சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் வேளாண்மை உற்பத்தி ஆணையர், அரசு செயலாளர், துறை தலைவர்கள், அங்கக வேளாண் பிரதிநிதிகள் மற்றும் அங்கக வேளாண்மை அரசு சாரா பிற நிறுவனங்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தின் போது தமிழகத்தில் அங்கக வேளாண்மை கொள்கையை உருவாக்குதல் தொடர்பான முக்கிய ஆலோசனைகளை இறையன்பு கூறினார். இதுகுறித்து இறையன்பு கூறியதாவது, இந்த கொள்கையில் 5 வருடங்களுக்கு பிறகு ஆய்வு செய்து தேவையான திருத்தங்களை மேற்கொள்ளலாம். இந்த அங்கக வேளாண்மையை […]
Tag: தலைமை செயலாளர்
தலைமைச் செயலாளரின் வங்கி கணக்கில் இருந்து பணம் திருட முயற்சி செய்த நபர் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தின் தலைமைச் செயலாளர் அமீர் சுபானி. இவருடைய வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை நேற்று முன் தினம் யாரோ சில மர்ம நபர்கள் ஹேக் செய்து திருட முயற்சி செய்துள்ளனர். அதன்படி ரூ. 90 ஆயிரம் பணத்தை திருடுவதற்கு முயற்சி நடந்துள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் காவல்துறையினரிடம் அமீர் சுபானி புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு […]
தலைமைச் செயலாளர் இறையன்பு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, அரசு அலுவலகங்களில் எழில் மிகு அலுவலகம் என்பதை உருவாக்குவதற்காக செலவு இல்லாத பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் சிறப்பாக செயல்பட்டு முந்தைய மற்றும் தற்போதைய நிலையை விவரிக்கும் வகையில் நிழற்படங்களை உருவாக்கி அனுப்பி வைத்ததற்கு என்னுடைய பாராட்டுகள். இதேபோன்று நாம் நாள்தோறும் வேலை பார்க்கும் அலுவலகங்களை தூய்மையாகவும் சுத்தமாகவும் வைத்திருக்க […]
தமிழகத்தில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வு அறை அமைக்க வேண்டும் என தலைமைச் செயலாளர் இறையன்பு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அரசு மருத்துவமனைகளில் தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வரை அவசியம் என அவர் தெரிவித்த நிலையில் தூய்மை பணியாளர்கள் அமர்ந்து இளைப்பாற, உணவருந்த போதிய வசதிகளை ஏற்படுத்தித் தருவதற்கு உத்தரவிட்டார். மேலும் அரசு அலுவலக தலைமை அலுவலர்கள் மூலமாக வசதிகளை செய்து தந்து புகைப்படங்களுடன் அறிக்கை அனுப்ப அனைத்து ஆட்சியர்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.அதேசமயம் அரசு அலுவலகங்களில் […]
அனைத்து அரசு அலுவலகங்களிலும் தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வு வரை அமைக்க தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார். அரசு மருத்துவமனைகளிலும் தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வு வரை அமைப்பது அவசியம் என்றும் தலைமைச் செயலர் குறிப்பிட்டிருக்கிறார். அனைத்து மாவட்ட ஆட்சியருக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு இந்த வலியுறுத்தலை விடுத்திருக்கிறார். அரசு அலுவலகங்களில் பொதுமக்களுக்கான கழிப்பறைகள் இல்லாவிட்டால் அங்கு உடனடியாக கழிப்பறைகளை அமைக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார். தூய்மை பணியாளர்கள் இளைப்பாறவும், உணவு உண்ணவும் அவருக்கான வசதியை ஏற்படுத்தி […]
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேசிய பேரிடர் மீட்பு படை, ஒன்றிய நீர்வள ஆணையம், இந்திய வானிலை ஆய்வு மையம், கடலோர காவல் படை, கப்பற்படை, விமானப்படை, ராணுவம் உள்ளிட்ட துறையைச் சேர்ந்த அரசு […]
தலைமைச் செயலாளர் மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். தலைமைச் செயலாளர் இறையன்பு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அதில் அதில் ஜாதி பாகுபாடு காரணமாக 75-வது சுதந்திர தின விழாவில் ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் கொடி ஏற்றுவதில் சிக்கல் இருந்தது. இதன் காரணமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர்கள் முறையாக ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் தேசியக்கொடியை ஏற்றுகிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும் எனவும் […]
தலைமை செயலாளர் இறையன்பு அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களுக்கும் ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். தலைமைச் செயலாளர் இறையன்பு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அதில் நாடு முழுவதும் 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட இருக்கிறது. இந்த சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னையில் உள்ள தலைமைச் செயலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் கண்டிப்பாக தேசியக்கொடியை ஏற்ற வேண்டும். இந்த தேசிய கொடியை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட […]
நீதிமன்ற உத்தரவை 10 நாட்களுக்குள் நிறைவேற்றாவிட்டால் தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி கூறியுள்ளார். சென்னை மாநகராட்சியில் உள்ள வேளச்சேரி மற்றும் தரமணி உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால்கள் உள்ளது. இந்த வடிகால்களை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. இது தொடர்பாக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு விசாரணை செய்தது. அப்போது நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அதிகாரிகள் கண்டுபிடித்து மார்ச் 31-ஆம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என கடந்த […]
தலைமைச் செயலாளர் இன்று அவசர ஆலோசனை கூட்டத்தை நடத்த இருக்கிறார். தமிழகத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டி சென்னையில் உள்ள மாமரபுரத்தில் நடக்கிறது. இப்போட்டி ஜூலை 28-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெறும். இதில் உலக அளவில் 186 நாட்டைச் சேர்ந்த 2000 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். கடந்த 6-ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் இலட்சினை மற்றும் சின்னத்தை ரிப்பன் வளாகத்தில் […]
வெளிநாடுகளில் பரவிவரும் ஒமைக்ரான் வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் இந்த வைரஸ் பரவி விடக்கூடாது என்பதற்காக அரசு கடும் தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. விமான நிலையங்களில் கூடுதல் கண்காணிப்பு பணி தீவிரமாக பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் வரையறுக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகளை கண்காணிப்பதற்கு ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த வைரஸ் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று […]
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெற்று முதல்வராக மு.க.ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து அரசு வேகமாக செயல்பட்டு வருகிறது. முதல்வர் ஸ்டாலின் வேகத்திற்கு அரசு அதிகாரிகளும் ஈடுகொடுத்து செயல்பட்டு வருகின்றனர். அதில் இந்திய ஆட்சிப் பணியில் தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி அனுபவம் கொண்டிருந்த தலைமைச் செயலர் இறையன்பு மிகவும் சிறப்பாக பணியாற்றி வருகிறார். இதனால் அவருக்கு பல்வேறு தரப்பினர்கள் […]
தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள், நீர்வழிப் பாதைகள், நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள புறம்போக்கு நிலங்களில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை தடுக்கும் பொருட்டு, ஒவ்வொரு துறையிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டமானது அண்மையில் தமிழகத் தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகள், நீர்வழிப் பாதைகள், நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள புறம்போக்கு நிலங்களை எந்த காரணத்திற்காகவும் ஆவணப் பதிவு செய்யக்கூடாது என பதிவு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி போட தகுதியான நபர்களில், 73 சதவீதம் பேருக்கு, முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் தவணை தடுப்பூசி 35 சதவீதம் நபர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. அனைவருக்கும் விரைவில் தடுப்பூசி கிடைத்திடும் வகையில், வாரம்தோறும் ஒரு சிறப்பு தடுப்பூசி முகாமுக்கு பதிலாக, இரண்டு சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதையடுத்து இதுவரை கொரோனா தடுப்பூசி போடாத மக்களின் பட்டியல், தெரு வாரியாகவும், […]
இந்தியாவிலும் ஜவுளித் துறையின் பங்கு மிக முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.உள்நாட்டு பயன்பாட்டிற்கு மட்டும் அல்லாமல் பல்வேறு வெளிநாடுகளுக்கும் ஜவுளி ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. அதற்கு அடிப்படையாக நூல் விளங்குகிறது. அதன் விலை கட்டுக்குள் இருந்தால் தான் ஜவுளித் தொழில் சீரான முறையில் நடைபெறும். ஆனால் கடந்த சில நாட்களாக நூல் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இது தொடர்பாக பல்வேறு தொழில் துறை அமைப்பினரும் முக் கிய கோரிக்கைகளை முன் வைத்தனர். அதாவது நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த […]
தலைமை செயலாளரை மாற்றக்கோரி மிசோரம் மாநில முதலமைச்சர் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். மிசோரம் மாநிலத்தின் தலைமை செயலாளராக லால்னுமாவியா சாகோ இருந்தார். இவர் ஓய்வு பெற்ற பின்பு மத்திய உள்துறை அமைச்சகம் புதிய தலைமைச் செயலாளராக கடந்த மாதம் 29 ஆம் தேதி ரேணு சர்மாவை நியமனம் செய்தது. ஆனால் ரேணு சர்மாவுக்கு ஹிந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமே தெரியும். குறிப்பாக மிசோ மொழி தெரியாது என்பதால் நிர்வாக ரீதியாக பல இன்னல்கள் எழுந்தது. […]
சென்னை திருவொற்றியூர் அண்ணாமலை நகரில் கணேஷ் ராமன்(36) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த மார்ச் மாதம் 100 கிராம் தங்க நாணயத்தை வாங்கி ஒரு கவரில் போட்டு வீட்டின் கட்டிலுக்கு கீழ் வைத்துள்ளார். இது தெரியாத அவரது மனைவி வீட்டை சுத்தம் செய்யும்போது அந்த கவரை குப்பையில் போட்டுள்ளார். இதுகுறித்து கணேஷ் ராமன் சாத்தாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் தூய்மைப் பணியை மேற்கொள்ளும் தனியார் ஒப்பந்த நிறுவனம் மேற்பார்வையாளர் செந்தமிழ் செல்வன் என்பவரிடம் […]
தமிழகம் கொரோனா பரவலை மற்ற மாநிலங்களை விட மிக விரைவாக கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. இதற்கு மிக முக்கியக் காரணமாக தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்படுத்தி தடுப்பூசி முகாம் மூலம் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தியது. தமிழகத்தில் இதுவரை 5,12, 46 , 870 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக ஞாயிற்றுக்கிழமை மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு ஒரே நாளில் பல லட்ச நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதனால் இந்த […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் சில மாவட்டங்களில் மக்களை கவரும் வகையில் பல்வேறு பரிசுகள் அறிவிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்த ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடுவதை அதிகரிக்க ஞாயிறுதோறும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வரும் நிலையில், பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதை விரைவு படுத்துமாறு அனைத்து மாவட்ட […]
தமிழக அரசின் அண்ணா மேலாண்மை நிலையத்தை, அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி என பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள செய்தியில், அண்ணா மேலாண்மை நிலையம் இனிவரும் நாட்களில் இருந்து அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி என்று அழைக்கப்படும். மேலும் நிர்வாக பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் நிறுவனம் தான் அண்ணா மேலாண்மை நிறுவனம் என்பதை கருத்தில் கொண்டு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இளநிலை உதவியாளர்கள் முதல் இந்திய […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கும் அரசு பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது. அதன்படி கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் பற்றிய முழுமையான விவரங்களை மருத்துவமனைகள் வழங்க வேண்டும் என தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் பெயர், விலாசம்,வயது மற்றும் பிற தகவல்களை […]
தமிழகத்தில் தீவிர முழு ஊரடங்கு அமல் படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் ஏற்கனவே மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் மக்கள் அத்தியாவசிய தேவைக்காக மட்டும் வீட்டை […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை நாளுக்கு நாள் வேகமெடுத்து வருகிறது. இதில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிப்பு அதிக அளவில் இருப்பதன் காரணமாக அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் தனியார் மருத்துவமனைகளுக்கும் செல்ல வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதை பயன்படுத்தி ஒரு சில தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன மேலும் தற்போது ஆக்சிஜன் தட்டுப்பாடும் நிலவியுள்ளது. இதன் […]
தமிழகத்தில் சனி மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு அமல்படுத்துவது பற்றி தலைமைச் செயலாளர் இன்று ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு […]
பிளஸ் டூ தேர்வு குறித்து தலைமை செயலாளர் ராஜன் தலைமையிலான கூட்டம் இன்று மாலை ஆலோசனை செய்கின்றது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுக்குள் வைக்க பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மாநில அரசு செய்து வருகின்றது. இதன் காரணமாக நேற்று நாடு முழுவதும் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்வதாகவும், பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை ஒத்தி வைப்பதாகவும் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் 12 ஆம் […]
தமிழகம் முழுவதும் 800 க்கும் அதிகமான கட்டுப்பாட்டு பகுதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு பொரோனோ பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதனால் தற்போது வரை பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள். ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் சற்று குறைந்து இருந்த தொற்று தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் முடிந்த பிறகு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இருப்பினும் தற்போது […]
தலைமைச் செயலாளர் சண்முகம் IAS அலுவலர்கள் தங்கள் சொத்து விவரங்களை வரும் ஜனவரி 31ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். தலைமைச் செயலாளர் சண்முகம் IAS அலுவலர்களுக்கு சொத்து விவரத்தை சமர்பித்தல் தொடர்பாக கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், “கடந்த 2011ம் ஆண்டிலிருந்து IAS அலுவலர் பணியில் இருப்பவர்கள் தங்கள் பெயரிலும், தங்களுடைய குடும்பத்தினர் பெயரிலும் மற்றும் பிற தனிநபர் பெயரில் இருக்கும் அசையாத சொத்துக்ளின் விவரங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பிப்பது நடைமுறையில் இருக்கிறது. […]
தமிழக தலைமைச் செயலாளரான கே. சண்முகம் ஓய்வு பெறவிருக்கும் நிலையில் அடுத்த தலைமை செயலாளராக ஹன்ஸ் ராஜ் வர்மா நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டின் 46வது தலைமைச் செயலாளராக கே. சண்முகம் கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி பதவியேற்றார். அவர் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலையில் 60 வயதை கடந்தார். அதுவே ஐஏஎஸ் அதிகாரியின் பணி ஓய்வு வயதாகும். அதன்படி கடந்த ஜூலை 31-ஆம் தேதியுடன் அவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும் […]
தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர்களுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கை பற்றி தலைமைச் செயலாளர் கே.சண்முகம் நாளை ஆலோசனை கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன், தலைமைச் செயலாளர் கே.சண்முகம் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறார். அவ்வகையில் நாளை பிற்பகல் 3 மணி அளவில், காணொலிக் காட்சி […]
கொரோனவை கட்டுப்படுத்த மாவட்டங்களில் கடும் நடவடிக்கைகளை எடுங்கள் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் அறிவுறுத்தலை வழங்கியுள்ளார். தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு மிக முக்கிய கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும். கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பரிசோதனைகளை பொறுத்தவரை அதிக அளவில் பரிசோதனையை மேற்கொள்ளுங்கள். கொரோனா உறுதி செய்யப்பட்டருடம் தொடர்பில் இருந்த அனைவருமே பரிசோதனை செய்ய வேண்டும். காய்ச்சல் தொடர்பான முகாம்களையும் அமைக்க […]
சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை நள்ளிரவு முதல் முழு ஊரடங்கு அமலாகிறது. முழு ஊரடங்கு அமலாகும் போது, கண்காணிப்பை தீவிரப்படுத்த தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். நோய் தடுப்பு பகுதிகளில் பொதுமக்களின் நடமாட்டத்தை குறைக்கும் வகையில், கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அத்தியாவசிய தேவைக்காக வெளியில் வரும் மக்கள் தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பதை உறுதி செய்யவேண்டும் என குறிப்பிட்டுள்ளார். அத்தியாவசிய தேவைக்காக வரும் மக்கள் மாஸ்க் அணிவதை மாநகராட்சி அதிகாரி, மாவட்ட நிர்வாகம் உறுதி […]
தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று தலைமை செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் 3 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவி காலம் என்பது மேலும் மூன்று மாதங்கள் நீட்டித்து அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று மத்திய அரசு அதற்கான ஒப்புதலை வழங்கி இருக்கிறது. வருகின்ற 31.07.2020ஆம் தேதியோடு தலைமைச்செயலாளரின் பதவிக்காலம் முடிவடைகின்றது. இந்த நிலையில் மேலும் மூன்று மாதங்கள் நீட்டிக்க வேண்டும் என்று தமிழக அரசு மத்திய அரசுக்கு பரிந்துரை […]
தமிழகத்தில் வழிபட்டு தளங்கள் திறப்பது குறித்து சமய தலைவருடன் தலைமை செயலாளர் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார். வருகின்ற எட்டாம் தேதி முதல் கோவில்கள் வழிபாட்டுத் தளங்களை என மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் அதுதொடர்பாக சாத்தியக்கூறுகள் குறித்து ஆலோசிப்பதற்காக அனைத்து சமய தலைவர்களுடன் தமிழக அரசு ஆலோசனை நடத்த தலைமை செயலாளர் அழைப்பு விடுத்திருந்தார். அந்த கூட்டம் தற்போது நடைபெற்று வருகின்றது. 8ஆம் தேதிக்கு பிறகு கோயில்கள் மற்றும் வழிபாட்டு தலங்களை திறக்கும் போது ஏற்படக் […]
வெளிநாட்டு முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்க்க அமைக்கப்பட்ட சிறப்பு குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை தலைமை செயலகத்தில் தொழில் நிறுவனங்களை ஈர்ப்பதற்கான சிறப்பு குழு கூட்டம் தொடங்கியுள்ளது. தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் அரசு அதிகாரிகள், அயல்நாட்டு பிரதிநிதிகளுடன் தலைமை செயலாளர் ஆலோசனை நடத்தி வருகிறார். வெளிநாடுகளில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை ஈர்ப்பதற்கான குழுவும் இந்த ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். தமிழக அரசு அமைத்த சிறப்பு குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. […]
பிற பகுதிகளில் இருந்து வரும் அனைவருக்கும் கொரோனா சோதனை நடத்தவேண்டும் என்று தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். தமிழக தலைமை செயலாளர் சண்முகம் அனைத்து மாவட்ட ஆட்சியருக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்ப கூடிய புலம்பெயர் தொழிலாளர்கள், மாணவர்கள் சுற்றுலாப்பயணிகளின் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை என்பது கட்டாயம் நடத்தப்பட வேண்டும். 14 நாட்கள் அவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்க வேண்டும் என தலைமை செயலாளர் அந்த அறிக்கையில் உத்தரவிட்டிருக்கிறார். ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு […]
கொரோனா தாக்கம் காரணமாக வெளிநாடுகளில் இருந்து வெளியேறும் தொழில் நிறுவனங்களை தமிழகத்திற்கு ஈர்க்க சிறப்பு குழு அமைக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் நிலவி வருகிறது. இதுவரை லட்சக்கணக்கானோர் கொரோனா வைரஸிற்கு பலியாகியுள்ள நிலையில், வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்கள் பலவும் வெளியேறி வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா தாக்கம் காரணமாக வெளிநாடுகளில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை தமிழகத்திற்கு ஈர்க்க சிறப்பு குழு அமைக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். வெளிநாட்டு நிறுவனங்களை தமிழகத்திற்கு கொண்டு […]
இந்த ஆண்டு நோம்பு கஞ்சி பள்ளிவாசல்களில் காய்ச்சப்படாது என தலைமை ஹாஜி சலாவுதீன் கூறியுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் ரமலான் நோன்பை பாதுகாப்பாக கடைப்பிடிப்பது குறித்து இஸ்லாமிய அமைப்பினருடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பின்னர் பேட்டியளித்த தலைமைச் செயலாளர், தராவீஹ் சிறப்பு தொழுகையை வீட்டிலேயே நடத்தி கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளார். மேலும் இந்த ஆண்டு நோம்பு கஞ்சி பள்ளிவாசல்களில் காய்ச்சப்படாது என தலைமை ஹாஜி சலாவுதீன் கூறியுள்ளார். ரமலான் நோம்பு கஞ்சிக்கான […]
ஊரடங்கு குறித்து பிரதமர் மோடி அறிவிக்கும் அறிவிப்பை தமிழ்நாடு முழுமையாக கடைபிடிக்கும் என்று தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்தார். கொரோனா பாதிப்பு குறித்து தலைமை செயலாளர் சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தனிமைப் படுத்தப்பட்ட பகுதிகள், கொரோனா கட்டுப்படுத்துதல் பகுதிகளில் ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் பரிசோதனை நடத்தப்படும்.ஊரடங்கு நீட்டிப்பு குறித்து நாடு தழுவிய முடிவை பிரதமர் மோடி அறிவிப்பார். பிரதமரின் அறிவிப்பை ஏற்று செயல்படுத்துவோம். ஊரடங்கு கடைபிடிக்கும் மக்களுக்கு பிரதமர் மோடி நன்றியும், பாராட்டும் […]
தமிழகத்தில் 5 பேரிடம் இருந்து 72 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது என்று தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்தார். கொரோனா பாதிப்பு குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் கூறுகையில், தமிழகத்தில் புதிதாக 77 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 834 லிருந்து 911 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்ட 77 பேரும் தனிமைபடுத்தபட்ட பகுதியில் இருந்தவர்கள். கொரோனா அறியப்பட்டவர்கள் 5 பேர் […]
தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்துவது குறித்து அனைத்து துறை செயலாளர்களுடன் தலைமை செயலாளர் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமலாக உள்ள நிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. 144 தடை தடை காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் அறிவுரை வழங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து துறை செயலாளர்களும் பங்கேற்றுள்ளனர். அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் எவ்வித […]