Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

காதல் திருமணம் செய்த வாலிபர்…. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கோட்டை தெற்கு பகுதியில் அருண்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெங்களூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அருண்குமார் பவித்ரா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மன உளைச்சலில் இருந்த அருண்குமார் அப்பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரிக்கு அருகில் இருக்கும் மரத்தில் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

காதுகள் அறுக்கப்பட்டு மயங்கி கிடந்த பெண்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கங்கப்பாளையம் பகுதியில் சின்னபையன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி உள்ளார். கடந்த 27-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற ஜெயலட்சுமி நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதற்கிடையில் வயல்வெளியில் ரத்த காயங்களுடன் 2 காதுகளும் அறுக்கப்பட்ட நிலையில் ஜெயலக்ஷ்மி மயங்கி கிடந்துள்ளார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் உற்சாக குளியல்…. 10- ஆம் வகுப்பு மாணவனுக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஜில்திம்மனூர் பகுதியில் ஆனந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் திவாகர் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் திவாகர் தனது நண்பர்களுடன் சின்னாறு அணை பகுதிக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக திவாகர் தண்ணீரில் மூழ்கியதை பார்த்து நண்பர்கள் அலறி சத்தம் போட்டனர். அவர்களது சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் சிறுவனை மீட்க முயற்சி செய்தனர். ஆனாலும் அவர்களால் மீட்க இயலவில்லை. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

திருமண ஏற்பாடுகள் செய்த பெற்றோர்…. இளம்பெண்ணின் திடீர் முடிவு…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பம்பாடி பாரதிநகரில் விவசாயியான ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியங்கா என்ற மகள் இருந்துள்ளார். இவர் சேலத்தில் இருக்கும் தனியார் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பெற்றோர் வேலைக்கு செல்ல வேண்டாம் என பிரியங்காவிடம் தெரிவித்தனர். மேலும் பிரியங்காவுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வந்தது. கடந்த 24-ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பிரியங்கா விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

சி.ஐ.டி போலீஸ் என கூறி…. முதியவரிடம் பணம், நகையை “அபேஸ்” செய்த வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சிக்களூர் அண்ணாநகரில் கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 19-ஆம் தேதி கந்தசாமி மோத்தக்கல்லில் இருக்கும் வங்கி ஒன்றிலிருந்து 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம், 3 கிராம் தங்க மோதிரம், வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றை ஒரு பையில் வைத்துக்கொண்டு மொபட்டில் திருவண்ணாமலை- நரிப்பள்ளி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த வாலிபர் தன்னை சி.ஐ.டி போலீஸ் என அறிமுகப்படுத்திக்கொண்டார். இதனையடுத்து வாகனத்தின் ஆவணங்களை சரிபார்க்க வேண்டும் என […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. இன்ஜினியரை கரம் பிடித்த கல்லூரி மாணவி…. போலீஸ் பேச்சுவார்த்தை….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள எர்ரனஅள்ளி கிராமத்தில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இன்ஜினியரான ராஜ்குமார் ஓசூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளாக ராஜ்குமாரும், ரெட்டியூர் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவியான பிரியதர்ஷினி என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து அவர்கள் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். பின்னர் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

வாலிபர் கத்தியால் குத்தி கொலை…. சிறுவன் உள்பட 2 பேர் கைது…. பரபரப்பு சம்பவம்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொம்மிடி நடூர் காட்டுவளவு குறிஞ்சிப்பாடி பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தோஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவரும் சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவரும் தீவட்டிப்பட்டி பகுதியில் கம்பி, சிமெண்ட் மொத்த வியாபார கடை நடத்தி வருகின்றனர். இந்த கடையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த சோபித் மற்றும் 15 வயது சிறுவன் ஆகியோர் வேலை பார்த்து வந்துள்ளனர். நேற்று இரவு நேரத்தில் சந்தோஷ், பிரேம்குமார் இருவரும் பணத்தை எடுத்துக்கொண்டு கடையை […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பூச்சி மருந்து தெளித்த விவசாயி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள திப்பட்டி பள்ளம் கிராமத்தில் விவசாயியான சின்னராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது விவசாய நிலத்தில் வீடு கட்டி மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சின்னராஜ் தோட்டத்தில் சாகுபடி செய்திருந்த கத்திரி செடிக்கு பூச்சி மருந்து தெளித்துக் கொண்டிருந்தார். அவர் கிணற்றின் ஓரம் இருக்கும் வரப்பில் நடந்து சென்றதாக தெரிகிறது. அப்போது கால் தவறி எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்த சின்னராஜ் தண்ணீரில் மூழ்கினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தீபாவளி சீட்டு என்ற பெயரில் மோசடி…. பொதுமக்கள் புகார் அளிக்கலாம்…. குற்றப்பிரிவு போலீசார் அறிவிப்பு…!!!

தர்மபுரி மாவட்டம் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகம் சார்பில் செய்தி குறிப்பு வெளியிடப்பட்டது. அதில் ஈச்சம்பாடி கிராமத்தில் வசிக்கும் சிவகுமார் என்பவர் சீனிவாசா தெருவில் தீபாவளி சீட்டு நடத்தியுள்ளார். அவரை நம்பி பலர் பணம் செலுத்தியுள்ளனர். இந்நிலையில் வசூல் செய்த பணத்தை திரும்ப கொடுக்காமல் சிவகுமார் மோசடி செய்ததாக அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கு தற்போது பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே தீபாவளி சீட்டு பணம் கட்டி பாதிக்கப்பட்டவர்கள் யாராவது இருந்தால் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

செயற்கை நிறமேற்றிய சில்லி சிக்கன்…. கடைகளில் திடீர் ஆய்வு…. அதிரடி காட்டிய அதிகாரிகள்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் பேருந்து நிலையம், எம்.ஜி ரோடு, தக்காளி மார்க்கெட் ஆகிய பகுதிகளில் இருக்கும் சில்லி சிக்கன் மற்றும் துரித உணவு கடைகள், தள்ளுவண்டி கடைகளில் அதிரடியாக ஆய்வு நடத்தியுள்ளார். அப்போது செயற்கை நிறம் ஏற்றிய சில்லி சிக்கன், பல முறை பயன்படுத்திய சமையல் எண்ணெய் ஆகியவற்றை அதிகாரிகள் அப்புறப்படுத்தினர். பின்னர் இரண்டு கடைகளின் உரிமையாளர்களுக்கு தலா 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதனையடுத்து உணவு தயாரிக்க பயன்படுத்தும் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

கொழுந்து விட்டு எரிந்த வீடு…. சான்றிதழ்கள், பணம் உள்பட பல பொருட்கள் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குரும்பட்டி கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் குமரவேல் என்பவர் வசித்து வருகிறார். நேற்று மாலை திடீரென குமரவேலின் குடிசை வீடு தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்த அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த மதிப்பெண் சான்றிதழ்கள், […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

இரு தரப்பினருக்கு இடையே மோதல்…. 5 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள நல்லம்பள்ளி கோவில் தெருவில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் முருகனுக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் சரிதா என்பவருக்கும் முன் விரோதம் காரணமாக ஏற்கனவே தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவம் நடைபெற்ற அன்று இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதனால் காயமடைந்த இரு தரப்பினரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“ஸ்மார்ட் காவலர் செயலி”…. பயன்படுத்துவது எப்படி…? போலீசாருக்கு சிறப்பு பயிற்சி…!!!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள மாரண்டஅள்ளி, மகேந்திரமங்கலம், பஞ்சப்பள்ளி, பாலக்கோடு, காரிமங்கலம் மற்றும் மகளிர் காவல் நிலையம் என ஆறு காவல் நிலையத்தைச் சேர்ந்த 119 போலீசாருக்கு தனியார் பள்ளியில் வைத்து இ-பீட் ஸ்மார்ட் காவலர் செயலியை உபயோகப்படுத்துவது குறித்து பயிற்சி நடைபெற்றுள்ளது. இதற்கு போலீஸ் துணை சூப்பிரண்டு சிந்து தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து ரோந்து பணியில் ஈடுபடும் போது எளிதில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் புதிய செயலி செயல்படும் எனவும், இருக்கும் இடத்தில் இருந்து குற்றவாளிகளை எளிதில் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தட்டி கேட்ட கல்லூரி மாணவி…. கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் மாணவி படித்து வருகிறார். அந்த மாணவி அப்பகுதியில் இருக்கும் மளிகை கடை அருகே இருக்கும் சாலையோரம் நின்று கொண்டிருந்தார். அப்போது சத்ரியன் என்பவர் தனது மனைவியை தரக்குறைவாக பேசி திட்டியதாக தெரிகிறது. இதனை கல்லூரி மாணவி தட்டி கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த சத்ரியன் கத்தியை காட்டி கல்லூரி மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து அந்த மாணவி தர்மபுரி டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்…. வலுக்கட்டாயமாக கடத்தி சென்ற வாலிபர்…. நீதிமன்றம் அதிரடி…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காளிபேட்டை கிராமத்தில் சபரி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2016-ஆம் ஆண்டு 13 வயது சிறுமியை காரில் கடத்தி சென்று சபரி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் சபரியை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த தர்மபுரி மாவட்ட […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

6 மாதத்திற்கு முன்பு பிறந்த குழந்தை…. கருத்தடை மாத்திரை வாங்கி சாப்பிட்ட இளம்பெண் பலி…. அதிகாரிகள் அதிரடி…!!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அதிக அளவு ரத்தப்போக்கு காரணமாக திடீரென இளம்பெண் உயிரிழந்தார் இதுகுறித்து மருத்துவத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய போது கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் இளம்பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது தெரியவந்தது. இதனையடுத்து மீண்டும் கர்ப்பமான இளம்பெண் பார்ப்பாரப்பட்டியில் இருக்கும் மருந்து கடையில் கருத்தடை மாத்திரை வாங்கி சாப்பிட்டுள்ளார். […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

திடீர் உட்நலக்குறைவு…. 3 மாத பெண் குழந்தை பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பாரப்பட்டி பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு குமாருக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட குழந்தையை குமார் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்…. களைகட்டிய வியாபாரம்…. போலீசாரின் தீவிர கண்காணிப்பு…!!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல்லுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். விடுமுறை நாளான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு சென்று சினிபால்ஸ், மெயின் அருவி, ஐந்தருவி ஆகியவற்றில் குளித்து மகிழ்ந்தனர். இதனையடுத்து சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி செய்து ஆற்றின் அழகை கண்டு ரசித்தனர். சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்ததால் கடைகளில் வியாபாரம் களை கட்டியது. மேலும் போலீசார் அங்கு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ரூ.80 லட்சம் கேட்டு சிப்ஸ் கடைக்காரர் கடத்தல்…. 6 பேர் அதிரடி கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் கூத்துப்பாடி மடம் பகுதியை சேர்ந்த விஸ்வநாதன் மும்பையில் சிப்ஸ் கடை நடத்தி வந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா பரவல் காரணமாக ஊருக்கு வந்த விஸ்வநாதன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் விஸ்வநாதன் தனது மனைவி மஞ்சுளாவிடம் பென்னாகரம் செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்டார் ஆனால் அவர் வீட்டிற்கு திரும்பி வராததால் அதிர்ச்சியடைந்த மஞ்சுளா தனது கணவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். அப்போது செல்போன் ஸ்விட்ச் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

திருமணமான 6 மாதங்களில்…. புது மாப்பிள்ளைக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கோணம்பட்டி பகுதியில் கட்டிட தொழிலாளியான சுரேஷ்(24) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சுரேஷுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கீழானூர் கிராமத்தில் ஒரு கட்டிடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக சுவரின் ஒரு பகுதி இடிந்து சுரேஷ் மீது விழுந்தது. இதனால் படுகாயமடைந்த சுரேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுரேஷின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

விலை கடும் சரிவு…. 1 டன் பூக்களை மார்க்கெட்டில் விட்டு சென்ற விவசாயிகள்….!!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அதிகப்படியாக சாகுபடி செய்யும் பூக்களை தர்மபுரி நகர பேருந்து நிலையத்தில் இயங்கும் பூ மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். கடந்த சில நாட்களாக கார்த்திகை மாதத்தில் ஐயப்ப பக்தர்கள் வாங்கியதாலும், முகூர்த்த தினங்கள் வந்ததாலும் பூக்கள் நல்ல விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் புயல் எதிரொலியாக ஒரு வாரத்திற்கு மேலாக தொடர்ந்து மழை பெய்ததால் பூக்கள் விலை கடுமையாக சரிந்தது. அதே நேரம் சாமந்திப் பூக்களின் விளைச்சல் அதிகரிப்பால் பூ […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து…. இடிபாடுகளில் சிக்கி 10 பேர் காயம்…. ஸ்தம்பித்த போக்குவரத்து….!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து கண்ணாடி லோடு ஏற்றிக்கொண்டு கேரளா நோக்கி லாரி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை முரளி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அவருடன் மாற்று ஓட்டுனரான பழனிச்சாமி இருந்துள்ளார். இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர் கணவாய் சோதனை சாவடி அருகே சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி முன்னால் சென்ற 3 சரக்கு வாகனங்கள் மற்றும் கண்டெய்னர் லாரி மீது அடுத்தடுத்து மோதி சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் கண்டெய்னர் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

இளம்பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கம்…. இரும்பு வியாபாரி மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள செங்கொடிபுரத்தில் 26 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள காடையாம்பட்டியில் வசிக்கும் பழைய இரும்பு வியாபாரியான ராமதாஸ்(34) என்பவருக்கும் இளம்பண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி ராமதாஸ் இளம்பெண்ணுடன் நெருக்கமாக பழகியுள்ளார். பின்னர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு இளம்பெண் கூறியதற்கு ராமதாஸ் மறுப்பு தெரிவித்து அவரை ஏமாற்றிவிட்டார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் தர்மபுரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மாமனாருக்கு இறுதி சடங்கு…. அழைத்து செல்ல மறுத்த 2-வது கணவர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரம் போடூர் காட்டுகொல்லை பகுதியில் மாதையன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ஜோதி(25) தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஜோதிக்கும், அவரது தாய்மாமாவான அன்பு என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து குடும்ப பிரச்சனை காரணமாக திருமணமான 1 1/2 ஆண்டுகளிலேயே ஜோதி தனது கணவரை விட்டு பிரிந்து பெற்றோர் வீட்டிற்கு வந்துவிட்டார். பின்னர் கடந்த 2 1/2 ஆண்டுகளுக்கு முன்பு ஜோதியை சாமிநாதன் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

அட்டகாசம் செய்யும் யானைகள்…. நஷ்டத்தில் தவிக்கும் விவசாயிகள்…. வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு…!!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மாமரத்துபள்ளம் கிராமத்தில் 400 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் விவசாயிகள் தக்காளி, சோளம், நெல், கம்பு உள்ளிட்ட பல்வேறு விளை பொருட்களை சாகுபடி செய்கின்றனர். இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் 3 யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து சாகுபடி செய்யப்பட்ட தக்காளி, நெல் உள்ளிட்ட பயிர்களை தின்றும், மிதித்தும் நாசம் செய்கிறது. இதனால் நஷ்டம் அடைந்து விவசாயிகள் மிகவும் வேதனையில் இருக்கின்றனர். இதுகுறித்து அறிந்த பாலக்கோடு வனத்துறையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த வேன்…. இடுபாடுகளில் சிக்கி அலறிய ஐயப்ப பக்தர்கள்…. போலீஸ் விசாரணை…!!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூரில் இருந்து 15-க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் வேனில் சபரிமலை நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்த பேருந்து தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாளையம்புதூர் தேசிய நெடுஞ்சாலை கூட்ரோடு அருகே சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் ஐயப்ப பக்தர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி அலறி சத்தம் போட்டனர். சிலர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து அறிந்த போலீசாரும், சுங்க சாவடி ரோந்து படையினரும் சம்பவ இடத்திற்கு […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

விடுதியில் 10- ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை…. கடிதத்தை கைப்பற்றிய போலீசார்…. பரபரப்பு சம்பவம்…!!!

பத்தாம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனுமந்தபுரம் பகுதியில் பெயிண்டரான ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி தீபா இறந்துவிட்டார். இந்த தம்பதியினருக்கு குரு பிரகாஷ்(15), மனோ(14) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இருவரும் அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் தங்கி இருந்து ராயக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் 10-ஆம் வகுப்பு மற்றும் 9-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளனர். […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

கால்வாய்க்குள் பாய்ந்த பேருந்து…. பயணிகள் உள்பட 3 பேர் படுகாயம்…. போலீஸ் விசாரணை….!!

மொபட் மீது மோதி தனியார் பேருந்து கால்வாயில் பாய்ந்த விபத்தில் 3 பேர் படுகாயமடைந்தனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மாரண்டஅள்ளி பகுதியில் இருந்து பயணிகளுடன் தனியார் பேருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை சரவணன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். கண்டக்டராக ரவி என்பவர் பணியில் இருந்துள்ளார். இந்நிலையில் கோடியூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அதே பகுதியில் வசிக்கும் திருப்பதி என்பவர் மொபட்டை தள்ளி சென்றார். திடீரென அவர் பேருந்துக்கு குறுக்கே வந்ததால் சரவணன் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

சாலையோரம் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை….!!

சடலமாக கிடந்த நபரின் விவரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரி-கிருஷ்ணகிரி சாலையோரத்தில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தர்மபுரி டவுன் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால் சடலமாக கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இதனையடுத்து போலீசார் அந்த நபரின் சடலத்தை கைப்பற்றி தர்மபுரி அரசு ஆஸ்பத்திரி […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

வேலை பார்த்து கொண்டிருந்த நபர்…. மிரட்டல் விடுத்த தொழிலாளி…. போலீஸ் விசாரணை….!!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள மாரண்டஅள்ளி இ.பி காலணியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் சிப்ஸ் கடை நடத்தி வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளியான திருமால் என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் குமார் கடையில் வேலை பார்த்து கொண்டிருந்த போது திருமால் அரிவாளுடன் சென்று உன்னை கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். மேலும் சமாதானப்படுத்த முயன்ற மாரண்டஅள்ளி பேரூராட்சி தலைவர் வெங்கடேசன், கவுன்சிலர் முனிராஜ் ஆகியோரிடமும் திருமால் தகராறு செய்துள்ளார். […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

3 பெண் குழந்தைகளை தவிக்க விட்டு…. ராணுவ வீரரின் மனைவி தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள எருக்கம்பட்டி கிராமத்தில் ராணுவ வீரரான பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குமுதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குமுதா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குமுதாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் குமுதா தற்கொலை செய்து […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“ஆக்கிரமிப்புகள் அகற்றம்”…. கால அவகாசம் கேட்ட வியாபாரிகள்….. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நல்லம்பள்ளியில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற உள்ளதால் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினர். ஆனால் சிலர் ஆக்கிரமிப்பை அகற்றவில்லை. இதனால் நெடுஞ்சாலைத்துறையினர் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சில வியாபாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ள கால அவகாசம் வழங்குமாறு கேட்டனர். அதற்கு ஏற்கனவே போதிய கால அவகாசம் வழங்கப்பட்டது என கூறி அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றியுள்ளனர்.

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

கொடூரம்….!! தொப்புள் கொடியுடன் ஏரியில் மிதந்த குழந்தை…. அதிர்ச்சி சம்பவம்…!!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நாய்க்கனூர் ஏரி வழியாக சில விவசாயிகள் விளை நிலங்களுக்கு சென்றுள்ளனர். அப்போது தண்ணீரில் குழந்தையின் உடல் மிதப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த விவசாயிகள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தொப்புள் கொடியுடன் தண்ணீரில் மிதந்த குழந்தையின் உடலை மீட்டனர். பின்னர் குழந்தையின் உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பிறந்து […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பிரபல கால்பந்து வீரரின் கட்அவுட்…. மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி…. சாதனை படைத்த அரசு பள்ளி மாணவர்கள்…!!!

தர்மபுரியில் மாவட்ட அளவில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் செல்லியம்பட்டி பகுதியில் இருக்கும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். இதனையடுத்து முதலிடம் பிடித்து சாதனை படைத்த மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் கால்பந்து போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். இந்நிலையில் மாணவர்களை வரவேற்கும் விதமாக பள்ளி மைதானத்தில் பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்சியின் உருவப்படம் அடங்கிய கட்அவுட் வைக்கப்பட்டுள்ளது. பின்னர் பள்ளியின் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு உதவி செய்வது போல் நடித்து…. வாலிபர்கள் செய்த காரியம்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் உறவினர் வீட்டில் தங்கி இருந்து இண்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல சிறுமி சைக்கிளில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். இவர் இண்டூர் பேருந்து நிறுத்தம் தாண்டி சென்ற போது திடீரென சாலையில் மயங்கி விழுந்தார். அப்போது அந்த […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மயங்கி விழுந்த பிறகு நடந்தது என்ன…? மாணவி கூறிய அதிர்ச்சி தகவல்…. போலீஸ் விசாரணை….!!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள நல்லம்பள்ளி அருகே இருக்கும் கிராமத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் உறவினர் வீட்டில் தங்கியிருந்து அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். தினமும் சிறுமி சைக்கிளில் 3 கிலோ மீட்டர் தூரம் பயணித்து பள்ளிக்கு சென்ற வருவது வழக்கம். கடந்த 16-ஆம் தேதி இண்டூர் பேருந்து நிறுத்தத்தை தாண்டி சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது திடீரென சிறுமி மயங்கி விழுந்தார். பின்னர் மாணவி பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை…. என்ன காரணம்…? கதறும் குடும்பத்தினர்…!!!

மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் அருள்மணிகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிர்மல் குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சேலம் அருகே இருக்கும் தனியார் மருத்துவக் கல்லூரியில் பிசியோதெரபி இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் கல்லூரிக்கு அருகிலேயே வீடு எடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில் நிர்மல் குமார் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெற்றோரிடம் செல்போனில் பேசியுள்ளார். நேற்று நீண்ட நேரமாகியும் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

சுக்குநூறாக நொறுங்கிய அரசு பேருந்து…. 30-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!!

அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 30 பயணிகள் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மஞ்சவாடியில் இருந்து அரசு டவுன் பேருந்து அரூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை சிவகுமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். கண்டக்டராக ஆதிமூலம் என்பவர் இருந்துள்ளார். இந்நிலையில் சேலம்- அரூர் நெடுஞ்சாலை தண்ணீர் தொட்டி பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது அரூர் நோக்கி வேகமாக வந்த தனியார் பேருந்து அரசு பேருந்தின் பின்புறம் பயங்கரமாக […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தேர்வில் குறைவான மதிப்பெண்…. பள்ளி மாணவி எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!!

பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள பெரும்பாலை ஆத்துக்காடு பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவ்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருந்துள்ளனர். மூத்த மகளான மோனிகா(16) மேச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் 11- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் படிப்பில் கவனம் செலுத்தாத மோனிகாவுக்கு பெற்றோர் அறிவுரை வழங்கியுள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற தேர்வில் மோனிகா மதிப்பெண் குறைவாக […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பேருந்து நிலையத்தில் விஷம் குடித்து மயங்கிய வாலிபர்…. பரபரப்பு சம்பவம்…!!!

பேருந்து நிலையத்தில் வாலிபர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்ட பேருந்து நிலையத்தில் பயணிகள் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் திடீரென விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக வாலிபரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தியதில், அந்த வாலிபர் குட்டூர் பகுதியை சேர்ந்தவர் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“ஒரு லட்ச தீப விழா”….. சாமிக்கு சிறப்பு அலங்காரம்….. கோவிலில் திரண்ட பக்தர்கள்….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள விருப்பாச்சிபுரத்தில் ஸ்ரீ ராகவேந்திரா சாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு நேற்று ஒரு லட்சம் தீப விழா நடைபெற்றுள்ளது. இதனை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து கார்த்திகை தாமோதர ஹோமம், துளசி பூஜை, அலங்கார சேவை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பக்தர்கள் கோவில் முழுவதும் ஒரு லட்சம் விளக்கேற்றி வழிபாடு நடத்திய பிறகு மகா தீபாராதனையும் உபகார பூஜையும் நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பணத்தை எடுத்து வந்த டாஸ்மாக் ஊழியர்…. மர்ம நபரின் கைவரிசை…. போலீஸ் விசாரணை…!!!

பணத்தை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பெண்ணாகரம் பகுதியில் டாஸ்மாக் ஊழியரான கணேஷ் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவர் தர்மபுரியில் இருக்கும் வங்கியில் இருந்து 2 லட்ச ரூபாய் பணத்தை எடுத்துள்ளார். இதனையடுத்து பணத்தை ஸ்கூட்டரில் வைத்துவிட்டு பேருந்து நிலையம் அருகே இருக்கும் ஹோட்டலில் கணேஷ் பிரபு சாப்பிடுவதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது ஸ்கூட்டரின் சீட்டை சேதப்படுத்தி மர்ம நபர்கள் 2 லட்ச […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பாலத்து முனியப்பன் கோவிலில்….. உண்டியல் எண்ணும் பணி…. தன்னார்வலர்கள் பங்கேற்பு….!!!!

பாலத்து முனியப்பன் கோவிலில் உண்டியல் எண்ணும் பணி சிறப்பாக நடந்து முடிந்தது. தர்மபுரி மாவட்டத்தில் நாட்டறம்பள்ளியில் பாலத்து முனியப்பன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி தொடங்கப்பட்டது. இந்த பணி முழுவதும் வீடியோவாக எடுக்கப்பட்டது. மேலும் இந்தப் பணியில் தன்னார்வலர்கள், பக்தர்கள் என பல கலந்து கொண்டு உண்டியல் பணத்தை எண்ணி உள்ளனர். இதில் 3,72,298 ரூபாய் காணிக்கையாக வந்திருந்தது. இந்த பணியின் போது உதவி ஆணையர் உதயகுமார் மற்றும் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் முடங்கிய கிராம மக்கள்…. தெரு நாய்கள் கடித்து 8 பேர் காயம்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!!

தெரு நாய்கள் கடித்து 8 பேர் காயமடைந்த சம்பவம் கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பூனையானூரில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். சமீபகாலமாக அந்த பகுதியில் தெரு நாய்களின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த நாய்கள் தெருக்களில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளை துரத்தி கடிக்கிறது. நேற்று முன்தினம் தெரு நாய்கள் கிராமத்தை சேர்ந்த ஜோதி, சின்னக்கண்ணு உள்பட 8 பேரை கடித்து குதறியது. இதனால் காயமடைந்த […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

விரட்டி கொட்டிய தேனீக்கள்…. காயமடைந்த 30 பணியாளர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!!

தேனீக்கள் கொட்டியதால் 30 ஊரக வேலை உறுதித் திட்ட பணியாளர்கள் காயமடைந்தனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஆர்.கோபிநாதம்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டப்பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த பணியில் 100-க்கும் மேற்பட்ட ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். நேற்று வழக்கம்போல பணியாளர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அருகில் இருந்த மர சருகுகளுக்கு தீ வைத்துள்ளனர். அப்போது மரத்தில் கூடு கட்டியிருந்த தேனீக்கள் கலைந்து தொழிலாளர்களை விரட்டி கொட்டின. இதனால் […]

Categories
Uncategorized தர்மபுரி மாவட்ட செய்திகள்

உடனடியா நடவடிக்கை எடுங்க…. சாலையில் படுத்து போராடிய லாரி டிரைவர்…. தர்மபுரியில் பரபரப்பு….!!!!

தர்மபுரி மாவட்டத்தில் வீரமணி என்ற லாரி டிரைவர் வசித்து வருகின்றார். வீரமணிக்கும் அவருடன் பிறந்த சகோதர சகோதரிகளுக்கும் இடையே பூர்வீக சொத்தை பிரித்துக் கொள்வதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனையில் வீரமணியை உடன் பிறந்தவர்கள் தாக்கியுள்ளனர். இதனால் பலத்த காயமடைந்த வீரமணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த நிலையில் வீரமணி நேற்று மாலை மருத்துவமனையில் இருந்து வெளியே வந்து திடீரென சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அப்பகுதி முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

புதிய வழித்தடத்தில்…. பில்பருத்தி வரை அரசு பேருந்து இயக்கம்…. தர்மபுரி மக்கள் மகிழ்ச்சி….!!!!

தர்மபுரி மாவட்டத்தில் கடத்தூர் பகுதி வழியாக கேத்துரெட்டிப்பட்டி வரை அரசு டவுண் பேருந்து இயங்கி வந்தது. இந்த பஸ்ஸை பில்ருதி வரை நீட்டுப் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று கடத்தூர் வழித்தடத்தில் டவுண் பேருந்து நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த தொடக்க விழா பில்பருத்தி பகுதியில் வைத்து நடைபெற்றது. இதில் தர்மபுரி அரசு போக்குவரத்து பொது மேலாளர் ஜீவரத்தினம் அவர்கள் தலைமை தாங்கியுள்ளார். மேலும் எம்.பி செந்தில் குமார் புதிய வழித்தடத்தில் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பழுதை சரி செய்ய முயன்ற விவசாயிக்கு…. நேர்ந்த முடிவு…. கண்ணீரில் குடும்பத்தினர்….!!!!

விவசாயி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் கோணங்கிஅள்ளி பகுதியில் முனுசாமி என்ற விவசாயி வசித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் தன்னுடைய விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அவர் மின் மோட்டாரில் ஏற்பட்டுள்ள பழுதை சரி செய்ய முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவரை மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் முனுசாமி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்துள்ளார். இவரின் சத்தம் கேட்ட அக்கப் பக்கத்தினர் விரைந்து வந்து அவரை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக்கத்தில் 17ஆவது புதிய சரணாலயம் – அரசாணை வெளியீட்டு அறிவிப்பு …!!

ஓசூர் அருகே வனவிலங்கு சரணாலயம் அமைக்க அரசு உத்தரவை பிறப்பித்து இருக்கிறது. தமிழகத்தினுடைய 17 வது வனவிலங்கு சரணாலயமாக ”காவிரி தெற்கு காட்டூர்”  வனவிலங்கு சரணாலயத்தை அறிவித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் இந்த சரணாலயம் ஆனது அமைய இருக்கின்றது. ஏற்கனவே இதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. காவிரி வடக்கு வனவிலங்கு சரணாலயத்தின் தொடர்ச்சியாக தெற்கு சரணாலயம் அமைய உள்ளது. 686.406 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான காட்டுப்பகுதி காவேரி தெற்கு காட்டுயிர் சரணாலயம் என்று […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“போலியான குறுந்தகவல்” மூலம் டாக்டரிடம் 4 3/4 லட்ச ரூபாய் மோசடி…. சைபர் கிரைம் போலீஸ் அதிரடி…!!!!

தர்மபுரியைச் சேர்ந்த டாக்டர் ஒருவர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு வைத்துள்ளார். இந்நிலையில் கே.ஒய்.சி அப்டேட் செய்ய வேண்டும் எனவும், இல்லையென்றால் வங்கி கணக்கு முடக்கப்படும் எனவும் டாக்டரின் செல்போனிற்கு குறுந்தகவல் வந்தது. இதனை நம்பிய டாக்டர் குறுந்தகவலில் இருந்த லிங்கை கிளிக் செய்து, வங்கி கணக்கு விவரம் மற்றும் ஓ.டி.பி எண் ஆகியவற்றை பதிவு செய்துள்ளார். சிறிது நேரத்தில் வங்கிக் கணக்கிலிருந்து 4 லட்சத்து 70 ஆயிரத்து 829 ரூபாய் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது. இதனால் […]

Categories

Tech |