இளம் தாயான பெண் ஒருவர் தலீபான்களிடம் அனுபவித்த கொடுமைகளை கூறியதோடு, ஆப்கானிஸ்தான் பெண்களின் வருங்காலம் குறித்து வருத்தம் தெரிவித்திருக்கிறார். டெல்லியில் வாழ்ந்து வரும் Khatera என்ற 33 வயது பெண், தலிபான் தீவிரவாதிகளை எதிர்க்கும் பெண்களின் சடலங்கள் நாய்களுக்கு இரையாக்கப்படும் கொடுமைகள் இனிமேல் நடக்கும் என்று கூறியிருக்கிறார். தலிபான் தீவிரவாதிகளை எதிர்த்து குரல் கொடுத்ததால்தான், தன் இரு கண்களும் பறிபோனதாக கூறியிருக்கிறார். ஆப்கானிஸ்தான் நாட்டின், காஸ்னி பிராந்தியத்தில் வாழ்ந்த Khatera, கடந்த வருடம் தலீபான் தீவிரவாதிகளின் கடுமையான […]
Tag: தலீபான் தீவிரவாதிகள்
ஆப்கானிஸ்தான், தலீபான்கள் கட்டுப்பாட்டிற்கு சென்ற பின்பு, அவர்கள் கொலைப்பட்டியலை தயாரித்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, கொலை பட்டியல் தயாரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இனிமேல் பெண்கள் கொடுமைகளை சந்திப்பார்கள் என்றும், அவர்களின், வீட்டின் முன்பே கொல்லப்படலாம் என்றும் அச்சம் ஏற்பட்டுள்ளது. தலிபான்கள், தற்போது காபூலில் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று சோதனை மேற்கொள்ள தொடங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் காபூல் அரசுடன் பணிபுரிந்த இராணுவத்தினர், அதிகாரிகள், முன்னாள் காவல்துறை அதிகாரிகள் போன்றோரை குறிவைக்க […]
20 வருடங்களுக்குப்பின் காபூல் நகருக்குள் புகுந்த தலிபான் தீவிரவாதி கண்ணீர் விட்டு அழுத காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆப்கானிஸ்தானின் தலைநகரம் காபூல் நகரின் எல்லையை தலிபான் தீவிரவாதிகள் சூழ்ந்து கொண்டார்கள். இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் ஜனாதிபதி அரண்மனையில், தலீபான் தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதற்கிடையில், நாட்டின் ஜனாதிபதி அஷ்ரப் கனி, தன் பதவியை ராஜினாமா செய்தார். https://twitter.com/sanaayesha__/status/1426858054935478277 அதன்பின்பு, அலி அஹ்மத் ஜலாலி, இடைக்கால அரசின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 20 […]
தலீபான் தீவிரவாதிகள், காபூல் மாவட்டத்தில் புகுந்து, காபூல் நகரிலிருந்து 10 கி.மீ தொலைவில் இருப்பதாக தெரியவந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப்படைகள் வெளியேறியதிலிருந்து, தலிபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி மக்களை கொன்று குவித்து வருகிறார்கள். இதனால் பல மக்கள் தங்கள் ஊரைவிட்டு வெளியேறி வருகிறார்கள். இந்நிலையில், தலைநகர் காபூல் மாவட்டத்தில் தலிபான்கள் புகுந்துள்ளதாகவும், அவர்கள் காபூல் நகரிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் காபூலுக்கு தெற்கு பகுதியில் இருக்கும் பக்திகா […]
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான்கள் தாங்கள் கைப்பற்றிய பகுதிகளில் சுமார் 33 நபர்களை கொன்றதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் அரசை எதிர்த்து தலீபான் தீவிரவாதிகள் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்நாட்டின் அரசப்படையினருக்கு ஆதரவாக இருந்த அமெரிக்க படையினரும் வெளியேறினார்கள். இதனால் தலீபான்கள், நாட்டின் பல பகுதிகளை கைப்பற்றி வருகிறார்கள். இந்நிலையில் தலிபான்கள் தாங்கள் கைப்பற்றிய பகுதிகளிலிருந்து 33 நபர்களை கொன்று கொடூர செயலை செய்துள்ளார்கள். இதில் பழங்குடியின மக்கள், சமூக ஆர்வலர்கள், செய்தியாளர்கள், மத பண்டிதர்கள், […]
ஆப்கானிஸ்தான் நாட்டின் அதிபரான அஷ்ரப் கனி, சிறையிலிருந்து 5,000 தலீபான் பயங்கரவாதிகளை விடுவித்தது மிகப்பெரும் தவறு என்று கூறியிருக்கிறார். ஆப்கானிஸ்தான் நாட்டின் அரசபடையினருக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த அமெரிக்க படைகள் வெளியேற்றப்பட்டது. இதனால் தலீபான் பயங்கரவாதிகளின் அட்டூழியம் தொடங்கியுள்ளது. நாட்டின் அதிகமான பகுதிகளை கைப்பற்றி விட்டார்கள். இந்நிலையில் நேற்று, காபூல் நகரில் பக்ரீத் பண்டிகைக்கான சிறப்பு தொழுகை நடந்தது. அப்போது, பொதுமக்களிடம் பேசிய அதிபர், “தலீபான் பயங்கரவாதிகளிடம் அமைதியை ஏற்படுத்தும் நோக்கம் கிடையாது. அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட அமைதி […]
ஆப்கானிஸ்தான் நாட்டை கட்டமைப்பது எங்களது கடமை இல்லை என்று அமெரிக்க அதிபர் ஜோபைடன் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக அந்நாட்டின் அரசுக்கு ஆதரவாக இருந்த அமெரிக்க படைகளை வெளியேறுமாறு தலீபான் தீவிரவாதிகள் கேட்டுக்கொண்டனர். எனவே அதிபர் ஜோ பைடன், குறிப்பிட்ட நாளுக்கு முன்பாகவே தங்கள் படைகள் அனைத்தையும் ஆப்கானிஸ்தானிலிருந்து திரும்பப் பெற்று விட்டார். இதனால் தலீபான் தீவிரவாதிகளின் ஆட்டம் மீண்டும் நாட்டில் தொடங்கிவிட்டது. எனவே அமெரிக்க அரசு ஆப்கானிஸ்தானை கைவிட்டுவிட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு பதிலளித்த […]
ஆப்கானிஸ்தானில், தலீபான் தீவிரவாதிகள் 3 மாவட்டங்களை கடந்த சனிக்கிழமை அன்று இரவில் கைப்பற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் 20 வருடங்களாக அரச படையினருக்கும், தலீபான் தீவிரவாதிகளுக்கும் இடையே நடக்கும் மோதலை முடிவுக்கு கொண்டுவர தீர்மானித்த அமெரிக்க அரசு, மேற்கொண்ட ஒப்பந்தத்தில், தங்கள் படைகளை நாட்டிலிருந்து வெளியேற்றுவதாக தெரிவித்திருந்தது. அதன்படி ஆப்கானிஸ்தானின் பக்ராம் என்ற மிகப்பெரிய விமானப்படை தளத்திலிருந்து 20 வருடங்கள் கழித்து சமீபத்தில் அமெரிக்கா தங்கள் படையை திரும்பப்பெற்றது. இதனால் ஆப்கானிஸ்தானில், தலீபான்களின் ஆட்டம் அதிகரிக்க தொடங்கியது. நாட்டின் […]
வெள்ளை மாளிகை, ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்க படைகளை ஆகஸ்ட் மாத இறுதிக்குள் வெளியேற்றுவதாக தெரிவித்திருக்கிறது. ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளுக்கும் அரச படையினருக்கும் இடையே நீண்ட நாட்களாகவே மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. எனவே அந்நாட்டின் அரச படையினருக்கு ஆதரவாக அமெரிக்கா, நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானில் இறக்கப்பட்டது. சுமார் இருபது வருடங்களாக தொடர்ந்த இந்த மோதலில் தலீபான் தீவிரவாதிகளின் தாக்குதலால் அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. எனவே போரை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு […]
ஆப்கானிஸ்தான் நாட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் தலீபான் அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் 24 பேர் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் தீவிரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் குண்டூஸ் மாகாணத்தில் உள்ள பகுதிகளில் வீரர்கள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தலீபான் அமைப்பினருக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில் தலீபான் தீவிரவாதிகள் 24 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் . மேலும் 15 […]
ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாதிகள் போலியோ சொட்டு மருந்து செலுத்திய மருத்துவ பணியாளர்கள் 4 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் அரசபடையினர் மற்றும் தலீபான் தீவிரவாதிகளுக்கு இடையே கடந்த வருடம் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன் பின்பு தலீபான் தீவிரவாதிகள் அரசு பணியாளர்கள், ஊடகத் துறையை சேர்ந்தவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் போன்றோரை தொடர்ந்து கொலை செய்து வருகிறார்கள். இந்நிலையில் நாட்டில் மூன்று பகுதிகளில் போலியோ சொட்டு மருந்து செலுத்தும் […]
ஆப்கானிஸ்தான் தலைநகரின், பல இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானின் அரச படையினர் மற்றும் தலீபான் தீவிரவாதிகளுக்கு இடையே கடந்த 20 வருடங்களாக மோதல் ஏற்பட்டு வருகிறது. எனவே அமெரிக்கா, அரச படைக்கு ஆதரவாக தங்கள் நேட்டோ படைகளை ஆப்கானிஸ்தானில் களமிறக்கியது. ஆனால் அமைதிப் பேச்சுவார்த்தையின் போது தலீபான்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து பிற நாட்டு படைகள் வெளியேறுமாறு கோரினர். எனவே, அமெரிக்கா தன் படைகளை திரும்பப்பெற்றது. இதனையடுத்து மீண்டும் ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாதிகளின் […]