Categories
சினிமா தமிழ் சினிமா

எப்போ வைல்ட் கார்டு என்ட்ரீயாக உள்ள போவிங்க?… ரசிகர் கேட்ட கேள்வி… பதிலளித்த பிக்பாஸ் அர்ச்சனா…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட அர்ச்சனாவிடம் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்துள்ளார். தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் கலந்து கொண்ட கடுமையான போட்டியாளர்களில் ஒருவர் அர்ச்சனா . இவர் கடந்த வாரம் மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் பிக்பாஸில் இருந்து வெளியேறிய பின்னர் ரசிகர்களின் ஒரு சில கேள்விகளுக்கு அர்ச்சனா பதிலளித்துள்ளார். அதில் நீங்கள் மீண்டும் வைல்ட் கார்ட் என்ட்ரியாக எப்போது செல்வீர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹீரோவாக நடித்தது போதும்…! இனிமேல் வில்லனாக… ஆர்யா புதிய அவதாரம் …!!

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படம் புஷ்பா. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராக நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இப்படத்தில் வில்லனாக நடிக்க முதலில் விஜய் சேதுபதி ஒப்பந்தமாகி இருந்தார். பின்னர் கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அர்ஜுனின் 2வது மகளா இது…? எவ்வளவு அழகு…? அம்மா போலவே இருக்கிறாரு…. அழகில் மயங்கிய ரசிகர்கள்…!!

அர்ஜுனின் இரண்டாவது மகளான அஞ்சனாவை பார்த்த ரசிகர்கள் அவர் அழகில் மயங்கி போயுள்ளனர். நடிகர் அர்ஜூன் தமிழில் பல படங்களில் நடித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை நடிகையாக நம் அனைவருக்கும் தெரியும். மதயானைகூட்டம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா. ஆனால் அர்ஜுனின் இரண்டாவது மகளானஅஞ்சனாவை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். இந்நிலையில் சமீபத்தில் நடிகர் அர்ஜுன் வெளியிட்டுள்ள குடும்பத்தோடு சேர்ந்த புகைப்படத்தில் உள்ள அர்ஜுனின் இரண்டாவது மகளை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம ஸ்டைலாக போஸ் கொடுத்திருக்கும் சசிகுமார்… ‘பகைவனுக்கு அருள்வாய்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட சூர்யா…!!!

நடிகர் சசிகுமார் நடித்துவரும் ‘பகைவனுக்கு அருள்வாய்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகி கதாநாயகனாக கலக்கி வருபவர் சசிகுமார் . இவர் நடிப்பில் தற்போது எம்.ஜி.ஆர் மகன், ராஜவம்சம், கொம்பு வச்ச சிங்கம்டா ஆகிய திரைப்படங்கள் தயாராகியுள்ளது . இதையடுத்து நடிகர் சசிகுமார் நடித்து வரும் திரைப்படம் ‘பகைவனுக்கு அருள்வாய்’ . இந்த படத்தை திருமணம் என்னும் நிக்கா படத்தை இயக்கிய அனிஷ் இயக்குகிறார் . மேலும் இந்த படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘என் கேள்விக்கு என்ன பதில்’ டாஸ்க்… பரிசுகளை அள்ளிய போட்டியாளர்கள்… வெளியான மூன்றாம் புரோமோ…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் -4 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக போட்டியாளர்கள் ஆடல் ,பாடல் ,கேக், உணவுகள் , பரிசுகள்  என உற்சாகத்தில் இருந்தனர். இதையடுத்து வெளியான இரண்டாவது புரோமோவில் தலைவர் பதவிக்கான போட்டியில் ஆரி வெற்றி பெறுகிறார். தற்போது மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. அதில் போட்டியாளர்களுக்கு ‘என் கேள்விக்கு என்ன பதில்’ டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் கடந்த 80 நாட்களில் பிக்பாஸ் வீட்டில் நடந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் ஜூலியின் வித்தியாசமான நிழற்புகைப்படங்கள்… வலைதளங்களில் வைரல் …!!!

பிக்பாஸ் பிரபலம் ஜூலியின் நிழல் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது . தமிழ் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொள்வதற்கு முன்னர் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வீர தமிழச்சி என பெயர் வாங்கியவர் ஜூலி . ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் தன் பெயரை முழுமையாக கெடுத்துக் கொண்டார் . அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் போது தனது ஒட்டுமொத்த இமேஜையும் இழந்துவிட்டார். பிக்பாஸில் இருந்து வெளியே வந்த அவருக்கு பல எதிர்ப்புகள் இருந்தாலும் அதை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் வசந்த்தின் ‘மை டியர் லிசா’ … படத்தின் திரில்லான ட்ரெய்லர் ரிலீஸ்…!!!

நடிகர் விஜய் வசந்த் நடித்துள்ள ‘மை டியர் லிசா’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நடிகர் விஜய் வசந்த் சென்னை-28 படத்தின் மூலம் அறிமுகமானார் . இதையடுத்து இவர் நாடோடிகள், அச்சமின்றி, வேலைக்காரன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருந்தார். தற்போது இவர் நடிப்பில் தயாராகியுள்ள த்ரில்லர் திரைப்படம் ‘மை டியர் லிசா’ . இந்த படத்தில் சாந்தினி, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்குனர் ரஞ்சன் கிரிஷ்ணதேவன் இயக்கியுள்ள இந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா ‘… வில்லனாகிறாரா தமிழ் ஹீரோ ? … வெளியான தகவல்கள்…!!!

அல்லு அர்ஜுன் நடிக்கும் ‘புஷ்பா’ படத்தில் வில்லனாக பிரபல தமிழ் ஹீரோ நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் தமிழ், ஹிந்தி, தெலுங்கு உட்பட ஐந்து மொழிகளில் தயாராகும் திரைப்படம் ‘புஷ்பா’. இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இயக்குனர் சுகுமார் இயக்கும் இந்த படத்திற்க்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். சமீபத்தில் புஷ்பா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் வீட்டில் ‘பகவான்’ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட ஆரி… இணையத்தில் செம வைரல்…!!!

நடிகர் ஆரி நடித்துள்ள ‘பகவான்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பிக்பாஸ் வீட்டில் வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் நடிகர் ஆரி கடந்த 2010ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் வெளியான ‘ரெட்டைச்சுழி’ படத்தில் அறிமுகமானார். இதையடுத்து 2014 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான ‘நெடுஞ்சாலை’ படத்தின் மூலம் பிரபலம் அடைந்தார் . இதன் பின் நடிகை நயன்தாராவின் ‘மாயா’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார் . ஆனால் அடுத்ததாக இவர் நடிப்பில் வெளியான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த்… வெளியான தகவல்கள்…!!!

ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பிற்காக ஐதராபாத் சென்றுள்ளார் . இயக்குனர் சிவா இயக்கும் இந்த படத்தில் மீனா ,குஷ்பூ, கீர்த்தி சுரேஷ் ,நயன்தாரா ,சூரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன் படப்பிடிப்பில் பணியாற்றிய நான்கு பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தற்காலிகமாக அண்ணாத்த படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது . […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தலைவர் பதவி போட்டியில் ஆரி, ரியோ, சோம் … வெற்றி பெற்றது யார் தெரியுமா?… வெளியான செகண்ட் புரோமோ…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் -4 நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த வாரம் கொடுக்கப்பட்ட பால் கேட்ச் டாஸ்க்கில் போட்டியாளர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டனர். நேற்றைய எபிசோடில் தங்க நிற பந்துகளை பிடிக்க போட்டியாளர்கள் போராடினர். பின்னர் தங்க நிற பந்தை பிடித்தவர்கள் போர்டில் வைக்கப்பட்ட சக்திகளைப் பயன்படுத்தி மதிப்பெண்களை மாற்றியமைத்துக் கொண்டனர். இப்படி சுவாரசியமாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்று வெளியான முதல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் ராகவா லாரன்ஸின் ‘ருத்ரன்’… படத்தை இயக்கும் தயாரிப்பாளர் … வெளியான தகவல்கள்..!!!

நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ள ‘ருத்ரன்’ பட தயாரிப்பாளரே அந்த படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நடன இயக்குனரும் , நடிகருமான ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான காஞ்சனா படத்தின் மூன்றாம் பாகங்களும் ரசிகர்களிடையே சூப்பர் ஹிட்டானது. இதைத்தொடர்ந்து காஞ்சனா முதல் பாகத்தை ஹிந்தியில் ‘லட்சுமிபாம்’  என்ற டைட்டிலில் ராகவா லாரன்ஸ் ரீமேக் செய்தார் . பிரபல நடிகர் அக்ஷய்குமார் ,கியாரா அத்வானி ஆகியோர் நடப்பில் தயாரான இந்த திரைப்படம் சமீபத்தில் ஓடிடி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் வீட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்… கலகலப்பா வெளியான முதல் புரோமோ…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் -4 நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த வாரம் கொடுக்கப்பட்ட பால் கேட்ச் டாஸ்க்கில் போட்டியாளர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டனர். நேற்றைய எபிசோடில் தங்க நிற பந்துகளை பிடிக்க போட்டியாளர்கள் போராடினர். பின்னர் தங்க நிற பந்தை பிடித்தவர்கள் போர்டில் வைக்கப்பட்ட சக்திகளைப் பயன்படுத்தி மதிப்பெண்களை மாற்றியமைத்துக் கொண்டனர். இப்படி சுவாரசியமாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விக்ரமின் ‘கோப்ரா ‘… அசத்தலான செகண்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்… இணையத்தில் வைரல்…!!!

நடிகர் விக்ரம் நடிப்பில் தயாராகியுள்ள ‘கோப்ரா’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விக்ரம் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘கோப்ரா’. இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இந்தப் படத்தில் கதாநாயகியாக ஸ்ரீநிதி செட்டி நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடித்துள்ளார். இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். ஏற்கனவே கோப்ரா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஆலியாவை விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன்… அதிரடியாக அறிவித்த ரன்பீர் கபூர்… பாலிவுட்டில் பரபரப்பு…!!

பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் தனது நீண்ட நாள் காதலியான ஆலியா பட்டை விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூர் 2007 ஆம் ஆண்டு வெளியான ‘சாவரியா’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் . இந்த படம் தோல்வியை தழுவினாலும் இதையடுத்து இவரது சிறப்பான நடிப்பால் பல ஹிட் படங்களை கொடுத்தார் . வேக் அப் சித் , ராக்ஸ்டார், பர்ஃபி, ராஜ் நீதி , ஹே ஜவானி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஸ்டைலிஷ் தமிழச்சி அக்ஷரா கவுடா பிறந்தநாள்… ‘இடியட்’ படக்குழு வெளியிட்ட போஸ்டர்…!!!

நடிகை அக்ஷரா கவுடாவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘இடியட்’படக்குழு ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நடிகை அக்ஷரா கவுடா 2011 ஆம் ஆண்டு வெளியான ‘உயர்திரு 420’ படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் ‘ஆரம்பம்’ படத்தில் இடம்பெற்ற ஸ்டைலிஷ் தமிழச்சி பாடல் மூலம் பிரபலமடைந்தார். இதையடுத்து துப்பாக்கி, போகன் , இரும்பு குதிரை ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார். இவர் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் படங்கள் நடித்து வருகிறார். Here it's a spl birthday […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதி விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்திற்கு கிடைத்த சான்றிதழ்… உற்சாகத்தில் ரசிகர்கள்…!!!

தளபதி விஜய் நடிப்பில் தயாராகியுள்ள ‘மாஸ்டர்’ திரைப்படத்திற்கு யு ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. தமிழ் திரையுலகின் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘மாஸ்டர்’. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் வில்லனாக விஜய் சேதுபதியும், கதாநாயகியாக மாளவிகா மோகனனும் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் அர்ஜுன் தாஸ், சாந்தனு, ஆண்ட்ரியா ,சஞ்சீவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹைதராபாத்திலிருந்து ரஜினி எப்போது சென்னை திரும்புவார்?… வெளியான தகவல்கள்…!!!

ஹைதராபாத்திலிருந்து நடிகர் ரஜினிகாந்த் நாளை மறுநாள் சென்னை திரும்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ‘அண்ணாத்த’ திரைப்படம் தயாராகி வருகிறது. இயக்குனர் சிவா இயக்கும் இந்த படத்தில் மீனா ,குஷ்பூ, கீர்த்தி சுரேஷ் ,நயன்தாரா ,சூரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஐதராபாத்தில் நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு  கொரோனா தொற்று பரவல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது . மேலும் படப்பிடிப்பு தளத்தில் 4 பேருக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அவங்க வந்தாங்க” சித்ரா ஆவியோடு பேசிய சார்லி…. பரபரப்பை கிளப்பும் வீடியோ…!!

ஆவி நிபுணரிடம் சித்ராவின் ஆவி பேசியதாக வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. சின்னத்திரை நடிகை சித்ரா விடுதியில் தங்கியிருந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் இவரின் தற்கொலை பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கி உள்ளது. ஆனால் சித்ரா மிகவும் தைரியமானவர். தற்கொலை செய்து கொள்ள வேண்டிய தேவையில்லை  என்று பலரும் கூறி வருகின்றனர். இதனால் சித்ராவின் மரணத்தில் மர்மம் நீடித்துள்ளது. சித்ராவின் திடீர் மரணத்தில் இருந்து இன்று வரை அவருடைய ரசிகர்கள் மீளாத்துயரில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விக்னேஷ் சிவன் டுவிட்டரில் வெளியிட்ட ரகசியம்… ‘பாவக் கதைகள்’ நரிக்குட்டிக்கு வாய்ஸ் கொடுத்தவர் இவர் தான்…!!!

விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘பாவக் கதைகள்’ நரிக்குட்டி கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்தவர் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர்கள் விக்னேஷ் சிவன், கௌதம் மேனன், வெற்றிமாறன், சுதா கொங்கரா ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள படம் ‘பாவக் கதைகள்’ . இதில் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள ‘லவ் பண்ணா உட்ரணும்’ படத்தில் நடிகை அஞ்சலி, கல்கி உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப்படத்தில் இடம் பெற்றுள்ள நரிக்குட்டி என்ற வில்லன் கதாபாத்திரம் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிருக்கு…. புதிய முல்லையால்…. புதிய பிரச்சினை…!!

கதிர் கதாபாத்திரத்தில் நடிக்கும் குமரனுக்கு தற்போது புதிய பிரச்சினை உருவாகியுள்ளதாக பரவலாக பேசப்பட்டு வருகின்றது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்த சின்னத்திரை நடிகை சித்ரா சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். இந்த கொலைவழக்கில் அவருடைய வருங்கால கணவர் ஹேமந்த் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதன் காரணமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த நாடகத்தில் அவருடைய முல்லை கதாபாத்திரத்திற்கு தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில் அறிவாக நடித்த காவியா புது முல்லையாக நடித்து வருகிறார். என்னதான் புதிதாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் ‘குரூப்பிசம்’ பற்றி பேசிய ஆரி… டென்ஷன் ஆகும் ரியோ… வெளியான மூன்றாம் புரோமோ…!!!

பிக்பாஸ் -4 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் -4 நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் நடைபெறும் டாஸ்க் மற்றும் வீட்டு வேலைகள் ஆகியவற்றில் சிறப்பாக மற்றும் மோசமாக செயல்படும் போட்டியாளர்களை தேர்வு செய்வது வழக்கம். இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது புரோமோவில் ஆரி மோசமான போட்டியாளராக  ரியோவை தேர்வு செய்கிறார் . இதன்பின் நடைபெற்ற வாக்குவாதத்தில் ஆரியிடம் ‘குருப்பிஸம்’ என்ற வார்த்தையை ஏன் சொன்னீர்கள் ? என்று ரியோ கேட்கிறார். #Day81 #Promo3 of […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரபல மலையாள இயக்குனர் ஷாநவாஸ் மரணமடைந்தார்… ரசிகர்கள் இரங்கல்…!!!

பிரபல மலையாள இயக்குனர் ஷாநவாஸ் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாளத் திரையுலகில் இயக்குனர் ஷாநவாஸ் ‘கரி’ என்ற படத்தை இயக்கியதன் மூலம் நல்ல விமர்சனங்களை பெற்றவர். சமீபத்தில் நடிகர் ஜெய சூர்யாவை வைத்து ‘சூபியும் சுஜாதாவும்’ படத்தை இயக்கியிருந்தார். நடிகை அதிதி ராவ் கதாநாயகியாக நடித்திருந்த இந்தப் படம் கொரோனா பரவல் காரணமாக ஓடிடி தளத்தில் வெளியானது. இந்நிலையில் தனது அடுத்த படத்திற்கான வேலையில் ஈடுபட்டிருந்த இயக்குனர் ஷானவாஸ் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக தீவிர சிகிச்சை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நிறுத்திவைக்கப்பட்ட ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு… விக்னேஷ் சிவனை பார்க்கக் கிளம்பிய நயன்தாரா… வெளியான புகைப்படம்…!!!

நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவனுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருகின்றனர். இருவருக்குமிடையே ‘நானும் ரவுடிதான்’ படத்தின் படப்பிடிப்பின்போது காதல் மலர்ந்தது. விரைவில் இவர்கள் திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடிகைகள் நயன்தாரா ,சமந்தா ஆகியோர் நடிப்பில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படம் தயாராகிறது. தற்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்த வாரம் ஓய்வறைக்கு செல்லப் போவது யார்?… பாலாவை குறிவைத்த அனிதா… வெளியான செகண்ட் புரோமோ…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் -4 நிகழ்ச்சியில் இந்த வாரம் போட்டியாளர்களுக்கு பால் கேட்ச் டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு வாரமும் டாஸ்க் மற்றும் வீட்டு வேலைகள் அடிப்படையில் சிறந்த மற்றும் மோசமான போட்டியாளர்கள் தேர்வு செய்யப்படுவது வழக்கம். தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது புரோமோ வில் இந்த வாரம் நடைபெற்ற டாஸ்க் அடிப்படையில் போட்டியாளர்கள் சிறப்பான மற்றும் மோசமான போட்டியாளர்களை தேர்வு செய்து கொண்டிருக்கின்றனர் . அதில் மோசமாக செயல்பட்ட போட்டியாளராக பாலாவை […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

புரட்சித்தலைவர் லுக்கில் அசத்தும் அரவிந்த்சாமி… எம்.ஜி.ஆர் நினைவு தினத்தை முன்னிட்டு வெளியான ‘தலைவி’ பட புகைப்படங்கள்…!!!

எம்.ஜி.ஆர் நினைவு தினத்தை முன்னிட்டு ‘தலைவி’ பட புகைப்படங்களை நடிகர் அரவிந்த்சாமி ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் இயக்குனர் விஜய் இயக்கத்தில் தயாராகியுள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் ‘தலைவி’ . இதில் நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதையடுத்து எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த்சாமி நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். கடந்த டிசம்பர் 6ஆம் தேதி ஜெயலலிதாவின் 4 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜெயம் ரவியின் ‘பூமி’ ஓடிடியில் ரிலீஸ் … வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

நடிகர் ஜெயம் ரவியின் ‘பூமி’ திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் ஜெயம்ரவிக்கு ரசிகர் கூட்டங்கள் ஏராளம். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ‘கோமாளி’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வசூலையும் வாரிக் குவித்தது. இதையடுத்து ஜெயம் ரவி நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘பூமி’. ஏற்கனவே வெளியான இந்தப் படத்தின் டிரைலரால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எகிறியுள்ளது . #Bhoomi coming […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் … இணையத்தில் தீயாய் பரவும் மாஸ்டர் பட ஸ்பெஷல் போஸ்டர்…!!!

தளபதி விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் புதிய போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகின் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘மாஸ்டர்’. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனனும் ,வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். மேலும் இந்தப்படத்தில் அர்ஜுன் தாஸ், சாந்தனு, ஆண்ட்ரியா ,சஞ்சீவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது. #master […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தள்ளிவைக்கப்பட்ட ‘காட்டேரி’ படத்தின் ரிலீஸ் … படக்குழு எடுத்த முடிவு…!!!

‘காட்டேரி’ படத்தின் ரிலீசை தற்காலிகமாக தள்ளி வைக்க படக்குழு முடிவெடுத்துள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் வைபவ் நடிப்பில் தயாராகியுள்ள காமெடி திரில்லர் திரைப்படம் ‘காட்டேரி’ . இயக்குனர் டீகே இயக்கியுள்ள இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார் ,சோனம் பஜ்வா ,கருணாகரன் ,ஆத்மிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார் . இந்தப் படத்தை வருகிற கிறிஸ்துமஸ் பண்டிகையில்  (டிசம்பர் 25) வெளியிட திட்டமிட்டிருந்தனர் . இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

டாஸ்கின் நான்காம் பகுதி … கோல்டன் பாலை பிடிக்க போராடும் போட்டியாளர்கள்… வெளியான முதல் புரோமோ…!!!

பிக்பாஸ்-4 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ்-4 நிகழ்ச்சியில் இந்த வாரம் போட்டியாளர்களுக்கு ‘பால் கேட்ச்’ டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது . நேற்றைய எபிசோடில் இந்த டாஸ்க்கின் அடிப்படையில் போட்டியாளர்கள் பேசி முடிவெடுத்து தங்களை வரிசைப்படுத்திக் கொள்ளுமாறு பிக்பாஸ் அறிவித்தார் . இதில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்கு  சிறப்பு சலுகை வழங்கப்படுவதாகவும்  பிக்பாஸ் அறிவித்திருந்தார் . இதனால் முதல் 3 இடங்களைப் பிடிக்க ரியோ, ஆரி, சோம் ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் . இறுதியில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அசத்தலாக வெளியான சிம்பு பட டைட்டில் லுக் போஸ்டர்… இணையத்தில் செம வைரல்…!!!

நடிகர் சிம்பு கௌதம் கார்த்திக்குடன் இணைந்து நடிக்கவுள்ள அடுத்த படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகின் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் சிம்பு நடிப்பில் தற்போது ‘ஈஸ்வரன்’ திரைப்படம் தயாராகியுள்ளது. இந்த படத்தை பொங்கலில் ரிலீஸ் செய்ய படக்குழு ஏற்பாடுகள் செய்து வருகிறது. இதையடுத்து நடிகர் சிம்பு இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ திரைப்படத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்நிலையில் நடிகர் சிம்புவின் அடுத்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சன் பிக்சர்ஸ் நிறுவனம் – அதிகாரபூர்வ அறிவிப்பு…!!

அண்ணாத்த படப்பிடிப்பில் கொரோனா தொற்று குறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பு ஐதராபாத்தில் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இந்நிலையில் அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது என்று தகவல் வெளியானது. இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது என்று கூறப்பட்டது . கொரோனாவால் நின்றுபோன படப்பிடிப்பு கடந்த டிசம்பர் 14-ஆம் தேதிக்கு பிறகு மீண்டும் தொடங்க பட்ட நிலையில் 15 நாட்கள் படப்பிடிப்பு நடத்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ்- 4 டைட்டில் வின்னர்…. இவர் தான் – இசையமைப்பாளர் டுவிட்…!!

பிக்பாஸ் சீசன் -4 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் இவர் தான் என்று இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் -4 நிகழ்ச்சியை நடிகர் கமல் தொகுத்து வழங்கி வருகிறார். இதில் பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். மேலும் முக்கியமான சில போட்டியாளர்கள் வீட்டை விட்டு வெளியேறி இருக்கின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் அர்ச்சனா வெளியேறி இருக்கிறார். மேலும் போட்டியாளர்கள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விக்னேஷ் சிவன் – நயன்தாரா தயாரித்துள்ள ‘கூழாங்கல்’ … படத்தின் டிரைலர் ரிலீஸ்…!!!

விக்னேஷ் சிவன் – நயன்தாரா இணைந்து ரவுடி பிக்சர்ஸ் சார்பில் தயாரித்துள்ள ‘கூழாங்கல்’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாராவும் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருகின்றனர் . தற்போது நயன்தாரா, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்து வருகிறார்  . சமீபத்தில் இயக்குனர் அருண்மாதேஸ்வரன் இயக்கிய ‘ராக்கி’ திரைப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை விக்னேஷ் சிவன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘அடுத்த ஜென்மத்தில் மிளகாய் மண்டியில் பல்லியாக பிறக்க வேண்டும்‌’… வெற்றிமாறனுக்கு சாபம் கொடுத்த பிரகாஷ்ராஜ்…!!!

இயக்குனர் வெற்றிமாறன் அளித்த பேட்டியில் பிரகாஷ்ராஜ் சாபம் கொடுத்ததாகக் கூறியுள்ளார் . தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்கள் நான்கு பேர் இயக்கிய ஆந்தாலஜி’பாவக் கதைகள்’ திரைப்படம் கடந்த வாரம் நெட்பிளிக்ஸ்ஸில் வெளியானது. ஆவணக் கொலைகளை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப்படம் அனைவரின் பாராட்டை பெற்று வருகிறது . சமீபத்தில் பாவக் கதைகள் படத்தில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய ‘ஓர் இரவு’ படம் குறித்து பேட்டியளித்துள்ளார் . அதில், ‘நடிகர்களை அழுத்தமான காட்சிகளில் நடிக்க வைக்கும் எனக்கும் இயக்குனர், மணிரத்னத்திற்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் இணைந்த வெற்றிக்கூட்டணி… செல்வராகவன் போட்ட ட்வீட்… உற்சாகத்தில் தனுஷ் ரசிகர்கள்…!!!

இயக்குனர் செல்வராகவன் , நடிகர் தனுஷ், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் கூட்டணியில் புதிய படம் தயாராகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் செல்வராகவன் இருவரும் இணைந்து பணிபுரிந்த துள்ளுவதோ இளமை ,புதுப்பேட்டை ,காதல் கொண்டேன், மயக்கம் என்ன ஆகிய திரைப்படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்தது. இதையடுத்து நடிகர் தனுஷ் மற்றும் செல்வராகவன் இணைந்து மீண்டும் ஒரு திரைப்படத்தில் பணிபுரியவுள்ளனர் என தகவல்கள் பரவி வந்தது . இந்நிலையில் இயக்குனர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘மூழ்காத ஷிப்பே ஃப்ரெண்ட்ஷிப் தான்’… குட்டி ரியூனியன் போட்ட அர்ச்சனாவின் அன்பு அணி… வெளியான புகைப்படம்…!!!

பிக்பாஸில் இருந்து வெளியேறிய அர்ச்சனா, ரமேஷ் மற்றும் நிஷா ஆகியோர் சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் -4 நிகழ்ச்சி மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் யார்? என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் பிக்பாஸ் ரசிகர்கள். சமீபத்தில் பிக்பாஸிலிருந்து வெளியேறிய  ரேகா,சம்யுக்தா, வேல்முருகன், சுரேஷ் ஆகியோர் சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டிருந்தனர் . இந்நிலையில் பிக்பாஸில் இருந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆந்தாலஜி ‘பாவக் கதைகள்’… படம் பார்த்த தளபதி… சாந்தனுவுக்கு போன் போட்டு என்ன சொன்னார் தெரியுமா?…!!!

ஆந்தாலஜி ‘பாவக் கதைகள்’ படம் பார்த்த தளபதி விஜய், நடிகர் சாந்தனுவிடம்  போன் போட்டு பேசியுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களான கௌதம் மேனன், விக்னேஷ் சிவன், வெற்றிமாறன் ,சுதா கொங்கரா ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள  ஆந்தாலஜி படம் ‘பாவ கதைகள்’ . இந்த படம் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 18 ஆம் தேதி வெளியானது. இந்த ஆந்தாலஜி படம் ஆவணக்கொலைகளை மையப்படுத்தி உருவாகியுள்ளது . இதில் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சாந்தனு , […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘ஆரி’ தான் பிக்பாஸ் டைட்டில் வின்னர்..‌. இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் போட்ட பதிவு…!!!

தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் சமூகவலைத்தள பக்கத்தில் பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி தான் என பதிவிட்டுள்ளார். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் பிக்பாஸில் டைட்டில் வின்னராக ரியோ, ஆரி, பாலாஜி ஆகிய மூவருக்கும் அதிக வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பிக்பாஸில் பங்கேற்றுள்ள […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாஸ்டர் படக்குழுவின் வாழ்த்துக்கு லைக் போடாத ஆண்ட்ரியா … அதிருப்தியில் இருக்கிறாரா?… ரசிகர்கள் குழப்பம்…!!!

மாஸ்டர் படக்குழு மீது நடிகை ஆண்ட்ரியா அதிருப்தியில் இருப்பதாக தகவல் பரவுகிறது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘மாஸ்டர்’ . இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் வில்லனாக விஜய் சேதுபதியும், கதாநாயகியாக மாளவிகா மோகனும் நடித்துள்ளனர் . மேலும் அர்ஜுன் தாஸ், ஆன்ட்ரியா, சாந்தனு சஞ்சீவ், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . இந்நிலையில் நடிகை ஆன்ட்ரியாவின் பிறந்தநாளன்று ‘மாஸ்டர்’ படக்குழுவினர்  ஆண்ட்ரியா மற்றும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வித்தியாசமான கெட்டப்பில் மாதவன் வெளியிட்ட புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்…!!!

நடிகர் மாதவன் வித்தியாசமான கெட்டப்பில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது . தமிழ் திரையுலகில் சாக்லேட் பாயாக வலம் வருபவர் நடிகர் மாதவன் . இவர் அலைபாயுதே, மின்னலே ஆகிய திரைப்படங்கள் மூலம் ரசிகர்களை ஈர்த்தவர் . தற்போது இவர் நடிப்பில் ‘மாறா’ திரைப்படம் தயாராகி ஓடிடியில் வெளியாக உள்ளது . சமீபத்தில் நடிகர் மாதவன் தனது 50வது பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அதில் மாதவன் சத்ரபதி சிவாஜி முதல் 8 விதவிதமான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இவங்க கெமிஸ்ட்ரி அற்புதமா இருந்தது… மீண்டும் இணைந்த ‘பரியேறும் பெருமாள்’ ஜோடி…!!!

‘பரியேறும் பெருமாள்’ படத்தில் நடித்திருந்த கதிர் – ஆனந்தி இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கவுள்ள படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் அனைவராலும் பாராட்டப்பட்ட ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் சிறப்பாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர்கள் நடிகர் கதிர் மற்றும் நடிகை ஆனந்தி. தற்போது இருவரும் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் ‘கைதி’ படத்தில் நடித்திருந்த நரேன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஏ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸின் கம்பீரமான குரலுக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா?… முதல்முறையாக வெளியான புகைப்படம்…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு குரல் கொடுப்பவர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது . நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த நான்கு ஆண்டுகளாக வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது . தற்போது நடந்து வரும் நான்காவது சீசன் பல திருப்பங்களுடன் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . இந்த நிகழ்ச்சியில் வரும் கம்பீரமான பிக்பாஸின் குரலுக்கு ரசிகர்கள் ஏராளம். தமிழ் பிக்பாஸ் முதல் சீசனின் போது சீரியல் நடிகர் அமித் தான் பிக்பாஸாக குரல் கொடுக்கிறார் என தகவல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தூங்கிய ஹவுஸ் மேட்ஸை பாட்டு போட்டு எழுப்பிய பிக்பாஸ்… காமெடியா ஆரம்பிச்சு கடுப்பில் முடிந்த இரண்டாவது புரோமோ…!!!

பிக்பாஸ் -4 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் 4 நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . இந்த வாரம் கொடுக்கப்பட்டுள்ள பால் கேட்ச் டாஸ்க்கை போட்டியாளர்கள் அதிரடியாக விளையாடி வருகின்றனர் . நேற்றைய எபிசோடில் சோம் அணியினர் அதிக பந்துகளை பிடித்து அதிக மதிப்பெண்ணில் இருந்தனர். இந்நிலையில் இன்று வெளியான முதல் புரோமோவில் போட்டியாளர்களை ஓடவிட்டார் பிக்பாஸ். பிளாஸ்மா டிவியில் வரும் பெயர்கள் உள்ளவர்கள் ஓடிப்போய் பந்துகளை பிடிக்க வேண்டும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூப்பர் ஹிட் படத்தின் ரீமேக்… இளம் நடிகருடன் இணைந்த சிம்பு… டைட்டில் ரிலீஸ் தேதி அறிவிப்பு…!!!

நடிகர் சிம்பு அடுத்ததாக இளம் நடிகருடன் இணைந்து  நடிக்கவுள்ள படத்தின் டைட்டில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுளது . தமிழ் திரையுலகின் நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவர்  நடிப்பில் தற்போது ஈஸ்வரன் திரைப்படம் தயாராகியுள்ளது. இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படத்தை பொங்கலில் ரிலீஸ் செய்ய படக்குழு ஏற்பாடுகள் செய்து வருகிறது. இதையடுத்து நடிகர் சிம்பு இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்து வருகிறார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

டாஸ்கின் மூன்றாம் பகுதி… போட்டியாளர்களை ஓட வைத்த பிக்பாஸ்… தெறிக்கவிடும் முதல் புரோமோ…!!!

பிக்பாஸ்-4 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் பல திருப்பங்களுடன் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . இந்த வாரம் கொடுக்கப்பட்டுள்ள பால் கேட்ச் டாஸ்க்கை போட்டியாளர்கள் அதிரடியாக விளையாடி வருகின்றனர் . நேற்றைய எபிசோடில் சோம் அணியினர் அதிக பந்துகளை பிடித்து அதிக மதிப்பெண்ணில் இருந்தனர். இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள முதல் புரோமோவில் டாஸ்கின் மூன்றாம் பகுதி நடைபெறுகிறது ‌. #Day80 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கமல் பிரசாரத்தில்…. “அனிதா போவாளா” கேட்ட நபர்…. வைரலாகும் வீடியோ…!!

நபர் ஒருவர் கமலிடம் பிரசாரத்தின் போது அனிதா சம்பத் போவாளா என்ற வீடியோ வைரலாக பரவி வருகிறது. தமிழகத்தில் அடுத்த வருடம் மே மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. நடிகர் கமலும், ரஜினியும் புதிய கட்சி ஆரம்பித்து, தற்போது அரசியலில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளதால், தேர்தல் பிரச்சாரங்களும் தொடங்கியுள்ளது. மேலும் ஒருவருக்கொருவர் குறை கூறி விமர்சித்து வருகின்றனர். தற்போது அனைத்து கட்சியினரும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கமல் அவர்கள் திருவண்ணாமலையில் பிரச்சாரம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஷிவானி மீம்ஸ்” வாழைப்பழம் சாப்பிடும் காட்சி…. கலாய்த்த நெட்டிசன்கள்…!!

வாழைப்பழம் சாப்பிடும் ஷிவானியை வடிவேலுவுடன் இணைத்து மீம்ஸ் போட்டு நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ஷிவானி நாராயணன். மாடலான இவர் பகல் நிலவு தொடர் மூலமாக தமிழில் அறிமுகமாகினார். இதன் பின்னர் கடைக்குட்டி சிங்கம் என்கிற சீரியலில் நடித்து வந்தார். இதையடுத்து இரட்டை ரோஜா என்கிற சீரியலில் பிஸியாக நடித்து வந்தார். பின்னர் கொரோனா ஊரடங்கில் வீட்டில் போட்டோ ஹூட், வீடியோ, டான்ஸ் மற்றும் சிங்கிங் என பலவற்றையும் போஸ்ட் செய்து ரசிகர்களை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன ஆர்த்தி… புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்…!!!

பல திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்திருந்த நடிகை ஆர்த்தியின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகை ஆர்த்தி 1987 ஆம் ஆண்டு வெளியான ‘வண்ணக்கனவுகள்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் . இதன்பின் ‘அருள்’ படத்தில் நடிகை ஜோதிகாவுக்கு தோழியாக நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் . மேலும் இவர் பல திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியவர். இதையடுத்து நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துகொண்டு ஜூலியுடன் பல ரகளைகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மலையாள படத்தின் தெலுங்கு ரீமேக் … பிரபல நடிகருக்கு அப்பாவான சமுத்திரக்கனி … வெளியான தகவல்கள்…!!!

மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் ராணாவுக்கு அப்பாவாக சமுத்திரக்கனி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . மலையாள திரையுலகில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் ‘அய்யப்பனும் கோஷியும் ‘. இயக்குனர் சாஷி இயக்கிய இந்த படத்தில் பிஜூமேனனும் பிருத்விராஜும் நடித்திருந்தனர் . இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது . இதையடுத்து தென்னிந்திய மொழிகளில் இந்த படத்தை ரீமேக் செய்யும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது .  இந்த […]

Categories

Tech |