ஆப்கானிஸ்தான் நாட்டில் ஒரு கல்வி நிறுவனத்தில் தற்கொலை படை பயங்கரவாதி வெடிகுண்டுகளை வெடிக்க செய்ததில் 32 நபர்கள் பரிதாபமாக உடல் சிதறி பலியாகியுள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் தஷ்ட்-இ-பார்ச்சி என்னும் நகரில் இயங்கி வரும் கல்வி நிறுவனத்திற்குள் தற்கொலை படை பயங்கரவாதி ஒருவர் திடீரென்று புகுந்துள்ளார். அதனை தொடர்ந்து தன் உடலில் கட்டி இருந்த வெடிகுண்டுகளை அவர் வெடிக்க செய்ததில் பயங்கர குண்டு வெடிப்பு ஏற்பட்டது. இதில் 32 நபர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் சிதறி பலியாகினர். […]
Tag: தற்கொலைப்படை தாக்குதல்
பாகிஸ்தான் நாட்டின் பல்கலைகழகத்தின் வாசலுக்கு அருகில் பெண் ஒருவர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதில் சீனாவை சேர்ந்த மூன்று பேர் பலியாகியுள்ளனர். பாகிஸ்தான் நாட்டில் இருக்கும் பலுசிஸ்தான் மாகாணத்தில் பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் என்னும் கிளர்ச்சிகுழு இயங்கி வருகிறது. பாகிஸ்தான் அரசு, இந்த குழுவை பயங்கரவாத குழுவாக அறிவித்திருக்கிறது. பாகிஸ்தான் பாதுகாப்பு படை மற்றும் இந்த கிளர்ச்சியாளர்கள் குழுவிற்கு இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டுவருகிறது. இதனிடையே கராச்சி நகரத்தில் இருக்கும் கராச்சி பல்கலைகழகத்தில் சீன மொழியை கற்றுக்கொடுக்கக் கூடிய […]
உகாண்டா நாட்டில் அதிரடியாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகள் 5 பேரை சுட்டுக் கொன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உகாண்டா என்ற கிழக்கு ஆப்பிரிக்க நாட்டில் கடந்த 16ஆம் தேதியன்று தலைநகர் கம்பாலாவில் இருக்கும் பாராளுமன்ற கட்டிடத்திலும், தலைமை காவல் நிலையத்திற்கு அருகிலும் தீவிரவாதிகள், தொடந்து மூன்று தற்கொலைப் படை தாக்குதல்களை நடத்தினர். இதில், நான்கு நபர்கள் உயிரிழந்தனர். மேலும், 33 நபர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்த தற்கொலைப் படைதாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பினர் பொறுப்பேற்றனர். […]
தலிபான் பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளின் குடும்பத்தினருக்கு பணம் மற்றும் நிலம் வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். தற்போது தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் ஆட்சி புரிந்து வருகின்றனர். முந்தைய ஆட்சியில் ஆப்கானிஸ்தானில் தற்கொலை படை தாக்குதலை தலிபான் பயங்கரவாதிகள் ஒரு ஆயுதமாக கொண்டு செயல்பட்டு வந்துள்ளனர். மேலும் தலிபான் பயங்கரவாதிகள் அமெரிக்க படையினர் மற்றும் ஆப்கானிஸ்தான் அரசு படையினரை குறிவைத்து தற்கொலை படை தாக்குதலில் ஈடுபட்டனர். அதில் ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் தற்கொலை படை […]
அமெரிக்க அரசு, தங்கள் படைகளை ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற்றிய பின் முதல் தடவையாக தலீபான்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. கட்டாரின் தலைநகர் தோஹாவில், அமெரிக்க அதிகாரிகள், தலிபான்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். இதில், பயங்கரவாத அமைப்புகளை கட்டுப்படுத்துதல், ஆப்கானிஸ்தானில் மீதமுள்ள அமெரிக்க மக்களை மீட்பது, ஆப்கானிஸ்தானில் மனிதாபிமானத்தின் அடிப்படையில் உதவிகள் செய்வது போன்றவை தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர். மேலும், தலிபான்கள் கட்டார் அமைச்சர் போன்றவர்களையும் சந்தித்து ஆலோசித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில், உள்ள குண்டூஸ் என்ற நகரத்தில் நேற்று முன்தினம் ஒரு மசூதியில் தற்கொலைப்படை […]
காபூல் விமான நிலையத்தில் பயங்கரவாத அமைப்பினர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆப்கானிஸ்தானின் முழு அதிகாரமும் தலீபான்களின் கையில் சிக்கியுள்ளது. இதற்கிடையில் நேற்று காபூல் விமான நிலையத்தில் இருந்த மக்கள் அனைவரும் வெளியேறும்படி அமெரிக்கா எச்சரிக்கை அளித்துள்ளது. இந்த நிலையில் நேற்று காபூலில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். அதிலும் காபூல் விமான நிலையத்தை சுற்றி ஒரு தண்ணீர் கால்வாய் அமைந்துள்ளது. இந்த கால்வாய் அங்குள்ள மக்களின் நீர் […]
பாகிஸ்தானில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் இந்தியாவிற்கு தொடர்பு இருப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் சீனப் பொறியாளர்கள் மற்றும் ராணுவத்தினர் பகதுன்க்வா மாகாணத்தில் புதிதாக கட்டப்படும் அணைக்கான பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 14-ஆம் தேதி ராணுவத்தினர் மற்றும் சீனப் பொறியாளர்கள் அணைக்கட்டும் பகுதியிலிருந்து பேருந்து ஒன்றில் சென்றுள்ளனர். அந்த பேருந்தில் திடீரென குண்டு வெடிப்பு தாக்குதல் நடந்துள்ளது. இதையடுத்து பள்ளத்தாக்கில் விழுந்து பேருந்து விபத்துக்குள்ளானதால் சீனப் பொறியாளர்கள் 9 பேர் உட்பட 13 பேர் […]
நேற்று சோமாலியாவில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் ராணுவ வீரர்கள் இரண்டு பேர் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சோமாலியாவில் அரசுக்கும், அல் ஷபாப் பயங்கரவாதிகளுக்கும் இடையே பல காலமாக மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று அல் ஷபாப் பயங்கரவாதிகள் மத்திய சோமாலியாவின் விசில் நகரில் கார் மூலம் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியுள்ளனர். அதில் ராணுவ வீரர்கள் 2 பேர் உட்பட ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பலருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் […]