நடிகர் விஷால் துப்பறிவாளன் 2 படம் குறித்த முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஷால் நடிப்பில் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் துப்பறிவாளன். இயக்குனர் மிஸ்கின் இயக்கியிருந்த இந்த படத்தில் பிரசன்னா, வினய், அனு இம்மானுவேல், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வந்தது. இதில் விஷால், பிரசன்னா, ரகுமான், கௌதமி உள்ளிட்டோர் நடித்து வந்தனர். இந்த […]
Tag: தமிழ் சினிமா
தமிழ் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அரசு வலியுறுத்தி வருகிறது. மேலும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற சிவாங்கி தனது முதல் டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டார். விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் அவர் தடுப்பூசி எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நடிகர் யாஷின் அடுத்த படத்தை இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கன்னட திரையுலகில் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான கே.ஜி.எப் படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் யாஷ். இந்த படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. வருகிற ஜூலை 16-ஆம் தேதி கே.ஜி.எப்-2 படத்தை […]
நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு படத்தின் முக்கிய அப்டேட்டை யுவன் சங்கர் ராஜா வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாநாடு. இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கியுள்ள இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடித்துள்ளார் . மேலும் எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஏற்கனவே இந்த […]
திரைப்படங்களில் குருக்களாக நடித்து பிரபலமான மங்களநாதர் குருக்கள் மற்றும் அவருடைய குடும்பத்தினர் அனைவரும் இறந்து விட்டதாகவும்,, அவருடைய உடலை தகனம் செய்ய பணம் இல்லாமல் தவித்து வருவதாகவும் சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்நிலையில் தான் உயிரோடு இருப்பதாகவும், பொய்யான தகவலை பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மயிலாப்பூர் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார்.
பிரபல நடிகரின் படத்திற்காக நடிகை பிரியாமணி ரிஸ்க் எடுத்ததாக தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான பருத்திவீரன் படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் பிரியாமணி. இதைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்த பிரியாமணி திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து விலகினார். இதன்பின் மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்த பிரியாமணி தமிழ், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு ஆரிய மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் இவர் தி ஃபேமிலி மேன் 2 வெப் தொடரில் […]
பிக்பாஸ் பிரபலம் ஜித்தன் ரமேஷ் சாலையோர மக்களுக்கு உதவி செய்து வருகிறார். தமிழ் திரையுலகில் நடிகர் ரமேஷ் கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியான ஜித்தன் படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் இதை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான படங்கள் சரியான வரவேற்பை பெறவில்லை. இதன்பின் ஜித்தன் ரமேஷ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு மிகப் பெரிய அளவில் பிரபலமடைந்தார். இந்நிலையில் நடிகர் ஜித்தன் ரமேஷ் […]
ரோஜா சீரியலில் இருந்து நடிகை ஷாமிலி விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ரோஜா சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீரியல் டி.ஆர்.பி யில் தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. இந்த சீரியலில் சிப்பு சூரியன்- பிரியங்கா நல்காரி இருவரும் கதாநாயகன்- கதாநாயகியாக நடித்து வருகின்றனர். மேலும் நடிகை ஷாமிலி வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது ரோஜா சீரியல் மிக விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த சீரியலில் இருந்து நடிகை […]
நடிகர் சந்தானம் ஹிந்தி படத்தில் நடித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி கதாநாயகனாக கலக்கி வந்தவர் சந்தானம். இவர் பல டாப் ஹீரோக்களின் படங்களில் நகைச்சுவை காட்சிகளில் நடித்து அசத்தியவர். கடந்த சில வருடங்களாக நடிகர் சந்தானம் ஹீரோவாக படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் பாரிஸ் ஜெயராஜ் திரைப்படம் வெளியாகியிருந்தது. தற்போது நடிகர் சந்தானம் டிக்கிலோனா, சபாபதி உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் நடிகர் சந்தானம் […]
பூவே உனக்காக சீரியலில் இருந்து நடிகர் அருண் விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்போது சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் ‘பூவே உனக்காக’. இந்நிலையில் இந்த சீரியலில் கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் அருண் இந்த சீரியலில் இருந்து விலகுவதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ‘நான் பூவே உனக்காக சீரியலை விட்டு வெளியேறுகிறேன் என்பதை […]
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஜகமே தந்திரம் படத்திற்கும் பேட்ட படத்திற்கும் தொடர்பு இல்லை என தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான பேட்ட திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ படத்தை இயக்கி வந்தார். இந்த படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி, ஜோஜு ஜார்ஜ், ஜேம்ஸ் காஸ்மோ ,கலையரசன், சஞ்சனா நடராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய […]
நடிகை வித்யாபாலன் நடிப்பில் உருவாகியுள்ள ஷெர்னி படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. பாலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் வித்யா பாலன். இவர் தமிழில் காலா, நேர்கொண்ட பார்வை ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமடைந்தார். தற்போது வித்யாபாலன் நடிப்பில் ஷெர்னி திரைப்படம் உருவாகியுள்ளது. இயக்குனர் அமித் மசூர்கார் இயக்கியுள்ள இந்த படத்தில் முகுல் சட்டா, ஷரத் சக்சேனா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . இந்த படத்தை டி சீரிஸ் நிறுவனமும் அபன்டன்டியா என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனமும் […]
நடிகை மாளவிகா மோகனன் யுத்ரா படக்குழுவினருடன் இணைந்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். மலையாள திரையுலகில் துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான ‘பட்டம் போலே’ படத்தின் மூலம் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். இதன்பின் இவர் கன்னடம், ஹிந்தி ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்து வந்தார். இதையடுத்து நடிகை மாளவிகா மோகனன் கடந்த 2019-ஆம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து இவர் […]
நடிகர் சிபிராஜ் தனது மனைவி மற்றும் இரு மகன்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகர் சிபிராஜ் கடந்த 2003-ஆம் ஆண்டு வெளியான ஸ்டூடண்ட் நம்பர் 1 படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர். இவர் நடிகர் சத்யராஜின் மகன் ஆவார். சிபிராஜ் மற்றும் சத்யராஜ் இருவரும் இணைந்து ஜோர், கோவை பிரதர்ஸ், ஜாக்சன் துரை உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்துள்ளனர். தற்போது நடிகர் சிபிராஜ் ரேஞ்சர், ரங்கா உள்ளிட்ட சில படங்களை கைவசம் வைத்துள்ளார் . […]
கடந்த மே 22-ஆம் தேதி பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு ஆண் குழந்தை பிறந்தது. தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணி பாடகியாக வலம் வருபவர் ஸ்ரேயா கோஷல். இவர் தனது இனிமையான குரல் மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் . மேலும் இவர் கடந்த 2015-ஆம் ஆண்டு ஷிலாதித்யா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் ஸ்ரேயா கோஷல் கர்ப்பமாக இருப்பதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் […]
நடிகை நயன்தாராவின் மூன்று படங்கள் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் பல புதிய திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகி வருகிறது. கடந்த வருடம் சூரரை போற்று, பென்குயின், பொன்மகள் வந்தாள் உள்ளிட்ட படங்கள் ஓடிடியில் ரிலீஸானது. இதை தொடர்ந்து பல திரைப்படங்கள் ஓடிடியில் ரிலீஸாகி வருகிறது. மேலும் வருகிற ஜூன் 18-ஆம் தேதி தனுஷின் ஜகமே தந்திரம் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் தமிழ் திரையுலகில் முன்னணி […]
நடிகை பூஜா ஹெக்டேவின் பள்ளி பருவ புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. இதையடுத்து இவருக்கு தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதன் பின் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வந்த பூஜா ஹெக்டே பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். தற்போது இவர் நடிகர் பிரபாஸின் ராதே ஷ்யாம் […]
ஜகமே தந்திரம் படத்தின் டிரைலர் குறித்து நடிகை ரேவதி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனான வலம் வரும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி, கலையரசன், ஜோஜு ஜார்ஜ், ஜேம்ஸ் காஸ்மோ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வருகிற ஜூன் 18-ஆம் தேதி இந்த படம் ஓடிடியில் ரிலீஸாக உள்ளது. https://twitter.com/ActressRevathi/status/1399589429551845376 இந்நிலையில் இன்று வெளியான […]
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்ததாக தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனியின் படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஏ.ஆர்.முருகதாஸ். இவர் நடிகர் விஜய்யை வைத்து துப்பாக்கி, கத்தி, சர்க்கார் என அடுத்தடுத்த சூப்பர் ஹிட் படங்களை இயக்கி அசத்தினார். இதையடுத்து நடிகர் விஜய்யின் 65-வது படத்தை இயக்க ஏ.ஆர்.முருகதாஸ் ஒப்பந்தம் ஆனார். ஆனால் சில காரணங்களால் இந்த படத்திலிருந்து ஏ.ஆர்.முருகதாஸ் விலகிவிட்டார். தற்போது தளபதி 65 படத்தை நெல்சன் திலீப் […]
மாஸ்டர் பட நடிகர் மகேந்திரன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்த மகேந்திரன் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தார் […]
நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் உருவாகி வரும் 18 பேஜஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. மலையாள திரையுலகில் நடிகர் நிவின் பாலி நடிப்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். இவர் இந்த படத்தின் மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதையடுத்து இவர் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். இதன்பின் அனுபமா தெலுங்கு, கன்னடம், உள்ளிட்ட மொழிப்படங்களில் […]
தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு நடிப்பில் உருவாகிவரும் சர்காரு வாரி பாட்டா படத்தில் அர்ஜுன் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் மகேஷ் பாபுவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் இயக்குனர் பரசுராம் பெட்லா இயக்கத்தில் உருவாகி வரும் சர்காரு வாரி பாட்டா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தை மைத்ரி மூவி […]
இயக்குனர் ராஜமௌலி மீண்டும் நடிகர் பிரபாஸுடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான பாகுபலி திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியானது. இந்த இரண்டு பாகங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு வசூலை வாரிக் குவித்தது. இந்த படத்தில் ராணா, அனுஷ்கா, சத்யராஜ், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பாகுபலி படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் ராஜமௌலி ராம் சரண், […]
நடிகர் தனுஷ் ஜகமே தந்திரம் படம் குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி, கலையரசன், ஜோஜு ஜார்ஜ், ஜேம்ஸ் காஸ்மோ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் இன்று […]
யுவன் சங்கர் ராஜா தனது சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர் ஒருவரின் விருப்பத்தை நிறைவேற்றியுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் யுவன் சங்கர் ராஜாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தில் யுவனின் இசை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மாமனிதன் படத்தில் யுவன் இசைஞானி இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். இந்த படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது […]
நடிகர் கவினின் அஸ்கு மாறோ பாடல் வீடியோ யூடியூபில் 25 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமடைந்தவர் கவின் . இதையடுத்து இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். மேலும் இவர் நட்புன்னா என்னன்னு தெரியுமா, சத்ரியன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது நடிகர் கவின் இயக்குனர் வினித் வரப்பிரசாத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லிப்ட்’ […]
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி, கலையரசன், ஜோஜு ஜார்ஜ், ஜேம்ஸ் காஸ்மோ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீசர் மற்றும் 3 பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே […]
விக்னேஷ் சிவன் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ராக்கி படம் ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் இணைந்து ‘ரவுடி பிக்சர்ஸ்’ நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரித்தும், வெளியிட்டும் வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ராக்கி படத்தின் ரிலீஸ் உரிமையை ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியது. […]
நடிகர் துல்கர் சல்மான் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். மலையாள திரையுலகில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான செகண்ட் ஷோ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் துல்கர் சல்மான். இதை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான சார்லி, உஸ்தாத் ஹோட்டல், பெங்களூர் டேய்ஸ் உள்ளிட்ட பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. மேலும் நடிகர் துல்கர் சல்மான் இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியான வாயை மூடி பேசவும் படத்தின் மூலம் தமிழில் […]
நடிகை வித்யாபாலன் நடிப்பில் உருவாகியுள்ள ஷெர்னி படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. பாலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் வித்யாபாலன். இவர் தமிழில் காலா, நேர்கொண்டபார்வை ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் கடந்த வருடம் இவர் நடிப்பில் உருவான சகுந்தலா தேவி திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது வித்யாபாலன் நடிப்பில் ஷெர்னி திரைப்படம் உருவாகியுள்ளது. இயக்குனர் அமித் மசூர்கார் இயக்கியுள்ள இந்த படத்தில் முகுல் சட்டா, ஷரத் […]
நடிகர் விஷ்ணு விஷால் தனது சகோதரியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் விஷ்ணு விஷால் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர். இதை தொடர்ந்து இவர் குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, ஜீவா, இன்று நேற்று நாளை, ராட்சசன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து அசத்தினார். தற்போது நடிகர் விஷ்ணு விஷால் எப்.ஐ.ஆர், மோகன்தாஸ், இன்று நேற்று நாளை 2 ஆகிய படங்களை […]
குக் வித் கோமாளி பிரபலம் ஷகிலா சாலையோரம் உணவின்றி தவிக்கும் ஏழை மக்களுக்கு உணவு வழங்கியுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் ஷகிலா. இவர் தமிழ், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தவர். இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வித விதமான உணவுகளை சமைத்து அசத்தினார். இறுதிப் போட்டிக்கு தேர்வான ஷகிலா சிறப்பாக சமைத்து இரண்டாவது இடத்தைப் பிடித்தார். மேலும் […]
கே.ஜி.எப்-2 படத்தில் நடித்துள்ள நடிகரின் பிறந்தநாளுக்காக படக்குழு ஒரு ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டுள்ளது. கன்னட திரையுலகில் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் கே.ஜி.எப். இந்த படத்தில் யாஷ், ஸ்ரீநிதி செட்டி, ராமச்சந்திர ராஜு, உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும் இந்த படம் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகி வெற்றி பெற்றது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் மிக பிரம்மாண்டமாக […]
நடிகை பிரணிதா சுபாஷ் தொழில் அதிபர் நிதின் ராஜன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தமிழ் திரையுலகில் நடிகை பிரணிதா சுபாஷ் கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியான உதயன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். இதை தொடர்ந்து இவர் கார்த்தியின் சகுனி, சூர்யாவின் மாஸு என்கிற மாசிலாமணி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தார் . இந்நிலையில் நேற்று நடிகை பிரணிதா சுபாஷ் தொழில் அதிபர் நிதின் ராஜன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து அவர் தனது […]
மரகத நாணயம் பட இயக்குநர் ஏ.ஆர்.கே சரவணன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் ஆதி நடிப்பில் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான ‘மரகத நாணயம்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இயக்குனர் ஏ.ஆர்.கே சரவணன் இயக்கியிருந்த இந்த படத்தில் நிக்கி கல்ராணி கதாநாயகியாக நடித்திருந்தார் . மேலும் முனீஸ்காந்த், ஆனந்தராஜ், காளி வெங்கட், டேனியல், அருண்ராஜா காமராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். டில்லிபாபு […]
இயக்குனர் ஏ.எல்.விஜய் மகனின் முதல் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் இயக்குனர் ஏ.எல்.விஜய் தெய்வத்திருமகள், தாண்டவம், மதராசப்பட்டினம், தலைவா உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். தற்போது இவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியுள்ள தலைவி படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் திரையரங்குகளில் வெளியாக இருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இயக்குனர் ஏ.எல்.விஜய் கடந்த 2014-ஆம் ஆண்டு நடிகை அமலா பாலை காதலித்து திருமணம் […]
லூசிபர் தெலுங்கு ரீமேக் படத்தில் இருந்து இயக்குனர் மோகன் ராஜா விலகியதாக தகவல் பரவி வந்தது. மலையாள திரையுலகில் கடந்த 2019-ஆம் ஆண்டு நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் லூசிபர். பிரித்திவிராஜ் இயக்கியிருந்த இந்த படத்தில் மஞ்சு வாரியர், டோவினோ தோமஸ், இந்திரஜித் சுகுமாரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இதையடுத்து இந்த படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை நடிகர் ராம் சரண் கைப்பற்றினர். மேலும் சிரஞ்சீவி நடிக்கும் இந்த […]
சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள ‘வாழ்’ திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள அயலான், டாக்டர் ஆகிய படங்கள் விரைவில் வெளியாகவுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் படங்களில் நடிப்பது மட்டுமின்றி படங்களை தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார் . இவர் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான ‘கனா’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் […]
மலேசியா டூ அம்னீஷியா படம் குறித்து இயக்குனர் வெங்கட் பிரபு தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் ஜீ5 தளத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் மலேசியா டூ அம்னீஷியா. இந்த படத்தில் வைபவ், வாணி போஜன், கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்திற்கு பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார் . இந்நிலையில் மலேசியா டூ அம்னீஷியா படத்தின் ஒரு காட்சியில் நடிகர் வைபவ் ‘என் […]
இயக்குனர் ரத்னகுமார் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நடிகர் வைபவ் நடிப்பில் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான மேயாதமான் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ரத்ன குமார் . இதையடுத்து இவர் அமலாபால் நடிப்பில் வெளியான ஆடை படத்தை இயக்கியிருந்தார். மேலும் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் ரத்ன குமார் வசனகர்த்தாவாக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 15 மாத குழந்தை முதல் 83 […]
மரகத நாணயம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக தயாரிப்பாளர் டில்லிபாபு தெரிவித்துள்ளார் . தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் ஆதி நடிப்பில் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான மரகத நாணயம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இயக்குனர் ஏ.ஆர்.கே சரவணன் இயக்கியிருந்த இந்த படத்தில் நிக்கி கல்ராணி கதாநாயகியாக நடித்திருந்தார் . மேலும் முனீஸ்காந்த், ஆனந்தராஜ், காளி வெங்கட், எம்.எஸ்.பாஸ்கர், அருண்ராஜா காமராஜ், டேனியல் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். டில்லிபாபு தயாரித்த […]
வெங்கட் பிரபுவின் அடுத்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு நடிகர் சிம்புவின் மாநாடு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இதைதொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது. இந்த படத்தை ராக்போர்ட் என்டர்டைமெண்ட் மற்றும் பிளாக் டிக்கெட் ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கிறது. இந்நிலையில் […]
நடிகர் விஜய்யின் அடுத்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து நடிகர் விஜய் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். […]
நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள எப்.ஐ.ஆர் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் விஷ்ணு விஷால். இதை தொடர்ந்து இவர் குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, ஜீவா, இன்று நேற்று நாளை, ராட்சசன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து அசத்தினார் . சமீபத்தில் இவர் நடிகர் ராணாவுடன் இணைந்து நடித்த காடன் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை […]
நடிகர் நிவின் பாலி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். மலையாள திரையுலகில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி நடிப்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் பிரேமம் . இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படம் மலையாள ரசிகர்களை மட்டுமல்லாது தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. “Butterflies are mentally mental, so is […]
பிக்பாஸ் பிரபலம் ஷிவானி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் ஷிவானி. இவர் சின்னத்திரை சீரியல்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமடைந்தவர். இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷிவானி மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால் இவர் பிக்பாஸ் வீட்டில் எப்போதும் பாலாஜிக்கு ஆதரவாக இருந்து வந்ததார் . இதன்பின் டிக்கெட் டூ பினாலே டாஸ்கில் ஷிவானி சிறப்பாக […]
குக் வித் கோமாளி பிரபலம் தர்ஷா குப்தா சாலையோரம் வாழும் ஏழை மக்களுக்கு உணவு வழங்கி வருகிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சிசன்-2 நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகளுக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் இந்த நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த தர்ஷா குப்தா ‘ருத்ரதாண்டவம்’ படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து […]
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் இவர் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான கர்ணன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் வருகிற ஜூன் 18-ஆம் தேதி ஓடிடியில் ரிலீஸாக உள்ளது. இந்த படத்தில் ஐஸ்வர்ய […]
பிரபல நடிகரும், சினிமா விமர்சகருமான வெங்கட் சுபா கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் ஏற்கனவே அனுமத்திக்கப்பட்டிருந்த நிலையில், இன்று சிகிச்சை பலனளிக்காமல் காலமானார். இவருடைய மறைவுக்கு பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் தேமுதிக தலைவர் விஜயகாந்த், வெங்கட்சுபா கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அனைவரிடமும் அன்புடன் பழக்கூடிய கூடிய ஒரு இனிமையான மனிதர். சினிமா உலகில் அவருடைய பங்கு மிகவும் முக்கியமானது என்று […]
இயக்குனர் வெங்கட்பிரபு தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் இயக்குநர் வெங்கட்பிரபு சென்னை 600028 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இதைத்தொடர்ந்து இவர் கோவா, சரோஜா உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கினார் . மேலும் கடந்த 2011-ஆம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. சமீபத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு லைவ் டெலிகாஸ்ட் என்ற வெப் தொடரை இயக்கியிருந்தார். காஜல் அகர்வால், வைபவ், […]