சுதந்திர தினத்தை முன்னிட்டு வீட்டில் கருப்பு கொடி ஏற்றிய மக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஆட்டுக்காரன்பட்டி அருந்தியர் காலணியில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு கடந்த 1998-ஆம் ஆண்டு தமிழக அரசு சார்பில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. ஆனால் இன்று வரை அதிகாரிகள் நிலத்தை அளவீடு செய்து கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் பலமுறை கூறிவிட்டனர். ஆனால் இதுவரை […]
Tag: #தர்மபுரி
லாரி மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சில்லாராஅள்ளி கிராமத்தில் பிரசித்தி பெற்ற பச்சையம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த சில நாட்களாக திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று சாமி ஊர்வலம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் கோவிலில் இருந்து அம்மன் சிலையை சரக்கு வேனில் எடுத்துக்கொண்டு கடத்தூர்-பொம்மிடி சாலையில் ஊர்வலமாக சென்று கொண்டிருந்தனர். இந்த வேனை செந்தில்குமார் என்பவர் ஓட்டி வந்துள்ளார். […]
மனைவியை அரிவாளால் வெட்டிய வாலிபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சென்றாயன்கொட்டாய் கிராமத்தில் கூலி தொழிலாளியான பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிமேகலை என்ற மனைவியும், 4 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் பெருமாள் மணிமேகலையின் மீது சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இதனால் மணிமேகலை தனது குழந்தைகளுடன் தனது பெற்றோர் வீட்டில் தங்கி வருகிறார். இந்நிலையில் நேற்று பெருமாள் தனது மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது தனது மணிமேகலையிடம் தகராறு […]
தேசிய கொடியை உருவாக்கி சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ விஜய் வித்யாஷ்ரம் சி.பி.எஸ்.இ. பள்ளியில் 75-வது சுதந்திர தின விழா நடைபெற்றது. இதில் பள்ளி தலைவர் டி.என்.சி. மணிவண்ணன், தாளாளர் செல்வி மணிவண்ணன், துணை தலைவர் தீபக் மணிவண்ணன், செயலாளர் டாக்டர் ராம்குமார், மருத்துவர் திவ்யா ராம்குமார், பள்ளி டீன் கவுசல்யா, சம்பத்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் 120 மாணவர்கள் சேர்ந்து 75 நிமிடத்தில் 15 […]
தவறி விழுந்து 2-ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள லிங்கநாயக்கன்அள்ளி கிராமத்தில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சஷ்டிநாதன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சஷ்டிநாதன் அதே பகுதியில் அமைந்துள்ள ஒரு அரசு தொடக்கப்பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வந்தார். இதனையடுத்து நேற்று முன் தினம் இவர்களது நிலத்தில் டிராக்டர் மூலம் உழவு பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது சஷ்டிநாதன் டிராக்டரில் ஏறி அமர்ந்துள்ளார். இந்நிலையில் அவர் திடீரென நிலை […]
சட்டவிரோதமாக மண் அள்ளிய 3 லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் அன்னசாகரம் என்ற ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியிலிருந்து விவசாயிகள் களிமண் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. ஆனால் சிலர் களிமண்ணை அனுமதி பெறாமல் அள்ளி விற்பனை செய்கின்றனர். இந்நிலையில் நேற்று இந்த ஏரிக்கரையில் 3 வாலிபர்கள் வந்துள்ளனர். அப்போது அங்கு சிலர் மண் அள்ளி கொண்டிருந்தனர். இதனை பார்த்த அவர்கள் லாரியை அங்கே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து அந்த வாலிபர்கள் […]
விவசாயியை அரிவாளால் வெட்டிய நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் விவசாயியான பரமசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கர்ணன் என்பவருக்கும் இடையே நில பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2010 -ஆம் ஆண்டு கர்ணன் பரமசிவத்தை அரிவாளால் வெட்டியுள்ளார். இதுகுறித்து பரமசிவம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு […]
கிணற்றில் தவறி விழுந்த லாரியை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி மீட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வாழைத்தோட்டம் பகுதியில் லாரி ஓட்டுநரான ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று கரகத அள்ளி பகுதியில் அமைந்துள்ள விவசாய நிலத்திற்கு தனது லாரியில் மண் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார். இந்நிலையில் ராதாகிருஷ்ணன் மண்ணை போட்டுவிட்டு லாரியை பின்னோக்கி எடுத்துள்ளார். அப்போது திடீரென லாரி அருகில் இருந்த 20 அடி ஆழம் முள்ள கிணற்றில் விழுந்தது. இதனையடுத்து ராதாகிருஷ்ணன் சத்தம் […]
பெண்ணிற்கு பாலியல் தொல்லை அளிக்க வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 17 வயதுடைய இளம்பெண் ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்து […]
4 மாத குழந்தை திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மகேந்திரமங்கலம் பகுதியில் முனியப்பன்-சாமுண்டீஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பிறந்து 4 மாதம் ஆன ஆண் குழந்தை ஒன்று இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று குழந்தைக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அந்த குழந்தையை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஓசூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் […]
குட்கா கடத்தி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொன்னாகரம் பகுதியில் சட்டவிரோதமாக போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக துணை சூப்ரண்டு இமயவர்மனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் பருவதன அல்லி பிரிவு சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் முருகன் என்பவர் சட்டவிரோதமாக பெங்களூருவில் இருந்து குட்கா கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. […]
மாட்டு வியாபாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு பகுதியில் மாட்டு வியாபாரியான அம்சாத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த சில நாட்களாக தொழில் நஷ்டம் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த அம்சாத் நேற்று திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு […]
பிறந்து 20 நாட்கள் ஆன குழந்தை திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள திருமல்வாடி பகுதியில் தொழிலாளியான சந்தோஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேன்மொழி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்நிலையில் நேற்று அந்த குழந்தைக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் குழந்தையை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் […]
வனப்பகுதியை ஆக்கிரமித்த 2 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் மூக்கனூர் பகுதியில் அமைந்துள்ள காப்பு காட்டில் வனத்துறைக்கு சொந்தமான நிலத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். . இதுகுறித்து சிலர் வனத்துறையினரிடம் புகார் செய்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வனத்துறையினர் ஆக்கிரமிப்பு செய்த பகுதிகளை பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து அகற்ற வேண்டும் என கூறினர். ஆனால் பொதுமக்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை. இந்நிலையில் நேற்று வனசரக அலுவலர் ஆனந்தகுமார் தலைமையிலான வனத்துறையினர் அப்பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது அதே பகுதியை […]
நாயை அடித்து கொன்று விட்டு ஆடுகளை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சவுளுபட்டி கிராமத்தில் விவசாயியான சத்யராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் ஆடு, மாடு, கோழி போன்றவற்றை வளர்த்து வருகிறார். இதற்கு பாதுகாப்பாக நாய் ஒன்றையும் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு இவரின் தோட்டத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் ஆட்டை திருட முயன்றுள்ளனர். அப்போது நாய் குறைத்துள்ளது. […]
திடீரென கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மாமரத்துப்பள்ளம் கிராமத்தில் கட்டிட மேஸ்திரியான தனசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு சங்கீதா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். தற்போது சங்கீதா கர்ப்பமாக இருந்துள்ளார்.இந்நிலையில் நேற்று திடீரென சங்கீதாவிற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த தனசேகர் சங்கீதாவை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் சங்கீதா கர்ப்பமாக […]
மழை வேண்டி கிராம மக்கள் சிறப்பு பூஜைகள் செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்திற்குட்பட்டு 18 கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் ஆண்டுதோறும் மழை வேண்டி மாரியம்மன் கோவிலில் திருவிழா நடத்துவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் நேற்று திருவிழா நடைபெற்றது. இதில் 18 கிராமங்களை சேர்ந்த மலைவாழ் மக்கள் தாங்கள் கிராமத்தில் உள்ள அம்மன் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். […]
பள்ளியில் மாணவர்கள் குழுமம் தொடக்க விழா நடைபெற்றுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அதியமான்கோட்டை பகுதியில் அமைந்துள்ள செந்தில் பப்ளிக் பள்ளியில் மாணவர்கள் குழுமம் தொடக்க விழா நடைபெற்றது. இதில் கல்விக் குடும்பங்களின் தலைவர் செந்தில் கந்தசாமி, துணைத் தலைவர் மணிமேகலை கந்தசாமி, செயலாளர் கே. தனசேகர், தாளாளர் திப்தி தனசேகர் , மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன், பள்ளி நிர்வாக அலுவலர் கார்த்திகேயன், முதன்மை முதல்வர் சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் 2022-2023 […]
வெள்ளத்தால் சேதமடைந்த பகுதிகளை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலா தளமாக விளங்குகிறது. தற்போது கர்நாடகா மற்றும் தமிழ்நாடு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றின் கரை ஓரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்தது. இந்நிலையில் எம். எல் .ஏ. ஜி.கே. மணி, வட்டார வளர்ச்சி […]
தர்மபுரி மாவட்ட ஒகேனக்கல் அருவிக்கு செல்லும் நடைபாதின் அருகே குன்று அமைந்துள்ளது. இந்த குன்றில் பொன்னாகரம் அருகில் உள்ள அத்திமரத்தூர் கிராமத்தில் குருசாமி(75) என்பவர் வசித்து வருகிறார். அவருடைய மனைவி பங்காரு அம்மாள்(72). இந்நிலையில் வயதான தம்பதி ஓகேனக்கல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக ஆற்றின் நடுவில் அமைந்துள்ள முருகன் கோவில் சிக்கிக்கொண்டனர். அங்கிருந்து அவர்கள் வெளியேற முடியாமல் நேற்று மதியம் தவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மீட்பு குழுவினர், வருவாய் துறை ஊரக வளர்ச்சித் […]
ரூ.1 கோடி கேட்டு பிளஸ்-2 மாணவனை கடத்திய மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஆவின் நகர் பகுதியில் பிளஸ்-2 படித்து வரும் 17 வயது வாலிபர் வசித்து வருகிறார். இந்நிலையில் மாணவனின் வீட்டிற்கு அவருடைய உறவினர் ஒருவர் வந்துள்ளார். அவர் பெற்றோரிடம் மாணவனை சினிமாவுக்கு அழைத்துச் செல்வதாக கூறி அழைத்து சென்றுள்ளார். இதனையடுத்து தர்மபுரி நகரில் உள்ள ஒரு தியேட்டரில் 2 பேரும் படம் பார்த்து விட்டு மோட்டார் சைக்கிளில் […]
விஷ காய்களை தின்ற 5 சிறுவர் சிறுமிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சின்னதோப்பு பகுதியில் 3 சிறுவர்கள் மற்றும் 2 சிறுமிகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது இந்த சிறுவர்கள் அருகில் கீழே கிடந்த விஷ காய்களை தின்றுள்ளனர். இதனால் அவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனை பார்த்த அவரது பெற்றோர் அவர்களை உடனடியாக மீட்டு தர்மபுரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு […]
வினாடிக்கு 40 ஆயிரம் கன அடி தண்ணீர் அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஓகேனக்கலுக்கு தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் நேற்று முன்தினம் 18 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. இந்நிலையில் நேற்று காலை 24 ஆயிரம் கன அடியாக தண்ணீர் அதிகரித்தது. இதனையடுத்து மாலை 1 வினாடிக்கு 40 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது. இதனால் மெயின் அருவி, சீனிபாலஸ், ஐந்தருவி […]
மாவட்ட ஆட்சியர் சாந்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் சாந்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் 1 மாணவர் விடுதி, 3 மாணவிகள் விடுதி என மொத்தம் 4 விடுதிகள் செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் சேர்வதற்கு விரும்பும் மாணவர்-மாணவிகள் அந்தந்த விடுதி காப்பாளரிடம் விண்ணப்பங்களை பெற்று அதில் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை குறிப்பிட வேண்டும். மேலும் விண்ணப்பத்தில் மாணவர்கள் தங்களது புகைப்படத்தை […]
வார்டு உறுப்பினர்கள் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலை ஊராட்சி மன்றத்தில் தலைவராக கஸ்தூரி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த வார்டு உறுப்பினர்கள் கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி தர்ணாவில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணி, கள ஆய்வாளர் சசிதரன், ஊராட்சி மன்ற தலைவர், செயலாளர் முருகன் உள்ளிட்ட பலர் சம்பவ […]
ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு தர்மபுரி மாவட்டத்திற்கு வருகிற 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு வருகிற 3ஆம் தேதி தர்மபுரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளூர் விடுமுறை ஈடுகட்டும் வகையில் வருகிற 27 ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த தினத்தில் பள்ளி, கல்லூரிகள் செயல்படாது எனவும் அரசு நிறுவனங்கள் செயல்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. […]
2 லாரிகள் மோதி கொண்ட விபத்தில் 2 பேர் காயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நல்லம்பள்ளி இரட்டை பாலம் சாலையில் பாலு என்பவர் மத்திய பிரதேசத்தில் இருந்து லாரியில் வந்து கொண்டிருந்தார். இந்த லாரியில் கிளீனராக நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சீனிவாசன் என்பவரும் வந்துள்ளார். இந்நிலையில் பாலுவின் லாரி திடீரென அவ்வழியாக வந்த மற்றொரு லாரியின் மீது மோதியது. இந்த விபத்தில் பாலு, சீனிவாசன் ஆகிய 2 பேரும் காயம் அடைந்தனர். […]
உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் 40 நாட்களுக்கு பிறகு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பட்டக்காரன் கொட்டாய் பகுதியில் சத்யபிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிறைமாத கர்ப்பிணியான பரமேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 19-ஆம் தேதி பரமேஸ்வரி பிரசவத்திற்காக ஏரியூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் பரமேஸ்வரிக்கு திடீரென ரத்தப்போக்கு ஏற்பட்டதால் அவரை மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் […]
டயர் வெடித்து தனியார் பேருந்து விபத்துக்குள்ளானதில் 6 பயணிகள் காயமடைந்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சேலம் நோக்கி தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து ராஜசேகர்(34) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கோட்டைமேடு பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக பேருந்தின் முன் சக்கரம் வெடித்து தாறுமாறாக ஓடியது. அப்போது பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து பயணிகள் மீது விழுந்தது. இதில் துரைசாமி(40), நவீன்குமார்(38), கிருஷ்ணமூர்த்தி(23), முனுசாமி(52), சின்னபையன்(59), […]
செல்லியம்மன் கோவிலுக்கு சொந்தமான 9 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள குமாரசாமிப்பேட்டை பகுதியில் செல்லியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான நிலம் மற்றும் கடைகள் நேதாஜி பைபாஸ் ரோட்டில் உள்ளது. இந்த இடத்தில் பல வருடங்களாக சோலையப்பன் என்பவர் 9 கடைகள் கட்டி பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில் சோலையப்பன் கடைகளுக்கு சில ஆண்டுகளாக முறையான வாடகை செலுத்தாமல் இருந்துள்ளார். இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சாதகமான தீர்ப்பு வந்தது. இதனைதொடர்ந்து […]
கர்நாடக மற்றும் கேரள மாநிலங்களில் சென்ற ஒரு மாதத்திற்கு மேலாக தென் மேற்கு பருவமழை பெய்ததால் கர்நாடக மாநிலத்திலுள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளிலிருந்து உபரிநீர் தமிழகத்திற்கு திறந்துவிடப்பட்டது. இதன் காரணமாக ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கானது ஏற்பட்டது. காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் மழைபெய்வது நின்றதாலும், அணைகளிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு குறைந்ததாலும் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக குறைய துவங்கியது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 70 ஆயிரம் கன அடி நீர் வந்துகொண்டிருந்தது. இந்த நீர்வரத்து […]
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின் அளவு குறைந்துள்ளதால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 70 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. கர்நாடகம் மற்றும் கேரள மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தென்மேற்கு பருவமழை பெய்ததால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 17 ஆயிரம் கனஅடி உபரி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டது. இதனால் ஒகேனக்கலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தற்போது மழையின் அளவு குறைந்துள்ளதால் […]
டாஸ்மாக்கை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள அதியமான் கோட்டையில் மது கடைகள் மற்றும் பார்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த டாஸ்மாக் பார் சாலையோரம் செயல்பட்டு வருவதால் அந்த வழியாக செல்லும் பெண்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவிகளுக்கு இடையூறாக இருக்கின்றன. இதனால் அப்பகுதி பொதுமக்கள் டாஸ்மாக்கை மூடக் கோரி டாஸ்மாக் பார் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதியமான்கோட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]
ஃபேன்சி வியாபாரியை கத்தியால் குத்தி கொலை செய்த தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள விடிவெள்ளி நகரில் முனியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஃபேன்ஸி வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஊர் ஊராக ஃபேன்ஸி பொருட்களை இருசக்கர வாகனத்தில் வைத்துக் கொண்டு வியாபாரம் செய்து வந்துள்ளார். இவருக்கு சத்யா என்ற மனைவியும், திவ்யதர்ஷினி என்ற மகளும், ஆகாஷ் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் முனியப்பனும் விடிவெள்ளிநகரில் வசிக்கும் ஈஸ்வரன் என்ற தொழிலாளியும் உறவினர்கள். […]
லாரிகள்-கார், அரசு பேருந்து அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து ஈரோடு மாவட்டத்திற்கு ஆயில் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை ஆந்திராவை சேர்ந்த டிரைவர் நரசிம்மையா ஓட்டி வந்துள்ளார். இவருடன் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ரமணன் மாற்று டிரைவராக உடன் வந்துள்ளார். இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர் கணவாய் வழியாக சென்று கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி முன்னால் சென்ற கார் […]
கல்லூரி மாணவியுடன் விஷம் குடித்து காதலனும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள கொல்லப்பட்டி பகுதியில் முனியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சினேகா என்ற மகள் இருந்துள்ளார். இவர் பாலக்கோடு பகுதியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவரும் குளிக்காடு பகுதியில் வசிக்கும் தமிழரசு என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதனையறிந்த மாணவியின் பெற்றோர் மகளுக்கு வேறு இடத்தில் திருமணம் செய்ய ஏற்பாடு செய்திருந்தனர். இதனால் இவர்கள் இருவரும் வீட்டை […]
தர்மபுரி மாவட்டத்தில் படித்த வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சாந்தி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் சார்பாக படித்த வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி மாதம் ஒன்றுக்கு எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெறாதவர்களுக்கு ₹200, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300, மேல்நிலைக் கல்வி படித்தவர்களுக்கு ரூ.400, பட்டதாரிகளுக்கு 600 வழங்கப்பட்டு வருகிறது. […]
கர்நாடக மற்றும் கேரளமாநில பகுதிகளில் சென்ற சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக மாநிலத்திலுள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. இந்த அணைகளின் பாதுகாப்பு கருதி உபரி நீர் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. அந்த வகையில் கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து வினாடிக்கு 26 ஆயிரத்து 143 கன அடி தண்ணீரும், கபினி அணையிலிருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி தண்ணீரும் என மொத்தம் வினாடிக்கு 51 ஆயிரத்து 143 […]
வீட்டிற்குள் புகுந்த பாம்பை நீண்ட நேரம் போராடி பிடித்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள உங்கரானஅள்ளி பகுதியில் ராஜகோபால் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டில் நேற்று அருகில் இருக்கும் வனப்பகுதியில் இருந்து நல்ல பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜகோபாலின் குடும்பத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி அந்த பாம்பை பிடித்தனர். அதன் பின்னர் […]
மலை கிராம மக்களுக்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஏரியூர் ஊராட்சி ஒன்றியம் சிகரலஅள்ளி மலைக்கிராமத்திற்கு மாவட்ட ஆட்சியர் சாந்தி நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டு அங்குள்ள இருளர் இன மக்களிடம் கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவர் பேசியதாவது, தமிழக அரசு மக்களுக்கான பொருளாதார மேம்பாட்டிற்காகவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், அனைவருக்கும் முழுமையான கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை […]
கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடிய விபத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதி டிரைவர் உள்பட 5 பேர் காயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் ஒசகோட்டாவில் இருந்து லாரி ஒன்று இரும்பு காயில் ரோல் பாரம் ஏற்றிக்கொண்டு தர்மபுரி மாவட்டத்திலுள்ள கணை தொப்பூர் கணவாய் வழியாக பெருந்துறைக்கு சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள உத்தனப்பள்ளி பகுதியில் வசிக்கும் சிவராஜ் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் தொப்பூர் கணவாய் இரட்டை பாலம் அருகில் […]
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கல் நீர்வரத்து 5 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. கேரள மாநிலத்தில் கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீரும், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 1500 கனஅடி நீரும் பாதுகாப்பு கருதி திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் தர்மபுரி […]
மீன் விற்பனை நிலையங்களில் திடீரென நடந்த ஆய்வில் 10 கிலோ கெட்டுப் போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள அரூர் நகரில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் பானு சுஜாதா தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆனந்தன், கந்தசாமி ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆத்தோர வீதி, வர்ண தீர்த்தம், திரு.வி.க. நகர் பகுதிகளில் உள்ள மீன் விற்பனை நிலையங்களில் திடீரென ஆய்வில் ஈடுபட்டனர். அந்த ஆய்வில் கடைகளில் கெட்டுப்போன மீன்களை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து கெட்டுப்போன […]
ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த காட்டு யானைகளை வனத்துறையினர் விரட்டியடித்தனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள தாசம்பட்டி, கோடுப்பட்டி, பவளந்தூர் ஆகிய பகுதிகள் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளன. இந்நிலையில் திகிலோடு கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வனப்பகுதியிலிருந்து 2 காட்டு யானைகள் சுற்றி திரிந்தன. இந்த யானைகளை கிராம மக்கள் விரட்டினர். இதனையடுத்து இந்த யானைகள் அருகில் உள்ள தாசம்பட்டி, பவளந்தூர் ஆகிய கிராமங்களுக்குள் புகுந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் அலறியடித்து ஓடினர். இதுகுறித்து கிராம […]
தர்மபுரி மாவட்டம் குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்திலுள்ள சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன திருவிழா சென்ற 3ஆம் தேதி துவங்கியது. இந்த விழாவை முன்னிட்டு மாணிக்கவாசகர் குருபூஜை, திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியானது நடந்தது. இதையடுத்து மாணிக்கவாசகர் திருவீதி உலா நடந்தது. அதன்பின் திருநெறிய தெய்வத்தமிழ் வழிபாட்டு சபையினரால் திருமுறை மற்றும் திருப்புகழ் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. அதனை தொடர்ந்து நால்வர் திருவீதி உலாவும், அபிஷேக பொருட்கள் வரிசை அழைப்பும் நடந்தது. பின் […]
தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, விவசாயிகள் விளைவிக்கும் பருத்தியை தரகு கமிஷன் இல்லாமல் நல்ல விலைக்கு விற்பனை செய்து பயனடைய அரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெறும் மறைமுக ஏலத்திற்கு கொண்டுவரமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த மறைமுக ஏலம் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நடைபெறும். இந்த ஏலத்தில் தர்மபுரி மாவட்டம் மற்றும் கொங்கணாபுரம், ஊத்தங்கரை, செங்கம் பகுதி பருத்தி வியாபாரிகள் பருத்தி அறவை மில் வியாபாரிகள் கலந்து கொள்கின்றார்கள். மேலும் […]
மருந்து கடையில் திருடிய 2 சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் முகமதுபாயிக் என்பவர் வசித்து வருகிறார். இவர் தடங்கம்-சோகத்தூர் சாலையில் மருந்து கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் முகமதுபாயிக் வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனையடுத்து மறுநாள் கடைக்கு வந்து பார்த்த போது பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு வைத்திருந்த ரூ.2 ஆயிரம் மற்றும் மருந்து பொருட்கள் திருட்டு போனது தெரியவந்துள்ளது. இதுகுறித்து முகமதுபாயிக் […]
வாலிபரிடம் பண மோசடி செய்த மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அதியமான்கோட்டை பகுதியில் விவசாயியான பாபு என்பவர் வசித்து வருகிறார். இவரை செல்போனில் மூலம் தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் ஒருவர் பாபுவிற்கு பரிசு விழுந்திருப்பதாகவும், அதற்கான கட்டணமாக 6 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய் கட்டுமாறும் கூறியுள்ளார். இதனை நம்பிய பாபு அந்த மர்ம நபரின் வங்கி கணக்கிற்கு 6 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய் பணத்தை […]
பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பட்டுகோணாம் பட்டியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஸ்வரி(45) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ராஜேஸ்வரி பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த ராஜேஸ்வரி தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு […]
கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒடசல்பட்டி புதூர் கிராமத்தில் மாரியப்பன்-மாசிலாமணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஹரிஷ், கதிர்வேல் என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ஹரீஷ் மற்றும் கதிர்வேல் ஆகிய 2 பேரும் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தனர். அப்போது திடீரென அருகில் இருந்த கிணற்றில் ஹரீஷ் தவறி விழுந்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாசிலாமணி மற்றும் கதிர்வேல் ஆகிய […]