கடந்த வெள்ளிக்கிழமை 356 பயணிகளுடன் லண்டன் ஹூத்ரோ விமான நிலையத்திற்கு செல்ல இருந்த விமானம் ஒன்று அசர் பைஜான் நாட்டில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இது குறித்து Swedish flightradar24 தளத்தில் கூறியதாவது, அவசர நிலைக்கான தகவல் தொடர்பு குறியீடுகளை தொடர்ந்து விமானம் அசர் பைஜான் தலைநகர் பாகுவில் உள்ள ஹெய்டர் அலியேவ் சர்வதேச விமான நிலையத்தில் திட்டமிடாமல் திரையிறக்கபட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பாகு விமான நிலையத்தின் பேஸ்புக் பக்கத்தில் 356 பயணிகள் விமானத்தில் இருந்ததாகவும் சரக்குகள் வைக்கும் […]
Tag: தரையிறக்கம்
விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பாகிஸ்தானில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஷார்ஜாவில் இருந்து ஹைதராபாத் நோக்கி வந்து கொண்டிருந்த இண்டிகோ விமானம் ஒன்று வந்துகொண்டிருந்தது. அப்போது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதன் காரணமாக பாகிஸ்தானில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இண்டிகோ நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, 125 பயணிகளுடன் இண்டிகோ 6இ-104 விமானம் சார்ஜாவில் இருந்து புறப்பட்டு ஐதராபாத் வந்து கொண்டிருந்தது. சம்பந்தப்பட்ட விமானம் நேற்று இரவு 11 மணி […]
டெல்லியிலிருந்து வதோதராவுக்கு புறப்பட்ட இண்டிகோ விமானம் ஜெய்ப்பூரில் அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டிருக்கிறது. ஏனெனில் விமானத்தின் என்ஜினில் அதிர்வு ஏற்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இதையடுத்து விமானத்திலிருந்த பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இதற்கிடையில் என்ஜின் அதிர்வு தொடர்பாக பொறியியல் குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது. அத்துடன் விமானம் தரையிறக்கம் பற்றி விமான போக்குவரத்து இயக்குனரகம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
நேற்று தலைநகர் டெல்லியிலிருந்து துபாய்-க்கு புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட்1 விமானமானது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கராச்சியில் (பாகிஸ்தான்) அவசரமாக தரை இறக்கப்பட்டது. இதையடுத்து குஜராத்திலிருந்து மும்பை புறப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானமானது மும்பையில் அவசரஅவசரமாக தரை இறக்கம் செய்யப்பட்டு உள்ளது. ஏனெனில் விமானத்தில் துணை விமானியின் பக்ககண்ணாடியில் விரிசல் இருந்ததால் தரைஇறக்கம் செய்யப்ட்டது என கூறப்படுகிறது. நேற்று மட்டும் 2 ஸ்பைஸ்ஜெட் விமானங்கள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரையிறக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு விமான போக்குவரத்து ஆணையரகம் […]
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பயணித்த ஹெலிகாப்டரில் பறவை மோதியதால் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாரணாசியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை ஆய்வு செய்வதற்காக நேற்று யோகி ஆதித்யநாத் வாரணாசி வந்திருந்தார். இந்த நிலையில் வாரணாசியில் இருந்து லக்னோ செல்வதற்காக புறப்பட்டபோது எதிர்பாராதவிதமாக ஹெலிகாப்டரின் மீது பறவை ஒன்று மோதியது. இதனால் ஹெலிகாப்டரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த வீடியோ ஆனது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
அசாம் மாநிலத்தில் உள்ள சில்சாரியிலிருந்து கொல்கத்தாவுக்கு புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. நல்லவேளையாக உரிய நேரத்தில் கோளாறு கண்டறியப்பட்டதால் விபத்து ஏற்படாமல் தடுக்க முடிந்தது. ஏர்பஸ் ஏ319 விமானம் ஒரு குறுகிய முதல் நடுத்தர வகையை சேர்ந்தது. இதில் 124 முதல் 156 பயணிகள் வரை பயணிக்கும் வசதி கொண்டது . அதனைப்போலவே கடந்த அக்டோபர் 22-ஆம் தேதி பயணி ஒருவர் மூச்சு திணறல் மற்றும் […]
விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பள்ளி வளாகத்திலேயே ஹெலிகாப்டரை விமானப்படை தரையிரங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் இருந்து விமானப்படை தளத்தை நோக்கி சென்று கொண்டிருந்த இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, விசிறியில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக பக்சார் மாவட்டத்தின் மணிப்பூரில் உள்ள உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் அந்த ஹெலிகாப்டர் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் ஹெலிகாப்டரில் இருந்த பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர். பள்ளி வளாகத்தில் ஹெலிகாப்டர் […]
சுமார் ஆறு ஆண்டுகளில் செவ்வாய் கோளில் மனிதர்கள் வாழ சூழ்நிலை உருவாகும் என்று ஸ்பேக்ஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் கூறியுள்ளார். 2020ஆம் ஆண்டுக்குள் செவ்வாய்க் கோளில் மனிதனை தரையிறக்கும் முயற்சி வெற்றி பெறும் என ஸ்பேக்ஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். ஸ்பேக்ஸ் எக்ஸ் நிறுவனம் அறிவியல் துறையில் ஆய்வு மேற்கொள்ளும் தனியார் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் தொழில்நுட்பம், விண்வெளி ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் செவ்வாய் […]
வெளிநாட்டில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை மீட்கும் வகையில் தமிழக விமான நிலையங்களில் விமானங்களை தரையிறங்க அனுமதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கை நீதிபதிகள் விசாரணைக்கு ஏற்றுள்ளனர். நாளை இது தொடர்பாக விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். திமுக செய்தித்தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், ஏராளமான தமிழர்கள் மற்றும் இந்தியர்கள் சிக்கித்தவிப்பதாக குறிப்பிட்டுள்ளார். கொரோனா பாதிப்பு காரணமாக அவர்கள் சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியாவிற்கு கொண்டு வர உரிய நடவடிக்கைகளை […]