Categories
சினிமா தமிழ் சினிமா

கையில் குழந்தையுடன் நயன்தாரா… அருகில் விக்னேஷ் சிவன்… தீயாய் பரவும் புகைப்படம்…!!!

கையில் குழந்தையுடன் நயன்தாரா போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நயன்தாரா. இதை தொடர்ந்து இவர் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, தனுஷ் போன்ற பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். தற்போது நயன்தாரா காத்துவாக்குல ரெண்டு காதல், அண்ணாத்த ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் நயன்தாராவும் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘கே.ஜி.எப்’ தயாரிப்பு நிறுவனத்துடன் இணையும் சுதா கொங்கரா?… வெளியான மாஸ் தகவல்…!!!

சுதா கொங்கரா அடுத்ததாக இயக்கும் படத்தை ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்திருந்தார். இந்நிலையில் சுதா கொங்கரா அடுத்ததாக இயக்கும் படத்தை ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிறுவனம் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியான ‘கே.ஜி.எப்’ படத்தை தயாரித்திருந்தது . தற்போது இந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ராஜமௌலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’… தெறி மாஸான அப்டேட் இதோ…!!!

ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் ஆர்.ஆர்.ஆர் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. பாகுபலி படத்தை இயக்கி பிரபலமடைந்த ராஜமௌலி தற்போது ஆர்.ஆர்.ஆர் என்ற பிரம்மாண்ட படத்தை இயக்கி வருகிறார். சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். மேலும் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி, ஸ்ரேயா சரண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு கீரவாணி இசையமைத்துள்ளார். And thats […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நேரடியாக ஓடிடியில் ரிலீஸாகும் ‘அனபெல் சேதுபதி’… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

விஜய் சேதுபதி, டாப்ஸி இணைந்து நடித்துள்ள அனபெல் சேதுபதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி தற்போது விடுதலை, விக்ரம், காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களில் பிசியாக நடித்து வருகிறார். மேலும் இவர் நடிப்பில் உருவாகியுள்ள கடைசி விவசாயி, லாபம், மாமனிதன், துக்ளக் தர்பார், அனபெல் சேதுபதி போன்ற படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதில் லாபம் திரைப்படம் வருகிற செப்டம்பர் 9-ஆம் தேதி திரையரங்குகளில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீரா மிதுனுக்கு ஜாமீன்…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

பட்டியல் இன மக்களை தரக்குறைவாக பேசிய நடிகை மீராவின் வீடியோ வெளியிட்டதையடுத்து அவரை கைது செய்ய கோரி பலரும் காவல் நிலைத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து மீராமிதுன் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் கைது செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 27-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து புழல் சிறையில் அடைத்தனர். அந்த வழக்கில் மீரா மிதுன் ஜாமீன் கோரி விண்ணப்பித்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பத்துதல’ படப்பிடிப்பு தொடக்கம்… முக்கிய நடிகர் வெளியிட்ட புகைப்படம்…!!!

‘பத்து தல’ படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கப்பட்டுள்ளதாக கௌதம் கார்த்திக் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றது. மேலும் சிம்பு, ஹன்சிகா இணைந்து நடித்துள்ள மஹா திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. தற்போது நடிகர் சிம்பு கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முதல் முறையாக கௌதம் மேனனுடன் இணையும் சிவகார்த்திகேயன்?… வெளியான சூப்பர் தகவல்…!!!

கௌதம் மேனன் அடுத்ததாக இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் கௌதம் மேனன். தற்போது இவர் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் வெந்து தணிந்தது காடு படத்தை இயக்கி வருகிறார். மேலும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கௌதம் மேனன் அடுத்ததாக இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘இதான் டுவிட்டர் வாத்தியாரே’… ஒரிஜினல் பசுபதியை அறிமுகம் செய்து வைத்த ஆர்யா…!!!

நடிகர் ஆர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ஆர்யா நடிப்பில் உருவான சார்பட்டா பரம்பரை திரைப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றது. பா.ரஞ்சித் இயக்கியிருந்த இந்த படத்தில் பசுபதி, கலையரசன், ஜான் விஜய், சபீர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மேலும் இந்த படத்தில் கபிலனாக நடித்த ஆர்யாவும், ரங்கன் வாத்தியாராக நடித்த பசுபதியும் சைக்கிளில் போகும் காட்சியை வைத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரம்மாண்ட படத்துடன் மோதும் ராகவா லாரன்ஸின் ‘ருத்ரன்’… அதிரடியாக வெளியான அறிவிப்பு…!!!

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள ருத்ரன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் நடன இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். இவர் நடிப்பில் வெளியான முனி, காஞ்சனா, காஞ்சனா-2, காஞ்சனா-3 போன்ற படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. இதில் காஞ்சனா திரைப்படம் பாலிவுட்டில் அக்ஷய்குமார் நடிப்பில் லக்ஷ்மி என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது. தற்போது நடிகர் ராகவா லாரன்ஸ் துர்கா, ருத்ரன், அதிகாரம் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் ருத்ரன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே செம… தேசிய விருது வென்ற இயக்குனருடன் இணையும் சூப்பர் ஸ்டார்?… வெளியான மாஸ் தகவல்…!!!

நடிகர் ரஜினி அடுத்ததாக நடிக்கும் படத்தை பாண்டிராஜ் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான பசங்க படத்தின் இயக்குனராக அறிமுகமானவர் பாண்டிராஜ். இந்த படம் மூன்று தேசிய விருதுகளை வென்றது. இதை தொடர்ந்து இவர் வம்சம், மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, கடைக்குட்டி சிங்கம் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார். தற்போது இயக்குனர் பாண்டிராஜ் சூர்யா கதாநாயகனாக நடிக்கும் எதற்கும் துணிந்தவன் […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா

நடிகை மீராமீதுன் மற்றொரு வழக்கில் கைது…. போலீசார் அதிரடி…!!!

சர்ச்சைக்கு பெயர் போனவர் நடிகை மீரா மிதுன் . இவர் பட்டியல் இன மக்களை குறித்து அவதூறாக பேசிய வீடியோ வெளியிட்டதை அடுத்து பலரும் இவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் காவல்துறையினர் இவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவருக்கு உதவியாக இருந்த அவருடைய காதலன் அபிஷேக்கையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் சிறையிலிருக்கும் நடிகை மீராமீதுன் ஏற்கனவே கடந்த ஆண்டு எம்கேபி நகர் போலீசார் பதிவு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினியுடன் ‘அண்ணாத்த’ பட ஒளிப்பதிவாளர்… செம வைரல் புகைப்படம்…!!!

நடிகர் ரஜினியுடன் அண்ணாத்த படத்தின் ஒளிப்பதிவாளர் வெற்றி இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. சிவா இயக்கும் இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பூ, பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு, சூரி, சதீஷ், கருணாகரன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்திற்கு  வெற்றி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘வலிமை’ இறுதிகட்ட படப்பிடிப்பு… ரஷ்யா கிளம்பிய அஜித்… தீயாய் பரவும் வீடியோ…!!!

நடிகர் அஜித் வலிமை படத்தின் படப்பிடிப்பிற்காக ரஷ்யா கிளம்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்தில் ஹூமா குரேஷி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் கார்த்திகேயா, யோகி பாபு, குக் வித் கோமாளி புகழ், சுமித்ரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். https://twitter.com/thisis_paddy/status/1430454710725603328 சமீபத்தில் இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம மாஸ்… வெங்கட் பிரபுவின் அடுத்த படத்தில் பிரபல கன்னட நடிகர்… வைரலாகும் புகைப்படம்…!!!

வெங்கட் பிரபு அடுத்ததாக இயக்கும் படத்தில் பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார் . தமிழ் திரையுலகில் கடந்த 2007- ஆம் ஆண்டு வெளியான சென்னை 600028 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வெங்கட் பிரபு. இதை தொடர்ந்து இவர் சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி, மாஸ் போன்ற படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

லோகேஷ் கனகராஜின் அடுத்த படம்… இணையும் 10 முன்னணி இயக்குனர்கள்… வெளியான புதிய தகவல்…!!!

லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக இயக்கும் படத்தை 10 இயக்குனர்கள் இணைந்து தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் வெளியான கைதி, மாஸ்டர் ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. தற்போது லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கும் விக்ரம் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தர்ஷன், லாஸ்லியாவின் ‘கூகுள் குட்டப்பா’… டீசரை வெளியிடும் பிரபல நடிகர்…!!!

கூகுள் குட்டப்பா படத்தின் டீசரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட உள்ளார். மலையாளத் திரையுலகில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25’. தற்போது இந்த படம் தமிழில் கூகுள் குட்டப்பா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனர்கள் சரவணன், சபரி ஆகியோர் இயக்கியுள்ள இந்த படத்தில் பிக்பாஸ் பிரபலங்கள் தர்ஷன், லாஸ்லியா இருவரும் இணைந்து நடித்துள்ளனர். #KoogleKuttapa teaser will be revealed by Actor @Siva_Kartikeyan […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘திருச்சிற்றம்பலம்’ படப்பிடிப்பில் ராஷி கண்ணா… வைரலாகும் புகைப்படம்…!!!

திருச்சிற்றம்பலம் படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை நடிகை ராஷி கண்ணா டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் தற்போது மாறன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் திருச்சிற்றம்பலம் படத்தை மித்ரன் ஜவஹர் இயக்குகிறார். ஏற்கனவே இவர் தனுஷின் உத்தமபுத்திரன், யாரடி நீ மோகினி, குட்டி ஆகிய படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திருச்சிற்றம்பலம் படத்தில் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய் சேதுபதியின் ‘லாபம்’… வெளியான செம மாஸ் அறிவிப்பு…!!!

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள லாபம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லாபம். மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கியுள்ள இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடித்துள்ளார் . மேலும் கலையரசன், ஜெகபதி பாபு, சாய் தன்ஷிகா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி புரொடக்சன்ஸ் மற்றும் 7சி.எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘ருத்ரன்’ படக்குழு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

‘ருத்ரன்’ படத்தின் அப்டேட் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் திரையுலகில் நடன இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். இவர் நடிப்பில் வெளியான முனி, காஞ்சனா, காஞ்சனா-2, காஞ்சனா-3 போன்ற படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. இதில் காஞ்சனா திரைப்படம் பாலிவுட்டில் அக்ஷய்குமார் நடிப்பில் லக்ஷ்மி என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது. தற்போது நடிகர் ராகவா லாரன்ஸ் துர்கா, ருத்ரன், அதிகாரம் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். #Rudhran #ருத்ரன் Update […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கார்த்திக் நரேனின் அடுத்த படத்தில் ஹீரோ இவரா?… வெளியான சூப்பர் தகவல்…!!!

இயக்குனர் கார்த்திக் நரேன் அடுத்ததாக அதர்வா கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். இதை தொடர்ந்து இவர் மாபியா, நரகாசுரன் போன்ற படங்களை இயக்கியிருந்தார். சமீபத்தில் வெளியான நவரசா ஆந்தாலஜி வெப் தொடரில் கார்த்திக் நரேன் இயக்கியிருந்த ‘புராஜெக்ட் அக்னி’ குறும்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் தனுஷின் மாறன் படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் கார்த்திக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆர்யா மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார்…. சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்…. வழக்கறிஞர் தகவல்…!!!

ஜெர்மனி இலங்கை தமிழ் பெண் ஒருவர் நடிகர் ஆர்யா தன்னை திருமணம் செய்வதாக கூறி ரூபாய் 70 லட்சம் பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றியதாக கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தன்னுடைய பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்றும் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பாக நடிகர் ஆர்யாவிடமும் நேரடியாக விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியதில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம மாஸ் லுக்கில் கமல்ஹாசன்… ‘பிக்பாஸ்- 5’ புரோமோ படப்பிடிப்பு புகைப்படங்கள்…!!!

பிக்பாஸ் 5 நிகழ்ச்சியின் புரோமோ படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதுவரை நான்கு சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது ‌. வழக்கமாக ஜூன் மாதம் தொடங்கி அக்டோபர் மாதம் வரை நடத்தப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஆண்டு மட்டும் கொரோனா ஊரடங்கு காரணமாக அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டு ஜனவரி மாதம் நிறைவடைந்தது. அதேபோல் இந்த சீசனும் அக்டோபர் மாதம் தொடங்கப்பட உள்ளது. இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது மிக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’… சூப்பரான ஷூட்டிங் அப்டேட் இதோ…!!!

சிம்பு நடிப்பில் உருவாகி வரும் வெந்து தணிந்தது காடு படத்தின் ஷூட்டிங் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் மாநாடு திரைப்படம் உருவாகியுள்ளது. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. தற்போது சிம்பு இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து வருகிறார். வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உடலை கட்டுகோப்பாக வைத்துள்ள தமிழ் நடிகை…. புதிய படத்திற்காக தயார்…. வைரலாகும் புகைப்படங்கள்….!!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகையான சமந்தா தனது புதிய படத்திற்காக தயாராகி வரும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தெலுங்கு முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான நாகசைதன்யாவை திருமணம் செய்துகொண்டார். இருப்பினும் அவர் பல்வேறு படங்களில் நடித்து வந்தார். அவர் இந்தியிலும் ஃபேமிலி மேன் சீரிஸ் மூலம் அறிமுகமானார். தற்பொழுது சமந்தா அவர்கள் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் காத்து வாக்குல இரண்டு காதல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம… டுவிட்டரில் சூர்யாவின் புதிய சாதனை… கொண்டாடும் ரசிகர்கள்…!!!

நடிகர் சூர்யா டுவிட்டரில் 7 மில்லியன் பாலோயர்களை பெற்றுள்ளார்.  தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான சூரரைப்போற்று திரைப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்தியன் ஃபிலிம் ஃபெஸ்டிவல் ஆஃப் மெல்பர்ன் சர்வதேச விருது விழாவில் சூரரைப்போற்று திரைப்படத்திற்காக சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது சூர்யா எதற்கும் துணிந்தவன், ஜெய்பீம் ஆகிய படங்களில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘மங்காத்தா- 2’ படம் குறித்து வெங்கட் பிரபு போட்ட மாஸ் ட்வீட்… உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

இயக்குனர் வெங்கட் பிரபு மங்காத்தா-2 படம் குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் கடந்த 2011- ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் மங்காத்தா. இந்த படம் இவரது 50-வது படமாகும். வெங்கட் பிரபு எழுதி இயக்கியிருந்த இந்த படத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன், திரிஷா, அஞ்சலி, ஆண்ட்ரியா, வைபவ், பிரேம்ஜி அமரன், அரவிந்த் ஆகாஷ், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கிளவுட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Mr & Mrs சின்னத்திரையில் இருந்து விலகியது ஏன்?… விளக்கமளித்த நட்சத்திர ஜோடி…!!!

Mr & Mrs சின்னத்திரை சீசன் 3 நிகழ்ச்சியிலிருந்து விலகியது குறித்து மணிகண்டன்- சோபியா ஜோடி விளக்கமளித்துள்ளனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்போது Mr & Mrs சின்னத்திரை சீசன் 3 நிகழ்ச்சி சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் தேவதர்ஷினி மற்றும் கோபிநாத் இருவரும் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர். மேலும் வினோத், திவாகர், மணிகண்டன், சரத், மைனா நந்தினி, தீபா, காயத்ரி உள்ளிட்ட பலர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் பாலாஜி முருகதாஸூக்கு திருமணம் எப்போது?… அவரே சொன்ன தகவல்…!!!

பிக்பாஸ் பிரபலம் பாலாஜி முருகதாஸ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சியை பிரபல நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை நான்கு சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இதில் நான்காவது சீசனில் ஆரி அர்ஜுனன் டைட்டிலை வென்றார். மேலும் பாலாஜி முருகதாஸ் இரண்டாவது இடத்தை பிடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த பாலாஜி முருகதாஸை இன்ஸ்டாகிராமில் 8 லட்சத்திற்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புவின் அடுத்த படம்… வெளியான சூப்பர் அப்டேட்… செம குஷியில் ரசிகர்கள்…!!!

நடிகர் சிம்பு அடுத்ததாக கோகுல் இயக்கத்தில் உருவாக உள்ள கொரோனா குமார் படத்தில் நடிக்க இருக்கிறார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் ‘மாநாடு’ திரைப்படம் உருவாகியுள்ளது. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. தற்போது நடிகர் சிம்பு கௌதம் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து இவர் கௌதம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பீஸ்ட்’ விஜய்யுடன் நடிப்பது குறித்து பேசிய பூஜா ஹெக்டே… செம வைரலாகும் வீடியோ…!!!

சென்னையில் பீஸ்ட் படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு பூஜா ஹெக்டே மும்பை திரும்பியுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் அபர்ணா தாஸ், யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் மூன்றாம்கட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘விக்ரம்’ படப்பிடிப்பில் இணைந்த பிரபல நடிகர்… வைரலாகும் புகைப்படம்…!!!

விக்ரம் படப்பிடிப்பில் கமல்ஹாசனுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை நடிகர் நரேன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கி பிரபலமடைந்த லோகேஷ் கனகராஜ் தற்போது ‘விக்ரம்’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி, பஹத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி நாராயணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ‘பிக்பாஸ் சீசன் 5’… வேற லெவல் அப்டேட் இதோ…!!!

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கான புரமோஷன் போட்டோஷூட் இன்று தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதுவரை நான்கு சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது ‌. வழக்கமாக ஜூன் மாதம் தொடங்கி அக்டோபர் மாதம் வரை நடத்தப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஆண்டு மட்டும் கொரோனா பரவல் காரணமாக அக்டோபர் மாதம் தொடங்கி ஜனவரி மாதம் நிறைவடைந்தது. அதேபோல் இந்த சீசனும் அக்டோபர் மாதம் தொடங்கப்படவுள்ளது. இதற்கான ஆரம்பகட்ட பணிகள் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘புஷ்பா’ படத்தின் மிரட்டலான போஸ்டர்… இணையத்தில் செம வைரல்…!!!

நடிகர் தனஞ்சயாவின் பிறந்தநாளை முன்னிட்டு புஷ்பா படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுன் நடிப்பில் இரு பாகங்களாக உருவாகி வரும் திரைப்படம் புஷ்பா. சுகுமார் இயக்கும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பிரபல நடிகர் பஹத் பாஸில் இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். Happy Birthday to the […]

Categories
சினிமா தமிழ் சினிமா

லாஸ்லியாவின் ‘பிரண்ட்ஷிப்’… தெறி மாஸான அப்டேட்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

ஹர்பஜன் சிங், லாஸ்லியா நடிப்பில் உருவாகியுள்ள பிரண்ட்ஷிப் படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் லாஸ்லியா. தற்போது இவர் பிரண்ட்ஷிப், கூகுள் குட்டப்பா போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் பிரண்ட்ஷிப் படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கதாநாயகனாக அறிமுகமாகிறார். மேலும் ஆக்சன் கிங் அர்ஜுன், சதீஷ், குக் வித் கோமாளி பாலா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகை தமன்னாவின் ‘மேஸ்ட்ரோ’… விறுவிறுப்பான டிரைலர் இதோ…!!!

தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள மேஸ்ட்ரோ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. கடைசியாக இவர் தமிழில் விஷால் நடிப்பில் வெளியான ஆக்ஷன் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். தற்போது இவர் சீட்டிமார், மேஸ்ட்ரோ, தட் இஸ் மகாலட்சுமி போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் மேஸ்ட்ரோ படம் பாலிவுட்டில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த அந்தாதூன் படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகும் . இதில் ஹிந்தியில் தபு நடித்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘இடிமுழக்கம்’ படப்பிடிப்பிற்கு திடீர் விசிட் அடித்த மக்கள் செல்வன்… வைரலாகும் புகைப்படங்கள்…!!!

நடிகர் விஜய் சேதுபதி ‘இடிமுழக்கம்’ படப்பிடிப்பு தளத்திற்கு திடீர் விசிட் அடித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் சீனு ராமசாமி தற்போது இடிமுழக்கம் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாகவும், காயத்ரி கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். ஸ்கை மேன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு  N.R.ரகுநந்தன் இசையமைக்கிறார் . மேலும் கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. @SkymanFilms @Kalaimagan20 தயாரிப்பில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம… தியேட்டரில் ரிலீஸாகும் ‘தலைவி’… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

தலைவி படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.எல்.விஜய் தற்போது தலைவி படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் பயோபிக் படமாகும். இந்த படத்தில் கங்கனா ரனாவத் ஜெயலலிதா கதாபாத்திரத்திலும், அரவிந்த்சாமி எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். மேலும் சமுத்திரகனி, பூர்ணா, மதுபாலா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். #Thalaivi releasing in theatres on September 10th. #KanganaRanaut […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மணிரத்னத்தின் ‘நவரசா’ வெப் தொடர்… அசத்தலான மேக்கிங் வீடியோ இதோ…!!!

மணிரத்னம் தயாரிப்பில் வெளியான நவரசா வெப் தொடரின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் மணிரத்னம் ஜெயந்திராவுடன் இணைந்து தயாரித்த நவரசா என்ற ஆந்தாலஜி வெப் தொடர் கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி நேரடியாக நெட்பிளிக்ஸில் வெளியானது. இதில் கௌதம் மேனன், அரவிந்த் சாமி, கார்த்திக் நரேன், கார்த்திக் சுப்புராஜ், பிஜாய் நம்பியார் உள்பட 9 இயக்குனர்கள் 9 எபிசோடுகளை இயக்கியிருந்தனர். இந்த எபிசோடுகளில் சூர்யா, விஜய் சேதுபதி, பிரசன்னா, […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘சலார்’ படத்தில் வில்லன் இவர் தான்… வெறித்தனமான போஸ்டருடன் வெளியான அறிவிப்பு…!!!

பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் சலார் படத்தில் ஜெகபதி பாபு வில்லனாக நடிக்க இருக்கிறார். யாஷ் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த கே.ஜி.எப் படத்தை இயக்கி பிரபலமடைந்தவர் பிரசாந்த் நீல். தற்போது இவர் கே.ஜி.எப் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 14-ஆம் தேதி ரிலீஸாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து பிரசாந்த் நீல் நடிகர் பிரபாஸை வைத்து சலார் என்ற பிரம்மாண்ட படத்தை இயக்கி வருகிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’… அழகிய ரொமான்டிக் பாடல் வீடியோ இதோ…!!!

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள துக்ளக் தர்பார் படத்தின் ‘காமி காமி’ பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி தற்போது விக்ரம், விடுதலை, காத்துவாக்குல ரெண்டு காதல், காந்தி டாக்ஸ் உள்பட பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் இவர் நடிப்பில் உருவாகியுள்ள துக்ளக் தர்பார், கடைசி விவசாயி, லாபம், மாமனிதன் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதில் துக்ளக் தர்பார் படத்தை டெல்லி பிரசாத் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘காசேதான் கடவுளடா’ ரீமேக்… சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு…!!!

காசேதான் கடவுளடா ரீமேக் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 1972-ஆம் ஆண்டு வெளியாகி ஹிட்டான எவர்கிரீன் நகைச்சுவை திரைப்படம் காசேதான் கடவுளடா. தற்போது இந்த படம் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. ஆர்.கண்ணன் இயக்கும் இந்த படத்தில் சிவா, யோகி பாபு இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் பிரியா ஆனந்த், ஊர்வசி, கருணாகரன், குக் வித் கோமாளி பிரபலங்கள் புகழ் & சிவாங்கி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் ‌. #KasethanKadavulada […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பேருந்தில் சமந்தா, நயன்தாராவுடன் விஜய் சேதுபதி… தீயாய் பரவும் புகைப்படம்…!!!

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பு புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். விக்னேஷ் சிவன் இயக்கும் இந்த படத்தில் நயன்தாரா, சமந்தா இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு புதுச்சேரியில் விறுவிறுப்பாக நடைபெற்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வேற லெவல்… சிம்புவின் ‘மாங்கல்யம்’ பாடல் செய்த டக்கரான சாதனை… ரசிகர்கள் கொண்டாட்டம்…!!!

ஈஸ்வரன் படத்தில் இடம்பெற்ற மாங்கல்யம் பாடல் யூடியூபில் 150 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு நடிப்பில் உருவான திரைப்படம் ஈஸ்வரன். கடந்த பொங்கலையொட்டி திரையரங்குகளில் வெளியான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சுசீந்திரன் இயக்கியிருந்த இந்த படத்தில் நிதி அகர்வால் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் நந்திதா ஸ்வேதா, பாரதிராஜா, முனீஷ்காந்த், பாலசரவணன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர் . […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘புஷ்பா’ படப்பிடிப்பில் இணைந்த முக்கிய நடிகர்… தாறுமாறான அப்டேட் இதோ…!!!

அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா படத்தின் படப்பிடிப்பில் நடிகர் பகத் பாசில் இணைந்துள்ளார் . தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடைசியாக வெளியான ‘அல வைகுண்டபுரமுலு’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து இவர் புஷ்பா படத்திலும், கொரட்டலா சிவா இயக்கத்தில் உருவாகி வரும் படத்திலும் நடித்து வருகிறார் . இதில் இரு பாகங்களாக உருவாகி வரும் புஷ்பா படத்தை இயக்குனர் சுகுமார் இயக்குகிறார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“காஞ்சனா” பட பிரபல இளம் நடிகை தற்கொலை – அதிர்ச்சி…!!!

ரஷ்யாவைச் சேர்ந்த மாடலும், பிரபல நடிகையுமான அலெக்சாண்ட்ரா ஜாவி(24) கோவாவில் தற்கொலை செய்து கொண்டார். மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். இவர் 2019 இல் சென்னையில் ஒரு புகைப்பட கலைஞருக்கு எதிராக பாலியல் புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் ஜாவியின் தற்கொலை குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் ராகவா லாரன்ஸ் இயக்கிய காஞ்சனா 2 படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories
சினிமா தமிழ் சினிமா

பார்த்திபன் நடிக்கும் புதிய படம்… பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி…!!!

பார்த்திபன் நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வரும் பார்த்திபன் அடுத்ததாக நடிக்கும் படத்தை எழில் இயக்கி வருகிறார். இந்த படத்தில் கௌதம் கார்த்திக், சாய்பிரியா, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இன்று இந்த படத்தின் பர்ஸ்ட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்கும் சூர்யா?… எக்கச்சக்க எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

கமல்ஹாசன், சூர்யா இருவரும் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபகாலமாக முன்னணி நடிகர்கள் ஒரே படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர். மேலும் சில ஹீரோக்கள் இமேஜ் பார்க்காமல் வில்லன் கதாபாத்திரங்களிலும் நடிக்கின்றனர். இந்நிலையில் பிரபல இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான அமல் நீரத் இயக்கும் புதிய படத்தில் கமல்ஹாசன், சூர்யா இருவரும் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அமல் நீரத் அளித்த பேட்டியில் ‘கமல்ஹாசன், சூர்யா இருவரையும் மனதில் வைத்து ஒரு புதிய திரைக்கதையை எழுதியிருக்கிறேன். […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

சிரஞ்சீவிக்கு தங்கையாகும் கீர்த்தி சுரேஷ்… வைரலாகும் கலக்கலான போஸ்டர்…!!!

வேதாளம் தெலுங்கு ரீமேக் படத்தில் சிரஞ்சீவிக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் வேதாளம். சிவா இயக்கியிருந்த இந்த படத்தில் லட்சுமி மேனன், ஸ்ருதிஹாசன், சூரி, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும் இந்த படம் சுமார் ரூ.120 கோடி வரை வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது. தற்போது வேதாளம் படத்தின் தெலுங்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘சர்வைவர்’ நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் 8 போட்டியாளர்கள்… வெளியான செம மாஸ் புரோமோ…!!!

அர்ஜுன் தொகுத்து வழங்கும் சர்வைவர் நிகழ்ச்சியின் புதிய புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சர்வைவர் என்ற புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியை ஆக்சன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்க இருக்கிறார். இதுவும் கிட்டத்தட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி போல தான். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் ஒரு சிறிய தீவில் விடப்படுவார்கள். அங்கு அவர்களுக்கு பல டாஸ்குகள் கொடுக்கப்படும். ஒருவரோடு ஒருவர் போட்டியிட்டுக்  கொண்டு இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்படாமல் தங்களை காத்துக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்யின் ‘பீஸ்ட்’… அடுத்தகட்ட படப்பிடிப்பு எங்கு தெரியுமா?… வெளியான புதிய தகவல்…!!!

பீஸ்ட் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் அபர்ணா தாஸ், யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் […]

Categories

Tech |