சொத்து வரி, மின் கட்டணம், பால் விலை உயர்வு உள்ளிட்டவற்றை கண்டித்து நகராட்சி, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அதிமுக அறிவித்திருந்தது. இந்நிலையில் நாளை பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. இதனால் பல மாவட்டங்களிலும் இன்றும், நாளையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது இதையடுத்து, நகராட்சிகள், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம் 21ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
Tag: தள்ளிவைப்பு
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா சந்திரனுக்கு ராக்கெட்டை அனுப்பும் திட்டத்தை மூன்றாம் தடவையாக தள்ளி வைத்திருக்கிறது. நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம், மனிதர்களை மீண்டும் சந்திரனுக்கு அனுப்பும் திட்டத்தை மேற்கொண்டது. வரும் 2025 ஆம் வருடத்திற்குள் மனிதர்களை அங்கு அனுப்ப ஆர்ட்டெமிஸ்-1 திட்டம் தொடங்கப்பட்டது. சந்திரனின் மேற்பரப்பிலிருந்து 60 மைல்கள் அருகில் ஓரியன் எனும் விண்கலத்தை பறக்கச் செய்ய நாசா தீர்மானித்தது. அதன்படி கடந்த மாதம் 29ஆம் தேதி அன்று கென்னடி விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து […]
சென்னை மீனம்பாக்கம் விமானம் நிலையத்தில் விமான நிறுத்தும் இடங்கள் அதிகரிக்கப்படுவதுடன் புறப்படும் வசதிகளும் மேம்படுத்தப்படவுள்ளது. இந்நிலையில் சென்னை விமானம் நிலையத்தில் வாகனங்களை நிறுத்துவதற்காக 6 அடுக்கு வாகன நிறுத்துமிடம் கட்டுமான பணிகளும் நிறைவடையும் சூழ்நிலையில் இருக்கிறது. ரூபாய்.250 கோடி செலவில் 2.5 லட்சம் சதுரஅடி பரப்பளவிலான வாகன நிறுத்தும் இடத்தில் ஒரே நேரத்தில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான கார்களை நிறுத்துவதற்கான வசதியுடன் சில்லறை விற்பனைக் கடைகள் உள்ளிட்ட வணிக வளாகம், உணவகங்கள் மற்றும் மல்டிபிளக்ஸ் அமைக்கப்பட இருக்கிறது. […]
மறைந்த பிரபல நடிகரான சிவாஜி கணேசனுக்கு பிரபு, ராம்குமார் என இருமகன்களும், சாந்தி, ராஜ்வி என இரண்டு மகள்களும் இருக்கின்றனர். சென்ற 2001- ஆம் வருடம் நடிகர் சிவாஜி கணேசன் மரணத்துக்குப் பிறகு 270 கோடி ரூபாய் சொத்துக்களை முறையாக நிர்வகிக்கவில்லை என்றும் வீடுகளின் வாடகை பங்கை தங்களுக்கு வழங்காமல் ஏமாற்றியதாகவும் கூறி சாந்தி மற்றும் ராஜ்வி ஆகிய இரண்டு பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். அவற்றில், இந்து வாரிசுரிமை சட்டத்தில் 2005ம் […]
“ஐஸ்வர்யா முருகன்” திரைப்படத்தில் அருண் பன்னீர்செல்வம், வித்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இத்திரைப்படமானது ஆணவக்கொலையை மையமாக வைத்து தயாராகியுள்ளது.மாஸ்டர்பீஸ் திரைப்பட நிறுவனத்தின் சார்பில், ஜிஆர்.வெங்கடேஷ், கே.வினோத் ஆகியோர் தயாரித்துள்ளனர். இத்திரைப்படமானது வருகின்ற பொங்கலுக்கு வெளியிடப்படும் எனப் படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் வெளியீ்ட்டை ஜனவரி 26ஆம் தேதிக்கு தள்ளி வைப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. ஜன13ஆம் தேதியில் ஏராளமான படங்கள் வெளியிடப்படுவதால் அதிக திரையரங்குகள் கிடைக்காது என்பதால் வெளியீடு தேதி மாற்றப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
‘ஐஸ்வர்யா முருகன்” திரைப்படம் தங்கள் ரிலீசை ஒத்தி வைத்துள்ளதாக அறிவித்திருக்கிறது. இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”வலிமை”. இந்த திரைப்படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். இதையடுத்து சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இந்த திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸாகும் என அறிவித்திருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக இந்த படத்தின் வெளியீட்டை படக்குழுவினர் ஒத்தி வைத்துள்ளனர். இந்நிலையில், பொங்கலுக்கு ரிலீஸாக இருந்த வலிமை படம் பின்வாங்கிய நிலையில், […]
தமிழகத்தில் டாஸ்மாக் பார் டெண்டர்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் 2530 டாஸ்மாக் பார்களுக்கு டெண்டர் முடிந்துவிட்டதாகவும் 8 மாவட்டங்களில் மட்டும் சில காரணங்களுக்காக தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு கூறியுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில் உள்ள பார்களில் தின்பண்டங்கள் விற்பது மற்றும் காலி பாட்டில்கள் சேகரிப்பது தொடர்பான டெண்டர் அறிவிப்பை டாஸ்மாக் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த டெண்டரை எதிர்த்து டாஸ்மார்க் பார் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. […]
சுவிட்சர்லாந்தில் கொரோனா நடவடிக்கைகளை விரிவாக்குவது தொடர்பில் தீர்மானிக்க அதிகாரிகள் நாளை வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. சுவிட்சர்லாந்தில் பெடரல் கவுன்சில், கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு கடும் நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்துவதை தற்போது தவிர்த்திருக்கிறது. ஒமிக்ரான், தொற்றின் ஆபத்து தொடர்பில் உரிய தகவல்கள் கிடைக்கவில்லை எனவும் குறிப்பாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது தொடர்பான தகவல்கள் கிடைக்காததால் அதிகபட்ச நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை அதிகாரிகள் தற்காலிகமாக தள்ளி வைத்திருக்கிறார்கள். கூட்டாட்சி அதிகாரிகள் தீர்மானிக்கக்கூடிய புதிய தகவல்கள் வரும் புதன் கிழமைக்குள் கிடைத்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
ஆர் ஆர் ஆர் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்க கொரோனா பரவல் தவிர மற்றுமொரு காரணத்தையும் படக்குழு கூறியுள்ளது. தெலுங்கில் ராஜமவுலி இயக்கிய ஆர் ஆர் ஆர் திரைப்படம் ஜனவரி ஏழாம் தேதி வெளியிடப்பட இருந்தது. ஆனால் கொரோனாவின் மூன்றாவது அலை காரணமாக அந்தப் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இதற்கு கொரோனா பரவல் மட்டும் காரணம் என கருதப்பட்டு வந்தது. ஆனால் இது தவிர மற்றுமொரு காரணமும் உள்ளது. அது என்னவென்றால் தெலுங்கானாவில் தியேட்டர்களில் […]
ராஜமவுலி இயக்கும் ஆர் ஆர் ஆர் திரைப்படம் கொரோனா காரணமாக தாமதமாக வெளியிடப்படும் நிலை உருவாகியுள்ளது. தெலுங்கில் பிரபல நட்சத்திரங்களான ஜூனியர் என்டிஆர், ராம்சரண், அலியா பட், அஜய் தேவ்கன், ஆகியோர் நடித்து ராஜமௌலியால் இயக்கப்படும் ஆர் ஆர் ஆர் சினிமா ரசிகர்களால் திரைப்படம் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படம் இன்னும் சில தினங்களில் வெளியிடப இருந்தது. மேலும் இத்திரைப்படத்தின் டீசர்கள் வெளியாகி இணையதளத்தில் வைரலாக பரவி வருகின்றன. மேலும் இந்த படத்தின் விளம்பரத்திற்காக பல கோடி […]
தமிழகத்தில் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் தமிழகத்தில் தொடர் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால் மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது தொடர் விடுமுறை காரணமாக மீதமுள்ள பாடங்களை நடத்தி முடிப்பதற்கு சிரமமாக உள்ளது. அதனால் இனி வரும் நாட்களில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 10, 11, 12 ஆம் […]
தமிழ்நாட்டில் ஜூலை 19ஆம் தேதி நடைபெறவிருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கான நேர்முகத் தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தின் 113 மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்க கோரி 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இந்த பணிக்கு எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. 1,328 பேர் […]
கோலாலம்பூரில் நடைபெற இருந்த ,மலேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டியானது ஒத்திவைக்கப்பட்டுள்ளது . மலேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டியானது, வருகின்ற 25 ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை கோலாலம்பூரில் நடைபெற திட்டமிடப்பட்டது . தற்போது அங்கு கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் ,இந்த போட்டியை ஒத்திவைப்பதாக நேற்று அறிவித்தது .இந்த போட்டி தேதி குறிப்பிடாமல் போட்டி ஒத்திவைக்கப்பட்டது .இந்தப் போட்டியில் பங்கு பெற்று, தரவரிசைப் பட்டியலில் முன்னேற்றம் அடைந்தால் மட்டுமே ,ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி […]
தளபதி விஜயின் 65வது படமான தளபதி 65 திரைப்படம் ஒரு சில காரணங்களினால் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் # தளபதி 65 திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜார்ஜியாவில் நடந்த முதல்கட்ட படப்பிடிப்பில் கதாநாயகி பூஜா ஹெக்டேவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி பின்னர் குணமடைந்தார். சென்னையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வாக இருக்கும் நீட் தேர்வை ஒத்தி வைத்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹெர்ஷவர்தன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது: வரும் 18-ம் தேதி நடைபெறவிருந்த முதுகலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹெர்ஷவர்தன் அறிவித்துள்ளார். கொரோனா தொற்று குறித்து கள நிலவரத்தைப் பொறுத்து எப்போது தேர்வு நடத்தப்படும் என்பது குறித்து முடிவெடுக்கப்படும். தேர்வு நடத்துவதற்கு முன்னர் அது குறித்து தெரியப்படுத்தப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தேர்தல் 6 மாதத்திற்கு தள்ளி வைக்க உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பல கட்சியினர் போட்டி போட்டு ஒவ்வொரு பகுதியாக சென்று பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இது ஒருபுறமிருக்க கொரோனா தொற்றும் அசுரவேகத்தில் அதிகரித்து வருகிறது. தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் போது தொற்று அதிக அளவில் பரவ வாய்ப்பு உள்ளதாக பலரும் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவல் காரணமாக தேர்தல் […]
நடப்பாண்டிற்கான செமஸ்டர் தேர்வுகள் தள்ளி வைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இறுதியாண்டு மாணவர்களுக்கு டிசம்பர் 14ஆம் தேதி முதல் தேர்வு தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்திருந்தது. இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வுகள் முடிந்த பின்பு மற்ற மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. தேர்வு தொடர்பான அட்டவணை இணையதளம் வாயிலாக வெளியிடப்படும் என்று கூறியிருந்தது.கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24-ஆம் தேதி முதல் நாடு தழுவிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. […]
தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு தேதியை தள்ளிவைக்க அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா பரவலைத் தடுக்க கூடிய வகையில் தமிழகம் முழுவதிலும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில், தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு நவம்பர் 30ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதுமட்டுமன்றி தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் வரும் 16ஆம் தேதி முதல் தொடங்கும் என […]
மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏற்கனவே தள்ளி வைக்கப்பட்ட நிலையில் மீண்டும் தள்ளி வைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்ற வருடம் வரை இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் தற்போது இருக்கும் சூழலில் கணக்கெடுப்பு என்பது கேள்விக்குறியான ஒன்றாக உள்ளது. அந்த வகையில் 130 கோடி மக்கள் தொகை உள்ள இந்தியாவில், வீடு வீடாக சென்று கணக்கெடுக்கும் பணியில் 30 லட்சத்திற்கும் அதிகமான அரசு ஊழியர்களை ஈடுபடுத்த வேண்டிய கட்டாயம் இருந்து வருகிறது. இந்த ஆண்டிற்கான கணக்கெடுப்பு […]