Categories
சினிமா தமிழ் சினிமா

Bigg Boss Tamil 6: இதை பார்க்கும் போது…. நமக்கே சிரிப்பு வருது…. அமுதவாணனின் குசும்பு இதோ….!!!!

பிக்பாஸ்-6 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 ஒளிபரப்பாகிறது. இந்த பிக் பாஸ் வீட்டில் வீக்லி டாஸ்க் நடத்தப்படும். அந்த வகையில் இந்த வாரத்தின் வீக்லி டாஸ்காக நீதிமன்றம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நீதிமன்ற டாஸ்கில் ஹவுஸ்மேட்ஸ்கள் தங்களின் வழக்குகளை கூறி வழக்கறிஞரை தயார் செய்ய வேண்டும். இதில் நீதிபதியையும் ஹவுஸ்மேட்டுகள் எல்லோரும் சேர்ந்து தேர்வு செய்ய வேண்டும். இந்நிலையில்  காலையில் வெளியான இரண்டு புரோமோகளும் நீதிமன்ற டாஸ்க்கை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது!… ராகவா லாரன்ஸின் அதிகாரம் படம் நிறுத்தப்பட்டதா….? படக்குழுவினரின் பரபரப்பு விளக்கம்….!!!!

ராகவா லாரன்ஸ் நடித்த “அதிகாரம்” திரைப்படம் டிராப் ஆனதாக பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இந்திய நடன பயிற்றுனர், நடிகர் மற்றும் இயக்குனர் என திரையுலகை கலக்கிக் கொண்டிருக்கிறவர் தான் ராகவா லாரன்ஸ். இவர் முனி, காஞ்சனா, காஞ்சனா 2 மற்றும் காஞ்சனா 3 என தொடர்ந்து ஹாரர் காமெடி படங்களை இயக்கியுள்ளார். தற்போது காஞ்சனா திரைப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து வருகின்றனர். இந்தத் திரைப்படம் நடிகர் அஜய் குமார் நடிப்பில் “லக்ஷ்மி” என்ற பெயரில் ரீமேக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

டிராப்பான “கொரோனா குமார்”…. எதிர்பார்க்காத கூட்டணி…. நடிகர் சிம்புவின் நிலை என்ன….?

நடிகர் சிம்பு நடிக்கும் கொரோனா குமார் என்ற திரைப்படம் ட்ராப் ஆனதாக தகவல் வெளியாகியுள்ளது.  “மாநாடு” திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பால் உற்சாகமடைந்தார் நடிகர் சிம்பு. இயக்குனர் கெளதம்  மேனன் இயக்கத்தில் “வெந்து தணிந்தது காடு” மற்றும் இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் “பத்து தல” படங்களில் நடிக்க ஒப்பந்தமானார்  சிம்பு.  இதனைத் தொடர்ந்து கன்னடத்தில் இயக்குனர் நரதன் இயக்கத்தில் “முஃப்தி” என்ற திரைப்படத்தின்  தமிழ் ரீமேக் பணி தொடங்கி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்த தமிழ் ரீமிக் மூவி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கன்னகுழி அழகி ஸ்ருஷ்டியின் வேற லெவல் க்யூட் போட்டோஸ்….. வைரலாக்கும் ரசிகர்கள்….!!!!

கன்னத்து குழியழகியான நடிகை ஸ்ருஷ்டி டாங்கேவின் லேட்டஸ்ட்   போட்டோஸ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. ஸ்ருஷ்டி டாங்கே ஒரு இந்திய நடிகை, ஆவார். இவர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான டார்லிங் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர்  ஆரம்பத்தில் துணை வேடங்களில் தான் நடித்தார். பின்னர் மிஷ்கினின் “யுத்தம் செய்” என்ற படத்தில் நடித்தார். “ஏப்ரல் இடியட்” என்ற தெலுங்கு திரைப்படத்திலும் நடித்துள்ளார். இதனை அடுத்து  ரொமாண்டிக் த்ரில்லர் மேகாவில் முன்னணி குணாதிசயத்தை சித்தரித்து, பெயர் அம்சத்திற்குள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா…. இது யாரு தர்ஷா குப்தாவா….? பூங்குழலியாக மாறிய போட்டோஸ் இதோ….!!!!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வரும் பூங்குழலி வேடத்தில் மாறிய தர்ஷா குப்தா இணையத்தில் வைரலாகும் போட்டோஸ். சின்னத்திரையில் முதல் முறையாக முள்ளும் மலரும் சீரியலில் காலடி எடுத்து வைத்து அதன் பிறகு விஜய் டிவி, சன் டிவி சீரியல்களில் பிஷியாக நடித்து வருபவர் தான் தர்ஷகுப்தா. இவர் சின்னத்திரையில் அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையிலும் காலூன்றி தனக்கான அங்கீகாரத்தை பெற்று விட்டாலும் இவருக்கு நாளுக்கு நாள் சமூக வலைத்தளத்திலும் ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர். இவர் ஒரு நடிகையாக மட்டுமல்லாமல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்ன….? லோக்கல் என்ற சொல் தவறான வார்த்தையா….? “காரி” பட இயக்குனரின் பேச்சு….!!!!

அறிமுக இயக்குனர் ஹேமந்த் இயக்கத்தில் “காரி” என்ற திரைப்படத்தின் ஹீரோவாக நடிகர் சசிகுமார் நடித்துள்ளார். இந்தப் படத்தின் ஹீரோயினாக மலையாள நடிகை பார்வதி அருண் தமிழில் அறிமுகமாகிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி. இமான் இசையமைத்துள்ளார். இந்தத் திரைப்படத்தில் அம்மு அபிராமி, பிரேம், ஜேடி சக்கரவர்த்தி, ஆடுகளம் நரேன், நாகி நீடு மற்றும் ரெடின் கிங்ஸ்லி போன்ற பலர் இணைந்து நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ். லக்ஷ்மன் குமார் தயாரித்துள்ளார். இந்த திரைப்படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சினிமாவில் தமிழ் பெண்களின் ஆர்வம் இவ்வளவு தானா….? இயக்குனர் சற்குணத்தின் ஆவேச பேச்சு….!!!!

களவாணி, வாகை சூடவா, நையாண்டி மற்றும் சண்டிவீரன் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ஏ. சற்குணம் தற்போது நடிகர் அதர்வா நடிக்கும் “பட்டத்து அரசன்” என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படத்தில் நடிகர் ராஜ்கிரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இதனை அடுத்து “பட்டத்து அரசன்” என்ற திரைப்படம் வருகிற 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகயுள்ளது. மேலும் இது குறித்து “பட்டத்து அரசன்” திரைப்படத்தின் அனுபவத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் ஜீவா நடிக்கும்…. “வரலாறு முக்கியம்” படத்தின்…. ரிலீஸ் தேதி வெளியீடு….!!!!

நடிகர் ஜீவா நடித்த “வரலாறு முக்கியம்” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இயக்குனர் சந்தோஷ் ராஜன் இயக்கத்தில் “வரலாறு முக்கியம்” என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடிகர் ஜீவா நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் ஹீரோயினியாக காஷ்மீரா பர்தேஷி நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வி.டி.வி கணேஷ், கே.எஸ்.ரவிகுமார், மலையாள நடிகர் சித்திக், சரண்யா பொன்வண்ணன், சாரா, லொள்ளு சபா சுவாமிநாதன், மொட்ட ராஜேந்திரன், லொள்ளு சபா மனோகர், காளி ராஜ்குமார் மற்றும் ஆதிரை போன்ற பலர் நடித்துள்ளார்கள். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“காரி” திரைப்படத்தின் வெற்றி விழா…. விஜயகாந்த் சாரை போன்று நானும் வருவேன்…. நடிகர் சசிகுமாரின் நெகிழ்ச்சி பேச்சு….!!!!

நடிகர் சசிகுமார் நடிக்கும்”காரி” திரைப்படம் ஜல்லிக்கட்டை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.  அறிமுக இயக்குனர் ஹேமந்த் இயக்கத்தில் “காரி” என்ற திரைப்படத்தின் ஹீரோவாக நடிகர் சசிகுமார் நடித்துள்ளார். இந்தப் படத்தின் ஹீரோயினாக மலையாள நடிகை பார்வதி அருண் தமிழில் அறிமுகமாகிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி. இமான் இசையமைத்துள்ளார். இந்தத் திரைப்படத்தில் அம்மு அபிராமி, பிரேம், ஜேடி சக்கரவர்த்தி, ஆடுகளம் நரேன், நாகி நீடு மற்றும் ரெடின் கிங்ஸ்லி போன்ற பலர் இணைந்து நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை பிரின்ஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சம்பாதிக்க ஆரம்பித்தால் பெற்றோரை மதிப்பில்லை”…. எஸ்ஏசி கூறிய பதில்…. நடந்தது என்ன….!!!

சம்பாதிக்க ஆரம்பித்தால் பெற்றோரை மதிப்பதில்லை என்று நடிகர் விஜய்யின் அப்பா எஸ்ஏசி கூறியுள்ளார். நடிகர் விஜய் இந்திய தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராவார். தனது தனித்துவமான நடிப்பினால் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரின் மனதிலும் தனி இடத்தை பிடித்துள்ளார். இவர் நடிகர் மட்டுமன்றி ஒரு சிறந்த நடனக்கலைஞர் மற்றும் பின்னணி பாடகராவார். குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் விஜய்க்கு துணையாக நின்றது அவரது அப்பா எஸ்ஏசி ஆவார். இருப்பினும் சமீபமாக அவர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

டி20 கிரிக்கெட் போட்டி:… சவாலில் ரசிகரிடம் ரூ. 5 லட்சத்தை பறிகொடுத்த ஒரு அடார் லவ் பட இயக்குனர்… ரசிகர்கள் ஷாக்….!!!!!

டி20 கிரிக்கெட் போட்டியை மையமாகக் கொண்டு இயக்குனர் ஒருவர் தனது ரசிகர் கிட்ட பந்தயம் கட்டி 5 லட்ச ரூபாய் தோற்ற சுவாரசிய நிகழ்வு. மலையாளத்தில் புருவ அழகி என அழைக்கப்படும் பிரியா பிரகாஷ் வாரியார் கதாநாயகியாக அறிமுகமான “ஒரு அடர் லவ்” என்ற திரைப்படத்தை இயக்கியவர் தான் ஓமர் லுலு. இவர் தற்போது “நல்ல சமயம்” என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இவர் ரசிகர்களுடன் எப்போதுமே சோசியல் மீடியாவில் பேசுவது வழக்கம். அப்போது ரசிகர் ஒருவர் டி20 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“லோகேஷ்-விஜய் கூட்டணியில் தளபதி 67″….. வெளியான வேற லெவல் அப்டேட்…. எதிர்பார்ப்பில் ரசிகாஸ்….!!!!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 67 திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. “விக்ரம்” திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தின் ஹீரோ விஜய் என்று எல்லோருக்கும் தெரியும். இந்த படத்தில் விஷால், திரிஷா மற்றும் சஞ்சய் தத் போன்றோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் துவங்கவுள்ளது. 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்…. நடிகர் விஜய்யுடன் இணையும் கமல்….? குஷியில் ரசிகர்கள்….!!!!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய்யின் 67வது படத்தில் நடிகர் கமல் நடிக்கவுள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தின் ஹீரோ விஜய் என்று எல்லோருக்கும் தெரியும். இந்த படத்தில் விஷால், திரிஷா மற்றும் சஞ்சய் தத் போன்றோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இந்த திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிகர் கமலஹாசன் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகிவுள்ளது. இதனை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இந்தியன் 2″…. படம் வெளியாக தாமதம் ஏன்….? இயக்குனர் சங்கரின் பிளான் தான் என்ன….!!!!

“இந்தியன் 2” படப்பிடிப்பு சற்று இடைவெளிக்குப் பிறகு மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமலஹாசன் நடிக்கும் “இந்தியன் 2” திரைப்படம் உருவாக்கியுள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகை காஜல் அகர்வால் ஹீரோயினாக நடிக்கின்றார். “இந்தியன் 2” படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக மெட்ராஸில் நடைபெற்றுள்ளது. இங்கு மழை கொட்டிய நாட்களிலும் கூட இடைவிடாமல் படப்பிடிப்பை நிறுத்தாமல் நடத்தி வந்துள்ளார்கள். இந்நிலையல் “இந்தியன் 2” படப்பிடிப்பு இரண்டு வருடங்களுக்கு முன்னர் கிரேன் விபத்து ஏற்பட்டதினால் நின்று போனது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“விநியோகத்தை நிறுத்திடலாம்”…. உதயநிதிக்கு தந்தை ஸ்டாலின் அட்வைஸ்…. திடீர் டுவிஸ்ட் கொடுத்த கமல்….!!!!

உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் மூலமாக படங்களை வாங்கி விநியோகம் செய்வதை நிறுத்தப் போவதில்லை. திமுகவின் இளைஞரணி செயலாளராகவும் செம்பாக்கம் தொகுதியின் எம்எல்ஏ ஆகவும் இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். இவர் ஒரு கல் ஒரு கண்ணாடி, சைக்கோ போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் மூலமாக பல திரைப்படங்களை வாங்கி விநியோகமும் செய்து வந்துள்ளார். ஆனால் மற்ற நடிகர்களின் படங்களை வாங்கி விநியோகம் செய்வது இனி நிறுத்தி விடலாம் […]

Categories
Uncategorized சினிமா தமிழ் சினிமா

அச்சச்சோ!… இது என்னைப் பற்றிய வதந்தி கிடையாது…. அது உண்மைதான்…. எஸ்‌.ஜே சூர்யாவின் வைரல் பதிவு….!!!!

எஸ் ஜே சூர்யா “வதந்தி” என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். எஸ். ஜே. சூர்யா இந்திய திரைப்பட இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், நடிகர், மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். இவர் தமிழ், திரைப்படத்துறையான கோலிவுட்டில் புகழ்பெற்ற இயக்குனராவார். எஸ். ஜே. சூர்யாவின் இயக்கிய முதல் திரைப்படம் அஜித் நடித்த வாலி மற்றும் விஜய் நடித்த குஷி போன்ற படங்களை இயக்கி வெற்றி கண்டார். அதன் பின்பு நியூ, அன்பே ஆருயிரே போன்ற படங்களை தயாரித்து அதில் ஹீரோவாகவும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இவரெல்லாம் திருந்துவதற்கு வாய்ப்பே இல்லை…. ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்புங்க…. கொந்தளிக்கும் நெட்டிசன்கள்….!!!!

பிக் பாஸ் சீசன் 6-ல் இன்றைய பிரேமாக்களை பார்த்த ரசிகர்கள் கொந்தளித்து போயுள்ளனர். பிக் பாஸ் சீசன் 6-ல் கமல்  சார் சென்ற வாரத்திற்கு முந்திய வாரம் கொடுத்த டோஸ்ஸில் அசீம் கொஞ்சம் அடக்கி வாசித்தார். தற்போது வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிய கதை தான் பிக் பாஸ் வீட்டிற்குள் சில பல பிரச்சனைகளை உண்டாக்கி வருகிறார் அசீம். இதனை தொடர்ந்து சகப் போட்டியாளர்களை தரக்குறைவாக பேசுவது போன்ற சில்லித்தனமான விஷயங்களை செய்து வருகின்றார். பிக்பாஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது!.. ரச்சிதாவும் மாஸ்டரும் ஒரே பெட்டில் படுக்க வேண்டுமா?….. அட பிக்பாஸில் என்னதான் நடக்குது….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 6-ல் தற்போது ராஜா ராணி டாஸ்க் நடந்து கொண்டிருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6-ல் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் 5 பேர் வெளியேறி உள்ளனர். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் புதிய காதல் ஜோடி உருவாகி வருகின்றது. தற்போது ராபர்ட் மாஸ்டர் மட்டும் ரச்சிதா மீதான தனது காதலை வெளிப்படுத்தி வருகின்றார். இப்போது பிக் பாஸ் வீட்டில் அரண்மனை டாஸ்க் நடந்து கொண்டிருக்கிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே…. தனது மனைவி கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்…. திகைத்துப் போன புகழ்….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான புகழ் பிறந்தநாளுக்கு அவரது மனைவி சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்தார். விஜய் டிவியின் மூலம் பிரபலமாகி நடிகர்கள் லிஸ்டில் லேட்டஸ்ட் என்ட்ரி கொடுத்த குக் வித் கோமாளி மற்றும் கலக்கப்போவது யாரு போன்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்தான் புகழ். இவர் தற்போது பல முன்னணி ஹீரோ படங்களில் காமெடியனாக நடித்து வருகின்றார். இவர் ஹீரோவாகவும் ஒரு சில படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இதனை அடுத்து காமெடி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உலகிலே மிக உயரமான முருகன் கோயில்…. எங்குள்ளது தெரியுமா….? தரிசனம் செய்த பிரபல காமெடி நடிகர்…..!!!

உலகிலேயே மிக உயரமான முத்து மலை முருகன் கோவிலுக்கு காமெடி நடிகரான யோகி பாபு சுவாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலை புத்திர கவுண்டன் பாளையத்திலுள்ள முத்து மலையில் முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் உலகிலேயே மிகப்பெரிய முருகன் சிலை (146 அடி)  உள்ளது. இக்கோவிலுக்கு ஆத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வார்கள். அது மட்டுமல்லாமல் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள், அரசியல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Bigg boss: வீட்டுக்குள் புதிதாக மலர்ந்த காதல்…. தன்னுடைய கிரஷை வெளிப்படுத்திய ஷிவின்….. யார்கிட்ட தெரியுமா…?

பிக் பாஸ் சீசன் 6-ல் கதிரவனிடம் தனக்குள்ள இருக்கும் கிரஷை வெளிப்படுத்தும் ஷிவின். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6-ல், 20 போட்டியாளர்களைக் கொண்டு துவங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 5 பேர் இந்நிகழ்ச்சியிலிருந்து இதுவரை வெளியேறிவிட்டார்கள். இந்த வாரம் எலிமினேஷனுக்கு எதிர்பார்க்காத பிரபலங்கள் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் யார் அதிக வாக்குகள் பெற்றுள்ளார்களோ அவர் தான் வெளியேறப்போகிறார். எல்லா பிக் பாஸ் சீசன்களிலும் ஒரு காதல் ஜோடி உருவாவது வழக்கம். அதுபோன்று இந்த சீசனில் கதிரவன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் அஜித்தின் துணிவு…. இவ்வளவு சதவீத திரையரங்குகளை பிடித்துள்ளதா….? அப்போ வாரிசு நிலைமை என்னவாகும்….?

நடிகர் அஜித் நடிக்கும் துணிவு திரைப்படம் திரையரங்குகளில் 70% பிடித்துள்ளது. இயக்குனர் வினோத்துடன் நடிகர் அஜித் நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் தான் “துணிவு”. இந்த படம் நிஜ சம்பவத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த படம் பொங்கலுக்கு மாஸாக வெளியாகவுள்ளது. இதனை தொடர்ந்து ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நடிகர் அஜித் நடிக்கும் “துணிவு” படத்தை தமிழகத்தில் விநியோகம் செய்யும் உரிமையை பெற்றுள்ளார்கள். இது […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஜெய் நடிக்கும் புதிய படத்தில்… பிரபல தெலுங்கு நடிகை தமிழில் என்ட்ரி…!!!!!

பிரபல தெலுங்கு நடிகை தமிழில் என்ட்ரி கொடுக்கின்றார். தெலுங்கு திரை உலகில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக திகழ்கின்றார் நடிகை பானு ஸ்ரீ. பல தெலுங்கு திரைப்படங்களில் நடித்த இவர் தற்போது பிரேக்கிங் நியூஸ் என்ற திரைப்படம் மூலமாக தமிழில் என்ட்ரி கொடுக்கின்றார். அந்த திரைப்படத்தில் ஹீரோவாக நடிகர் ஜெய் நடிக்கின்றார். இத்திரைப்படத்தை ராகுல் பிலிம்ஸ் தயாரிக்க அண்ட்ரூ பாண்டியன் இயக்குகின்றார். சயின்ஸ் பிக்சன் ஆக்சன் திரில்லர் கதையாக உருவாகும் இத்திரைப்படத்தில் ஜெய் சூப்பர் ஹீரோவாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சிவகார்த்திகேயனின் “பிரின்ஸ்”…. ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா? வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தீபாவளிக்கு வெளியான “பிரின்ஸ்” திரைப்படத்தின் ஓடிடி  நவம்பர் 25 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிவுள்ளது.  இயக்குனர் K V அனுதீப் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த “பிரின்ஸ்” திரைப்படத்தின் ஓடிடி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில், நவம்பர் 25ஆம்  தேதி வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக  உக்ரைன் கதாநாயகி மரியா ரியாபோஷப்கா நடித்துள்ளார். இந்தத் திரைப்படத்தில் காதலும், காமெடியும் கலந்துள்ளது.  இந்த படம் முழுக்க ரொமான்டிக் காமெடியாக அமைந்துள்ளது. “பிரின்ஸ்” படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கார்த்தி நடிக்கும் “ஜப்பான்”…. பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்…. குஷியில் ரசிகர்கள்….!!!

நடிகர் கார்த்தி நடிக்கும் “ஜப்பான்” திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் கார்த்தி தற்போது இயக்குனர் ராஜுமுருகன் இயக்கும் “ஜப்பான்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இவர் குக்கூ, ஜோக்கர் மற்றும் ஜிப்ஸ் போன்ற படங்களை இயக்கியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான விருமன், பொன்னியின் செல்வன் மற்றும் சர்தார் என அடுத்தடுத்து படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றது. இந்த “ஜப்பான்” திரைப்படம் தமிழகத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே….! ஒரே சமயத்தில் ரஜினி தனுஷ் உடன் இணையும் பிரபல நடிகர்…. வெளியான புதிய அப்டேட்….!!!!

நடிகர் தனுஷ் தற்போது இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் “கேப்டன் மில்லர்” படத்தில் நடித்து வருகின்றார். நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான “திருச்சிற்றம்பலம்” திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தில் தனுஷ், நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராசி கண்ணா நடித்துள்ளனர். இந்த படத்தை தொடர்ந்து செல்வராகவன், தனுஷ் மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகிய மூவரும் பத்தாண்டுகளுக்கு பின்னர் “நானே வருவேன்” என்ற படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது!… இந்த சூப்பர் ஹிட் பாடல்கள் எல்லாம் இவர்தான் பாடினாரா….? அட இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே…..!!!!

“பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் “தேவராலன் ஆட்டம்” என்ற பாடலை யோகி சேகர் பாடியுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி பாடகரான யோகி சேகர், சமீபமாக திரைக்கு வெளி வந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் “தேவராலன் ஆட்டம்” என்ற பாடலை பாடியுள்ளார். இவர் தற்போது சினிமா நேயர்களுக்காக பிரத்தியேகமாக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். இதில் அவர் கூறியதாவது, ” தனது ஆரம்பகட்ட சினிமா பயணங்கள் குறித்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். தனது குரலில் ஏராளமான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்!… நடிகர் ஷாருக்கானுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸின் சிறப்பு விருது…. குவியும் வாழ்த்து….!!!!

பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு ஷார்ஜா புத்தக கண்காட்சியில் வைத்து “ஐகான்” விருது வழங்கப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகரான ஷாருக்கான் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சார்ஜாவில் நடக்கும் சர்வதேச புத்தக கண்காட்சியில் கலந்து கொண்டார். இங்கு நடிகர் ஷாருக்கானுக்கு சினிமா மற்றும் கலாச்சாரத் துறையில் சாதித்ததற்காக உலகளவிய “ஐகான்” விருது வழங்கப்பட்டது. இது குறித்து நடிகர் ஷாருக்கான் கூறியதாவது, “கதை, திரைக்கதை, வசனம் சேர்ந்தது தான் சினிமா. நாங்கள் நடனத்தின் மூலமாகவும், காட்சிகள் மூலமாகவும் தான் மனிதநேயத்தை வளர்க்கின்றோம். ஆனால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஊஞ்சல் மனமே”….. நடிகர் விஷாலின் லத்தி படத்தின் 2-வது பாடல் வெளியீடு.‌.. இணையத்தில் படு வைரல்…..!!!!

நடிகர் விஷால் நடிக்கும் “லத்தி” திரைப்படத்தின் ஊஞ்சல் மனம் என்ற பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றது.  அறிமுக இயக்குனர் ஏ.வினோத்குமார் இயக்கத்தில் “லத்தி” என்ற திரைப்படத்தில் நடிகர் விஷால் போலீஸ் கெட்டப்பில் நடிக்கிறார். இந்த திரைப்படத்தில் ஹீரோயினாக நடிகை சுனேனா நடிக்கிறார். இந்த திரைப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார். இதனை தொடர்ந்து “ராணா புரொடக்சன்ஸ்” சார்பாக இந்த படத்தை ரமணா மற்றும் நந்தா தயாரிக்கின்றார். தற்போது இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. இந்நிலையில் “லத்தி” […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரசித்தி பெற்ற மஞ்சுநாதர் திருக்கோவில்…. நண்பர்களுடன் சென்று சாமி தரிசனம் செய்த பிரபல நடிகர்….!!!!!

கர்நாடக மாநிலத்திலுள்ள மஞ்சுநாதர் கோவில் சாமி தரிசனம் செய்துள்ளார் நடிகர் விஷால். தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் நடிகர் விஷால். இவர் கர்நாடக மாநிலத்திலுள்ள மங்களூர் அருகே மஞ்சுநாதர் திருக்கோவிலுக்கு தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். பின்னர் சுவாமி தரிசனம் செய்ததுடன் யானையிடம் ஆசிர்வாதம் வாங்குவது, கோவில் குளத்திலுள்ள மீன்களுக்கு உணவளித்தது போன்ற விஷயங்களை செய்துள்ளார். இதனை தொடர்ந்து 11 ஏழைகளுக்கு இலவச திருமணம் செய்து வைத்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் விரைவில் காதல் திருமணம் செய்து கொள்வேன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தமிழில் தடம் பதிக்கும் வெளிநாட்டு நடிகைகள்….. எமி, மரியாவை தொடர்ந்து மீண்டும் ஒரு புதுவரவு…..!!!!!

இயக்குனர் வெங்கடேஷ் குமார் “ஏ ஹோம் அவே பிரம் ஹோம்” என்ற படத்தை இயக்குகின்றார். இயக்குனர் வெங்கடேஷ் குமார் “லைட் மேன் மற்றும் உனக்குள் நான்” என்ற படங்களை இயக்கியுள்ளார். தற்போது “ஏ ஹோம் அவே பிரம் ஹோம்” என்ற புதிய படத்தை  பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மனிஸா தைத் என்ற நடிகையை வைத்து இயக்குகிறார். மேலும் இந்த திரைப்படத்தில் நிழல்கள் ரவி ஸ்ரீ ரஞ்சனி உள்பட கலர் நடிக்கின்றார்கள். கேரள மாநிலம் வயநாடு பகுதியில் இந்தத் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி சிறைக்கு சென்ற சசிகலாவின் சகோதரி மகன்….. புதிய படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம்…..!!!!!

“டிஃபெண்டர்” என்ற படத்தில் சசிகலாவின் சகோதரி மகன் பாஸ்கர் நடிக்கின்றார். பிரபல தயாரிப்பாளர் சித்திரைச் செல்வன் மற்றும் ஜாக் ப்ரொடக்ஷன்ஸ் ஜெகதீஷ் இணைந்து தயாரிக்கும் “டிஃபெண்டர்” என்ற திரைப்படத்தில் சசிகலாவின் சகோதரி மகனான பாஸ்கர் நடிக்கின்றார். இவர் தலைவன் என்ற படத்தில் நடித்துள்ளார். அதன் பின்னர் தெர்மாகோல்ராஜா என்ற படத்தில் நடிப்பதாகவுள்ளது.  பிறகு அந்த படம் கைவிடப்பட்டது என்றும் இதற்கிடையில் பாஸ்கர் சொத்துக்கு உபயோக வழக்கில் சிறைக்கு சென்று திரும்பியுள்ளார். இதனை அடுத்து கமலஹாசன் இடம் அசோசியேட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகருக்கு டும் டும் டும்….. நவ. 19 ஆம் தேதி முதல் திருமண கொண்டாட்டம் ஆரம்பம்….. ரசிகர்கள் வாழ்த்து…..!!!!!

தெலுங்கு நடிகரான நாக சவுர்யாவுக்கு வருகிற 20ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. இயக்குனர் விஜய் தமிழிலும், தெலுங்கிலும் ஒரே நேரத்தில் “தியா” என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படத்தின் கதாநாயகனாக தெலுங்கு நடிகர் நாக சவுர்யா நடித்துள்ளார். இவர் கிட்டத்தட்ட 25 தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது திருமணம் வருகிற நவம்பர் 20-ஆம் தேதி நடைபெற உள்ளது. இவர் திருமணம் செய்யும் மணப்பெண் அனுஷா ஷெட்டி ஆவார். இந்தப் பெண் பெங்களூரை சேர்ந்தவர் மற்றும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! நடிகர் விமல் படத்தில்…. மெட்டிஒலி கோபி நடிக்கிறாரா…. வைரலாகும் புகைப்படம் இதோ….!!!

இயக்குனர் போஸ் வெங்கட் இயக்கத்தில் நடிகர் விமல் நடிக்கும் திரைப்படத்தில் மெட்டி ஒலி கோபி நடிப்பதாக வதந்தி கிளம்பியுள்ளது. இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில் சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டிஒலி நாதஸ்வரம் போன்ற தரமான சீரியல்களை கொடுத்துள்ளார். இவர் இயக்கும் சீரியலில் தனது பெயரை கோபி என்ற கதாபாத்திரத்தில் நடிப்பார். இதனாலே எல்லோரும் திருமுருகனை கோபி என்று அழைப்பார்கள். இவர் தற்போது எந்த சீரியலும் இயக்கவில்லை. இயக்குனர் மற்றும் நடிகரான போஸ் வெங்கட் தற்போது நடிகர் விமல் வைத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட! என்னப்பா இது…. வீட்டிலேயே பார் ஓபன் பண்ண பிரபல நடிகை….. இதுதான் நீண்ட நாள் கனவாம்….. ஷாக்கில் ரசிகர்கள்…..!!!!!

நடிகை ஜனனி தனது வீட்டிலேயே பார் செட்டப் ஒன்றை செய்துள்ளார். இயக்குனர் நந்தினி ஜேஎஸ் இயக்கத்தில் வெளிவந்த திரு திரு துரு துரு என்ற திரைப்படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகமானவர்தான் நடிகை ஜனனி ஐயர். இவர் மாடலிங் துறையில் முதன்முறையாக தனது பயணத்தை தொடங்கி பின் விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்து நாயகியாக நடிக்க தொடங்கினார். இதனைத் தொடர்ந்து விண்ணைத்தாண்டி வருவாயா, அவன் இவன் மற்றும் கூர்மன் போன்ற திரைப்படங்களிலும் கதாநாயகியாக நடித்துள்ளார். அதன் பின்னர் விஜய் டிவியில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“உங்கள முழுசா இன்னும் படிச்சு முடிக்கல…. நடிகர் கமல்ஹாசனுக்கு வாழ்த்து…. தெரிவித்த பிரபல நடிகர்….!!!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான கமல்ஹாசனுக்கு திரையுலக பிரபலங்கள் நேற்று பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளானர். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரும், பல திறமை கொண்டவரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசனுக்கு நேற்று 68-வது பிறந்த நாளாகும். இவரது பிறந்தநாளை தொடர்ந்து மக்கள் நீதிமய்யம் கட்சியினர் தமிழகம் முழுவதும் நலத்திட்ட உதவிகளை வழங்கி வந்தனர். தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து திரை பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே…. “இந்தியன் 2” படக்குழுவினருடன்…. தனது பிறந்த நாளை கொண்டாடிய பிரபல நடிகர்….!!!!

நடிகர் பாபி சிம்ஹா தனது பிறந்தநாளை இயக்குனர் ஷங்கர் மற்றும் படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும், “இந்தியன் 2” படத்தில் நடித்து வருகின்றார் நடிகர் பாபி சிம்ஹா. இவர் பீட்சா, சூது கவ்வும், நேரம், ஜிகிர்தண்டா மற்றும் இறைவி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் “ஜிகிர்தண்டா” படத்தில் அசால்ட் சேதுவாக நடித்ததற்காக தேசிய விருது கிடைத்தது. இது மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

2நிமிடத்தில் ஓகே சொல்லி…! செம கல்லா கட்டிய லைக்கா… குஷி மோடில் மணிரத்னம்.!!

இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்க 2 நிமிடத்தில் ஓகே சொன்ன லைக் நிறுவனம். லைக்கா நிறுவனம் தயாரிப்பில்,  இயக்குனர் மணிரத்தினம் இயக்கிய ”பொன்னியின் செல்வன்” திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகியது. தற்போது வரை திரையரங்கில் ”சூப்பர் டூப்பர் ஹிட்” அடித்து கொண்டிருக்கும், பொன்னியின் செல்வன் உலகம் முழுவதும் 450 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்துள்ளது. எனவே இந்த படத்தின் வெற்றி விழாவை படக்குழு கொண்டாடி வருகிறார்கள். சென்னையில் நடந்த வெற்றி விழாவில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா…! என்னா கூட்டம்…. குடும்பம் குடும்பமாக படையெடுத்த மக்கள்…. மெர்சலாகி போன சியான் விக்ரம்..!! 

பொன்னியின் செல்வன் படத்தில் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. கல்கி நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம் பொன்னியின் செல்வன். இயக்குனர் மணிரத்தினத்தின் பிரம்மாண்டமான படைப்பு என்று வசூல் சாதனை செய்து,  அனைவரையும் கவர்ந்த பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படத்தில் நடித்த நடிகர்கள் பலரும் கலந்து கொண்டார்கள். இந்த விழாவில் பேசிய நடிகர் விக்ரம்,  கொரோனா காலத்திற்குப் பிறகு மக்கள் தியேட்டருக்கு படம் பார்க்க வர ஆரம்பித்திருக்கின்றார்கள். இந்த மாற்றத்தை பொன்னியின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே…. “ஐப்பசி மாதத்தில்”…. நடிகை நயன்தாரா செய்த காரியம்…. என்னென்ன நீங்களே பாருங்க…!!!

நடிகை நயன்தாராவின் லேட்டஸ்ட் போட்டோஸ் பார்த்த ரசிகர்கள் செம ஹேப்பியாகியுள்ளனர். நடிகை நயன்தாரா கடந்த 2003-ஆம் ஆண்டு மலையாள திரைப்படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமானவர். இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து கடந்த 2005-ஆம் ஆண்டு “ஐயா” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமாகி புகழ் பெற்றுள்ளார். தற்போது நயன்தாரா தென்னிந்திய திரைப்பட உலகில் “லேடி சூப்பர் ஸ்டார்” என்னும் புனைப்பெயரினை கொண்டுள்ளார். இவர் முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்து நயன்தாரா பாலிவுட்டிலும் தடம் பதித்துள்ளார். இதனை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் ஹவுஸில்…. அமுதவாணனுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது ஏன்…? காரணம் இதோ….!!!

விஜய் டிவி ஒளிபரப்பாகும் பிக்பாஸ் வீட்டில் அமுதவாணனுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள காரணம் தெரிய வந்துள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் நடிகர் கமல்ஹாசன் தொகுப்பாளராக உள்ளார். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது ப்ரமோ வெளியாகியுள்ளது. இதில் அகம் டிவி வழியே பிக் பாஸ் போட்டியாளர்களை சந்திக்கின்றார் நடிகர் கமல்ஹாசன். அப்போது அமுதவாணனிடம் பேசிய அவர் நோகாம நுங்கு தின்பது பற்றி பேசினார். இது அமுதவாணனுக்கு பொருந்தும் என்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“யார் விழறாங்கன்னு பாப்போம்”…. ட்விஸ்ட் வைக்கும் கமல்…. ஆவலுடன் ரசிகர்கள்….!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 6-ல் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்கும் இன்றைய எபிசோடுகான முதல் ப்ரோமோ இதோ. விஜய் டிவியின் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுப்பாளராக உள்ளார். இந்த நிகழ்ச்சியில் வாரம் தோறும் இறுதியில் நடிகர் கமல்ஹாசன் பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களை சந்திப்பது வழக்கம். அப்போது பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் சரியான முறையில் உள்ளார்களா? இல்லை தவறான முறையில் செயல்படுகிறார்களா என்று எடுத்துச் சொல்வதுசொல்வார். அந்த வகையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் புதிய படம்…. சிறப்பாக நடைபெற்ற பூஜை….. வைரலாகும் கிளிக்ஸ்….!!!!!

லால் சலாம் படத்தின் பூஜையின் புகைபடங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் புதிய படம் லால் சலாம். இந்த திரைப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த திரைப்படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்டு உருவாகியுள்ள திரில்லர் படமாகும். இந்த படத்தை தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தன்னுடைய லைக்கா புரோடக்ஷன்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“உண்மையிலேயே அவர் ரொம்ப கூல்”…. நடிகர் விஜய்யை புகழ்ந்த ஷாருக்கான்…. இணையத்தில் வைரல்….!!!!

பிரபல பாலிவுட் நடிகரான ஷாருக்கான் தளபதி விஜயை புகழ்ந்து பேசியுள்ளார்.  நடிகர் ஷாருக்கான் பாலிவுட் கிங் என ரசிகர்களால் அழைக்கப்படுவார். இவர் அடிக்கடி தனது டிவிட்டரில் #AskSRK என்ற ஹேஷ்டேக் மூலம் ரசிகர்களிடம் பேசியிருந்தார். அப்போது நடிகர் ஷாருக்கானிடம் ரசிகர் ஒருவர் கேள்வி கேட்டார். அதாவது நீங்களும் விஜய்யும் இருக்கும் போட்டோவை பார்க்கும் போது தெரிகிறது, நீங்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் எவ்வளவு மரியாதை வைத்துள்ளீர்கள் என்று புரிகிறது. இதனை அடுத்து நீங்கள் எப்போது   இருவரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பொன்னியின் செல்வன் 2” எப்போது ரிலீஸ் தெரியுமா….? வெளியான சூப்பர் தகவல்….!!!!

“பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் நன்றி விழா இன்று நடைபெற்றுள்ளது.  இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் “பொன்னியின் செல்வன்” திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 30-தேதி வெளியானது. இந்தத் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராய் என பல முக்கிய பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த திரைப்படம் தற்போது  வரை ரூ. 500 கோடிக்கும் வசூல் செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்த திரைப்படம் பிரபல ஓடிடி நிறுவனமான அமேசான் பிரேம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகரை பின்தொடரும் மர்ம நபர்கள்…. காரணம் என்ன….? போலீசில் பரபரப்பு புகார்….!!!!

தெலுங்கு நடிகரான பவன் கல்யாண்னை பின் தொடரும் மர்ம நபர்கள். தெலுங்கு திரைப்படம் முன்னணி நடிகரான பவன் கல்யாண் தற்போது ஹரிஹர வீரமல்லு என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இவரை கடந்த சில நாட்களாகவே பின் தொடர்ந்து வருவதாக டோலிவுட் மீடியாக்களில் ஒரு பரபரப்பு செய்தி வெளியாகியுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஜூபிலி ஹவுஸிலுள்ள பவன் கல்யாண் வீட்டிற்கு முன்னாள்  வந்த இரண்டு நபர்கள் பாதுகாவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஹைதராபாத் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என்ன தவம் செய்தேனோ”…. அருண்மொழிவர்மன் கதாபாத்திரத்தால் நெகிழ்ந்து போன ஜெயம் ரவி….. வைரல் பதிவு….!!!!!

இராஜராஜ சோழனின் சதய விழா நடைபெற்றுள்ளது.  இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் இராஜராஜசோழன் கதாபாத்திரத்தில் அருள்மொழிவர்மனாக நடித்துள்ளார் நடிகர் ஜெயம் ரவி. இந்த திரைப்படத்தில் அவரது நடிப்பிற்கு ரசிகர்கள் மத்தியில் பெரியளவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் இராஜராஜ சோழனின் சதய விழா கொண்டாடப்பட்டு வருகின்றன. இது குறித்து நடிகர் ஜெயம் ரவி தனது கருத்தை  டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அதில் அவர் கூறியதாவது, ” இராஜராஜ சோழனின் சதய விழா நடைபெற்றுக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில்…. தேர் இழுத்து தரிசனம் செய்த பிரபல சூர்யா பட இயக்குனர்…. வைரல் புகைப்படம்….!!!!!

இயக்குனர் ஏஆர் முருகதாஸ் தனது குடும்பத்துடன் சுவாமி  தரிசனம் செய்துள்ளார்.  இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஏழாம் அறிவு, கஜினி, ரமணா, கத்தி, துப்பாக்கி, ஸ்பைடர், சர்க்கார்,  தீனா மற்றும் தர்பார் போன்ற பல வெற்றி படங்களை  கொடுத்துள்ளார். இவர் தனது சொந்த ஊரான கள்ளக்குறிச்சியில் அருள் பாலித்து வரும் ஸ்ரீ தில்லை கோவிந்தராஜ பெருமாள் திருக்கோயிலில் நடைபெற்றுள்ள திருபவித்ரோத்ஸவம் திருவிழாவில் கலந்து கொண்டு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து முக்கியமாக திருத்தேர் திருவிழாவில் கலந்து கொண்ட இவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெண்பா-பாரதி திருமணம்…. கடைசியில் நடந்த ஷாக் டுவிஸ்ட…. பரபரப்பான எபிசோடு…..!!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதிகண்ணம்மா சீரியலில் வெண்பா ரோகித்துக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது.  விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது இறுதி கட்ட நிலையில் உள்ளது.  வெண்பா பாரதியை திருமணம்  செய்து கொள்ள திட்டம் போட்டு மண்டபத்திலிருந்து தப்பித்து கோவிலுக்கு செல்கின்றார். இந்த விஷயத்தை அறிந்து கோவிலுக்கு வரும் கண்ணம்மா, பாரதி வெண்பா  திருமணத்தை  நிறுத்திவிடுகின்றார். அதன் பின்னர் வெண்பா மற்றும் ரோகித் திருமணம் எபிசோட்டில் நடந்துள்ளது. வெண்பா தாலி கட்டிக்கொள்ள  மறுத்தார் சர்மிளா  […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போட்டி போடும் விஷ்ணு விஷால் – ஐஸ்வர்ய லட்சுமி…. இணையத்தில் வைரலாகும் போஸ்டர்….!!!!

“கட்டா குஸ்தி” திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.  நடிகர் விஷ்ணு விஷால் தற்போது “கட்டா குஸ்தி” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தின் கதாநாயகியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி  நடிக்கின்றார். இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கின்றார்.  இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒரு மாதத்திற்கு முன்பே  முடிவடைந்துள்ளது. இந்நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று […]

Categories

Tech |