தமிழ் சினிமாவில் வருடம் தோறும் நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் ரிலீஸ் ஆனாலும் ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே மக்கள் மனதை வென்று பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைக்கிறது. அந்த வகையில் 2022-ம் ஆண்டில் பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூல் சாதனை புரிந்த டாப் 10 தமிழ் திரைப்படங்கள் குறித்து தற்போது பார்க்கலாம். அதன்படி இந்த வருடம் ரிலீஸ் ஆன திரைப் படங்களில் பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூல் வேட்டை நடத்திய படங்களில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் […]
Tag: தமிழ் படங்கள்
இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் ரிலீசான திரைப்படம் ”அவதார்”. இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை நிகழ்த்தியது. இந்த படத்தில் இடம் பெற்ற கிராபிக்ஸ் காட்சிகளும் கற்பனை உலகமும் ரசிகர்களை வியக்க வைத்தது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. ”அவதார் தி வே ஆப் வாட்டர்” என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற 170 […]
சென்னையில் 20-வது சர்வதேச திரைப்பட திருவிழா நடைபெற இருக்கிறது. இந்த விழா பிவிஆர் மல்டிபிளக்ஸ், அண்ணா தியேட்டரில் நடைபெற இருக்கிறது. இந்த விழா டிசம்பர் 15 முதல் 22-ம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், பல்வேறு நாடுகளில் இருந்து வந்த 150 திரைப்படங்கள் திரையிடப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் தமிழ் படங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி யுத்த காண்டம், ஓ2, நட்சத்திரங்கள் நகர்கிறது, மாமனிதன், இறுதி பக்கம், கோட், […]
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் ஏராளமான படங்கள் திரைக்கு வருகிறது. இதில் எல்லா படமும் வெற்றி அடைகிறதா என்று கேட்டால் கண்டிப்பாக இல்லை என்பது தான் உண்மை. ஏனெனில் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வந்தாலும் ஒரு சில படங்கள் மட்டும் தான் மக்களை கவர்ந்து மனதில் என்றென்றும் நிலைத்திருக்கிறது. குறிப்பாக விஜய் மற்றும் அஜித் போன்ற பெரிய நடிகர்களின் படம் என்றால் ரிலீசுக்கு முன்பாகவே ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு திரையில் […]
தமிழ் சினிமாவில் சமீப காலமாகவே ரிலீஸ் ஆகும் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அந்த வகையில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம், மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம், பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே திரைப்படம் போன்றவைகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு, வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. இந்நிலையில் 2022-+ம் ஆண்டு அதிகம் வசூல் செய்த டாப் படங்கள் குறித்த தகவலை பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் கூறியுள்ளார். அவர் கூறியபடி […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஷ்ணு விஷால் தற்போது ‘கட்டா குஷ்தி’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் வருகின்ற டிசம்பர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படக்குழுவினர் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த விஷ்ணு விஷால், “இந்த படத்தில் கணவன் மனைவிக்கு இடையில் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் குறித்து […]
தென்னிந்திய மொழி திரைப்படங்களுக்காக ஆண்டுதோறும் ஃபிலிம் ஃபேர் விருது வழங்கும் விழா நடத்தப்படுகிறது. இந்த விருது தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களில் சிறப்பான திறமையை வெளிப்படுத்திவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில் நடப்பாண்டிலும் 67-வது ஃபிலிம் பேர் விருது வழங்கும் விழா அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது வழங்கும் விழா இன்று (ஞாயிறு) கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு சர்வதேச கண்காட்சி மையத்தில் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. இதனையடுத்து ஃபிலிம் ஃபேர் விருதுகளில் நாமினேஷன் செய்யப்பட்ட தமிழ் […]
தமிழ் சினிமாவில் வெப்பம் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நானி. இவர் தொடர்ந்து ஆஹா கல்யாண உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த படங்களை தொடர்ந்து இவர் தமிழில் வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவர் தெலுங்கில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் நஸ்ரியாவுடன் இணைந்து விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் சுந்தரானிகி என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது இந்த படம் “அடடே சுந்தரா” என்ற பெயரில் வருகின்ற 10 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் […]