Categories
சினிமா தமிழ் சினிமா

‘பிசாசு-2’ பட பர்ஸ்ட் லுக்கை வெளியிடும் பிரபல இயக்குனர்… அசத்தலான அறிவிப்பு…!!!

இயக்குனர் வெற்றிமாறன் பிசாசு- 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடவுள்ளார். தமிழ் திரையுலகில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பிசாசு. திகில் கதையம்சம் கொண்ட இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. மிஷ்கின் இயக்கும் இந்த படத்தில் ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் விஜய் சேதுபதி, பூர்ணா, நமீதா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சீனு ராமசாமி- ஜி.வி.பிரகாஷ் இணையும் புதிய படம்… பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு…!!!

சீனு ராமசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் கூடல்நகர் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சீனுராமசாமி. இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தென்மேற்கு பருவக்காற்று திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதன்பின் இவர் இயக்கத்தில் வெளியான தர்மதுரை, நீர்ப்பறவை, கண்ணே கலைமானே ஆகிய படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள இடம் பொருள் ஏவல், மாமனிதன் ஆகிய படங்கள் […]

Categories
உலக செய்திகள் தமிழ் சினிமா

தல ரசிகர்களின் எதிர்பார்ப்பு வெளியானது…. முதல் பாடல் இன்று இரவு வெளியாகும் என அறிவிப்பு….!!

தல அஜித் நடிக்கும் வலிமை திரைப்படத்தின் முதல் சிங்கிள் அப்டேட் போஸ்டர் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித் நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை இயக்கியவர் இயக்குனர் வினோத். இப்போது தல அஜித் நடிக்கும் வலிமை படத்தையும் இவரே இயக்கி வருகிறார்.மேலும் இந்தப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று முடிந்தது. இதனிடையே திரைப்படம் தீபாவளிக்கு ரிலீசாகும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பெரிய அளவில் வைரலானது. இந்நிலையில் தற்போது வலிமை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ப்பா செம… மிரட்டலான லுக்கில் செல்வராகவன்… காட்டுத் தீயாய் பரவும் லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

செல்வராகவனின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன் . அடுத்ததாக இவர் தனுஷின் நானே வருவேன் படத்தை இயக்க இருக்கிறார். மேலும் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் சாணிக் காயிதம் படத்தில் செல்வராகவன் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். #SaaniKaayidham pic.twitter.com/y8W2ZWqAA6 — selvaraghavan (@selvaraghavan) August 2, 2021 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘வாத்தி கம்மிங் ஒத்து’… விஜய் போல் நடனமாடும் பிரபல கிரிக்கெட் வீரர்… கலக்கலான வீடியோ…!!!

மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடலுக்கு கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் நடனமாடிய வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடல் பட்டி தொட்டியெங்கும் பட்டைய கிளப்பியது. மேலும் இந்த பாடலுக்கு திரையுலக பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் நடனமாடிய வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். Was bored today!! Thoughts on these […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் பிரபலங்களுக்காக நடிகர் சூர்யா செய்யும் உதவி… வெளியான சூப்பர் தகவல்…!!!

கூகுள் குட்டப்பா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா  வெளியிடவுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் தர்ஷன். தற்போது இவர் தமிழ் சினிமாவில் ‘கூகுள் குட்டப்பா’ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். இந்த படத்தில் பிக்பாஸ் பிரபலம் லாஸ்லியா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் கே.எஸ்.ரவிகுமார், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த படம் மலையாளத்தில் வெளியாகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘கொரோனாவோட போராடியாச்சு, இப்போ’… அதிரடியாக படப்பிடிப்பை தொடங்கிய பிரபல இயக்குனர்…!!!

இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வசந்தபாலன். இவர் இயக்கத்தில் வெளியான வெயில் திரைப்படம் தேசிய விருது பெற்றது. இதை தொடர்ந்து இவர் அங்காடித்தெரு, காவியத்தலைவன், அரவான் போன்ற படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தார். தற்போது இவர் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயில் படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. மேலும் இயக்குனர் வசந்தபாலன் அடுத்ததாக அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கல்லூரியில் என் பெயர் “பிகில்”.. முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் ஜாலியாக பேசிய சூர்யா..!!

நடிகர் சூர்யா, லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர் சந்திப்பில், தான் நன்றாக விசில் அடிப்பதால், தன்னை கல்லூரியில் ‘பிகில்’ என்று தான் அழைப்பார்கள் என்று கூறியிருக்கிறார். சென்னையில் நுங்கம்பாக்கத்தில் இருக்கும் லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு இணையதளத்தில், கடந்த ஞாயிற்றுகிழமை அன்று நடந்திருக்கிறது. எனவே கல்லூரி சார்பாக முன்னாள் மாணவர்களில், சிறப்பாக விளங்கிய நபர்களுக்கு, இந்த வருடத்திற்கான விருதுகள் வழங்கப்பட்டது. இந்நிலையில், நடிப்பின் நாயகன் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் சூர்யா, லயோலா கல்லூரியின் முன்னாள் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஆஹா செம… 3டி-யில் வெளியாகும் அக்ஷய் குமாரின் ‘பெல்பாட்டம்’… வெளியான மாஸ் அறிவிப்பு…!!!

அக்ஷய் குமாரின் பெல்பாட்டம் படம் 3டி-யில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பெல்பாட்டம். ரஞ்சித்.எம்.திவாரி இயக்கியுள்ள இந்த படத்தில் வாணி கபூர், ஹூமா குரேஷி, லாரா தத்தா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் 1980-களில் நடக்கும் உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது. Poore feel ke saath thrill experience karna on 19th August. ⚡#BellBottom also arriving […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா இந்த நடிகரா அது..? சார்பட்டா பரம்பரை படத்தில் ஆர்யாவின் தந்தை… வெளியான முக்கிய தகவல்..!!

நடிகர் ஆர்யாவின் தந்தையாக “சார்பட்டா பரம்பரை” திரைப்படத்தில் நடித்திருப்பவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஆர்யா நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள “சார்பட்டா பரம்பரை” படம் அமேசான் ப்ரைமில் நேரடியாக வெளியாகியுள்ளது. மேலும் ரசிகர்களிடையே மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படத்தில் பசுபதி, கலையரசன், ஜான் கொக்கன், துஷாரா விஜயன் உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். இந்த படம் சிறந்த நடிப்பு, ஒவ்வொரு காட்சியின் வடிவமைப்பு, சிறந்த கதைக்களம் என பிரபலங்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மறைந்த நடிகை சித்ராவிற்கு நடந்த சிறப்பான விஷயம்.. இணையதளங்களில் பகிர்ந்து ரசிகர்கள் வருத்தம்..!!

மறைந்த நடிகை, தொகுப்பாளினி சித்ராவின் ரசிகர்கள் கடந்த வருடம் அவருக்கு நடந்த சிறப்பை தற்போது இணையதளங்களில் அதிகமாக பகிர்ந்து வருகிறார்கள். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற பிரபலமான தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்த தொகுப்பாளினி சித்ரா, ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். மேலும் அந்த கதாபாத்திரத்தோடு நன்றாக பொருந்தியிருந்தார். இதனால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இவரின் வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருந்த சமயத்தில், திடீரென்று சொந்த பிரச்சனைகளால் மனமுடைந்து தூக்கு மாட்டி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம… ‘வலிமை’ பட பாடலுக்காக இணைந்த ‘மாஸ்டர்’ கூட்டணி… எக்கச்சக்க எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

வலிமை படத்தின் பாடலுக்காக மாஸ்டர் பட கூட்டணி இணைந்துள்ளதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்தில் ஹூமா குரேஷி கதாநாயகியாகவும், கார்த்திகேயா வில்லனாகவும் நடிக்கின்றனர். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்நிலையில் தல ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் இன்று வலிமை படத்தின் முதல் பாடல் ரிலீஸாகும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘அழகிய கண்ணே’… பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட ஆர்யா…!!!

அழகிய கண்ணே படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் ஆர்யா டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் லியோ சிவகுமார் கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் அழகிய கண்ணே. இந்த படத்தில் சஞ்சிதா ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் விஜய் டிவி பிரபலம் அண்ட்ரூஸ், பிரபு சாலமன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இயக்குனர் சீனு ராமசாமியிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த விஜய குமார் இயக்கும் இந்த படத்தை சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். Excited to share the […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பாலிவுட் வெப் தொடரில் இணைந்த விஜய் சேதுபதி… பிரபல நடிகை வெளியிட்ட கலக்கல் புகைப்படம்..‌.!!!

ராஜ் & டீகே இயக்கத்தில் உருவாகும் புதிய பாலிவுட் வெப் தொடரில் நடிகர் விஜய் சேதுபதி இணைந்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் விஜய் சேதுபதி. தற்போது இவர் விக்ரம், விடுதலை, மாநகரம் இந்தி ரீமேக் மும்பைகார் என பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இது தவிர இவர் நடிப்பில் உருவாகியுள்ள மாமனிதன், லாபம், துக்ளக் தர்பார், கடைசி விவசாயி உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. மேலும் தி பேமிலி மேன் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’… மரண மாஸ் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு… உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் புஷ்பா. சுகுமார் இயக்கும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் வில்லனாக நடிக்கிறார். மேலும் மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். நடிகர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அனுபவம் குறித்து பேசும் கலைஞகர்கள்….. ஓடிடியில் வெளியாகவுள்ள ஆந்தலாஜி திரைப்படம்…. ஆவலுடன் ரசிகர்கள்…!!

நவரசா திரைப்படத்தில் உள்ள ஒவ்வொரு பகுதியையும் இயக்கிய கலைஞர்கள் அவர்களின் அனுபவத்தை பகிர்ந்துள்ளனர். தமிழ் திரையுலகில் உள்ள திறமையான கலைஞர்களை வைத்து ‘நவரசா’ என்ற ஆந்தலாஜி திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் 9 மனித உணர்வுகளான கோபம், கருணை, தைரியம், அருவருப்பு, பயம், நகைச்சுவை, காதல், அமைதி மற்றும் வியப்பு போன்றவற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் ஒவ்வொரு பகுதியையும் பல்வேறு கலைஞர்கள் உருவாக்கியுள்ளனர். இதனை Justickets நிறுவனம் சார்பாக இயக்குனர் மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நான்கு பிரம்மாண்ட படங்கள்… கெத்து காட்டும் நடிகர்… வெளியான சுவாரஸ்ய தகவல்..!!

தற்போது நடிகர் பிரபாஸ் நான்கு பிரம்மாண்டமான திரைப்படங்களில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகுபலி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான பிரபாஸ் தனது கைவசம் உள்ள சலார், ராதே ஷியாம், ஆதி புரூஷ் உள்ளிட்ட படங்களை இந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபாஸ் நடித்து முடித்துள்ள ராதே ஷியாம் படம் ஜூலை மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா காலகட்டம் என்பதால் அவர்களால் திட்டமிட்டபடி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகை… வெளியான முக்கிய தகவல்..!!

மூன்றாவது முறையாக நடிகர் சிம்பு கௌதம் மேனனுடன் இணைந்து “நதிகளிலே நீராடும் சூரியன்” என்ற படத்தில் பணியாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆயுத பூஜையை முன்னிட்டு சிம்பு நடித்துள்ள “மாநாடு” படம் வெளியாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நடிகர் சிம்பு கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் “நதிகளிலே நீராடும் சூரியன்” என்ற படத்தில் கவனம் செலுத்த உள்ளார். மூன்றாவது முறையாக நடிகர் சிம்பு கௌதம் மேனனுடன் இணைந்து “நதிகளிலே நீராடும் சூரியன்” என்ற படத்தில் பணியாற்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல முன்னணி நடிகை… திருமணத்திற்கு பிறகும் கவர்ச்சி பதிவு… இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..!!

நடிகை காஜல் அகர்வால் திருமணத்திற்கு பிறகும் கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார். கடந்த வருடம் தொழிலதிபர் கவுதம் கிச்சலுவுக்கும், தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகியான காஜல் அகர்வாலுக்கும் திருமணம் நடைபெற்றது. அதன்பிறகும் பல படங்களில் நடித்து வந்த காஜல் அகர்வால் கமலுடன் இந்தியன் 2, ஹேய் சினாமிகா, கோஸ்டி, பாரிஸ் பாரிஸ், தெலுங்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஆச்சர்யா, ரவுடி பேபி உள்ளிட்ட படங்களையும் தனது கைவசம் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமூக வலைதளத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குனரின் மனைவியா இது….? என்றும் இளமையுடன்…. வலைதளங்களில் வைரலாகும் புகைப்படங்கள்…!!

நடிகை ரோஜாவின் போட்டோ ஷூட் குறித்து அவரது ரசிகர்கள் சமூக ஊடகங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர். தமிழ் திரையுலகில்  80களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரோஜா. இவர் விஜயகாந்த், ரஜினிகாந்த், கார்த்திக், பிரபு என பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார். இதனை அடுத்து தமிழ் திரையுலகில் தன்னை நடிகையாக அறிமுகம் செய்த இயக்குனர் ஆர்.கே செல்வமணியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது படங்களில் நடிப்பதற்கு முழுக்கு போட்டு விட்டு அரசியலில் முழுக் கவனத்தையும்  செலுத்தி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மிலிந்த் ராவ் இயக்கத்தில் வெப் தொடரில் அறிமுகமாகும் நடிகர்… வெளியான பரபரப்பு தகவல்..!!

நடிகர் ஆர்யா வெப் தொடரில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சினிமா துறை கொரோனாவால் முடங்கியுள்ள நிலையில் திரைப்படங்களை போலவே ஆக்ஷன், மர்மம், காதல், பிரம்மாண்டம் என ஓ.டி.டி. தளங்களில் வெளியாகும் வெப் தொடர்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. மேலும் அதில் சினிமாவை விட நடிகர்-நடிகைகளுக்கு அதிக சம்பளம் கொடுப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக வெப் தொடரில் நடிக்க முன்னணி நடிகர், நடிகைகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதன்படி தற்போது வெப் தொடரில் நடிகர் ஆர்யா நடிக்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

யார் அந்த கதாநாயகிகள்..? நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கும் பிரபலங்கள்… வெளியான சுவாரஸ்ய தகவல்..!!

தற்போது மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாக உள்ள “டி44” என்ற படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க இரண்டு பிரபல நடிகைகள் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள “மாறன்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த மாறன் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகும் “டி44” என்ற படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நண்பராக கிரிக்கெட் வீரர்…. பிக்பாஸ் பிரபலத்தின் புதிய படம்…. இன்று போஸ்டர் வெளியீடு…!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை லாஸ்லியாவின் புதிய படத்தில் இருந்து போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. விஜய் டிவி தொலைக் காட்சியின் மூலமாக பிக்பாஸ்-3  நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் லாஸ்லியா.  இந்த நிகழ்ச்சிக்கு பிறகு  ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார். இப்போது இவர் பிரண்ட்ஷிப் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயாகியாக அறிமுகமாக உள்ளார். இதனை தொடர்ந்து பல படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த நிலையில் நண்பர்கள் தினமான இன்று  லாஸ்லியா நடித்துள்ள பிரண்ட்ஷிப் திரைப்படத்தின் புதிய போஸ்டர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘தல 61’ படத்தை தயாரிக்கும் பிரபல நிறுவனம்… செம குஷியில் அஜித் ரசிகர்கள்…!!!

தல 61 படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் அஜித். இவர் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படம் சூப்பர் ஹிட் அடித்தது. தற்போது மீண்டும் இந்த  கூட்டணியில் வலிமை படம் தயாராகி வருகிறது. இதைத் தொடர்ந்து நடிகர் அஜித்தின் 61-வது படத்தையும் ஹெச்.வினோத் தான் இயக்க இருக்கிறார். மேலும் இந்த படத்தை போனிகபூர் தயாரிக்க இருப்பதாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சின்னத்திரையில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்த நடிகை… வெளியான அழகிய புகைப்படம்..!!

நடிகை குஷ்பூ சின்னத்திரையில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார். சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவாகியுள்ள “அண்ணாத்த” திரைப்படத்தில் நீண்ட நாள் இடைவெளிக்கு பிறகு நடிகை குஷ்பு நடித்துள்ளார். அந்த படத்தில் நடிகை குஷ்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நடிகை குஷ்பு அரசியலில் ஈடுபட்டு வருவதால் அவருடைய நடிப்பும் வெகுவாக குறைந்து வந்தது. அவர் சன் டி.வி.யில் ஒளிபரப்பான “லட்சுமி ஸ்டோர்ஸ்” என்ற தொடரில் இறுதியாக நடித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஜீ தமிழில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ப்பா வேற லெவல்… டுவிட்டரில் ‘சர்காரு வாரி பாட்டா’ பர்ஸ்ட் லுக் போஸ்டர் செய்த மாஸ் சாதனை…!!!

மகேஷ் பாபுவின் சர்காரு வாரி பாட்டா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் டுவிட்டரில் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் மகேஷ் பாபு நடிப்பில் தற்போது சர்காரு வாரி பாட்டா படம் உருவாகி வருகிறது. கீதா கோவிந்தம் பட இயக்குனர் பரசுராம் இயக்கும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். மகேஷ் பாபுவின் ஜி.எம்.பி புரொடக்சன் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா இவ்ளோ கோடியா..? புதிய பிசினஸை தொடங்கிய நடிகை… வெளியான பரபரப்பு தகவல்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான நயன்தாரா சுமார் 5 கோடியை தனது புதிய பிசினஸில் முதலீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லேடி சூப்பர் ஸ்டார் என அனைவராலும் அழைக்கப்படும் முன்னணி நடிகையான நயன்தாரா “நெற்றிக்கண்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த “நெற்றிக்கண்” திரைப்படத்திலிருந்து சமீபத்தில் டிரைலர் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சாய் வாலே என்ற நிறுவனத்தில் நயன்தாராவும் அவரது காதலர் விக்னேஷ் சிவனும் இணைந்து முதலீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் ரூ.5 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தர்ஷன்- லாஸ்லியாவின் ‘கூகுள் குட்டப்பா’… சூப்பர் அப்டேட் சொன்ன இசையமைப்பாளர்…!!!

கூகுள் குட்டப்பா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் தர்ஷன். தற்போது இவர் தமிழ் சினிமாவில் ‘கூகுள் குட்டப்பா’ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். இந்த படத்தில் பிக்பாஸ் பிரபலம் லாஸ்லியா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் கே.எஸ்.ரவிகுமார், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். https://twitter.com/GhibranOfficial/status/1421810610350690311 கே.எஸ்.ரவிகுமார் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பீஸ்ட்’ படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு… எங்கு நடக்கிறது தெரியுமா?… பூஜா ஹெக்டே வெளியிட்ட புகைப்படம்…!!!

விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் அபர்ணா தாஸ், விடிவி கணேஷ், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் முதல்கட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘தளபதி தான் டான்ஸிங் ரோஸ்’… இது எப்படி இருக்கு… ஆர்யாவின் வைரல் டுவீட்..‌.!!!

ரசிகர் ஒருவர் எடிட் செய்த வீடியோவை ஆர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் ஆர்யா நடிப்பில் உருவான சார்பட்டா பரம்பரை திரைப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பா.ரஞ்சித் இயக்கியிருந்த இந்த படத்தில் துஷாரா விஜயன், பசுபதி, கலையரசன், சபீர், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தை பார்த்த ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘நன்றி இறைவா’… கர்நாடக கோவிலில் சாமி தரிசனம் செய்த சிம்பு… லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

நடிகர் சிம்பு கர்நாடகாவில் உள்ள முருதீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் மாநாடு படம் உருவாகி வருகிறது. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடித்துள்ளார். சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதைத்தொடர்ந்து சிம்பு நதிகளிலே நீராடும் சூரியன், பத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இவங்க இரண்டு பேருமா….? நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழில்…. மக்கள் செல்வனுடன் இணையும் கிஷன்…!!

சந்தீப் கிஷனுடன் மக்கள் செல்வன் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவில் மக்கள் செல்வன் என்று அன்பாக அழைக்கப்படுவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தற்போது சன் டிவியில் ரியாலிட்டி ஷோ ஒன்றை தொகுத்து வழங்குவுள்ளார். இந்த நிலையில் மாயவன் படத்தில் நடித்த சந்தீப் கிஷன் உடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார் என தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த படமானது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாக உள்ளது. இதனை இஸ்பேட் ராஜா இதய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நீண்ட நாட்களுக்கு பிறகு கவர்ச்சி புகைப்படங்கள்.. வைரலாகும் பிரபல நடிகையின் புகைப்படம்..!!

நடிகை சமீரா ரெட்டி நீண்ட நாட்களுக்கு பிறகு சினிமா வாய்ப்பிற்காக கவர்ச்சி புகைப்படங்களை இணையதளங்களில் வெளியிட்டு வருகிறார். தமிழ் திரையுலகில் நடிகர் சூர்யா நடித்த வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி. அதன் பின்பு தொடர்ந்து பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இவர் தமிழ் மட்டுமன்றி பிற மொழி திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். எனவே, சமீரா ரெட்டி  தமிழ் திரையுலகில் பெரிய இடத்தை பிடிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்த சமயத்தில், இவர் நடித்த சில […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்த படத்திலிருந்து எந்த தகவலும் இல்ல..! வெளியான லேட்டஸ்ட் அப்டேட்… ரசிகர்கள் எதிர்பார்ப்பு..!!

தற்போது லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று “அண்ணாத்த” படத்திலிருந்து வெளியாகியுள்ளது. இயக்குனர் சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள “அண்ணாத்த” திரைப்படம் மாபெரும் எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், மீனா, பிரகாஷ்ராஜ், சூரி, குஷ்பூ, நயன்தாரா உள்ளிட்டோர் ரஜினியுடன் சேர்ந்து நடித்துள்ளனர். மேலும் விரைவில் இந்த படத்தினுடைய ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என கூறப்பட்டிருந்த நிலையில் இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் “அண்ணாத்த” படத்திற்காக தற்போது நடிகை மீனா தனது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இசைஞானியின் இசையமைப்பில்…. வெளியான அந்தலாஜி திரைப்படம்…. நிறைவேறிய நீண்ட நாள் எதிர்பார்ப்பு…!!

நீண்ட காலமாக வெளியிடப்படாமல் இருந்த இயக்குனர் வசந்தின் திரைப்படமானது ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் 1990 ஆம் ஆண்டில் வெளியான கேளடி கண்மணி என்ற திரைபடத்தின் மூலம் பிரபலமானவர் இயக்குனர் வசந்த். இதனை அடுத்து ஆசை, நேருக்கு நேர், பூவெல்லாம் கேட்டுப்பார், மூன்று பேர் மூன்று காதல், சத்தம் போடாதே போன்ற வெற்றிப் படங்களையும் தந்துள்ளார். இதனை தொடர்ந்து சில ஆண்டுகளுக்கு முன்பு ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ என்ற அந்தலாஜி  திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சின்ராசை கொலை செய்தது யார்..? பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்… வெளியான ப்ரோமோ..!!

விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் “நாம் இருவர் நமக்கு இருவர்” சீரியலின் பரபரப்பு ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் “நாம் இருவர் நமக்கு இருவர்” சீரியலில் முத்துராசை யார் கொலை செய்தது ? என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் அந்த கொலையை நான் தான் செய்தேன் என மாயன் ஏற்றுக் கொண்டாலும் காவல்துறை அதிகாரியான கார்த்திக் உண்மை என்னவென்று தீவிரமாக விசாரித்து வருகிறார். அதேசமயம் மாயனும் அந்த கொலையை யார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம… தனுஷின் அடுத்த படத்தில் இரண்டு இளம் நடிகைகள்… யார் யார் தெரியுமா?…!!!

தனுஷின் அடுத்த படத்தில் இரண்டு இளம் நடிகைகள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாறன் படத்தில் நடித்து வருகிறார். தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளியான யாரடி நீ மோகினி, உத்தமபுத்திரன், குட்டி போன்ற படங்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் படத்தில் நடிக்க மறுத்த பிரபல முன்னணி நடிகை… ரசிகர்கள் ஏமாற்றம்..!!

பிரபல முன்னணி நடிகையான ஜோதிகா விஜய் படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இளம் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தயாராகி வரும் “பீஸ்ட்” படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் நடித்து வருகிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்து வருகிறார். மேலும் ரசிகர்கள் மத்தியில் “பீஸ்ட்” படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே அனைத்து நடிகைகளும் நடிகர் விஜய்யுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என விருப்பம் தெரிவிக்கின்றனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘நெற்றிக்கண்’ இயக்குனரின் அடுத்த திரில்லர் படம்… ஹீரோ இவரா?… வெளியான சூப்பர் தகவல்…!!!

இயக்குனர் மிலிந்த் ராவ் அடுத்ததாக இயக்கும் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.  தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நெற்றிக்கண். இந்த படத்தை அவள் பட இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் வருகிற ஆகஸ்ட் 13-ஆம் தேதி இந்த படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக உள்ளது. LetsOTT EXCLUSIVE: We all know @arya_offl is […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆஹா செம… ‘அண்ணாத்த’ டப்பிங் பணிகளில் பிரபல நடிகை… இணையத்தை கலக்கும் புகைப்படம்…!!!

நடிகை மீனா அண்ணாத்த படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த. இயக்குனர் சிவா இயக்கியுள்ள இந்த படத்தில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, சதீஷ், ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார் . 🥳🥰 pic.twitter.com/r7FyGBrpwA — Meena Sagar (@Actressmeena16) August 1, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நண்பர்கள் தினம் ஸ்பெஷல்… ‘பிரண்ட்ஷிப்’ படத்தின் கலக்கலான போஸ்டர்…!!!

ஹர்பஜன் சிங், லாஸ்லியா நடிப்பில் உருவாகியுள்ள பிரண்ட்ஷிப் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் லாஸ்லியா. இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த லாஸ்லியாவுக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது. அதன்படி பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடித்துள்ள பிரண்ட்ஷிப் படத்தில் லாஸ்லியா கதாநாயகியாக அறிமுகமாகிறார். Happy friendship day to you all ❤️🤗 pic.twitter.com/d6tXPCFNpO — […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ராஜமௌலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’… அனிருத் குரலில்… பட்டைய கிளப்பும் ‘நட்பு’ பாடல் இதோ…!!!

ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தில் அனிருத் பாடிய நட்பு பாடல் ரிலீஸாகியுள்ளது . பாகுபலி படத்தை இயக்கி பிரபலமடைந்த ராஜமௌலி தற்போது ஆர்.ஆர்.ஆர் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம் சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். மேலும் ஆலியா பட், சமுத்திரகனி, அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் படத்தில் நடிக்க போகிறாரா..? சினிமா வட்டாரங்கள் தகவல்… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!!

நடிகை சமீரா ரெட்டி மீண்டும் படத்தில் நடிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை சமீரா ரெட்டி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். மேலும் சமீபகாலமாக அவரது நடிப்பில் வெளியான படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து சமீரா ரெட்டி மற்ற மொழிப் படங்களிலும் நடிக்கத் தொடங்கினார். இதற்கிடையே ரசிகர்கள் பலரும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகள் பட்டியலில் சமீரா ரெட்டி இடம்பிடித்து அடுத்தடுத்த படங்களிலும் தொடர்ந்து நடிப்பார் என எதிர்பார்த்துக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிறந்த நாளன்று இணைந்த நடிகை…. தெலுங்கு பட ஹீரோவுக்கு ஜோடியாக…. பிரம்மாண்ட இயக்குனர் இயக்கத்தில்…!!

பாலிவுட் நடிகை கியாரா அத்வானி படத்தில் இணைந்துள்ளார் என்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர்களின் பட்டியலில் ஷங்கரும் ஒருவர். இவர் தில் ராஜூ தயாரிப்பில் பிரம்மாண்டமான படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் தெலுங்கு நடிகர் ராம்சரண் கதாநாயகனாக தேர்ந்துடுக்கப்பட்டுள்ளார். இந்த படமானது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று மூன்று மொழிகளிலும் உருவாகவுள்ளது. இதனை அடுத்து இவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி தேர்வாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் கியாராவின் பிறந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காக்கா முட்டை நடிகை…. அடுத்தடுத்த திரைப்படங்கள்…. ஓடிடி தளத்தில் வெளியீடு…!!

ஓடிடி தளத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் பூமிகா திரைப்படமானது வெளியாக  உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் கிடைத்துள்ளன. தமிழ் சினிமாவில் ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் ‘திட்டம் 2’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படமானது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனை அடுத்து படமானது ஓடிடி தளத்தில் வெளியாகும் என தகவல்கள் வந்துள்ளன. இதனை தொடர்ந்து ‘பூமிகா’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் மனநல மருத்துவராக நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல சீரியல் முடிய போகுதா…. இன்ஸ்டாவில் வெளியான தகவல்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் விரைவில் முடிவுக்கு வருவதாக சமூக வலைதளப் பக்கத்தில் தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து தொடர்களும் மிகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அப்படி வெற்றிப்பயணத்தில் உள்ள  தொடர்களில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடர் குடும்பபாங்கானது என்பதால் மக்களின் ஆதரவுடன் படுஹிட்டாக ஒளிபரப்பாகிறது. இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் ஐஸ்வர்யாவின் திருமணத்துடன் முடிவுக்கு வருவதாக சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இதுக்குறித்து இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர் மீனாவாக நடிக்கும் ஹேமாவிடம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புதுக்கோட்டையில் சரவணன் பட தாரிக்கா… வெளியான சமீபத்திய புகைப்படம்… இணையவாசிகள் அதிர்ச்சி..!!

புதுக்கோட்டையில் சரவணன் என்ற படத்தில் ஒரு பாடலில் நடித்திருந்த தாரிகாவின் தற்போதைய புகைப்படம் இணையவாசிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “புதுக்கோட்டையில் சரவணன்” என்ற திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள நாட்டு சரக்கு என்ற பாடலின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான தாரிகாவின் நடனத்தை பார்த்து அசந்து போன ரசிகர்கள் பலர். இதையடுத்து தாரிகா படங்களில் பெரிய அளவில் நடிக்கவில்லை. மேலும் தாரிகாவை படங்களில் ஒரு சில பாடல்கள் மற்றும் காட்சிகளுக்கு மட்டுமே இயக்குனர்கள் நடிக்க வைத்துள்ளனர். இந்நிலையில் தாரிகாவின் சமீபத்திய புகைப்படம் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஆஹா இவரா..!! லிங்குசாமி- ராம் பொத்தினேனியின் படத்தில் இணைந்த பிரபல நடிகை… வெளியான சூப்பர் தகவல்…!!!

லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்தினேனி நடிக்கும் படத்தில் நடிகை அக்ஷரா கவுடா இணைந்துள்ளார். தமிழ் திரையுலகில் ஆனந்தம், ரன், சண்டக்கோழி, பையா, வேட்டை, அஞ்சான் போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் லிங்குசாமி. தற்போது இவர் தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எப்பா சாமி வதந்திகளை பரப்பாதீங்க..! கோபமடைந்த இயக்குனர்… இணையத்தில் பரபரப்பு பதிவு..!!

இயக்குனர் வெங்கட் பிரபு தன்னைப் பற்றி வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் “மாநாடு” திரைப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துக் கொண்டிருக்கிறார். மேலும் தற்போது மாநாடு படத்துடைய படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் திவீரமாக நடைந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சுரேஷ் காமாட்சிக்கும், வெங்கட் பிரபுவுக்கும் ஏற்பட்ட தகராறால் மாநாடு படம் பாதியில் நின்று போனதாக செய்தி வெளியானது. இந்த செய்தியை அறிந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மீண்டும் தமிழ் படத்தில் நடிக்கும் சாய் பல்லவி… வெளியான கலக்கல் தகவல்…!!!

நடிகை சாய் பல்லவி மீண்டும் தமிழ் படங்களில் கவனம் செலுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாளத் திரையுலகில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமானவர் சாய் பல்லவி. இந்த படத்தில் இவர் மலர் டீச்சர் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதை தொடர்ந்து இவர் தமிழில் தியா, மாரி-2, என்.ஜி.கே போன்ற படங்களில் நடித்திருந்தார். இதன்பின் நடிகை சாய்பல்லவி தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வந்தார். தற்போது […]

Categories

Tech |