Categories
அரசியல் மாநில செய்திகள்

கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பி பணியிடமாற்றம் – தேர்தல் ஆணையம் உத்தரவு

கரூர் மாவட்ட ஆட்சியர் மலர்விழி மற்றும் எஸ்பி மகேஸ்வரனை  மாற்றம் செய்து  தேர்தல் ஆணையம் உத்தரவை பிறப்பித்துள்ளது. தேர்தல் பணிகள் தொடர்பாக புகார்கள் வந்ததையடுத்து கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பி மகேஸ்வரன்  ஆகிய இருவரையும் தேர்தல் அல்லாத பணிகளுக்கு  மாற்ற செய்து தேர்தல் ஆணையம்  உத்தரவிட்டுள்ளது.  இவர்களுக்கு பதிலாக கரூர் ஆட்சியராக பிரசாந்த் வடநரே, மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சஷாங் சாய்  நியமிக்கப்பட்டுள்ளனர். கோவை காவல்துறை துணை ஆணையராக ஜெயச்சந்திரன் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். Advertisement  

Categories
தேசிய செய்திகள்

உத்திரபிரதேசத்தில் காலியாகும்… 11 பதவிகள்… நவம்பர் மாதம் தொடங்கும் தேர்தல்… இன்று வெளியான அறிவிப்பு…!!!

உத்திரப் பிரதேசத்தில் 11 பாராளுமன்ற மேலவை இடங்களுக்கான தேர்தல் வருகின்ற நவம்பர் மாதம் ஒன்பதாம் தேதி நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. உத்திரப்பிரதேசம் மற்றும் உத்திரகாண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பாராளுமன்ற மேலவையின் 11 உறுப்பினர்களின் பதவிக்காலம் வருகிற நவம்பர் மாதம் 25-ம் தேதியுடன் முடிவடைகிறது.அதில் உத்திரபிரதேசத்தில் 10 இடங்கள் மற்றும் உத்தரகாண்டில் ஒரு இடம் காலியாகும். அந்த பதவிக்கான இடங்களை நிரப்புவதற்கான தேர்தல் அறிவிப்பை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று […]

Categories

Tech |