ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க் எந்த நிறுவனத்திலும் தலைமை செயல் அதிகாரியாக இருப்பதற்கு எனக்கு விருப்பம் கிடையாது என்று கூறியிருக்கிறார். உலக பணக்காரர்களில் ஒருவராக இருக்கும் எலான் மஸ்க், டெஸ்லா என்னும் உலகின் மிகப்பெரிய வாகன உற்பத்தி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கிறார். இந்நிலையில், அந்நிறுவனத்தின் பங்குதாரராக இருக்கும் ரிச்சர்ட் ஜே. டோர்னெட்டா அவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருக்கிறார். கடந்த 2018 ஆம் வருடத்தில், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த எலான் […]
Tag: தலைமை செயல் அதிகாரி
ரஷ்ய நாட்டில் இனிமேல் பார்முலா-1 வாகன பந்தயம் எப்போதும் நடக்காது என்று அதன் சிஇஓ அறிவித்திருக்கிறார். ரஷ்ய நாட்டின் சாச்சி நகரத்தில் இந்த வருடம் பார்முலா-1 வாகன பந்தயம் நடக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போரால் பந்தயம் நடப்பது ரத்தானது. இந்நிலையில், ஃபார்முலா-1 அமைப்பினுடைய சிஇஓவாக இருக்கும் ஸ்டெஃபனோ டாமினிகலி, ரஷ்ய நாட்டில் இனிமேல் பார்முலா-1 வாகன பந்தயம் நடக்காது என்று கூறியிருக்கிறார். மேலும் அந்நாட்டு அரசுடன் இது குறித்து பேச்சு […]
ட்விட்டர் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான ஜாக் டோர்சி, இயக்குனர் குழுவிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றிய ஜாக் டோர்சி, தன் பதவியை கடந்த நவம்பர் மாதத்தில் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து அவர் மீண்டும் அதே பதவியில் நியமிக்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தலைமை செயல் அதிகாரி பதவிக்கு நான் மீண்டும் வரமாட்டேன் என்று அவர் விளக்கமளித்திருக்கிறார். இந்நிலையில் ட்விட்டர் நிறுவனத்தின் இயக்குநர் குழுவிலிருந்தும் தான் விலகுவதாக அறிவித்திருக்கிறார்.
ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கையகப்படுத்தியிருப்பதால் அந்நிறுவனத்தின் எதிர்காலம் நிச்சயமில்லாமல் இருக்கிறது என்று தலைமை செயல் அதிகாரி ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். உலகின் பிரபலமான இணையதளங்களில் ஒன்றாக விளங்கும் ட்விட்டர் நிறுவனத்தின் கருத்து சுதந்திரம் பறிக்கப்படுகிறது என்று விமர்சித்து வந்த உலகப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் சமீபத்தில் அந்நிறுவனத்தின் 9.1% பங்குகளை வாங்கிவிட்டார். அதனைத்தொடர்ந்து அந்நிறுவனத்தை மொத்தமாக 43 பில்லியன் டாலருக்கு வாங்க தயாராக உள்ளேன் என்று கூறியிருந்தார். ஆனால் ட்விட்டர் நிறுவனம் அதனை ஏற்க மறுத்துவிட்டது. […]
உலகப் பணக்காரர்களில் ஒருவராக திகழும் எலான் மஸ்க், தங்கள் நிறுவனத்தினுடைய 9.2% பங்குகளை வாங்கியிருப்பதாக ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வால் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனங்களின் நிறுவனராக இருக்கும் எலான் மஸ்க், உலகப் பணக்காரர்களில் முதல் நிலையில் உள்ளார். உலக நாடுகளுக்கு டெஸ்லா நிறுவனத்தின் தயாரிப்பான மின்னணு வாகனத்திற்கு அதிக வரவேற்பு இருக்கிறது. இந்நிலையில், அவர் சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தினுடைய 9.2% பங்குகளை வாங்கியுள்ளார். அதனைத்தொடர்ந்து நிறுவனத்தினுடைய 7.3 […]
ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான டிம் குக் தன் ட்விட்டர் பக்கத்தில் தமிழ்நாட்டு மாணவர்களை பாராட்டியிருக்கிறார். தமிழகத்தில் உள்ள சுமார் 40 உயர்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் ஐபோன் 13 மினியில் புகைப்படங்கள் எடுத்தனர். அந்த புகைப்படங்கள், சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் மாணவர் காட்சிப் பெட்டியில் வைத்துள்ளனர். “தங்கள் சமூகங்களின் அதிர்வு” தொடர்பில் தமிழ்நாட்டு மாணவர்கள் எடுத்த புகைப்படங்கள், ‘லேண்ட் ஆப் ஸ்டோரீஸ்’ என்று பெயரிடப்பட்டிருக்கும் கண்காட்சியில் தகுதி பெற்றிருக்கின்றன. இந்நிலையில், ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் […]
ட்விட்டர் நிறுவனத்தின் CEO ஆக பதவியேற்ற பராக் அகர்வாலின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ட்விட்டர் நிறுவனம் உலகின் மிகப்பெரிய இணையதள நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது. அந்நிறுவனத்தின், தலைமை செயல் அதிகாரியாக இருந்த ஜாக் டோர்சி , தன் பதவியை இராஜினாமா செய்தார். அதன்பின்பு, இந்தியாவைச் சேர்ந்த பராக் அகர்வால் புதிய தலைமை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டார். அமெரிக்க நாட்டின் பிரபல நிறுவனத்தில் மற்றொரு இந்தியர் முக்கிய பொறுப்பு வகிப்பது அதிக கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்தியாவின் பல […]
இந்தியாவைச் சேர்ந்த இளைஞர் ட்விட்டரில் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். ட்விட்டர், உலக அளவில் பிரபலமான சமூகவலைதளங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்நிலையில், அந்நிறுவனத்தின், CEO-வாக இருந்த ஜாக் டோர்சி நேற்று, பதவி விலகியதைத் தொடர்ந்து ட்விட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை அதிகாரியாக இந்தியாவை சேர்ந்த பரக் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், பத்து வருடங்களுக்கு முன்பே ட்விட்டர் நிறுவனத்தில் 1000-த்திற்கும் குறைவான ஊழியர்கள் இருந்த சமயத்தில் பணிக்கு சேர்ந்திருக்கிறார். அதன் பின்பு, தன் கடின உழைப்பை […]
முகநூலின் பெயர் மெட்டா என்று மாற்றப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்திருக்கிறார். முகநூல் இணையதள நிறுவனமானது, மெய்நிகர் இணையதள உலகமாக இருக்கும் “மெட்டாவெர்ஸ்” பக்கம் தன் கவனத்தைத் திருப்பியிருக்கிறது. எனவே, பேஸ்புக் என்ற பெயரை மாற்றுவதற்கு தீர்மானித்திருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் பேஸ்புக் நிறுவனத்தினுடைய கனெக்ட் விர்ச்சுவல் ரியாலிட்டி மாநாட்டில் இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் ஜூக்கர்பெர்க் கூறியிருப்பதாவது, சமூக வலைதளங்களில் முன்னணியாக இருக்கும் பேஸ்புக் நிறுவனத்தின் பெயர் மாற்றப்பட்டிருக்கிறது. "It is […]