ஊத்துக்கோட்டை அருகே ஒதப்பை கொசத்தலை ஆற்றில் தரைப்பாலத்தில் கட்டப்படும் பால பணிகளை விரைந்து முடிக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் கொசத்தலை ஆறு இருக்கின்றது. இந்த ஏரி நிரம்பினால் உபரி நீர் 16 மதகுகள் வழியாக கொசத்தலை ஆற்றில் திறந்து விடப்படும். இந்த ஏரியிலிருந்து தண்ணீர் திறந்து விடும் போதெல்லாம் கொசுத்தலை ஆற்றின் மீது இருக்கும் தரைப்பாலம் மூழ்கிவிடும். அப்போது பொதுமக்கள் கூடுதல் கட்டணம் செய்து பல்வேறு பகுதிகளுக்கு மாற்று வழியில் செல்லும் நிலை இருக்கின்றது. […]
Tag: தரைப்பாலம்
தரைப்பாலம் உடைந்ததால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் ஆறு, வாய்க்காலில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் ராகவன் வாய்க்காலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஆத்திப்பட்டு கிராமத்தில் அமைக்கப்பட்ட தரைப்பாலம் அடித்து சென்று போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் ஆத்திப்பட்டு, அரும்பட்டு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றி பழைய பட்டிணம் வழியாக மடப்பட்டுக்கு […]
தரைப்பாலம் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே பரவலாக பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக பல்வேறு அணைகள் நிரம்பியதால் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதன் பிறகு மழையின் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை தண்ணீர் சூழ்ந்து பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதோடு சாலைகளிலும் தண்ணீர் வெள்ளம் போல் ஓடுவதோடு, பல்வேறு […]
தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. அதோடு மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மற்றும் நொய்யல் நீர் பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சில கால்வாய்கள் மற்றும் அணைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நொய்யல் ஆற்றின் மீது பாலம் கட்டும் பணிகள் […]
பலத்த மழையின் காரணமாக தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இங்குள்ள நாகர்கோவில், பூதப்பாண்டி பகுதிகளில் அரை மணி நேரமாக மழை வெளுத்து வாங்கியது. இங்குள்ள கீரிப்பாறை பகுதியில் இருந்து லேபர் காலனிக்கு செல்வதற்காக தரைப்பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த தரைப்பாலம் மழையில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மதுரை யானைகல் தரைப் பாலத்தின் கீழ் வைகை ஆற்று வெள்ளப் பெருக்கில் எச்சரிக்கையை மீறி வாகன ஓட்டிகள் செல்லும் போது கீழே விழுந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதால் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதேபோல வைகை அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீர் மற்றும் வைகை அணையை ஒட்டியுள்ள நீர்பிடிப்பு பகுதிகளான வருஷநாடு, வெள்ளிமலை, மேகமலை உள்ளிட்ட பகுதிகளில் தொடர் கனமழை காரணமாக உபரிநீர் வைகை […]
நீலகிரி மாவட்டத்தில் தொடரும் கனமழையால் புளியும்பாறை அருகே உள்ள தரைப்பாலம் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மழை பெய்து வருவதால் உதகை, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. தேவாலா, பந்தலூர், பகுதிகளில் இன்றும் கனமழை தொடருவதால் புலியும்பாறை பகுதியில் உள்ள தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது. கோழிக்கொல்லி கிராமத்திற்கான போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அக்கிராமத்தில் உள்ள 300-ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் கிராமத்தை விட்டு வெளியேற முடியாமல் சிக்கி உள்ளனர். […]