அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலையை அகற்றவும் எடப்பாடி பழனிச்சாமியின் மனுவை ஏற்று சாவியை அவரிடம் ஒப்படைக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 11ஆம் தேதி எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் இடையே பிரச்சனை ஏற்பட்டது. அதில் அதிமுக அலுவலகத்தின் கதவை உடைத்து தனது ஆதரவாளர்களுடன் ஓ பன்னீர்செல்வம் நுழைந்தார். இரு தரப்பினர் இடையே மீண்டும் மோதல் ஏற்படும் சூழ்நிலை உள்ளதால் வருவாய் துறை […]
Tag: தலைமை அலுவலகம்
அதிமுக தலைமை அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு நேற்று வானகரத்தில் நடைபெற்றது. ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ பன்னீர்செல்வம் அவரின் ஆதரவாளர்கள் மற்றும் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் என இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் பெரிய கலவரமாக மாறியது. இதை போலீசார் பெரும் போராட்டத்திற்கு பின்பு கட்டுக்குள் கொண்டு வந்தனர். வருவாய் துறை அதிகாரிகள் அதிமுக அலுவலகத்திற்குள் நுழைந்தனர். அதிமுக அலுவலகத்தை சீல் வைக்கும் நடவடிக்கையில் இறங்கினர். […]
அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருந்தது. உள்ளே கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது வெளியில் அதிமுக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகியோர் படங்கள் இருந்தது. இதில் ஓபிஎஸ் படம் மட்டும் கிழிக்கப்பட்டது. இது குறித்து கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து தொண்டர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. அத்துடன் அதேபோன்ற பேனர் அங்கு உடனே வைக்கப்பட வேண்டுமென உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் […]
சென்னை, தலைமைச் செயலகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து 25.01.2021 முதல் 14.02.2021 வரை இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை காலிப்பணியிடங்கள்: அலுவலக உதவியாளர் – 12 அலுவலக உதவியாளர் வயது வரம்பு: 01.01.2020 அன்றுள்ளவாறு 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும். கல்வி தகுதி: தமிழ்நாடு […]