ஸ்ரீ ஜெயவிலாஸ் நிறுவனத் தலைவர் T.R.தினகரன் வயது மூப்பு காரணமாக உ யிரிழந்தார். மதுரை, அருப்புகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பலரின் குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் கொடுத்த அவரின் மறைவு அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரின் இறுதிச் சடங்கு இன்று மாலை அருப்புக்கோட்டையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற உள்ளது. அவரின் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Tag: #தலைவர்
வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் வசிக்கும் தமிழர்களின் நலன் பேண புலம்பெயர் தமிழர் நல வாரியம் – தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”தொண்டு செய்வாய் – துறை தோறும் துறை தோறும் துடித்தெழுந்தே” என்ற வாசகத்தை நெஞ்சில் நிலை நிறுத்தி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் காட்டிய வழியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்களது தலைமையிலான தமிழக அரசு நாள்தோறும் பல்வேறு நலத்திட்டங்களை […]
பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை 2024 -ஆம் வருடம் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக நாளை மாவட்ட தலைவர் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த இருக்கிறார். இந்நிலையில் தி.நகரில் உள்ள பாரதிய ஜனதா மாநில தலைமையகமான கமலாலயத்தில் நாளை காலை 10 மணி முதல் மாலை வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு ஆலோசனை நடத்துகிறார். மேலும் இதில் கலந்துகொள்வதற்காக மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர் போன்றவர்கள் […]
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி அமைக்கப்படும் எனும் அறிவிப்பு சென்ற 2015ம் வருடம் பிப்ரவரியில் வெளியாகியது. இதையடுத்து மதுரை தோப்பூரில் அதற்கான இடம் தோ்வுசெய்யப்பட்டு கடந்த 2019ம் வருடம் பிரதமா் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. அதற்குரிய கட்டுமானப் பணிகளானது இதுவரை நிறைவடையாத சூழ்நிலையில், ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூயில் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கான MBBS வகுப்புகள் கடந்த வருடம் முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மதுரை எய்ம்ஸ் தலைவர்ஆக நரம்பியல் சிறப்பு மருத்துவரான வி.நாகராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். […]
எய்ம்ஸ் மருத்துவமனைக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2015-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அரசு அறிவிப்பை வெளியிட்டது. இதனையடுத்து கடந்த 2018-ஆம் ஆண்டு மதுரை மாவட்டத்திலுள்ள தோப்பூரில் இடம் தேர்வு செய்யப்பட்டது. பின்னர் 2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27-ஆம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்நிலையில் 2021-ஆம் ஆண்டு ஜப்பானின் ஜைக்கா நிறுவனத்துடன் கடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் ஒன்றரை ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது வரை மதுரை […]
மத்திய பிரதேச மாநிலத்தின் காங்கிரஸ் தலைவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். மத்திய பிரதேசத்தின் காங்கிரஸ் தலைவரான கமல்நாத் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது காங்கிரஸ் கட்சி அழிந்துவிட்டது என நினைக்காதீர்கள். மேலும் சிலர் காங்கிரசில் இருந்து வெளியேறி பாஜகவில் இணைய விரும்புகிறார்கள். அவர்கள் தாராளமாக செல்லலாம். அவர்களை யாரும் தடுக்க மாட்டார்கள். அப்படி செல்பவர்களுக்கு பாஜகவில் நல்ல எதிர்காலம் இருக்கும் என்றால் அவர்கள் பாஜகவில் சென்று இணைய நானே எனது காரை கடனாக கொடுக்கிறேன். இந்நிலையில் […]
காங்கிரஸ் கட்சியிலிருந்து நேற்று குலாம் நபி ஆசாத் கட்சியில் இருந்து விலகினார் சோனியா காந்தி நம்பிக்கை உரிய தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் கட்சியிலிருந்து விலகியது பலருக்கும் அதிர்ச்சியை. அதன் பிறகு குலாம் நபி ஆசாத் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்து இருந்தார். இது காங்கிரஸ் கட்சியும் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து மல்லையா கார்ஜுன் கார்கே கூறியது, காங்கிரஸ் கட்சியின் ஒருவர் தலைவராக இருக்க வேண்டுமானால் அவர் குமரி முதல் காஷ்மீர் […]
அரிசிக்கு வரி என்பது மிகவும் கொடுமையானது என்று வணிகர் சங்கத்தின் பேரவை தலைவர் வெள்ளையன் கூறியுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கம் சார்பாக தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் தா வெள்ளையன் பேசியதாவது: “புகையிலைப் பொருட்களை விற்கும் வியாபாரிகளை நாங்கள் வியாபாரிகளாக ஏற்பது கிடையாது. அப்படி விற்பனை எதுவும் நடைபெற்றால் அதை தடுப்பதற்கு வணிகர் சங்கம் முழு முயற்சி […]
குஜராத்தை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஆம் ஆத்மியில் சேர முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. குஜராத்தை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவரும், கட்சியின் தொழில்துறை பிரிவின் முன்னாள் அகில இந்திய தலைவருமான கைலாஷ் காத்வி டெல்லியில் நேற்று ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், முதல்-மந்திரியுமான கெஜ்ரிவாலை சந்தித்து பேசியுள்ளார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரசை சேர்ந்த சுமார் 10 நிர்வாகிகள் மற்றும் 300 தொண்டர்களுடன் ஆம் ஆத்மியில் இணைய இருப்பதாக தெரிவித்தார். குஜராத்தில் ஆட்சியமைப்பதில் […]
ஹஜ் கமிட்டியின் புதிய தலைவராக ஏ.பி.அப்துல்லா குட்டி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். கேரளாவைச் சேர்ந்த முன்னாள் எம்.பி.யான இவர், பாஜகவின் தேசிய துணைத் தலைவராக பதவி வகித்து வருகிறார். மேலும் முதல் முறையாக ஹஜ் கமிட்டியின் துணைத் தலைவர்களாக முன்னாவாரி பேகம் மற்றும் மபூஜா கதுன் ஆகிய இரண்டு பெண்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். இதில் முன்னாவாரி பேகம், மத்திய வக்பு வாரிய உறுப்பினராகவும், மபூஜா கதுன் மேற்கு வங்க மாநில பா.ஜ.க துணைத் தலைவராகவும் இருக்கின்றனர். ஹஜ் கமிட்டியின் புதிய […]
உக்ரைன் நாட்டில் தொடர்ந்து ஒரு மாதத்தை தாண்டியும் போர் நடைபெற்று வரும் நிலையில உக்ரைனின் பல பகுதிகளை ரஷ்ய படைகள் கைப்பற்றி விட்டனர். அந்த வரிசையில் உக்ரைனின் மாட்டிசின் பகுதியை கைப்பற்றிய ரஷ்ய வீரர்கள் அப்பகுதியில் உள்ள பெண் தலைவர்களின் குடும்பத்தினரை கொலை செய்து புதைத்து விட்டதாக ஒரு பெரும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி மாட்டிசிம் பகுதியிலுள்ள ஒரு பெண் தலைவரின் கணவர் மற்றும் குழந்தைகளை சித்திரவதை செய்து பின்னர் அவர்களை கொன்று டிராக்டரால் ஒரு […]
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு ஒரு மாதங்களை கடந்த நிலையில் உக்ரைன் மக்கள் பெரிய அளவில் பாதிப்புகளை சந்தித்துள்ளனர். உக்ரைன் நாடு முழுவதையும் கைப்பற்றுவதை ரஷ்யா திட்டமாக கொண்டு உள்ளது. ஏற்கனவே தலைநகர் கீவ் பகுதியை கைப்பற்றிய ரஷ்ய ராணுவம் அங்கு ஏராளமான அப்பாவி பொதுமக்களை சுட்டுக் கொன்றதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த பகுதியில் இருந்து 400 க்கும் மேற்பட்ட உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. உக்ரைன் மக்களை ரஷ்யா இனப்படுகொலை செய்கிறது என உக்ரைன் அதிபர் குற்றம்சாட்டியுள்ளார். […]
ஆறுமுகநேரிபேரூராட்சி தலைவர் கவுன்சிலர்களுக்கு இலவச ஸ்கூட்டர் வழங்கியுள்ளார். திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி பேரூராட்சியில் 17வது வார்டு கவுன்சிலர்களுக்கு ஸ்கூட்டர் மற்றும் அதற்கு மாதம் 10 லிட்டர் பெட்ரோல் அந்த பேரூராட்சி தலைவர் காலாவதி கல்யாணசுந்தரம் இலவசமாக வழங்கி இருக்கிறார். தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பேரூராட்சியில் 18 வார்டுகள் இருக்கிறது. இந்த பேரூராட்சியில் உள்ள கவுன்சிலர்கள் தினமும் தங்கள் வாதிகளுக்கு நேரடியாக சென்று பொதுமக்கள் குறைகளை கேட்டறிந்து அதனை உடனடியாக சரி செய்து கொடுப்பதற்கு வசதியாக ஆறுமுகனேரி […]
சிலிகாவைச் சேர்ந்த இடைநீக்கம் செய்யப்பட்ட பிஜேடி எம்.எல்.ஏ கார் மோதியதில் 23 பேர் படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று ஒடிசாவின் கோர்தா மாவட்டத்தில் உள்ள பிடிஒ பன்பூரின் அலுவலகத்திற்கு வெளியே இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த சிலிகா எம்எல்ஏவின் வாகனம் அங்கிருந்தவர்கள் மீது மோதியதில் 7 போலீசார் உட்பட சுமார் 23 பேர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவத்தை தொடர்ந்து அவரை ஒரு கும்பல் கடுமையாக தாக்கியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த எம்எல்ஏ டாங்கி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின் சிகிச்சைக்காக […]
திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி பேரூராட்சி தலைவர் பதவியில் இருந்த திமுகவை சேர்ந்த அ.கல்பனா தேவி பதவியை ராஜினாமா செய்துள்ளார். காங்கிரஸ்க்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் போட்டியிட்டு கல்பனா தேவி வெற்றி பெற்ற நிலையில், முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கையை தொடர்ந்து பேரூராட்சி செயல் அலுவலரிடம் ராஜினாமா கடிதத்தை ஓப்படைத்துள்ளார்.
நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளுக்கும், மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் பதவிக்கும் இன்று (மார்ச்.4) மறைமுக தேர்தல் நடைபெறுகிறது. மறைமுக தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் வாக்களிக்கின்றனர். திமுக கூட்டணியே 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட இடங்களில் பெரும்பான்மை பெற்றுள்ளதால், பெரும்பாலான பதவிகளுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்படும் நிலை இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் காங்கேயம் மாநகராட்சி தலைவர் பதவி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் திமுகவின் சூர்யபிரகாஷ் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். […]
கர்நாடக மாநிலம் உடுப்பி குந்தாப்புராவில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த மாணவிகள் ஹிஜாப் மற்றும் பர்தா அணிந்து கல்லூரிக்கு வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்து மாணவ, மாணவிகள் சிலர் காவி உடை அணிந்து கொண்டு கல்லூரிக்கு வந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர முதல் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை […]
பாகிஸ்தான் நாட்டில் இருக்கும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் நில மோசடி வழக்கில், கைதாகியுள்ளார். பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான பெனாசீர் பூட்டோவினுடைய பாகிஸ்தான் மக்கள் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் ஆசிப் அக்தர் ஹாஷ்மி. இவர் எவாகியு என்ற சொத்து அறக்கட்டளையினுடைய தலைவராக இருந்த போது, குஜராத்தில் 13.5 கோடி ரூபாய் மதிப்புடைய 13 கனல் பிரதம நகர்ப்புற நிலத்தை ஆக்கிரமித்ததாக தற்போது புகார் எழுந்திருக்கிறது. எனவே, பாகிஸ்தான் மத்திய புலனாய்வு படையான எப்.ஐ.ஏ-யை சேர்ந்தவர்கள் அவரை […]
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் தலைவர் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். குழுமத்தின் முன்னாள் தலைவர் ராகுல் பஜாஜ் (83). இவர் ஜூன் 10 1938ஆம் ஆண்டு பிறந்தார். பொருளாதாரம் மற்றும் சட்டப் பிரிவுகளில் பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ள இவர் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம் பெற்றிருக்கிறார். மேலும் 1968ஆம் ஆண்டில் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பதவி ஏற்றுள்ளார். இந்த பதவியை ஏற்கும் போது இப்பதவி ஏற்ற இளம் இந்தியர் என்ற பெருமையை […]
உலகின் பிரபலமான தலைவர்களின் பட்டியலில் மோடி முதலிடம் பிடித்துள்ளார். தி மார்னிங் போஸ்ட் தகவலின்படி உலகின் பிரபலமான தலைவர்களின் பட்டியலில் இந்திய பிரதமர் மோடி 76 சதவிகித பேரின் ஆதரவுடன் முதலிடம் பிடித்துள்ளார். இரண்டாவது இடத்தில் மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரூஸ் இமானுவேல் லோபஸ் உள்ளார். இவருக்கு 66 சதவீதம் பேர் ஆதரவு அளித்துள்ளனர். அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் 44 சதவிகிதம் பேரின் ஆதரவோடு இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் 26 சதவிகிதம் […]
மால்டாவை சேர்ந்த மிக இளம் வயதுடைய பெண் ஒருவர் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் 3 ஆவது புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மால்டாவை சேர்ந்த 43 வயதாகின்ற ராபர்ட்டா மெட்சோலா கடந்த 2013ஆம் ஆண்டு ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் பிரான்ஸ் நாட்டில் நடந்த அமர்வின் மூலம் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் 3 ஆவது புதிய தலைவராக மால்டாவை சேர்ந்த இளம் வயது ராபர்ட்டா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பிப்ரவரியில் குரூப்-2 தேர்வுகளும், மார்ச்சில் குரூப்-4 தேர்வுகளுக்கும் அறிவிப்பு வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளதாவது: குருப் 4 பிரிவில் 5,255 பணியிடங்களுக்கும், குரூப்-2 ஏ பிரிவில் 5831 பணியிடங்களும் காலியாக உள்ளது. 2022ஆம் ஆண்டு 32 வகையான தேர்வுகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதற்கான அறிவிப்பு வெளியாகி 75 நாட்கள் கழித்து தேர்வு நடைபெறும். தேர்வு மையங்களில் இருந்து விடைத்தாள்கள் கொண்டு வரும் வாகனங்கள் […]
பாஜக தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து 2-ஆவது முறையாக ஆட்சி பொறுப்பேற்றது. பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக தொடர்ந்த நிலையில் மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் போராட்டம் நடத்தினர். நாளுக்குநாள் இந்த போராட்டத்திற்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், மாணவர்கள் என ஆதரவு பெருகிகொண்டே சென்ற நிலையில் மத்திய அரசு தொடர்ந்து சட்டத்தை நிறைவேற்றும் முயற்சிகளில் ஈடுபட்டது. ஒரு ஆண்டுக்கு மேலாக நடந்த […]
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை பிரதமர் மோடி திரும்பப் பெற்றது வரவேற்கத்தக்கது என்று சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை சபாநாயகர்கள் மாநாடு மாநாடு சிம்லாவில் நடைபெற்றது இதில் பங்கேற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு இன்று சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் கூறியதாவது: “மாநிலங்களில் சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்து விவாதிக்க சபாநாயகர் மாநாடு நடைபெற்றது. அதில் நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள தீர்மானங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். […]
மத்திய அரசு புதிய பாடத்திட்டத்திற்கான கல்விக் கொள்கையை உருவாக 12 பேர் கொண்ட குழுவை ஏற்பாடு செய்துள்ளது. இக்குழுவின் தலைவராக முன்னாள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய தலைவர் கஸ்தூரிரங்கன் இருப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதன் உறுப்பினர்களாக தேசிய கல்வித் திட்டத்தின் நிறுவன வேந்தர் மகேஷ் சந்திர பந்த் மற்றும் புத்தக டிரஸ்ட் தலைவர் கோவிந்த் பிரசாத் சர்மா உள்ளிட்டோர் இடம்பெற்றிருப்பதாக தெரிவித்துள்ளனர். இப்பாடத்திட்டத்தில் பள்ளிக்கல்வி, தொடக்க கல்வி, ஆசிரியர் கல்வி, வயதுவந்தோர் கல்வி […]
தமிழக சட்டப்பேரவையில் தலைவர் இல்லாத பொழுது அன்பழகன், எஸ்.ஆர்.ராஜா, உதயசூரியன், டி.ஆர்.பி.ராஜா ஆகிய 4 பேர் மாற்று தலைவர்களாக செயல்படுவார்கள் என்று சபாநாயகர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக தலைமையிலான அரசு சார்பில் கடந்த 13ம் தேதி முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை திமுக கட்சியின் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்து 14ஆம் தேதி வரலாற்றில் முதல் முறையாக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனை […]
சமீபத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர்களின் ட்விட்டர் பக்கங்கள் முடக்கப்பட்டது காரணமாக காங்கிரஸ் தொண்டர்கள் ட்விட்டர் மீது பல குற்றச்சாட்டுகளை வைத்து வந்தனர். இதனால் ட்விட்டர் இந்தியா தலைவர் மனீஷ் மகேஸ்வரி தனது பதவியில் இருந்து விலக்கப்பட்டு, அமெரிக்காவுக்கு இடம் மாற்றப்பட்டதாக கூறப்படுகின்றது. கடந்த சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் அக்கட்சியை சேர்ந்த ஆயிரத்துக்கும் அதிகமான காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் ட்விட்டர் பக்கங்கள் முடக்கப்பட்டது. இதனை கண்டித்து “எங்கள் இந்திய அரசியலில் ட்விட்டர் […]
தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி-யை நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்துத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: – தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளுக்குப் பாடப் புத்தகங்களைத் தயாரித்து, அச்சிட்டு விநியோகம் செய்வதற்காகத் தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட ஓர் அரசு நிறுவனம் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம். இதன் மூலம் அச்சிடப்படும் பாடநூல்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு இலவசமாகவும், தனியார் பள்ளிகளுக்கு அரசு […]
எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருவதால் திங்கட்கிழமை எம்எல்ஏக்கள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்று இன்று ஆட்சி அமைத்தது. இதைத் தொடர்ந்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் இன்று ஆளுநர் மாளிகையில் முதல்வராக பதவியேற்றார். இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதில் அதிமுகவில் பெரும் குழப்பம் நீடித்து வருகின்றது. எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதை தேர்வு செய்வதில் அதிமுகவில் இழுபறி […]
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை கடந்த மே இரண்டாம் தேதி நடைபெற்றது. அதில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. இதனை அடுத்து தமிழகத்தின் முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் இன்று பொறுப்பேற்கிறார். கொரோனா காரணமாக ஆளுநர் மாளிகையில் மிக எளிமையான முறையில் பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது. இதனையடுத்து ஸ்டாலின் தனது முதல்வர் பணிகளை செய்யத் தொடங்கியுள்ளார். இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு […]
கொரோனா காரணமாக புற்றுநோய் நோயாளிகளை கண்டறிய முடியவில்லை என்று புற்றுநோய் மருத்துவ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். பிரான்சில் ஒவ்வொரு ஆண்டும் புற்றுநோயால் சுமார் 400,000 பேர் பாதிக்கப்படுகின்றனர். மேலும் அதில், 200,000 பேர் உயிரிழக்கின்றனர். கடந்த 2020 ஆம் ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 100,000 புற்றுநோய் நோயாளிகளை கண்டறியாமல் போயுள்ளது என்று புற்று நோய் மருத்துவ நிறுவனத்தின் தலைவர் அஸேல் கான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, தற்போது கொரோனாவால் மருத்துவமனைகளில் நெருக்கடி ஏற்பட்டு வருவதால் […]
சென்னை பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறையின் தலைவராக இருப்பவர் ராமு மணிவண்ணன் என்பவர். கடந்த ஆண்டு பல்கலைக்கழகத்தில் ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய தொகையை வழங்க வேண்டுமென்று நிர்வாகத்திடம் தொடர்ந்து போராடி வருகிறார். இந்நிலையில் இந்த ஆண்டு பேராசிரியர் ராமமூர்த்தி ஓய்வு பெற உள்ளார். அவருக்கான நிலுவையிலுள்ள ஓய்வூதியத் தொகை 18 லட்சத்தையும், ஏழு மாதங்களுக்கான ஊதியத்தையும் பல்கலைக்கழகம் இன்னும் தரவில்லை. இதனால் தனக்கு வழங்கவேண்டிய நிலுவையிலுள்ள ஊதிய பணத்தை வழங்க […]
போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன், மத்திய அரசு உடனடியாக நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார். புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தொடர்ந்து நான்காவது நாளாக போராட்டம் நடந்து வந்தது. இந்நிலையில் டெல்லியில் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் “போராட்டம் நடத்தும் விவசாயிகளிடம் மத்திய அரசு நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” என்று வலியுறுத்தினார். இதற்கிடையே […]
இந்து முன்னணி அமைப்பின் தலைவர் ராமகோபாலன் உடல்நலக்குறைவால் இன்று சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார். இந்து முன்னணி அமைப்பின் தலைவரான ராஜகோபால் என்பவருக்கு வயது முதிர்வு காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. அதனால் கடந்த ஆகஸ்ட் மாதம் அவர் ஓர் ஊரில் இருக்கின்ற தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.அதன்பிறகு மூச்சுத்திணறல் காரணமாக சென்னை போரூரில் இருக்கின்ற தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் உடல்நலக்குறைவால் சிகிச்சை […]
பிரண்ட்ஷிப் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகிறார் பிரபல இந்திய கிரிக்கெட்டர் ஹர்பஜன் சிங். ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக களமிறங்கிய ஹர்பஜன், தமிழில் ட்வீட் செய்வது, தமிழ்நாட்டில் நடக்கும் பிரச்னைகளுக்கு குரல் கொடுப்பது என தமிழ் மக்கள் மனதில் இடம்பிடித்தார். தற்போது தமிழ் திரையுலகில் நாயகனாக அறிமுகமாகிறார். முன்னதாக சந்தானத்தின் ‘டிக்கிலோனா’ மற்றும் வெப் சீரிஸ் ஒன்றில் நடித்துள்ள ஹர்பஜன், ‘அக்னி தேவி’ படத்தை இயக்கிய ஜேபிஆர் – சாம் […]