Categories
சினிமா தமிழ் சினிமா

தெறிக்கவிடும் தளபதி… ‘மாஸ்டர்’ படத்தின் நீக்கப்பட்ட காட்சி இதோ…!!!

‘மாஸ்டர்’ படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சியை அமேசான் பிரைம்  ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘மாஸ்டர்’ . இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் விஜய்சேதுபதி ,மாளவிகா மோகனன் ,அர்ஜுன் தாஸ் ,சாந்தனு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர் . பொங்கல் விருந்தாக திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் வசூலை வாரிக் குவித்துள்ளது . HERE'S THE EXCLUSIVE DELETED SCENE FROM THE MOVIE! […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘பாகுபலி’ படத்தில் நடித்த குழந்தையா இது ?… ரசிகர்கள் ஆச்சரியம்…!!!

‘பாகுபலி’ படத்தில் மகேந்திர பாகுபலியாக நடித்திருந்த குழந்தை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது . இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் நடிகர்கள் பிரபாஸ் , ராணா நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் ‘பாகுபலி’ . இந்த பிரம்மாண்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு இதன் இரண்டாம் பாகம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தின் ஆரம்ப காட்சியில் நடிகை ரம்யா கிருஷ்ணன் ஒரு குழந்தையைக் கையில் வைத்துக் கொண்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திடீரென ரசிகர்களை சந்தித்த தளபதி… இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்…!!!

தளபதி விஜய் திடீரென தனது ரசிகர்களை நேரில் சந்தித்திருக்கிறார் . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இதையடுத்து இவர் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் . இந்நிலையில் நடிகர் விஜய் சென்னை அருகே பனையூரில் இருக்கும் விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை செயலகத்திற்கு சென்றுள்ளார் . அங்கு விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நட்சத்திரம் போல ஜொலிக்கும் நக்ஷத்ரா… வைரலாகும் நிச்சயதார்த்த வீடியோ…!!!

நடிகை நக்ஷத்ராவின் நிச்சயதார்த்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது . செய்தி தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி பின்னர் சீரியல்களில் நடித்து நடிகையாக அறிமுகமானவர் நக்ஷத்ரா . இவர் வாணி ராணி, லட்சுமி ஸ்டோர்ஸ் ,ரோஜா, மின்னலே, நாயகி உள்ளிட்ட பல சீரியல் தொடர்களில் நடித்து பிரபலமடைந்தவர் . தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் திருமகள் சீரியலிலும் நடித்துள்ளார் . மேலும் நக்ஷத்ரா மிஸ்டர் லோக்கல், வாயை மூடி பேசவும் ,இரும்பு குதிரை உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்களின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘தி க்ரே மேன்’ படப்பிடிப்புக்காக அமெரிக்கா பறக்கும் தனுஷ்… வெளியான தகவல்கள்…!!!

நடிகர் தனுஷ் ‘தி க்ரே மேன்’ ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்புக்காக அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் ஜகமே தந்திரம் , கர்ணன் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளது . இதில் கர்ணன் திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் தியேட்டர்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது . தற்போது நடிகர் தனுஷ் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘வலிமை’ படப்பிடிப்பிலிருந்து வெளியான புகைப்படம்… யாரெல்லாம் இருக்கிறார்கள் பாருங்க…!!!

நடிகர் அஜித்தின் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு புகைப்படம் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘வலிமை’ . நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து அஜித் நடித்து வரும் இந்த படம் பிரம்மாண்டமான ஆக்ஷன் காட்சிகளுடன் தயாராகி வருகிறது . இயக்குனர் ஹெச் வினோத் இயக்கும் இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இதுவரை இந்த படத்தின் எந்த ஒரு அப்டேட்டையும் படக்குழு வெளியிடவில்லை . வலிமை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹரிஷ் கல்யாணின் ‘ஓ மணப்பெண்ணே’… அசத்தலான மோஷன் போஸ்டர் ரிலீஸ்…!!!

ஹரிஷ் கல்யாண்- பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஓ மணப்பெண்ணே’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது . தெலுங்கு திரையுலகில் கடந்த 2016 – ல் விஜய் தேவர்கொண்டா , ரித்து வர்மா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் பெல்லி சூப்புளு . இயக்குனர் தருண் பாஸ்கர் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் சூப்பர் ஹிட் அடித்தது . இதையடுத்து இயக்குனர் கௌதம் மேனன் இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை  2016-ல் கைப்பற்றி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘ஜகமே தந்திரம்’ ஓடிடி-யில் வெளியிட வேண்டாம்… தனுஷ் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி வேண்டுகோள்…!!!

தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ படத்தை ஓடிடியில் வெளியிட வேண்டாம் என ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். கடந்த வருடம் கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் பல திரைப் படங்கள் ஓடிடி தளங்களில் வெளியானது . இதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நடிகர் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றது . இதையடுத்து விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படத்தை  இணையத்தில் வெளியிடக்  கூடாது என ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ரீமாசென் கணவரா இவர் ?… இணையத்தில் வைரலாகும் குடும்ப புகைப்படம்…!!!

நடிகை ரீமா சென்னின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது . தமிழ் திரையுலகில் நடிகை ரீமா சென் ‘மின்னலே’ படத்தின் மூலம் அறிமுகமானவர் . இந்த படம் சூப்பர் ஹிட் அடித்ததால் இவர்  ரசிகர்களிடம் மிகவும் பிரபலமடைந்தார். இதையடுத்து விஜய் , விக்ரம் போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து திரைப்படங்களில் நடித்திருந்தார் . இதன் பின் ஒரு சில காலங்கள் இவருக்கு எந்த ஒரு பட வாய்ப்பும் கிடைக்கவில்லை . இதையடுத்து நடிகை ரீமா சென் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிவகார்த்திகேயனின் ‘அயலான் ‘ அப்டேட்… டுவிட்டரில் வெளியிட்ட இயக்குனர்…!!!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் ‘அயலான்’ படத்தின் அப்டேட்டை இயக்குனர் ரவிகுமார் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக  வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘அயலான்’ . இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகை ரகுல் பிரீத் சிங் கதாநாயகியாக நடித்துள்ளார் . மேலும் இந்த படத்தில் கருணாகரன் ,யோகிபாபு, பாலசரவணன் ,ஈஷா கோபிகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . ஏ.ஆர்.ரகுமான் இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூப்பர் சிங்கர் பிரபலம் ஆதித்யா கிருஷ்ணன் இந்த நடிகையின் மகனா?… யாருன்னு நீங்களே பாருங்க…!!!

சூப்பர் சிங்கர் பிரபலம் ஆதித்யா கிருஷ்ணன்  பிரபல நடிகை மீரா கிருஷ்ணனின் மகன் என்ற தகவல் வெளியாகியுள்ளது . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர் . குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் என இருவருக்கும் தனித்தனியே நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது . கடந்த 2006 இல் தொடங்கப்பட்ட சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தற்போது 8வது சீசனை  எட்டியுள்ளது . இந்த சீசனின் முதல் எபிசோடிலேயே அசத்தலாக பாடி அனைவரது கவனத்தையும் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

இரண்டு காஜல் அகர்வாலா ?… நடுவில் நிற்கும் கணவர்… வைரலாகும் புகைப்படம் …!!!

இரண்டு காஜல் அகர்வாலுக்கு நடுவில் அவரது கணவர் நிற்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது . தமிழ் ,தெலுங்கு மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வரும் காஜல் அகர்வாலுக்கு கடந்த வருடம் அக்டோபர் மாதம் கௌதம் கிச்லு என்ற தொழிலதிபருடன் திருமணம் நடைபெற்றது . இதையடுத்து காஜல் தனது கணவருடன் தேனிலவுக்கு மாலத்தீவு சென்று அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டார். இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் தனது சமூக வலைத்தள பக்கத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இத்தனை கோடியா?… ஆர்யா சகோதரிக்கு அடிச்ச ஜாக்பாட்… தீயாய் பரவும் தகவல்…!!!

நடிகர் ஆர்யாவின் சகோதரிக்கு லாட்டரி குலுக்கலில் முதல் பரிசாக ரூ. 32 கோடி கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் ஆர்யாவின் சகோதரி தஸ்லினா தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு கத்தாரில் செட்டிலாகிவிட்டார் . இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர் . பொதுவாக கத்தார் நாட்டில் லாட்டரி சீட்டுகள் வாங்குவதில் இந்தியர்கள் உட்பட பலரும் ஆர்வம் காட்டுவார்கள் . நடிகர் ஆர்யாவின் சகோதரி தஸ்லினாவும் ஜனவரி 26-ஆம் தேதி லாட்டரி சீட்டு ஒன்றை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சன் டிவியில் ஹீரோயினாக…. கலக்க வரும் டிக்டாக் புகழ்…!!

டிக்டாக் புகழ் கேப்ரியல்லா சன் டிவியில் சீரியல் நடிகையாக நடிக்க உள்ளதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். கேப்ரில்லா செல்லஸ் டிக் டாக் மூலம் பிரபலமானவர் ஆவார். இதையடுத்து கேப்ரியல்ல விஜய் டிவி கலக்கப்போவது யாரு? என்ற  நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் அடுத்தபடியாக ஐரா என்ற தமிழ் திரைபடத்தில் சிறு வயது நயந்தாரவாக நடித்து பிரபலமானார். இந்நிலையில் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள சுந்தரி என்ற சீரியலில் கதாநாயகியாக நடிக்க உள்ளார். இது  குறித்த தகவலை அவர் தன்னுடைய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மகளின் பிறந்தநாளுக்கு ஆரி கொடுத்த பரிசு… வைரலாகும் டுவீட்…!!!

பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி தனது மகளுக்கு கொடுத்த பிறந்தநாள் பரிசு குறித்து டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் . பிக்பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னரான ஆரி பிக்பாஸ் வீட்டில் இருந்த போதும், நிகழ்ச்சிக்கு பின்னரும் ஆக்கபூர்வமான கருத்துக்களை தெரிவித்து வருகிறார் ‌. குறிப்பாக விவசாயம் குறித்து அறிவுரைகள் கூறி வருகிறார் . இந்நிலையில் இன்று ஆரி தனது மகள் ரியாவின் பிறந்தநாளுக்கு விதைகளை பரிசாக கொடுத்ததாக சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார் . Happy birthday […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் பாலாவுடன் இணைந்த சிவானி… வைரலாகும் பிரெண்ட்ஷிப் பதிவு…!!!

பிக்பாஸ் பிரபலம் சிவானி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பிரெண்ட்ஷிப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் . சின்னத்திரை சீரியலில் நடித்து பிரபலமடைந்த சிவானி பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில்  கலந்து கொண்ட சிவானி பாலாஜியுடன் நெருக்கமாக இருந்ததால் தனது தனித்தன்மையை இழந்ததாக விமர்சனம் செய்யப்பட்டார் . இருப்பினும் இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடி சிங்கப் பெண்ணாக வெளியேறினார் . ஆனால் இதன் பின் பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் ரீ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆந்தாலஜி ‘குட்டி ஸ்டோரி’… அசத்தலான டிரைலர் ரிலீஸ்…!!!

‘குட்டி ஸ்டோரி’ ஆந்தாலஜி படத்தின் அசத்தலான டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களான கௌதம் மேனன் ,வெங்கட் பிரபு, விஜய் ,நலன் குமாரசாமி ஆகியோர் இணைந்து பணியாற்றியுள்ள ஆந்தாலஜி திரைப்படம் ‘குட்டி ஸ்டோரி ‘. இந்த படத்தை வேல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. காதலை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி ,அதிதி பாலன், அமலாபால் ,சாக்ஷி அகர்வால், மேகா ஆகாஷ் ,வருண், கௌதம் மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். Happy to share #KuttiStoryTrailer […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

உடல் எடையை குறைத்து செம ஸ்லிம்மாக மாறிய வித்யூலேகா… ஆச்சரியத்தில் ரசிகர்கள்…!!!

நகைச்சுவை நடிகை வித்யூலேகா தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார். தமிழ் திரையுலகில் ‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்தின் மூலம் நகைச்சுவை நடிகையாக அறிமுகமானவர் வித்யூலேகா . இந்த படத்தில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்து தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்தார் . தற்போது தெலுங்கில் முன்னணி நகைச்சுவை நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் பிரபல நடிகர் மோகன் ராமின் மகள் ஆவார் . அப்பாவின் துணையால் சினிமாவிற்குள் நுழைந்தாலும் தன்னுடைய திறமையால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடைசியாக பாடிய பாடல் எது தெரியுமா ?… வெளியான தகவல்கள்…!!!

மறைந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் கடைசியாக பாடிய பாடல் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது . நான்கு தலைமுறையாக பாடல்கள் பாடி கின்னஸ் சாதனை படைத்து உலகெங்கிலுமுள்ள திரை ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்தவர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் . இவர் மறைவதற்கு முன் கடைசியாக தேவதாஸ் பார்வதி என்ற ஆந்தாலஜி படத்திற்காக ‘என்னோட பாஷா’ என்ற  பாடலை பாடிருக்கிறார் . ஆர் ஜி கே எனப்படும் ஆர்.ஜி.கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது . எஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரீசன்டா ரீயூனியன் போட்ட பிக்பாஸ் பிரபலங்கள்… என்ன காரணம் தெரியுமா?…!!!

பிக்பாஸ் பிரபலங்கள் மீண்டும் சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது ‌. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் வெற்றிகரமாக நிறைவடைந்தது . இந்த சீசனில் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களும் அதிக அளவில் பிரபலமடைந்து தங்களுக்கென தனி ரசிகர்களை உருவாக்கிக் கொண்டனர் . இந்நிலையில் பிக்பாஸ் பிரபலங்கள் மீண்டும் சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது . நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள ‘களத்தில் சந்திப்போம்’ திரைப்படத்தின் சிறப்பு முன்னோட்டத்திற்கு நடிகர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரூ55,00,00,000….. ஹீரோவை மிஞ்சிய வில்லன்….. பாலிவுட்டில் கலக்கி வரும் தமிழ் நடிகர்….!!

விஜய் சேதுபதி பாலிவுட் முன்னணி ஹீரோக்களையே மிஞ்சிய சம்பளம் வாங்கியுள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் விஜய் சேதுபதியின் கால்ஷீட் கிடைப்பது கஷ்டம். வருடம் முழுவதும் பிஸியாக இருக்கும் அவர் தன்னுடைய இமேஜ் பற்றி எல்லாம் கவலைப்படாமல் எல்லா கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். இதன் காரணத்தினால் அவரை மலையாளம், தெலுங்கு, இந்தி என எல்லா பக்க்கமும் தானாக வந்து படங்கள் ஒப்பந்தம் செய்கின்றனர். இந்நிலையில் இந்தி வெப் படத்தில் நடிக்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாரம்பரிய உடையில் விக்னேஷ் சிவன் – நயன்தாரா … இணையத்தை கலக்கும் புகைப்படம்…!!!

விழா ஒன்றில் கலந்து கொண்டுள்ள விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது . தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாராவும் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருகின்றனர் . விரைவில் இவர்கள் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது . சமீபத்தில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார்கள் . இந்த நிறுவனத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல சீரியல் நடிகைக்கு ஆண் குழந்தை… ரசிகர்கள் வாழ்த்து…!!!

பிரபல சீரியல் நடிகை ஸ்வேதா தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும் சின்னத்திரை தொடர்களில் வில்லி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தைப் பெற்றவர் ஸ்வேதா வெங்கட் . இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி , பொன்மகள்வந்தாள் மற்றும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தாமரை உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருந்தார் . மேலும் இவர் கவண் , தப்பு தண்டா ஆகிய  திரைப்படங்களிலும் நடித்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு நடிகை ஸ்வேதாவுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் ஆண்டனியின் ‘கோடியில் ஒருவன்’… ரிலீஸ் குறித்த அறிவிப்பு …!!!

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘கோடியில் ஒருவன்’ படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி . இவர் நடிப்பில் இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் ‘கோடியில் ஒருவன்’ திரைப்படம் தயாராகியுள்ளது . இந்த படத்தில் ஆத்மீகா கதாநாயகியாக நடித்துள்ளார் . நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ள இந்த படத்திற்கு உதயகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார் . Hi : ) It's […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ராகவா லாரன்ஸின் ‘ருத்ரன்’ படத்தில் இணைந்த பிரபல நடிகர்… யார் தெரியுமா?…!!!

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் ‘ருத்ரன்’ படத்தில் பிரபல நடிகர் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது . தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘ருத்ரன்’ . இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார் . இந்த படத்தை இயக்குவது யார் ?என்பதை படக்குழு அறிவிக்கவில்லை. சமீபத்தில் இந்த படத்தை தயாரிக்கும் பைவ் ஸ்டார் கதிரேசன் இந்த படத்தை இயக்குவதாக அறிவிப்பு வெளியானது  . Happy to […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘டெனென்ட்’ படத்துடன் ‘மாநாடு’ டீசரை ஒப்பிடுவது பெருமை… வெங்கட் பிரபு டுவீட்…!!!

‘டெனென்ட் படத்துடன் மாநாடு பட டீஸரை ஒப்பிடுவது பெருமை’ என வெங்கட்பிரபு ட்விட்டரில் தெரிவித்துள்ளார் . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘மாநாடு ‘. இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கும் இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார் . இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ் ஜே சூர்யா ,கருணாகரன் ,பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு யுவன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாடர்ன் உடையில் அசத்தும் ஆலியா மானசா… வைரலாகும் புகைப்படம்…!!!

சீரியல் நடிகை ஆலியா மானசா மாடர்ன் உடையணிந்து வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் கதாநாயகியாக நடித்து பிரபலமடைந்தவர் நடிகை ஆலியா மானசா . இதன் பின் அதே சீரியலில் கதாநாயகனாக நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . தற்போது இவர்களுக்கு அய்லா என்ற அழகிய பெண் குழந்தை உள்ளது. திருமணத்திற்குப் பிறகு நடிகை ஆலியா மானசா ராஜா ராணி சீசன் 2 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கவினின் ‘லிப்ட்’ படத்தில் இணைந்த குக் வித் கோமாளி பிரபலம்… வெளியான படப்பிடிப்பு புகைப்படம்…!!!

கவின் நடிப்பில் உருவாகிவரும் ‘லிப்ட்’ படத்தில் குக் வித் கோமாளி பிரபலம் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் பிரபலமடைந்தவர் கவின் .இதையடுத்து நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனக்கென ஏராளமான ரசிகர்களை உருவாக்கினார் . தற்போது இவர் நடிப்பில் ‘லிப்ட்’ திரைப்படம் தயாராகி வருகிறது . இந்த படத்தில் பிகில் பட நடிகை அம்ரிதா ஐயர் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யாவின் ‘வாடிவாசல்’ தாமதமாவது ஏன்?… வெளியான தகவல்கள்…!!!

சூர்யாவின்  ‘வாடிவாசல்’ படத்தின் படப்பிடிப்பு தாமதமாவது குறித்த தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில்  நட்சத்திர நாயகனாக வலம் வரும் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘சூரரைப்போற்று’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது . இதைத் தொடர்ந்து நடிகர் சூர்யா ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் கௌரவ கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து நடிகர் சூர்யா இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ‘வாடிவாசல்’ படத்தில் நடிக்க உள்ளார் . வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹரி-அருண் விஜய் படத்தில் இணைந்த ‘அசுரன்’ பிரபலம்… படக்குழு அறிவிப்பு… எகிறும் எதிர்பார்ப்பு…!!!

ஹரி- அருண் விஜய் கூட்டணியில் உருவாகும் படத்தில் ‘அசுரன்’ பட நடிகை இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது . தமிழ் திரையுலகில் சாமி, வேல், ஆறு ,பூஜை ,சிங்கம் என பல்வேறு ஹிட் திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் ஹரி அடுத்ததாக நடிகர் அருண் விஜய் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் . இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார் . மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் யோகிபாபு, பிரகாஷ்ராஜ், கேஜிஎப் பட வில்லன் ராமச்சந்திர ராஜூ , […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிப்ரவரி-14 ஆம் தேதி பெப்சி தேர்தல் – ஆர்.கே செல்வமணி…!!

வரும் பிப்ரவரி-14 ஆம் தேதி பெப்சி சங்க தேர்தல் நடைபெற உள்ளதாக பேசி சங்க தலைவர் ஆர்.கே செல்வமணி தெரிவித்துள்ளார். சென்னையில்இன்று  செய்தியாளர்களை சந்தித்த பெப்சி சங்க தலைவர் ஆர்.கே.செல்வமணி, “வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (ஃபெப்சி) தலைவர், 5 துணை தலைவர்கள், 5 இணை செயலாளர்கள், 1 பொதுச்செயலாளர், 1 பொருளார் என மொத்தம் 13 நபர்களுக்கு இந்த தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளார். இதில் 23 சங்கங்களின் தலைவர்கள் ,செயலாளர், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வீடியோ: “வாத்தி கம்மிங் ஒத்து” விஜய்க்கே TUFF கொடுத்துருக்காரே…. வடிவேலு வெர்ஷன் வந்தாச்சு…!!

வாத்தி கம்மிங் ஒத்து விஜய் பாடலுக்கு வடிவேலு ஆடியிருக்கும் வடிவேலு வெர்சன் மீம்ஸை நீங்களே பாருங்களேன். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் கடந்த 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அதன்பிறகு கடந்த 29ஆம் தேதி அமேசான் ப்ரைம் இல் வெளியிடப்பட்டது. தற்போது மாஸ்டர் உலக அளவில் ரூபாய் 200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இந்த படத்தில் உள்ள வாத்தி கம்மிங் ஒத்து பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. குட்டீஸ் எல்லாருக்குமே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த ‘மெர்சல்’ வில்லன்… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

நடிகர் சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தில் எஸ் .ஜே .சூர்யா இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகின் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகியுள்ள ‘டாக்டர்’ திரைப்படம் வருகிற மார்ச் மாதம் வெளியாகவுள்ளது. நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார் . இதையடுத்து  நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ‘டான்’ படத்தில் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது . 🎭 Excited to have […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ரூ.55 கோடியா?… விஜய் சேதுபதியின் அடுத்த பட சம்பளம்… வெளியான மாஸ் தகவல்…!!!

பாலிவுட் வெப் தொடரில் நடிக்கவுள்ள விஜய் சேதுபதியின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென ஏராளமான ரசிகர்களை உருவாக்கியவர் . இவர் நடிகர் விஜயுடன் இணைந்து நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம்  திரையரங்குகளில் வெளியாகி வசூலில் சாதனை படைத்து வருகிறது. இதையடுத்து நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகியுள்ள ‘துக்ளக் தர்பார்’ திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது. மேலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BREAKING: பிரபல தமிழ் நடிகர் காலமானார்…!!

எம்ஜிஆரின் உதவியாளர் ராமகிருஷ்ணனின் மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் உதவியாளர் ராமகிருஷ்ணன் (95) சற்றுமுன் காலமானார். காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். எம்ஜிஆருடன் சேர்ந்து ராமகிருஷ்ணன் பல படங்களில் நடித்துள்ளார். அவருடைய மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
சினிமா தமிழ் சினிமா

‘குக் வித் கோமாளி’ வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்த நடிகை… வேற லெவலில் வைரலாகும் புரோமோ…!!!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் முதல் முறையாக வைல்ட் கார்டு என்ட்ரியாக சீரியல் நடிகை ஒருவர் நுழைந்துள்ளார் . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து இரண்டாவது சீசன் நடைபெற்று வருகிறது . இந்த சீசனில் குக்குகளாக சகிலா ,பாபா பாஸ்கர் ,அஸ்வின், பவித்ர லட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். மேலும் பாலா ,மணிமேகலை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்பாவின் சடலத்தை பார்த்து…. கதறி அழுத பாலாஜி…. வைரலாகும் வீடியோ…!!

பாலாஜி தனது அப்பாவின் சடலத்தை பார்த்து கதறி அளித்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. பிக்பாஸ் சீசன்-4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் பாலாஜி முருகதாஸ். இந்நிலையில் தற்போது இவருடைய தந்தை இறந்துள்ளார். இவரின் தந்தை இறந்த செய்தியைக் கேட்டு பாலாஜியின் ரசிகர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து அவருடைய தந்தையின் இறுதிச்சடங்கின்போது தந்தையின் சடலத்தை பார்த்து பாலாஜி கதறி அழுது வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்த பாலாஜியின் ரசிகர்கள் சமூக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘மருது’ பட கூட்டணி மீண்டும் இணைகிறதா?… வெளியான தகவல்கள்…!!!

‘மருது’ படத்தில் இணைந்து பணியாற்றிய முத்தையா – விஷால் கூட்டணி மீண்டும் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் முத்தையா குட்டிப் புலி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் . இதையடுத்து இவர் இயக்கத்தில் வெளியான கொம்பன், மருது, தேவராட்டம் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான ‘புலிக்குத்தி பாண்டி திரைப்படம் டி.ஆர்.பியில் விஜய் ,அஜித், சூர்யா போன்ற முன்னணி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தெறிக்கவிடும் ‘மாநாடு’ டீசர்… கொண்டாடும் சிம்பு ரசிகர்கள்…!!!

நடிகர் சிம்புவின் நடிப்பில் உருவாகி வரும் ‘மாநாடு’ திரைப்படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘மாநாடு’ . வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார் . இந்தப் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் ,கருணாகரன், எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா ,பிரேம்ஜி, டேனியல் பாலாஜி, ஒய்.ஜி. மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர் . ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் இப்படத்திற்கு யுவன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹரி – அருண் விஜய் படத்தில் இணைந்த ‘குக் வித் கோமாளி’ பிரபலம் … வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

நடிகர் அருண் விஜய் படத்தில் குக் வித் கோமாளி பிரபலம் புகழ் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது . தமிழ் திரையுலகில் சாமி, சிங்கம், வேல், பூஜை போன்ற பல ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் ஹரி அடுத்ததாக நடிகர் அருண் விஜய் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் . இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்கிறார் . மேலும் யோகிபாபு ,பிரகாஷ்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். Cooku with comali […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘எனக்கு திரைப்படம் இயக்க விருப்பம் ‘… வலிமை பட தயாரிப்பாளர் பேட்டி…!!!

நடிகர் அஜித்தின் ‘வலிமை’ படத்தை தயாரித்து வரும் போனி கபூர் விரைவில் இயக்குனராக உள்ளாராம் . பாலிவுட்டில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வரும் போனி கபூர் தற்போது தென்னிந்திய மொழி திரைப்படங்களை தயாரிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார் . அந்த வகையில் தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித்தின் ‘வலிமை’ திரைப்படத்தை தயாரித்து வருகிறார் .   இவர் அஜித் நடித்திருந்த நேர்கொண்டபார்வை படத்தையும் தயாரித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது . இந்நிலையில் தயாரிப்பாளர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’… ரிலீஸ் எப்போது தெரியுமா ?…!!!

நடிகர் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘டாக்டர்’ . இந்த படத்தை கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் திலிப்குமர் இயக்கியுள்ளார் . இந்தப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார் . மேலும் இந்த படத்தில் வினை , யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் . இந்தப் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாஸ் காட்டி கலக்கும் ஹிப்ஹாப் ஆதி… அடுத்ததா இயக்கி நடிக்கும் படம் குறித்த சூப்பர் அப்டேட்…!!!

நடிகர் ஹிப்ஹாப் ஆதி இரண்டாவதாக இயக்கும் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி ஆம்பள ,தனி ஒருவன், அரண்மனை2 ,கதகளி ,இமைக்காநொடிகள் ,கோமாளி ,ஆக்ஷன் ,கத்திச்சண்டை உட்பட பல திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார் . இவர் மீசைய முறுக்கு படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் . இந்தப் படத்தை அவரே இயக்கி இருந்தார் . இதைத்தொடர்ந்து ஹிப்ஹாப் ஆதி நட்பேதுணை ,நான் சிரித்தால் ஆகிய திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார் . […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இன்று சிம்புவிற்கு பிறந்தநாள்…. வாழ்த்துக்கள் STR…!!

லிட்டில் சூப்பர் ஸ்டார் சிலம்பரசனுக்கு இன்று பிறந்தநாள் பிறந்தநாள் வாழ்த்துக்கள். பிரபல நடிகர் டி.ஆர் ராஜேந்திரனின் மகன் நடிகர் சிலம்பரசன் இன்று தன்னுடைய 38வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவர் தன்னுடைய ரசிகர்களை தனது விரல் வித்தைகளின் மூலம் கவர்ந்திழுத்தவர் ஆவார். இவர் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார். இவர் நடக்க பழகும் போதே நடிக்கவும் பழகியவர். திரையுலகின் சகலகலா வல்லவன். இவர் பல தடுமாற்றங்களை சந்தித்தாலும் முயற்சி மட்டுமே மூலதனம் என மீண்டும் கோலிவுட்டில் கால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘ஜகமே தந்திரம்’ திரையரங்குகளில் வெளியாகும் என நம்புகிறேன்… நடிகர் தனுஷ் டுவிட்…!!!

நடிகர் தனுஷ் ‘ஜகமே தந்திரம்’ ரிலீஸ் குறித்து ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘ஜகமே தந்திரம்’ . கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் கடந்த வருடம் மே மாதம் ரிலீசாக இருந்தது . ஆனால் கொரோனா பரவல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது . இதையடுத்து ஜகமே தந்திரம் திரைப்படம் ஓடிடியில் ரிலீசாகும் என  தகவல்கள் வெளியானது . தயாரிப்பு தரப்பின் இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘வலிமை’ அப்டேட் குறித்து பேசிய அஜித்… உற்சாகத்தில் ரசிகர்கள்…!!!

நடிகர் அஜித் ‘வலிமை’ பட  அப்டேட் குறித்து ரசிகர்களிடம் பேசியுள்ளார் . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘வலிமை ‘. இயக்குனர் எச் வினோத் இயக்கும் இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார் . தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . கிட்டத்தட்ட ஒன்றரை வருடமாக இந்த படத்தைப் பற்றிய எந்த ஒரு அறிவிப்பையும் படக்குழு வெளியிடவில்லை . இந்நிலையில் ஹைதராபாத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘மாஸ்டர்’ விஜய் கெட்டப்புக்கு மாறிய பிக்பாஸ் கவின்… வைரலாகும் புகைப்படம் …!!!

பிக்பாஸ் பிரபலம் கவின் மாஸ்டர் பட விஜய் கெட்டப்பில் இருக்கும் புகைப்படம்  இணையத்தில் வைரலாகி வருகிறது . பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலின் மூலம் அறிமுகமானவர் கவின். இந்த சீரியலில் வேட்டையன் கதாபாத்திரத்தில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார் . இதையடுத்து இவர் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதிக அளவு பிரபலமடைந்தார். இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கவின் ‘மாஸ்டர்’ பட விஜய் கெட்டப்பில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கவர்ச்சி புகைப்படம் கேட்ட ரசிகர்கள்… கெட்ட வார்த்தையால் திட்டிய லட்சுமி மேனன்…!!!

கவர்ச்சி புகைப்படம் கேட்ட ரசிகர்களை நடிகை லட்சுமி மேனன் கெட்டவார்த்தையால் திட்டியுள்ளார் . தமிழ் திரையுலகில் நடிகை லட்சுமி மேனன் கும்கி ,சுந்தரபாண்டியன் ,மஞ்சப்பை, ஜிகர்தண்டா ,பாண்டியநாடு ,வேதாளம், கொம்பன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் . தற்போது இவர் படங்களில் நடிப்பதை குறைத்து படிப்பு மற்றும் நடனத்தில் கவனம் செலுத்தி வருகிறார் . மேலும் இவர் சமூக வலைத்தளங்களில் சர்ச்சை கருத்துக்கள் வெளியிடுவதை  வழக்கமாக வைத்துள்ளார் . சமீபத்தில் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தொகுப்பாளர் குருவுக்கு திருமணம்… வருங்கால மனைவியுடன் வெளியிட்ட புகைப்படம்… குவியும் வாழ்த்து …!!!

தொகுப்பாளர் குரு தனது வருங்கால மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் . கடந்த வருடம் கொரோனா பரவல் காரணமாக பலரும் தங்கள் திருமணம் மற்றும் வீட்டு சுபநிகழ்ச்சிகளை தள்ளி வைத்திருந்தனர் . தற்போது ஊரடங்கு தளர்வுபடுத்தப்பட்டுள்ள நிலையில் பல பிரபலங்கள் வரிசையாக தங்கள் திருமணம் பற்றிய செய்திகளை அறிவித்து வருகின்றனர் . இந்நிலையில் தொகுப்பாளரும் நடிகருமான குருவுக்கு நாளை (பிப்ரவரி 3) திருமணம் நடைபெற உள்ளது . சென்னையைச் சேர்ந்த தொகுப்பாளர் குரு சினிமா மீது கொண்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கேங்ஸ்டராக மாறும் ஜெயம் ரவி… எதிர்பார்ப்பை எகிற விடும் புதிய படம்…!!!

நடிகர் ஜெயம்ரவி நடிக்கும் புதிய படத்தில் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘பூமி’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது . தற்போது இவர் இயக்குனர் மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார் . பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது . இதனிடையே நடிகர் ஜெயம் ரவி ‘பூலோகம்’ பட இயக்குனர் […]

Categories

Tech |