நடிகர் சிம்பு லூசு பெண்ணே பாடல் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராவார். இவர் பரப்பரப்பிற்கும், சர்ச்சைக்கும் பெயர் பெற்றவர். தற்போது அதையெல்லாம் மறந்து நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றார். அவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான “மாநாடு” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து சமீபத்தில் கௌதம் மேனன் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமானின் இசையில் “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் திரைப்படம் வெளியானது. […]
Tag: தமிழ் சினிமா
நடிகை சமந்தாவுக்கு அரிய வகை நோய் தொற்று ஏற்பட்டுள்ளதால் சிகிச்சை பெறுவதற்காக அமெரிக்க சென்றுள்ளார். தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் சூர்யா, விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலம் அடைந்துள்ளார். இது மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி என பல மொழிகளிலும் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி திறமையான நடிகை என பெயர் எடுத்துள்ளார். க்யூட் தமிழ் பொன்னான சமந்தா விண்ணைத்தாண்டி வருவாயா […]
நடிகர் சிலம்பரசனின் அடுத்த படத்தின் அறிவிப்பு அதிகாரபூர்வமாக அறிவிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்து வந்த சிம்பு இயக்குனர், பாடகர் என பன்முகத்திறன் கொண்டவராகவும் திகழ்கின்றார். ஆனால் இதற்கிடையே சில காலம் பிரச்சனைகள், சர்ச்சைகள் என சிம்பு பல கஷ்டங்களை அனுபவித்துள்ளார். அந்த நேரத்தில் […]
நடிகை மஞ்சு வாரியார் தற்போது நடித்து வரும் “ஆயிஷா” என்ற திரைப்படத்தின் பாடல் வெளியாகியுள்ளது. “அசுரன்” திரைப்படத்தின் மூலம் தமிழில் மிகவும் பிரபலமான நடிகை மஞ்சு வாரியார். இவர் தற்போது “ஆயிஷா” என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தை இயக்குனர் அமீர் பள்ளிக்கல் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு கதை, திரைக்கதையை ஆஷிக் கக்கோடி எழுத, கிராஸ் பார்டர் கேமரா பிரைவேட் லிமிடெட் என்னும் பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜக்காரியா தயாரித்திருக்கின்றார். இந்நிலையில் “ஆயிஷா” […]
புஸ்கர் – காயத்ரி இயக்கத்தில் வெளியான “விக்ரம் வேதா” ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. புஸ்கர் – காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி மற்றும் கதிர் போன்ற பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் “விக்ரம் வேதா”. இயக்குனர் சஷிகாந்த் தயாரிப்பில் வெளியான இத்திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படம் இந்தி ரீமேக்கில் மாதவன் கதாபாத்திரத்தில் சைப் அலி கான் மற்றும் விஜய் சேதுபதி […]
நடிகர் விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் வரும் டிசம்பர் மாதம் ரிலீஸ் என தகவல் வெளியாகியுள்ளது. விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் “துருவ நட்சத்திரம்”. இந்த திரைப்படத்தை கௌதம் மேனன் இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படத்தில் கதாநாயகியாக ரித்துவர்மா நடித்திருக்கின்றார். இந்தப் திரைப்படத்தில் பார்த்திபன், ராதிகா, சரத்குமார், சிம்ரன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் போன்ற பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தின் சூட்டிங் கடந்த 2017-ம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் வெளிநாடுகளில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. […]
2021 ஆம் ஆண்டுக்கான சைமா விருது விழா பெங்களூருவில் நடைபெற்றது. ஆகஸ்ட் 10, 11 ஆகிய 2 நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில் கே.ஜி.எஃப் நடிகர் யஷ், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், நடிகர் கமல்ஹாசன், அல்லு அர்ஜூன், லோகேஷ் கனகராஜ், ஆர்யா, சிவா, பிரியங்கா மோகன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். சைமா விருது நிகழ்ச்சியில் விருதுகள் வென்ற தமிழ் பிரபலங்களின் பட்டியலை இங்கு பார்க்கலாம். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது கர்ணன் படத்திற்காக இசையமைப்பாளர் […]
பெண்களின் உள்ளாடை வெளியே தெரிந்தால் என்ன தவறு என நடிகை ஆலியா பட் கேள்வி எழுப்பியுள்ளார். பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து பேசிய அவர், பெண்களின் பிரா வெளியே தெரிந்தால் அதனை மறைக்க சொல்லிபலரும் கூறுகின்றனர். ஆனால் ஆண்களின் உள்ளாடை வெளியே தெரிந்தால் அவ்வாறு சொல்வதில்லை. உள்ளாடை வெளியே தெரிவது மிக சாதாரண விஷயம். பெண்ணாக இருப்பவர்கள் பல விஷயங்களை மறைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்’ என கூறினார்.
நடிகர் உதயா மற்றும் இயக்குனர் விஜயின் தாயார் வள்ளியம்மை கடந்த சிலர் தினங்களுக்கு முன் காலமானார். இதனையடுத்து உதயா பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில் நான் சினிமாவில் இருந்தாலும் பொருளாதார ரீதியாக அம்மாவுக்கு எதுவும் செய்ய முடியவில்லை. என்னால் பாசத்தையும், அன்பையும் மட்டுமே கொடுத்திருக்க முடிந்தது. என் தாயினுடைய குரலை தினமும் வாய்ஸ் மெசேஜ் மூலம் கேட்டுக்கொண்டே இருக்கிறேன் என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.
இந்திய சினிமா துறையில் மிகவும் மதிப்புமிக்க விருதுகளில் ஒன்றான தேசிய திரைப்பட விருதுகள் சிறந்த நடிகர்கள், திரைப்படங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு வழங்கப்படுகிறது. அந்த வகையில் 2020-ம் ஆண்டு வெளியான படங்களுக்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகிறது. 2020 ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரையிலான காலகட்டத்தில் வெளியாகி சென்சார் பெற்ற படங்களுக்கு மத்திய அரசின் 68-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன் விபரம் பின்வருமாறு; திரைப்படங்களுக்கு உகந்த […]
தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக இருப்பவர் நடிகர் வெங்கல்ராவ். வைகை புயல் வடிவேல் உடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். இவரது காமெடி காட்சிகள் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. ஸ்டண்ட் கலைஞரான இவர் 25 ஆண்டுகள் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் ஸ்டன்ட் மாஸ்டராக பணியாற்றியுள்ளார் .வடிவேலுக்கு சினிமாவில் நடிக்க தடை போட்டதற்கு பிறகு இவருக்கு வாய்ப்பு இல்லாமல் இருந்து வந்தது. இதனால் வறுமையில் தவித்து வந்த இவர் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு […]
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் சிவகார்த்திகேயன். குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் தன் நடிப்பால் கவர்ந்தவர் சிவகார்த்திகேயன். இவர் தற்பொழுது சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் டிரைலர், பாடல் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை கவர்ந்து படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. இந்நிலையில் சென்ற வெள்ளிக்கிழமை டான் திரைப்படம் ரிலீசானது. காலை 4 மணிக்கே ரசிகர்கள் திரையரங்கை சூழ்ந்து சிவகார்த்திகேயனின் கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து வெடி வெடித்து […]
நடிகர் அக்ஷய் குமாருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், அவர் கேன் திரைப்பட விழாவில் கலந்து கொள்ளப் போவதில்லை என அறிவித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான், மாதவன், நயன்தாரா, தமன்னா உள்பட பலருடன் பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் இணைந்து கேன் திரைப்பட விழாவில் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தனிமைபடுத்திக் கொண்டுள்ளதாகவும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துகொள்ளுமாறும் அக்ஷய்குமார் வலியுறுத்தியுள்ளார். கடந்த ஆண்டு கொரோனாவால் பாதித்த அக்ஷய்குமாருக்கு தற்போது மீண்டும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
நடிகை நிக்கி கல்ராணிக்கும், நடிகர் ஆதி பினிசெட்டிக்கும் இடையிலான திருமணம் இம்மாதம் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த திருமணத்தில் இருவீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமணத்திற்கு முந்தையநாள் வரறேப்பு விழா நடிகை வீட்டில் நடைபெறவுள்ளது. சென்னையில் உள்ள ஹோட்டலில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். மார்ச் 24ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்தது. மார்ச் 28 அன்று, நிக்கி தனது இன்ஸ்டாகிராமில் தனது நிச்சயதார்த்த […]
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் நடிக்கும் விக்ரம் படத்தின் முதல் பாடல் பத்தல பத்தல நேற்று வெளியானது. தற்போது இந்த பாடல் மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. இந்த பாடலில் கமல் மத்திய மாநில அரசுகள் விமர்சித்து எழுதி உள்ள வரிகள் வைரலாகி வருகின்றன. இந்த நிலையில் இந்த பாடலில் மத்திய அரசை விமர்சிப்பதாக நடிகர் கமல்ஹாசன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் பல்வேறு திரைப்படங்களில் நடித்தது மட்டுமல்லாமல், திரைப் படங்களையும் இயக்கி வருகிறார். சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். இந்த நிலையில் கமலஹாசனின் முன்னாள் மனைவியும் அவருடைய மகள் சுருதி, அக்ஷராவின் தாயாருமான சாரிகா கொரோனா காலகட்டத்தில் ஒரு நாளைக்கு 2 ஆயிரம் சம்பளத்துக்கு நடித்ததாக தெரிவித்துள்ளார் கமலஹாசனுடன் விவாகரத்துக்குப் பின் மும்பையில் வசித்து வரும் சாரிகா ஒரு சில பாலிவுட் படங்கள் மற்றும் ஓடிடி தொடர்களில் நடித்து வருகிறார். ஸ்ருதி அக்ஷரா லட்சக்கணக்கில் […]
தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதிலும் சிலரின் படங்கள் எப்போதும் ஹிட்டாகும். அப்படி ஹிட் ஆகும் படத்திற்கு பிறகு நடிகர்களின் சம்பளம் உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி தமிழ் சினிமாவில் தற்போதைக்கு 3 நடிகர்கள் மிக அதிக சம்பளம் வாங்குவதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்த மூன்று பேர் இவர்கள்தான். முதலில் ரஜினிகாந்த், இரண்டாவதாக விஜய், மூன்றாவதாக அஜித். இவர்களுள் ரஜினிகாந்த் அதிகபட்சமாக 120 கோடி சம்பளம் வாங்குகிறார். நடிகர் விஜய் 110 கோடியும், […]
இலங்கையில் வரலாறு காணாத நிதி நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்த பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதால் மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தத் தொடங்கினர். இந்நிலையில் அதற்கு ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று மக்கள் கோஷங்களை எழுப்பினர். இந்நிலையில் மகிந்த ராஜபக்சே இலங்கையில் தலைமறைவாக உள்ளார். இலங்கை முழுவதும் வன்முறை கலவரமாக மாறியுள்ளது. இதனால் மகிந்த ராஜபக்சே அங்கிருந்து தப்பித்து இந்தியாவிற்குள் தஞ்சமடைந்துள்ளதாக இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த […]
நடிகை மும்தாஜ் டி.ஆர். ராஜேந்திரர் இயக்கத்தில் வெளிவந்த மோனிஷா என் மோனலிசா என்ற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர். பின் குஷி, சாக்லெட் உள்ளிட்ட ஏராளமான தமிழ் திரைப்படங்களிலும் மற்ற மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். இவர் சென்னையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடயிருப்பில் தன்னுடைய சகோதரர் குடும்பத்தோடு சேர்ந்து வசித்து வருகிறார். இந்த நிலையில் அவருடைய வீட்டில் வேலை செய்து வரும் பணிப்பெண் ஒருவர் மும்தாஜ் தன்னை துன்புறுத்துவதாகவும் தன்னுடைய குடும்பத்தினருடன் அனுப்பி வைக்குமாறும் உதவி […]
இசைஞானி இளையராஜா வருடந்தோறும் தன்னுடைய பிறந்தநாளை ஜூன் மூன்றாம் தேதி கொண்டாடுகிறார். இந்நிலையில் தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு இந்த வருடம் கோவையில் இன்னிசை கச்சேரி நடத்த இளையராஜா திட்டமிட்டுள்ளார். இதற்கான ஒத்திகைகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்த கச்சேரியில் இதுவரை வெளிவராத பல பாடல்களை இசை அமைக்க உள்ளார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கங்கைஅமரன் செய்து வருகிறார். எனவே இந்த இசைக் கச்சேரியில் விருப்பமுள்ளவர்கள் இணைந்து கொள்ளலாம்.
தமிழ் சினிமாவில் உள்ள பெண் காமெடி நடிகைகளில் குறிப்பிடத் தகுந்தவர் மதுமிதா. திரைப்படங்களுக்கு முன்னர் சின்னத்திரைகளில் நடித்த வந்த இவர், சந்தானத்துடன் இணைந்து ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். முன்னதாக மதுமிதா, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா எனும் நகைச்சுவை தொடரில் நடித்து வந்தார். அதன் பின் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா பெரிய பாப்பா என்ற தொடரில் நடித்தார். பின்னர் சினிமாவில் வாய்ப்பு கிடைத்து பெரிய திரைக்கு […]
ஸ்ரீநிதி ரமேஷ் ஷெட்டி ஒரு இந்திய மாடல், நடிகை மற்றும் அழகுப் போட்டியின் பட்டம் பெற்றவர் ஆவார். இவருடைய சிறுவயதிலேயே அம்மா இறந்துவிட்டார். இவருக்கு சிறுவயதிலேயே நடிக்க வேண்டும், மாடலிங்க் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தது. இருப்பினும் படிப்பை முடிக்க வேண்டும் என்பதால் படித்து விட்டு ஒரு IT வேலை செய்து வந்துள்ளார். அப்போது தனது அப்பாவிடம் வேலையை விட்டுவிட்டு மாடலிங்க் செய்யப்போவதாக கூறியுள்ளார். அதற்கு அவருடைய அப்பா சம்மதித்துள்ளார். அதன் பின்னர் 2015 இல் […]
அனைவரும் பார்த்து கவனமாக கையாள வேண்டிய ஒரு பொருள் கண்ணாடி. அது கீழே விழுந்து உடைந்து சிறு துளி கையில் பட்டால் கூட ரத்தம் வந்துவிடும். ஆனால் தமிழ் சினிமாவில் நாம் பல்வேறு சண்டைக்காட்சிகளை பார்த்திருப்போம். அதில் சில படங்களில் கண்ணாடி பாட்டில்களை வைத்து தலையில் அடிப்பது, உடைப்பது போன்ற காட்சிகளை இடம்பெற்றிருக்கும். இருப்பினும் அவர்களுக்கு மட்டும் எதுவும் ஆகாது. அது எப்படி என்று தெரியுமா. திரைப்படங்களில் பயன்படுத்தும் பாட்டில்கள் சர்க்கரை வைத்து செய்கிறார்கள். எப்படி என்றால் […]
சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் குஷ்பு அண்மையில் அரசியல் காரணங்களுக்காக டெல்லி பயணம் சென்றுள்ளார். அதை முடித்துவிட்டு வீடு திரும்புவார் என்று பார்த்தால் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீரென அவருக்கு என்ன ஆனது என்பது தெரியவில்லை, ஆனால் கையில் சுற்றிய ஊசியுடன் புகைப்படம் எடுத்து அதை டுவிட்டரில் பதிவுசெய்து குணமடைந்து வருகிறேன் என பதிவு செய்துள்ளார்.
கேஜிஎஃப் 2 படத்தின் திரையிடலின் போது தியேட்டரில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது ஒரு இளைஞர் சுடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் ஹவேரி மாவட்டத்தில் சினிமாவில் ஆக்ஷன் காட்சிகளை நினைவுபடுத்தும் வகையில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இதில் காயமடைந்த ஹவேரி முகலியைச் சேர்ந்த வசந்தகுமார் சிவபூர் (27) என்பவர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வசந்த்குமார் வயிற்றில் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில், ஆபத்தான கட்டத்தை தாண்டியதாகவும், சம்பவத்தில் குற்றவாளிகளைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டதாகவும் ஹவேரி எஸ்பி […]
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் Aerospace துறை சார்பாக DHAKSHA தனியார் நிறுவனமாக பதிவாகியுள்ளது. தொடர்ந்து மாநில அளவில் DHAKSHA குழு ட்ரோன் தயாரிப்பில் பெரிய அளவில் பங்களிப்பை அளித்து வருகிறது. இந்த நிலையில் “மேக் இன் இந்திய திட்டத்தின்” கீழ் மத்திய பயணிகள் விமான சேவை துறை சார்பாக ஆளில்லா விமானம் தயாரிப்பதற்கு சென்னை-யில் DHAKSHA குழு தேர்வாகியுள்ளது. இதோடு ஆளில்லா விமான பாகங்கள் தயாரிப்பதற்கு சென்னையை சேர்ந்த Zuppa […]
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் 10 உறுப்பினர்கள் இயக்கத்தில் உருவான 10 புதிய திரைப்படங்களுக்கான அறிவிப்பு விழா நேற்று(ஏப்.20) சென்னை வடபழனி கமலா திரையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய இயக்குநரும் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க பொருளாளருமான பேரரசு பேசும்போது, “ஒருசில படங்கள் மட்டுமே பணிபுரிந்த உதவி இயக்குனராக இல்லாத குறும்படங்கள் இயக்கி இயக்குநரான இயக்குநர்களால்தான் தமிழ் சினிமாவிற்கு கெட்ட பெயர் மற்றும் வீழ்ச்சி, ஆனால் இங்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்கள் அனுபவசாலிகள்” எனத் தெரிவித்தார்.
கைதி படத்தின் இந்தி ரீமேக்கில் நடிகை தபு போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகியுள்ள ரன்வே 34 (Runway 34) விரைவில் வெளியாகவுள்ள நிலையில் அவரின் அடுத்தப் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. போலா (Bholaa) என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் தமிழில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன கைதி (Kaithi) படத்தின் அதிகாரப்பூர்வ இந்தி ரீமேக் ஆகும். ஆக்ஷன் படமாக உருவாகவுள்ள போலா படத்தில், நடிகை தபு போலீஸ் அதிகாரி வேடத்தில் […]
பிரபல தெலுங்கு பட இயக்குனர் டி.ராமராவ் இன்று சென்னையில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 84. அமிதாப்பச்சன், தர்மேந்திரா, ரஜினிகாந்த், ஸ்ரீதேவி உள்ளிட்ட பெரிய பெரிய சினிமா பிரபலங்களை வைத்து ஏராளமான தமிழ், இந்தி, தெலுங்கு படங்களை இயக்கியுள்ளார். தமிழில் வெளிவந்த சட்டம் ஒரு இருட்டறை என்ற படத்தை இந்தியில் ரீமேக் செய்து பாலிவுட்டில் ரஜினியை அறிமுகம் செய்தவர். இவர் இவர் மறைவிற்கு திரைப் பிரபலங்கள் பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
புஷ்பா படத்தை தொடர்ந்து பான் இந்தியா ஸ்டாராக உயர்ந்திருக்கிறார் அல்லு அர்ஜூன். இந்த நிலையில், சிகெரெட், பான் மசாலா தயாரிக்கும் நிறுவனம் ஒன்றின் விளம்பரத்தில் நடிப்பதற்காக அல்லு அர்ஜூனை அனுகியிருக்கிறார்கள். அதில் நடிப்பதற்காக 6 கோடி ரூபாய் வரையில் சம்பளமும் கொடுக்க முன்வந்துள்ளதாக தெரிய வந்திருக்கிறது. ஆனால் இது போன்ற விளம்பரங்களில் நடித்து தன்னுடைய ரசிகர்கள் உள்ளிட்ட பலரையும் தவறான பாதையில் இட்டுச்செல்ல விரும்பவில்லை எனக் கூறி எந்த ஆலோசனைக்கும் உட்படாமல் உடனடியாக அதில் நடிக்க முடியாது […]
பரத் நடிப்பில் வெளியான “நடுவன்” திரைப்படம் 12வது தாதா சாகிப் பால்கே விருது 2022 விழாவிற்கு தேர்வாகியுள்ளது. ஷரண் குமார் இயக்கத்தில் ஓடிடியில் 2021 இல் வெளியான இந்தப்படம் சிறப்பான விமர்சனங்களைப் பெற்றது. இதன் காரணமாக சிங்கப்பூர், மலேசியா, புதுச்சேரி போன்ற உலக திரைப்பட விழாக்களில் பங்கேற்று பாராட்டைப் பெற்றது. தற்போது தாதா சாகேப் பால்கே விருது விழாவிற்கு படம் தேர்வாகியுள்ளதால் மிகுந்த மகிழ்ச்சி இருப்பதாக இயக்குனர் சரண்குமார் கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிப்பவர்கள் குறைபிரசவத்தில் பிறந்தவர்கள் என்றும், பிரதமரின் பெயரானது மக்களின் மனதில் எழுதபட்டுள்ளது. இதற்கிடையில் விமர்சனங்களுக்கு எல்லாம் பிரதமர் செவி சாய்ப்பதில்லை என திரைப்பட இயக்குநரும், நடிகருமான பாக்கியராஜ் விமர்சனம் செய்திருந்தார். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இயக்குனர் பாக்யராஜ், நான் பேசியது யார் மனதையும் புண் படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்கிறேன். திராவிட தலைவர்கள் பார்த்து வளர்ந்தவன் நான். நான் பாஜக இல்லை. என்னுடைய சினிமாவிலும் திராவிட இயக்க தலைவர்களின் கருத்துக்கள் இருக்கும் […]
நெல்சன் இயக்கத்தில் விஜய் – பூஜா ஹெக்டே ஜோடியாக நடித்து வெளியான திரைப்படம் பீஸ்ட். இப்படத்தில் செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு, அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏப்ரல் 13ம் தேதி அன்று திரையரங்கில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த நிலையில், பீஸ்ட் திரைப்படத்தை புதுச்சேரியில் தடை விதிக்க வேண்டும் என்று புதுவை முதலமைச்சர் ரங்கசாமி அவர்களுக்கு தமுமுக மாநில செயலாளர் அப்துல் ரஹீம் கடிதம் எழுதியுள்ளார்.
ஹோம்பாலே பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் படம் ‘கேஜிஎப் சாப்டர் 2’. படத்தை இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கியிருக்கிறார். இந்த படம் கன்னடத்தில் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியானது. யாஷ் நடிப்பில் வெளியாகியுள்ள கே.ஜி.எஃப் படத்தின் இரண்டாம் பாகத்தை உலகமே கொண்டாடி வருகிறது. இந்நிலையில் தமிழில் வெளியான கேஜிஎப் 2 படத்தில் ராக்கி பாய் ஆக வந்த […]
விஜய் சேதுபதியின் மாமனிதன் படத்தை ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார். சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் மாமனிதன். இந்தப் படத்தை ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார். இது குறித்து படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் சீனு ராமசாமி, “நல்ல விஷயங்கள் நடப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். படத்தின் OTT உரிமையை வாங்கிய அல்லு அரவிந்திற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படத்தைப் பார்த்து மிகவும் பாராட்டினார். யுவன் ஷங்கர் ராஜாவுக்கு இந்தப் படம் குழந்தை போல. […]
புத்தக முன்னுரை ஒன்றில் ‘பிரதமர் மோடியின் ஆட்சியைக் கண்டு அம்பேத்கர் பெருமைப்படுவார்’ என்று இசையமைப்பாளர் இளையராஜா பேசினார். அம்பேத்கருடன் மோடியைப் ஒப்பிட்டதால் கடந்த இரண்டு நாட்களாக இசைஞானி இளையராஜாவுக்கு எதிராக பலரும் தங்களது கருத்துக்களை கூறிவரும் நிலையில் இளையராஜாவுக்கு ஆதரவாக இயக்குனர் பேரரசு பேசியுள்ளார். இது குறித்து அவர் பதிவிட்டுள்ள தனது ட்விட்டர் பக்கத்தில், வருஷம் பதினாறு என்ற படத்தில் கங்கைக்கரை மன்னனடி என்ற பாடலை இசைஞானி அவர்கள் தோடி ராகத்தில் பாடியது பெரிய ஹிட் அடித்தது. […]
அம்பேத்கருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டு நான் பேசிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்ததாக அவரது சகோதரரும் இசையமைப்பாளருமான கங்கை அமரன் தெரிவித்துள்ளார். அம்பேத்கருடன் பிரதமர் மோடி ஒப்பிட்டு இசையமைப்பாளர் இளையராஜா கூறிய கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து இசையமைப்பாளர் இளையராஜாவின் தம்பியும் இசையமைப்பாளருமான கங்கை அமரன் கூறுகையில் “இதுகுறித்து இளையராஜாவிடம் பேசினேன். அப்போது, ‘நான் எழுதிய கருத்து தவறு என்று மன்னிப்பு கேட்க […]
ஹோம்பாலே பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் படம் ‘கேஜிஎப் சாப்டர் 2’. படத்தை இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கியிருக்கிறார். இந்த படம் கன்னடத்தில் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியானது. யாஷ் நடிப்பில் வெளியாகியுள்ள கே.ஜி.எஃப் படத்தின் இரண்டாம் பாகத்தை உலகமே கொண்டாடி வருகிறது. இது போக படத்தில் பணியாற்றிய நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என பலரும் ரசிகர்களால் […]
நாசர் தலைமையிலான பாண்டவர் அணி வெற்றி பெற்ற பிறகு முதல் முறையாக நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டமானது வருகிற மே 8 ஆம் தேதி மதியம் 2 மணிக்கு நடைபெற உள்ளது. சென்னை சாந்தோம் மேல்நிலைப்பள்ளியில் இந்த நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. 3 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு விஷயங்களை கலந்து ஆலோசிக்க உள்ளனர். குறிப்பாக நடிகர் சங்க கட்டிடம் கட்டுவது […]
பாலிவுட் நடிகையான சன்னி லியோனுக்கு இந்தியை கடந்து உலகம் முழுவதிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். தமிழிலும் சன்னி லியோன் படங்களில் நடித்து வருகிறர். இப்படி இருக்கையில், கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் இளைஞன் ஒருவர் Dk என்ற பெயரில் சிக்கன் கடை நடத்தி வருகிறார். அந்த நபர் சன்னி லியோனின் தீவிர ரசிகராக அறியப்படுகிறார். இந்த நிலையில் தனது கடையில் விற்கப்படும் கோழிக்கறிகளை வாங்கும் சன்னி லியோன் ரசிகர்களுக்கு 10 சதவிகிதம் தள்ளுபடி என்று அறிவித்திருக்கிறார். ஆனால் […]
தமிழ் திரையுலகின் பொற்காலம் இப்போது இல்லை, நாங்கள் நடித்த காலம் தான் உண்மையான பொற்காலம். இப்போது வேற்றுமொழி படங்கள் தான் தமிழ் சினிமாவை ஆள்கின்றன என்று நடிகர் அருண்பாண்டியன் கூறியுள்ளார். மேலும் அவர் விஜய், அஜித் ஆகியோர் பெரும் தொகையை சம்பளமாக பெறுவதால் படத்தின் தரம் குறைகிறது. பட்ஜெட்டில் 90 சதவீதம் சம்பளத்துக்கு போய்விடுகிறது. அதில் மீதி 10% தான் படத்துக்கு செலவு செய்யப்படுகிறது. இதனாலேயே தமிழ் சினிமா பின்தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
ஹோம்பாலே பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் படம் ‘கேஜிஎப் சாப்டர் 2’. படத்தை இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கியிருக்கிறார். இந்த படம் கன்னடத்தில் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் நேற்று (ஏப்ரல் 14ஆம் தேதி) வெளியானது. இந்நிலையில் கேரளாவில் வெளியான திரைப்படங்களில் முதல் நாளில் அதிக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎப் 2 படத்தின் கேரளா பாக்ஸ் […]
இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த தமிழ் இயக்கத்தில் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் ‘டாணாக்காரன்’ திரைப்படம் கடந்த 8-ந்தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், அஞ்சலி நாயர், அன்பரசன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். டாணாக்காரன் திரைப்படத்தை எஸ்.ஆர். பிரபு தயாரிப்பில் இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து மகேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனக்கு வாழ்த்து தெரிவித்ததாக நடிகர் விக்ரம் பிரபு தன்னுடைய சமூக வலைத்தளப் […]
தமிழ் திரையுலகின் பிசியான நடிகைகளில் ஒருவரான பிரியா பவானி சங்கரிடம் நெட்டிசன் ஒருவர் இன்னர் சைஸ் கேட்டதற்கு அவர் அளித்துள்ள அதிரடி பதில் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரியா பவானி சங்கர், ஆரம்பத்தில் ’செய்தி வாசிப்பாளராக’ அறிமுகமாகி, பின்னர் தனியார் தொலைக்காட்சி மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமானார். அதன்பின் நிகழ்ச்சி தொகுப்பாளினியாகவும் பணியாற்றிய பிரியா பவானி சங்கர் ‘மேயாதமான்’ படம் மூலம் திரைத்துறையில் அடியெடுத்து வைத்தார். பிறகு படிபடியாக வளர்ந்து தற்போது தமிழ் சினிமாவில் […]
நடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர். இவரை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் மனதை கவர்ந்தவர். தற்போது இவர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் டான் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடித்திருக்கின்றார். அனிருத் இசையமைத்திருக்கிறார். மேலும் இத்திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா சமுத்திரக்கனி, சூரி, முனீஷ்காந்த், காளி வெங்கட், பாலா சரவணன், சிவாங்கி, புகழ் போன்றோர் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பானது சென்னை, கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் எடுக்கப்படுகின்றது. அண்மையில் இப்படத்தின் பாடல் வெளியாகிய […]
குமரியில் கருப்பு நிற ஜல்லிக்கட்டு காளையுடன் நடந்து சென்றபடி நடிகர் சூர்யா தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை கூறியுள்ளார். “என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்” எனக் கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கன்னியாகுமரியில் இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் உருவாகும் படப்பிடிப்பில் கலந்துகொண்டு சூர்யா நடித்து வருகிறார். இந்த படப்பிடிப்புக்கு இடையில் வாடிவாசல் படத்துக்காக காளையை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்.. His Simplicity!! 🙏🙏 #Suriya ❤️❤️ @Suriya_offl #TeluguFilmNagar pic.twitter.com/plEGjuhfyG — Telugu […]
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ”காத்துவாக்குல ரெண்டு காதல்”. சமந்தா மற்றும் நயன்தாரா இந்த படத்தில் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் ரெடின் கிங்ஸ்லி, பிரபு, ஸ்ரீசாந்த் மற்றும் பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஏப்ரல் 28-ஆம் தேதி ரிலீஸாகும் இந்த படத்தின் […]
தளபதி விஜய் தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”பீஸ்ட்”. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு, அபர்ணா தாஸ், செல்வராகவன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்தநிலையில் இந்த படம் இன்று வெளியானது. படத்தை காண இரவு முதலே […]
கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஒன்றிய அமைச்சர் அமித்ஷா அலுவல் மொழிகள் சம்மந்தமான கூட்டத்தில், அனைவரும் ஆங்கிலத்தைத் தவிர்த்து விட்டு ஹிந்தியை இணைப்பு மொழியாக கற்க வேண்டுமென பேசியது பல்வேறு எதிர்வினைகளையும், ஆதரவுகளையும் சம்பாதித்தது. மேலும், அது சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் பேசுபொருளாக மாறியது. இந்நிலையில், இதுகுறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது ”தமிழ் தான் இணைப்பு மொழி” எனப் பதிலளித்தார். அவரது இந்தப் பதில் பல ஆதரவுகளையும், எதிர்ப்புகளையும் சம்பாதித்து வருகிறது. குறிப்பாக ஒன்றிய […]
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் திரைக்கு வருகிறது. பீஸ்ட் படத்தை வெளிநாடுகளிலும் திரையிட அங்குள்ள தணிக்கை குழுவுக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், குவைத் அரசு பீஸ்ட் படத்தை திரையிட அனுமதி மறுத்துவிட்டது. பீஸ்ட் படத்தில் பயங்கரவாதிகள் குறித்து சர்ச்சை மற்றும் வன்முறை காட்சிகள் இருப்பதாகவும், இதனாலேயே குவைத் தணிக்கை குழு தடை விதித்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் குவைத்தை தொடர்ந்து கத்தாரிலும் பீஸ்ட் படத்தை திரையிட தற்போது […]