Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

அடடே! 40 வருடங்களுக்குப் பிறகு…. மீண்டும் சந்தித்த பள்ளிப் பருவ நண்பர்கள்….. நெகிழ்ச்சி சம்பவம்….!!!!

அனைவருடைய வாழ்க்கையிலும் பொதுவாக பள்ளிப்பருவம் என்பது மறக்க முடியாத ஒன்றாக தான் இருக்கும். பள்ளியில் படிக்கும் அந்த அழகிய நாட்கள் மீண்டும் வாழ்க்கையில் திரும்ப கிடைக்குமா என்று பலரும் ஏங்குவர். சமீப காலமாகவே பல அரசு பள்ளிகளில் படித்த பழைய மாணவர்கள் மீண்டும் ஒன்று கூடி சந்திக்கும் அழகிய நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏலகிரி அரசு பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பழைய மாணவர்கள் ஒன்று கூடி பள்ளி […]

Categories
மாநில செய்திகள்

OMG!….அரசு பள்ளிகளில் அழுகிய முட்டைகள் விநியோகம்…. மாணவர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி….!!!

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் 200 க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளுக்கு தமிழக சொசைட்டி நிறுவனம் சார்பிவ் முட்டை வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 10 நாட்களாக அரசு பள்ளிகளில் அழுகிய முட்டைகள் விநியோகம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இதனையடுத்து பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் இது குறித்து சத்துணவு பணியாளர்களும் விளக்கம் கேட்டனர். அப்போது பொன்னரகம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பெரும்பாலான பள்ளிகளுக்கு இத்தகைய முட்டைகளை விநியோகம் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“இனிப்பு தயாரிக்கும் கூடங்களில் உணவுகள் தரமாக தயாரிக்கப்படுகிறதா…?” அதிகாரிகள் திடீர் ஆய்வு….!!!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருக்கும் இனிப்பு தயாரிக்கும் கூடங்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டார்கள். நேற்று தீபாவளி பண்டிகை கோலகலமாக கொண்டாடப்பட்டது. இதனால் இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிப்பு மற்றும் விற்பனை நிலையங்களில் இனிப்பு பலகாரங்கள் முறையாக தயாரிக்கப்படுகின்றதா என ஆட்சியரின் உத்தரவின் பேரில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டார்கள். அதன்படி இனிப்பு மற்றும் கார வகைகள் தரமான எண்ணெயில் செய்யப்படுகின்றதா? வண்ணம் அனுமதிக்கப்பட்ட அளவில் பயன்படுத்தப்படுகின்றதா? என சோதனை மேற்கொண்டார்கள். […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

கனமழை எதிரொலி…. “பஞ்சப்பள்ளி சின்னாறு அணையிலிருந்து நீர் வெளியேற்றம்”….!!!!!

கனமழை எதிரொலியாக பஞ்சப்பள்ளி சின்னாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கின்றது. தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை ஆரம்பமாகியுள்ளது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்கின்றது. இதன் காரணமாக நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றது. மேலும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கின்றது. இதன் காரணமாக நீர்பிடிப்பு பகுதிகளில் நீர் அதிகரித்துள்ளது. இந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, வனப்பகுதிகளில் சென்ற சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்ததன் காரணமாக பஞ்சப்பள்ளி சின்னாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கின்றது. […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

12 பெண்கள் நரபலியா?… காணாமல் போன 5 பெண்களின் கதை என்ன?…. அதிர்ச்சி தகவல்…..!!!!

தர்மபுரி மாவட்டத்தில் பத்மா உள்ளிட்ட இரண்டு பெண்கள் நரவலி கொடுக்கப்பட்ட நிலையில் எழந்தூர் சுற்றுவட்டத்தில் மட்டும் மூன்று பெண்கள் காணாமல் போய் உள்ளனர்.கடந்த ஐந்து வருடங்களில் கொச்சி நகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 13 பெண்கள் காணாமல் போன நிலையில் ஒரு பெண் உடல் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 12 பெண்கள் என்ன ஆனார்கள் என்று இதுவரை எந்த ஒரு தகவலும் தெரியாத நிலையில் காணாமல் போன வழக்கை தற்போது கேரளா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“பாலக்கோடு அருகே உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு”…. விதியை மீறிய கடைகளுக்கு அபராதம்…..!!!!!!

பாலக்கோடு அருகே உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டார்கள். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு அருகே இருக்கும் மளிகை கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார் வந்தது. இதனால் மாவட்ட ஆட்சியர் உணவு பாதுகாப்பு துறை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன் பேரில் நேற்று முன்தினம் பாலக்கோடு பகுதியில் இருக்கும் மளிகை கடைகள், பெட்டி கடைகள், உணவு […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“தென்பெண்ணை ஆற்றில் உபரி நீரேற்றும் 400 கோடி திட்டம்”…. மீண்டும் புத்துயிர் பெருமா….? எதிர்பார்ப்பில் 100 கிராம மக்கள்….!!!!!

தென்பெண்ணை ஆற்றில் உபரி நீரேற்றும் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் திட்டம் புத்துயிர் பெறுமா என 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றார்கள். மழைக்காலங்களில் ஆற்றில் ஓடும் உபரி நீரை கம்பைநல்லூர், வெதரம்பட்டி, பெரமாண்டப்பட்டி, நவலை சின்னகவுண்டம்பட்டி, பொம்பட்டி, போளையம்பள்ளி, கோபிநாதம்பட்டி, ராமாபுரம், ஆண்டிப்பட்டி, ஜடையம்பட்டி, சென்னம்பட்டி, தாசரஅள்ளி, மொரப்பூர் உள்ளிட்ட ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இருக்கும் 60 ஏரிகளில் நீரேற்றும் குழாய்கள் மூலம் கொண்டு சென்று நிரப்ப வேண்டும் என விவசாயிகள் நீண்ட நாட்களாக […]

Categories
மாநில செய்திகள்

வைரமுத்துவிற்கு போன் அடித்த அமைச்சர் அன்பில் மகேஷ்…. நெகிழ்ந்து போன மாற்றுத்திறனாளி தமிழ் ஆசிரியர்….!!!!

தர்மபுரியில் பள்ளி கல்வித்துறை சார்பில் மண்டல ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டார். இந்த கூட்டம் முடிந்த பிறகு பிறகு தர்மபுரியில் உள்ள மூன்று பள்ளிகளை திடீராய்வு மேற்கொண்டார். அந்த ஆய்வின்போது மாணவ, மாணவிகளிடம் அவர்களுடைய கல்வி குறித்து கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து பள்ளி கட்டிடம் மற்றும் கழிவறைகளை குறித்து ஆய்வு செய்தார். அதன் பிறகு தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆய்வு மேற்கொண்ட […]

Categories
மாநில செய்திகள்

பேருந்தில் கேட்ட அழுகை சத்தம்…. என்னவா இருக்கும்?….. அதிர்ச்சியில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்….!!!!

தர்மபுரி புறநகர் பேருந்து நிலையத்தில் தேனிக்கோட்டையில் இருந்து தர்மபுரிக்கு வந்த அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றி செல்ல தயாராக இருந்தது. அப்போது பச்சை நிற சுடிதார் அணிந்து வந்த ஒரு இளம்பெண் 2 வயது பெண் குழந்தையை முன் பக்க இருக்கையில் போட்டுவிட்டு கீழே இறங்கி சென்றார். அதன் பிறகு பேருந்த புறப்பட தயாரான நேரத்தில் குழந்தை அழுதது. இதனையடுத்து குழந்தையின் பெற்றோரை சக பயணிகள் தேடிய போது அவர்கள் கிடைக்கவில்லை. அதனால் பேருந்து நிலையத்தில் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

வந்தன்னா….. “ஒரே அடி”… பாக்குறியா…. மின்வெட்டு பற்றி புகார் கூற வந்தவரை தாக்கிய மின்வாரிய ஊழியர் பணியிடை நீக்கம்..!!

மின்வெட்டு பற்றி புகார் கூற வந்தவரை தாக்கிய மின்வாரிய ஊழியர் குப்புராஜ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.   தர்மபுரி மாவட்டத்தில் தொடர் மின்வெட்டு குறித்து புகார் கூற வந்தவர் மீது மின்வாரிய ஊழியர் ஒருவர் மின்சார மீட்டரை வீசி தாக்க முற்படும் காட்சிகள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் தற்போது புகார் கூற வந்தவரை தாக்க முயன்ற மின்வாரிய ஊழியர் குப்புராஜ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.. முன்னதாக நேற்று பாலக்கோடு தீர்த்தகிரி நகரில் தொடர் மின்வெட்டு ஏற்படுவதால் நடவடிக்கை எடுக்க […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தர்மபுரி: “தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்”…. தொடங்கி வைத்த துணை போலீஸ் சூப்பிரண்டு….!!!!

தர்மபுரியில் போக்குவரத்து விதிமுறைகளை பொதுமக்கள் முறையாக கடைபிடிக்கும் விதமாக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக தர்மபுரி பகுதியில் ஒட்டப்பட்டி முதல் பழைய தர்மபுரி வரை 25 இடங்களில் தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தர்மபுரி 4 ரோடு மற்றும் புற நகர்-டவுன் பேருந்து நிலையங்களில் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்கும் விதமாக ஒலிபெருக்கிகள் அமைக்கப்பட்டு இருக்கிறது. இதன் துவக்கவிழா தர்மபுரி 4 ரோட்டில் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவாஸ் தலைமை தாங்கினார். இதையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. ALERT-ஆ இருங்க மக்களே….!!!!

தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வளிமண்டல சுழற்சி காரணமாக தேனி, திண்டுக்கல், ஈரோடு, தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், நாமக்கல் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் வால்பாறையிலும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ஒகேனக்கல்: 1.50 லட்சம் கன அடியாக அதிகரித்த நீர்வரத்து…. குடியிருப்புக்குள் புகுந்த தண்ணீர்…. சிரமப்பட்ட மக்கள்….!!!!

கர்நாடக மாநிலம் குடகு, பாகமண்டலா, மடிக்கேரி மற்றும் கேரள மாநிலம் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் தென் மேற்கு பருவமழை மீண்டுமாக தீவிரமடைந்து இருக்கிறது. கன மழையின் காரணமாக கர்நாடக மாநிலத்திலுள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு வரும் உபரி நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அணைகளின் பாதுகாப்புகருதி காவிரியாற்றில் வினாடிக்கு 44 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தமிழக காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளான அஞ்சட்டி, நாட்றாம்பாளையம், பிலிகுண்டுலு, […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

வெள்ளக்காடாக மாறிய ஒகேனக்கல்…. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை….!!!!!!!!

கர்நாடகா கேரளா மாநில நிர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக கபினி கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பியுள்ளது. இதனால் இந்த இரண்டு அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு அதிக அளவில் உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, கேரட்டி ராசிமனல், பிலிகுண்டுலு  ஒன்றிய பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது. இதனால் தர்மபுரி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து இருக்கின்றது. நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“இதை ரத்து செய்யணும்”…. ஊராட்சிமன்ற தலைவர்கள் போராட்டம்…. பரபரப்பு….!!!!

தமிழ்நாடு ஊராட்சிமன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் சார்பாக தர்மபுரி மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் ஊராட்சிமன்ற தலைவர்கள் பாய், தலையணையுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக வந்தனர். இதையடுத்து அவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் திடீரென்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக தகவலறிந்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டு வினோத், டவுன் இன்ஸ்பெக்டர் நவாஸ் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சி மன்ற தலைவர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். மேலும் அனுமதியில்லாமல் இதுபோன்ற போராட்டங்களை நடத்தக்கூடாது […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

திடீரென தீப்பிடித்த லாரிகள்…. பொதுமக்கள் அளித்த தகவல்…. தீயணைப்பு துறையினரின் போராட்டம்….!!

2 லாரிகள் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த நந்தகுமார் என்பவருக்கு சொந்தமான லாரியில் பெங்களூரில் இருந்து திருநெல்வேலிக்கு வெள்ளரிக்காய் ஏற்றி கொண்டு வரப்பட்டது. இந்த லாரியை தர்மபுரியை சேர்ந்த மாதுசாமி என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் லாரி மேம்பாலம் அருகில் உள்ள பட்டறையில் சோதனைக்காக நிறுத்தப்பட்டு இருந்தது. அப்போது பட்டறையில் வேலை செய்த தொழிலாளர்கள் மதிய நேரம் என்பதால் சாப்பிட சென்றிருந்தனர். இதனையடுத்து வெள்ளரிக்காய் ஏற்றி கொண்டு வந்த லாரி திடீரென […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ஒகேனக்கல்: 50 ஆயிரம் கன அடியாக அதிகரித்த நீர்வரத்து…. கண்காணிக்கும் காவல்துறை….!!!!

தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக கர்நாடகா மற்றும் கேரள மாநிலம் வயநாடு ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்தது. இதனால் கர்நாடக மாநிலத்திலுள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியது. இதன் காரணமாக பாதுகாப்பு கருதி 2 அணைகளிலிருந்தும் வினாடிக்கு 23,471 கன அடி உபரிநீர் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தமிழக காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளான தேன்கனிக் கோட்டை, நாட்றாபாளையம், அஞ்செட்டி, ராசிமணல், பிலிகுண்டுலு ஆகிய பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்…. இலவச ஆலோசனை…. ஏராளமானோர் பங்கேற்பு…..!!!

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை ஊராட்சி மன்ற தலைவர் புவனேஸ்வரி மூர்த்தி தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான மாற்றுதிறனாளிகள் கலந்து கொண்டனர். அங்கு அவர்களுக்கு வேலை வாய்ப்பு பெறுவதற்கான ஆலோசனை, தேசிய அடையாள அட்டை பெறுதல், நலவாரியத்தில் பதிவு செய்தல், அரசு நலத்திட்ட உதவிகள், உபகரணங்கள் பெற ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ குழுவினர் கண் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை செய்தனர்.

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தீராத வயிற்று வலி…. பிளஸ் ஒன் மாணவனின் விபரீத முடிவு…. பெரும் சோகம்…..!!!!!!!

வயிற்று வலி காரணமாக பிளஸ் ஒன் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள மிட்டாநூல அள்ளி இன்னும் பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பூரண பிரதாஷ்(17). இவன் ஏலகிரி அருகே தனது பாட்டி வீட்டில் தங்கி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் ஒன் படித்து வருகின்றார். இந்தநிலையில் மாணவனுக்கு அடிக்கடி வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகின்றது. […]

Categories
மாவட்ட செய்திகள்

மலைப்பகுதியில் முகாமிட்டுள்ள 3 காட்டு யானைகள்…. கரும்புத் தோட்டம் சேதம்….. அச்சத்தில் பொதுமக்கள்….!!!!

தர்மபுரி மாவட்டம்  காரிமங்கலத்தில் உள்ள எலுமிச்சன அள்ளி, அண்ணாமலை அள்ளி ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக 3 காட்டு யானைகள் சுற்றி வருகிறது. இந்த யானைகள் அங்குள்ள கரும்பு தோட்டத்தை நாசம் செய்து வருகிறது. இதனால் வனத்துறையினர் 3  யானைகளையும் விரட்டு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று அதிகாலை அருணேஸ்வரர் மலைகோவில் அடிவாரத்தில் உள்ள மாந்தோட்டத்தில் யானைகள் முகாமிட்டிருந்தது. இதனை பார்த்த வனதுறையினர் மற்றும் போலீசார் விரட்டி அடித்தனர். தற்போது 3 […]

Categories
மாவட்ட செய்திகள்

தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை….. என்ன காரணம் தெரியுமா?….. போலீசார் தீவிர விசாரணை…!!!!

தர்மபுரி மாவட்டம் ஆரூர் அருகில் உள்ள முத்தனூர் கிராமத்தில் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவன ஊழியரான இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். பிரபு ஆன்லைன் ரம்மி விளையாடுவதில் ஆர்வம் இருந்ததாகவும் கடந்த சில நாட்களில் ரம்மி விளையாட்டில் ஈடுபட்ட ரூ.45,000 வரை இழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மன உளைச்சலுக்கு ஆளான பிரபு நேற்று முன் தினம் இரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் ஆன்லைன் ரம்மி விளையாடும் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

கேரளா நபர்கள் 2 பேர் பிணமாக மீட்பு…. பின்னணி என்ன?… போலீஸ் தீவிர விசாரணை…..!!!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள நல்லம்பள்ளி அருகில் பூதனஅள்ளி பெரியகரடு வன ப்பகுதியில் 2 பேர் இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் தலைமையில், அதியமான்கோட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது 2 பேரின் உடல்களிலும் பல இடங்களில் காயங்கள் இருப்பது தெரியவந்தது. அத்துடன் அவர்களின் பாக்கெட்டுகளில் 2 செல்போன்கள், ஆதார் கார்டுகள், ஓட்டுனர் உரிமம், பான்கார்டு மற்றும் ஏ.டி.எம். கார்டுகள், மலையாள மொழியில் எழுதப்பட்ட கடிதம் போன்றவை இருந்தது. மேலும் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ஒகேனக்கல்: 9வது நாளாக வெள்ளப் பெருக்கு…. பொதுமக்களுக்கு விதிக்கப்பட்ட தடை….!!!!!

கர்நாடக மாநிலத்தில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக அங்கு உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி உபரி நீர் திறந்து விடப்பட்டது. அத்துடன் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தர்மபுரிமாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதன் காரணமாக ஒகேனக்கல்லில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நீர்வரத்தினை கர்நாடக- தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. துப்பாக்கி குண்டு பாய்ந்து 5 சிறுவர்கள் படுகாயம்…. அதிரடி நடவடிக்கை காவல்துறையினர்….!!!!

அரூர் அருகே மகனை துப்பாக்கியால் சுட்ட  போது குண்டு பாய்ந்து தெருவில் விளையாடி 5 சிறுவர்கள் காயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே சித்தேரி நலமங்காடு பகுதியைச் சேர்ந்த காரிய ராமன் என்பவர் வசித்து வருகிறார்.  இவரது மனைவி கண்ணகி. காரியராமனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் வீட்டிற்கு வந்த காரியராமன் மனைவியிடம் தகராறு செய்திருக்கின்றார். இதை அவரது மகன் ஏழுமலை தடுத்துள்ளார். அப்போது தந்தைக்கும் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“தீவு போல் காட்சி அளிக்கும் காவிரி கரையோர கிராமங்கள்”…. மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை….!!!!!!!!

காவிரி கரையோர மக்கள் ஆற்றுக்கு செல்ல வேண்டாம் என ஊராட்சி நிர்வாகம் சார்பில் தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள கபினி கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியுள்ளது. இதன் காரணமாக இரண்டு அணைகளில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் கன அடிக்கு மேல் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு நீர் திறந்து விடப்பட்டிருக்கிறது. இந்த தண்ணீர் காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து கர்நாடகா தமிழக எல்லையான பிலிகுண்டுலு  […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

225 அரசு பள்ளிகளில்…. செஸ் ஒலிம்பியாட் போட்டி… 5,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு…..!!!!

சென்னை மாமல்லபுரத்தில் வருகின்ற 28ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை 44வது ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் குறித்து தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மாவட்ட விளையாட்டு பிரிவு மற்றும் பள்ளி கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான சேஸ் போட்டிகள் நடைபெற்றது. அதில் தர்மபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அவ்வையார் அரசு […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

2 எம்எல்ஏக்கள் தர்ணா போராட்டம்…. எதற்கு தெரியுமா?…. பரபரப்பு தகவல்….!!!

தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு அரூர் தொகுதி எம்.எல்.ஏ. சம்பத்குமார் மற்றும் பாப்பிரெட்டிம்பட்டி தொகுதி எம்எல்ஏ கோவிந்தசாமி நேற்று மதியம் வந்தனர். அப்போது திடீரென இரண்டு பேரும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த அதிமுகவினர் ஏராளமானோர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அதனைத் தொடர்ந்து சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் சாந்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாபு மற்றும் போலீசார் எம்எல்ஏக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது எம்எல்ஏக்கள் கூறியது, அரூர் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“ஒகேனக்கல் நீர்வரத்து அதிகரிப்பு”…. 5-வது நாளாக இதற்கெல்லாம் தொடரும் தடை…. வெளியான அறிவிப்பு….!!!

கர்நாடக மற்றும் கேரள மாநிலங்களில் சென்ற 10 தினங்களுக்கும் மேலாக தென் மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்திலுள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளிலிருந்து வினாடிக்கு 1 லட்சத்து 10 ஆயிரம் கனஅடி உபரிநீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டதால் ஒகேனக்கல்லில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இப்போது மழையின் அளவு குறைந்ததால் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டது. நேற்று முன்தினம் வினாடிக்கு 90 ஆயிரம் கனஅடி தண்ணீர் ஒகேனக்கல்லுக்கு வந்தது. […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தர்மபுரி: நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம்…. தொடங்கி வைத்த கலெக்டர்…..!!!!!

காசநோய் இல்லா தமிழ்நாடு 2025 எனும் இலக்கினை எட்ட அரசு மேற்கொண்டு வருகிற பல நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக தமிழக முதலமைச்சரால் டிஜிட்டல் எக்ஸ்ரே பொருத்தப்பட்ட 23 நடமாடும் வாகனங்கள் துவங்கி வைக்கப்பட்டன. இதில் ரூபாய் 46 லட்சம் மதிப்பீட்டிலான டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் தர்மபுரி மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த வாகனம் வாயிலாக காசநோய் கண்டறியும் சேவையை தர்மபுரியில் கலெக்டர் சாந்தி துவங்கி வைத்து பார்வையிட்டார். இதையடுத்து கலெக்டர் கூறியிருப்பதாவது “தர்மபுரியில் காசநோய் ஏற்படும் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

விஷம் குடித்த கல்லூரி மாணவி உயிரிழப்பு…. என்ன காரணமா இருக்கும்?…. பெரும் சோக சம்பவம்….!!

தர்மபுரி மாவட்ட பாலக்காடு அருகில் உள்ள ஜிட்டான்ட்அள்ளி கொல்லப்பட்டியில் முனியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகள் சினேகா(19). இவர் பாலக்காடு பகுதியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். குளிக்காடு பகுதியில் முருகன் மகன் தமிழரசு தர்மபுரியில் உள்ள ஐடிஐ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர்கள் இரண்டு பேருக்கும் பஸ்ஸில் செல்லும் போது பழக்கம் ஏற்பட்டது. இது காதலாக மாறியது. இதனையடுத்து கடந்த வாரம் சினேகாவிற்கு வேறு இடத்தில் திருமணம் செய்ய […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

எரர்கொல்லனுர் முதல் எட்டியாம்பட்டி வரை…. தார் சாலை அமைக்க பூமி பூஜை…. !!!

தருமபுரி மாவட்டம் பொன்னகரம் பேரூராட்சியில் ஏர்ரகொல்லனுர் முதல் எட்டியாம்பட்டி வரை நபார்டு நிதிஉதவியுடன் ரூ.69 லட்சத்தில் சாலை அமைக்க பூமி பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு செயல் அலுவலர் கீதா தலைமை தாங்கினார். துணைத்தலைவர் வள்ளியம்மாள் பவுண்டேசன் முன்னிலை வகித்தார். அதனை தொடர்ந்து பேரூராட்சி தலைவர் வீரமணி பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர்கள் நிரோஷா முரளி, சுமித்ரா, சந்தோஷ், சுமதி வெங்கடேஷ், ஜெயக்கொடி, பச்சையப்பன், மோசின் கான், பவுன்ராஜ், ரேவதி லட்சுமிமணன், […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மாற்றுத்திறனாளிகளின் தொடர் போராட்டம்….. இதான் காரணமா…?? பெரும் பரபரப்பு…!!

தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்று திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி நேற்று கைது செய்தனர். இதனையடுத்து போலீசாரை கண்டித்து செம்பட்டி பஸ் நிலைய அருகில் ஆத்தூர் ஒன்றிய மாற்றுத்திறனாளிகள் சார்பில் மறியல் நடந்தது. இதற்கு மாற்றுத்திறனாக நல சங்கம் ஒன்றிய செயலாளர் மலைச்சாமி தலைமை தாங்கினார். இது குறித்து தகவல் அறிந்து செம்பட்டி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் விரைந்து வந்து மாற்றுத்திறனாளிகளுடன் பேச்சுவார்த்தை […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

அண்ணன் தம்பி மீது தாக்குதல்…. உறவினர்கள் போராட்டம்… பெரும் பரபரப்பு….!!!

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகில் உள்ள வகுத்துப்பட்டியில் மோகேஷ்(16) என்பவர் வசித்து வருகிறார். இவர் ராமியன அள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். நேற்று மாலை இவரை பள்ளியில் இருந்து அழைத்து வர அவரது அண்ணன் கலை அமுதன்(18) கிராமிய அள்ளிக்கு சென்றார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த மூன்று பேர் பெண்களை நோட்டமிடுவதாக கூறி அண்ணன், தம்பி தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்து மோகேஷின் உறவினர்கள் ராம்அள்ளிக்கு வந்து மோகேஷ் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“மருத்துவமனையில் இருக்கும் தந்தையை பார்க்க வந்த மகள்”…. உயிர் போன பரிதாபம்….!!!!!!!!

தர்மபுரி பி ஆர் சீனிவாச ராவ்  தெருவில் ரகு என்பவர் நகைக்கடை ஒன்றை வைத்து இருக்கிறார். இவரது மனைவி மீனா (27). இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதற்கு இடையே ரகுவின் பெரியப்பா கடந்த சில தினங்களுக்கு முன்பாக இறந்துள்ளார். அவரது இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக சொந்த ஊரான பொன்னாகரத்தை அடுத்த வண்ணாத்திப்பட்டிக்கு ரகு குடும்பத்துடன் சென்றிருந்தார். இந்த நிலையில் மீனாவின் தந்தையான தர்மபுரி நகராட்சி வருவாய் ஆய்வாளர் மாதயன்  உடல் நலம் பாதிக்கப்பட்டு  தர்மபுரியில் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

அவசர சிகிச்சை முதுநிலை படிப்பு எப்போது தொடங்கும்….? ஆய்வு செய்த மருத்துவ ஆணைய குழுவினர்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!!!

தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பில் ஒவ்வொரு வருடம் 100 மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இங்கு  எம்.எஸ், எம்.டி ஆகிய முதுநிலை படிப்புகளில் பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, குழந்தைகள் மருத்துவம், மகப்பேறு மருத்துவம், எலும்பு மருத்துவம் போன்ற பாடப்பிரிவுகள் இருக்கிறது. மேலும் இங்கு விபத்து மற்றும் அவசர சிகிச்சை, முதல் நிலை மருத்துவ பாட பிரிவை தொடங்க இந்த தேசிய மருத்துவ ஆணையத்திற்கு பரிந்துரை கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மனு கொடுத்த மாற்றுத்திறனாளி…. “உடனடி நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு”…. விரைந்து கொடுக்கப்பட்ட மூன்று சக்கர சைக்கிள்…!!!!

மாற்றுத்திறனாளி கொடுத்த மனுவிற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு மூன்று சக்கர சைக்கிள் அவருக்கு உடனடியாக வழங்கப்பட்டது. தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வாரந்தோறும் திங்கட்கிழமை என்று ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டமானது நடைபெறும். இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டமானது நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர். நேற்று மொத்தம் 447 மனுக்கள் ஆட்சியரிடம் கொடுக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் கொட்டுமாரன  மாறானஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி முனுசாமி என்பவர் […]

Categories
மாநில செய்திகள்

குடும்ப அட்டைதாரர்களே உஷார்!…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த மாதம் முதல் ‘புழுங்கல் அரிசி’ தலா 2கிலோ வழங்கப்படும் என்று ஆட்சியர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பெரும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ‘புழுங்கல் அரிசி’ தலா 2 கிலோ வழங்க மாவட்ட நிர்வாகத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகின்ற பொது விநியோக திட்ட பொருட்களை ஏதேனும் பெற விரும்பவில்லை […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“உடனடியாக காலி செய்ய வேண்டும்” ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்…. தர்மபுரியில் பரபரப்பு….!!!!

ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது கூட்டத்திற்கு வந்த பாலக்கோடு பகுதியை சேர்ந்த மும்தாஜ் என்பவர் உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் மும்தாஜை தடுத்து நிறுத்தி அவரிடம் விசாரணை செய்தனர். அந்த விசாரணையில் அவருக்கு சொந்தமான வீட்டில் பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“தீவிர வாகன சோதனை” சிக்கிய 22 மூட்டை ரேஷன் அரிசி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தி வந்த நபரை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தர்மபுரி-கிருஷ்ணகிரி சாலையில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தி வருவதாக  குடிமைப்பொருள் வழங்கல் பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன், ராமச்சந்திரன், ஏட்டு செந்தில்குமார், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் அப்பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அவ்வழியாக வந்த வேனை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் சட்டவிரோதமாக […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“இரவில் வேட்டையாடும் சிறுத்தைகள்” அச்சத்தில் உறைந்த பொது மக்கள்…. வனத்துறையினருக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!!!

சிறுத்தை கடித்து இறந்த ஆடுகளுக்கு  நிவாரணம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கொட்டாய் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தின்  அருகில் இருக்கும் வனப்பகுதியில் இருந்து இரவு நேரங்களில் சிறுத்தை புகுந்து வீடுகளில் வளர்க்கும் கோழி, ஆடுகளை பிடித்து செல்கிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சிறுத்தை  கோவிந்தன் என்பவருக்கு சொந்தமான  3  ஆடுகளை கடித்து குதறியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த ஆடுகள் சம்பவ இடடத்திலேயே […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

விளை பொருட்களின் மதிப்பு உயர்த்தப்படும்…. நடைபெற்ற அங்கன்வாடி மைய திறப்பு விழா…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!!!

அங்கன்வாடி  மையத்தை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்துள்ளார். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பச்சினம்பட்டி கிராமத்தில் இயற்கை அங்கன்வாடி திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி, வேளாண் வணிக துறை துணை இயக்குனர் கணேசன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மோகன்தாஸ், தோட்டக்கலை துணை இயக்குனர் மாலினி, உதவி இயக்குனர் சசிகலா, தாசில்தார் ராஜராஜன், விற்பனை குழு செயலாளர் ரவி, வேளாண்மை அலுவலர் அர்ஜுனன், தோட்டக்கலை அலுவலர் அசோக்குமார்,  உற்பத்தியாளர்கள் சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு…. தீவிர பாதுகாப்பு பணி…. குவியும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள்….!!!!

கோடைகாலம் என்பதால்  ஒகேனக்கல்லுக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல்லுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அதேபோல் நேற்று  மே தினத்தை முன்னிட்டு கர்நாடகா, ஆந்திரா, கேரளா மட்டும் இன்றி  தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்தனர். தற்போது ஒரு வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வரும்  ஆயிரக்கணக்கான சுற்றுலா […]

Categories
மாநில செய்திகள்

இளைஞர்களே! மிஸ் பண்ணிடாதீங்க…. மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு…!!!!

மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தர்மபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவர் ஏப்ரல் 22-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இருக்கும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது. இந்த முகாம் மூலமாக தனியார் துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஊழியர்களை நேரடியாக தேர்ந்தெடுக்கிறது. இந்த முகாமில் கலந்து கொள்பவர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருக்கும் பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

புரோக்கர்கள் பிடியில் அரசு மருத்துவமனையா…. புலம்பித் தவிக்கும் மக்கள்…!!!!!

தருமபுரி மாவட்டம், பொருளாதாரம் மற்றும் கல்வியில் பின்தங்கி மாவட்டமாக உள்ள இந்த மாவட்டத்தில் பெரும்பாலும் விவசாயம் மற்றும் விவசாய கூலி சார்ந்த பணிகளே அதிகமாக உள்ளது.  தொழிற்சாலைகள், வேலைவாய்ப்புகள் அதிகம் இல்லாத காரணத்தால் பெங்களூரு, கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிக்கு வேலைத் தேடி மக்கள் செல்கின்றனர். மருத்துவ ரீதியான பிரச்சனைகளுக்கு தருமபுரி அரசு மருத்துவமனையை நாடியே நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகின்றனர். தர்மபுரி அரசு மருத்துவமனை தொடக்கத்தில் மாவட்ட மருத்துவமனையாக இருந்தது. அப்போது 385 படுக்கைகளுடன் […]

Categories
மாநில செய்திகள்

நகை கடன் தள்ளுபடி க்கு மாற்றுதிறனாளியிடம் ரூ.2,000 லஞ்சம்…. அரசு அதிகாரிகள் அடாவடி…!!!!!

மாற்றுத்திறனாளி ஒருவர் தன்னிடம் லஞ்சம் பெற்ற ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசிற்கு வலியுறுத்தியிருக்கிறார். தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே சாமி செட்டிபட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ஏலகிரி பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்ற மாற்றுத்திறனாளி ஒருவர்  கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தனது குடும்ப செலவுகளுக்காக முக்கால் பவுன் தங்க நகையை 9 ஆயிரத்து 500 ரூபாய்க்கு வைத்திருக்கிறார். இதனை தொடர்ந்து குடும்ப சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்….. தெற்கு ரயில்வே வெளியிட சூப்பர் அறிவிப்பு….!!!!

புதிய மின்சார ரயில் சேவை தொடங்கப்பட்டு உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் தினமும் 30 பயணிகள் ரயில் செல்கிறது. அதில் கோவை-மும்பை, திருநெல்வேலி-தாதர், மயிலாடுதுறை- மைசூர், கண்ணூர்- எஸ்வந்த்பூர், தூத்துக்குடி-மைசூர், நாகர்கோவில்- பெங்களூர், எர்ணாகுளம்- பெங்களூர், கொச்சுவேலி- எஸ்வந்த்பூர், சேலம்- எஸ்வந்த்பூர், தர்மபுரி- பெங்களூர் போன்ற ரயில்கள் இங்கு நின்று செல்கிறது. கடந்த 2 வருடங்களாக பெங்களூர்-ஓமலூர் இடையே மின்சார ரயில் வழித்தடம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. அதன்பிறகு பெங்களூரு-ஓசூர் இடையே […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

திடீர் வாகன சோதனையில் போலீசார்… வசமாக சிக்கிய வாலிபர் கைது…!!!!!

தர்மபுரியில் இருந்து பெங்களூருக்கு 800 கிலோ ரேஷன் அரிசி கடத்த முயன்ற ஒருவர் கைது போலீசாரால் செய்யப்பட்டுள்ளார். தர்மபுரி குடிமை பொருள் வழங்கல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதி தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவபெருமாள், அருள், ஏட்டு செந்தில்குமார் ஆகியோர் தர்மபுரி, புலிக்கரை, பாலக்கோடு, மாரண்டஅள்ளி ஆகிய பகுதிகளில் திடீர் சோதனை நடத்தினர். இதில் புலிக்கரை பகுதியில் நடத்திய சோதனையில் பாலக்கோடு அடுத்த வேலங்காடு பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர். இவர் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்… 108 திருவிளக்கு பூஜை… சிறப்பு அலங்காரத்தில் சாமி தரிசனம்…!!!!

தர்மபுரி மாவட்டத்தில் தட்சணகாசி காலபைரவர் கோவிலில் உலக நன்மைகளுக்காக 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. தர்மபுரி அடுத்த அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர் கோவிலில் உலக நன்மைக்காக 108 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடைபெற்றுள்ளது. முன்னதாக சாமிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், வழிபாடுகள், பூஜைகள் நடைபெற்று இருந்தது. அதன்பின் சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனை அடுத்து திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பின்னர் சாமிக்கு மகா தீபாரதனை நடைபெற்றது. இதில் பங்கேற்ற பெண்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

லஞ்சத்தில் புரளும் ஆதார் அலுவலம்…. பாயுமா அரசின் நடவடிக்கை..?? எதிர்பார்ப்பில் மக்கள்…!!!!

தர்மபுரி மாவட்டத்தில் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேல் பாட்சாப்பேட்டை பகுதியை சேர்ந்த காதர் பாஷாவின்  மனைவி ஷபானா. இவர் கடந்த 4 மற்றும் 5ஆம் தேதிகளில் தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு ஆதார் மையத்தில் ஆதார் அட்டையில் பிழை திருத்தம் செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த ஊழியர் ஒருவர் மாற்றுத்திறனாளி தம்பதியை வேண்டுமென்றே அலையவிட்டதாகவும், வெளியே செல்லுமாறு கூறி அவமானப்படுத்தியதாக […]

Categories
தேசிய செய்திகள்

2 வருடங்களுக்கு பின்…. அருவியில் குளிக்க அனுமதி…. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி…!!!

ஒகேனக்கல் அருவியில் 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்று ஓகேனக்கல்அருவி. இது தர்மபுரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாலும், ஒகேனக்கல் அருவி சேதமடைந்ததாலும் மற்றும் கொரோனா தொற்று போன்ற  காரணங்களால் கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு அனுமதி கோரி கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு அருவியில் குளிப்பதற்கு […]

Categories

Tech |