தளத்திற்கு வருவதில்லை என்றும், தேவையில்லாத குடைச்சல்கள் கொடுத்ததால் இவரை வைத்து படம் எடுக்க இயக்குனர்கள் தயங்கியதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் […]
சர்வைவர் நிகழ்ச்சி குறித்து காயத்ரி பல தகவல்களை பகிர்ந்துள்ளார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதிதாக ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் நிகழ்ச்சி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த வாரம் இந்த நிகழ்ச்சியிலிருந்து காயத்ரி வெளியேறினார். அம்ஜத்கானிடம் தோல்வி அடைந்ததால் அவர் வெளியேற்றப்பட்டார். இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இருந்தே கொடுக்கப்படும் டாஸ்குகளில் அவ்வப்போது மட்டும் தான் காயத்ரி வெற்றி பெற்றிருக்கிறார். அதிக அளவு தோல்வியை சந்தித்து மூன்றாம் உலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டார். மேலும் மூன்றாம் உலகத்தில் 40 நாட்களுக்கு […]
கார்த்தி, ஜோதிகா இருவரும் படம் இயக்குவதில் ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. திரையுலகில் நடிகைகள் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் இயக்குனராக மாற ஆசைப்படுவார்கள். அதன்படி சாவித்திரி, விஜயநிர்மலா பானுமதி உள்ளிட்டோர் இயக்குனர்களாக மாறியிருக்கின்றனர். இப்போது உள்ள நடிகர், நடிகைகளில் சிலருக்கு மட்டும் தான் படம் இயக்கும் ஆசை இருக்கிறது. இந்நிலையில் நடிகர் கார்த்தி, நடிகை ஜோதிகா இருவரும் படம் இயக்குவதில் ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் மணிரத்னத்திடம் நடிகர் கார்த்தி உதவி […]
ராட்சசன் பட இயக்குனர் ராம்குமார், நடிகர் சிவகார்த்திகேயனிடம் கதை கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் விஷ்ணு விஷால் நடிப்பில் ராம்குமார் இயக்கத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான ராட்சசன் படம் சூப்பர் ஹிட் அடித்தது. இதையடுத்து இயக்குனர் ராம்குமார் இயக்கும் படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. ராம்குமாரிடம் கதை கேட்ட தனுஷ், ‘இந்த கதை ஒரு ஹாலிவுட் படத்தின் சாயலில் இருக்கிறது. இதில் ஒரு சில மாற்றங்கள் செய்யுங்கள்’ என கூறியுள்ளார். ஆனால் […]
நடிகர் சூர்யா நேற்று சமூக வலைதளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ஜெய்பீம் திரைப்படம் வருகிற நவம்பர் 2-ஆம் தேதி நேரடியாக அமேசான் பிரைமில் ரிலீஸாக உள்ளது. இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கியுள்ள இந்த படத்தில் ரெஜிஷா விஜயன், லிஜோமொல் ஜோஸ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தை சூர்யா தனது 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இந்நிலையில் சூர்யா நேற்று […]
ஜெய்பீம் படத்தில் வழக்கறிஞராக நடித்தது குறித்து சூர்யா விளக்கமளித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா தற்போது டி.ஜே.ஞானவேல் இயக்கியுள்ள ஜெய்பீம் படத்தில் வழக்கறிஞராக நடித்துள்ளார். சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் ரெஜிஷா விஜயன், லிஜோமொல் ஜோஸ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இந்த படம் வருகிற நவம்பர் 2-ஆம் தேதி நேரடியாக அமேசான் பிரைமில் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் […]
நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தை தனது பேரனுடன் பார்த்ததாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். தற்போது இவர் நடிப்பில் சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படம் உருவாகியுள்ளது. கிராமத்து கதையம்சம் கொண்ட இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, மீனா, சூரி, சதீஷ், ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இந்த படம் தீபாவளிக்கு தியேட்டர்களில் ரிலீஸாக […]
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்திலிருந்து நயன்தாரா விலகியுள்ளதாக தகவல் பரவி வருகிறது. தமிழ் திரையுலகில் ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. இதையடுத்து இவர் தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார். தற்போது அட்லீ பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த […]
நடிகை ரிது வர்மா பேட்டி ஒன்றில் திருமணம் குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார். தமிழ் திரையுலகில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமடைந்தவர் ரிது வர்மா. இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து வருகிறார். அதன்படி தற்போது தெலுங்கில் நாக சவுர்யா நடிப்பில் உருவாகியுள்ள வருடு காவலேனு என்ற படத்தில் ரிது வர்மா கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த வாரம் வெளியாக உள்ள […]
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. போட்டியாளர்களுக்கு டாஸ்குகள் கொடுக்கும் போது சிறு சிறு சண்டைகள் வருகின்றன. ஆனால் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவு நிகழ்ச்சி விறுவிறுப்பு அடையவில்லை. மேலும் புரோமோக்களும் சுவாரஸ்யமாக இல்லை என்பது தான் ரசிகர்களின் கருத்து. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. அதில் அண்ணாச்சி […]
நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படம் உருவாகியுள்ளது. போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே வலிமை படத்தின் முதல் பாடல் மற்றும் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய […]
நடிகர் சிவகுமார் இன்று தனது 80-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். 40 வருடங்களாக திரைப்படங்களிலும், சின்னத்திரை தொடர்களிலும், நாடக மற்றும் சொற்பொழிவு மேடைகளிலும் பங்கேற்று உதாரண கலைஞராக திகழ்பவர் சிவகுமார். இன்று இவர் தனது 80-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். சிவகுமார் கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்தார். பிறந்த பத்தாவது மாதத்தில் சிவகுமார் தனது தந்தையை இழந்தார். இவர் கடந்த 1965-ஆம் ஆண்டு வெளியான காக்கும் கரங்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். […]
அஸ்வின் ஹீரோவாக நடிக்கும் என்ன சொல்ல போகிறாய் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தொலைக்காட்சி சீரியல்கள், ஆல்பம் பாடல்கள், திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தவர் அஸ்வின். இதையடுத்து இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தார். தற்போது அறிமுக இயக்குனர் ஹரிஹரன் இயக்கியுள்ள என்ன சொல்ல போகிறாய் படத்தில் அஸ்வின் கதாநாயகனாக நடித்துள்ளார். தேஜு அஸ்வினி, அவந்திகா மிஸ்ரா இருவரும் இந்த […]
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ஜெய்பீம் படத்தின் புதிய புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராக தனது 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரித்து வழங்கி வருகிறார். தற்போது த.ச.ஞானவேல் எழுதி இயக்கியுள்ள ஜெய்பீம் படத்தை சூர்யா தயாரித்துள்ளார். இந்த படத்தில் ரெஜிஷா விஜயன், லிஜோமொல் ஜோஸ், பிரகாஷ் ராஜ், மணிகண்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு ஷான் […]
தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிக்கு சச்சின் டுவிட்டரில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். நேற்று டெல்லியில் 67-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. இந்த விருதை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வழங்கினார். இதையடுத்து ரஜினிக்கு திரையுலகப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். There are very few actors who are able to create […]
சூளைமேட்டில் அரசு புறம்போக்கு நிலம் 2,500 சதுர அடியை ஆக்கிரமித்து மன்சூர் அலிகான் வீடு கட்டுவதாக மாநகராட்சி அதிகாரிகள் அவருடைய வீட்டிற்கு சீல் வைத்தனர். இந்த நிலையில் தன்னுடைய வீட்டுக்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் வைத்துள்ள சீலை அகற்றக்கோரி அவருடைய மனைவி அபிதா பானு உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், எந்த ஒரு மின் முன் அறிவிப்பும் இல்லாமல் வீட்டை விட்டு வெளியேற்றியது சட்டவிரோதம். தங்களுடைய உடமைகள் மட்டும் அல்லாமல் இரண்டு வெளிநாட்டு பூனைகளையும் வைத்து அதிகாரிகள் […]
ரஜினியை கட்டாயப்படுத்தி நடிக்க அனுப்பி வைத்ததாக அவரது நண்பர் ராஜ்பகதூர் தெரிவித்துள்ளார். நேற்று டெல்லியில் 67-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் 2019-ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். மேலும் இந்த விழாவில் பேசிய ரஜினி, ‘நான் நடத்துனராக இருந்தபோது என் நண்பர் ராஜ்பகதூர் தான் எனக்குள் இருக்கும் நடிப்புத்திறனை அடையாளம் கண்டுகொண்டார். […]
நடிகர் எஸ்.ஜே.சூர்யா மாநாடு படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, கருணாகரன், மனோஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தற்போது இந்த படத்தின் […]
தெலுங்கு நடிகர், நடிகையர் குறித்து அவதூறு பரப்பும் யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என விஷ்ணு மஞ்சு தெரிவித்துள்ளார். தெலுங்கு திரையுலகின் நடிகர்கள் சங்கமான மா அமைப்புக்கான தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இதில் விஷ்ணு மஞ்சு அணி வெற்றி பெற்றது. மேலும் அவரை எதிர்த்து போட்டியிட்ட பிரகாஷ் ராஜ் அணி தோல்வியடைந்தது. இந்நிலையில் மா அமைப்பின் புதிய உறுப்பினர்களுக்கான முதல் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தெலுங்கு நடிகர், நடிகைகள் குறித்து அவதூறு பரப்பும் யூடியூப் […]
நடிகர் சிம்பு மீது பிரபல தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். பிரபல தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில், நான் கடந்த 2016-ஆம் ஆண்டு சிம்பு நடித்த ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தை தயாரித்து வெளியிட்டேன். இந்த படம் 50% நிறைவடைந்த நிலையில், சிம்பு என்னை அழைத்து இத்துடன் இந்த படத்தை ரிலீஸ் செய்துவிடலாம் என்றும், ஏதேனும் நஷ்டம் ஏற்பட்டால் […]
டி.இமானுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது வழங்கப்பட்டது. நேற்று டெல்லியில் 67-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. 2019-ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிக்கு வழங்கப்பட்டது. மேலும் அசுரன் படத்திற்காக தனுஷுக்கு சிறந்த நடிகர் விருது, சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கையாக நடித்த விஜய் சேதுபதிக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது, கேடி(எ) கருப்புதுரை படத்திற்காக நாக விஷாலுக்கு சிறந்த குழந்தை நட்சத்திர விருது, ஒத்த செருப்பு படத்திற்காக பார்த்திபனுக்கு சிறந்த […]
ஆர்யா அடுத்ததாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் ஆர்யா நடிப்பில் ஓடிடியில் வெளியான டெடி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . நாணயம், நாய்கள் ஜாக்கிரதை, டிக்டிக்டிக் போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்த சக்தி சௌந்தர்ராஜன் இந்த படத்தை இயக்கியிருந்தார். தற்போது மீண்டும் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடிக்க இருக்கிறார். இந்த படம் டெடி படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என கூறப்பட்டது. […]
பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்ற லிங்குசாமி ஆசைப்பட்டுள்ளார். தமிழ் திரையுலகில் ஆனந்தம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லிங்குசாமி. இவர் பிரபல இயக்குனர் விக்ரமனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இதைத்தொடர்ந்து லிங்குசாமி இயக்கத்தில் வெளியான ரன், சண்டக்கோழி, பையா போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து திடீரென ஏற்பட்ட நஷ்டம் காரணமாக லிங்குசாமி திரையுலகில் இருந்து சிறிது காலம் விலகி இருந்தார். தற்போது இவர் பிரச்சினைகள் அனைத்தையும் முடித்துவிட்டு மீண்டும் படம் ஒன்றை இயக்கி வருகிறார். […]
சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கையாக நடித்த விஜய் சேதுபதிக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. மத்திய அரசினால் இந்திய திரையுலகினருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது தான் தாதா சாகேப் பால்கே விருது. அமிதாப் பச்சன், சிவாஜிகணேசன், கே.பாலச்சந்தர் உள்ளிட்ட பலர் இந்த விருதினைப் பெற்றுள்ளனர். 2019-ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிக்கு அறிவிக்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக இந்த விழா நடத்தப்படாமல் இருந்த நிலையில், இன்று டெல்லியில் நடைபெற்றது. […]
ஆமிர் கான் நடித்த விளம்பர சர்ச்சை தொடர்பாக ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் ஆமிர் கான் பிரபல தனியார் டயர் நிறுவனத்தின் விளம்பரம் ஒன்றில் நடித்திருந்தார். சமீபத்தில் அந்த விளம்பரம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. அதில் ‘சாலைகள் பட்டாசு வெடிப்பதற்கு அல்ல, சாலைகள் கார்களுக்காக’ என்ற வசனத்தை ஆமிர் கான் பேசியுள்ளார். இந்த விளம்பரம் சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த டயர் நிறுவனத்திற்கும், ஆமிர் கானுக்கும் […]
தாதா சாகேப் பால்கே விருது பெறும் ரஜினிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மத்திய அரசினால் இந்திய திரையுலகினருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது தான் தாதா சாகேப் பால்கே விருது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு 2019-ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது. இதற்கு முன்பு தமிழ் திரையுலகில் கே.பாலச்சந்தர், சிவாஜி ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. தற்போது டெல்லியில் 67-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. […]
இறக்குமதி காருக்கு நுழைவு வரி செலுத்துவது தொடர்பான வழக்கில் தனி நீதிபதி தெரிவித்த கருத்துக்கள் தனிப்பட்ட முறையில் புண்படுத்தி உள்ளது என்று நடிகர் விஜய் வேதனை தெரிவித்துள்ளார். நுழைவு வரி செலுத்தவில்லை, நுழைவு வரியை தவிர்க்க வழக்கு தொடர்ந்திருப்பதாக கூறுவது தேவையற்ற கருத்துக்கள் என்றும் கஷ்டப்பட்ட உழைப்பில் கார் வாங்கப்பட்ட நிலையில் அதை நீதிபதி விமர்சித்திருப்பது தேவையற்றது என்றும் கூறியுள்ளார்.
இன்று டெல்லியில் 67-வது தேசிய திரைப்பட விருதுகள் விழா நடைபெறுகிறது. ஆண்டுதோறும் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகர், பிராந்திய திரைப்படங்கள் போன்ற பல பிரிவுகளின் கீழ் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விழா நடைபெறாமல் இருந்த நிலையில், இன்று டெல்லியில் உள்ள விக்யான் பவனில் 2019-ஆம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெறுகிறது. இந்த முறை தமிழ் திரையுலகிற்கு 7 தேசிய விருதுகள் […]
இசையமைப்பாளர் இனியவன் மாரடைப்பால் காலமானார். கவிஞர் வைரமுத்துவின் நெருங்கிய நண்பரான இவர் கவுரி, மனோகரி உள்ளிட்ட சில படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவருடைய மறைவுக்கு வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், “இனியவன் மரணம் செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். தேர்ந்த இயக்குனர்களிடம் இவர் கைகோர்த்து இருந்தால் திரையிசையை கலக்கி இருப்பார் என்று குறிப்பிட்டுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமடைந்தவர்கள் செந்தில் மற்றும் ஸ்ரீஜா. இவர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சீரியலில் ஜோடியாக நடித்த செந்தில் ஸ்ரீஜா இருவரும் நிஜ வாழ்க்கையிலும் ஜோடியாகிவிட்டனர். இந்நிலையில் நடிகர் செந்தில் சமீபத்தில் தனது பிறந்தநாளை கேரளாவில் உள்ள தனது மனைவி ஸ்ரீஜாவின் வீட்டில் வைத்து கொண்டாடியுள்ளார். மேலும் ஸ்ரீஜா தனது காதல் கணவருக்கு பேப்பர் கப்பலில் பூக்களை வைத்து பிறந்தநாள் வாழ்த்து அனுப்பியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோ […]
அண்ணாத்த படத்தில் இடம்பெற்ற வா சாமி பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த. சிவா இயக்கியுள்ள இந்த படத்தில் மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு, ஜார்ஜ் மரியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் மூன்று […]
மறைந்த ஹாலிவுட் நடிகர் பால் வாக்கர் மகளின் திருமணத்தில் தந்தை இடத்தில் நடிகர் வின் டீஸல் மணமகளுடன் மணமேடைக்கு வந்துள்ளார். பாஸ்ட் அண்ட் பியூரியஸ் படத்தின் மூலம் இந்திய ரசிகர்களிடையே பிரபலமடைந்தவர்கள் வின் டீஸல் மற்றும் பால் வாக்கர். பாஸ்ட் அண்ட் பியூரியஸ் படத்தின் முதல் ஆறு பாகங்களில் நடித்த பால் வாக்கர் கடந்த 2013-ஆம் ஆண்டு கார் விபத்தில் சிக்கி மரணமடைந்தார். இந்நிலையில் நடிகர் பால் வாக்கரின் மகள் மிடோ வாக்கருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த […]
நடிகர் ரஜினிகாந்த் தாதா சாகேப் பால்கே விருதை நான் எதிர்பார்க்கவே இல்லை என தெரிவித்துள்ளார். மத்திய அரசினால் இந்திய திரையுலகினருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது தான் தாதா சாகேப் பால்கே விருது. அமிதாப் பச்சன், லதா மங்கேஷ்கர், சத்யஜித்ரே உள்ளிட்ட பலரும் இந்த விருதினை பெற்றுள்ளனர். மேலும் தமிழ் திரையுலகில் கே.பாலச்சந்தர், சிவாஜி ஆகியோருக்கும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு 2019-ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு […]
தளபதி 66 படத்தில் இளம் நடிகை அனன்யா பாண்டே இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் விஜய் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் ‘தளபதி 66’ படம் குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி தளபதி 66 படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க இருக்கிறார். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த […]
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள மாறன் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் தற்போது மாறன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் மாறன் படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் மாஸ்டர் பட பிரபலம் மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு […]
இரவின் நிழல் படத்தை பார்த்து ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டியதாக பார்த்திபன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் பார்த்திபன் இயக்கி, தயாரித்து, நடித்த ஒத்த செருப்பு திரைப்படம் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படம் முழுவதும் பார்த்திபன் மட்டுமே நடித்திருந்தார். மேலும் சிறப்பு நடுவர் தேர்வுக்கான தேசிய விருதையும் இந்த படம் வென்றது குறிப்பிடத்தக்கது. தற்போது சிங்கிள் ஷாட்டில் இரவின் நிழல் என்ற படத்தை பார்த்திபன் இயக்கி முடித்துள்ளார். இந்த […]
நடிகை தமன்னா தெலுங்கு மாஸ்டர் செப் நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள் மீது வழக்கு தொடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச தொலைக்காட்சி நிகழ்ச்சியான மாஸ்டர் செப் நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ஒரே சமயத்தில் தொடங்கப்பட்டது. இதில் தமிழில் விஜய் சேதுபதியும், தெலுங்கில் தமன்னாவும் தொகுத்து வழங்கி வந்தனர். இந்த நிகழ்ச்சி எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை. இதையடுத்து சில வாரங்களுக்குப் பிறகு ரேட்டிங் இல்லை என நடிகை தமன்னாவை மாஸ்டர் செப் நிகழ்ச்சியில் […]
பீஸ்ட் படத்தில் அபர்ணா தாஸ் நடிக்கும் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார் . மேலும் யோகி பாபு, மலையாள நடிகை அபர்ணா தாஸ், செல்வராகவன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் இந்த […]
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான புதிய புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது பிக்பாஸ் 5-வது சீசன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் சனிக்கிழமை எபிசோடுக்கான புதிய புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில் கலக்கலான உடையில் என்ட்ரி கொடுக்கும் கமல், ‘மாத்தி மாத்தி பேசி உள்ள இருக்குறவங்கள வேணா ஏமாத்தலாம். ஆனால் வாத்திய ஏமாத்தவே முடியாது. கேட்க வேண்டிய கேள்விகள் நிறைய இருக்கு. ஏனா […]
விஷால், ஆர்யா இணைந்து நடித்துள்ள எனிமி படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வரும் விஷால் மற்றும் ஆர்யா இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் எனிமி. அரிமா நம்பி, இருமுகன், நோட்டா போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்த ஆனந்த் சங்கர் இந்த படத்தை இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் மிருணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ், பிரகாஷ் ராஜ், கருணாகரன், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மினி ஸ்டூடியோஸ் நிறுவனம் […]
விஷால் நடிப்பில் உருவாகியுள்ள எனிமி படத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் எனிமி. ஆனந்த் ஷங்கர் இயக்கியுள்ள இந்த படத்தில் ஆர்யா வில்லனாக நடித்துள்ளார். இந்த படம் தீபாவளி பண்டிகைக்கு தியேட்டர்களில் வெளியாகும் என படக்குழு அறிவித்தது. மேலும் அதே நாளில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த, சிம்புவின் மாநாடு ஆகிய படங்கள் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென மாநாடு திரைப்படம் தீபாவளி ரேஸிலிருந்து […]
நடிகை கீர்த்தி சுரேஷ் சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் 25-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் அண்ணாத்த, சாணிக் காயிதம் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் அண்ணாத்த படத்தில் கீர்த்தி சுரேஷ் ரஜினிக்கு தங்கையாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. வருகிற நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளிக்கு இந்த படம் தியேட்டர்களில் வெளியாக உள்ளது. நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழில் மட்டுமல்லாது பிற மொழி […]
நடிகர் உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் நெஞ்சுக்கு நீதி. அருண்ராஜா காமராஜ் இயக்கும் இந்த படத்தில் தான்யா ரவிச்சந்திரன், ஆரி, சிவாங்கி, ஷிவானி ராஜசேகர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து வழங்கும் இந்த படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார். மேலும் ரோமியோ […]
தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் பீஸ்ட் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து விஜய்யின் 66 வது படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கவுள்ளார். இந்தப் படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார்.இந்நிலையில் தளபதி -66 படத்தில் விஜய்க்கு ஜோடியாக யார் நடிக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்தது. இதனை அடுத்து விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் தான் இந்த படத்தில் நடிப்பார் என்று […]
ராட்சசன் பட இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் தமிழில் மட்டுமல்லாது ஹாலிவுட், பாலிவுட் படங்களிலும் நடித்து அசத்தி வருகிறார். தற்போது இவர் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் இவர் பல இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார். அந்த வகையில் ராட்சசன் படத்தை இயக்கி பிரபலமடைந்த ராம்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. ராம்குமார் தனுஷிடம் […]