Categories
தேசிய செய்திகள்

Breaking: தற்கொலை தாக்குதல்: இந்திய ராணுவ வீரர்கள் பலி…!!!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்டத்திலிருந்து 25 கிமீ., தொலைவில் உள்ள ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் உயிர்த் தியாகம் செய்துள்ளனர். வீரர்கள் பலர் காயமடைந்துள்ளனர். அதேநேரம், இந்த தாக்குதலை நடத்திய இரண்டு பயங்கரவாதிகளும் உயிரிழந்துள்ளனர். தேடுதல் வேட்டை தொடர்வதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

Categories
உலக செய்திகள்

தற்கொலை தாக்குதல்…. 4 வீரர்கள் பலி…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

பாகிஸ்தானில் வடக்கு வசிரிஸ்தான் மாவட்டத்தில் இன்று பாதுகாப்பு படையினரை குறிவைத்து, பயங்கரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் நடத்தியுள்ளனர். பாகிஸ்தான் நாட்டில் கைபர் பாக்துன்க்வா என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் பதற்றம் நிறைந்து காணப்படுகின்றது. வடக்கு வசிரிஸ்தான் மாவட்டத்தில் இன்று பாதுகாப்பு படையினரை குறிவைத்து, பயங்கரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் நடத்தியுள்ளனர். பட்டாசி செக்போஸ்ட் அருகே பாதுகாப்பு படையினர் வந்த வாகனம் மீது வெடிகுண்டு நிரப்பப்பட்ட வாகனத்தை பயங்கரவாதிகள் மோதச்செய்து பின்னர் வெடிக்க வைத்துள்ளனர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு படை […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் நடந்த ஈஸ்டர் தினத் தாக்குதல்….. 42 நபர்கள் மீது வழக்குப்பதிவு….!!!

இலங்கையில் கடந்த 2019ம் வருடத்தில் ஈஸ்டர் தினத்தன்று தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டது குறித்த வழக்கில் 42 பேர் மீதுள்ள குற்றம் நிரூபிக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். இலங்கை காவல்துறையினர், இது தொடர்பில் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். அதில் நாட்டில் உள்ள தேவாலயங்களில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பில் இந்திய அரசு முன்பே எச்சரித்திருந்தது. ஆனாலும் தாக்குதல் தடுக்கப்படவில்லை. இது அதிபர் மகிந்த ராஜபக்சே தலைமையில் இயங்கும் ஆளும்கட்சியின் சதி தான் என்று மால்கம் ரஞ்சித் என்ற பாதிரியார் குற்றம் சாட்டியிருக்கிறார். […]

Categories
உலக செய்திகள்

“இரவு நேரத்தில் தூங்க முடியாது!”.. புகலிடக்கோரிக்கையாளர்கள் குடியிருப்பை சேர்ந்தவர் வெளியிட்ட தகவல்..!!

பிரிட்டனில் தற்கொலை தாக்குதல் செய்ய முயன்று உயிரிழந்த பயங்கரவாதி தங்கியிருந்த வீட்டில் வசித்த இலங்கை நபர் முக்கிய தகவல்களை வெளியிட்டிருக்கிறார். பிரிட்டனிலுள்ள லிவர்பூல் நகரின் மகளிர் மருத்துவமனைக்கு அருகில் தற்கொலை தாக்குதல் செய்ய முயன்ற நபர், வாகனத்திற்குள் இருக்கும் போது குண்டு வெடித்து உயிரிழந்தார். இச்சம்பவத்தை பயங்கரவாத தாக்குதலாக அறிவித்தனர். இந்நிலையில், Emad Jamil Al Swealmeen என்ற அந்த தற்கொலை தாக்குதல் பயங்கரவாதி, புகலிட கோரிக்கையாளர்கள் பலரோடு சேர்ந்து ஒரு வீட்டில் வசித்து வந்திருக்கிறார். புகலிடக் […]

Categories
உலக செய்திகள்

தற்கொலை படை தாக்குதல்…. தலிபானின் உயர்மட்ட தலைவர் மரணம்…. உறுதிப்படுத்திய உறுப்பினர் ….!!

கடந்த வருடம் பாகிஸ்தான் படைகள் மேற்கொண்ட தற்கொலைத் தாக்குதலில் தலிபானின் உயர்மட்ட தலைவர் கொலை செய்யப்பட்டதாக அதன் மூத்த உறுப்பினர் உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானின் ஏராளமான மாகாணங்களை தலிபான் அமைப்பு கைப்பற்றியது. இதனையடுத்து ஈரான் நாட்டில் இருப்பதைப்போல் ஆப்கானிஸ்தானிலும் புதிய இடைக்கால அரசாங்கத்தை அறிவித்தது. அப்போது ஆப்கானிஸ்தான் இடைக் கால அரசின் பிரதமராக முகமது ஹசன் அகுந்த் அறிவிக்கப்பட்டார். அதே நேரத்தில் தலிபான்களின் உயர்மட்ட தலைவரின் பொறுப்பில் ஹெய்பத் துல்லாஹ் அகுன்ஜதா அறிவிக்கப்பட்டார். அதாவது […]

Categories
உலக செய்திகள்

இராணுவ பயிற்சி மையத்தில் தற்கொலை தாக்குதல்.. 15 பேர் உயிரிழந்த சோகம்..!!

சோமாலியாவின் ராணுவ பயிற்சி மையத்தில் திடீரென்று தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டதில் சுமார் 15 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். தலைநகர் மொகடிஷூவில் உள்ள ராணுவ பயிற்சி மையத்திற்கு பயிற்சி மேற்கொள்பவரை போல் ஒரு தீவிரவாதி நுழைந்திருக்கிறார். அந்த நபர் வெடிகுண்டை தன் உடலில் மறைத்து கொண்டு வந்து, திடீரென்று தற்கொலை தாக்குதல் நடத்தினார். இதில் 15 நபர்கள் பரிதாபமாக பலியாகினர். மேலும் 20க்கும் அதிகமான நபர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் மெதீனா பகுதியில் இருக்கும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று […]

Categories
தேசிய செய்திகள்

அமித்ஷா மீது தற்கொலை தாக்குதல் நடத்துவோம் – பெரும் பரபரப்பு…!!!

அமித்ஷாவையும், யோகி ஆதித்யநாத்தையும் தற்கொலை தாக்குதல் செய்வதாக வந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தையும்  தற்கொலை படை தாக்குதல் மூலம் கொலை செய்வோம் என்று மத்திய ரிசர்வ் படை போலீசுக்கு மின்னஞ்சல் வந்துள்ளது. இந்த தகவல் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்காக 11 தற்கொலை குண்டு வீச்சாளர்களை தயார் செய்து உள்ளதாகவும் கூறப்பட்டது. இதுகுறித்து தற்போது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Categories
உலக செய்திகள்

“தற்கொலைத் தாக்குதல்” தலிபான்களின் அட்டகாசம்…. 9 பேர் உயிரிழப்பு….!!

ஆப்கானிஸ்தானில் ராணுவ சாவடியில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் பொதுமக்கள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் ஹெல்மந்த் மாகாணத்திலுள்ள நஹ்ரி சரா மாவட்டத்தில் வெடிபொருள் நிரப்பிய காரில் பயங்கரவாதி ஒருவர் ராணுவ சாவடி அருகே வந்து வெடிக்க செய்துள்ளார். இந்த தற்கொலை தாக்குதலில் பொதுமக்கள் 9 பேர் உயிரிழந்தனர். அதில் பெண்களும் அடங்குவர். மேலும் 3 பாதுகாப்பு படையினரும் ஒரு குழந்தையும் இந்த தாக்குதலினால் படுகாயமடைந்துள்ளனர். நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்றாலும் தலிபான்களின் ஆதிக்கம் […]

Categories

Tech |