Categories
உலக செய்திகள்

ஜலாலாபாத்தில் துப்பாக்கிசூடு தாக்குதல்.. பிரபல பத்திரிகையாளர் உட்பட 4 பேர் பலி…!!

ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் தீவிரவாதிகள் துப்பாக்கிசூடு தாக்குதல் நடத்தியதில் பிரபல பத்திரிக்கையாளர் உட்பட 4 நபர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்கில் உள்ள நங்கர்ஹார் மாகாணத்தில் இருக்கும் ஜலாலாபாத் என்னும் நகரத்தில் ஒரு வாகனத்தில் இருந்து, மர்ம நபர்கள் திடீரென்று ஆட்டோவில் சென்று கொண்டிருந்த நபர்கள் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இதில் விரிவுரையாளரும் பிரபல பத்திரிகையாளருமான சையது மரூப் சதாத் மற்றும் மூவர் உயிரிழந்தனர். இதில் இருவர் தலிபான் அமைப்பை சேர்ந்தவர்கள் என்று […]

Categories
Uncategorized

பயங்கரவாதிகளுடன் நல்லிணக்க பேச்சுக்கு…. உதவும் தலிபான்கள்…. பாகிஸ்தான் பிரதமர் பேட்டி….!!

தெஹ்ரீக்-இ-தலிபான் பயங்கரவாத அமைப்புடன் பாகிஸ்தான் அரசு நடத்தும் நல்லிணக்க பேச்சுக்கு தலீபான்கள் உதவி வருகின்றனர். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அந்நாட்டில் செயல்படும் தெஹ்ரீக்-இ-தலிபான் பயங்கரவாத அமைப்புடன் நல்லிணக்க பேச்சு நடத்துவதாக கூறியுள்ளார். இதுகுறித்து துருக்கி அரசின் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியதாவது, “தெஹ்ரீக்-இ-தலிபான் பயங்கரவாதிகள் பல குழுக்களாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். இதில் சில குழுக்கள் பாகிஸ்தான் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகின்றனர். இதனைத் தொடர்ந்து அவர்களுடன் நல்லினக்கம் குறித்த […]

Categories
உலக செய்திகள்

தலீபான்களை குறிவைத்து மசூதி வாசலில் நடந்த தாக்குதல்.. அப்பாவி பொதுமக்கள் பலி..!!

காபூல் நகரில் உள்ள ஒரு மசூதியின் வாசலில் தலிபான்களை குறிவைத்து குண்டு வெடிப்பு  தாக்குதல் நடத்தப்பட்டதில் அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலிபான்களின் செய்தி தொடர்பாளரான ஜபிஹுல்லா முஜாஹித் என்பவர், தன் தாயின் நினைவு நாள் வழிபாட்டிற்காக ஈத்கா மசூதிக்கு சென்றிருக்கிறார். அப்போது திடீரென்று மசூதி வாசலில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறியிருக்கிறார். இக்கொடூர தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இத்தாக்குதலில் தலீபான்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை […]

Categories
உலக செய்திகள்

தலீபான்களுக்கு ஆதரவு கூட்டம்.. எங்கு நடந்தது..? வெளியான தகவல்..!!

காபூல் நகரின் மலைப்பகுதிகள் நிறைந்த கோடாமன் நகரில், ஆயிரக்கணக்கான ஆண்கள் தலீபான்களுக்கு ஆதரவு தெரிவித்து கூட்டம் நடத்தியுள்ளனர். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக போராட்டம் நடத்தி வந்தனர். தலிபான்கள் பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இதனால், தங்களின் சுதந்திரத்திற்காக நாடு முழுவதும் பெண்கள் போராடினர். மேலும், நாட்டு மக்கள் தலிபான்களைக்கண்டு பயந்து வாழ்ந்து கொண்டிருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இந்நிலையில், காபூல் நகரில் மலைப்பகுதிகள் நிறைந்து காணப்படும் கோடாமன் என்னும் நகரில், தலிபான்களுக்கு ஆதரவு […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க டிரோன்கள் வரக்கூடாது…. எச்சரிக்கை விடுத்த தலீபான்கள்…. வெளிவந்த தகவல்….!!

அமெரிக்க டிரோன்கள் ஆப்கானிஸ்தானுக்கு வந்தால் மோசமான விளைவை சந்திக்க வேண்டியிருக்கும் என தலீபான்கள் எச்சரிக்கை கொடுத்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டை கடந்த ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி தலிபான்கள் தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். மேலும் அந்நாட்டில் இருந்த அமெரிக்க படைகள் கடந்த ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி வெளியேறியதும் தலீபான் பயங்கரவாதிகள்  அந்நாட்டை முழுவதுமாக ஆக்கிரமித்துள்ளனர். இதனையடுத்து காபூல் விமான நிலையத்தை மையமாகக் கொண்டு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு வெடிகுண்டு தாக்குதலை நடத்தியது. இதில் அமெரிக்க படை […]

Categories
உலக செய்திகள்

தலீபான்களுக்கு உலக நாடுகளின் உதவி தேவை.. “அவர்களை ஊக்குவிக்க வேண்டும்!”.. -பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்..!!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அவர்களின் வாக்குறுதிகளை நிறைவேற்ற, அந்நாட்டுடன் உலக நாடுகள் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் கூறியிருக்கிறார். தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியவுடன், தாங்கள் முன்பு ஆட்சி செய்தது போன்று, தற்போது ஆட்சி நடத்தப் போவதில்லை. பெண்களின் அடிப்படை உரிமைகளை மதிப்போம் என்று கூறியிருந்தனர். ஆனால், தற்போது அவர்களின் செயல்பாடுகள், அதற்கு மாறாக இருக்கிறது. இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமரான இம்ரான் கான், அமெரிக்காவின் ஒரு பத்திரிகையில் தெரிவித்திருப்பதாவது, தலிபான்கள், தாங்கள் ஆட்சியை சிறப்பாக நடத்த, உலக […]

Categories
உலக செய்திகள்

‘வேறு வழி தெரியவில்லை’…. ரொட்டியை திருடிய சிறுவர்கள்….கட்டி வைத்து துன்புறுத்திய தலீபான்கள்….!!

இரு சிறுவர்கள் ரொட்டியை திருடிய குற்றத்திற்காக அவர்களை தலீபான்கள் கம்பத்தில் கட்டி வைத்து துன்புறுத்தியுள்ளனர். ஆப்கானிஸ்தான் நாடானது தலீபான்களின் கையில் சிக்கியுள்ளது. அங்கு அவர்கள் புதிய இடைக்கால அரசை ஏற்படுத்தியுள்ளனர். மேலும் தங்களின் புதிய ஆட்சியை உலக நாடுகள் ஏற்க வேண்டும் என்றும் கூறிவருகின்றனர். இதற்கிடையில் தலீபான்கள் தற்பொழுது தங்களின் உண்மையான முகத்தை காட்டி வருகின்றனர். அதிலும் கடந்த வாரம் கடுமையான தண்டனைகளை அறிவித்தது மட்டுமின்றி சடலங்களையும் பொதுஇடத்தில் தொங்கவிட்டு மக்கள் பார்க்கும்படி செய்தனர். இந்த நிலையில் […]

Categories
உலக செய்திகள்

4 பேரை சுட்டுக்கொன்ற தலீபான்கள்.. பொதுவெளியில் தொங்கவிடப்பட்ட சடலங்கள்.. பதற வைக்கும் வீடியோ வெளியீடு..!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் பொது இடத்தில் சடலங்கள் தொங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆப்கானிஸ்தானின் ஹெராத் என்ற நகரில் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு நபர்களின் உடல்களை வெவ்வேறு பகுதிகளில் தலிபான்கள் தொங்க விட்டுள்ளனர். இந்த கடத்தல் வழக்கில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளாமல் நான்கு நபர்களையும் அவர்கள் சுட்டுக் கொன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://twitter.com/i/status/1441697856155537409 மேலும், இனிமேல் கடத்தல் சம்பவங்களை நடத்துபவர்களின் நிலை இதுதான் என்ற போஸ்டர்கள் அவர்களது உடலின் மேல் ஒட்டப்பட்டிருக்கிறது. அவர்களை பொதுவெளியில், தொங்கவிட கிரேனை […]

Categories
உலக செய்திகள்

நிவராணப் பொருட்கள் ஏற்றி வந்த லாரி…. வழிமறித்த தலீபான்கள்…. வைரலாகும் வீடியோ காட்சி….!!

நிவராணப் பொருட்கள் ஏற்றி வந்த லாரியை தலீபான்கள் மறித்துள்ள வீடியோ காட்சிகளானது வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆப்கானிஸ்தான் நாடானது கடந்த மாதம் 15ஆம் தேதி முதல் தலீபான்களின் கையில் சென்றது. மேலும் ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் தற்பொழுது புதிய இடைக்கால அரசை அறிவித்துள்ளனர்.  இதற்கிடையில் ஆப்கானிஸ்தானின் அண்டை நாடான பாகிஸ்தான் அந்நாட்டுக்கு தேவையான அனைத்து நிவாரண உதவிகளையும் செய்து வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானில் இருந்து உணவு, மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று ஆப்கானுக்கு […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் ஐபிஎல் போட்டியை ஒளிபரப்ப தடை.. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தலீபான்கள்..!!

ஆப்கானிஸ்தானில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை ஒளிபரப்ப தலீபான்கள் தடை அறிவித்துள்ளார்கள். ஆப்கானிஸ்தானை, தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து பல மாற்றங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அதில், முக்கியமாக பெண்களை கல்வி கற்கவும், பணிகளுக்கு செல்லவும்  அனுமதிக்கவில்லை. மேலும், இசை மற்றும் திரைப்படம் காண்பதற்கும் தலீபான்கள் தடை விதித்துள்ளார்கள். பொதுவாகவே தலிபான்கள், கலை நிகழ்ச்சிகள் நடத்துவதை எதிர்ப்பார்கள். இந்நிலையில், 2021-ஆம் வருடத்திற்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கோலாகலமாக நடந்து வருகிறது. ஆனால், ஐபிஎல் போட்டியை ஆப்கானிஸ்தானில் ஒளிபரப்புவதற்கு தலிபான்கள் தடை விதித்துள்ளார்கள். அதாவது, […]

Categories
உலக செய்திகள்

தலீபான்களால் சிறை வைக்கப்பட்டிருந்த சுவிஸ் தம்பதி.. 8 மாதங்கள் கழித்து தப்பி வந்த சம்பவம்..!!

ஆப்கானிஸ்தானில் தலிபான்களிடம் மாட்டி சிறைபிடிக்கப்பட்ட சுவிட்சர்லாந்து தம்பதிகள் குறித்து தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படம் சூரிச் திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த 2011 ஆம் வருடத்தில், Daniela Widmer மற்றும் David Och என்ற தம்பதியரை தலிபான்கள் சிறை வைத்தனர். மேலும் மலைப்பகுதிக்கு இழுத்துச் சென்று ஒவ்வொரு இடமாக 14 நாட்களாக அலைய வைத்திருக்கிறார்கள். இது மட்டுமல்லாமல் பகல் நேரத்தில் ஆட்டுக்கடையில் தூங்க வைக்கப்பட்டுள்ளனர். இரவு சமயத்தில், சதுப்பு நிலங்களில் அலைய வைத்திருக்கிறார்கள். இதனால், கடும் பாதிப்படைந்த Daniela, […]

Categories
உலக செய்திகள்

தலீபான்களை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல்.. இரண்டு பேர் உயிரிழப்பு..!!

ஐலாலாபாத்தில் 2வது நாளாக தொடர்ந்து தலிபான்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஐலாலாபாத் என்ற நகரின் இரு பகுதிகளில் கடந்த சனிக்கிழமை அன்று, தலிபான்களை நோக்கி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிலையில், இதே நகரத்தில் இருக்கும் ஒரு பேருந்து நிலையத்தில்  நேற்று வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில், இரண்டு நபர்கள் உயிரிழந்ததாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த தாக்குதலில், தலிபான் அமைப்பை சேர்ந்த ஒருவருக்கு காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலிபான்களின் எல்லை காவல்துறையினரின் வாகனத்தை குறிவைத்து இந்த குண்டுவெடிப்பு தாக்குதல் […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிய கடைசி யூதர்.. யார் காரணம்..? வெளியான தகவல்..!!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் இடைக்கால அரசை அமைந்திருப்பதால், உயிருக்கு பயந்து கடைசி யூதரும் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி, அங்கு இடைக்கால அரசையும் அமைத்துவிட்டனர். இந்நிலையில், அங்கு வசித்த Zebulon Simantov என்ற 62 வயது யூதர், அமெரிக்கா செல்வதற்காக  நாட்டிலிருந்து வெளியேறி, ஒரு ஹொட்டலில் தங்கியுள்ளார். அவர், அமெரிக்காவிற்கு செல்வதற்கு தேவைப்படும் ஆவணங்களை தயார் செய்யும் பணிகள் நடந்து வருவதாக கூறப்பட்டுள்ளது. அதாவது, Zebulon Simantov, தலிபான்களால் தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. எனினும், […]

Categories
உலக செய்திகள்

“ஆப்கானிஸ்தானில் இன்று பள்ளிகள் திறப்பு!”.. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை மட்டும் அனுமதித்த தலீபான்கள்..!!

ஆப்கானிஸ்தானில் பள்ளி பயிலும் மாணவர்களும் ஆசிரியர்களும் மீண்டும் பள்ளிக்கு வருமாறு தலீபான்கள் உத்தரவிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி, அங்கு இடைக்கால அரசை அமைத்திருக்கிறார்கள். இந்நிலையில், தலீபான்களின் கல்வித் துறை அமைச்சகமானது, நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் நாட்டில் பள்ளிகள் இன்றிலிருந்து திறக்கப்படவுள்ளதாக  குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஆறாம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களும், ஆண் ஆசிரியர்களும் பள்ளிக்கு வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், மாணவிகள் பள்ளி வருவது தொடர்பில் எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. […]

Categories
உலக செய்திகள்

தலீபான்கள் தலைவர்களுக்கிடையே மோதல்..? மறுப்பு தகவல் வெளியிட்ட அனஸ் ஹக்கானி..!!

ஆப்கானிஸ்தானில் பஞ்ச்ஷீர் மாகாண பிரச்சனையில் தலிபான்களின் தலைவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதனை அவர்கள் மறுத்திருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் முழுவதுமாக கைப்பற்றி விட்டார்கள். அதன்பின்பு, பஞ்ச்ஷீர்  மாகாணத்தில், தங்களை எதிர்க்கும் அமைப்பினரை சமாளிக்க தலிபான்கள் முடிவெடுத்தனர். அப்போது தலிபான்களின் தலைவர்களுக்கிடையே பிரச்சனை ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதாவது, அனஸ் ஹக்கானி மற்றும் முல்லா அப்துல் கனி பரதார் இருவரின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் நிலவியுள்ளது. அதன்பின்பு, துப்பாக்கி சூடு தாக்குதல் நடந்திருக்கிறது. இந்த தாக்குதலில் முல்லா அப்துல் […]

Categories
உலக செய்திகள்

“ஆப்கானிஸ்தானில் பயத்துடன் வாழும் பத்திரிக்கையாளர்கள்!”.. தொடர்ந்து அத்துமீறும் தலீபான்கள்..!!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பத்திரிக்கையாளர்களை சித்திரவதை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து நாட்டில் பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில், நாட்டிலுள்ள பத்திரிக்கையாளர்களை தலிபான்கள் கொடுமைப்படுத்தி வருகிறார்கள். நாட்டில் பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து செய்தி சேகரித்த பத்திரிகையாளர்களை, தலீபான்கள் சிறை வைத்து கடுமையாக தாக்கினர். அவர்களின் காயங்களை வெளிப்படுத்தும் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், தற்போது வெளியான தகவலின் படி, ஆப்கானிஸ்தானில் இருக்கும் பத்திரிகையாளர்கள் தலிபான்கள் மீது அதிக பயத்துடன் இருக்கிறார்கள். மேலும், பத்திரிகையாளர்களின் கேமரா […]

Categories
உலக செய்திகள்

தொடரும் தலீபான்களின் அட்டகாசம்…. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள்…. ஆளுநர் மாளிகை முற்றுகை….!!

ராணுவ குடியிருப்பில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் குடும்பங்களை வெளியேறுமாறு தலீபான்கள் உத்தரவிட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் உள்ள கந்தஹார் மாகாணத்தில் ராணுவ குடியிருப்பு வளாகம் உள்ளது. அதில் சுமார் 3000 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் தலீபான்கள் அமைப்பைச் சேர்ந்தவர்களை தங்க வைப்பதற்காக அங்கிருக்கும் மக்களை மூன்று நாட்களில் வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் கந்தஹார் ஆளுநர் மாளிகைக்கு முன்பாக திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அந்த குடியிருப்பில் இருக்கும் […]

Categories
உலக செய்திகள்

தலிபான்களின் துணைப்பிரதமர் முல்லா பரதார் எங்கு உள்ளார்…? தகவல் வெளியிட்ட தலீபான்கள்..!!

ஆப்கானிஸ்தானின் இடைக்கால ஆட்சியின் துணை பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட முல்லா பரதார் எங்கிருக்கிறார்? என்பது தொடர்பில் தலிபான்கள் தகவல் வெளியிட்டுள்ளார்கள். ஆப்கானிஸ்தானின் இடைக்கால ஆட்சியின் துணை பிரதமராக, தேர்ந்தெடுக்கப்பட்ட முல்லா பரதார், தற்போது எங்குள்ளார்? என்பது தொடர்பில் சந்தேகம் எழுந்தது. இந்நிலையில், காபூல் மற்றும் தோஹாவில் இருக்கும் தலீபான்கள் இது தொடர்பில் தெரிவித்திருப்பதாவது, கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவில் ஜனாதிபதிஅரண்மனையில், கலீல் ஹக்கானி மற்றும் முல்லா பரதார், இருவருக்கும் இடையே மோதல் அதிகரித்தது. அதன் பின்பு, அவர்களின் ஆதரவாளர்களும் […]

Categories
உலக செய்திகள்

“இரண்டு ஆண்களை தூக்கிலிட்டு கொன்ற தலீபான்கள்!”.. வெளியான அதிர்ச்சி வீடியோ..!!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மிகக் கொடூரமாக நடந்து கொள்ளும் அதிர்ச்சி வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து, அங்கு பல சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கிறது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்களை தலீபான்கள் தாக்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. மேலும், இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில், செய்தி சேகரித்த, பத்திரிகையாளர்கள் இருவரை தலீபான்கள் கடுமையாக தாக்கியதில் அவர்களுக்கு ஏற்பட்ட காயத்தை வெளிக்காட்டும் புகைப்படம் வெளியாகியிருந்தது. இந்நிலையில், இரண்டு நபர்களை தலிபான்கள் தூக்கிலிட்டு கொன்ற, நெஞ்சை பதற வைக்கும் […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானிற்கு 20 மில்லியன் டாலர்கள் நிதி.. ஐ.நா சபை அறிவிப்பு..!!

ஐ.நா சபை, ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு 20 மில்லியன் டாலர்கள் அளிக்கவுள்ளதாக தெரிவித்திருக்கிறது. ஆப்கானிஸ்தான் நாடு, வறுமை மற்றும் போர் காரணமாக கடும் பாதிப்படைந்துள்ளது. எனவே அந்நாட்டு மக்களுக்கு உதவ ஐ.நாவின் மத்திய அவசரகால உதவிக்கான நிதியிலிருந்து சுமார் 20 மில்லியன் டாலர்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐ.நா சபை, ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு இந்த வருடம் மட்டும் 606 மில்லியன் டாலர்கள் தேவைப்படுகிறது என்று தெரிவித்துள்ளது. அதனை, அந்நாட்டிற்கு கொடுத்து உதவ உலக நாடுகள் முன்வர வேண்டும் […]

Categories
உலக செய்திகள்

“பெண்கள் உயர்கல்வி கற்கலாம்!”.. அனுமதியளித்த தலீபான்கள்.. வெளியான தகவல்..!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண்கள் பல்கலைகழகங்களில் கல்வி பயில அனுமதிக்கப்பட்டுள்ளதாக தலிபான்களின் உயர் கல்வி மந்திரி தெரிவித்திருக்கிறார். ஆப்கானிஸ்தானை தற்போது தலிபான்கள் கைப்பற்றியிருக்கிறார்கள். அவர்கள் இதற்கு முன்பு ஆட்சி செய்த போது பெண்களுக்கு கடும் விதிகளை நடைமுறைப்படுத்தியிருந்தார்கள். அதன்படி ஆண்கள் துணையில்லாமல் பெண்கள் வெளியில் செல்லக்கூடாது, உடலை முழுவதுமாக மறைக்கும்படியான ஆடைகளை மட்டுமே அணிய வேண்டும், கல்வி கற்பதற்கும் பணிக்கு செல்வதற்கும் அவர்களுக்கு அனுமதி இல்லை என்றெல்லாம் கட்டுப்பாடுகளை விதித்திருந்தனர். இவற்றை பெண்கள் மீறும் பட்சத்தில், அவர்களை பொது […]

Categories
உலக செய்திகள்

போராட்டம் நடத்தும் பெண்கள்…. தடை விதிக்கும் தலீபான்கள்…. உத்தரவு வெளியிட்ட உள்துறை அமைச்சகம்….!!

பெண்கள் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்பதற்காக தலீபான்களின் உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தற்பொழுது தலீபான்கள் இடைக்கால அரசை அறிவித்துள்ளனர். இந்த நிலையில் தலீபான்களின் உள்துறை அமைச்சகம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில் “நாடு முழுவதும் நடைபெறும் போராட்டங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். ஒருவேளை போராட்டம் நடத்தப்பட வேண்டுமென்றால் முன்னதாகவே அனுமதி பெறுதல் வேண்டும். அதிலும் போராட்டத்தில் முழக்கமிடுதல், வாசகங்கள் ஏந்திச் செல்லுதல் போன்ற செயல்களுக்கு முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும்” என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் 1990களில் […]

Categories
உலக செய்திகள்

“எச்சரிக்கையை மீறி போராட்டம் நடத்திய மக்கள்!”.. துப்பாக்கிசூடு தாக்குதல் நடத்திய தலீபான்கள்..!!

ஆப்கானிஸ்தானில், தலிபான்களை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தலிபான்கள், ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றியதோடு அங்கு இடைக்கால ஆட்சி அமைத்திருக்கிறார்கள். இதில் பெண்கள் இடம் பெறவில்லை. எனவே, இந்த இடைக்கால ஆட்சியை எதிர்த்து தலைநகர் காபூலில் கடந்த புதன்கிழமையிலிருந்து பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். அதில், “ஆப்கானிஸ்தான் பெண்கள் வாழ்க” என்று முழக்கமிட்டனர்.மேலும், “எந்த ஆட்சியும் பெண்களின் இருப்பை மறுக்க முடியாது”, “மீண்டும் மீண்டும் போராடுவேன்” என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி […]

Categories
உலக செய்திகள்

‘இணைந்து செயல்படுவோம்’…. மன்னிப்பு வழங்கப்படும்…. அழைப்பு விடுத்த தலீபான்களின் முக்கிய தலைவர்….!!

அனைவரும் நாடு திரும்புங்கள் என்று தலீபான்களின் முக்கிய தலைவரான முல்லா முகமது ஹசன் அகுந்த் ஆப்கான் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆப்கானிஸ்தானில் தற்பொழுது தலீபான்கள் இடைக்கால அரசை அறிவித்துள்ளனர். இந்த நிலையில் தலீபான்களின் முக்கிய தலைவரான முல்லா முகமது ஹசன் அகுந்த் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் ” ஆப்கானின் முன்னால் ஆட்சியின் போது பணிபுரிந்த பணியாளர்கள் அனைவரும் தைரியமாக நாடு திரும்புங்கள். அதிலும் தூதரகங்கள் அவற்றின் அதிகாரிகளுக்கும் நாங்கள் முழு பாதுகாப்பை தருகிறோம். எங்கள் […]

Categories
உலக செய்திகள்

உரிமைகள் பறிபோகுமா….? போராட்டம் நடத்தும் பெண்கள்…. கட்டுப்பாடு விதித்த தலீபான்கள்…!!

பெண்கள் உரிமை மற்றும் சுதந்திரத்திற்காக போராடுவதை அடக்குவதற்காக தலீபான்கள் கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா படைகள் வெளியேறியதை தொடர்ந்து அங்கு தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வந்தது. இதனை அடுத்து கடந்த மாதம் 15 ஆம் தேதி ஆப்கானிஸ்தான் முழுவதும் தலீபான்களின் கைவசம் சென்றது. இதனால் ஆப்கான் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக பெண்களின் சுதந்திரம் பறி போகுமோ என்ற பயவுணர்வு அனைவரிடமும் ஏற்பட்டுள்ளது. தற்பொழுது தலீபான்கள்  இடைக்கால அரசை அறிவித்துள்ளனர். இந்த நிலையில் […]

Categories
உலக செய்திகள்

“ஆப்கானிஸ்தானின் இடைக்கால ஆட்சி சட்டவிரோதமானது!”.. கிளர்ச்சிப்படை தலைவர் அகமது மசூத் எதிர்ப்பு..!!

ஆப்கானிஸ்தானில், தலிபான்கள் இடைக்கால ஆட்சி அமையும் என்று அறிவித்திருப்பது சட்டவிரோதமானது என கிளர்ச்சிப் படையின் தலைவரான அகமது மசூத் கூறியிருக்கிறார். ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள் அங்கு இடைக்கால ஆட்சி அமைக்கப் போவதாக தெரிவித்துள்ளார்கள். மேலும் இடைக்கால மந்திரி சபை மற்றும் பிரதமரையும் அறிவித்துவிட்டார்கள். எனவே, முன்பிருந்த ஆட்சியில் தங்களை எதிர்த்த அரசு அதிகாரிகளையும், பத்திரிகையாளர்களையும் சிறை பிடிக்கிறார்கள் அல்லது கொலை செய்கிறார்கள். இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் தேசிய கிளர்ச்சிப் படை தலைவரான அகமது மசூத், நாட்டில் இடைக்கால ஆட்சி […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் பத்திரிக்கையாளர்களுக்கு நேர்ந்த கொடுமை.. தலீபான்கள் வெறிச்செயல்.. வெளியான புகைப்படம்..!!

ஆப்கானிஸ்தான் நாட்டில், இரண்டு பத்திரிக்கையாளர்களை தலிபான்கள் சிறைவைத்து கொடுமைப்படுத்தியதை வெளிப்படுத்தும் புகைப்படம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானை, தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து, நாட்டின் பல பகுதிகளில் பெண்கள் தங்கள் உரிமைகளுக்காகவும், சுதந்திரத்திற்காகவும் போராடி வருகிறார்கள். இதற்கிடையில், தங்கள் நாட்டின் உள்விவகாரங்களில் பாகிஸ்தான் அரசு தலையிடக்கூடாது என்றும் பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். காபூலில் ஆர்ப்பாட்டம் நடத்திய பெண்களை தலிபான்கள் தாக்கிய வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. https://twitter.com/yamphoto/status/1435738713452158979 இந்நிலையில், பெண்களின் ஆர்ப்பாட்டம் தொடர்பில் செய்திகளை சேகரித்து வந்த Nemat Naqdi மற்றும் […]

Categories
உலக செய்திகள்

பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு…. தலீபான்கள் செய்தி தொடர்பாளர்…. வெளிவந்துள்ள முக்கிய தகவல்கள்….!!

இடைக்கால அமைச்சர்கள் குழு குறித்த விவரங்களை தலீபான்கள் செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ளார். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறதை தொடர்ந்து கடந்த மாதம் 15 ஆம் தேதி தலீபான்கள் அந்நாட்டை முழுவதுமாக தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். இதனையடுத்து அமெரிக்கா, இந்தியா, பிரான்ஸ் போன்ற பல்வேறு நாடுகள் தங்கள் நாட்டு மக்களை ஆப்கானில் இருந்து விமானம் மூலமாக பாதுகாப்பாக வெளியேற்றினர். இதனை தொடர்ந்து தலீபான்களுக்கு பயந்து ஆப்கானியர்களும் அகதிகளாக மற்ற நாடுகளுக்கு தப்பி சென்றனர். அதிலும் […]

Categories
உலக செய்திகள்

“எங்கள் நாட்டின் விவகாரங்களில் தலையிடாதீர்கள்!”.. ஆப்கானிஸ்தானில் போராடும் பெண்கள்..!!

ஆப்கானிஸ்தானின் தலைநகரில் பாகிஸ்தானை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். ஆப்கானிஸ்தானில் தலைநகர் காபூலில் இருக்கும் பாகிஸ்தான் தூதரகத்தின் முன்பு நேற்று இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பித்தது. ஆப்கானிஸ்தான் நாட்டின் விவகாரங்களில் பாகிஸ்தான் அரசு தலையிடக்கூடாது என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் முழக்கமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டம்  பெண்களால் நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தை ஊடகத்தை சேர்ந்த சிலர் வீடியோ எடுப்பதை தலிபான்கள் தடுத்துள்ளனர். அதாவது, பாகிஸ்தானின் உள்நாட்டு புலனாய்வுத் துறையின் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் ஃபைஸ் ஹமீத் காபூல் நகருக்கு வந்ததையடுத்து இந்த […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் இடைக்கால ஆட்சி.. தலீபான்கள் வெளியிட்ட தகவல்..!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் இடைக்கால ஆட்சி அமைய இருப்பதாக தலிபான்கள் தெரிவித்திருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள், புதிய ஆட்சியை அமைப்பதில் தீவிரம் காட்டி வருகிறார்கள். இந்நிலையில், நேற்று காபூலில் தலீபான்களின் செய்தி தொடர்பாளரான ஜபிஹுல்லா முஜாஹித், பத்திரிகையாளர்களிடம் தெரிவித்திருப்பதாவது, ஆப்கானிஸ்தானில் அமையப்போகும் தலிபான்களின் இடைக்கால ஆட்சியின் தலைவராக முல்லா முகமது ஹசன் அகண்ட் இருப்பார். மேலும் தலிபான் அமைப்பின் தலைவரான, முல்லா அப்துல் கனி பரதர்,  துணைத் தலைவர்களில் ஒருவர் என்று தெரிவித்தார். மேலும், ஷேர் முகம்மது அப்பாஸ் […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் பதவியேற்பு விழா.. 6 நாடுகளுக்கு அழைப்பு.. எந்தெந்த நாடுகள்..?

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்களின் பதவியேற்பு விழாவிற்கு 6 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப்படைகள் வெளியேறிய தொடங்கியவுடன், தலிபான்கள் நாட்டை கைப்பற்றினார்கள். அதன்பின்பு, அங்கு புதிய அரசு அமைப்பதற்கான தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். எனவே, தலிபான்கள் பதவியேற்கப்போகும் நிகழ்விற்கு 6 நாடுகளை அழைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. அவை, ரஷ்யா, சீனா, பாகிஸ்தான், ஐக்கிய அமீரகம், சவுதி அரேபியா மற்றும் ஈரான் போன்ற நாடுகள் என்று தெரியவந்துள்ளது. இதில், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா மற்றும் […]

Categories
உலக செய்திகள்

“ஆப்கானிஸ்தான் பிரச்சனையில் தலையிட எந்த நாட்டிற்கும் உரிமை கிடையாது!”.. தலீபான்கள் எச்சரிக்கை..!!

ஆப்கானிஸ்தான் நாட்டின் பிரச்சனையில் தலையிடுவதற்கு பாகிஸ்தான் உட்பட எந்த நாடுகளுக்கும் உரிமை கிடையாது என்று தலிபான்கள் உறுதியாக தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் 20 வருடங்களாக இருந்த அமெரிக்க படைகள், வெளியேறியதை தொடர்ந்து தலிபான்கள் நாட்டை கைப்பற்றினார்கள். தற்போது, தலீபான்கள் ஆப்கானிஸ்தானில் புதிய அரசை அமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டின் ஐஎஸ் இயக்கத்தின் தலைவரான, ஃபயிஷ் ஹமீது, காபூல் நகருக்குச் சென்று தலிபான்களுடன், இரு நாடுகளின் வளர்ச்சி தொடர்பில் பேசினார் என்று […]

Categories
உலக செய்திகள்

இசை அகாடமியில் இருந்த கருவிகளை அடித்து உடைத்த தலீபான்கள்.. வெளியான புகைப்படம்..!!

காபூலில் இருக்கும் ஒரு இசைப்பள்ளியில், தலிபான்கள் புகுந்து, அங்கிருந்த இசைக்கருவிகளை அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதால், அந்நாட்டு மக்கள் பலரும் அங்கிருந்து வெளியேறினார்கள். எனினும் நாட்டில் உள்ள அனைத்து மாகாணங்களையும் கைப்பற்றிய தலிப்பான்களால், பஞ்ச்ஷீர் மாகாணத்தை மட்டும் கைப்பற்ற முடியவில்லை. இந்நிலையில் தேசிய எதிர்ப்பு முன்னணி படை போர் நிறுத்தத்தை அறிவித்தது. எனவே, அந்த மாகாணத்தையும், மொத்தமாக தலீபான்கள் கைப்பற்றியதாக தகவல்கள் வெளியானது. எனவே, நாடு முழுவதும் கைப்பற்றி விட்டதால், தலீபான்கள் […]

Categories
உலக செய்திகள்

“தலீபான்களுடன் பேச தயாராக உள்ளோம்!”.. எதிர்ப்பு குழுவின் தலைவர் வெளியிட்ட தகவல்..!!

ஆப்கானிஸ்தானின், எதிர்ப்புக் குழுவின் தலைவராக உள்ள அகமது மசூத், தலீபான்களுடன் பேச்சுவார்தை நடத்த தயார் என்று அறிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள், அங்கு புதிய ஆட்சியை அமைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். அதே சமயத்தில் ஆப்கானிஸ்தான் நாட்டில் இருக்கும் 34 மாகாணங்களில், 33 மாகாணங்களை கைப்பற்றிய தலிபான்களால், இந்துகுஷ் மலைத்தொடரின் அருகே இருக்கும் பஞ்ச்ஷீர் என்ற மாகாணத்தை கைப்பற்ற முடியவில்லை. இதனிடையே, நாட்டின் துணை அதிபராக இருந்த அமருல்லா சாலே, தன்னை ஆப்கானிஸ்தானின் இடைக்கால அதிபர் என்று […]

Categories
உலக செய்திகள்

“ஜெர்மன் நாட்டிற்காக பணிபுரிந்த மக்களை மீட்க வேண்டும்!”.. தலீபான்களோடு பேசப்போவதாக அதிபர் அறிவிப்பு..!!

ஜெர்மன் அதிபர், தங்கள் நாட்டிற்காக பணியாற்றிய மக்களை ஆப்கானிஸ்தானிலிருந்து பத்திரமாக மீட்பது தொடர்பில் தலிபான்களோடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி விட்டார்கள். எனவே அவர்களின் ஆட்சிக்கு அஞ்சி  அந்நாட்டு மக்கள் அங்கிருந்து வெளியேறினார்கள். மேலும், ஆப்கானிஸ்தானிலிருந்த பிற நாட்டு மக்களும் மீட்கப்பட்டார்கள். இதனிடையே இன்னும் ஒரு வார காலத்திற்குள் தலிபான்களின் தலைமையில் புதிய ஆட்சி அமையும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜெர்மன் அதிபரான ஏஞ்சலா மெர்கல், ஜெர்மன் நாட்டிற்காக பணிபுரிந்த மக்களை […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானில் ஹக்கானிகளுக்கு பிரதிநிதித்துவம் கிடைக்க…. திட்டமிடும் பிரபல நாடு…. காபூலுக்கு சென்ற ஐஎஸ்ஐ தலைவர்….!!

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் உருவாக்க இருக்கும் புதிய ஆட்சியில் ஹக்கானி தீவிரவாத அமைப்பினருக்கு பிரதிநிதித்துவம் கிடைக்க செய்து அதன் மூலம் பல விசயங்களை சாதித்து கொள்ள பாகிஸ்தான் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கபடைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி அந்நாட்டை கண்ணிமைக்கும் நேரத்தில் கைப்பற்றியுள்ளனர். அதிலிருந்து ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரம் முழுவதும் தலீபான்களின் பிடியில் சிக்கியுள்ளது. அதனால் தலீபான்கள் ஆப்கானிஸ்தானில் புதிய ஆட்சியை […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க மக்களை வீடு வீடாக சென்று தேடும் தலீபான்கள்.. கர்ப்பிணி பெண் வெளியிட்ட தகவல்..!!

ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் மாட்டிக்கொண்ட கர்ப்பிணி பெண் ஒருவர் அமெரிக்க மக்களை தலீபான்கள் தேடித்தேடி வேட்டையாடுவதாக தெரிவித்துள்ளார். கலிபோர்னியாவைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் நஸ்ரியா. இவர் ஒரு ஊடகத்தில் தன் அனுபவங்களை கூறியிருக்கிறார். அதாவது, கடந்த ஜூன் மாதம் ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு தன் குடும்பத்தினரை பார்ப்பதற்காகவும், தன் திருமணத்திற்காகவும் சென்றிருக்கிறார். எனினும், தற்போது அமெரிக்கா திரும்புவதற்கு வழியின்றி தவித்து வருகிறார். இவர், தலிபான்கள் அமெரிக்க மக்களை தேடிப்பிடித்து கொன்று வருவதாக கூறியிருக்கிறார். மேலும் அவர்கள் ஒவ்வொரு […]

Categories
உலக செய்திகள்

புதிய ஆட்சி எப்போது….? அடுத்த வாரம் ஒத்திவைப்பு…. தகவல் வெளியிட்ட தலீபான்கள் செய்தி தொடர்பாளர்….!!

ஆப்கானிஸ்தானில் புதிய ஆட்சி அமைக்கும் திட்டமானது அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளதாக தலீபான்களின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாடானது கடந்த மாதம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் தலீபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் முழுவதுமாக சென்றது. இதனையடுத்து காபூல் விமான நிலையத்தில் முகாமிட்டு இருந்த அமெரிக்கா படைகள் ஆகஸ்ட் 31 ஆம் தேதி முழுவதுமாக வெளியேறினர். மேலும் அமெரிக்கா படைகளின் வெளியேற்றத்தை கொண்டாடிய தலீபான்கள் ஆப்கானில் புதிய ஆட்சி முறையை அமைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். […]

Categories
உலக செய்திகள்

“எங்களின் கலாச்சாரத்தை மாற்ற நினைக்காதீர்கள்!”.. அமெரிக்காவிற்கு தலீபான்கள் எச்சரிக்கை..!!

தலிபான்களின் செய்தி தொடர்பாளர், எங்களின் கலாச்சாரத்தையும் பெண்களின் உரிமைகள் குறித்தும் தலையிடக்கூடாது என்று அமெரிக்காவை எச்சரித்திருக்கிறார். தலிபான்களின் செய்தி தொடர்பாளரான Suhail Shaheen, அமெரிக்காவின் ஒரு பத்திரிக்கைக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றியதால் பெண்களின் உரிமைகளுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாது. எனினும், பர்தா அணியாமல் பெண்கள் கல்வி கற்கலாம் என்ற மேலை நாடுகளின் எண்ணத்தை எதிர்க்கிறேன். இது எங்களின் கலாச்சாரத்தை மாற்றக்கூடிய செயல். எங்களது கலாச்சாரத்தில், பெண்கள் கல்வி கற்கும் […]

Categories
உலக செய்திகள்

“வானில் துப்பாக்கியால் சுட்டு தலீபான்கள் கொண்டாட்டம்!”.. 17 பேர் உயிரிழப்பு.. மருத்துவமனை வெளியிட்ட தகவல்..!!

ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் தலிபான்கள் வெற்றியை கொண்டாடும் விதமாக வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் 17 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காபூல் நகரத்தில் தலிபான்கள் நேற்று இரவில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கொண்டாடியுள்ளனர். அதாவது, PANJSHIR என்ற பள்ளத்தாக்கை கைப்பற்றியதையும், முல்லா பராதர், நாட்டின் புதிய அரசின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதையும் தலிபான்கள், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கொண்டாடியுள்ளனர். According to TB sources, Mawlawi Muhammad Yaqoob has issued strict orders against […]

Categories
உலக செய்திகள்

“உலகில் வாழும் அனைத்து முஸ்லிம்களுக்காகவும் குரல் கொடுப்போம்!”.. அது எங்களின் உரிமை.. தலீபான்கள் அறிவிப்பு..!!

தலிபான்கள், காஷ்மீர் உட்பட உலகில் உள்ள எந்த பகுதியை சேர்ந்த முஸ்லிம்களுக்காகவும் குரல் கொடுப்போம் என்று அறிவித்திருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்து வரும் தலிபான்களின் தோகா அரசியல் அலுவலகத்தின்  செய்தி தொடர்பாளரான, சுகைல் ஷகீன், ஒரு பத்திரிகை நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருப்பதாவது, உலகில் எந்த பகுதியில் இருக்கும் இஸ்லாமியர்களுக்காகவும் நாங்கள் குரல் கொடுப்போம் என்று கூறியிருக்கிறார். அதாவது, முஸ்லிம் மக்கள் எந்தெந்த நாடுகளில் வசிக்கிறார்களோ, அந்தந்த நாடுகளிடம், இஸ்லாமியர்கள் உங்களின் மக்கள், உங்களின் சொந்த குடிமக்கள். […]

Categories
உலக செய்திகள்

மகிழ்ச்சியில் உள்ள தலீபான்கள்…. ராணுவ வீரர்கள் வெளியேற்றம்…. துப்பாக்கி குண்டுகள் முழக்கம்….!!

அமெரிக்கா ராணுவ வீரர்கள் முழுவதுமாக ஆப்கானில் இருந்து வெளியேறியதை தலீபான்கள் கொண்டாடி வருகின்றனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து அமெரிக்கா படைகள் வெளியேறுவதை அடுத்து அந்நாட்டை  தலீபான்கள் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். மேலும் நேற்றுடன் ஆப்கானில் இருந்த கடைசி அமெரிக்கா ராணுவ வீரரும் வெளியேறினார். இதனால் தலீபான்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் தங்களின் மகிழ்ச்சியை வெளியுலகிற்கு காட்டுவதற்காக சாலைகளில் பேரணியாக சென்றனர். அதிலும் வானத்தை நோக்கி துப்பாக்கி குண்டுகள் முழங்கினர். குறிப்பாக காபூல் நகரில் […]

Categories
உலக செய்திகள்

தாயை தேடி வாடும் குழந்தைகள்…. கண்பார்வையை இழந்த பெண்…. வேதனை தெரிவித்த கட்டீரா ஹஸ்மி….!!

குழந்தைகள் தன்னை தேடி வாடுவதாக கட்டீரா ஹஸ்மி என்ற ஆப்கானிஸ்தான் பெண் தனது சோகத்தை தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் உள்ள கஸ்னி நகரைச் சேர்ந்தவர் 32 வயதான கட்டீரா ஹஸ்மி. இவர் ஆப்கானில் காவல்துறையில் பணிபுரிந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பரில் கண்பார்வை பறிபோனதால் இந்தியா வந்துள்ளார். தற்பொழுது அவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் டெல்லியில் வசித்து வருகிறார். மேலும் கட்டீரா ஹஸ்மி தனது கண்களை இழந்த சோகத்தை அனைவரிடமும் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதில் “ஆப்கானிஸ்தான் […]

Categories
உலக செய்திகள்

கடைசி அமெரிக்க வீரர் வெளியேறினார்.. முழு சுதந்திரம் அடைந்த ஆப்கானிஸ்தான்.. தலீபான்கள் கொண்டாட்டம்..!!

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப்படை முழுமையாக வெளியேறியதால் தலிபான்கள் வானவேடிக்கையுடன் தங்களின் வெற்றியை கொண்டாடியிருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானில், அமெரிக்க படைகள் வெளியேறிய பின்பு தலிபான்கள் நாட்டை கைப்பற்றி விட்டார்கள். எனவே தாலிபான்களின் ஆட்சிக்கு பயந்து அந்நாட்டு மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகிறார்கள். மேலும் அந்நாட்டு மக்களுக்கு அமெரிக்க ராணுவ வீரர்கள் உதவி செய்து வந்தார்கள். எனினும் அமெரிக்க படைகள் இம்மாதம் 31ஆம் தேதிக்குள் நாட்டிலிருந்து வெளியேறி விடவேண்டும் என்று தலிபான்கள் எச்சரித்திருந்தனர். "US military has left Afghanistan," news agency […]

Categories
உலக செய்திகள்

“அனைவரும் சேர்ந்து தலீபான்களை வழிநடத்த வேண்டும்!”.. அனைத்து நாடுகளையும் வலியுறுத்தும் சீனா..!!

சீன அரசு அமெரிக்காவிடம், அனைவரும் சேர்ந்து தான் தலிபான்களை வழிநடத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன நாட்டின், அரசு செய்தி நிறுவனம், இது தொடர்பில் தெரிவித்திருப்பதாவது, சீன வெளியுறவுத் துறை அமைச்சரான, வாங் யீ  தொலைபேசியில், அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சரான, ஆன்டனி பிளிங்கனை தொடர்புகொண்டு ஆப்கானிஸ்தான் நிலை தொடர்பில் விவாதித்தார். அப்போது, அனைத்து நாடுகளும் தலீபான்களுடன் தொடர்பில் இருந்து, அவர்களுடன் பேச வேண்டும். மேலும், அனைவரும் சேர்ந்து தான் தலிபான்களை வழிநடத்த வேண்டும் என்று […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தான் நிலை தொடர்பில் விவாதம்.. பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகளின் முக்கிய முடிவு..!!

பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் ஆப்கானிஸ்தான் நாடு குறித்து முக்கிய நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளது. அமெரிக்கா திடீரென்று தன் படைகளை ஆப்கானிஸ்தானிலிருந்து திரும்பப்பெற தீர்மானித்தது. எனினும் பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் போன்ற பல நாடுகளுக்கு அந்த தீர்மானத்தில் சம்மதமில்லை. அமெரிக்கா திடீரென்று தன் படைகளை திரும்பப்பெற தொடங்கியது தான் தலிபான்களுக்கு நாட்டை கைப்பற்ற முக்கிய காரணமாக அமைந்து விட்டது. ஆனால், இதனை இப்படியே விட முடியாது என்று முடிவெடுத்த பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் இன்று ஐக்கிய […]

Categories
உலக செய்திகள்

பிரபல பாடகர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை.. தலீபான்கள் வெறிச்செயல்.. ஆப்கானிஸ்தானில் பரபரப்பு..!!

ஆப்கானிஸ்தானில் பிரபல நாட்டுப்புற பாடகரை, தலிபான்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆப்கானிஸ்தான் நாட்டில் இசைக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், தான் நாட்டுப்புற பாடகரான ஃபவாத் கொலை செய்யப்பட்டிருக்கிறார். ஃபவாத், நேற்று அவரின் வீட்டில் இருந்த சமயத்தில், திடீரென்று அங்கு சென்ற தலிபான்கள் அவரை வீட்டிலிருந்து வெளியே இழுத்து வந்து அவரின் தலையில் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தனர். #AFG “Fawad Andarabi a local singer was shot dead by Taliban […]

Categories
உலக செய்திகள்

“பிற நாடுகளுடன் நட்புறவை ஏற்படுத்த விரும்புகிறோம்!”.. எங்கள் நாட்டு மக்களை பயமுறுத்துவதில்லை.. -தலீபான் முதன்மை தலைவர்..!!

தலிபான்களின் முதன்மை தலைவர்களில் ஒருவராக இருக்கும் அப்துல் கஹார் பால்கி உலக நாடுகளுடன், தலீபான்கள் நட்புறவை ஏற்படுத்த விரும்புவதாக கூறியிருக்கிறார். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் இரண்டாம் தடவையாக கைப்பற்றியிருப்பதால், அவர்களின் ஆட்சிக்கு அஞ்சி மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகிறார்கள். எனவே, பிரிட்டன், அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகள் ஆப்கானிஸ்தானில் இருக்கும் தங்கள் மக்களுடன் சேர்த்து அந்நாட்டு மக்களையும் மீட்டு வருகிறது. இந்நிலையில் தலிபான்களின் முதன்மை தலைவர்களில் ஒருவராக இருக்கும் அப்துல் கஹார் பால்கி, முதல் தடவையாக ஒரு […]

Categories
உலக செய்திகள்

“மீட்பு பணிகளை முடித்துக்கொண்ட நாடுகள்!”.. தலீபான்கள் கட்டுப்பாட்டில் விமான நிலையம்.. காத்திருக்கும் மக்கள்..!!

காபூல் நகரில், பல நாடுகள் மீட்பு நடவடிக்கையை முடித்ததால், தலிபான்கள் விமான நிலையத்தின் அதிகமான பகுதியை அடைத்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடா, பிரிட்டன் போன்ற பல்வேறு நாடுகள், ஆப்கானிஸ்தானிலிருந்து, தங்கள் மக்களை மீட்கும் நடவடிக்கைகளை முடித்துவிட்டது. எனினும் தங்கள் நாட்டு மக்கள் உள்பட ஆப்கானிஸ்தானின் மக்களையும் கைவிட்டுத்தான் செல்கிறோம் என்பதையும் ஒப்புக்கொண்டு விட்டார்கள். ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி அன்று நாட்டை தலீபான்கள் கைப்பற்றினர். அதன்பின்பு, ஒட்டுமொத்தமாக ஒரு லட்சம் நபர்களை அங்கிருந்து மீட்டதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது. […]

Categories
உலக செய்திகள்

காபூல் விமானநிலையத்தில் 40 டாலருக்கு விற்கப்படும் தண்ணீர்.. பசியால் வாடிய குழந்தைகள்.. ஆறுதல் கொடுக்கும் இராணுவம்..!!

காபூல் விமானநிலையத்தில், அத்தியாவசிய பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதால், சில குழந்தைகள் தண்ணீரீன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி விட்டார்கள். எனவே, தங்கள் ஆட்சியை நிலைநாட்ட தீவிரமாக பல நடவடிக்கைகளை செய்து வருகிறார்கள். எனவே அவர்களின் கொடூர ஆட்சிக்கு அஞ்சிய மக்கள் நாட்டிலிருந்து வெளியேறி வருகிறார்கள். எனவே, காபூல் விமான நிலையத்தில் மக்கள் கூட்டம் குவிந்து காணப்படுகிறது. இந்நிலையில், காபூல் விமான நிலையத்தின் வெளியில், ஒரு தண்ணீர் பாட்டில் 40 டாலர்களுக்கு விற்கப்படுகிறது. அதாவது […]

Categories

Tech |