Categories
சினிமா தமிழ் சினிமா

‘குக் வித் கோமாளியில் கடைசியாக எடுத்த புகைப்படம் இதுதான்’… அஸ்வினின் உருக்கமான பதிவு…!!!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் எடுத்த கடைசி புகைப்படத்தை அஸ்வின் வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்துள்ளது. தற்போது இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் முடிவுக்கு வந்துள்ளது. மேலும் கிராண்ட் பினாலே நிகழ்ச்சி வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இந்த இறுதிப் போட்டிக்கு பாபா பாஸ்கர், கனி, அஸ்வின், சகிலா, பவித்ரா ஆகிய 5 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஏலே மஞ்சனத்தி புருஷா…? பத்து ரூவா போதுமா…? – நடிகர் லால் டுவிட்…!!!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படம் அனைத்து தரப்பினரிடமும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த படம் வெளியான ஒரே நாளில் 24 கோடி வசூல் ஆகி சாதனை படைத்துள்ளது. இந்த படத்திற்கு அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் லால் தனது ட்விட்டர் பக்கத்தில் ஏலே மஞ்சனத்தி புருஷா? பத்து ரூபா போதுமா? என்ற வசனத்துடன் வசனம் இடம்பெற்ற புகைப்படத்துடன் பதிவிட்டு இயக்குனர் மாரி செல்வராஜ்-க்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Categories
சினிமா தமிழ் சினிமா

மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’… படத்தில் இணைந்த ‘கைதி’ பட நடிகர்… வெளியான புதிய தகவல்…!!!

மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் கைதி பட நடிகர் ஒருவர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் மணிரத்னம் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்தப் படத்தில் ஜெயம்ரவி, கார்த்தி, விக்ரம், சரத்குமார், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சுமி, கீர்த்தி சுரேஷ், திரிஷா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். மேலும் பொன்னியின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம… பிறந்தநாளில் டபுள் ட்ரீட் தரும் அஜித்… ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்…!!!

நடிகர் அஜித்தின் பிறந்தநாளில் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகவுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான நேர்கொண்ட பார்வை மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. இதைத் தொடர்ந்து நடிகர் அஜித் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் கவினின் ‘லிப்ட்’… முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு…!!!

நடிகர் கவின் நடிப்பில் உருவாகியுள்ள லிப்ட் படத்தின் உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் கவின். இதை தொடர்ந்து இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் கலந்துகொண்டு அதிகளவு பிரபலமடைந்தார். மேலும் இவர் நட்புனா என்ன தெரியுமா, சத்ரியன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது நடிகர் கவின் நடிப்பில் இயக்குனர் வினித் வரப்பிரஸாத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் லிப்ட். இந்த படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ட்வின்ஸ் மகள்களுடன் கோவிலுக்கு சென்ற பிரஜின்-சாண்ட்ரா… வெளியான அழகிய புகைப்படம்…!!!

பிரஜின்-சாண்ட்ரா தம்பதியினர் தங்களது அழகிய இரட்டை குழந்தைகளுடன் கோயிலுக்கு சென்று எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமடைந்த  நடிகை சாண்ட்ரா  நடிகர் பிரஜினை திருமணம் செய்து கொண்டார். நடிகர் பிரஜின் காதலிக்க நேரமில்லை, சின்னத்தம்பி ஆகிய சீரியல்களில் நடித்து பிரபலமடைந்தவர். தற்போது இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அன்புடன் குஷி என்ற சீரியலில் நடித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிரஜின்-சாண்ட்ரா தம்பதிக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. அந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வாணி போஜனுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை… வெளியான கலக்கல் புகைப்படம்…!!!

நடிகை வாணி போஜனுடன் பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை காவியா எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அண்ணன் தம்பி பாசம், கூட்டுக்குடும்ப வாழ்க்கையை மையப்படுத்தி இந்த சீரியலின் கதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சீரியல் தொடர்ந்து டி.ஆர்.பி யில் முன்னிலையில் இருந்து வருகிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகளுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இந்த சீரியல் புது திருப்பங்களுடன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘மாநாடு படம் சிம்புவுக்கும் வெங்கட் பிரபுவுக்கும் ஒரு மைல்கல்லாக அமையும்’… தயாரிப்பாளர் ட்வீட்…!!!

நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகிவரும் மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். மேலும் மாநாடு படத்தின் டீசர் வெளியாகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தொகுப்பாளினி ஹிந்தியில் பேசியதால் மேடையிலிருந்து இறங்கியது ஏன்?… விளக்கமளித்த ஏ.ஆர். ரஹ்மான்…!!!

தொகுப்பாளினி ஹிந்தியில் பேசியதால் மேடையிலிருந்து கீழே இறங்கியது குறித்து ஏ ஆர் ரஹ்மான் விளக்கமளித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஏ.ஆர்.ரஹ்மான் எழுதி இசையமைத்து தயாரித்துள்ள திரைப்படம் 99 சாங்ஸ். சமீபத்தில் சென்னையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தொகுப்பாளினி ஹிந்தியில் பேசியதால் ஏ ஆர் ரஹ்மான் மேடையிலிருந்து கீழே இறங்கிய வீடியோ வெளியாகி வைரலானது. இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள ஏ ஆர் ரஹ்மான் ’99 சாங்ஸ் படம் ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘ஃபைனல்ஸ்லயும் காரக்குழம்பு தான் வைக்க போறீங்களா?’… கனியை கலாய்த்த ஏ.ஆர்.ரஹ்மான்… குக் வித் கோமாளி புரோமோ…!!!

குக் வித் கோமாளி 2 கிராண்ட் பினாலே நிகழ்ச்சிக்கான புரோமோ வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்துள்ளது . தற்போது இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் கிராண்ட் பினாலே எபிசோட் ஒளிபரப்பாக உள்ளது. இந்த கிராண்ட் பினாலேவில் நடிகர் சிம்பு, பிக்பாஸ் முகின் ராவ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், பாடகி தீ மற்றும் அறிவு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். Last ல […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாடல்களே இல்லாத படத்தில் நடிக்கும் வாணி போஜன்… வெளியான புதிய தகவல்…!!!

நடிகை வாணி போஜன் நடிகர் பரத்துடன் இணைந்து நடிக்கும் படத்தில் பாடல்களே இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. சின்னத்திரை சீரியல்களில் நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை வாணி போஜன். இதையடுத்து இவர் ஓ மை கடவுளே படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார் . இதை தொடர்ந்து இவர் பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது பிரபல நடிகர் பரத் ஹீரோவாக நடிக்கும் படத்தில் வாணி போஜன் கதாநாயகியாக நடித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குக் வித் கோமாளி பிரபலங்களுடன் பிக்பாஸ் சுரேஷ்… வைரலாகும் புகைப்படங்கள்…!!!

குக் வித் கோமாளி பிரபலங்களுடன் பிக்பாஸ் சுரேஷ் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் வெற்றி பெற்றதை தொடர்ந்து இரண்டாவது சீசன் கலகலப்பாக நடைபெற்று வந்தது. தற்போது குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி 5 மணிநேரம் ஒளிபரப்பாக உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிம்பு, பிக்பாஸ் முகின் ராவ், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனி விமானத்தில் விக்னேஷ் சிவன்- நயன்தாரா… வைரலாகும் வீடியோ…!!!

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் தனி விமானத்தில் கொச்சின் சென்றுள்ளனர். தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருகின்றனர். நானும் ரவுடிதான் படத்தின் படப்பிடிப்பின் போது இவர்களுக்கு காதல் மலர்ந்துள்ளது. விரைவில் இவர்கள்  திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அவ்வப்போது விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரும் இணைந்து பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகையுடன் குக் வித் கோமாளி மணிமேகலை… வெளியான கலக்கல் புகைப்படம்…!!!

நடிகை தேவயானியுடன் குக் வித் கோமாளி பிரபலம் மணிமேகலை எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கோமாளிகளை வைத்துக் கொண்டு போட்டியாளர்கள் சமையல் செய்ய படாத பாடு படும் காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. கடந்த சீசன் மிகப் பெரிய வெற்றியடைந்ததை தொடர்ந்து இரண்டாவது சீசன் கலகலப்பாக நடைபெற்று வந்தது. தற்போது இரண்டாவது சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் லீக்கானதா?… தீயாய் பரவும் புகைப்படம்…!!!

வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் லீக்கானதாக தகவல் பரவி வருகிறது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . இவர் நடிப்பில் கடைசியாக வெளியான நேர்கொண்ட பார்வை மற்றும் விஸ்வாசம் ஆகிய திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. இதைத் தொடர்ந்து இவர் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகை ஹூமா குரேஷி கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் இந்தப் படத்தை போனிகபூர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புதிய சீரியலில் நடிக்கும் ‘பூவே பூச்சூடவா’ சீரியல் நடிகை… வெளியான தகவல்…!!!

‘பூவே பூச்சூடவா’ சீரியல் நடிகை ரேஷ்மா புதிய சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தமிழ் திரையுலகில் கடந்த சில வருடங்களில் அதிகமான சீரியல் நடிகர்கள் அறிமுகமாகிவிட்டார்கள். தற்போது ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களிலும் புதுமுக நடிகர்கள், நடிகைகள் நடித்து வருகின்றனர். இவர்களுக்கும் ரசிகர்கள் ஆதரவளித்து வருகின்றனர். அந்தவகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதுமுக நடிகர்கள், நடிகைகளுடன் தொடங்கப்பட்ட சீரியல் பூவே பூச்சூடவா. கதாநாயகன் மாற்றம் செய்யப் பட்டாலும் இந்த சீரியல் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் இந்த சீரியலில் கதாநாயகியாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘கர்ணன்’ பட இயக்குனருடன் இணைகிறாரா சூர்யா?… வெளியான சூப்பர் தகவல்…!!!

கர்ணன் பட இயக்குனர் மாரி செல்வராஜ் அடுத்ததாக நடிகர் சூர்யா நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது. தமிழ் திரையுலகில் இயக்குனர் மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இவரது முதல் படமே மிகப்பெரிய வெற்றியடைந்தது. இதையடுத்து இவர் தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கினார். நேற்று திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் மிகச் சிறந்த விமர்சனங்களை பெற்று வருகிறது.   […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கடை திறப்பு விழாவுக்கு சென்ற குக் வித் கோமாளி சிவாங்கி… கூட்டமாக கூடிய ரசிகர்கள்… வைரலாகும் வீடியோ…!!!

குக் வித் கோமாளி பிரபலம் சிவாங்கி கடை திறப்பு விழாவுக்கு சென்ற வீடியோ வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் நிறைவடைய உள்ளது. முதல் சீசனை விட இந்த சீசன் அதிக அளவு பிரபலமடைந்துள்ளது. மேலும் இந்த சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகளுக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முகத்தில் காயங்களுடன் பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை… வெளியான புகைப்படம்… ரசிகர்கள் ஷாக்…!!!

பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினி முகத்தில் காயங்களுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மற்ற தொலைக்காட்சி சீரியல்களுக்கு டஃப் கொடுத்து வரும் இந்த  சீரியல் தொடர்ந்து டி.ஆர்.பி யில் முன்னிலையில் இருந்து வருகிறது . தற்போது பல திருப்பங்களுடன் மிக விறுவிறுப்பாக இந்த சீரியல் சென்று கொண்டிருக்கிறது . மேலும் இந்த சீரியலில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா! ஒரே நாளில் ரூ.2,000,000 வசூல்…. சாதனை படைத்தான் கர்ணன்…!!!

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான படம் கர்ணன். இந்தப் படம் நேற்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. திரைப்படத்தை பார்ப்பதற்காக ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. இதையடுத்து இந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் தற்போது வெளியாகி உள்ளது. நேற்று திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுடன் வெளியாகி முதல் நாளில் 24 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளான் கர்ணன். இன்று முதல் திரையரங்குகளில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எக்ஸலென்ட் மூவி… மிஸ் பண்ணிராதீங்க… ‘கர்ணன்’ படம் குறித்து பிரபல நடிகர் டுவீட்…!!!

தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள கர்ணன் படம் குறித்து நடிகர் விஜய் சேதுபதி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் கர்ணன். இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் ரெஜிஷா விஜயன், யோகிபாபு, கௌரி கிஷன், லால் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ள இந்த  படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது . #Karnan excellent movie… Dont […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ப்பா என்னா ஸ்டைலு… கீர்த்தி சுரேஷின் நியூ லுக்… குவியும் லைக்ஸ்…!!!

நடிகை கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் கீர்த்தி சுரேஷுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இது என்ன மாயம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். இதை தொடர்ந்து இவர் சிவகார்த்திகேயன், விஜய், சூர்யா, தனுஷ், விக்ரம் உள்ளிட்ட பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து அசத்தினார். இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வியாபாரத்தைப் பெருக்க ஒற்றுமையாக களமிறங்கும் குடும்பம்… பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புது திருப்பம்…!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதிய திருப்பம் நிகழவிருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர். அண்ணன்- தம்பி பாசம், கூட்டுக்குடும்ப வாழ்க்கை ஆகியவற்றை மையப்படுத்தி இந்த சீரியலின் கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சீரியலில் குமரன், காவியா, சுஜிதா, ஸ்டாலின் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். மேலும் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். All the best pa! 😊 பாண்டியன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஷால்-ஆர்யாவின் ‘எனிமி’… லேட்டஸ்ட் அப்டேட்டை டுவிட்டரில் தெரிவித்த தயாரிப்பாளர்… உற்சாகத்தில் ரசிகர்கள்…!!!

விஷால்- ஆர்யா நடிப்பில் உருவாகிவரும் எனிமி படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வரும் ஆர்யா மற்றும் விஷால் இருவரும் இணைந்து நடித்து வரும் திரைப்படம் எனிமி. இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கும் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், கருணாகரன், மிருணாளினி, மம்தா மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். சமீபத்தில் துபாயில் எனிமி படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஓடிடியில் வெளியாகிறதா விக்ரமின் ‘கோப்ரா’?… விளக்கமளித்த தயாரிப்பு நிறுவனம்…!!!

நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கோப்ரா திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என தகவல் பரவி வருகிறது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கோப்ரா. இந்த படத்தை டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் உள்ளிட்ட படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்குகிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். சமீபத்தில் கோப்ரா படத்தை பிரபல ஓடிடி தளம் வாங்கி இருப்பதாக தகவல்கள் பரவி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் டிவியிலிருந்து வேறு சேனலுக்கு சென்ற குக் வித் கோமாளி பிரபலம்… யார் தெரியுமா?…!!!

குக் வித் கோமாளி அஸ்வின் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியின் புரோமோ வீடியோவில் நடித்துள்ளார் . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களுக்கும், கோமாளிகளுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த பலருக்கும் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த வகையில் சமீபத்தில் அஸ்வின் நடிப்பில் வெளியான ஆல்பம் பாடல் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் குக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘தயவு செய்து சிவாங்கியுடன் என்னை கம்பேர் பண்ண வேண்டாம்’… பாக்கியலட்சுமி சீரியல் நடிகை வெளியிட்ட வீடியோ…!!!

பாக்கியலட்சுமி சீரியல் நடிகை நேஹா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இனியா என்ற கதாபாத்திரத்தில் நடிகை நேஹா நடித்து வருகிறார். இந்நிலையில் குக் வித் கோமாளி பிரபலம் சிவாங்கியையும் நடிகை நேஹாவையும் ஒப்பிட்டு மீம்ஸ்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது. இதுகுறித்து நடிகை நேஹா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். "Don't compare me […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குக் வித் கோமாளி 2 கிராண்ட் பினாலேவில் ‘என்ஜாயி எஞ்சாமி’ பிரபலம்… வெளியான கலக்கல் புகைப்படம்…!!!

குக் வித் கோமாளி 2 கிராண்ட் பினாலேவில் பாடகி தீ கலந்து கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இரண்டாவது சீசன் கலகலப்பாக நடைபெற்று வந்தது . தற்போது இரண்டாவது சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது ‌. இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே எபிசோட் வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி மதியம் 3:30 மணிக்கு ஒளிபரப்பாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நிறைவடைந்தது விஜய் டிவியின் ‘காற்றின் மொழி’ சீரியல்… ரசிகர்கள் வருத்தம்…!!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த காற்றின் மொழி சீரியல் நிறைவடைந்துள்ளது . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்தவகையில் பாரதிகண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ், ராஜா ராணி 2, பாக்கியலட்சுமி உள்ளிட்ட பல சீரியல்கள் டிஆர்பியில் தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறது. மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த காற்றின் மொழி சீரியல் முடிவடைய உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இந்த சீரியலின் கதாநாயகன் சந்தோஷ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குக் வித் கோமாளி 3-ல் பிக்பாஸ் பிரபலமா?… வெளியான புதிய தகவல்…!!!

குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்வது குறித்து பிக்பாஸ் பிரபலம் சுசித்ரா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இந்த நிகழ்ச்சியின் 2-வது சீசன்  இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் இறுதி போட்டிக்கான எபிசோட் ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சி முடிவடைவது ரசிகர்களுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது . மேலும் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என மிக ஆவலுடன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எப்பவாவது ஹிட் குடுத்தா ஓகே… எப்ப பாத்தாலும் ஹிட் குடுத்தா எப்பிடி ப்ரோ?… ‘கர்ணன்’ படம் குறித்து பதிவிட்ட பிரபல நடிகர்…!!!

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள கர்ணன் படம் குறித்து நடிகர் விவேக் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் கர்ணன். இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் ரெஜிஷா விஜயன், யோகிபாபு, கௌரி கிஷன், லால் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ள இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது . […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம மாஸான “கர்ணன்”…. முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா…??

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான படம் கர்ணன். இந்தப் படம் நேற்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. திரைப்படத்தை பார்ப்பதற்காக ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. இதையடுத்து இந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் தற்போது வெளியாகி உள்ளது. நேற்று திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுடன் வெளியாகி முதல் நாளில் 10.39 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளான் கர்ணன். இன்று முதல் திரையரங்குகளில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் அஜித்தின் ‘வலிமை’… படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்…!!!

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகிவரும் வலிமை படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இந்த படத்தை சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை ஆகிய படங்களை இயக்கிய ஹெச் வினோத் இயக்குகிறார். மேலும் இந்த படத்தில் நடிகை ஹூமா குரேஷி கதாநாயகியாக நடித்து வருகிறார்.   போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தொகுப்பாளினி அர்ச்சனாவா இது?… முதன்முதலில் தொலைக்காட்சியில் வந்த போது எப்படி இருக்கிறார் பாருங்க… வெளியான புகைப்படம்…!!!

அர்ச்சனா சன் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணிபுரிந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பல சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களிடையே பிரபலமடைந்தவர் அர்ச்சனா. இதையடுத்து இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதை தொடர்ந்து இவர் விஜய் தொலைக்காட்சியில் சில சிறப்பு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் . மேலும் அர்ச்சனா முதல் முதலில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளினியாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வேற லெவல்… ராயல் என்ஃபீல்டு பைக்கில் ‘மாஸ்டர்’ பட நடிகை… வைரல் புகைப்படம்…!!!

நடிகை மாளவிகா மோகனன் ராயல் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ஸ்டைலாக அமர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நடிகை மாளவிகா மோகனன் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானார். இதை தொடர்ந்து இவர் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்து அசத்தி இருந்தார் . இந்த படத்தின் மூலம் பிரபலமடைந்த மாளவிகா முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார். தற்போது இவர் நடிகர் தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாஸ் லுக்கில் போஸ் கொடுத்த விஜய்… ஜார்ஜியாவில் தொடங்கிய ‘தளபதி 65’ படப்பிடிப்பு… வைரலாகும் புகைப்படம்…!!!

தளபதி 65 படப்பிடிப்பில் நடிகர் விஜய் கலந்து கொண்ட புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாக உள்ள திரைப்படம் தளபதி 65. இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்க இருக்கிறார். மேலும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் பூஜை சிறப்பாக நடைபெற்றது. #Thalapathy65 shooting has started in […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடன இயக்குனருடன் இணைந்து அசத்தலாக டான்ஸ் ஆடிய சாயிஷா… வைரலாகும் வீடியோ… குவியும் லைக்ஸ்…!!!

நடிகை சாய்ஷா நடன இயக்குனருடன் இணைந்து டான்ஸ் ஆடிய வீடியோ வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நடிகை சாயிஷா கடைக்குட்டி சிங்கம், காப்பான், வனமகன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து இவர் நடிகர் ஆர்யாவை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் ஆர்யா-சாயிஷா நடிப்பில் ஓடிடியில் வெளியான டெடி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகை சாய்ஷா நடன இயக்குனர் ஒருவருடன் இணைந்து நடனமாடிய வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். The making […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கேரள சேலையில் ‘தளபதி 65’ பட நடிகை… வெளியான கலக்கல் புகைப்படம்… இணையத்தில் வைரல்…!!!

தளபதி 65 பட நடிகை அபர்ணா தாஸ் கேரள சேலை அணிந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய்யின் 65வது படத்தை இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார் . இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் பூஜை சமீபத்தில் சிறப்பாக நடைபெற்றது. தற்போது தளபதி 65  படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் ஜார்ஜியா சென்றுள்ளனர். இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’… ரிலீஸ் எப்போது தெரியுமா?… வெளியான மாஸ் தகவல்…!!!

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் பொன்னியின் செல்வன் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் மணிரத்னம் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக தயாராகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்தப் படத்தில் ஜெயம்ரவி, கார்த்தி, விக்ரம், சரத்குமார், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சுமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்நிலையில் சுல்தான் பட புரமோஷனில் கலந்து கொண்ட நடிகர் கார்த்தி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகர் கார்த்திக் கவலைக்கிடம்…. ரசிகர்கள் அதிர்ச்சி…!!!

மிகப் பிரபல தமிழ் நடிகர் கார்த்திக் திடீரென்று ஏற்பட்ட மூச்சுத்திணறலால் சீரியஸான நிலையில் மீண்டும் மருத்துவமனையில் கடந்த 5 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து உயர் இரத்த அழுத்தம் மற்றும் மூச்சுத்திணறல் தீவிரமாகி உடல்நிலை மோசமானதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அவரை தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதித்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Categories
சினிமா தமிழ் சினிமா

துளி கூட மேக்கப் போடாமல் இருக்கும் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை… ரசிகர்களை கவர்ந்த புகைப்படம்…!!!

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை கண்மணி மேக்கப் போடாமல் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளனர். மேலும் இந்த சீரியல் மூலம் பிரபலமடைந்த நடிகை கண்மணி அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சம்மர் காலத்தில் இதைவிட வேறு எது பெட்டராக இருக்கும்?… மஞ்சள் நிற உடையில் கீர்த்தி… வைரலாகும் அழகிய புகைப்படம்…!!!

நடிகை கீர்த்தி சுரேஷ் மஞ்சள் நிற சேலையில் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நடிகை கீர்த்தி சுரேஷ் இது என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுகமானவர். இதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன், தனுஷ், விஜய், சூர்யா உள்ளிட்ட பல ஹீரோக்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார் . தற்போது இவர் அண்ணாத்த, சாணிக் காயிதம் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் இவர் தெலுங்கில் நடிகர் நிதினுடன் இணைந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம மாஸ்… கையில் வாளுடன் கம்பீரமாக நடந்து செல்லும் சூர்யா… தீயாய் பரவும் புகைப்படம்…!!!

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சூர்யாவின் 40-வது படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்குகிறார். இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன், சரண்யா பொன்வண்ணன், சத்யராஜ், இளவரசு, திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இமான் இசையமைக்கிறார். சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின் குணமடைந்த நடிகர் சூர்யா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குக் வித் கோமாளி முடிந்தது… சிவாங்கி நீ கேட்ட கேள்விக்கு இது தான் பதில்… அஸ்வின் வெளியிட்ட உருக்கமான பதிவு…!!!

குக் வித் கோமாளி நிகழ்ச்சி குறித்து அஸ்வின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களும் கோமாளிகளும் இணைந்து செய்யும் காமெடிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. அதிலும் குறிப்பாக அஸ்வின்-சிவாங்கி இருவரும் செய்யும் கியூட் ரகளைகள் ரசிக்கும் வகையில் இருக்கும். இந்நிலையில் அஸ்வின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை நிவேதா தாமஸ் சிறு வயதில் எப்படி இருக்கிறார் பாருங்க… வெளியான க்யூட் புகைப்படம்…!!!

நடிகை நிவேதா தாமஸின் சிறுவயது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் ஒளிபரப்பான மூஸா சீரியல் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நிவேதா தாமஸ். இதையடுத்து இவர் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான பாபநாசம் படத்தில் சிறப்பாக நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். மேலும் இவர் தளபதி விஜய்க்கு தங்கையாக ஜில்லா படத்தில் நடித்திருந்தார். இதை தொடர்ந்து இவர் கடந்த வருடம் வெளியான தர்பார் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளாக நடித்து அசத்தி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஸ்வினின் ‘குட்டி பட்டாஸ்’… பாடல் செய்த டக்கரான சாதனை… ரசிகர்கள் கொண்டாட்டம்…!!!

அஸ்வின், ரெபா மோனிகா நடிப்பில் வெளியான ‘குட்டி பட்டாஸ்’ பாடல் 15 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரெட்டை வால் குருவி, நினைக்கத் தெரிந்த மனமே உள்ளிட்ட சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் அஸ்வின். மேலும் இவர் ஓகே கண்மணி உள்ளிட்ட சில திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் குக் வித் கோமாளி2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அதிக அளவு பிரபலமடைந்துள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘விக்ரம்’ படத்தில் கமல் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார் தெரியுமா?… வெளியான சூப்பர் தகவல்… எகிறும் எதிர்பார்ப்பு…!!!

விக்ரம் படத்தில் நடிகர் கமல்ஹாசன் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள திரைப்படம் விக்ரம். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தில் மலையாள நடிகர் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில் விக்ரம் படத்தில் நடிகர் கமல்ஹாசன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம கியூட்… குக் வித் கோமாளி மணிமேகலை சிறுவயதில் எப்படி இருக்கிறார் பாருங்க… வெளியான புகைப்படம்….!!!

குக் வித் கோமாளி மணிமேகலையின் சிறுவயது புகைப்படம் வெளியாகியுள்ளது ‌. சன் மியூசிக் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் மணிமேகலை. இதை தொடர்ந்து இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சியை மிக கலகலப்பாக தொகுத்து வழங்கி வந்தார் . தற்போது இவர் விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கி வருகிறார் . இவர் இந்த நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விஜய் சேதுபதியுடன் பிரபல சீரியல் நடிகை… வெளியான கலக்கல் புகைப்படம்…!!!

நடிகர் விஜய் சேதுபதியுடன் சீரியல் நடிகை அஷா கௌடா எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய்சேதுபதிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் சமீபத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லனாக நடித்து அசத்தி இருந்தார். பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் லாபம், மாமனிதன், யாதும் ஊரே யாவரும் கேளிர் உள்ளிட்ட பல திரைப்படங்கள் தயாராகியுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜிவி பிரகாஷின் ‘வணக்கம்டா மாப்ள’… படத்தின் அசத்தலான டிரைலர் ரிலீஸ்…!!!

நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள வணக்கம்டா மாப்ள படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகராகவும் இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் ஜிவி பிரகாஷ். தற்போது இவர் இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ‘வணக்கம்டா மாப்ள’ படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் பிகில் பட நடிகை அமிர்தா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் டேனியல், ரேஷ்மா, ஆனந்தராஜ், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். Here goes the trailer of #VanakkamDaMappilei https://t.co/ijovtydNuC @rajeshmdirector […]

Categories

Tech |